Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

யாழ்ப்பாணத்தில் இன்று (01) பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சத்தீவுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி இதன்போது கச்சத்தீவில் கண்காணிப்பு விஜயத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அத்மிரல் புத்திக லியனகே உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.

https://adaderanatamil.lk/news/cmf1be60u005qqplpqv1px4ae

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி கச்சதீவிற்கு விஜயம்

Published By: Vishnu

01 Sep, 2025 | 09:56 PM

image

யாழ்ப்பாணத்திற்கு 1ஆம் திகதி திங்கட்கிழமை காலை வந்தடைந்த ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க, மாலை வேளையில் கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

வடக்கு பிராந்தியத்தில் இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த ஜனாதிபதி, திங்கட்கிழமை (1) மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையிலிருந்து 4 படகுகளில் கச்சதீவுக்கு பயணமானார்.

குறித்த இடத்திற்கு சென்ற பின் அங்கு பல பகுதிகளைப் பார்வையிட்டார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அங்கு உள்ள பொது மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அதேவேளை, மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி விசாரித்து கேட்டறிந்துகொண்டார்.

ஜனாதிபதி விஜயத்தின் போது, கச்சதீவின் இயற்கை அழகையும், மீனவர் சமூக வாழ்வையும் அவர் நேரடியாகக் கண்டறிந்தார். மேலும், கச்சதீவு தொடர்பான எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் அவர் ஆராய்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-09-01_at_21.35.52_c2

WhatsApp_Image_2025-09-01_at_21.35.51_d9

WhatsApp_Image_2025-09-01_at_21.35.51_5e

WhatsApp_Image_2025-09-01_at_21.35.50_c6

WhatsApp_Image_2025-09-01_at_21.35.49_35

2.jpg

3.jpg

1.jpg

https://www.virakesari.lk/article/223973

நான் நினைக்கிறேன் கச்சத்தீவுக்கு சென்ற முதல் சனாதிபதி அனுர தான் என்று. இதற்கு முதல் எந்த சனாதிபதியாவது கச்சதீவுக்கு சென்றிருக்கின்றனா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

நான் நினைக்கிறேன் கச்சத்தீவுக்கு சென்ற முதல் சனாதிபதி அனுர தான் என்று. இதற்கு முதல் எந்த சனாதிபதியாவது கச்சதீவுக்கு சென்றிருக்கின்றனா?

கச்சதீவை தங்களுக்கு தரும்படி... ஈழத்தின் மருமகன் விஜய் கேட்கின்றார். இப்ப என்ன செய்யிறது. 😂

vijay-2.jpg?resize=642%2C375&ssl=1

கச்சதீவினை மீட்டு தருமாறு பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் கோரிக்கை!

  • கருத்துக்கள உறவுகள்

541788209_122148261032774029_90891311067

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

கச்சதீவை தங்களுக்கு தரும்படி... ஈழத்தின் மருமகன் விஜய் கேட்கின்றார். இப்ப என்ன செய்யிறது. 😂

4 hours ago, தமிழ் சிறி said:

கச்சதீவினை மீட்டு தருமாறு பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் கோரிக்கை!

செம்மணிக்கு ஜனாதிபதி போகக்கூடாது என்று இளையதளபதி விஜய் சொன்னால் சிலவேளை இந்தா போய்க்காட்டுறன் எண்டு போயிருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

செம்மணிக்கு ஜனாதிபதி போகக்கூடாது என்று இளையதளபதி விஜய் சொன்னால் சிலவேளை இந்தா போய்க்காட்டுறன் எண்டு போயிருப்பாரோ?

இது முதலே தெரிந்திருந்தால்... இளைய தளபதியிடம் சொல்லி ஒரு அறிக்கை விடச் சொல்லி இருக்கலாம். 😂

தமிழக கடல்வள கொள்ளையர்கள் எல்லை தாண்டி வந்து எம் வளங்களை கொள்ளை அடிப்பதை நிறுத்த சொல்லாமல், கச்சதீவை மீட்டால் பிரச்சனை தீரும் என்று தமிழக அரசியல்வாதிகள் ஸ்டாலினில் இருந்து சீமான் தொட்டு விஜய் வரைக்கும் கச்சதீவை மீட்க சொல்லி செய்யும் பம்மாத்து போலி அரசியலுக்கு அனுர தக்க பதிலை கொடுத்து இருக்கின்றார். கண்டிப்பாக இது தமிழக அரசியல்வாதிகளுக்கு வெறுப்பை தரும் விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இது முதலே தெரிந்திருந்தால்... இளைய தளபதியிடம் சொல்லி ஒரு அறிக்கை விடச் சொல்லி இருக்கலாம். 😂

விஜய் தான் அனுரவுக்கு போட்டி ..கூப்பிடுங்க நம்ம வீட்டு மருமகனை ....

