Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கினார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இந்த போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (ஜூன் 15) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் நடத்தப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwywywry9p5o

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார். - திருக்குறள்

அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக

நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக!

—புலியூர்க் கேசிகன் உரை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டை தவிர இந்தியாவில் கள் உற்பத்திக்கு தடை இருக்கின்றதா தெரியவில்லை.

இருப்பினும் தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை சாராய கடைகளை திறந்து வைத்துக்கொண்டு இயற்கையாக உற்பத்தியாகும் கள்ளை ஏன் தடை செய்திருக்கின்றார்கள் என புரியவில்லை.

அது மட்டுமில்லாமல் தமிழ் நாட்டில் அயலக மாநிலமான கேரளத்தில் கள்ளு என்பது பாரம்பரியமான பானம்.

இலங்கையில் புகையிலை உற்பத்தியை தடை செய்து விட்டு மேலைத்தேய உற்பத்தியான சிகரெட்டை அனுமதி அளிக்கின்றார்கள். ஏதாவது புரிகின்றதா?

ஜேர்மனியில் மருத்துவ கடைகளில் மட்டும் எதுவுமே கலக்காத புகையிலையை வாங்க முடியும். விலை கொஞ்சம் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

அதுவும் படகு பயண பயணிகளுக்கு உடன் கள்ளை நல்ல விலைக்கு விற்கின்றார்கள், கள்ளை தடை செய்ய மிகவும் தரங்குறைந்த கசிப்பிற்கு ஏழைகள் தள்ளப்படுகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இலங்கையில் புகையிலை உற்பத்தியை தடை செய்து விட்டு மேலைத்தேய உற்பத்தியான சிகரெட்டை அனுமதி அளிக்கின்றார்கள். ஏதாவது புரிகின்றதா?

உள் நாட்டில் புகையிலை சாகுபடிக்கு போடப்பட்டுள்ள தடைக்கான முக்கிய காரணம் மக்களின் சுகாதார நலன் மீதுள்ள கரிசனை மட்டும் தான் என்று கொள்வது தவறு.

பணப்பயிராக புகையிலை சாகுபடியில் விவசாய நிலங்களை பயன்படுத்தும்போது அத்தியாவசிய உணவுப்பயிர் உற்பத்தி செய்வதற்கான விவசாய நிலங்களுக்கு உள் நாட்டில் பற்றாக்குறை ஏற்படும்.

இதனால் உணவுத் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு, அன்னிய செலாவணி வீணடிப்பு மற்றும் உணவுக்காக வெளி நாடுகளை தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

உள் நாட்டில் புகையிலை சாகுபடிக்கு போடப்பட்டுள்ள தடைக்கான முக்கிய காரணம் மக்களின் சுகாதார நலன் மீதுள்ள கரிசனை மட்டும் தான் என்று கொள்வது தவறு.

புகையிலையாலும் பொருள் ஈட்டித் தமிழர்கள் வளர்ச்சி பெற்றது உண்மை. அதனை அழிப்பதற்காகவே கரிசனை கொண்டன சிங்கள அரசுகள்.😲

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, vanangaamudi said:

பணப்பயிராக புகையிலை சாகுபடியில் விவசாய நிலங்களை பயன்படுத்தும்போது அத்தியாவசிய உணவுப்பயிர் உற்பத்தி செய்வதற்கான விவசாய நிலங்களுக்கு உள் நாட்டில் பற்றாக்குறை ஏற்படும்.

புகையிலை உற்பத்தியால் உணவுப்பயிர் பயிருடுவதற்கு நில பற்றாக்குறை வருமென்பது பொய்க்கதை.

ஏனெனில் நான் விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயத்தால் வளர்ந்தவன் என்ற முறையில் எனக்கு எல்லாம் தெரியும்.

6 hours ago, vanangaamudi said:

இதனால் உணவுத் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு, அன்னிய செலாவணி வீணடிப்பு மற்றும் உணவுக்காக வெளி நாடுகளை தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இப்ப மட்டும் என்ன வாழுதாம்? உப்பிற்கும் வெங்காயத்திற்கும் வெளிநாட்டை நம்பித்தானே இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மதுவோ கள்ளோ ....

