Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

PM-Modi-in-Gujarat.webp?resize=750%2C375

இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி.

இந்திய இராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி அடுத்த மாதம் 21ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”  இந்த நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வெற்றி கொண்டாட்டம் போன்றது. இந்திய இராணுவத்தின் வலிமையை உலகம் பார்த்துள்ளது. ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய இராணுவம் நிர்ணயித்த இலக்குகள் 100 சதவீதம் வெற்றியடைந்துவிட்டன.

ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பயங்கரவாதிகளின் வீடுகள் 22 நிமிடத்தில் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்திய ராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்தன. உலக நாடுகளின் தலைவர்களை நான் சந்திக்கும்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ ஆயுதங்கள் தங்கள் ஈர்ப்பதாக கூறுகின்றனர். இந்தியாவில் ஆயுத உற்பத்தி அதிகரித்து வருகிறது.

இந்திய தேசியக்கொடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் பறக்கவிட்டப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை. அனைத்து எம்.பி.க்களும் நாட்டு மக்களும் ஒரே குரலில் இந்த சாதனையைப் போற்றுவார்கள். நமது எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு இது ஊக்கமாக இருக்கும்.

உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா விரைவில் எட்டும். நாட்டில் பண வீக்கம் குறைந்து வளர்ச்சி அதிகரித்துள்ளது ” இவ்வாறுஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1439939

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

இந்திய இராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆமா ஆமா உலகமே பின்பக்கத்தால் சிரித்ததைத் கண்டு நாமும் வியந்து போனோம்.

பிரான்ஸ் இன்னமும் அழுது கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகள்:

ஆமா…அப்படியே ஷாக் ஆயிட்டோம்…அவ்….

  • கருத்துக்கள உறவுகள்

5 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு விழுத்தியதா நம்ம தலை சொல்லியிருக்காபில!🤣

உலக நாடுகள் என மோடி குறிப்பிட்டவை, சோமாலியா, நைகர், எத்தியோப்பியா, மொசாம்பிக், புருண்டி, சியாரா லியோன் (சன்னி லியோன் அல்ல) மாலாவி போன்ற நாடுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

5 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு விழுத்தியதா நம்ம தலை சொல்லியிருக்காபில!🤣

நம்ம தல மேல ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்…

மோடி ஜிப்பாவ சந்தில வச்சி உருவ நம்ம தல போல யாரும் இல்லை🤣

தல போல வருமா🤣

1 hour ago, நிழலி said:

உலக நாடுகள் என மோடி குறிப்பிட்டவை, சோமாலியா, நைகர், எத்தியோப்பியா, மொசாம்பிக், புருண்டி, சியாரா லியோன் (சன்னி லியோன் அல்ல) மாலாவி போன்ற நாடுகள்.

மல்லாவி எண்டா கிளிநொச்சி பக்கம்தானே🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாலி said:

5 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு விழுத்தியதா நம்ம தலை சொல்லியிருக்காபில!🤣

மோடியை நுள்ளிப் பார்க்கிறதை தலை ஒரு வேலையாக வைச்சிருக்குது போல............🤣.

நான் முதலில் தலை சொல்லியிருந்த தகவலைத்தான் பார்த்தேன். தலை ஏன் இப்ப இதை சொல்லுகின்றது என்று பார்த்தால்.................... மோடி உலகமே வியந்தது என்று ஒரு பேச்சோட வாறார்...........😜.

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அந்த தலை?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, vasee said:

யாரப்பா அந்த தலை?

அதிபர் ட்ரம்ப் தான்.............

ஒரு சூரியன் போல அவர் ஒன்றே ஒன்று.........

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரசோதரன் said:

அதிபர் ட்ரம்ப் தான்.............

ஒரு சூரியன் போல அவர் ஒன்றே ஒன்று.........

அவரை அப்பா என அழைக்கிறார்களே ஐரோப்பியர்கள்?

OBBBA மூலம் அடுத்த 10 ஆண்டில் 3.7 ட்ரில்லியனை அமெரிக்க கருவூலம் இழக்கும் என எதிர்வுகூறுகிறார்களாம், அதே நேரம் DOGE மூலம் அதே 10 ஆண்டில் 1.3 ட்ரில்லியனை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கிறார்களாம், அதன் இடைவெளி -2.4 ட்ரில்லியன், அதாவது ஆண்டு ஒன்றுக்கு 200 பில்லியன் இழப்பு ஏற்படும் என கணித்துள்ளார்கள்.

