Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

wmremove-transformed-7.jpeg?resize=600%2

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

மன்னார் – விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார்.

1998ஆம்ஆண்டு   பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது உயர் கல்வியினை அவர் பின்லாந்து தேசத்தில் தொடர்ந்துள்ளார். அங்கு மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

பின்னர் ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், EASA CPL(A) MULTI-ENGINE PISTON (MEP)  மற்றும் கருவிகளின் மதிப்பீடு ( (IR), செயல்திறன் அடிப்படையிலான வழிநடத்துதல்  (PBN) மற்றும் ADVANCED UPRT  தடுப்புமுறை மற்றும் மீட்பு பயிற்சி அதாவது விமான கட்டுப்பாட்டு இழப்பிலிருந்து மீட்பு பயிற்சி ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

இதனையடுத்து ATPL ஏர்லைன் போக்குவரத்து விமானி ஒருவர் பெறக்கூடிய விமான உரிமத்தை பெற்றுள்ளார்.

இது ஒரு விமானி பெறக்கூடிய அதிக தரம்வாய்ந்த உரிமமாகக் கருதப்படுவதுடன்  இவ்வுரிமத்தை கொண்டு ஒருவர் வணிக விமானங்களில் தலைமை விமானியாக (Captain)பணியாற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1440041

  • கருத்துக்கள உறவுகள்

நான் பஸ் லைன்சன்ஸ் எடுத்ததை அந்த காலத்தில் செய்தியா போட்டிருக்கலாம், வட போச்சே🤣

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்!

ஆனால் இது ஏன் ஆதவன் செய்தியாக வருமளவு அதிசயமென எனக்கு விளங்கவில்லை! ஊர்ச்சங்கங்களின் வேலையாக இருக்குமோ😂?

நான் அறிந்த வரையில், பல ஆண்டுகளாக சில ஈழத்தமிழர்கள் பாரிய தாரை (jet) இயந்திரங்களைக் கொண்ட பயணிகள்/சரக்கு விமானங்களை இயக்கும் கப்ரன் தர விமானிகளாக இருந்து வருகிறார்கள். கேணல் சங்கர், கனடா எயார் இல் சரக்கு விமானங்களை இயக்கிய ஒரு கப்ரன் என நினைக்கிறேன்.

இந்த தம்பி பெற்றிருப்பது, பயிர்களுக்கு மருந்தடிக்கும் (dusting) சிறிய விமானங்களை அவை ஒன்றுக்கு மேற்பட்ட இயந்திரங்களைக் கொண்டிருந்தால் இயக்கும் அனுமதிப் பத்திரம். இந்த லைசென்சை வைத்துக் கொண்டு சில பயணிகள் விமான சேவைகள் இன்னும் பயன்படுத்தும் turboprop விமானங்களையும் இயக்க முடியாது. ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டமென்று விளங்கவில்லை!

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Justin said:

ஊர்ச்சங்கங்களின் வேலையாக இருக்குமோ

வேற என்ன.

அண்மையில் விடத்தல் தீவில் சர்வதேச மாநாடு என்று ஒரு தலைப்பு…பறந்து விழுந்து போய் பார்த்தால், ஒவ்வொரு நாட்டிலும் இருந்து விடத்தல் தீவை சேர்ந்த புலம்பெயர் புண்ணியாவான்களின் ஒன்று கூடலாம்.

அடுத்த முறை எங்கள் அகண்ட குடும்பம் சாமத்திய வீட்டில் சந்தித்தால் அதை சர்வதேச மாநாடு என போடும்படி ஆதவனுக்கு சொல்ல போறேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வர வர "The Onion" மாதிரி செய்திகள் போடுகிறது ஆதவன். ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், இந்த நையாண்டிப் பத்திரிகையை பல்கலையினுள் ஓடித் திரியும் உள்ளகப் பேருந்தில் இலவசமாக வாசிக்கக் கிடைக்கும். ஒரு தடவை "ஜனாதிபதி புஷ் அவரது பாரியாரின் ஜனன உறுப்பிற்கு விஜயம் செய்தார்" என்று ஒரு பெரிய தலையங்கம் போட்டு அசத்தியிருந்தார்கள்😂!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

பாராட்டுக்கள்!