சாராயக் கடைகளை மூடுங்கள் என்றபடி கள்ளிறக்குவேன் என்பது சரியாகப் படவில்லை.

ஆனால் இது கள்ளை தடை செய்வது போல் சாராயத்தையும் தடை செய் என்றால் ஏற்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

போதை தரும் எந்த பொருளும் தடை செய்ய இலாயக்கானதே….

அதில் கள்ளில் அல்கஹோல் 6% டாஸ்மார்க் பியரில் 5% என்ற வேறுபாடுகள் எல்லாம் முட்டையில் மயிர் புடுங்கும் வேலைகளே.

ஆனால் prohibition எனப்படும் பூரண மதுவிலக்கு அமெரிக்கா உட்பட இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் பலத்த தோல்வியை சந்தித்தது என்பதுதான் உண்மை.

இப்போதும் குஜராத்தில் உள்ளது, ஆனால் அங்கே கள்ளசாராய விற்பனை அமோகம்.

இவற்றை எல்லாம் மனதில் கொண்டு உருவான கருத்தியலே அரசு மதுகடைகளை நடத்த வேண்டும் என்பது. தனிநபர்கள் மது உற்பத்தி, விற்பனையில் இறங்க கூடாது என்றால் அதில் கள்ளும் அடங்கத்தான் வேண்டும்.

இதில் தனது நாடார் சாதி வாக்குகளை கவர சீமான் போன்றோர் சட்டத்தை மீறும் போது அவர்களை உள்ளே தள்ள வேண்டியது அரசின் கடமை.

ஆனால் பிஜேபி ஆளான சீமான் மீது கைவைக்க திமுக அரசுக்கு பயம்.

கூடவே அரச மது தயாரிப்பு, விநியோக உரிமை விடயத்தில் தாம் செய்யும் பெரும் ஊழல் மீது வெளிச்சம் படக்கூடாது என்ற பயம் வேறு உள்ளது.

பிகு

புகையிலை வித்து சொந்த மாவட்ட, நாட்டு மக்களை கான்சர் மூலம் பரலோகம் அனுப்பிய, இப்போதும் புலம்பெயர் நாட்டில் off licence, restaurant என மது வித்து, அடைக்கலம் தந்த நாட்டு மக்களை பரலோகம் அனுப்பி வைக்கும் ஈழத்து புலம்பெயர் தமிழ் சமூகம் - கள்ளுக்கு ஆதரவு கொடுப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஏன் புகையிலையை சிகரெட்டுக்கான மூலப்பொருளாக ஏற்றுமதி செய்யலாம் தானே

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

புகையிலை உற்பத்தியால் உணவுப்பயிர் பயிருடுவதற்கு நில பற்றாக்குறை வருமென்பது பொய்க்கதை.

ஏனெனில் நான் விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயத்தால் வளர்ந்தவன் என்ற முறையில் எனக்கு எல்லாம் தெரியும்.

இப்ப மட்டும் என்ன வாழுதாம்? உப்பிற்கும் வெங்காயத்திற்கும் வெளிநாட்டை நம்பித்தானே இருக்கின்றார்கள்.

வணங்காமுடி சொன்னது விஞ்ஞான ரீதியில் சரியான தகவல் தான். பொய்யல்ல. புகையிலைப் பயிர் நிலத்தின் பல போசணைப் பொருட்களை மிகக் குறுகிய காலத்தில் உறிஞ்சி நிலத்தைச் சக்கையாக்கி விடும் ஒரு பயிர். இதனைப் பணத்திற்காக விரைவில் வளர்க்க, மேலும் களை நீக்கிகளும், அசேதன உரங்களும் போடுவார்கள். இதனால், புகையிலைத் தோட்டத்திற்கு அயல் நிலங்கள் கூட மாசடையும் நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன.

