Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கொடூரமான பைத்தியக்காரத்தனமான கொலை இது.

இவ்வுலகில் இனிமையாக வாழ ஆயிரம் வழிகள் இருக்கும்போது.....?

ஆனால் அவரவருக்கு இந்த நிலை வராத வரை நாம் என்னவும் சொல்லலாம். நம்பிக்கை துரோகம் குடும்பவாழ்க்கை பூச்சியமாகல் என்னுடையது மட்டுமே என்பதில் விழுந்துள்ள ஆழமாக ஏமாற்றப்பட்டுவிட்ட தோல்வி இவற்றை தாண்டி செல்வது எல்லா மனிதர்களாலும் முடியுமா???? (இங்கே ஆண் பெண் என்ற வேறுபாடில்லை)

ஆனால் உலகம் அதிலும் மேற்குலகம் இதை தாண்டிச் செல்கிறது. பட்டறிவு மட்டுமே துணை.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்தவருக்கு பாராட்டும் இணையதள தொகுப்பு ஒன்றை பார்க்க நேர்ந்தது கொலைகாரனுக்கு சமுதாயம் தெரிவிக்கும் ஆதரவு மிக மோசமாக உள்ளது அதில் சில

உது தமிழ் ஈழத்தின் தண்டனை தமிழன் கெத்து 🎉🎉🎉🎉🎉 இனி இப்படித்தான் 💪🏽🎉பயப்பட வேண்டும் தமிழ்ப்பெண்கள் 👌🏼👌🏼👌🏼
-----
தன்மான தமிழ் ஈழத்தமிழன் நம் தலைவரின் சட்டப்படி அவர் செய்திருக்கின்ரார் 🎉🎉🎉

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் தொடர்பாக மிகவும் தெளிவான அறிவார்ந்த பார்வையுடனான தாயகத்தில் இருந்து சட்டத்தரணி ஒருவரின் கருத்து.

https://m.facebook.com/story.php?story_fbid=1103923524906211&id=100058657202134

  • கருத்துக்கள உறவுகள்

கொலையை செய்த சுகிர்தரன் விடுதலையாகி தேர்தலில் நின்றால் மிக பெரிய வெற்றியை பெற்று கொள்வார் என்றே தெரிகின்றது.ஹீரோவாக போற்றி புகழபடுகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

தன் இனத்தையே கொத்துக்கொத்தாக கொலை செய்த, செய்ய உதவிய பலபேர் தேர்தலில் நின்று அந்த மக்களாலேயே வெல்ல வைக்கப்பட்டு  பாராளுமன்றம் செல்கின்றனர் என்றால்; இதுவும் சாத்தியமே. 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2025 at 08:14, வாலி said:

காயப்பட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும். திருமண உறவு முறிக்கப்படாத நிலையில் இன்னொரு ஆணிடம் சோரம்போனது சரியா? உன்னுடைய மனைவி என்னுடன் படுத்து எனக்கு பிள்ளை பெறப்பேகிறாள் என்று ஆதாரத்துடன் அந்தக் கயவன் படங்களை அனுப்பினால் ஒரு தன்மானமுள்ள ஆணின் ஆன்மா உடைந்து உலுங்கிகிப்போய்விடாதா? அந்தக் கணமே அவன் செத்துப்போய்விடுகின்றான்.

தரையில் குனிந்து எழுதிக்கொண்டிருக்க அவனொன்றும் இயேசுநாதரல்ல.

இது மிகவும் தவறான அபாயகரமான கருத்து, ஆணோ பெண்ணோ திருமண ஒப்பந்தத்தை மீறும் போது உரிய சட்ட நடவடிக்கையோ அல்ல விவாகாரத்தையோ பெற்று அவரவர் வாழ்க்கையை வாழ முயல வேண்டும். இதில் சிலருக்கு மனக்காயங்கள், பொருளாதார சங்கடங்கள் ஏற்படும் ஆனால் அதற்கு ஒருவரது உயிரை பறிப்பது பெரும் குற்றம் மற்றும் யாருக்கும் எவ்வித பயனும் ஏற்படப்போவதும் இல்லை.

அப்பெண்ணின் பக்க உண்மைகளோ, நியாயமோ இனி தெரியப்போவதில்லை, உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கும் இம்மாதிரியான குற்றநடவடிக்கைகளுக்கு என்றும் ஆதவளிக்ககூடாது மாறாக கண்டிக்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் பல சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2025 at 10:06, இணையவன் said:

இந்தக் கொலை மூலம் தனது மனைவி இன்னொரு ஆணுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்பதை உலகம் முழுவதும் பறைசாற்றியுள்ளார். இப்போது அந்தத் தன்மானம் எங்கே போனது ?

இங்கேதான் ஆணவ கொலைகளின் (dis-honour killings) இன் இயங்கு விதியே இருக்கிறது.

  1. மனைவி இன்னொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததால் - இவரின் தன்மானம் பாதிக்கப்பட்டதல்லவா?

  2. மனைவியை கொலை செய்து அந்த தன்மானத்துக்கு ஏற்பட்ட அழுக்கை, மனைவியின் ரத்தத்தால் கழுவி நீக்கி உள்ளாராம்.

இதே கான்செப்ட்தான் தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளிலும் பயன்படுகிறது.

அல்பேனியாவில் இரத்த- சண்டை blood feud என பரம்பரை பரம்பரையாக மாறி மாறி கொல்லுவார்கள்.

ஒரு குடும்பத்தின் உறுப்பினரை மறு குடும்பம் கொன்றதால் அந்த அகெளரவத்தை போக்க, மறு குடும்ப ஆணில் ஒருவரை கொல்வது. இப்படி சங்கிலி போல் மாறி மாறி கொல்வது.

இதை நடைமுறை செய்ய அங்கே கானூன் எனும் மரபுவழி சட்டம் கூட உள்ளது.

மாபியாங்கள், காங்குகள் மாறி மாறி கொல்வது கூட இப்படி ஒரு அடிப்படையில்தான்.