ஆனால் இது ஏன் ஆதவன் செய்தியாக வருமளவு அதிசயமென எனக்கு விளங்கவில்லை! ஊர்ச்சங்கங்களின் வேலையாக இருக்குமோ😂?

நான் அறிந்த வரையில், பல ஆண்டுகளாக சில ஈழத்தமிழர்கள் பாரிய தாரை (jet) இயந்திரங்களைக் கொண்ட பயணிகள்/சரக்கு விமானங்களை இயக்கும் கப்ரன் தர விமானிகளாக இருந்து வருகிறார்கள். கேணல் சங்கர், கனடா எயார் இல் சரக்கு விமானங்களை இயக்கிய ஒரு கப்ரன் என நினைக்கிறேன்.

இந்த தம்பி பெற்றிருப்பது, பயிர்களுக்கு மருந்தடிக்கும் (dusting) சிறிய விமானங்களை அவை ஒன்றுக்கு மேற்பட்ட இயந்திரங்களைக் கொண்டிருந்தால் இயக்கும் அனுமதிப் பத்திரம். இந்த லைசென்சை வைத்துக் கொண்டு சில பயணிகள் விமான சேவைகள் இன்னும் பயன்படுத்தும் turboprop விமானங்களையும் இயக்க முடியாது. ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டமென்று விளங்கவில்லை!

நானும் இதனை கவனித்தேன்

ஆனால் சான்றோன் எனக்கேட்ட தாய் என்று கடந்து சென்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களின் முன், டென்மார்க்கிலிருந்து இதே போல ஒரு செய்தி வந்திருந்தது. 'விமான ஓட்டியான முதல் ஈழத்து தமிழ் பெண்...........' என்பது போன்ற ஒரு தலைப்புடன். அந்தப் பெண்ணின் தந்தை தெரிந்தவர், ஊரில் ஆசிரியராக இருந்தவர். அவர் ஒன்றோ இரண்டு முழு நீள சினிமா படங்களும் எடுத்திருந்தார். ஒரு காலத்தில் ஊரில் நாடகங்கள் எழுதி இயக்கி நடித்தவர். சில காலமாக அவர்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. பின்னர் எந்த செய்தியும் வரவில்லை/தெரியவில்லை.

அதற்கு சில வருடங்களின் முன் பிரித்தானியாவில் தனது மகன் விமான ஓட்டியாக இருப்பதாக ஒருவர் சொன்னார். அமெரிக்கா கூட வந்து போவதாகச் சொன்னார். ஆனாலும் சந்திக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை.

இங்கு நான் இருக்கும் அதே ஊரில் இருக்கும் ஈழத் தமிழர் ஒருவர் விமான ஓட்டியாக இருக்கின்றார். பெரிதாக பழக்கம் இல்லை. எங்காவது கண்டால் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே.

பல வருடங்களின் முன் இங்கு இருக்கும் ஒரு சிறிய கல்லூரியில் ஒரு தமிழ் அரசியல்வாதியின் மகன் வந்து இந்த துறையில் படித்துக் கொண்டிருந்தார். முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதி என்று நினைக்கின்றேன், சரியாக ஞாபகம் இல்லை. தினக்குரலோ அல்லது வேறு ஏதோ ஒரு பத்திரிகையில் பெரிதாக படங்களுடன் செய்தி வந்திருந்தது. ஒரு பெரிய விளம்பரம் போன்றே அது தெரிந்தது. அந்தக் கல்லூரி, படிப்பு எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிது இல்லை, ஆனாலும் எதிர்கால அரசியலுக்காக செய்கின்றார்கள் போல என்று நினைத்தேன். அவர் இன்னமும் ஒரு தேர்தலிலும் நிற்கவில்லை போல.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

டென்மார்க் காரர் இப்போது பேனையை தூக்கி எறிந்து பிடித்து செய்தி வாசிப்பதில் பிசியாக இருக்கிறார்🤣

அவரது குறும்படம் ஒன்றின் தெரிவின் போது அவருக்கு பலமாக குட்ட வேண்டியதாயிற்று.

