Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

f47b690e8aad4574602c21fc8749757cf9ce5476

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !

அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.

அவர், ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

இதேவேளை வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது ட்ரம்பிற்கு ஒரு நியமனக் கடிதத்தையும் பெஞ்சமின் நெதன்யாகு வழங்கினார்.

‘நோபல் பரிசுக் குழுவிற்கு தான் அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன் எனவும் அமைதிப் பரிசுக்கு உங்களை பரிந்துரைப்பது மிகவும் தகுதியானது எனவும் கூறி அந்த கடிதத்தை அவரிடம் வழங்கியுள்ளார்.

https://athavannews.com/2025/1438413

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !

விருப்பமில்லாத வரவுசெலவு திட்டம் நிறைவேறியது போல

நோபல் பரிசும் விருப்பமில்லா விட்டாலும் கொடுக்க வேண்டி வரலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

விருப்பமில்லாத வரவுசெலவு திட்டம் நிறைவேறியது போல

நோபல் பரிசும் விருப்பமில்லா விட்டாலும் கொடுக்க வேண்டி வரலாம்.

எல்லாப் பக்கம் இருந்தும்… ஒரே நச்சரிப்பு வரும் போது, நோபல் பரிசு ட்ரம்புக்கு கிடைக்கும் போல்தான் இருக்கு. போதாக் குறைக்கு… ட்ரம்பும், தனக்கு நோபல் பரிசு வேண்டும் என்று வாய் விட்டு கேட்ட பிறகு… நோபல் பரிசு கமிட்டிக்கு வேறை வழி இல்லை என நினைக்கின்றேன். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, தமிழ் சிறி said:

எல்லாப் பக்கம் இருந்தும்… ஒரே நச்சரிப்பு வரும் போது, நோபல் பரிசு ட்ரம்புக்கு கிடைக்கும் போல்தான் இருக்கு. போதாக் குறைக்கு… ட்ரம்பும், தனக்கு நோபல் பரிசு வேண்டும் என்று வாய் விட்டு கேட்ட பிறகு… நோபல் பரிசு கமிட்டிக்கு வேறை வழி இல்லை என நினைக்கின்றேன். 😂

கட்டாயம் குடுப்பினம். குடிக்காட்டில் அடுத்த மூண்டு வருசத்துக்கு நோபல் பரிசு கமிட்டி காலம் தள்ளேலாது 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

கட்டாயம் குடுப்பினம். குடிக்காட்டில் அடுத்த மூண்டு வருசத்துக்கு நோபல் பரிசு கமிட்டி காலம் தள்ளேலாது 😁

சண்டித்தனம் பண்ணி….. சமாதானத்துக்கான நோபல் பரிசு எடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா வந்து நிற்குது. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பணமும் பதவியும் பத்தும் செய்யும் பாதாளம் வரையும் பாயும் . ........ ! 😁

  • கருத்துக்கள உறவுகள்

ஓபாமாவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் டிரம்ப் ஐயாவுக்கு ஏன் கொடுக்கமுடியாது? ஓபாமா சமாதானத்திற்காக எதனை சாதித்தார்? இப்போது அவரது துணைவியாரே அவரை வறுத்து எடுக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சண்டித்தனம் பண்ணி….. சமாதானத்துக்கான நோபல் பரிசு எடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா வந்து நிற்குது. 😂 🤣

நம்ம சும்மர் மாதிரி என்கிறியள்...🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

நம்ம சும்மர் மாதிரி என்கிறியள்...🤣

ஆமா... ஆமா... அமெரிக்க சுமந்திரன்தான் ட்றம்பு. 😂

சுத்துமாத்திலை...இரண்டும் ஒன்றை ஒன்று வெண்டதுகள். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

518296870_1154719326693038_5082342418100

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நியாயம் said:

ஓபாமாவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் டிரம்ப் ஐயாவுக்கு ஏன் கொடுக்கமுடியாது? ஓபாமா சமாதானத்திற்காக எதனை சாதித்தார்? இப்போது அவரது துணைவியாரே அவரை வறுத்து எடுக்கின்றார்.