இப்படி ஒரு தனிநபர் கொல்லுவது அவரின் மனநிலை சம்பந்த பட்ட விடயம் என கருதி கடந்து போனாலும்,

இதை சமூகமாக பெருமளவில் ஆதரிக்கும் போக்கு - அந்த சமூகம் தாலின்பானிய படுத்தபடுகிறது என்பதன் அறிகுறியே.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2025 at 00:01, நியாயம் said:

செய்திகளின் பிரகாரம் இன்னொருத்தரின் மனைவியுடன் தொடர்புவைத்து பிள்ளையையும் உருவாக்கிவிட்டு, அதை அந்த பெண்ணின் கணவனிடமும் தெரிவித்து இரண்டு உயிர்களின் கொலை வரை செல்வதற்கு வழிவகுத்த 21 வயது நபருக்கு உங்கள் அறிவுரை என்ன? இவருக்கு என்ன தண்டனை? இவர் சமூகத்தின் முன் அறியப்படவேண்டிய தேவை இல்லையா? இவ்வளவும் நடந்த பின்னர் இன்னோர் பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடாத்த போகின்றாரா? இவரது வாக்குமூலம் அறியப்படும்போதே மிகுதி உண்மைகள் புலப்படும்.

விசாரணயின் பின்பே எதையும் சொல்ல முடியும் என்பது சரியே. ஆனால் தலையோடு பொலிஸ் நிலையம் போய் கொலையை ஒப்பு கொண்டதால் - கொலையை இன்னார், இன்ன காரணதுக்காக செய்தார் என்பது வெள்ளிடமலை ஆகவே அந்த கொலையை கண்டிப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.

அந்த இளைஞர் இப்படி போட்டோக்களை அனுப்பி சீண்டி இருந்தால் கொலையில் அவரின் பங்கும் உள்ளது.

ஆனால் அவர் கொலையாளியை கொலை செய் என நேரடியாக தூண்டியிராத விடத்து, அவர் வழக்கில் ஒரு சாட்சியே ஒழிய குற்றவாளி அல்ல.

நீங்கள் கூறியது போல் அவருக்கு அறிவுரை செய்ய மட்டுமே முடியும்.

வாசித்த சம்பவங்கள் உண்மையானல் -

  1. திருமணம் முடித்து விட்டு கொழும்பில் தனியாக போய் இருந்த கணவன்

  2. கணவனிடம் மணவிலக்கு பெறாமல் அவர்களை விட வயது குறைந்த இளைஞரிடம் உறவு வைத்து, கருவையும் உருவாக்கி கொண்ட மனைவி

  3. அப்படி ஒரு உறவில் இருந்தது மட்டும் அல்லாமல் கணவனுக்கே போட்டோ அனுப்பி சீண்டிய காதலன்

இவர்கள் யாருமே சுத்தம் இல்லை.

ஆனால் கணவன் பல நாட்களாக திட்டமிட்டு கொலை செய்தது இதை வேறு கட்டத்துக்கு கொண்டு போய்விட்டது.

ஒரு நல்ல நண்பன் இருந்து - அவனிடம் மனம் விட்டு பேசி இருந்தால் கூட “தூக்கி போட்டு விட்டு, உன் வாழ்க்கையை பார்” என அவன் சொல்லி இருந்தால் கொலையை தடுத்திருக்கலாம்.

ஆனால் சமூகமே “வெட்டுடா, கொல்லுடா, உன் மானத்தை மீள பெறுடா” என பினூட்டம் இடுகிறதெனில் அந்த சமூகத்தில் இப்படி ஒரு அறிவுரை கணவனுக்கு கிடைக்கவும் வாய்ப்புகள் குறைவு.

பிகு

இங்கே பலர் சொல்வது போல இந்த மனைவி முழு அப்பாவியாகவும் இருக்கலாம். இவை எல்லாம் கணவனின் கட்டுகதைதாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பிகு

இங்கே பலர் சொல்வது போல இந்த மனைவி முழு அப்பாவியாகவும் இருக்கலாம். இவை எல்லாம் கணவனின் கட்டுகதைதாகவும் இருக்கலாம்.

திட்டமிட்டு கூட்டிச்சென்று கொலை செய்துவிட்டு உடலை மறைத்தோ அல்லது ஓடி ஒளிந்தோ கொள்ளாமல் காவல் நிலையம் சென்று விடயத்தை சொல்லி சட்டத்திடம் சரணடைந்தவருக்கு கட்டுக்கதைகள் என்ற உங்கள் சந்தேகம் பொருந்துமா?

(இதில் எழுத இனி எதுவுமே இல்லை என்று நினைத்தேன். உங்கள் நீண்ட கருத்தால் இக்கேள்வி வருகிறது)

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

திட்டமிட்டு கூட்டிச்சென்று கொலை செய்துவிட்டு உடலை மறைத்தோ அல்லது ஓடி ஒளிந்தோ கொள்ளாமல் காவல் நிலையம் சென்று விடயத்தை சொல்லி சட்டத்திடம் சரணடைந்தவருக்கு கட்டுக்கதைகள் என்ற உங்கள் சந்தேகம் பொருந்துமா?

(இதில் எழுத இனி எதுவுமே இல்லை என்று நினைத்தேன். உங்கள் நீண்ட கருத்தால் இக்கேள்வி வருகிறது)

இப்போ கிடைத்துள்ள பத்திரிகை தகவல் அடிப்படையில், எனது ஊகமானது:

கொலையாளி சொன்ன கொலைக்கான சூழமைவு உண்மையாக இருக்க வாய்புகள் உள்ளது.

அல்லது அவர் அந்த 21 வயது இளைஞனின் பொய்கதையை கேட்டு மனைவி மேல் சந்தேகம் பட்டும் இருக்கலாம்.