அப்புறம் வரதரின் மகளும் தான் தான் முதலாவது ஈழத்து விமானி என்று சொன்னதாக ஞாபகம்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தாழ்வுமனபான்மை சிக்கலாக தெரிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தம்பியின் செய்தி தமிழ்வின். ஐபிசி ஆகியவற்றிலும் வந்தது.

தமிழ் சமூகத்தை பொறுத்தவரை இது முக்கிய செய்திதான்.

வைத்தியர், பொறியியலாளர், சட்டத்தரணி ஆகியோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது எமது சமூகத்தில் எத்தனை விமானிகள் உள்ளனர் என்று பார்த்தால்.. அங்கை ஒருவர் எனக்கு தெரியும். ஆனால் எனக்கு அறிமுகம் இல்லை.. இந்த அளவில்தான் விமானிகளின் பிரசன்னம் உள்ளது.

அதிகம்பேர் விமானத்துறையில் கால்பதிக்க வேண்டும்.

வழங்கல் குறைவான இடத்தில் பொருளுக்கு மவுசு அதிகம் காணப்படும். அதற்காக இந்த தம்பி மீது பொறாமைப்படக்கூடாது.

On 21/7/2025 at 15:51, goshan_che said:

நான் பஸ் லைன்சன்ஸ் எடுத்ததை அந்த காலத்தில் செய்தியா போட்டிருக்கலாம், வட போச்சே🤣

எயார் பஸ் என்றால் இனியும் போடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட யாழ்கள கலைஞனும் இப்ப விமானி ஆகியிருப்பார் என்று நினைக்கிறேன்.கனடா உறவுகளுக்கு சில வேளை தெரிந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

பல வருடங்களின் முன் இங்கு இருக்கும் ஒரு சிறிய கல்லூரியில் ஒரு தமிழ் அரசியல்வாதியின் மகன் வந்து இந்த துறையில் படித்துக் கொண்டிருந்தார். முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதி என்று நினைக்கின்றேன், சரியாக ஞாபகம் இல்லை. தினக்குரலோ அல்லது வேறு ஏதோ ஒரு பத்திரிகையில் பெரிதாக படங்களுடன் செய்தி வந்திருந்தது. ஒரு பெரிய விளம்பரம் போன்றே அது தெரிந்தது. அந்தக் கல்லூரி, படிப்பு எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிது இல்லை, ஆனாலும் எதிர்கால அரசியலுக்காக செய்கின்றார்கள் போல என்று நினைத்தேன். அவர் இன்னமும் ஒரு தேர்தலிலும் நிற்கவில்லை போல.

தற்போதைய வன்னி பா.உ துரைராசா இரவிகரன் அவருடைய மகன் என நினைக்கிறேன் அண்ணை. வேட்டி கட்டி படம் போட்டிருந்ததாகவும் நினைவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

எயார் பஸ் என்றால் இனியும் போடலாம்.

என் செய்வேன்… நான் எடுத்தது சி டி பி பஸ்.

உண்மையில் விமானி ஆவது டாக்டர் எஞ்சினியர் ஆவதை விட மிக இலகு.

சாதாரண தரத்தில் மிக சாதாரண சித்தி இருந்தால் போதும். செலவாகும் பணம் கூட ஒரு டாக்டரோடு ஒப்பிடும் போது குறைவுதான்.

இங்கே பிரிடிஷ் ஏர்வேஸ், ரோயல் ஏந்ர் போசில் பயிற்றுனராக சேர்ந்து காசு கட்டாமல் ஐந்து வருடத்தில் விமானியாகலாம், சம்பளமும் தருவார்கள். இந்தியாவில் படிப்பது இன்னும் இலகு.