இந்த வரிக்குறைப்பு மற்றும் அரச செலவீட்டுக்குறைப்பு போக அதனை ஈடுகட்ட உலக நாடுகளின் மீதான வரி விதிப்பின் மூலம் ஆண்டு ஒன்றிற்கு மேலதிகமாக 30 பில்லியன் வருமானம் எட்ட முடியும் என கணித்துள்ளார்கள் அதனால் -170 பில்லியன் செலவு ஆண்டு ஒன்றிற்கு ஏற்படும் என கூறுகிறார்கள் அதனை ஐரோப்பியர்களிடம்தான் (NATO) வசூலிக்க உள்ளார் போல உள்ளது.

ஜேர்மனி கடந்த ஆண்டு எதிர்மறை பொருளாதார வளர்ச்சியில் உள்ள நிலையில் GDP இல் 3% இராணுவ செலவீட்டிற்கு அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இந்த நிதிக்கொள்கைகளால் உள்நாட்டு (அமெரிக்க) பொருளாதாரம் பெரிதும் பாதிக்கலாம் என கருத்து நிலவுகிறது, சாதாரண அமெரிக்க மக்களின் மனநிலை எப்படி உள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

இந்த நிதிக்கொள்கைகளால் உள்நாட்டு (அமெரிக்க) பொருளாதாரம் பெரிதும் பாதிக்கலாம் என கருத்து நிலவுகிறது, சாதாரண அமெரிக்க மக்களின் மனநிலை எப்படி உள்ளது?

மஹா குழுமத்தை இந்த கணக்குகளும், தொகைகளும் பாதிப்பதே இல்லை, வசீ. மிகவும் அடிப்படையான சில தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பாதிப்புகள் நேரடியாக அங்கு தாக்கத்தை ஏற்படுத்தினால் அவர்களின் மனநிலையில் மாற்றம் வரலாம். ஆனால் இன்று அவர்கள் வெற்றி பெற்று விட்ட, அவர்களின் அமெரிக்காவை மீண்டும் கொண்டு வந்து விட்ட ஒரு மனநிலையிலேயே இருக்கின்றார்கள்.

மற்றைய அமெரிக்கர்களின் நிலை, அதிகமாக மேற்கு மற்றும் கிழக்குக் கரைகளில் இருக்கும் மக்கள், ஒரு நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கியபடியே இருக்கின்றது. புதிய முதலீடுகளை தவிர்த்து, பாதுகாப்பான வழிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இது ஒரு மூன்றரை வருடங்கள் மட்டுமே என்றும் நம்புகின்றனர்.

புதிய வேலைவாய்ப்புகளில் ஒரு தேக்கம் ஏற்பட்டு, அதனால் ஒரு சிக்கல் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக புதிதாக கல்லூரிப் படிப்புகளை முடித்தவர்கள். இந்த வகையினர் கொஞ்சம் அவநம்பிக்கையுடனேயே இன்று இருக்கின்றனர். இதற்கு செயற்கை நுண்ணறிவால் உண்டாகிக் கொண்டிருக்கும் தொழில்துறைச் சுனாமியும் ஒரு பிரதான காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:

இறுதியாக வந்த அமெரிக்கநுகர்வோர் விலை சுட்டெண் மீண்டும் அதிகரித்த போக்கினை காட்டுகிறது, இதனிடையே வட்டி விகிதத்தினை குறைக்கவேண்டும் என்பதற்காக மத்திய வங்கி ஆளுநருடன் முன்னர் ட்ரம்ப் முரண்பட்டிருந்தார், தற்போது மீண்டும் பணவீக்கம் அதிகரிக்கும் போக்கில் உள்ளது, அரச பாதீட்டின் பற்றாக்குறை 6.7% GDP உள்ள நிலையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள நிதிக்கொள்கைகளால் அரச வருமானம் குறைந்து, அதே நேரம் அரச செலவு குறைவதால் பொருளாதாரம் QT போன்ற பொருளாதார சூழ்நிலையினை உருவாக்கி பொருளாதார சுருக்கம் ஏற்படும், தற்போதய ட்ரம்பின் பெரிய அழகிய திட்டத்தின் மூலம் பெரும் நிறுவனங்கள் அதிகளவான நன்மையினை பெற சாதாரண மக்களின் நலன் ஒப்பீட்டளவில் மிக குறைவாக காணப்படுவதால் பொருளாதாரத்தினை தூண்டும் சாதரண மக்களின் செலவு குறைவாக இருப்பதுடன் அரச செலவு குறையும் போது அதிக பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.

