Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

Published By: Vishnu

16 Aug, 2025 | 03:24 AM

image

ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு  அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் இராணுவத் தளத்தில் நடைபெற்றது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அலாஸ்கா வந்தடைந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அன்புடன் வரவேற்றார்.

மேலும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பேச்சுவார்த்தை நடைபெறும் எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் அமெரிக்க ராணுவ தளத்திற்கு ஒரே வாகனத்தில் புறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ராணுவ தளம் அமெரிக்காவிற்கு சொந்தமானது, மேலும் அமெரிக்க ரகசிய சேவை மற்றும் ரஷ்ய பாதுகாப்புப் படைகள் கூட்டாக டிரம்ப் மற்றும் புதின் சந்திப்புக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்கியுள்ளன.

வான்வெளி தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நகரம் முழுவதும் பொலிஸ் சோதனைச் சாவடிகள் மற்றும் சிறப்புத் தேடல் நடவடிக்கைகளும் செயல்பாட்டில் உள்ளன.

அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்களுக்கு இடையே ஒரு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தை 16ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:15 மணியளவில் நடைபெற்றது.

மேலும் இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Virakesari.lk
No image preview

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின...

US President Joe Biden and Russian President Vladimir Putin held a meeting at the Elmhurst-Richardson military base in Alaska to discuss ways to end the Russia-Ukraine war.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்திப்பு : பேசப்பட்ட முக்கிய விடயங்கள் என்ன ?

16 Aug, 2025 | 10:29 AM

image

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அமெரிக்காவின் அலஸ்காவிற்கு அழைத்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். 

சிறப்பு விமானத்தில் அலஸ்கா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செங்கம்பள வரவேற்பளித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

சந்திப்பு நடைபெற இருந்த இடத்திற்கு இருவரும் ஒரே காரில் பயணித்தனர்.

இருவரும் தனியே சந்திப்பார்கள் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்பிலும் தலா 3 அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

குறித்த கூட்டம் சுமார் 3 மணிநேரம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் புட்டின் ஆகியோர் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்தனர். 

அவர்கள் நின்று கருத்துதத் தெரிவித்த இடத்தின் பின்னணியில் சமாதானத்தை தொடர்தல் என்று எழுதப்பட்டு இருந்தது. 

முதலில் புட்டினை பேசுமாறு டிரம்ப் சைகை காட்டினார். அதன் படி, தனது பேச்சை ஆரம்பித்த புட்டின், டிரம்ப் உடனான சந்திப்பு தாமதமாக நடந்த ஒன்று என்று குறிப்பிட்டார். போர் மூண்டதற்கான முதன்மை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று புட்டின் தெரிவித்தார். அதாவது நேட்டோவில் உக்ரைன் இணைவது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு தேவை என்று புட்டின் வலியுறுத்தினார்.

எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் ஜனாதிபதியாக  இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது.

டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.

உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலாக உள்ளது. உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என டிரம்ப் கூறியதில் நான் உடன்படுகிறேன்.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என தெரிவித்தார்.

அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மொஸ்கோவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp_Image_2025-08-16_at_10.22.25_AM

https://www.virakesari.lk/article/222661

  • கருத்துக்கள உறவுகள்

532423929_1185527863612184_5862213579507

ஹா.... ஹா.... ஹா... அருமையான கருத்தோவியம். சொல்லி வேலையில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அலஸ்கா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செங்கம்பள வரவேற்பளித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

சந்திப்பு நடைபெற இருந்த இடத்திற்கு இருவரும் ஒரே காரில் பயணித்தனர்.