கீழே இருக்கும் கட்டுரையில், புகையிலையைப் பணப்பயிராக வளர்க்கும் சிறிய நாடுகளில் உணவுப் பயிர்களுக்கான நிலங்கள் குறைந்து வருகின்றன என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC4669730/

ஆரோக்கியமான பயிர்களை விளைவித்து உள்ளூர் மக்களின் பசியை நீக்குவதை விட்டு விட்டு புகையிலையைப் பயிரிட்டு, பெரும் விலைக்கு விற்று, பல ஆயிரம் பேருக்கு புற்று நோயைக் கொடுத்து, பின்னர் வெளிநாட்டில் இருந்து அரிசியும், உணவுகளும் இறக்குவது எவ்வளவு புத்திசாலித்தனம் என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, வாதவூரான் said:

ஏன் புகையிலையை சிகரெட்டுக்கான மூலப்பொருளாக ஏற்றுமதி செய்யலாம் தானே

சிகரெட் மட்டும் என்ன காயகல்ப மருந்தா? அதுவும் ஒரு கான்சர் ஊக்கிதானே?

ஒரு காலத்தில் 90கள் வரைக்கும் மேற்கில் சிகெரெட் பிடிக்காட்டி ஸ்டைல் இல்லை என்ற நிலை இருந்தது, சிறுவர் பார்க்கும் விளையாட்டுகள் எங்கினும் சிகெரெட் கம்பனிகளின் ஆதிக்கமே.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ்.

இதே போன்ற விழிப்புணர்வுதான் தமிழ் நாட்டிலும் குடிக்கு தேவைப்படுகிறது.

பூரண மதுவிலக்கு கள்ளசாராயத்தை ஊக்குவிக்கும்.

கள்ளுக்கும் பியருக்கும் அதிக வேறுபாடில்லை.

எமக்கே தெரியும் கள்ளால் எத்தனை குடும்பங்கள் ஊரில் சீரழிந்தன என்பது.

ஆகவே கள்ளை ஊக்குவிப்பது போல ஒரு மடமை வேறு இருக்க முடியாது.

ஒரு முக்கியமான சமூக பிரச்சினையை திமுக , அதிமுக கொள்ளை அடிக்க பயன்படுத்துகிறது. சீமான் வாக்கு கொள்ளைக்கு பயன் படுத்துகிறார்.

மூவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

விழிப்புணர்வுதான் தமிழ் நாட்டிலும் குடிக்கு தேவைப்படுகிறது.

பூரண மதுவிலக்கு கள்ளசாராயத்தை ஊக்குவிக்கும்.

👌

திமுக அதிமுக மற்றய அரசியல் கட்சிகள் மதுவிலக்கு என்று நடைமுறை சாத்தியமற்றதை சொல்லி மக்களை பேய்காட்டுகின்றார்கள். மக்களும் அதையே சொல்லி கொண்டிருக்கின்றார்கள்

3 hours ago, goshan_che said:

கள்ளை ஊக்குவிப்பது போல ஒரு மடமை வேறு இருக்க முடியாது.

இந்த மோசமான மடமையை செய்வது இந்தியாவில் சீமான் மட்டுமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, விசுகு said:

மதுவோ கள்ளோ ....

சாராயக் கடைகளை மூடுங்கள் என்றபடி கள்ளிறக்குவேன் என்பது சரியாகப் படவில்லை.

ஆனால் இது கள்ளை தடை செய்வது போல் சாராயத்தையும் தடை செய் என்றால் ஏற்கலாம்.

விசுகர்! மது என்பது அளவோடு இருந்தால் பிரச்சனைகள் இல்லை என்றே நினைக்கின்றேன். ஆயினும் இயற்கையாக உருவாகும் கள்ளுக்கும் தமிழ்நாட்டு மது தயாரிப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.தரமாக தயாரிக்கப்படாத மதுபானங்களே அங்கு மலிவு விலையில் விற்கப்படுகின்றது. அங்கு தயாரிக்கப்படும் மது பானங்கள் விசத்தை விட கொடியவை என கேள்விப்பட்டுளேன்.

மதுவை தடை செய்வது என்பது நடக்காத விடயம்.

8 hours ago, goshan_che said:

போதை தரும் எந்த பொருளும் தடை செய்ய இலாயக்கானதே….

அதில் கள்ளில் அல்கஹோல் 6% டாஸ்மார்க் பியரில் 5% என்ற வேறுபாடுகள் எல்லாம் முட்டையில் மயிர் புடுங்கும் வேலைகளே.

ஆனால் prohibition எனப்படும் பூரண மதுவிலக்கு அமெரிக்கா உட்பட இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் பலத்த தோல்வியை சந்தித்தது என்பதுதான் உண்மை.