இங்கே அந்த இளைஞன் ஏன் இவருக்கு அப்படியான மெசேஜ் அனுப்பினார் என்பது மிக முக்கியமான கேள்வி. வழமையாக இப்படியான உறவில் இருக்கும் ஆண்கள் அதை ரகசியமாக வைத்து ஓசியில் இன்பம் அடைந்து விட்டு, வேறு ஒரு பெண்ணை கலியாணம் கட்டி செட்டில் ஆகி விடுவார்கள். அல்லது இந்த பெண்ணுடன் ஊரை விட்டு ஓடி வாழ தலைப்படுவார்கள்.

இவை இரெண்டும் இல்லாமல் இந்த இளைஞன் கணவருக்கே போட்டோவை அனுப்பி, அத்தோடு வயிற்றில் உள்ள சிசுவும் தனது என்பதாக சொல்லியதாக தெரிகிறது.

ஏன் ? தன் ஆசைக்கு இணங்காத இந்த அப்பாவி பெண் மேல் பழி போடுவதற்காக இருக்கலாம் அல்லவா?

ஆகவே எதையும் தீரவிசாரிக்காமல் சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேதான் ஆணவ கொலைகளின் (dis-honour killings) இன் இயங்கு விதியே இருக்கிறது.

இதே கான்செப்ட்தான் தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளிலும் பயன்படுகிறது. ]

6 hours ago, goshan_che said:

இங்கேதான் ஆணவ கொலைகளின் (dis-honour killings) இன் இயங்கு விதியே இருக்கிறது.

  1. மனைவி இன்னொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததால் - இவரின் தன்மானம் பாதிக்கப்பட்டதல்லவா?

  2. மனைவியை கொலை செய்து அந்த தன்மானத்துக்கு ஏற்பட்ட அழுக்கை, மனைவியின் ரத்தத்தால் கழுவி நீக்கி உள்ளாராம்.

இதே கான்செப்ட்தான் தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளிலும் பயன்படுகிறது.

அல்பேனியாவில் இரத்த- சண்டை blood feud என பரம்பரை பரம்பரையாக மாறி மாறி கொல்லுவார்கள்.

ஒரு குடும்பத்தின் உறுப்பினரை மறு குடும்பம் கொன்றதால் அந்த அகெளரவத்தை போக்க, மறு குடும்ப ஆணில் ஒருவரை கொல்வது. இப்படி சங்கிலி போல் மாறி மாறி கொல்வது.

இதை நடைமுறை செய்ய அங்கே கானூன் எனும் மரபுவழி சட்டம் கூட உள்ளது.

மாபியாங்கள், காங்குகள் மாறி மாறி கொல்வது கூட இப்படி ஒரு அடிப்படையில்தான்.

இப்படி ஒரு தனிநபர் கொல்லுவது அவரின் மனநிலை சம்பந்த பட்ட விடயம் என கருதி கடந்து போனாலும்,

இதை சமூகமாக பெருமளவில் ஆதரிக்கும் போக்கு - அந்த சமூகம் தாலின்பானிய படுத்தபடுகிறது என்பதன் அறிகுறியே.

விளக்கமாக நன்றாக சொன்னீர்கள். அதன் காரணமாகவே தமிழ் தலிபான்களும் கொலைகாரனை மிகவும் போற்றி கொண்டாடுகின்றர்கள். தமிழ் பெண்களுக்கு கடுமையான எச்சரிக்கை தெரிவிக்கபட்டுள்ளதாக அவர்கள் மகிச்சியும் ஆறுதலும் அடைந்து குதுகலிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஏன் ? தன் ஆசைக்கு இணங்காத இந்த அப்பாவி பெண் மேல் பழி போடுவதற்காக இருக்கலாம் அல்லவா?

2 hours ago, goshan_che said:

ஆகவே எதையும் தீரவிசாரிக்காமல் சொல்ல முடியாது.

ஏன் ? தன் ஆசைக்கு இணங்காத இந்த அப்பாவி பெண் மேல் பழி போடுவதற்காக இருக்கலாம் அல்லவா?

ஆகவே எதையும் தீரவிசாரிக்காமல் சொல்ல முடியாது.

இந்த கோணத்தில் பார்த்தாலும் நீங்கள் மேலே குறிப்பிட்ட மூன்று காரணங்களும் இதற்கு முரண்பட்ட சாட்சிகளாகவே அமைகின்றன. கணவர் ஊரில் இல்லை வயிற்றில் குழந்தை மற்றும் இருவரும் ஒன்றாக இருந்த படங்கள்.

எனவே அப்பாவி பெண் மேல் பழி போடுதல் என்பது லாம்.... என்பதற்கு கூட வரமறுக்கிறதே.....

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண் தவறு செய்தாரா இல்லையா என்பது இங்கு பிரச்சனை அல்ல. கணவனின் வாக்குமூலத்தின் பிரகாரம், அந்த பெண் செய்தது ஒரு தவறு என்றால், கணவன் செய்தது கொடூர குற்றச்செயல். (Crime) அந்த கொடூர க்கொலையை இனத்தின் கூட்டு உளவியல் கொண்டாடும் மனநிலை கேவலமானது என்பதே இங்கு முக்கியமானது இறந்த பின்னர் தலையை வெட்டி சென்ற கொடூர கொலை பெருமளவு மக்களால் கொண்டாடப்படுகிறது என்பதும் அந்த கொலையை செய்தவன் கதாநாயகனாக புகழப்படுவது என்பதும் ஒரு சைக்கோ மனநிலை. அந்த சமூகத்தில் வளர்ந்துவரும் குழந்தைகள் கொடூரக் கொலைகளை ஒரு முன்மாதிரியாக பார்கக தொடங்குவர்.