பல உலக நாடுகள் இதே போல ஒரு இக்கட்டான பொருளாதார நிலைக்கு செல்கின்ற நிலை தொடருகிறது, மக்கள் பற்றிய சிந்தனை அற்ற தலைவர்கள் உலக பொருளாதாரத்தினை பாதிப்பிற்குள்ளாக்க உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2025 at 09:03, ரசோதரன் said:

புதிய வேலைவாய்ப்புகளில் ஒரு தேக்கம் ஏற்பட்டு, அதனால் ஒரு சிக்கல் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக புதிதாக கல்லூரிப் படிப்புகளை முடித்தவர்கள். இந்த வகையினர் கொஞ்சம் அவநம்பிக்கையுடனேயே இன்று இருக்கின்றனர். இதற்கு செயற்கை நுண்ணறிவால் உண்டாகிக் கொண்டிருக்கும் தொழில்துறைச் சுனாமியும் ஒரு பிரதான காரணம்.

இது ஒரு முக்கிய பிரச்சினை, ஏனோ பெரிதாக கவனத்திற்கு வருவதில்லை, எதிர்கால சந்ததியின் எதிர்காலம் குறித்த உங்கள் அக்கறை புரிகிறது, ஆனால் பெரும்பாலும் இக்கால கட்டத்தில் பெரிதாக இந்த விட்யங்களில் மக்கள் அக்கறை அற்றவர்களாக இருக்கிறார்கள்.

இந்த தலைமுறையினர் கூட தமெக்கென சொந்த வீடுகளற்றவராகவும் நிலங்களற்றவராகவும் மாறுகின்ற நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரேட்டோ எனும் பொருளியலாளரின் 80/20 எனும் தத்துவம் இயல்பியல் விதியில் தவிர்க்க முடியாத உண்மை என கூறினார்கள், ஆனால் தற்போது 1% உலக வளத்தின் 44% மேலாக உரிமை கொண்டாடுகின்றனர் என கிரெடிட் சுய்ஸ் மற்றும் யுபிஸ் வங்கியின் 2022-2023 அறிக்கை கூறுகிறது.

இது அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் நிகழுகிறது, அமெரிக்காவில் 1% மொத்த அமெரிக்க வளத்தில் காற்பங்கினை தமது உரிமையாக்கியுள்ளார்கள், அவுஸ்ரேலியாவில் 20% மொத்த அவுஸ்ரேலிய வளத்தில் 60% -65% தமது உரிமையாக கொண்டுள்ளார்கள்.

இந்த வளப்பரம்பல் சமநிலை இன்மையால் பொருளாதார சுனாமி அடிக்கடி ஏற்பட்டு உலக பொருளாதாரம் பேரழிவிற்குள்ளாகிறது, இதில் என்ன வருத்தம் என்றால் சாமானியமானவர்கள்தான் இந்த கொள்கையினை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார்கள், இந்த கொள்கைகளால் பாதிக்கப்படும் மக்களே இந்த கொள்கைகளை ஆதரிக்கும் மனப்பாண்மை எவ்வாறு தோன்றியது என தெரியாவிட்டாலும் மக்கள் அடிபடையில் கூட்ட மனப்பாண்மை கொண்டவர்களாக இருப்பதே இதற்கான காரணமாக இருக்கும் என கருதுகிறேன்.

இலங்கையில் சிறிய மீனவர்களின் வாழ்வாதாரங்களை கேள்விக்குள்ளாக்கும் அயல்நாட்டு பெரும் முதலாளிகள் ஒரு புறமும் அதானி குழு என மறு புறம் என நாட்டை கொள்ளையடிக்கிறார்கள், ஆட்சியில் இருக்கும் அரசுகளுக்கு தட்டி கேட்டால் ஆட்சி அதிகாரம் பறிபோய் விடும் எனும் எண்ணத்தில் அதனை கண்ணை மூடி கண்டு கொள்ளாது விடுகிறார்கள், பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல சாதாரண மக்களை பரம ஏழையாக்கும் இந்த நிலை தொடர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2025 at 08:42, vasee said:

அவரை அப்பா என அழைக்கிறார்களே ஐரோப்பியர்கள்?

