Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது

kugenJuly 4, 2025

IMG_2619.jpeg

வனவிலங்குகளை நாட்டிலிருந்து வெளியே கடத்த முயன்றதற்காக இலங்கையர் ஒருவர், சுவர்ணபூமி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார், அவரது உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
இலங்கை சந்தேக நபர் ஒருவர் தாய் ஏர்வேஸ் விமானத்தில் நள்ளிரவு 12.06 மணிக்கு பாங்காக்கிற்கு வந்ததாக செவ்வாய்க்கிழமை (01) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக வனவிலங்கு குற்றப் புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஷீஹான் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட மேற்படி சந்தேகநபர், பல்வேறு வனவிலங்கு இனங்களை கடத்தியதாக பதிவு இருப்பது முன்னர் நடத்தப்பட்ட சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

வனவிலங்குகளை கடத்திய குற்றச்சாட்டில் அவர் கொழும்பில் வைத்து 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷீஹான் மாலை இரவு 7 மணியளவில் சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு வந்தார். அவர் சோதனை செய்த பிறகு, அதிகாரிகள் அவரை எக்ஸ்ரே கருவிகளைப் பயன்படுத்தி மேலும் சோதனைக்கு உட்படுத்தினர். அவரிடமிருந்து சட்டவிரோத பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பின்னர் அதிகாரிகள் அவரது உள்ளாடையில் மூன்று மலைப்பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர். சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டார். அதிகாரிகள் விசாரணையை விரிவுபடுத்தினர்.

https://www.battinews.com/2025/07/blog-post_15.html

  • கருத்துக்கள உறவுகள்

சைவ பாம்பாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் உள்ளாடைக்குள் இருந்தது...

உண்மையான பாம்பு தானா என்று வடிவாக பாருங்க ஆபீசர்.

வேறு எதுவாகாகவும் இருந்திடப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாம்பாக இருக்குமோ? அசையாமல் இருந்திருக்குது. எப்படி இந்த மலைப்பாம்புகளை உள்ளாடைக்குள் வைத்துக்கொண்டு இயல்பாக நடந்திருக்க முடியும்? ஒருவேளை பயணப்பெட்டியில் உள்ளாடைக்குள் சுற்றி மறைத்து வைத்திருந்திருந்திருப்பாரோ? வாசகர்களை குழப்பியடிக்கிற மாதிரியான செய்திகள்!

நீங்கள் ஒன்றையும் மறைத்து கொண்டுவரவில்லைத்த்தானே சிறியர்? எனக்குத்தெரியும் நீங்கள் அப்படியெல்லாம் செய்யக்கூடியவரல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

நீங்கள் ஒன்றையும் மறைத்து கொண்டுவரவில்லைத்த்தானே சிறியர்? எனக்குத்தெரியும் நீங்கள் அப்படியெல்லாம் செய்யக்கூடியவரல்ல.

சாத்தான்... நான் கொண்டு வந்த பொருட்கள்....

மிளகாய்த்தூள், அரிசி மா, ஓடியல்மா, புழுக்கொடியல், பினாட்டு, வடகம், மோர்மிளகாய், மாசிக் கருவாடு, பாரைக் கருவாடு, இறால் கருவாடு, கட்டா சம்பல், இறால் சம்பல், பயத்தம் பணியாரம், பருத்துறை வடை, மிக்சர், காராசேவ், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், பொரித்த கடலை, மில்க் ரொபி, கோகனட் ரொபி, கல்பணிஸ், எள்ளுருண்டை, பொரித்த கடலை, தொதல், மஸ்கற், குளுக்கோரச, தோடம்பழ இனிப்பு, பல்லி முட்டை இனிப்பு, இராசவள்ளிக் கிழங்கு, கரணை கிழங்கு, முருங்கக் காய், தாமரை கிழங்கு, கோகிலா தண்டு, லாவுளு பழம், ரம்புட்டான், மங்குஸ்தான், கருவேப்பிலை, திருநெல்வேலி சந்தையில் வாங்கிய சின்ன வெங்காயம் போன்றவையுடன் சில பருத்தி உடைகள் மட்டுமே. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