தலைவர் இருந்திருந்தால் எதை செய்திருப்பாரோ அதை அந்த வீரத்தமிழன் செய்து தமிழரின் வீரத்தை மானத்தை காப்பாற்றி உள்ளார் என்பதான பல பதிவுகள் சமூக வலைத்தளமெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. இது எமது இனத்திற்கே அவமானம் இல்லையா? அதற்கு பல லைக்குகள் வேறை. இந்த கொலையை கண்டிபவர்களை நோக்கி உனது மனைவியும் இவளைப் போன்ற வே … தானே என்று அவர்களது குரல்களை அடக்கும் யுக்தி எவ்வளவு வக்கிரமானது. இதை ஒரிருவர் மட்டுமல செய்தால் கடந்து போகலாம். ஆனால் இவ்வாறானவர்களே எமது மக்களின் சமூக வலைதளங்களில் பெரும்பான்மையினர்.

அத்துடன் ஒருவர் தனது முகநூலில் கொலை செய்யப்பட்ட சுவர்ணலதாவின் இறுதிக்கிரிகைகளில் எடுக்கப்பட்ட உடலின் புகைப்படத்தை பகிர்ந்து தனது பிரதேசமான ஆலையடி வேம்பு பிரதேசத்திலும் விரைவில் இப்படியான ஒரு சம்பவம் நிகழவேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ( இந்த முகநூல்பதிவின் Screenshot ல் அந்த பெண்ணின் உடலும் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்று அவரால் சுட்டிக்காட்டப்பட்ட பெண்கள் பற்றிய சில தனிநபர் விபரங்களும் இருப்பதால் அதை இங்கு இணைப்பது உசிதமல்ல)

அடுத்த கொலையை ஆவலுடன் எதிர்பார்ககும் அவருக்கும் பல லைக்குகள் வந்திருந்தன என்றால் இந்த சைக்கோ மனநிலை அதிகளவான எமது மக்களுக்கு இருப்பதானது இவர்களுக்கெல்லாம் சட்டவாக்க அதிகாரம் கிடைத்தால் ஷரியா சட்டம் போன்ற காட்டுமிரண்டி சட்டங்களை உருவாக்குவர் என்பதை காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, island said:

அந்த பெண் தவறு செய்தாரா இல்லையா என்பது இங்கு பிரச்சனை அல்ல.

உண்மை. விருப்பமில்லாவிட்டால் அவர் விலகிப் போயிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
54 minutes ago, island said:

அந்த பெண் தவறு செய்தாரா இல்லையா என்பது இங்கு பிரச்சனை அல்ல.

உலகில் ஒரு பெண் சட்டப்படி திருமணம் செய்தவருடன் மட்டும் தான் உடலுறவு கொள்ள வேண்டும் என சட்டங்கள் இருக்கின்றதா?

இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

கணவர் ஊரில் இல்லை வயிற்றில் குழந்தை

கணவர் கொழும்பில்தானே. வந்து போயிருப்பார் அல்லவா? வவுனியா 4 மணி பயணம்தானே.

1 hour ago, விசுகு said:

மற்றும் இருவரும் ஒன்றாக இருந்த படங்கள்

நீங்கள் பார்த்து விட்டீர்களா? இல்லைத்தானே.

ஆகவே இதில் என்ன நடந்தது என நாம் சொல்ல போதிய தரவுகள் இன்னும் இல்லை.

பிகு

இப்படி மனைவியில்தான் பிழை இருக்க வேண்டும் என்ற முடிந்த முடிவில் இருந்தபடி, விடயத்தை அணுகுவதைத்தான், மேலே “கொலையாளி சொல்வதை அப்படியே நம்புகிறார்கள்” என சில கருத்தாளர்கள் விமர்சித்துள்ளனர். அது சரியானதே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

கணவர் கொழும்பில்தானே. வந்து போயிருப்பார் அல்லவா? வவுனியா 4 மணி பயணம்தானே.

நீங்கள் பார்த்து விட்டீர்களா? இல்லைத்தானே.

ஆகவே இதில் என்ன நடந்தது என நாம் சொல்ல போதிய தரவுகள் இன்னும் இல்லை.

பிகு

இப்படி மனைவியில்தான் பிழை இருக்க வேண்டும் என்ற முடிந்த முடிவில் இருந்தபடி, விடயத்தை அணுகுவதைத்தான், மேலே “கொலையாளி சொல்வதை அப்படியே நம்புகிறார்கள்” என சில கருத்தாளர்கள் விமர்சித்துள்ளனர். அது சரியானதே.

நான் எவரையும் நம்பவில்லை

இது பைத்தியக்காரத்தனமான கோரமான கொலை. ஆனால் இங்கே நீங்கள் தீர்ப்பு வழங்கும் போது எனக்கெளும் கேள்விகளை மட்டுமே வைத்தேன். மற்றும் படி தீர்ப்பு எப்பொழுதும் கொலைக்கு சார்பாக இராது. இதன் உண்மையான தரவுகளும் வெளியே வராது. எனவே எல்லாம் லாம்.....??? என்பதுடன் முடிவுறும்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்கிறேன் - மனைவி இப்படி திருமணத்துக்கு அப்பாலான உறவு கொண்டாரா இல்லையா என்பது இன்னும் அறியப்படவில்லை.

ஆனால் அப்படியே நடந்து இருந்தாலும் - கணவர் நடந்து கொண்ட முறை மிக மோசமானது. மனைவி செய்ததாக சொல்லப்படும் ஒழுக்க கேட்டிற்கு இதுவல்ல தண்டனை.

இதை செய்த கணவனுக்கு கூட, ஆத்திர மிகுதியால் இப்படி நடந்து கொண்டார் என்பதை ஒரு mitigating factor (குற்ற குறைப்புக்கான காரணி) ஆக (நியாயப்படுதலாக ஆக அல்ல) எடுத்தாலும்….

கலரியில் இருந்து விசிலடிக்கும் கூட்டம்….தமிழ் தலிபான்களே.

