Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

518384789_10240448160243342_886975184479

யாழ்ப்பாணத்தில் தமிழ் பெண்கள் சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரித்து வருவதாக ஒரு செய்தியைப் பார்த்தேன். அதன் உண்மைத் தன்மை தெரியவில்லை.

ஆனால் அதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளது .

ஒரு தமிழ் பெண் தமிழரை திருமணம் முடிப்பதை விட ஒரு சிங்களவரை திருமணம் முடிக்கும் பொழுது திருமணத்தின் பின் அவளுக்குக் கிடைக்கின்ற சுதந்திரம் அதிகமானது.

ஒப்பீட்டளவில் தமிழ் ஆணை மணமுடிக்கும் பொழுது வருகின்ற சீதனப் பிரச்சனை, சாதிப் பிரச்சனை போன்றவை ஒரு சிங்களவரை மணம் முடிக்கும்போது போது குறைவாகத்தான் வரும்.

ஜாதகம் பார்ப்பது சிங்களவர்களிடேயும் இருந்தாலும் இறுக்கத்தன்மை மிகக் குறைவு.

முக்கியமாக மணமகன் வீட்டில் இருக்கும் பெண்களால் மணப்பெண்ணுக்கு வருகின்ற அழுத்தங்கள் சிங்கள குடும்பங்களிலே மிக மிகக் குறைவு.

ஒரு தமிழ் பெண் மனமுடிக்கும் பொழுது கணவனின் தங்கை ,அக்கா , அம்மா எல்லோரும் அந்த பெண்ணை ஒரு அடிமை மனநிலையிலேயே பார்க்கின்றார்கள்.

அண்மையில் இந்தியாவில் ஒரு ஆடியோ பதிவு லீக்காகி இருந்தது அதிலே ஒரு கணவன் தன் மனைவியை சீதனம் கேட்டு எவ்வாறு அடித்து கொடுமைப்படுத்துவேன் என்று தங்கையிடம் பேசும் பொழுது, அந்தத் தங்கை கணவனை பாராட்டி அவளுக்கு அப்படித்தான் இன்னும் அடிக்க வேண்டும் என்று செல்கிறார்.

இலங்கையில் அவ்வாறான ஓடியோக்கள் இல்லாவிட்டாலும் பல குடும்பங்களில் அவ்வாறு நடக்கின்ற ஆதாரங்கள் என்னிடமே இருக்கின்றன.

அவர்களின் அடையாளம் வெளிப்படும் என்பதற்காகவும் , சில விவாகரத்து வழக்குகள் இப்பொழுது நிலுவையில் இருப்பதாலும், சிலவேளை அந்த ஆண் மகன்கள் மனசு மாறி மீண்டும் சேர்ந்து வாழலாம் என்ற சின்ன நம்பிக்கையிலும் அவை எதையும் நான் வெளியிடுவதில்லை.

நான் சிங்களவர்களோடு பழகி அவர்களின் திருமணங்களுக்கு சென்ற பொழுது பார்த்த விடயம், திருமணத்தை தம்பதியினரே பிளான் பண்ணுகிறார்கள். அங்கு அவர்களுடைய பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் இருக்கின்ற அழுத்தம் தமிழ் பெற்றோருக்கு இருக்கின்ற அழுத்தத்தை விட மிகக் குறைவு.

குறிப்பாக சிங்கள இளைஞர்கள் அது பெண்ணாக இருக்கட்டும், ஆணாக இருக்கட்டும் தங்கள் துணையை தாங்களே தீர்மானித்து கொள்ளவே விரும்புகிறார்கள்.

குறிப்பிட்ட வயது வந்ததும், குறிப்பாக பல்கலைக்கழகம் வந்ததும் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளவே விரும்புகின்றார்கள். அங்கு புரோக்கர், சாதி, ஜாதகப் பொருத்தம் போன்றவை மிக குறைவாகவே செல்வாக்கு செலுத்துகிறது.