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை காலமும் கச்சதீவை பாவத்திற்கு இரங்கி இந்தியா கொடுத்ததாகவே எண்ணியிருந்தேன்.

அண்மையில் ஒரு காணொளியை பார்த்த போதே

கச்சதீவு இலங்கைக்கே உரித்தானது.

இந்தியா தம்வசப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.

இந்தக் காணொளி மிகவும் பிரயோசமாகவும் இருந்தது.

இந்தக் காணொளியில் இன்னுமொரு நெருடல் என்னவென்றால்

படித்து பல நாடுகளிலும் அமைதிக்காக வேலை செய்த ஒருவர்

மீன்பிடி பிரச்சனையை இருநாட்டு மீனவர்களும் பேசி

அவர்கள் இரண்டு நாட்களுக்கும் இவர்கள் இரண்டு நாட்களுக்கும்

மீன் பிடிக்க ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்கிறார்.

எப்படியான ஒரு மாங்காய்மடையன் ஐக்கிய நாடுகள் சபைக்கு வேலை செய்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்றில் முதல் ஜனாதிபதியாக கச்சைதீவுக்குள் நேற்று கால்வைத்தார் அநுர!

இந்தியாவுக்கான மறைமுக எச்சரிக்கையா?

கச்சைதீவு தொடர்பில் தமிழகத்தில் அண்மைக்காலமாகப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றுமாலை கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டார். நிகழ்ச்சி நிரலில் இல்லாத, திடீர்ப் பயணமாக இது அமைந்தது.

தமிழகத்தில் எதிர்வரும் வருடத்தின் இரண்டாவது காலாண்டில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் தமது பிரதான தேர்தல் பரப்புரைக்களமாக கச்சதீவைப் பயன்படுத்தி வருகின்றன. கச்சதீவை இலங்கையில் இருந்து மீட்டு, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பதாகவே பல்வேறு கட்சிகளும் வலியுறுத்திவரும் நிலையில், ஜனாதிபதி அநுர கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளமை இராஜதந்திர வட்டாரங்களில் மிகவும் முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகின்றது.


கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர். 'கச்சதீவு இலங்கைக்குரியது. அதை இந்தியாவிடம் ஒப்படைக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை. இந்த விடயம் தொடர்பில் இராஜதந்திரிகள் எவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழகத் தலைவர்கள் மேற்கொள்ளும் பரப்புரைகளைக் கண்டுகொள்ளத் தேவையில்லை' என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். அதை நிரூபிக்கும் வகையிலேயே அநுரவின் நேற்றைய பயணம் அமைந்திருந்ததாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை வரலாற்றில் முதல் ஜனாதிபதியாக கச்சைதீவுக்குள் நேற்று கால்வைத்தார் அநுர!

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_8991.jpeg.45670eae89fb323c1b3b

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின் சீமான் விஜய் இணைந்து ஒரு சர்வகட்சி மகாநாட்டை கூட்ட வேண்டியது தான்.

7 hours ago, ஈழப்பிரியன் said:

மீன்பிடி பிரச்சனையை இருநாட்டு மீனவர்களும் பேசி

அவர்கள் இரண்டு நாட்களுக்கும் இவர்கள் இரண்டு நாட்களுக்கும்

மீன் பிடிக்க ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்கிறார்.

எப்படியான ஒரு மாங்காய்மடையன் ஐக்கிய நாடுகள் சபைக்கு வேலை செய்திருப்பார்.

அவர் உண்மையிலே சொல்ல வந்தது இலங்கை மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்கட்டும் பின்பு இரண்டு நாட்களுக்கு இந்திய மீனவர்கள் அங்கே வந்து களவு எடுக்க அனுமதிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

45ace702-82c9-4bd1-9bb0-04d4e76a40c9.jpg

கச்சத்தீவு குறித்த ஜனாதிபதியின் கருத்துக்கு இந்திய அரசியல்வாதிகள் கண்டனம்!

கச்சத்தீவு குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

நேற்று முன்தினம் கச்சத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கச்சத்தீவு இலங்கைக்கு உரியது எனவும், அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

3117f58b-c667-48f4-869c-fec940abcecf.jpg?resize=600%2C338&ssl=1

45ace702-82c9-4bd1-9bb0-04d4e76a40c9.jpg?resize=600%2C310&ssl=1

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  தெரிவித்த இக் கருத்தானது இந்திய அரசியல் அரங்கில் பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்திய அரசியல் கட்சிகள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளன.

471d926f-49f3-45e4-8d2f-144150dc4d9b.jpg?resize=600%2C342&ssl=1

அந்தவகையில் கச்சத்தீவு குறித்த இலங்கை  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்து, இரு நாட்டு உறவுக்கு விரோதமானது எனவும் இந்த விடயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா்.