இதென்ன கடை போட வாங்கிக்கொண்டு வந்தது போல கிடக்கு... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பாரைக் கருவாடு "வாசம்" வீசாதா? முழு சாப் பாட்டுச் சாமான்களையும் கட்டிக் கொண்டு வந்து விட் டீர்கள்.( எக்ஸ்ட்ரா லக்கேஜை )😃

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சாத்தான்... நான் கொண்டு வந்த பொருட்கள்....

மிளகாய்த்தூள், அரிசி மா, ஓடியல்மா, புழுக்கொடியல், பினாட்டு, வடகம், மோர்மிளகாய், மாசிக் கருவாடு, பாரைக் கருவாடு, இறால் கருவாடு, கட்டா சம்பல், இறால் சம்பல், பயத்தம் பணியாரம், பருத்துறை வடை, மிக்சர், காராசேவ், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், பொரித்த கடலை, மில்க் ரொபி, கோகனட் ரொபி, கல்பணிஸ், எள்ளுருண்டை, பொரித்த கடலை, தொதல், மஸ்கற், குளுக்கோரச, தோடம்பழ இனிப்பு, பல்லி முட்டை இனிப்பு, இராசவள்ளிக் கிழங்கு, கரணை கிழங்கு, முருங்கக் காய், தாமரை கிழங்கு, கோகிலா தண்டு, லாவுளு பழம், ரம்புட்டான், மங்குஸ்தான், கருவேப்பிலை, திருநெல்வேலி சந்தையில் வாங்கிய சின்ன வெங்காயம் போன்றவையுடன் சில பருத்தி உடைகள் மட்டுமே. 😂

இவ்வளவு பொருட்களும் இங்க இப்ப தட்டுப்பாடு அண்ணோய்!!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள் சொல்லாமலே எனக்குத்தெரியும் சிறியர், நீங்கள் ஒரு வெள்ளைபேப்பர். கஸ்ரம்சிலை உங்களை சோதிக்க வேண்டிய தேவை வைக்க மாட்டீர்களென்பது. அதிருக்க; பக்கத்து வீட்டுக்காரிக்கு பிடித்தமானது எதையாவது வீடுக்குத்தெரியாமல் எடுத்து வரவில்லையே? அங்கு பிடிபடாமல் முக்கியமான சோதனைச்சாவடியில் சிக்கி முழிக்கப்போகிறீர்களோ என்கிற பயத்தால் கேட்டேன்! பயணக்களையில் மறந்து கோட்டை விட்டிட்டு மாட்டுப்படாதீர்கள். உங்கள்மேலுள்ள அக்கறையினால் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

சாத்தான்... நான் கொண்டு வந்த பொருட்கள்....

மிளகாய்த்தூள், அரிசி மா, ஓடியல்மா, புழுக்கொடியல், பினாட்டு, வடகம், மோர்மிளகாய், மாசிக் கருவாடு, பாரைக் கருவாடு, இறால் கருவாடு, கட்டா சம்பல், இறால் சம்பல், பயத்தம் பணியாரம், பருத்துறை வடை, மிக்சர், காராசேவ், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், பொரித்த கடலை, மில்க் ரொபி, கோகனட் ரொபி, கல்பணிஸ், எள்ளுருண்டை, பொரித்த கடலை, தொதல், மஸ்கற், குளுக்கோரச, தோடம்பழ இனிப்பு, பல்லி முட்டை இனிப்பு, இராசவள்ளிக் கிழங்கு, கரணை கிழங்கு, முருங்கக் காய், தாமரை கிழங்கு, கோகிலா தண்டு, லாவுளு பழம், ரம்புட்டான், மங்குஸ்தான், கருவேப்பிலை, திருநெல்வேலி சந்தையில் வாங்கிய சின்ன வெங்காயம் போன்றவையுடன் சில பருத்தி உடைகள் மட்டுமே. 😂