டிரம்பிற்கு ஆதரவாக இப்பவும் சிலபேர் இருக்கிறதைப்பார்த்தால் கவலைநாக உள்ளது

Edited by ragaa

ஏனைய ட்ரம்ப் பக்தர்கள் போல சோசியல் மீடியா துணுக்குகளில் இருந்து தான் நீங்கள் செய்திகள் அறிந்து கொள்கிறீர்கள் போல!

கீழே கார்டியன் இதழில் மிஷேல் ஒபாமா சொன்னதன் முழுவடிவம் இருக்கிறது. மணவாழ்க்கை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று புரிகிறதா என்று பாருங்கள்.

https://www.theguardian.com/us-news/2022/dec/29/michelle-obama-couldnt-stand-husband-barack-10-years

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2025 at 07:51, ragaa said:

டிரம்பிற்கு ஆதரவாக இப்பவும் சிலபேர் இருக்கிறதைப்பார்த்தால் கவலைநாக உள்ளது

இடதுசாரிகளின் பித்தலாட்டமும், சுரண்டல்களும் வலதுசாரிகள் மீதான ஈர்ப்புக்கு வழி வகுத்துவிட்டது.

On 9/7/2025 at 08:14, Justin said:

ஏனைய ட்ரம்ப் பக்தர்கள் போல சோசியல் மீடியா துணுக்குகளில் இருந்து தான் நீங்கள் செய்திகள் அறிந்து கொள்கிறீர்கள் போல!

கீழே கார்டியன் இதழில் மிஷேல் ஒபாமா சொன்னதன் முழுவடிவம் இருக்கிறது. மணவாழ்க்கை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று புரிகிறதா என்று பாருங்கள்.

https://www.theguardian.com/us-news/2022/dec/29/michelle-obama-couldnt-stand-husband-barack-10-years

உங்கள் அளவிற்கு எனக்கு புரியப்போவது இல்லை. கார்டியன் எப்படி உருட்டுகின்றது என்பதை அறிய ஆர்வம் இல்லை.

உங்களுக்கு கிளுகிளுப்பு ஏற்படுத்தக்கூடிய நியூ யோர்க் டைம்ஸ் பத்திகள் வாசிப்பது உண்டு.

ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரமும் பலமும் தவறானவர்களின் கைகளுக்கு வந்தால்.....?

  • கருத்துக்கள உறவுகள்

மனைவிமார்கள் சொல்லும் குற்றம் குறைகளை வைத்தும் ஒருவர் மதிப்பிடப்படலாம் என்றால், ஆபிரகாம் லிங்கன் கூட ஒன்றும் இல்லை என்று ஆகிவிடுவார். அல்பேர்ட் ஐன்ஸ்டைன் கூட அவருடைய நோபல் பரிசைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.

ஓபாமாவிற்கு கொடுத்த நோபல் பரிசு விவாதத்திற்கு உட்பட்டதே. ஆனால் அவருக்கு அந்தப் பரிசை முன்மொழியவும், அதைக் கொடுக்கவும் தேவையான சரியான உறுதியான நடவடிக்கைகளை ஓபாமா அவரது பதவியின் முதல் வருடத்திலேயே எடுத்திருந்தார். ஓபாமாவை எந்த தனிநபர்களும் அரசியல் சார்பாகவோ அல்லது நலம் கருதியோ முன்மொழியவில்லை. மாறாக, நோபல் பரிசுக் குழுவே அவரை தெரிந்தெடுத்தது.

ஒபாமாவை தெரிந்தெடுத்தற்கான காரணங்களாக நோபல் குழுமம் பின்வருபனவற்றை சொல்லியிருந்தார்கள்:

  1. இஸ்லாமிய நாடுகளுடன் இணக்கத்தை உண்டாக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்காவில் இன்றும் கூட ஓபாமா மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு அவர் இஸ்லாமிய நாடுகளுக்கு பெருமளவில் விட்டுக் கொடுத்தார் என்பதே.

  2. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை புதுப்பித்தது அல்லது உண்டாக்கியது.