ஆனால் பெரும்பாலும் ஒரு விமானியாக பல மணி நேர பயிற்ற்சி பறப்பை பெற்ற ஒருவர் எடுக்கும் சம்பளத்தை விட இலண்டன் underground tube ஓட்டுனர், ஒரு வருட பயிற்சியின் பின் எடுக்கும் சம்பளம் அதிகம். ரிஸ்கும் குறைவு. வீட்டை விட்டு போய் வேலை செய்ய தேவையில்லை, ஒரு மூடிய பெட்டிக்குள் 18 மணத்தியாலம் வரை இருக்க தேவையும் இல்லை.

இப்படி விமானி தொழிலில் பல பிரதிகூலங்கள் இருப்பதாலே மக்கள் அதை நாடுவதில்லை.

இங்கே வழங்கல் அல்ல பிரச்சனை, விமானி தொழிலுக்கு எம் மக்களிடம் கேள்வி இல்லை என்பதே உண்மை.

உண்மையில் இலண்டனில் bin collection செய்யும் வேலைக்கு ஓரளவு நல்ல சம்பளம். ஆனால் நம்மவர் எவரும் செய்வதில்லை. அதனால் தமிழர் ஒருவர் rubbish truck ஓட்டும் உரிமம் எடுத்தால் அதை ஆதவனில் செய்தியாகவா போடுவார்கள்.

இதெல்லாம் ஒரு செய்தியா என்பதே கேள்வி - தவிர இதில் பொறாமை பட என்ன இருக்கிறது?

அத்தோடு இந்த இலகு ரக பறப்பு உரிமம், அவுஸ் அமேரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் சாதாரண பூச்சி மருந்து அடிக்கும் தொழிலாளர்களே வைத்திருப்பது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதில் பொறாமை பட என்ன இருக்கிறது?

அவர் மன்னார் ஆள் உயர உயர உயரத்திற்கு சென்றுவிட்டார் நீங்கள் தரையில் என்ற பொறாமை தான் உங்களுக்கு 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

தற்போதைய வன்னி பா.உ துரைராசா இரவிகரன் அவருடைய மகன் என நினைக்கிறேன் அண்ணை. வேட்டி கட்டி படம் போட்டிருந்ததாகவும் நினைவுள்ளது.

👍...........

அந்தச் செய்தியுடன் ரவிகரன் என்னும் பெயரும் ஞாபகத்தில் இருக்கின்றது, ஏராளன். நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கவேண்டும்....................

6 hours ago, goshan_che said:

இதெல்லாம் ஒரு செய்தியா என்பதே கேள்வி - தவிர இதில் பொறாமை பட என்ன இருக்கிறது?

அத்தோடு இந்த இலகு ரக பறப்பு உரிமம், அவுஸ் அமேரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் சாதாரண பூச்சி மருந்து அடிக்கும் தொழிலாளர்களே வைத்திருப்பது.

இதைப் போன்ற செய்திகளும், விளம்பரங்களும் உண்டாக்கும் உணர்வு நீங்கள் சொல்லியிருப்பதே.........👍.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அவர் மன்னார் ஆள் உயர உயர உயரத்திற்கு சென்றுவிட்டார் நீங்கள் தரையில் என்ற பொறாமை தான் உங்களுக்கு 🤣

அந்த தம்பி மேலே தான் கீழே எனும் தாழ்வு மனப்பான்மை என்றும் எடுக்கலாமா?

6 hours ago, goshan_che said:

அத்தோடு இந்த இலகு ரக பறப்பு உரிமம், அவுஸ் அமேரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் சாதாரண பூச்சி மருந்து அடிக்கும் தொழிலாளர்களே வைத்திருப்பது.

இந்த விடயம் அந்த தம்பிக்கு தெரியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுஜனுக்கு என் வாழ்த்துகள்.

இதே போல் எமது இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் காண வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

நான் பஸ் லைன்சன்ஸ் எடுத்ததை அந்த காலத்தில் செய்தியா போட்டிருக்கலாம், வட போச்சே🤣

நானும் பார் சிறியைப் பிடிச்சு ஒரு பார் லைசன்ஸ் எடுக்கப்போறன். என்னை வாழ்த்துவீங்களா பிரண்ட்ஸ்?!😎

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

இந்த விடயம் அந்த தம்பிக்கு தெரியுமா?