3 minutes ago, விசுகு said:

நான் எவரையும் நம்பவில்லை

இது பைத்தியக்காரத்தனமான கோரமான கொலை. ஆனால் இங்கே நீங்கள் தீர்ப்பு வழங்கும் போது எனக்கெளும் கேள்விகளை மட்டுமே வைத்தேன். மற்றும் படி தீர்ப்பு எப்பொழுதும் கொலைக்கு சார்பாக இராது. இதன் உண்மையான தரவுகளும் வெளியே வராது. எனவே எல்லாம் லாம்.....??? என்பதுடன் முடிவுறும்.

தீர்ப்பு எழுதும் போது ஒரு விசாரணை இவை எல்லாவற்றையும் ஆய்ந்தே தீர்ப்பு வர வேண்டும்.

அந்த விசாரணை முடிவு வரும் வரை எம் பதில்கள் எல்லாம் “லாம்” விகுதியில்தான் இருக்க முடியும்.

இலங்கையில் தீர்ப்பு சரியாக வராது என்ற கணிப்பில், நாம் குறை தரவுகளை வைத்து முடிவுக்கு வரக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உலகில் ஒரு பெண் சட்டப்படி திருமணம் செய்தவருடன் மட்டும் தான் உடலுறவு கொள்ள வேண்டும் என சட்டங்கள் இருக்கின்றதா?

இல்லையே.

சில நாடுகளில் திருமணத்தின் பிந்தான் உறவு வைக்க முடியும் என உள்ளது.

சில நாடுகளில் திருமணத்தின் பின் கணவனுடன் மட்டுமே வைக்க முடியும் என உள்ளது.

ஆனால் அநேகமாக அனைத்து நாடுகளிலும் திருமணத்தின் பின் இன்னொருவருடன் உறவு வைப்பது கிரிமினல் குற்றம் இல்லை எனிலும், விவாகரத்துக்கு போதிய காரணமாக கொள்ளப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உலகில் ஒரு பெண் சட்டப்படி திருமணம் செய்தவருடன் மட்டும் தான் உடலுறவு கொள்ள வேண்டும் என சட்டங்கள் இருக்கின்றதா?

இல்லையே.

ஒரு சில கடும் போக்கு இஸ்லாமிய நாடுகள் அவ்வாறான சட்டங்கள. இருக்கலாம். மற்றய நாடுகளில் அப்படியான சட்டங்கள் இல்லையெனினும் திருமண ஒப்பந்தத்தை மீறும் இவ்வாறான செயல்கள் உலகில் எங்கும் விரும்பபடுவதில்லை. அதை சமூகரீதியில் அங்கீகரிப்பதும் இல்லை. சட்டப்படி பிரிந்து போவதே இதற்கான அறிவார்ந்த தீர்வு.

இவ்வாறான சைக்கோதனமன கொலைகள் உலகம் முழுவதும் நடந்தே உள்ளன. ஆனால் ஒரு சமூகமாக அதை கொண்டாடும் மனநிலை கொலையாளியை ஒரு வீரனாக பாராட்டும் செயல்கள் என்பது அவமானகரமானது என்பதே எனது நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2025 at 14:45, குமாரசாமி said:

இதே மாதிரி சம்பவம் ஒன்று கனடாவிலும் பல வருடங்களுக்கு முன் நடந்ததாக ஞாபகம் இருக்கு.அதை செய்ததும் தமிழர் தான்.

ஏன் தான் இப்படியான காட்டுமிராண்டி வேலைகளை செய்கின்றார்களோ தெரியவில்லை.

ஆமாம் சரி நான் என்றால் அவர்கள் இருவருடனும் கதைத்து அவனுக்கு அவளை திருமணம் செய்து வைத்து இருப்பேன் எனக்கும் வேறு ஒன்றை புதிதாக பார்த்து கொள்வேன் சரியா அண்ணை ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

32 வயது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்ததால் கணவன் சாதித்தது என்ன..!

திருமணம் என்பது இரு மனங்கள் இணைந்து வாழும் ஆயிரம் காலத்து பயிர். ஆனால் அந்த திருமணங்களே இன்று முறிந்து நீதிமன்ற படியேறுவதும், இரு மனங்களும் வெறுத்து ஒருவரையொருவர் குறை கூறுவதும், அடிபிடி, சண்டை, கொலை என நீண்டு செல்லும் ஒரு புதிய கலாசாரத்தை நோக்கி தமிழ் சமூகம் செல்வது தான் வேதனையான விடயம்.

அந்தவகையில் கடந்த செவ்வாய்கிழமை வவுனியா, நெடுங்கேணி, அனந்தர்புளியங்குளம், நொச்சிக்குளம் கிராமத்தில் இடம்பெற்ற சமபவம் முழு இலங்கையையும் உலுக்கியிருந்தது.

பொலிஸ் நிலையத்தில் சரண்

வவுனியா, நெடுங்கேணி, பாடசாலையொன்றின் ஆரம்பப் பிரிவு ஆசிரியரான சுவர்ணலதா என்ற 32 வயது இளம் ஆசிரியரின் தலையை வெட்டிக் கொண்டு அவரது கணவனான 35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவமே அது.

அந்தச் சம்பவம் இடம்பெற்ற பின் சமூக ஊடகங்களில் குறித்த கணவன் தொடர்பாகவும், மரணமடைந்த ஆசிரியை தொடர்பாகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் பரவி வருவதுடன், கொலையை ஊக்குவிக்கும் கருத்துக்களும் பரவி வருகின்றன.

Brutal Crime: Woman Beheaded

உண்மையில் நடந்தது என்ன...?

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் என்ற இளைஞன் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலை வாய்ப்பு தேடி சென்றிருந்தார்.

அங்கு இருந்த போது சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட நட்பின் காரணமாக சுவர்ணலதாவுக்கும் சுகிர்தரனுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்திருந்தது.

5 வருடங்களுக்கு முன்னர் குறித்த திருமணம் நடந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சிறந்த தோட்டச் செய்கையாளரான சுகிர்தரன் தனது மனையின் வீட்டில் இருந்து அவர்களது காணியில் தோட்டம் செய்து வந்துள்ளார்.