  3. யுத்தங்கள் அற்ற ஒரு சமாதான உலகை நோக்கிய நடவடிக்கைகளை அவர் முயற்சித்தார்.

ட்ரம்பின் சமாதான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றன. ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தங்களை கூட தவிர்த்துவிட்டு, புதிய ஒப்பந்தங்களை பயமுறுத்தலின் ஊடாகவே அவர் செய்ய முனைகின்றார். அவைகளும் கூட மிகவும் ஒரு பக்கச் சார்பாக, அமெரிக்காவின் நலன்களை மட்டுமே முன்னிறுத்துகின்றன. இவர் உலகின் மீது தொடுத்திருக்கும் வர்த்தகப் போர்கள் கூட உலகின் ஸ்திரத்தன்மையை குலைத்துக் கொண்டிருக்கின்றன. இன்று என்ன, நாளை என்ன என்று எதுவும் தெரியாத நிலையிலேயே அமெரிக்கர்களும், உலகமும் இவரின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் கொடுமை உலகம் கண்ட மிகக்கொடிய சில கொடுமைகளில் ஒன்று. 'ஒரு பை அரிசிக்காக பலஸ்தீனியர்கள் அவர்களின் உயிர்களைக் கூட விட தயாராக இருக்கின்றார்கள்...................' என்ற வசனம் எந்த மனிதனையும் அழவைக்கும். அமெரிக்காவும், ட்ரம்பும் நினைத்தால் இந்தக் கொடுமையை இன்றே நிற்பாட்டமுடியும். ஆனால் காசாவில் உல்லாச விடுதிகளைக் கட்டுவதைப் பற்றியே ட்ரம்பும், அவரது குடும்பமும் அக்கறையாக உள்ளது. ஈரானுடனான முரண்பாட்டில் கூட ட்ரம்ப் சமாதானத்தை தேடவில்லை. இன்னும் பல இப்படியே போய்க் கொண்டிருக்கின்றன.

நான் மேலே குறிப்பிட்டவற்றை விட, இன்றைய திகதியில் உலகில் மிகப்பெரும் அட்டூழியங்கள் செய்யும் இஸ்ரேலின் தலைவரே ட்ரம்பை முன்மொழிந்திருக்கின்றார் என்ற ஒரு தகவலே ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கக் கூடாது என்பதற்கான பிரதான காரணம்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

இடதுசாரிகளின் பித்தலாட்டமும், சுரண்டல்களும் வலதுசாரிகள் மீதான ஈர்ப்புக்கு வழி வகுத்துவிட்டது.

இடது சாரிகளை விட வலதுசாரிகள் உங்களை சுரண்டாமல், சொகுசாக நடத்துகிறார்கள் என்கிறீர்களா? மண்ணிறத்தோலோடு உங்கள் போன்றோர் வலதுசாரிகளிடம் கூழைக் கும்பிடு போட்டால் கூட உங்களை ஒரு தூரத்தில் தான் வைத்திருப்பர். ஏனெனில் வலது சாரி வாத்தின் உள்ளீடே xenophobia தான். இது புரியாமல் "இறைச்சிக் கடைக்காரனுக்கு வாக்குப் போட்ட கோழிகள்" போன்ற அமெரிக்க பலஸ்தீனர்கள் போல பலர் இருக்கிறீர்கள்😎.

2 hours ago, நியாயம் said:

இடதுசாரிகளின் பித்தலாட்டமும், சுரண்டல்களும் வலதுசாரிகள் மீதான ஈர்ப்புக்கு வழி வகுத்துவிட்டது.

உங்கள் அளவிற்கு எனக்கு புரியப்போவது இல்லை. கார்டியன் எப்படி உருட்டுகின்றது என்பதை அறிய ஆர்வம் இல்லை.