ஒரு யுத்த குற்றவாளியான விளாடிமிர் புடினுக்கு கவுரவம் கொடுப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி இந்த சந்திப்பை நடத்தினார். இவரை எல்லாம் ஜனாதிபதியாக தேர்ந்து எடுத்த அமெரிக்க மக்கள் 😭

  • கருத்துக்கள உறவுகள்

அலஸ்காவில் நடந்த மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் பூட்டினே திரும்பி செல் go home போகும் போது டிரம்பையும் கூட்டி கொண்டு போ என்றது மிக சரியானது 👌

  • கருத்துக்கள உறவுகள்

534855864_1213881094088080_8634285972068

515492102_1213874920755364_1085404219128

534188793_1213881020754754_3215861561945

534802843_1213881147421408_2004642982711

533205717_1213874967422026_5973978710201

533219071_1213881014088088_5977721291976

532987335_1213881100754746_4232491799238

533074724_1213881074088082_5455075562599

🔴 “No deel but progress has been made” யுக்ரைன் மீதான யுத்தம் குறித்தான அலஸ்கா பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு பேசும்போது “ஒப்பந்தங்கள் எதுவும் செய்துக்கொள்ளப்படவில்லை ஆனால் முன்னேற்றம் ஏற்பட்டது” என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.
6 வருடங்களின் பின்னர் இந்த வரலாற்று சந்திப்பு அமெரிக்க - ரஷ்ய ஜனாதிபதிகளிடையே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Vaanam.lk

  • கருத்துக்கள உறவுகள்

534163926_839342238773980_12734262405718

"போர் முடிவது செலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது"

உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு வருவது ஜெலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

உக்ரைனில் அமைதியை கொண்டுவர விரும்புவதாக புதின் கூறியிருந்த நிலையில், டிரம்ப் கருத்து.

Thanthi TV 

ஆஹா... பந்து இப்ப, செலென்ஸ்கியின் கையில். 😂

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியும் ஜேஆர் ஜயவர்தனவும் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு எடுக்க கூடுகிறார்கள்.☹️

  • கருத்துக்கள உறவுகள்

MediaFile-1-3.jpeg?resize=750%2C375&ssl=

ரஷ்ய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையில் இணக்கப்பாடின்றி முடிவடைந்த பேச்சுவார்த்தை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போரை நிறுத்துவதற்காக இச் சந்திப்பு அலாஸ்காவின் ஆங்கரேஜிலுள்ள எல்ம்ஹர்ஸ்ட் – ரிச்சர்ட்சன் கூட்டு இராணுவ தளத்தில் இடம்பெற்றிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது இரு உலக வல்லரசுகளும் சுமார் 3 மணி நேரம் கலந்துரையாடியிருந்த நிலையில் எவ்வித உடன்படிக்கைகளும் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எந்த பொது அறிக்கையையும் இரண்டு நாடுகளும் வெளியிடவில்லை.

இதேவேளை, இந்த முக்கியமான சந்திப்புக்குப் பின்னர் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை முன்னதாக அறிவித்திருந்த போதிலும், இரண்டு ஜனாதிபதிகளும் எவ்வித அறிவிப்புகளை வௌியிடாமல் வௌியேறியிருந்தனர்.

எவ்வாறாயினும் இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன் இந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், உக்ரைன் ஜனாதிபதியும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஐரோப்பிய தலைவர்களும் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு தமது வலுவான ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/inputtools/try/

  • கருத்துக்கள உறவுகள்

உலக நீதிமன்றத்தின் தீர்ப்பு??????????😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

உலக நீதிமன்றத்தின் தீர்ப்பு??????????😁

அமெரிக்காவில் போர் குற்றவாளிக்கு செங்கம்பள வரவேற்பு !!!!!!!!!!!!! ☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

உலக நீதிமன்றத்தின் தீர்ப்பு??????????😁

ஐயா, இந்த அநீதியான உலகிலே அப்படியொன்று இருக்கிறதா? உலக நீதிமன்று 77ஆண்டுகளாக அழிக்கப்பட்டுவரும் தமிழினத்துக்கான நீதியைத் தருமா? போர் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளாக நீதியைக் காணவில்லை. கேட்டால் சிறிலங்காவின் சிங்கள அரசுகள் கட்டிவைத்துள்ளதாகச் சாட்டு. பலஸ்தீனர்கள் பேரழிவுக்குள்ளாகி வருகிறார்கள். உலக நீதிமன்றை அங்கேயும் காணவில்லை. ஓரச்சுலகுக்கான போரில் மேற்கும் ரஸ்யாவும் உக்ரைனூடாக மோதுகின்றன.(யாழில் பலரும் சுட்டியதே) உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கியின் கையில் எதுவுமில்லை. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் கைகளிலேயே உள்ளன.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