இப்போதும் குஜராத்தில் உள்ளது, ஆனால் அங்கே கள்ளசாராய விற்பனை அமோகம்.

இவற்றை எல்லாம் மனதில் கொண்டு உருவான கருத்தியலே அரசு மதுகடைகளை நடத்த வேண்டும் என்பது. தனிநபர்கள் மது உற்பத்தி, விற்பனையில் இறங்க கூடாது என்றால் அதில் கள்ளும் அடங்கத்தான் வேண்டும்.

மேல் நாடுகளில் வாழ்ந்து கொண்டு மது தடையை பற்றி கதைப்பது கொஞ்சம் நெருடலாக உள்ளது.

8 hours ago, goshan_che said:

பிகு

புகையிலை வித்து சொந்த மாவட்ட, நாட்டு மக்களை கான்சர் மூலம் பரலோகம் அனுப்பிய, இப்போதும் புலம்பெயர் நாட்டில் off licence, restaurant என மது வித்து, அடைக்கலம் தந்த நாட்டு மக்களை பரலோகம் அனுப்பி வைக்கும் ஈழத்து புலம்பெயர் தமிழ் சமூகம் - கள்ளுக்கு ஆதரவு கொடுப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.

புற்று நோய் கொடியதுதான். அதற்காக புகையிலை மீது மட்டும் எல்லா பழியையும் போடுவது கொஞ்சம் நகைப்பாக இருக்கின்றது. இன்றைய உலகில் எதனால் எல்லாம் புற்றுநோய்கள் வருகின்றது என்பதை கணக்கெடுத்து பாருங்கள். அதிகம் படித்த மேற்குலகில் புகைத்தலால் புற்று நோய் வருகின்றது என தெரிந்தும் அதை தடைசெய்ய எந்தவொரு அரசுகளும் சிந்தித்தது இல்லை.

புகைப்பவர்களை விட அதாவது எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்களும் புற்றுநோய் தாக்கிக்கொண்டுதான் இருக்கின்றது இதற்கும் ஆயிரம் காரணங்கள் சொல்வர்.

4 hours ago, goshan_che said:

பூரண மதுவிலக்கு கள்ளசாராயத்தை ஊக்குவிக்கும்.

கள்ளுக்கும் பியருக்கும் அதிக வேறுபாடில்லை.

எமக்கே தெரியும் கள்ளால் எத்தனை குடும்பங்கள் ஊரில் சீரழிந்தன என்பது.

ஆகவே கள்ளை ஊக்குவிப்பது போல ஒரு மடமை வேறு இருக்க முடியாது.

ஒரு முக்கியமான சமூக பிரச்சினையை திமுக , அதிமுக கொள்ளை அடிக்க பயன்படுத்துகிறது. சீமான் வாக்கு கொள்ளைக்கு பயன் படுத்துகிறார்.

மூவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்

சாராயக்கடைகளை திறந்து வைச்சுக்கொண்டு கள்ளுக்கு தடை எண்டு புலம்பினால் கள்ளு உற்பத்தியை ஊக்குவிப்பதில் தப்பில்லை.

கைத்தொலைபேசியை பாவிப்பதனாலும் உடலுக்கு ஏகப்பட்ட பக்க விளைவுகள் வருகின்றதாம். புற்றுநோய் உட்பட......

அதையும்.....

தடை செய்வீர்களா?

தடை செய்வீர்களா?

தடை செய்வீர்களா?

தடை செய்வீர்களா?

தடை செய்வீர்களா?

தடை செய்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மேல் நாடுகளில் வாழ்ந்து கொண்டு மது தடையை பற்றி கதைப்பது கொஞ்சம் நெருடலாக உள்ளது.

பூரண மதுவிலக்கு முடியாத காரியம் என்றுதானே அமெரிக்க உதாரணத்துடன் எழுதியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

புற்று நோய் கொடியதுதான். அதற்காக புகையிலை மீது மட்டும் எல்லா பழியையும் போடுவது கொஞ்சம் நகைப்பாக இருக்கின்றது. இன்றைய உலகில் எதனால் எல்லாம் புற்றுநோய்கள் வருகின்றது என்பதை கணக்கெடுத்து பாருங்கள். அதிகம் படித்த மேற்குலகில் புகைத்தலால் புற்று நோய் வருகின்றது என தெரிந்தும் அதை தடைசெய்ய எந்தவொரு அரசுகளும் சிந்தித்தது இல்லை.