மிஷேல் ஒபாமா என்ன சொன்னார் என்பது விளங்காமல் தான் "அவர் ஒபாமாவை வறுக்கிறார்" என்றிருக்கிறீர்கள் என்பது புரிந்ததால், அவர் சொன்னதை அப்படியே பிரசுரித்த கார்டியனை செய்தியை இணைத்தேன். "வாசிப்பு, தேடல், விளங்கிக் கொள்ளல்" என்பன ட்ரம்ப் பக்தர்களின் strong suit அல்ல! 😂 என்பதை அறிந்ததால் நீங்கள் கடந்து போவீர்கள் என்றும் அறிந்திருக்கிறேன்.

2 hours ago, நியாயம் said:

ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகின்றதா?

ஒபாமா ஜனாதிபதியாக வர முதலே உலகின்/அமெரிக்க சமூகத்தின் தீவிரவாதப் போக்குகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒருவர் , ஐரோப்பிய நாடுகளில் இருந்த முற்போக்கு சக்திகளுக்குக் கூட அதனால் நன்மைகள் விளைந்தன. இதற்காகத் தான் கொடுத்தார்கள்.இதைப் பற்றியும் வாசிக்காதீர்கள்😎! சோசியல் மீடியாவில் தலையைக் கொடுத்து விட்டு சும்மா அலட்டிக் கொண்டிருங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரசோதரன் said:

யுத்தங்கள் அற்ற ஒரு சமாதான உலகை நோக்கிய நடவடிக்கைகளை அவர் முயற்சித்தார்.

முயற்சிகளுக்கும் நோபல் பரிசு உண்டா? 😧

ஒபாமா காலத்தில் நடந்த அரபு வசந்தம் தான் இன்றைய ஐரோப்பிய நாடுகளின் சீர்குலைவுக்கு காரணம். அரபு எனும் குளவிக்கூட்டை கலைத்து சிதறிடித்த புண்ணியவான் ஒபாமா.

நிற்க...

யுத்த நிறுத்த முயற்சிகளினால் பலன் இல்லை என்பதை கடந்த பதினைந்து வருடங்களாக இந்த உலகம் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றது.

முள்ளிவாய்கால் அழிவு போல் ஒரு நிரந்தர அழிவு வந்தால் மட்டுமே யுத்த நிறுத்தம் வரும் போல் உள்ளது. இதைத்தான் இரண்டாம் உலகப்போர் முடிவும் அறுவுறுத்தி நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் அழிவு, காசா அழிவுகளை பார்த்துக்கொண்டு அந்த நேரங்களில் அதிகாரத்தை அனுபவித்த ஓபாமாவும், பைடனும் குத்துக்கல்லாக கிடந்தார்கள். இடதுசாரிகளுக்கு "அனுபவிப்பதற்கு" அதிகாரம் தேவைப்படுகின்றது.

நோபல் பரிசை பெற்ற ஓபாமா இலங்கையில் நடைபெற்ற பெரு அவலத்தை நிறுத்த என்ன செய்தார் என அறிய ஆவல்.

பைடன் ஐயா இரண்டாம் தரம் பதவிக்கு வரும்போது நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யலாம் என இஸ்ரேல் எண்ணியது. சிங்கம் வென்றுவிட்டது.

இடதுசாரிகளின் புண்ணியவதி கிளாரி அம்மா முள்ளிவாய்க்கால், காசா அவலங்களின்போது எப்படி பம்முகின்றார் என்பதை கார்டியன் எழுதினால் வாசித்து பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிள்ளையானுடன் இணைந்து, பலநூற்றுக்கணக்கான தமிழர்களைக் கடத்திச் சென்று, படுகொலை செய்த இனியபாரதி எனும் நபருக்கு மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் சாதாரணக் குடிமகன் ஒருவருக்கு வழங்கப்படக் கூடிய அதிகூடிய கெளரவங்களான தேசமான்ய, தேசாபிமான என்கிற விருதுகளைக் கொடுத்து மகிழ்ந்தபோது, உலகில் நடக்கும் போர்களை 24 மணிநேரத்திற்குள் நிறுத்துவேன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்து, ரஸ்ஸிய உக்ரேன் போரில் உக்ரேனியர்களைப் பலவீனப்படுத்தி, ரஸ்ஸியாவின் சர்வாதிகாரிக்குக் கொம்பு சீவி, பலஸ்த்தீனத்தில் இனக்கொலையில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலினை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இனக்கொலையினை நடத்தும் நெத்தன்யாகுவே நோபல் பரிசை சிபாரிசு செய்வதொன்றும் புதினமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலத்தில் அமெரிக்காவை ஆண்ட ஜனாதிபதிகளில் கிளின்ரனும் ஒபாமாவும் குறிப்பிடத் தக்கவர்கள்.