1374873.jpg?resize=600%2C337&ssl=1

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கச்சத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். 

இதைத் தொடா்ந்து கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளாா். அனுரகுமார திசாநாயக்கவின் இந்தப் பேச்சு இந்தியா – இலங்கை நல்லுறவுக்கு வலு சேர்க்காது.

இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டும் செயலாக அவரது பேச்சு அமைந்துள்ளது.

கச்சத்தீவு மற்றும் தமிழக கடற்றொழிலாளர்கள் குறித்த அவரது அணுகுமுறை தமிழக கடற்றொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது என்பதை மத்திய அரசின் வெளியுறவு அமைச்சு கருத்திற்கொள்ள வேண்டும்.

தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கச்சத்தீவு மீட்கப்பட்டு இந்தியாவின் கடல் பரப்பியல் எல்லை உரிமையை நிலைநாட்டவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகனும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

1983530-22.webp?resize=600%2C360&ssl=1

கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கை ஜனாதிபதியின் பேச்சு தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமைக்கும், மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நேரடியாகச் சவால்விடும் அகந்தை மிகுந்தப் பேச்சாகும் எனவும்,  கச்சத்தீவு தமிழர்களின் உரிமை நிலம் எனவும்,  இலங்கை ஜனாதிபதியின் பேச்சுக்கு மத்திய அரசும், அமைச்சர்களும் மௌனம் சாதிப்பது வரலாற்றின் பெரும் துரோகம் எனவும்,  எனவே, கச்சத் தீவை மீட்டெடுக்க சட்ட, அரசியல் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும்,  இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்துவோம்” எனவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1445837

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி முதன் முறையாக 'கச்சத்தீவு' செல்ல விஜய் பேச்சு காரணமா? முழு பின்னணி

கச்சத்தீவு, இந்தியா - இலங்கை, தமிழ்நாடு அரசியல், விஜய் பேச்சு, தவெக மாநாடு

பட மூலாதாரம், PMD SRI LANKA

3 செப்டெம்பர் 2025, 07:41 GMT

புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

''எமது கடற்றொழிலாளர்களுக்கு மிக முக்கியமான இடமாக கச்சத்தீவு காணப்படுகின்றது. இந்த கச்சத்தீவை கேந்திரப்படுத்தி இன்று பாரிய கலந்துரையாடலொன்று எழுந்துள்ளது. இந்த கடல் எமது மக்களுக்கானது. எமது தீவுகள் எமது மக்களுக்கானது. எமது நிலப்பரப்பு எமது மக்களுக்கானது. எமது வானம் எமது மக்களுக்கானது. எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிப்பணிய மாட்டோம் என சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.'' என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, மயிலிட்டி மீனவத்துறை முகத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடந்த முதலாம் தேதி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி கச்சத்தீவு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

கச்சத்தீவு பற்றி தவெக மாநாட்டில் அதன் தலைவர் விஜயின் பேச்சு இலங்கையில் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் சிங்களம் மற்றும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி இலங்கை அரசியல் மட்டத்திலும் அது விவாதிக்கப்பட, வரலாற்றில் முதன் முறையாக இலங்கை ஜனாதிபதி ஒருவர் கச்சத்தீவுக்கு விஜயம் செய்த நிகழ்வும் அரங்கேறியது.

கச்சத்தீவு குறித்து விஜய் என்ன பேசினார்? அதன் எதிரொலியாக இலங்கையில் என்ன நடந்தது?

கச்சத்தீவு, இந்தியா - இலங்கை, தமிழ்நாடு அரசியல், விஜய் பேச்சு, தவெக மாநாடு

பட மூலாதாரம், TVK

கச்சத்தீவு பற்றி விஜய் பேசியது என்ன?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டில் கச்சத்தீவு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

''எம்ம தமிழ்நாட்டு மீனவர்கள் கிட்டத்தட்ட 800 பேருக்கு மேல இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். அதை கண்டிக்க எதையும் செய்ய சொல்லவில்லை. சின்னதா ஒன்னே ஒன்று மட்டும் செய்து கொடுங்க. இனிமேலாவது எங்களுடைய மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த கச்சத்தீவை இலங்கைகிட்ட இருந்து மீட்டு கொடுத்துருங்க. அது போதும்.'' என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்திருந்தார்.

கச்சத்தீவு, இந்தியா - இலங்கை, தமிழ்நாடு அரசியல், விஜய் பேச்சு, தவெக மாநாடு

விஜய் பேச்சுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பதில்

கச்சத்தீவு தொடர்பில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட கருத்து இலங்கை மக்கள் மத்தியில் பல்வேறு கருத்தாடல்களை ஏற்படுத்தியிருந்தது.