புகைப்பவர்களை விட அதாவது எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்களும் புற்றுநோய் தாக்கிக்கொண்டுதான் இருக்கின்றது இதற்கும் ஆயிரம் காரணங்கள் சொல்வர்.

புற்று நோய் பல காரணங்களால் வருவது உண்மை.

ஆனால் புற்று நோயை உருவாக்கும் மிக பெரிய, ஆய்வு மூலம் ஐயம் அற நிறுவப்பட்ட காரணி சிகெரெட்.

இதுவும் மதுவிலக்கு போலவே. தடை செய்தால் பெரும் எதிர்ப்பு வரும், கள்ள சிகெரெட் பரவும். ஆகவே பூரண தடை சரிவராது.

ஆனாலும் யூகேயில் இப்போ படிப்படியாக வாங்கும் வயதை கூட்டி, ஒரு காலத்தின் பின் பிறந்தவர்கள், அதாவது 01-01-2009 இன் பிறந்த பிள்ளைகள் வாழ்க்கையில் எப்போதும் சிகெரெட் வாங்க முடியாது என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.

இப்படி மைக்ரோ பிலாஸ்டிக் உட்பட ஒவ்வொரு புற்று நோய் ஊக்கியும் மனித உணவு, பழக்க சங்கிலியில் இருந்து அகற்றபட வேண்டும்.

அதன் முதல்படி உள்ளதில் மோசமானதில் ஒன்றான சிகரெட்.

2 hours ago, குமாரசாமி said:

சாராயக்கடைகளை திறந்து வைச்சுக்கொண்டு கள்ளுக்கு தடை எண்டு புலம்பினால் கள்ளு உற்பத்தியை ஊக்குவிப்பதில் தப்பில்லை.

கள்ளுக்கு மட்டும் அல்ல தடை. தனிநபர்கள் தயாரிக்கும், விநியோகிக்கும் சகல மதுவுக்கும் தடை.

சாராயம் போல கள்ளையும் அரசு விற்க வேண்டும் என கேட்பது லொஜிக்கலானது.

ஆனால் பியரை எதிர்த்து கொண்டு கள்ளை ஆதரிப்பது வெறும் அரசியல் பம்மாத்து.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கைத்தொலைபேசியை பாவிப்பதனாலும் உடலுக்கு ஏகப்பட்ட பக்க விளைவுகள் வருகின்றதாம். புற்றுநோய் உட்பட......

அதையும்.....

தடை செய்வீர்களா?

தடை செய்வீர்களா?

தடை செய்வீர்களா?

தடை செய்வீர்களா?

தடை செய்வீர்களா?

தடை செய்வீர்களா?

இப்போது இதை சிறுவகள் அதீதமாக பயன்படுத்துவதை தடுக்கும் சட்டங்கள் வர ஆரம்பித்துள்ளன.

ஆங்கிலத்தில் Nanny state என்பார்கள். தமிழில் ஆயா-அரசு எனலாம்.

ஒவ்வொரு விடயத்திலும் அரசு ஒரு ஆயா போல் தலையிடுவது.

இதை மக்கள் பலர் விரும்புவதில்லை. ஆகவே அரசுகள் இதை தன்மையாகத்தான் கையாளும்.

சிகெரெட் போல கைப்பேசிகளும் ஆபத்து என நிறுவப்படின், சிகெரெட் போலவே அவையும் படிபடியாக களையப்படும்.

யூகேயில் குளிர்பானங்களில் sugar tax என ஒன்றை அறிமுகபடுத்தியதால், பல நிறுவனங்கள் தம் தயாரிப்புகளில் சீனி அளவை குறைத்தன.

இவ்வாறாக விஞ்ஞான புரிதல் மாற, மாற அதற்கேற்ப அரசுகளும் தம் அணுகுமுறை, நிலையை மாற்றும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

விசுகர்! மது என்பது அளவோடு இருந்தால் பிரச்சனைகள் இல்லை என்றே நினைக்கின்றேன். ஆயினும் இயற்கையாக உருவாகும் கள்ளுக்கும் தமிழ்நாட்டு மது தயாரிப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.தரமாக தயாரிக்கப்படாத மதுபானங்களே அங்கு மலிவு விலையில் விற்கப்படுகின்றது. அங்கு தயாரிக்கப்படும் மது பானங்கள் விசத்தை விட கொடியவை என கேள்விப்பட்டுளேன்.