பொஸ்னியர்கள் மீதான சேர்பியர்களின் இனவழிப்பை முடிவிற்குக் கொண்டுவந்ததில் கிளின்ரனின் பங்கு குறிப்பிடத் தக்கது.

அவ்வாறே ஈராக்கிலும், அப்கானிஸ்த்தானிலும் நடந்துவந்த போர்களை நிறுத்தவேண்டும் என்று நடவடிக்கைகளில் இறங்கியதுடன், 2001 இல் இரட்டைக் கோபுரத் தாக்குதலினை நடத்தி, மூவாயிரம் அமெரிக்கர்களைப் பலியெடுத்த சர்வதேச இஸ்லாமிய அடிப்படைவாதியான பின்லாடனைத் தேடி, வேட்டையாடி, கொல்லப்பட்டவர்களுக்கான நீதியினை ஒபாமா பெற்றுக்கொடுத்திருந்தார். அத்துடன் ஈரானின் முல்லாக்களுடன் அணுவாயுத உற்பத்தியைக் கைவிட்டு, பொருளாதாரத்தினை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்திருந்தார்.

ஈழத்தமிழர் படுகொலையில் ஒபாமாவோ அல்லது ஹிலரியோ எதனையும் செய்யவில்லை என்பது உண்மையே.

இறுதிநேரத்தில் அமெரிக்கர்கள் செய்யமுயன்றதாகக் கூறப்படும் சில நடவடிக்கைகளை இந்தியா முன்னின்று தடுத்துவிட்டதென்பதை அன்றிருந்த இந்திய பாதுகாப்புச் செயலாளர் சிவ் சங்கர மேனன் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

முயற்சிகளுக்கும் நோபல் பரிசு உண்டா? 😧

ஒபாமா காலத்தில் நடந்த அரபு வசந்தம் தான் இன்றைய ஐரோப்பிய நாடுகளின் சீர்குலைவுக்கு காரணம். அரபு எனும் குளவிக்கூட்டை கலைத்து சிதறிடித்த புண்ணியவான் ஒபாமா.

நிற்க...

யுத்த நிறுத்த முயற்சிகளினால் பலன் இல்லை என்பதை கடந்த பதினைந்து வருடங்களாக இந்த உலகம் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றது.

முள்ளிவாய்கால் அழிவு போல் ஒரு நிரந்தர அழிவு வந்தால் மட்டுமே யுத்த நிறுத்தம் வரும் போல் உள்ளது. இதைத்தான் இரண்டாம் உலகப்போர் முடிவும் அறுவுறுத்தி நிற்கின்றது.

அரசியல் தலைமைகளுக்கு வழங்கப்படும் சமாதான பரிசுகளுக்கு அந்த அரசியல் தலைமைகளின் முயற்சிகளே பெரும்பாலும் காரணமாக அமைகின்றது, அண்ணா. அந்த முயற்சிகளின் இறுதி முடிவுகள், நீங்கள் குறிப்பிட்டிருப்பது போலவே, எதிர்பார்த்த பலன்களை எப்போதும் கொடுப்பதும் இல்லை.

பர்மாவில் அப்போது ஆட்சியில் இருந்த இராணுவ ஆட்சியை எதிர்த்த Aung San Suu Kyi க்கு 1991ம் ஆண்டு இந்தப் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் பர்மாவில் ரோகிங்கியா மக்களுக்கு எதிராக இவரது ஆட்சிக் காலத்திலேயே கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. ஆங் சூ இக் கொடுமைகளை எதிர்க்காதது மட்டும் இல்லாமல், ரோகிங்கியா மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஆதரவாகவும் நடந்துகொண்டார். கொடுக்கப்பட்ட சமாதானப்பரிசை திரும்பப் பெறவேண்டும் என்ற குரல்கள் உலகெங்கும் ஒலித்தன.