அவர்களது வாழ்க்கை பயணம் சந்தோசமாகவே இந்நாட்களில் ஓடியிருந்தது.

இருவரும் இணைபிரியாது உலா வந்தனர். தனது மனைவியை செல்லமாக ''அம்மு'' என சுகிர்தரன் கூப்பிட்டு வந்துள்ளார்.

அவ்வளவு தூரம் அவர்களது வாழ்க்கை சந்தோசமாகவே ஆரம்பத்தில் அமைந்திருந்தது.

விதியின் விளையாட்டு

ஒரு வருடத்திற்கு முன் அவர்களது கிராமத்தில் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத் தெரிவு ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் அடிதடியில் முடிந்திருந்தது. இதன்போது சுகிர்தரனுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. சில நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றிருந்தார்.

அப்போது தான் அவர்களது வாழ்வில் விதி விளையாட ஆரம்பித்தது.

Husband Kills Wife, Cuts Off Head

கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் சிறிய உதவிகளை சுவர்ணலதா தான் முன்னர் கற்பித்த பாடசாலையில் உயர்தரம் பயின்ற அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மூலம் அவ்வப்போது பெற்றுக் கொண்டாள்.

ஒரே கிராமத்தவர்கள். ஒரே பாசாலையில் ஆசிரியர் - மாணவர் என்ற அடிப்படையில் அவர்களுக்குள் இருந்த நட்பின் காரணமாக குறித்த 21 வயது இளைஞர் ஆசிரியருக்கு உவிகளை செய்து இருவரும் நட்பாக இருந்துள்ளனர்.

சிகிச்சை முடிந்து வந்த கணவரும் மீண்டும் சந்தோசமாக குடும்பத்துடன் இருந்துள்ளார்.

காயம் ஏற்பட்டு சிகிச்சை செய்ததால் கடும் வெயிலில் வேலை செய்ய வேண்டாம் என வைத்தியர்களால் ஆலோசனை கூறப்பட்டிருந்தது.

இதனால் சிறப்பாக தோட்டம் செய்த சுகிர்தரனின் கைகள் ஓய்ந்திருந்தது.

என்னதான் உலகம் வளர்ச்சியடைந்து மேலைத்தேச கலாசாரம் எமது நாட்டில் பரவி இருந்தாலும், ஒரு ஆணும், பெண்ணும் பழகுவதை எமது சமூகம் பலவாறாக பேசும்.

அவ்வாறாறே குறித்த ஆசிரியைக்கும், 21 வயது இளைஞனுக்கும் இடையில் இருந்த நட்பை சிலர் பலவாறாக பேச ஆரம்பித்தனர்.

இது சுகிர்தரனின் காதில் பட்டதும் அன்பு பிணைப்பாக இருந்த கணவன் - மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் அவ்வப்போது சண்டைகளும், ஊடல்களும் இடம்பெற்றிருந்தது.

எனினும் மனைவி - கணவன் என்ற பாச பிணைப்புடன் அவர்களது குடும்பம் உருண்டோடிக் கொண்டிருந்தது.

வேலை இல்லாததால் சுகிர்தரன் உறவினர்களின் வேண்டுதலின் அடிப்படையில் கொழும்புக்கு மேசன் வேலைக்காக சென்றிருந்தார்.

கணவன் - மனைவிக்கு இடையில் அவ்வப்போது சண்டைகளும் ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் கொழும்பில் வேலை செய்வது. சில நாட்கள் மனைவியை பார்க்க வருவது என சுகிர்தரனின் நாட்கள் நகர்ந்தன.

பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம்

இந்த நிலையிலேயே சுகிர்தரன் கொழும்பில் இருந்து வந்து தனது காதல் மனையின் தலையை துண்டிக்கும் அளவுக்கு சென்றிருந்தார்.

இது தொடர்பில் அவர் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்ததாவது,

தனது மனைவி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும் அதில் ஏற்பட்ட சந்தேகமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Man Beheads Wife in Brutal Murder

தான் கொழும்பில் தங்கி இருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளம் குடும்பஸ்தர், நீண்ட காலமாக தனக்கும் மனைவிக்கும் இடையில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை (29.05) தனது தொலைபேசிக்கு மனைவியுடன் நட்பாக பழகும் 21 வயது இளைஞனினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களால் தனது கோபம் உச்சம் அடைந்த நிலையில் தான் மறுநாள் வெள்ளிக்கிழமை (30.05) கொழும்பிலிருந்து நொச்சிக்குளம் கிராமத்திற்கு வருகை தந்து என் மனைவியுடன் பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் இதில் தீர்வு கிடைக்காத நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம், மானிப்பாய் சென்று பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வருகை தந்து மனைவியை தாய் சேய் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்த அவர், இந்த குழந்தைக்கு காரணம் யார் என்பது தொடர்பில் தனக்கு நீண்ட கால சந்தேகம் ஏற்பட்டு இருந்ததாகவும் இது தொடர்பாக தன் மனைவியிடம் கேட்டதன் பிரகாரம் எவ்விதமான பதிலும் கூறவில்லை.

செவ்வாய்கிழமை (03.06) காலை அவர் அதை ஒத்துக் கொண்டதையடுத்து தனது மனைவியை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியே அவர் சின்ன பூவரசங்குளம் காட்டுப்பாதையினால் அழைத்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அந்த காட்டுப் பாதையின் வழியே 200 மீட்டர் அளவில் சென்றதன் பின்னர் மனைவி ஏன் இந்த வீதியால் செல்கிறீர்கள் என கேட்டபோது, தான் அந்த குறித்த 21 வயது இளைஞன் இந்த பகுதிக்கு வருவதாகவும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண்பதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறதாகவும் கூறியதாகவும் பொலிசாரிடம் கூறி இருக்கின்றார்.

இதன் பின்னர் தான் கொலை செய்ததாக புளியங்குளம் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளையும், தலையையும் கைப்பற்றியதோடு அவரையும் கைது செய்திருந்தனர்.