OBBBA மூலம் அடுத்த 10 ஆண்டில் 3.7 ட்ரில்லியனை அமெரிக்க கருவூலம் இழக்கும் என எதிர்வுகூறுகிறார்களாம், அதே நேரம் DOGE மூலம் அதே 10 ஆண்டில் 1.3 ட்ரில்லியனை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கிறார்களாம், அதன் இடைவெளி -2.4 ட்ரில்லியன், அதாவது ஆண்டு ஒன்றுக்கு 200 பில்லியன் இழப்பு ஏற்படும் என கணித்துள்ளார்கள்.

இந்த வரிக்குறைப்பு மற்றும் அரச செலவீட்டுக்குறைப்பு போக அதனை ஈடுகட்ட உலக நாடுகளின் மீதான வரி விதிப்பின் மூலம் ஆண்டு ஒன்றிற்கு மேலதிகமாக 30 பில்லியன் வருமானம் எட்ட முடியும் என கணித்துள்ளார்கள் அதனால் -170 பில்லியன் செலவு ஆண்டு ஒன்றிற்கு ஏற்படும் என கூறுகிறார்கள் அதனை ஐரோப்பியர்களிடம்தான் (NATO) வசூலிக்க உள்ளார் போல உள்ளது.

ஜேர்மனி கடந்த ஆண்டு எதிர்மறை பொருளாதார வளர்ச்சியில் உள்ள நிலையில் GDP இல் 3% இராணுவ செலவீட்டிற்கு அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இந்த நிதிக்கொள்கைகளால் உள்நாட்டு (அமெரிக்க) பொருளாதாரம் பெரிதும் பாதிக்கலாம் என கருத்து நிலவுகிறது, சாதாரண அமெரிக்க மக்களின் மனநிலை எப்படி உள்ளது?

கடந்த ஆண்டு 25 பில்லியன் டொலர் பெறுமதியான இரஸ்சிய எரிபொருளை பெற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் 2021 இல் 108 பில்லியன் இரஸ்ய எரிபொருளிற்காக செலவு செய்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவிடமிருந்து 250 பில்லியன் பெறுமதியான எரிபொருளை பெற்றுக்கொள்ள ட்ரம்புடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு வந்துள்ளார்கள்,

இது தவிர போக்குவரத்து மற்றும் காப்புறுதிக்கட்டணம் என்பன மேலதிகமாக அதன் செலவுடன் சேரும், பலமடங்கு விலையில் அமெரிக்க எரிபொருளிற்கு வாங்குவதற்கு ஐரோப்பிய நாடுகளை தள்ளி அமெரிக்காவிற்கு மிக சாதகமான ஒரு வியாபார ஒப்பந்தத்தினை ட்ரம்ப் முடித்துள்ளார், அத்துடன் நிற்காமல் 600 பில்லியன் முதலீடுகளையும் அமெரிக்காவிற்கு பெற்றுக்கொடுத்துள்ளார்(1.3 டிரில்லியன்).

இதே போல ஜப்பானிடமும் 550 பில்லியனுக்கு முதலீட்டு ஒப்பந்தம் பெற்றுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, vasee said:

அமெரிக்காவின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிய கட்டுரைகள் பல நம்பத்தகுந்த ஊடகங்களில் வந்திருந்தன. சில நாட்களாக வேறு சில வேலைகளில் கவனம் இருந்ததால் எதையும் வாசிக்க நேரம் இருக்கவில்லை. இந்த வாரம் வாசிக்கவேண்டும்.

அதிபர் ட்ரம்ப் விரைவில் ஒரு சமநிலைக்கு வந்தால் எல்லோருக்கும் நல்லது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது, இப்போது நிலைமை பரவாயில்லாமல் அவரது முடிவுகளில் ஓரளவிற்கு ஒரு ஸ்திரத்தன்மை தெரிகின்றது. அமெரிக்க பங்குச்சந்தையின் போக்கும் அதையொட்டியே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

மக்களால் தெரிவு செய்யப்படாத ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எதோ ஒரு நிகழ்ச்சி நிரலிற்காக செயற்படுகிறார்களோ என முன்பு கூறிய விடயம் மீண்டும் உறுதிப்படுத்துவது போன்ற நிகழ்வு இது.