ஆனால் செஞ்சிலுவைச் சங்கங்கள் போன்ற நிறுவனங்களுக்கும், அரசியல்/நிர்வாகம் சாராத தனிநபர்களுக்கும் அவர்கள் காத்திரமாக செய்த செயல்களுக்காகவே இந்தப் பரிசு வழங்கப்படுகின்றது.

ஜிம்மி கார்ட்டரோ அல்லது ஓபாமாவோ அல்லது வேறு எந்த உலக அரசியல் தலைவர்களின் மொத்த நடவடிக்கைகளுமே விமர்சனத்துக்கு உட்பட்டதே. அவர்கள் பெறும் விருதுகளுக்கும், பாராட்டுகளுக்கும் அவர்கள் தகுதியுடையவர்களா என்பது பல முனைகள் கொண்ட விவாதமே.

இன்றுடன் இஸ்ரேலின் காசா மீதான தாக்குதல் 643 நாட்களாகத் தொடர்கின்றது. உலகில் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் தவிர்த்து வேறு எந்த நாடும் இதை ஆதரிக்கவில்லை. அமெரிக்கா நினைத்தால் இதை இன்றே தடுக்கமுடியும். ஆனால் அமெரிக்காவோ எதிர்த்திசையிலேயே பயணிக்கின்றது.

எம் மக்கள் மீதான முள்ளிவாய்க்கால் தாக்குதல் உலகின் பல நாடுகளால் மௌனமாக ஆதரிக்கப்பட்ட ஒரு நிகழ்வு. இந்தியாவின் பிரதான ஆதரவுடன் இலங்கை அரசு வேறு பல நாடுகளின், அமெரிக்கா உட்பட, இராணுவ மற்றும் வேறு பல உதவிகளுடன் இதை நிகழ்த்தியது. இதை தடுக்கும் கடப்பாடு இந்தியாவிடமே இருந்தது. காசா போன்று நீண்டு தொடரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே முள்ளிவாய்க்காலில் அமெரிக்கா என்ன செய்தது என்ற கேள்வியும், காசாவில் அமெரிக்கா என்ன செய்கின்றது என்ற கேள்வியும் தொடர்புபட்டவை அல்ல.

இவை யாவும் மனிதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற சட்டகத்திலேயே பார்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். ஒரு தலைவருக்கு ஆதரவாகவும், இன்னொரு தலைவருக்கு எதிராகவும் பார்க்கப்பட வேண்டிய விடயங்கள் அல்ல.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நியாயம் said:

முள்ளிவாய்க்கால் அழிவு, காசா அழிவுகளை பார்த்துக்கொண்டு அந்த நேரங்களில் அதிகாரத்தை அனுபவித்த ஓபாமாவும், பைடனும் குத்துக்கல்லாக கிடந்தார்கள். இடதுசாரிகளுக்கு "அனுபவிப்பதற்கு" அதிகாரம் தேவைப்படுகின்றது.

நோபல் பரிசை பெற்ற ஓபாமா இலங்கையில் நடைபெற்ற பெரு அவலத்தை நிறுத்த என்ன செய்தார் என அறிய ஆவல்.

பைடன் ஐயா இரண்டாம் தரம் பதவிக்கு வரும்போது நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யலாம் என இஸ்ரேல் எண்ணியது. சிங்கம் வென்றுவிட்டது.

இடதுசாரிகளின் புண்ணியவதி கிளாரி அம்மா முள்ளிவாய்க்கால், காசா அவலங்களின்போது எப்படி பம்முகின்றார் என்பதை கார்டியன் எழுதினால் வாசித்து பார்க்கலாம்.

அமெரிக்காவில் அதிகாரத்தில் இருந்த பைடனும், ஹிலாரியும், ஜோன் கெரியும் "இடதுசாரிகள்" என்று நம்பும் அளவுக்கு உங்கள் அறிவு இருக்கிறது 😂- ஆனால் உங்கள் வாசிப்பு பற்றி நீங்களே இங்கே அறிக்கையிட்டிருப்பதால் இதில் அதிசயமில்லை!