திருமணத்துக்கு பிறகு அந்த தம்பதியினரின் வாழ்க்கையில் மண மகனின் குடும்பத்தார் அளவுக்கு அதிகமாக செல்வாக்கு செலுத்துவதில்லை.

அவர்கள் புதுமணத் தம்பதிகளை தனித்து சுதந்திரமாக வாழ அனுமதி கொடுப்பது தமிழர்கள் விட சிங்களவர்களிடம் அதிகமாக இருக்கின்றது.

அக்காவுக்கு சீதனம் கொடுக்க வேண்டும், தங்கச்சிக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என்று மணப்பெண்ணை கொடுமை படுத்துவதும் அங்கு ஒப்பிட்டளவில் மிக மிகக் குறைவு.

இந்தச் சுதந்திரங்களை அறியும் பொழுது நிச்சயமாக தமிழ் பெண்கள், தமிழ் மணமகனை மணமுடிப்பதை விட சிங்கள மணமகனை மணமுடிப்பதை விரும்புகின்ற போக்கு அதிகரிக்கும்.

Sivachandran Sivagnanam ·

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கனடா திருமணசேவை விளம்பரங்களில்...வெ....ப...கோ ...ந...என்று அடையாளக்குறிகள் ..இப்போ அதிகமாக வருகின்றபோது...நாட்டில் இந்த நிலை அதிகரிப்பது..தவிர்க்க முடியாது தானே....நமிமினத்தின் தலையெழுத்து இது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஒப்பீட்டளவில் தமிழ் ஆணை மணமுடிக்கும் பொழுது வருகின்ற சீதனப் பிரச்சனை, சாதிப் பிரச்சனை போன்றவை ஒரு சிங்களவரை மணம் முடிக்கும்போது போது குறைவாகத்தான் வரும்.

இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. புலம் பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் கூடுதலாக வேற்று நாட்டவர்களை மணம் முடிப்பதை காணக்கூடியதாகவே உள்ளது.இப்படி மணம் முடிக்கும் தமிழர்களுக்கு சாதியோ,சீதனம் சீர்வரிசை பிரச்சனையாக இருந்ததில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

கனடா திருமணசேவை விளம்பரங்களில்...வெ....ப...கோ ...ந...என்று அடையாளக்குறிகள் ..இப்போ அதிகமாக வருகின்றபோது...நாட்டில் இந்த நிலை அதிகரிப்பது..தவிர்க்க முடியாது தானே....நமிமினத்தின் தலையெழுத்து இது..

அல்வாயன் நீங்கள் கூறியது போல்... ஐரோப்பாவில் இயங்கும் சில திருமண சேவையின் இணையப் பக்கங்களை பார்த்த போது, முன்பு இல்லாத அளவிற்கு எல்லோரும் தமது சாதியிலேயே திருமண சம்பந்தங்களை எதிர்பார்ப்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

அல்வாயன் நீங்கள் கூறியது போல்... ஐரோப்பாவில் இயங்கும் சில திருமண சேவையின் இணையப் பக்கங்களை பார்த்த போது, முன்பு இல்லாத அளவிற்கு எல்லோரும் தமது சாதியிலேயே திருமண சம்பந்தங்களை எதிர்பார்ப்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

இதில் என்ன விடயமென்றால்...பிள்ளைகளுக்கு....இதுபற்றி அறவே தெரியாது...

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இனப் பிரச்சனை நாட்டையே இரண்டாக்கும் முன் இருந்த காலத்தில், வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே சாதியப் பாகுபாடுகள் உச்சத்தில் இருந்தது. அன்றைய நாட்களில் சில தமிழ் வியாபாரிகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் வியாபாரங்களும் செய்து கொண்டிருந்தனர். பெண்கள் மீதான கட்டுப்பாடுகளும் மிகவும் அதிகமாக இருந்த காலகட்டம் அது. ஆனாலும் அன்று சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே திருமண உறவு மிகக் குறைவாக இருந்தது. காவல்துறை தலைவர் நடேசன் போன்ற ஓரிருவரே அப்படிச் செய்ததாக தெரிந்திருந்தது.