அவருக்கு தெரியுமோ இல்லையோ - அது அவர் தன் தொழில் தகமை, வாய்புகள் பற்றி ஆராய்ந்து முடிவு எடுத்திருப்பார் என நம்பலாம்.

இன்னும் ஒரு விடயத்தைதுயும் நீங்கள் தெரிந்து கொள்ள என சொல்கிறேன்.

இதே போல இலகுரக விமானங்களை ஒரு பொழுதுபோக்காக பறக்கும் தமிழ் ஆட்கள் கூட உள்ளார்கள்.

ஒரு சின்ன விமானத்தின் உரிமையை, அதன் பராமரிப்பை பலர் சேர்ந்து ஒரு சிண்டிகேட் போல வாங்கி கொள்வது, பின்னர் விமான லைசன்ஸ் பெற்று கொண்டு, இந்த விமானத்தில் அவர்களுக்குரிய நேர்ந்த்தில் பறப்பது.

இப்படி இந்த வகை விமான ஓட்டி லைசன்ஸ் பெறுவது என்பது ஒன்றும் செய்தி வரும் அளவு சாதனை அல்ல.

1 hour ago, வாலி said:

நானும் பார் சிறியைப் பிடிச்சு ஒரு பார் லைசன்ஸ் எடுக்கப்போறன். என்னை வாழ்த்துவீங்களா பிரண்ட்ஸ்?!😎

🤣

கோஷான், ஜஸ்டின் உங்களை எதிர்த்தால் - ஜேர்மனியில் இருந்து உங்களுக்கு வாழ்த்து கராண்டீட்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயம் said:

அந்த தம்பி மேலே தான் கீழே எனும் தாழ்வு மனப்பான்மை என்றும் எடுக்கலாமா?

படத்தில் விமானத்துடன் நிற்பவரை பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை அவர் உறவினரோ அல்லது அப்பாவோ அதை செய்தியாக போட்டவர் தாழ்வு மனப்பான்மை சிக்கலால் பாதிக்கபட்டவர்.

பிரான்சில் ஒரு ஈழத் தமிழரின் மகன் பிரஞ்சு இராணுவத்தில் தாக்குதல் விமானத்தின் விமானியாக இருந்தார். பெயர் தெரியாது, சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2025 at 04:24, நியாயம் said:

அதிகம்பேர் விமானத்துறையில் கால்பதிக்க வேண்டும்.

வழங்கல் குறைவான இடத்தில் பொருளுக்கு மவுசு அதிகம் காணப்படும். அதற்காக இந்த தம்பி மீது பொறாமைப்படக்கூடாது.

எனது இரண்டாவது மகன் இதில் பறக்க விரும்பி படிக்க கேட்டான். மறுத்து விட்டேன். அதற்கு நான் சொன்ன காரணம் அவனுக்கு அதிசயமாக இருந்தது. அப்பா இப்படி எல்லாமா யோசிப்பீங்க என்றான். இப்பொழுது வேறு துறையில் படித்து குடும்பம் குழந்தை என்று நல்ல நிலையில் உள்ளான். இப்ப அப்பா அன்று சொன்னது சரி என்று உணர்ந்து உள்ளான்.

நான் சொன்னது : விமானிகளுக்கு குடும்பம் பிள்ளை குட்டிகள் சரிவராது. நீ படித்து திருமணம் செய்து பேரப் பிள்ளைகளை பெத்து தரும் எல்லைக்குள் இருந்தால் போதும் என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

படத்துக்கு போஸ் கொடுக்கும்போது எதேச்சையாக பக்கத்தில் நின்ற சிறிய ரக விமானம் (Cessna 172N-Skyhawk) ஒன்றின் அருகில் நின்றுவிட்டார் போல் தெரிகிறது. அல்லது அது அவர் முன்னர் விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் படித்தபோது எடுத்த பழைய படமாககூட இருக்கலாம். அதற்காக அதைத்தான் அவர் ஓட்டுவார் என்று கணிப்பது முற்றிலும் தவறு.