ஒபாமா, ஹிலாரி, பைடன், கெரி: இவர்கள் இருந்த காலத்தில் தான் ஐ.நா மனித உரிமைகள் சபையில் ஈழத்தமிழர் மீதான குற்றங்கள் பற்றிய தீர்மானங்கள் வந்தன (அந்த வேளையில் எதிர்த்து வாக்களித்த புரினின் ரஷ்யவைத் தான் இங்கே தமிழ் தேசியப் போர்வை போர்த்தியபடி உலாவரும் சில "யாழ் கள நடிகர்கள்" 😎விருப்பம் என்று எழுதியிருக்கிறார்கள்).

ட்ரம்ப் நிர்வாகத்தில் இந்த மனித உரிமைகள் எல்லாம் பின் தள்ளப் பட்டு விட்டன. ட்ரம்புக்கும் ருபியோவுக்கும் சிறிலங்கா எங்கே இருக்கிறது என்பதே தெரியுமோ என்பது சந்தேகம்.

இனியென்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் புரிதலில் "இடது சாரிகளான" ரஷ்யாவிடமும், சீனாவிடமும் நீதி கேட்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இடது சாரிகளான" ரஷ்யாவிடமும், சீனாவிடமும் நீதி

வட கொரிய தொழிலாளர் கட்சியின் பொது செயலாளர் பெரும் மதிப்பிற்குரிய தோழர் கிம் ஜொங் உன்னை இடது சாரிகள் பட்டியலில் குறிப்பிட மறந்து விட்டீர்களே அண்ணா 😭

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Trump-Nobel-Peace-prize-4.webp?resize=75

அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் பரிசு வழங்க மேலும் சில நாடுகள் பரிந்துரை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என மேலும் சில உலக நாடுகள் பரிந்துரை செய்து வருகின்றன.

அதன்படி, புதிதாக, அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் நோபல் பரிசுக்காக ட்ரம்பை பரிந்துரைத்துள்ளன.

முன்பதாக, பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா ஆகிய நாடுகள் அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பை பரிந்துரைத்த நிலையில் தற்போது புதிய சில நாடுகளும் பரிந்துரைத்துள்ளது.

எனினும், பல்வேறு நாடுகளுக்கு இடையே நடந்த போரை நிறுத்திய தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என ட்ரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1442401

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2025 at 07:45, நியாயம் said:

முள்ளிவாய்க்கால் அழிவு, காசா அழிவுகளை பார்த்துக்கொண்டு அந்த நேரங்களில் அதிகாரத்தை அனுபவித்த ஓபாமாவும், பைடனும் குத்துக்கல்லாக கிடந்தார்கள். இடதுசாரிகளுக்கு "அனுபவிப்பதற்கு" அதிகாரம் தேவைப்படுகின்றது.

நோபல் பரிசை பெற்ற ஓபாமா இலங்கையில் நடைபெற்ற பெரு அவலத்தை நிறுத்த என்ன செய்தார் என அறிய ஆவல்.

பைடன் ஐயா இரண்டாம் தரம் பதவிக்கு வரும்போது நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யலாம் என இஸ்ரேல் எண்ணியது. சிங்கம் வென்றுவிட்டது.

இடதுசாரிகளின் புண்ணியவதி கிளாரி அம்மா முள்ளிவாய்க்கால், காசா அவலங்களின்போது எப்படி பம்முகின்றார் என்பதை கார்டியன் எழுதினால் வாசித்து பார்க்கலாம்.

உங்களுடைய டிரம்ப் தமிழருக்கு என்ன நன்மை விளைவிப்பார் என்று வாய்பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள்? இவ்வளவு விரிவாக டிரம்பிற்கு வக்காளத்து வாங்கும் நீங்கள் அவரது தமிழர் சார்பான நடவடிக்ஐகளையும் விரிவாச்சொல்லுங்கோவன்😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.