இதனை அடுத்து உயிரிழந்து இறந்த பெண்ணின் கணவன் சுகிர்தரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்ன பூவரசங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி இருந்தனர்.

வாக்கு மூலம் உண்மையானவையா?

இவ்வாறு சுகிர்தரன் வாக்கு மூலம் வழங்கிய போதும் இதில் கூறப்பட்ட விடயங்கள் உண்மையானவையா என்பது குறிததும் ஆராயப்பட வேண்டியுள்ளது.

21 வயது இளைஞனும், ஆசிரியரும் நட்பாக இருந்தார்கள் என்பது உண்மை. அதனை அவர்களது உறவினர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

அந்த இளைஞனால் தமது குடும்பத்திற்குள் பிரச்சனை, சந்தேகம் ஏற்பட்டதால் ஆசிரியையான சுவர்ணலதா கடந்த சில நாட்களாக குறித்த இளைஞன் உடனான தொடர்பை துண்டித்து அவரை புறக்கணித்து நடந்து வந்துள்ளார்.

sri lanaka police

தான், தனது கணவன், புதிதாக பிறக்கவிருக்கும் தனது குழந்தை என தமது இல்லற வாழ்வை சந்தோசமாக கொண்டு செல்வதற்காக அவள் அந்த முடிவை எடுத்திருந்தாள்.

ஆனாலும் அவள் கதைக்கவில்லை. தொடர்பை முறித்து விட்டதால் மனமுடைந்த இளைஞன் பல முறை ஆசிரியையுடன் தொடர்பு கொள்ள முயன்றதுடன், கணவனிடமும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ஆனால் என்ன பேசினார் என்பது இருவருக்குமே வெளிச்சம்.

ஆனாலும், கணவன் கொடுத்த வாக்குமூலம் போன்று குறித்த இளைஞரிடம் இருந்து எந்த புகைப்படமோ,  காணொளி அனுப்பப்பட்டதற்கான சான்றுகள் இல்லை.

சுகிர்தரனின் தொலைபேசியில் அவ்வாறானதொரு படமோ, காணொளியோ இல்லை என்கின்றனர் புளியங்குளம் பொலிசார்.

அதேபோல், குறித்த இளைஞனுக்கும், மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக ஆசிரியையின் சகோதரனுக்கு கொலைக்கு முதல் நாள் மாலை சுகிர்தரன் தெரியப்படுத்திய போதும், அவர்களுக்கும் எந்தவொரு படத்தையோ, காணொளியோ காட்டவில்லை.

ஆனால் 21 வயது இளைஞருடன் ஆசிரியைக்கு தொடர்பு என்ற கருத்தையே கூறியுள்ளார்.

திருமணமாகி நீண்ட காலத்திற்கு பின்னர் ஆசிரியை கர்ப்பாக இருந்துள்ளார். சுகித்தரனுக்கு அந்த கர்ப்பம் தன்னுடையதா என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அந்த சந்தேகமே கொலையில் முடிந்துள்ளது.

கொல்லப்படுவதற்கு முதல் நாள் வவுனியாவில் உள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றுக்கு தனது மனைவியை அழைத்துச் சென்ற சுகிர்தரன், ஸ்கேன் பரிசோதனை செய்து தனது மனைவி கர்ப்பம் என அறிந்ததும், மகிழ்சியடைந்துள்ளார்.

32 வயது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்ததால் கணவன் சாதித்தது என்ன..! | Husband Beheads Wife In Shocking Act Vavuniya

குறித்த செய்தியை ஆசிரியை தனது அண்ணிக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த மருத்துவ மனைக்கு வருகை தந்த அண்ணிக்கு சுகிர்தரன் பழங்கள் வாங்கிக் கொடுத்து சந்தோசமாக இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

வவுனியா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரனை அதிகாரியான க.ஹரிபிரசாத்திடம் குறித்த மரணம் தொடர்பாக கேட்டபோது, மரணத்துக்கு காரணம் கழுத்துக்கு பகுதி வெட்டப்பட்டதனால் நாடி நாளங்களால் ஏற்பட்ட அதிக இரத்த போக்கே காரணம்.

வயிற்றில் இருந்த கரு 7 கிழமைகள். அதாவது 50 நாட்கள் முடிவடைந்துள்ளது.

டிஎன்ஏ பரிசோதனை

இக்கரு யாருடையது என்பதை கண்டறிவதற்காக மாதிரிகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், டிஎன்ஏ முடிவுகள் வந்த பின்னரே உண்மை தன்மை தெரியவரும்.

டிஎன்ஏ முடிவுகள் வந்த பின்னர் கணவர் இது தொடர்பில் ஒரு முடிவை எடுத்திருக்கலாம்.

32 வயது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்ததால் கணவன் சாதித்தது என்ன..! | Husband Beheads Wife In Shocking Act Vavuniya

எதுவாகினும் இரு உயிர்களை பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எந்த சட்டத்திலும் இடமும் இல்லை. பிடிக்கவில்லை என்றால் ஆதாரங்களை காண்பித்து பிரிந்து இருக்கலாம் என தனது ஆதங்கத்தை அவர் தெரிவித்துள்ளார்.

அன்று மாலை வரை சந்தோசமாக இருந்த அவர்களது வாழ்வில் இரவு நடந்தது தான் என்ன...?

இரவு 8 மணியளவில் சுகிர்தரன் தனது மனைவியின் தந்தையிடம் சென்று கத்தியை வாங்கியுள்ளார். அந்த கத்தியால் தான் மறுநாள் தனது மனைவியை கொலை செய்துள்ளார்.

திங்கள் கிழமை மாலை தொடக்கம் இரவு வரை நடந்தது என்ன..? சுகிர்தரன் அவர்கள் குழப்பம் அடைந்து இந்த நிலைக்கு சென்றதற்கு காரணம் என்ன..? அந்தக் காலப்பகுதியில் அவரது தொலைபேசிக்கு அழைப்பு எடுத்தது யார்? அந்த அழைப்பில் பேசப்பட்ட விடயங்கள் என்ன? அவையே இந்த முடிவுக்கு காரணம்...?