அவர் பெற்ற விமானிகளுக்கான தகமை ATPL என்றால் அது பெரிய ரக பயணிகளுக்கான அதி உயர் தர விமான ஓட்டுனருக்கான காப்டன் மற்றும் முதல் விமானிக்குரிய தராதரம் என்பதில் என்ன சந்தேகம்?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, vanangaamudi said:

படத்தை மட்டும் பார்த்து விட்டுக் கருத்தெழுதாமல், முழுச்செய்தியையும் வாசித்தால் இந்த சந்தேகம் வந்திருக்காது.

ATPL (Air Transport Pilot License) என்பது வணிக விமானங்களை இயக்குவதற்கான அடிப்படையான தகுதி.

செய்தியிலேயே சொல்லியிருப்பதன் படி வணிக விமானங்களை இயக்குவதற்கான Commercial Pilot License (Aeroplanes) CPL(A) எடுத்திருக்கிறார். ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட இயந்திரங்கள் கொண்ட பிஸ்ரன் (MEP Multi-Engine Piston) விமானங்களை இயக்குவதற்கான தகுதியைப் பெற்றிருக்கிறார். காற்றாடி இயந்திரங்களால் இயங்கும் விமானங்களில் பிஸ்ரன் விமானங்கள்(அவரோடு படத்தில் இருப்பது) குறைந்த உயரத்திலும், வேகத்திலும் பறக்கும் விமானங்கள். Turboprop என்ற வகை அனேகமாக பயணிகளை நீண்ட தூரம் ஏற்றிச் செல்லப் பயன்படும் அதிக உயரத்திலும், வேகத்திலும் பறப்பவை - இதனால் சிக்கலானவை.

இதனால் தான் MEP என்று குறிப்பிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் ATPL இனை வைத்துக் கொண்டு B737, A320 எல்லாம் போய்விட்டீர்கள்😂. இந்த சிக்கலான விமானங்களில் First Officer எனப்படும் துணை விமானியாக வரவே, அவர் இன்னும் பல ஆயிரம் மணித்தியாலங்கள் பயிற்சி எடுக்க வேண்டும். எடுப்பார் என்று தான் நம்புகிறோம்.

ஆனால், அப்படி போயிங், எயார்பஸ் பறக்க லைசென்ஸ் எடுத்தாலும் கூட அது ஒரு செய்தியா என்பது தான் இங்கே பலருடைய கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

நல்ல வேளையாக நீங்கள் முந்தி கொண்டீர்கள். அல்லது இந்த விளக்கத்தை கஸ்டபட்டு எழுத வேண்டி வந்திருக்கும்.

நன்றி.

10 minutes ago, Justin said:

ஆனால், அப்படி போயிங், எயார்பஸ் பறக்க லைசென்ஸ் எடுத்தாலும் கூட அது ஒரு செய்தியா என்பது தான் இங்கே பலருடைய கேள்வி.

கேள்வியை யார் இப்பெல்லாம் கவனிக்கிறார்கள்.

மாடு, மரம், கட்டுதல் ரகத்தில்தான் பதில்கள் பெரும்பாலும்.

4 hours ago, விசுகு said:

நான் சொன்னது : விமானிகளுக்கு குடும்பம் பிள்ளை குட்டிகள் சரிவராது. நீ படித்து திருமணம் செய்து பேரப் பிள்ளைகளை பெத்து தரும் எல்லைக்குள் இருந்தால் போதும் என்பது.

தமிழர்கள் ஏன் விமானியாக போவதில்லை (கேள்வி குறைவு, வழங்கல் அல்ல) என நியாயத்துக்கு நான் சொன்னமைக்க்கான வாழ்க்கை உதாரணம்.

பிகு

எவரேனும் பிள்ளைகள் இந்த துறையை விரும்பினால் Air Traffic Controller நல்ல வேலை. ரிஸ்க் குறைவு. குடும்ப வாழ்வும் குலையாது. 8 மணி நேரம் பெட்டிக்குள் இருந்து விட்டு, அங்கே போய் படுத்தெழும்பி, மீண்டும் 8 மணி நேரம் பெட்டிக்குள் இருக்கும் அலுப்புகள் இல்லை.

ஆனால் விமானியை விட stress அதிகம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.