534163926_839342238773980_12734262405718

"போர் முடிவது செலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது"

உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு வருவது ஜெலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

உக்ரைனில் அமைதியை கொண்டுவர விரும்புவதாக புதின் கூறியிருந்த நிலையில், டிரம்ப் கருத்து.

Thanthi TV 

ஆஹா... பந்து இப்ப, செலென்ஸ்கியின் கையில். 😂

அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஆயுதங்களை கொடுத்து உசுப்பேற்றாவிட்டால் உக்ரேன் வழிக்கு வரும்.

இவ்வளவு காலம் உக்ரேனா சண்டை பிடித்தது?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஆயுதங்களை கொடுத்து உசுப்பேற்றாவிட்டால் உக்ரேன் வழிக்கு வரும்.

இவ்வளவு காலம் உக்ரேனா சண்டை பிடித்தது?

ஆம் உக்ரைன் தான் சண்டை பிடிக்கிறது பிடிக்கும். ஆனால் உக்ரைனில் அழிவை வேண்டும் என்றால் அமெரிக்கா ஐரோப்பா ஆயுதங்கள் குறைத்து இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஆம் உக்ரைன் தான் சண்டை பிடிக்கிறது பிடிக்கும். ஆனால் உக்ரைனில் அழிவை வேண்டும் என்றால் அமெரிக்கா ஐரோப்பா ஆயுதங்கள் குறைத்து இருக்கலாம்.

சும்மா இருந்த உக்கிரேனை ரசியாவுக்கு பாடம்புகட்டப் போய் ஆப்பிழுத்த குரங்கு மாதிரி ஆகியது அமெரிக்காவும் ஐரோப்பாவுமே.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

சும்மா இருந்த உக்கிரேனை ரசியாவுக்கு பாடம்புகட்டப் போய் ஆப்பிழுத்த குரங்கு மாதிரி ஆகியது அமெரிக்காவும் ஐரோப்பாவுமே.

போரின் ஆரம்பத்திலேயே… உக்ரைனுக்கு ஆப்பு அடிக்கப் போகிறார்கள் என்று, ஒரு சில யாழ் கள உறுப்பினர்கள் தீர்க்கதரிசனமாக முற்கூட்டியே கூறியதையும் பொருட்படுத்தாமல், உக்ரேனுக்கு கொம்பு சீவி விட்டவர்கள் இப்போ… எந்த பதுங்கு குழிக்குள் இருக்கின்றார்கள் என தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சும்மா இருந்த உக்கிரேனை ரசியாவுக்கு பாடம்புகட்டப் போய் ஆப்பிழுத்த குரங்கு மாதிரி ஆகியது அமெரிக்காவும் ஐரோப்பாவுமே.

தவறான கருத்து அண்ணா. தமது நிலத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைன் மக்களை நாமே இவ்வாறு ஏளனப்படுத்துதல் மிக மிக தவறாகும்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

ஆம் உக்ரைன் தான் சண்டை பிடிக்கிறது பிடிக்கும்.