பிடிக்கவில்லை என்றால் பிரிந்து செல்வதற்கும், தனித்து வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. அல்லது சட்டப்படி விவாகரத்து கொடுத்து விட்டு வேறு திரும்ணம் செய்து விரும்பியவருடன் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.

அதற்காக ஒருவரை கொலை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை. இந்த கொலையால் கணவன் சாதித்தது என்ன..?

நாளை டிஎன்ஏ பரிசோதனையில் அந்தக் குழந்தை சுகிர்தரனின் தான் என்று வந்தால் அவரது மனநிலை எப்படி இருக்கும்...?

கொலைக்கு பின்னர் சிறை சென்ற கணவன் இனி சாதிக்கப் போவது என்ன...?

தனது வாழ்க்கையையும் கம்பிக் கூட்டுக்குள் சுருக்கிக் கொண்டது தான் மிச்சம். ஆகவே, கோபத்தில் எடுக்கும் அவசர முடிவுகள் தீர்வல்ல.

அவை ஆழமாக யோசித்து சிந்தித்து எடுக்கப்பட வேண்டியவை. வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அனைவரும் உணரவேண்டும்.

https://tamilwin.com/article/husband-beheads-wife-in-shocking-act-vavuniya-1749378500

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2025 at 09:59, goshan_che said:

விசாரணயின் பின்பே எதையும் சொல்ல முடியும் என்பது சரியே. ஆனால் தலையோடு பொலிஸ் நிலையம் போய் கொலையை ஒப்பு கொண்டதால் - கொலையை இன்னார், இன்ன காரணதுக்காக செய்தார் என்பது வெள்ளிடமலை ஆகவே அந்த கொலையை கண்டிப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.

அந்த இளைஞர் இப்படி போட்டோக்களை அனுப்பி சீண்டி இருந்தால் கொலையில் அவரின் பங்கும் உள்ளது.

ஆனால் அவர் கொலையாளியை கொலை செய் என நேரடியாக தூண்டியிராத விடத்து, அவர் வழக்கில் ஒரு சாட்சியே ஒழிய குற்றவாளி அல்ல.

நீங்கள் கூறியது போல் அவருக்கு அறிவுரை செய்ய மட்டுமே முடியும்.

வாசித்த சம்பவங்கள் உண்மையானல் -

  1. திருமணம் முடித்து விட்டு கொழும்பில் தனியாக போய் இருந்த கணவன்

  2. கணவனிடம் மணவிலக்கு பெறாமல் அவர்களை விட வயது குறைந்த இளைஞரிடம் உறவு வைத்து, கருவையும் உருவாக்கி கொண்ட மனைவி

  3. அப்படி ஒரு உறவில் இருந்தது மட்டும் அல்லாமல் கணவனுக்கே போட்டோ அனுப்பி சீண்டிய காதலன்

இவர்கள் யாருமே சுத்தம் இல்லை.

ஆனால் கணவன் பல நாட்களாக திட்டமிட்டு கொலை செய்தது இதை வேறு கட்டத்துக்கு கொண்டு போய்விட்டது.

ஒரு நல்ல நண்பன் இருந்து - அவனிடம் மனம் விட்டு பேசி இருந்தால் கூட “தூக்கி போட்டு விட்டு, உன் வாழ்க்கையை பார்” என அவன் சொல்லி இருந்தால் கொலையை தடுத்திருக்கலாம்.

ஆனால் சமூகமே “வெட்டுடா, கொல்லுடா, உன் மானத்தை மீள பெறுடா” என பினூட்டம் இடுகிறதெனில் அந்த சமூகத்தில் இப்படி ஒரு அறிவுரை கணவனுக்கு கிடைக்கவும் வாய்ப்புகள் குறைவு.

பிகு

இங்கே பலர் சொல்வது போல இந்த மனைவி முழு அப்பாவியாகவும் இருக்கலாம். இவை எல்லாம் கணவனின் கட்டுகதைதாகவும் இருக்கலாம்.

@ஏராளன் இணைத்துள்ள தமிழ்வின் கட்டுரை தகவலின்படி பார்த்தால் கொலையை செய்தவர் அடிபிடி கோஸ்டி போல் தோன்றுகின்றது. மனைவியின் தந்தையிடம்/மானனாரிடம் கொலையை செய்வதற்கு முன்தினம் கொலையை செய்வதற்கு பயன்படுத்திய கத்தியை பெற்று மறுநாள் அதை பயன்படுத்தி தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார் என்பதை பார்க்கும்போது அவரது குரூர புத்தி தென்படுகின்றது. இவருக்கு ஏற்கனவே வாள்வெட்டுக்கள், ஆட்களை வெட்டுவதில் பரீட்சயம் உள்ளதோ எனவும் சந்தேகம் ஏற்படுகின்றது. ஆத்திரகாரனுக்கு புத்தி மத்திமம் என்பது ஒருபுறம் போக இப்படி குரூரமாக கொலையை இவர் செய்தமைக்கு ஏற்கனவே பரீட்சயமான வாள் வெட்டு அனுபவம் ஏதாவது இவரில் தாக்கம் செய்ததோ எனவும் எண்ண வேண்டி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2025 at 17:45, island said:

அடிக்கடி பல தடவைகள் எனது கருத்துக்களுக்குள் வந்து, அதற்கு தர்கக ரீதியில் பதில் சொல்லாமல் என்னை முஸ்லீமாக இனம் காட்டி வசைமாரி பொழிவதில் மும்முரமாக உள்ளீர்கள். அதற்கான காரணம் என்ன?

என்ன நீங்கள் நானா இல்லையா!

இதில் வசைமாரி எங்கே இருக்கிறது? அவர்களின் நடைமுறையைதானே எழுதினேன்!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.