போராட்டம் தீவிரமாக இருந்த காலம் வேறு. முற்று முழுதான சந்தேகமே இரண்டு பக்கங்களிலும் இருந்தது. இனப் பாகுபாட்டை மீறி எந்த விதமான உறவுகளையும் ஏற்படுத்தும் ஒரு சாதகமான நிலை இருக்கவில்லை. மிகவும் சிலவே நடந்தன.

இன்றைய போக்கு மாறி இருந்தால், அதற்கான பிரதான காரணம் வடக்கு மக்களின் பரம்பலே பிரதான காரணமாக இருக்கவேண்டும். வடக்கிலிருந்து வெளியேறிய மக்கள் நாட்டின் வேறு பகுதிகளில் நிரந்தரமாக , முக்கியமாக கொழும்பு போன்ற இடங்கள், வாழ ஆரம்பித்துவிட்டனர். அங்கு அவர்கள் வேறு இன மக்களுடன் அதிக இணக்கத்துடன், முன்னருடன் ஒப்பிடும் போது, இருக்கின்றார்கள் போல. இது இன்று உலகின் பல பெரு நகரங்களிலும் காணும் ஒரு நடைமுறையே. சென்னையில் கூட அவர்களின் மிகவும் இறுக்கமான சாதியக் கட்டுப்பாடுகளையும் மீறி புதிய உறவுகள் அதிக அளவில் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

கிழக்கு மாகாணமோ மூவினங்களும் ஒரே அளவில் வாழும் ஒரு பிரதேசமாக மாறிவிட்டது. காலப்போக்கில் இன மற்றும் வேறு அடையாளங்களை தாண்டிய உறவுகள் அங்கே அதிகமாவது தவிர்க்க முடியாத ஒன்றே.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

"இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை."எங்கும் நாம் சொல்லும் பிரச்சனைகள் உள்ளன. ஆனால் வடக்கு கிழக்கில் இன்று நடக்கும் திருமணங்கள், நாங்கள் சொல்லும் காரணங்களுக்குள் அடங்காது. எமது சமூகத்திலும் சாதி, சமயம் பாராமல், சீதனம் வாங்காமல் தாங்களே விரும்பியும், பெற்றோர் பார்த்தும் செய்துவைத்த திருமணங்கள் உண்டு. அப்போ சிலர் சொல்லிக்கொண்டனர்; பெண் கிடைக்காததால் அவ்வாறு செய்து கொண்டனர், ஆணில் ஏதோ குறையுண்டு. இவ்வாறு பல காரணங்கள் சொல்லிக்கொண்டனர். எனக்கு தெரிந்து அப்போது போலீசாக இருந்த ஒரு சிங்களவர், தாதியாக பணியாற்றிய ஒரு தமிழ்ப்பெண்ணை விரும்பி திருமணம் செய்திருந்தார். அவர் ஒருதடவை தன் குடும்பத்தை பார்த்து குடும்ப சொத்தில் தனது பாகத்தை பெற சென்றிருந்தார். ஆனால் அவர் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டார். அன்று போர் நடக்கும் போது, கோத்தா சொன்னார் என நினைக்கிறன். "தமிழ் இளைஞரின் உடல்கள் கடல் மீன்களுக்கு, பெண்கள் உடல் சிங்கள இளைஞருக்கு." போரிலும், திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள், பறிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வேலைவாய்ப்புகள், நிலங்கள், பெண்கள் வேறு வழியில்லாமல் இந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர் அல்லது அந்த நிலை வேண்டுமென்றே உருவாக்கப்படுகிறது. நாம் ஏதோ நல்ல மாற்றம் நிகழ்ந்து விட்டதாக நினைக்கிறோம். ஏன் சிங்கள தம்பதியினர் விவாகரத்து பெறவில்லையா? கள்ள தொடர்பு வைத்து காதலியையோ மனைவியையோ கொலை செய்யவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

டிபிக்கல் தமிழ் மனப்பான்மையைப் பற்றித் தான் இங்கே குறிப்பிடப்படுகிறது

அது எவ்வாறிருக்கின்றது என அறிய வேண்டுமெனில்

பார்க்க ..