கண்ணுரறு படுத்தக் கூடாது..லக்கேஜ் நிரம்பத் தான் கொண்டு வந்திருக்கிறீர்கள் சிறியண்ண..🤭

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் தனக்கு மட்டுமா கொண்டுவந்தவர்? பக்கத்துவீட்டுக்கார(ரி)ர், நண்பர்கள் இப்படி ஏகப்பட்ட கூட்டம் ஐயாவைசுற்றி போகப்போகிறாரென கேள்விப்பட்டதுமே. எத்தனைபேர் பட்டியல் கொடுத்திருப்பார்கள்? எத்தனைபேரை இரகசியமாக மனதுக்குள் நினைத்து வாங்கியிருப்பார். அவர் கொடுத்து வைத்தவர், வயிறு எரியுது எனக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, satan said:

சிறித்தம்பியருக்கு நான் பலகாரம் கட்டிக் குடுத்த நன்றிக்கடன் இப்பவும் இருக்குமெண்டு நினைக்கிறன்.....😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிறித்தம்பியருக்கு நான் பலகாரம் கட்டிக் குடுத்த நன்றிக்கடன் இப்பவும் இருக்குமெண்டு நினைக்கிறன்.....😎

நாங்களும் மறக்கவில்லை அண்ணை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஏராளன் said:

நாங்களும் மறக்கவில்லை அண்ணை!

அதொண்டுமில்லை தம்பி ....கட்டாப்பாரை கருவாடு எண்டால் எனக்கு விருப்பம். அதுதான் ஒரு பாசல் வருமெண்டு வழிமேல் விழி வைச்சு பாத்துக்கொண்டிருக்கிறன் 😁

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2025 at 12:12, தமிழ் சிறி said:

சாத்தான்... நான் கொண்டு வந்த பொருட்கள்....

மிளகாய்த்தூள், அரிசி மா, ஓடியல்மா, புழுக்கொடியல், பினாட்டு, வடகம், மோர்மிளகாய், மாசிக் கருவாடு, பாரைக் கருவாடு, இறால் கருவாடு, கட்டா சம்பல், இறால் சம்பல், பயத்தம் பணியாரம், பருத்துறை வடை, மிக்சர், காராசேவ், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், பொரித்த கடலை, மில்க் ரொபி, கோகனட் ரொபி, கல்பணிஸ், எள்ளுருண்டை, பொரித்த கடலை, தொதல், மஸ்கற், குளுக்கோரச, தோடம்பழ இனிப்பு, பல்லி முட்டை இனிப்பு, இராசவள்ளிக் கிழங்கு, கரணை கிழங்கு, முருங்கக் காய், தாமரை கிழங்கு, கோகிலா தண்டு, லாவுளு பழம், ரம்புட்டான், மங்குஸ்தான், கருவேப்பிலை, திருநெல்வேலி சந்தையில் வாங்கிய சின்ன வெங்காயம் போன்றவையுடன் சில பருத்தி உடைகள் மட்டுமே. 😂

ஆனால் நீங்கள் உள்ளாடைக்குள் கொண்டு போனதை கொண்டு வந்தீர்கள் தானே? அவர் தன்னுடையதை சாம்பியனாக நிரூபிக்க மூவரை இறக்கி விட்டது குற்றமல்லவே...😛

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2025 at 00:04, குமாரசாமி said:

அதொண்டுமில்லை தம்பி ....கட்டாப்பாரை கருவாடு எண்டால் எனக்கு விருப்பம். அதுதான் ஒரு பாசல் வருமெண்டு வழிமேல் விழி வைச்சு பாத்துக்கொண்டிருக்கிறன் 😁

அவர் கொண்டுவந்த பார்சல்கள் பிரித்து பங்கிடுவதில் மும்முரமாக இருக்கிறார், கண்டிப்பாக உங்களுக்குரிய பார்சலோடு அழைப்பு வரும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.