மதுவை தடை செய்வது என்பது நடக்காத விடயம்.

மேல் நாடுகளில் வாழ்ந்து கொண்டு மது தடையை பற்றி கதைப்பது கொஞ்சம் நெருடலாக உள்ளது.

புற்று நோய் கொடியதுதான். அதற்காக புகையிலை மீது மட்டும் எல்லா பழியையும் போடுவது கொஞ்சம் நகைப்பாக இருக்கின்றது. இன்றைய உலகில் எதனால் எல்லாம் புற்றுநோய்கள் வருகின்றது என்பதை கணக்கெடுத்து பாருங்கள். அதிகம் படித்த மேற்குலகில் புகைத்தலால் புற்று நோய் வருகின்றது என தெரிந்தும் அதை தடைசெய்ய எந்தவொரு அரசுகளும் சிந்தித்தது இல்லை.

புகைப்பவர்களை விட அதாவது எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்களும் புற்றுநோய் தாக்கிக்கொண்டுதான் இருக்கின்றது இதற்கும் ஆயிரம் காரணங்கள் சொல்வர்.

சாராயக்கடைகளை திறந்து வைச்சுக்கொண்டு கள்ளுக்கு தடை எண்டு புலம்பினால் கள்ளு உற்பத்தியை ஊக்குவிப்பதில் தப்பில்லை.

கைத்தொலைபேசியை பாவிப்பதனாலும் உடலுக்கு ஏகப்பட்ட பக்க விளைவுகள் வருகின்றதாம். புற்றுநோய் உட்பட......

அதையும்.....

தடை செய்வீர்களா?

தடை செய்வீர்களா?

தடை செய்வீர்களா?

தடை செய்வீர்களா?

தடை செய்வீர்களா?

தடை செய்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்காக மனுசன் இங்கே மரத்தில் ஏறுறான் பாரு! ஏறிக் குடிச்சுட்டு இறங்கி வந்தால் கட்டுப்பணம் கூட காலி. 😂😂😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_0721.jpeg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, goshan_che said:

சிகெரெட் போல கைப்பேசிகளும் ஆபத்து என நிறுவப்படின், சிகெரெட் போலவே அவையும் படிபடியாக களையப்படும்.

22 hours ago, goshan_che said:

புற்று நோய் பல காரணங்களால் வருவது உண்மை.

ஆனால் புற்று நோயை உருவாக்கும் மிக பெரிய, ஆய்வு மூலம் ஐயம் அற நிறுவப்பட்ட காரணி சிகெரெட்.

இதுவும் மதுவிலக்கு போலவே. தடை செய்தால் பெரும் எதிர்ப்பு வரும், கள்ள சிகெரெட் பரவும். ஆகவே பூரண தடை சரிவராது.

ஆனாலும் யூகேயில் இப்போ படிப்படியாக வாங்கும் வயதை கூட்டி, ஒரு காலத்தின் பின் பிறந்தவர்கள், அதாவது 01-01-2009 இன் பிறந்த பிள்ளைகள் வாழ்க்கையில் எப்போதும் சிகெரெட் வாங்க முடியாது என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.

இப்படி மைக்ரோ பிலாஸ்டிக் உட்பட ஒவ்வொரு புற்று நோய் ஊக்கியும் மனித உணவு, பழக்க சங்கிலியில் இருந்து அகற்றபட வேண்டும்.

அதன் முதல்படி உள்ளதில் மோசமானதில் ஒன்றான சிகரெட்.

நடக்கிற விசயத்த கதையுங்கோ.

அமெரிக்க உணவு முறைகளை இந்த உலகமே ஏற்கவில்லை என்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கின்றேன்.

ஆனால் அமெரிக்கா இல்லாமல் இந்த உலகமே இல்லை என்ற நிலையும் இருக்கின்றது.