அதிகரித்த உற்பத்தி செலவினால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் செல்ல போகின்றன, வெறும் 30 பில்லியன் வாகன சந்தைக்காக ஜேர்மனி இதனை ஆதரிப்பதாக கருத்தில் எடுத்தாலும் நடைமுறையில் அதிகரித்தவிலையினால் மறைமுகமாக அந்த வாய்ப்பினை கூட இழக்கின்ற நிலைதான்.

ஒரு புறம் திறமையான வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டாலும் மறுபுறம் பொருளாதாரம் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் செயற்பட்டு அமெரிக்காவினை மோசமான மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிடும் முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்.

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ள நிலையில் அரச கடனுக்காகவும் தற்காலிக பங்கு சந்தை உயர்விற்காகவும் மத்திய வங்கி ஆளுநருடன் வட்டி விகிதத்தினை குறைக்க சண்டை இடும் ட்ரம்ப் நிச்சயமாக அமெரிக்காவின் பொருளாதாரத்தினை புதைகுழியில் தள்ளாமல் விடமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, vasee said:

மக்களால் தெரிவு செய்யப்படாத ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எதோ ஒரு நிகழ்ச்சி நிரலிற்காக செயற்படுகிறார்களோ என முன்பு கூறிய விடயம் மீண்டும் உறுதிப்படுத்துவது போன்ற நிகழ்வு இது.

😂 "மக்கள் ஒருவரைத் தெரிவு செய்தால் அவர் செய்வது மக்கள் நலன் சார்ந்து தான் இருக்கும்" என்ற மூட நம்பிக்கையை ட்ரம்ப், பிறேசிலின் பொல்சனாரோ, ஹங்கேரியின் ஓர்பான் இவர்களைக் கண்ட பின்னும் நாம் வைத்திருக்கிறோம் என்பது அதிசயம்.

மக்களின் தெரிவு வெறுப்புணர்வு, கடைந்தெடுத்த சுய நலம் என்பன சார்ந்ததாகவும் இருக்க முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணம், ஜேர்மனியின் கிழக்குப் பாதி பெருவாரியாக நவநாசிகளான AfD இற்கு வாக்களித்தமை. ஏனைய கட்சிகளின் தலைவர்கள் ஒற்றுமையாக நின்று firewall மூலமாக அந்த மக்கள் முடிவை நிராகரித்தமை தான் ஜேர்மனியில் மீண்டும் நாசிகள் கையோங்காமல் தடுத்தது!

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Justin said:

நான் கூற வந்த விடயத்தினை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என கருதுகிறேன்.

உதாரணத்திற்காக நீங்கள் வீடு வாங்க முடிவு செய்து சந்தை விலையில் வாங்குவதனை விட மலிவாக வாங்குவதற்காக ஒரு வாங்கும் முகவரை அணுகுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் (இரண்டு வகை முகவர்கள் உள்ளார்கள் பொதுவாக விற்கும் முகவர்களே அனைவருக்கும் தெரியும், விற்கும் முகவர்கள் விற்பவர்களின் நலனை அடிப்படையாக கொண்டு செயற்படுபவர்கள்).

உங்களுக்கு பிடித்த வீட்டினை சந்தை விலையில் 3 மடங்கு அதிக விலையில் விற்க முனைகிறார், அதற்கு அவர் கூறும் காரணம் பொதுநலம் என கூறி உங்களை வாங்குமாறு கூறினால் அவர் கூறிய மாதிரியே 3 மடங்கு விலையில் வீட்டை வாங்குவீர்களா அல்லது முகவரை மாற்றுவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸின் மானத்தையே வாங்கி விட்டு கதை வேற. இந்திய இராணுவத்தின் வலிமையைப் பற்றிஈழத்தமிழர்களைத்தவிர யாருக்கும் புளுகலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Justin said:

மக்களின் தெரிவு வெறுப்புணர்வு, கடைந்தெடுத்த சுய நலம் என்பன சார்ந்ததாகவும் இருக்க முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணம், ஜேர்மனியின் கிழக்குப் பாதி பெருவாரியாக நவநாசிகளான AfD இற்கு வாக்களித்தமை. ஏனைய கட்சிகளின் தலைவர்கள் ஒற்றுமையாக நின்று firewall மூலமாக அந்த மக்கள் முடிவை நிராகரித்தமை தான் ஜேர்மனியில் மீண்டும் நாசிகள் கையோங்காமல் தடுத்தது!