ஓம் உக்ரைன் தான் மூன்று நாட்களில் ரஷ்யாவை ஆக்கிரமித்துவிடலாம் என்று நம்பி தான் 24 பெப்ருவரி 2022 யுத்தத்தை ஆரம்பித்தது. ஆனால் இன்றுவரை அது ரஷ்யாவை ஆக்கிரமிக்க முடியவில்லை ஆகையால் தொடர்ந்தும் சண்டை பிடிக்கிறது பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு கூறியது போல பலஸ்தீன மேற்கு கரை போன்ற இராணுவ மற்றும் பொருளாதார அதிகாரம் மட்டும் இரஸ்சியா கொண்ட ஆனால் கிரிமியா உள்ளடங்கலாக இரஸ்சியா ஆக்கிரமித்த பகுதிகள் உக்கிரேன் நிலப்பரப்பு போன்ற தீர்வு திட்டம் போல ஒரு அமைதி தீர்வு எட்டப்படுவதற்கான சாத்தியகூறுகள் இல்லை என கருதுகிறேன்.

சில இடங்களை தற்போது ஆக்கிரமித்துள்ள பகுதிகளுக்கு பதிலாக வழங்கப்படலாம் என கருதுகிறேன், சுமி உள்ளடங்கலாக வட போர் முனையில் கைப்ப்பற்றப்பட்ட பகுதிகள் அதற்காக பயன்படுத்தப்படாலாம் என கூறுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தொடர்ந்தும் அதிகளவில் உக்கிரேனிற்கு இராணுவ உதவி வழங்கவுள்ளதாக கூறியுள்ளன அத்துடன் இரஸ்சியாவின் மீது அதிக பொருளாதார தடையினை இடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது, செலன்ஸ்கி அதிக பொருளாதார தடையினை வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் புட்டினுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம், சில ஐரோப்பிய நாடுகளுடனும் பின்னர் செலன்ஸ்கியுடனும் தொலைபேசியில் உரையாடியதாக கூறியுள்ளார், திங்கள் கிழமை செலன்ஸ்கியுடன் சந்திப்பு நிகழ்த்த முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

ட்ரம்ப் அதிகார படிநிலையினை சுட்டிக்காட்டுகிறார் என மேற்குறித்த தொலை தொடர்பு உரையாடல் பற்றி பேசப்படுகிறது, இதனிடையே செலன்ஸ்கியின் உடல் நிலை தொடர்பில் இணையத்தில் தேவையற்ற வதந்திகள் வெளிவந்த வண்ணமுள்ள நிலையில் திங்கள் கிழமை சந்திப்பு நிகழவுள்ளது.

இங்கிலாந்து தனது படையினை உக்கிரேனுக்கு அனுப்புவதாக தொடர்ச்சியாக கூறப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறான எந்த நிகழ்வும் நிகழவில்லை, போர் நிறுத்தத்தினை உடைத்து தொடர் போரை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான உயிரிழப்பிற்கு காரணமான இங்கிலாந்து தனது படையினை அனுப்புவதாக தொடர்ந்து பேச்சளவிலேயே கூறிவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vaasi said:

அமெரிக்காவில் போர் குற்றவாளிக்கு செங்கம்பள வரவேற்பு !!!!!!!!!!!!! ☹️

அமெரிக்காவில் போர் குற்றவாளி புட்டினுக்கு கொடுக்கபட்ட செங்கம்பள வரவேற்பை ரஷ்யாவின் சட்டவிரோதமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை டொனால்ட் ரம்ப் உருவாக்குகிறார் என்று கனடா பிரதமர் கார்னி பாராட்டி இருக்கின்றாராம் ☹️

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது தமிழ் யுரியுப்பர்கள் பாணியை அப்படியே சர்வதேச ஊடகங்களும் பின்பற்றி கடந்த வராரத்தில் இருந்து ரம்பின் அலாஸ்கா நாடகம் பற்றி செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தன ரம்பின் அதிரடி யுத்த நிறுத்தம் புடின் ஒப்பு கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் ரம்பின் கடும் எச்சரிக்கை

கடைசியில் எதுவுமே நடைபெறவில்லை உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரை புடின் தொடர்ந்து நடத்துகின்றார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, விசுகு said:

ராஜீவ் காந்தியும் ஜேஆர் ஜயவர்தனவும் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு எடுக்க கூடுகிறார்கள்.☹️