கூட்டி கழித்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, goshan_che said:

கள்ளுக்கு மட்டும் அல்ல தடை. தனிநபர்கள் தயாரிக்கும், விநியோகிக்கும் சகல மதுவுக்கும் தடை.

சாராயம் போல கள்ளையும் அரசு விற்க வேண்டும் என கேட்பது லொஜிக்கலானது.

ஆனால் பியரை எதிர்த்து கொண்டு கள்ளை ஆதரிப்பது வெறும் அரசியல் பம்மாத்து.

தமிழ்நாட்டில் சட்டபூர்வமான மது விற்பனையிலும் மக்கள் அதிகமாக உயிரிழக்கின்றார்கள். அதனால் அரசு சம்பந்தப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு மானியம் என வழங்குகின்றது. எனவே அதுவும் ஒருவகை ஊக்கிவிப்பு.😎

வரும் காலத்தில் டாஸ்மாஸ்க்கில் மது அருந்தி உயிரிழப்பவர்களுக்கு மாதாந்த ஓய்வூதியம் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.😋

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி ஒன்று பார்த்தேன் சீமான் கள்ளை எல்லோருக்கும் ஊற்றி கொடுக்கின்றார் நாம் தமிழர் கட்சியில் சேலம் தொகுதியில் வேட்பாளராக நின்று தோல்வி அடைந்த பெண் வேட்பாளர் கள்ளு வாங்கி குடிக்கின்றார். சீமான் நிறைய பெண்களை தனக்கு பாதுகாப்பிற்கு அடுக்கி வைத்து கொண்டு செல்பவர். அவர்கள் எல்லாம் கள்ளு குடிக்க தொடங்கினால் நிலைமை என்ன. அதில் ஒரு புர்க்கா போட்ட சீமான் கட்சி பெண் தலைவர் சொல்கின்றார் கள்ளு குடித்து செத்தவன் கிடையாது என்று எங்கள் தலைவர் சீமான் சொல்லியுள்ளார் என்று கள்ளு குடிப்பதை நியாயபடுத்துகின்றார் முஸ்லிம் மதம் கள்ளு குடிப்பதை ஆதரிக்கின்றதா?

இவர் ஏதாவது நல்ல செயல்களை கையில் எடுப்பார் என்று பார்த்தால் சமுதாயத்தை நாசம் செய்கின்ற செயல்களை தான் கையில் எடுக்கின்றார்.இவரது தொண்டர்கள் சொல்லி கொள்வது தமிழ்நாட்டில் இவர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து உலகத் தமிழர்களே தலைநிமிர போகின்றார்களாம்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

நான் சிறுவனாக இருந்த போது எனக்கு கணச்சூடு இருக்கிறது என்பதால் எமது வீட்டு தென்னையில் இறக்கப்படும் கள்ளில் எனது தகப்பனார் எனக்கு தருவது வழமை. ஆனால் நான் எனது மூத்த மகளை திருமணம் செய்து வைக்கும் வரை எந்த மதுவையும் தொட்டதில்லை. இத்தனைக்கும் மதுபானம் விற்கும் இடத்தில் தான் வேலையே.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் சட்டபூர்வமான மது விற்பனையிலும் மக்கள் அதிகமாக உயிரிழக்கின்றார்கள். அதனால் அரசு சம்பந்தப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு மானியம் என வழங்குகின்றது. எனவே அதுவும் ஒருவகை ஊக்கிவிப்பு.😎

கள்ளசாராய மதுவால் வரும் உயிரிழப்புகளுக்குத்தான் இழப்பீடு கொடுப்பார்கள். அதுவும் ஒரே நாளில் நஞ்சாகி பலர் இறக்கும் போது மட்டுமே.

சட்டபூர்வ மது குடித்து இறப்போருக்கு அல்ல.

10 hours ago, குமாரசாமி said:

நடக்கிற விசயத்த கதையுங்கோ.

அமெரிக்க உணவு முறைகளை இந்த உலகமே ஏற்கவில்லை என்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கின்றேன்.

ஆனால் அமெரிக்கா இல்லாமல் இந்த உலகமே இல்லை என்ற நிலையும் இருக்கின்றது.

கூட்டி கழித்து பாருங்கள்.

கருத்துக்கு பதில் எழுதலாம்.

புலம்பலுக்கு🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.