இந்த கருத்து ஜேர்மனியின் அன்றாட, உண்மையான உள் நிலவரங்கள் தெரியாமல் எழுதப்பட்டு இருக்கின்றது.

நாஷிகளின் கொள்கை என்ன என தெரியாமல் எழுதப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

இந்த கருத்து ஜேர்மனியின் அன்றாட, உண்மையான உள் நிலவரங்கள் தெரியாமல் எழுதப்பட்டு இருக்கின்றது.

நாஷிகளின் கொள்கை என்ன என தெரியாமல் எழுதப்பட்டுள்ளது.

நாசிகளின் (அல்லது நவநாசிகளின்) கொள்கை "உள்ளேயிருக்கும்" உங்கள் புரிதலின் படி என்ன😎?

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2025 at 17:06, தமிழ் சிறி said:

இந்திய இராணுவத்தின் வலிமையை உலகம் பார்த்துள்ளது. ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய இராணுவம் நிர்ணயித்த இலக்குகள் 100 சதவீதம் வெற்றியடைந்துவிட்டன.

ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பயங்கரவாதிகளின் வீடுகள் 22 நிமிடத்தில் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்திய ராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்தன.

நானும் ஆரம்பத்தில் நம்பல .. ஆனா நம்பினாத்தான் சாப்பாடுனு சொல்லிட்டாங்க,,

FzoHa3wJ39A5yw9vwNn40IvqLUAymNHUtzRoRT26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 31/7/2025 at 17:47, Justin said:

நாசிகளின் (அல்லது நவநாசிகளின்) கொள்கை "உள்ளேயிருக்கும்" உங்கள் புரிதலின் படி என்ன😎?

பிரித்து மேய வெளிக்கிட்டால்......🙃

ஒரு வகையில் தாம் தம் நாடு தம் இனம் தம் மண் என போராடுபவர்கள் எல்லோரும் நாசிகளாகவே தெரிவர். 🧐

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பிரித்து மேய வெளிக்கிட்டால்......🙃

ஒரு வகையில் தாம் தம் நாடு தம் இனம் தம் மண் என போராடுபவர்கள் எல்லோரும் நாசிகளாகவே தெரிவர். 🧐

தம் இனத்திற்கான போராட்டத்திலா 10 மில்லியன் மக்களை நவீன விஞ்ஞான நுட்பங்களெல்லாம் பாவித்து நாசிகள் கொன்றார்கள்?😂

ஹன்னா அரெண்ட் - நாசிகளின் காலத்தில் வாழ்ந்த ஒரு தத்துவாசிரியர் - கீழ் வருமாறு சொல்லியிருப்பது உங்களைப் போன்ற நோக்கர்களுக்குச் சரியாகப் பொருந்துகிறது:

“The ideal subject of totalitarian rule is not the convinced Nazi or the convinced Communist, but people for whom the distinction between fact and fiction (i.e., the reality of experience) and the distinction between true and false (i.e., the standards of thought) no longer exist.”

சுருக்கமாகத் தமிழில்: கொடூர சர்வாதிகாரிகள் இலகுவாக தம் பக்கம் ஈர்த்துக் கொள்வது சர்வாதிகாரிகளின் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டோரயும், எதிர்ப்போரையும் அல்ல! நல்லது கெட்டது, உண்மை போலி இடையேயான வேறுபாடு புரிந்து கொள்ளாத மக்களைத் தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, Justin said:

தம் இனத்திற்கான போராட்டத்திலா 10 மில்லியன் மக்களை நவீன விஞ்ஞான நுட்பங்களெல்லாம் பாவித்து நாசிகள் கொன்றார்கள்?😂

கிட்லர் செய்த தவறு அன்னிய நாடுகள் மீது படையெடுத்தது மட்டும் தான். மற்றும் படி தன் நாடு தன் மக்கள் ,தன் நாட்டு அபிவிருத்தி என மிக கண்ணியமாகவே இருந்தார்.

இதைத்தான் டொனால்ட் ரம்ப் அவர்களும் செய்கின்றார்,புட்டினும் செய்கின்றார்,ஐரோப்பிய நாட்டு தலைவர்களும் செய்கின்றனர். மோடியும் அதைத்தான் செய்கின்றார்.

பழைய வரலாறுகள் எல்லாவற்றையும் கிளறினால் தமிழ் அரசர்கள் காலத்தையும் ஆராய வேண்டி வரும்.😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.