ஈழத்தமிழர் பிரச்சனையை.....உலகில் உள்ள எல்லா ஆக்கிரமிப்பு பிரச்சனைகளுடனும் ஒப்பிட நினைப்பதால் தான் நாம் இன்னும் ஒரு படி கூட நகர முடியாமல் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

போரின் ஆரம்பத்திலேயே… உக்ரைனுக்கு ஆப்பு அடிக்கப் போகிறார்கள் என்று, ஒரு சில யாழ் கள உறுப்பினர்கள் தீர்க்கதரிசனமாக முற்கூட்டியே கூறியதையும் பொருட்படுத்தாமல், உக்ரேனுக்கு கொம்பு சீவி விட்டவர்கள் இப்போ… எந்த பதுங்கு குழிக்குள் இருக்கின்றார்கள் என தெரியவில்லை.

ஐரோப்பிய மண்ணில் ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்காவும் தயாரில்லை என்பதை நாங்கள் அன்றே உணர்ந்தவர்கள்.

கெடு குடி சொல் கேளாது என்பதற்கமைய..... இன்னும் வரும் 😎

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் தங்கள் காரியத்தை சாதித்து கொண்டனர் . உலகிற்கு படங் காட்டினார் . இவளவு செலவும் யாருடைய ...பணம் ? வருந்தி உழைக்கும் ஒருவரின் வரிப்பணம் .

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள்கிழமை ட்ரம்ப் செலன்ஸ்கி சந்திப்பில் புதிய திருப்பமாக ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உக்கிரேன் இராணுவநிலை உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்ந்லையினை அடிப்படையாக கொண்டு ஒரு போர் நிறுத்தம் மட்டும் எட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முயலக்கூடும், அதன் மூலம் உக்கிரேன் படையினை வலுப்படுத்த தேவையான ஒரு கால அவகாசத்தினை பெறுவதனை நோக்கமாகக்கொண்டு பேச்சுவார்த்தையின் போக்கினை நிரந்தர தீர்வு நோக்கி நகர்வில்லாமல் ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தினை ஏற்படுத்தல்.

இந்த விட்யத்திற்கு இரஸ்சியா உடன்படாது ஆனால் அமெரிக்க அரசிற்கு இரஸ்சியாவினை உடன்பட வைப்பதற்காக பொருளாதார அழுத்தம் ஏற்படுத்தலாம் எனும் விடயத்தினை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விற்க முனையலாம்.

ஆனால் ட்ரம்பின் ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான அண்மைய ஒப்பந்தத்தில் தனது மேலாண்மையினை காட்டியுள்ளார், இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க எந்தளவிற்கு நலனை பெறும் என்பதனடிப்படையிலேயே பேச்சுவார்த்தையின் போக்கு அமைந்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத்துறை பெருமளவில் அரிய மூலப்பொருளில் தங்கியுள்ள நிலையில், சீனாவுடனான வர்த்தக வரிப்போரில் பின்வாங்குவது போல இரஸ்சியாவிற்கு சாதகமான முடிவையே அமெரிக்கா எடுக்கும் என கருதுகிறேன்.

F-35 ஏறத்தாழ 900 பவுண்ட் அரிய கனிமங்களையும், வெர்ஜினியா தர நீர்மூழ்கிகள் ஏறத்தாழ 10000 பவுண்ட் அரிய கனிமங்களின் பங்களிப்பில் தங்கியுள்ள நிலையில் அமெரிக்கா இரஸ்சிய சார்பு நிலை எடுக்க வாய்ப்புக்கள் இருக்கலாம், ஆனால் இரஸ்சியாவிடம் சீனாவினை போல அரிய கனிமங்கள் இல்லை.

போர் முடிவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, உக்கிரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும், செலன்ஸ்கியிற்கும் தனிப்பட்ட உத்தரவாதத்தினை மேற்கு நாடுகள் வழங்கவேண்டும்.

இறுதியாக பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களை பலிகொண்ட போர் முடிவிற்கு வரவுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.