மாதவன் நடித்த

Aap Jaisa Koi (2025)..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் முந்தியும் ஓடினது😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தப் படம் முந்தியும் ஓடினது😃

வருசாவருசம் பொங்கலுக்கு தீர்வு தீபாவளிக்கு தீர்வு என்று ஓடிய தீர்வு படத்தை விட

இந்த படம் கடும் படமாகவல்லவோ இருக்கு, மூண்டு வருசத்திற்கொரு தரம் ஓடுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இந்தப் படம் முந்தியும் ஓடினது😃

அப்ப கருத்து எழுதின ஆட்கள் வேறை, இப்ப கருத்து எழுதிற ஆட்கள் வேறை. எல்லோருடைய கருத்தையும் நாடி பிடித்துப் பார்க்க அரிய சந்தர்ப்பம். 😁😂

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவில் ஒரு ஆடியோ பதிவு லீக்காகி இருந்தது அதிலே ஒரு கணவன் தன் மனைவியை சீதனம் கேட்டு எவ்வாறு அடித்து கொடுமைப்படுத்துவேன் என்று தங்கையிடம் பேசும் பொழுது, அந்தத் தங்கை கணவனை பாராட்டி அவளுக்கு அப்படித்தான் இன்னும் அடிக்க வேண்டும் என்று செல்கிறார்.

இந்தியாவில் ஒரு நாளைக்கு பாலியல், வரதட்ஷனை, பெண்பிள்ளை பெற்றதால், கள்ளக்காதலால் இறக்கும் பெண்களின் பதியப்பட்ட தொகை அதிகரித்து வருகிறது. பதியப்படாமலேயே எவ்வளவோ இருக்கிறது. நேற்று ஒரு செய்தி; கர்நாடகாவில் தர்மசாலா எனும் இடத்தில் கொன்று புதைக்கப்பட்ட சிறு பெண்களின் உடல்கள் அறுநூறு அல்லது அதற்குமேல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு தேவஸ்தானத்தில் நடந்த படு பயங்கரம். மோடி எங்கு கைகூப்பி, யாரை வணங்குகிறாரோ, அங்கெல்லாம் பாலியல் துஸ்பிரயோகம், கொலை, புதைப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

வருசாவருசம் பொங்கலுக்கு தீர்வு தீபாவளிக்கு தீர்வு என்று ஓடிய தீர்வு படத்தை விட

இந்த படம் கடும் படமாகவல்லவோ இருக்கு, மூண்டு வருசத்திற்கொரு தரம் ஓடுது

இன்னும் மூன்று வருசத்ததாலை... 2028´ம் ஆண்டும் இந்தப் படம் ஓடும். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இந்தப் படம் முந்தியும் ஓடினது😃

தகவலுக்கு நன்றி. இந்த படம் பார்க்க தொடங்கி இருக்கிறேன் 😀 விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்பு நடிக்காததினால் அவரின் பழைய படம் ஒன்று வந்ததாம்

ரசோதரன் அண்ணா சொன்னது போல இலங்கையில் தமிழர்களின் திருமணங்கள் சகோதர மொழி பேசுபவர்களுடன் (இனி இப்படி தான் சொல்ல வேண்டுமாம் ) எதிர்காலத்தில் அதிகரிக்கும் ஆனால் சொந்த மொழி பேசும் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களுடன் நடைபெறவேபெறாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கும் சிங்களவருக்குமான கலப்பு பலகாலமாகவே இருந்துள்ளது, மரபணு ஆய்வறிக்கைகளும் அதையே கூறுகின்றன. இருவரும் பிறரது பின்புலத்தை மதித்து, விரும்பி செய்தால், இது நல்ல விடயமே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

எதிர்காலத்தில் அதிகரிக்கும் ஆனால் சொந்த மொழி பேசும் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களுடன் நடைபெறவேபெறாது.

எம்மதமும் சம்மதம் என இருப்பவருகளுக்கு பிரச்சனையில்லை, திருமணம் செய்ய நீ என் மதத்திற்கு மாறவேண்டும் என நினைப்பதாலயே இப்பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் @தமிழ் சிறி

தமிழ் - சிங்கள திருமணங்கள் புதிய விடயங்கள் இல்லை. நான் அறிந்தவரை ஒரு சிலவற்றில் முறிவு ஏற்பட்டாலும் பெரும்பாலான தம்பதிகள் வெற்றிகரமாக வாழ்ந்துள்ளார்கள், வாழ்கின்றார்கள்.

காவல்துறை பொறுப்பாளர் நடேசன் ஐயாவின் துணைவியாரும் பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர் என நினைக்கின்றேன்.

தமிழ் பெடியள் சிங்கள பெட்டைகளுக்கு பின்னால் எப்படி உருண்டு பிரண்டு திரிந்தார்கள் என யாராவது அனுபவப்பட்டவர்கள் கூறலாம்.

எனக்கு தெரிந்த ஒரு திருமண உறவு சில வருடங்களில் முறிந்தது. இங்கு பெண் தமிழ் ஆண் சிங்களம். முறிவுக்கான காரணம் அந்த ஆண் பார்ட்டி கை. அதாவது சோமபானம், சொகுசு, கொண்டாட்டம் என வாழும் பேர்வழி. பொறுப்பான ஆள் இல்லை என பெண் பிரிந்துவிட்டார்.

தமிழ் ஆண்களை மணம் முடித்த பல சிங்கள பெண்கள் பிறப்பில் தமிழாக பிறந்த பெண்களை விடவும் கோயில், கடவுள் பக்தி என அதிகம் ஐக்கியமானவர்களும் உண்டு. இவ்வாறே திருமணத்தின் பின் முழு சிங்கள பண்பாட்டில் மூழ்கிய தமிழ் பெண்களும் உண்டு.

வெளிநாடுகளுக்கு கல்விகற்கவும், புலம் பெயர்ந்தும் சென்ற தமிழர்கள் ஆண், பெண் வேறுபாடின்றி எல்லா சமூகத்தினுள்ளும் புகுந்து விளையாடுகின்றார்கள். இதில் பலரது திருமண உறவு வெற்றிகரமாகவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்கும் தென் கலிஃபோர்னியாவில் கடந்த பத்து வருடங்களில் நடந்த எம்மவர்களின் திருமணங்களில் மணமக்கள் இருவரும் தமிழர்களாக இருந்த ஒரு திருமணம் கூட நடக்கவில்லை என்று சமீபத்தில் ஒரு நண்பர் சொல்லியிருந்தார். உண்மை பொய் தெரியவில்லை, ஆனால் எனக்கு தெரிந்த சில திருமணங்கள் மாற்று வழிகளிலேயே நடந்திருக்கின்றன.

தாயகத்தில் இன்று இப்படி நடக்கின்றது என்றவுடன் எங்களில் பலர் அங்கலாய்க்கின்றார்கள் போல. உண்மையில் தாயகத்தில் இப்படி அதிகமாக நடக்கின்றது என்பதற்கு தரவுகள் ஏதாவது இருக்கின்றதா தெரியவில்லை. ஒருவரின் அபிப்பிராயமாகக் கூட இருக்கலாம்.

'திருமதி. பெரேரா' என்னும் அருமையான சிறுகதை ஒன்று உள்ளது. இஸுரு சாமர சோமவீர எழுதியது. தமிழ் மொழிபெயர்ப்பு அகழ் இதழில் வந்தது. @satan எழுதியிருந்த 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்பதை அங்கே பார்க்கலாம். ஆனால் இந்த சிறுகதை சொல்ல வந்த விடயம் அதுவல்ல...................

https://akazhonline.com/?p=2817

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் உறவுகளில், தெரிந்தவர்கள், ஊரவர்கள் என்கிற வட்டத்தில் கூட பலர் சிங்கள பெண்களை, ஆண்களை செய்து வாழ்ந்தும் கெட்டும் இருக்கிறார்கள். இங்கு களத்தில் கூட சிலர் இருக்கலாம். அதில் சிங்களத்துக்கு அநிஞாயத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களே அதிகம். யாருக்காவது வக்காலத்து வாங்கலாம், ஆனால் நீதிக்கு புறம்பாக, பாதிக்கப்பட்டவர்களை தாக்குவது சரியல்ல, வக்கிரம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2025 at 20:24, தமிழ் சிறி said:

குறிப்பிட்ட வயது வந்ததும், குறிப்பாக பல்கலைக்கழகம் வந்ததும் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளவே விரும்புகின்றார்கள். அங்கு புரோக்கர், சாதி, ஜாதகப் பொருத்தம் போன்றவை மிக குறைவாகவே செல்வாக்கு செலுத்துகிறது.

பல் கலைக்கழகத்தில் சில தமிழ் ஆண் மாணவர்கள் சிங்களம் கதைக்க தெரிந்தால் ஆய பல கலைகளையும் கற்று கழட்டிவிடுவது வழமை😇.

சிங்கள ஆண் பெண் மாணவர்களும் இதில் சளைத்தவர்களல்லா ஒரு சிலரை தவிர

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பெண்களில் சிலர் ஆக்கிரமிப்பாளர்களை மணமுடிப்பது புதிதல்ல. கிந்திய படை காலத்திலும் முடிச்சவை.. ஆங்கிலேயர் காலத்திலும் முடிச்சவை தானே...!

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2025 at 10:42, nedukkalapoovan said:

யாழ்ப்பாண பெண்களில் சிலர் ஆக்கிரமிப்பாளர்களை மணமுடிப்பது புதிதல்ல. கிந்திய படை காலத்திலும் முடிச்சவை.. ஆங்கிலேயர் காலத்திலும் முடிச்சவை தானே...!

வெளிநாடுகளில வெள்ளைகளை முடிச்சதை பற்றி வாய் தொறங்க துர

சிறி அண்ணை இந்த கலியாணம் கட்டுன தமிழ் ஆம்பிளைகளை சிங்களப்பிள்ளைகள் திரும்ப கல்யாணம் கட்டுமா கேட்டுச்சொல்லுங்க wea are waiting 😎😎😎😎

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாடுகளில வெள்ளைகளை முடிச்சதை பற்றி

வெள்ளைகாரர்கள் என்றால் உயர்வு தானே. பூட்ரினும் வெள்ளை நிறம்

சிங்களவர்கள் தமிழர் மாதிரி கறுப்பு எல்லோ

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாடுகளில வெள்ளைகளை முடிச்சதை பற்றி வாய் தொறங்க துர

சிறி அண்ணை இந்த கலியாணம் கட்டுன தமிழ் ஆம்பிளைகளை சிங்களப்பிள்ளைகள் திரும்ப கல்யாணம் கட்டுமா கேட்டுச்சொல்லுங்க wea are waiting 😎😎😎😎

இவருக்கு நாக்குல சனிபகவான் . ....... ஏதோ வீட்டில நேரத்துக்கு ஒரு வாய் கஞ்சி என்டாலும் கிடைக்குது , அதுக்கும் ஆள் உலை வைக்குது . ......! 😃

3 minutes ago, suvy said:

இவருக்கு நாக்குல சனிபகவான் . ....... ஏதோ வீட்டில நேரத்துக்கு ஒரு வாய் கஞ்சி என்டாலும் கிடைக்குது , அதுக்கும் ஆள் உலை வைக்குது . ......! 😃

ரீச்சர்.... வீட்டிலை இல்லைப் போலை இருக்கு. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.