தமிழர்கள் மாத்திரமன்றி, சிங்களவர்கள் மத்தியிலும் பிரபலமான விஜய், இவ்வாறு கருத்து வெளியிட்டமை இலங்கையில் பலத்த விவாதத்தை தோற்றுவித்திருந்தது.

இந்த நிலையில், விஜயின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள், வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்திடம், கேள்வி எழுப்பியிருந்தனர். இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் வழங்க முடியாது என வெளிவிகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த மாதம் 27-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

'கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான ஒரு தீவு. அது எந்த விதத்திலும் மாறாது. தென் இந்தியாவில் தேர்தல் காலம் என்பதனால் வாக்குகளை பெறுவதற்காக ஒவ்வொரு கருத்துகளை கூறுவார்கள். இது முதலாவது சந்தர்ப்பம் இல்லை. இதுக்கு முன்னரும் தேர்தல் மேடைகளில் இவ்வாறு கூறி இருந்தார்கள். இந்த தேர்தல் மேடைகளில் கூறுவது நிறைவேறாது. தேர்தல் மேடையில் விஜய் கூறியதை நானும் பார்த்தேன். அதை பெரிதுபடுத்த தேவை இல்லை. மத்திய அரசாங்கம் அல்லது இராஜதந்திர ரீதியில் இவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை. அன்றும் இன்றும் என்றும் கச்சத்தீவு இலங்கை வசமே காணப்படும்.' என இலங்கை வெளிவிகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

கச்சத்தீவு, இந்தியா - இலங்கை, தமிழ்நாடு அரசியல், விஜய் பேச்சு, தவெக மாநாடு

பட மூலாதாரம், PMD SRI LANKA

கச்சத்தீவு சென்ற இலங்கை ஜனாதிபதி

இதன் பின்னணியில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அது தொடர்பில் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தை வெளியிட்டிருந்தார். கச்சத்தீவு குறித்து கருத்து வெளியிட்டது மாத்திரமன்றி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கச்சத்தீவுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கச்சத்தீவுக்கு அரசத் தலைவர் ஒருவர் விஜயம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கிருந்து கடற்படைக்கு சொந்தமான படகில் கச்சத்தீவுக்கு சென்று கச்சத்தீவு தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.

கச்சத்தீவு விஜயத்தில் ஜனாதிபதி சொல்ல வருவது என்ன?

கச்சத்தீவு விஜயத்தின் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க என்ன சொல்ல வருகின்றார் என்பது தொடர்பில் மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜாவிடம், பிபிசி தமிழ் வினவியது.

''கச்சத்தீவு தொடர்பில் இந்திய அரசியல்வாதிகள் அல்லது தமிழக அரசியல்வாதிகள் என்ன தான் சொன்னாலும், அவர்களின் கோரிக்கை எந்த வகையிலும் நிறைவேற்றப்பட மாட்டாது என்பதை தான் அவர் நேரடியாகவே சொல்ல வருகின்றார். தானே அந்த இடத்திற்கு சென்று தானே விஜயம் செய்து, அது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதை அவர் நிரூபிக்க முயல்கின்றார். அங்கு சென்றமையின் ஊடாக பாதுகாப்பு உறுதிப்படுத்தலையும், கச்சத்தீவு எங்களுக்கு தான் சொந்தம் என்பதையும், அது எங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது என்பதையும் நாங்கள் நினைத்த நேரம் செல்லலாம் என்ற கருத்தையும் கூறும் வகையிலேயே அவர் அங்கு சென்றார். '' என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

"மீனவப் பிரச்னைக்கு கச்சத்தீவை மீள பெற்று விட்டால் தீர்வு வரும் என்று தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் நினைக்கின்றார்கள். ஆனால், அதை இவர் விட்டுக் கொடுக்கமாட்டார். தானே அதை கையாளுகின்றேன் என்ற செய்தியை சொல்கின்றார். அரசாங்கம் அமைதியாக இருக்கின்றது என்று நினைக்கின்றார்கள். அரசாங்கம் அமைதியாக இல்லை. அரசாங்கம் நேரடியாகவே இதை கண்காணித்து கொண்டிருக்கின்றது என்ற செய்தியை தான் இவர் சொல்கின்றார்.'' எனவும் அவர் கூறுகின்றார்.

கச்சத்தீவு, இந்தியா - இலங்கை, தமிழ்நாடு அரசியல், விஜய் பேச்சு, தவெக மாநாடு

பட மூலாதாரம், SIVARAJA

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா

விஜயின் பேச்சு எவ்வாறு தாக்கம் செலுத்தியுள்ளது?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கச்சத்தீவு தொடர்பில் வெளியிட்ட கருத்து இலங்கை அரசியலில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார்.

''ஸ்டாலினை பொறுத்தவரையில் அவர் அடிக்கடி கச்சத்தீவு தொடர்பில் கருத்து வெளியிட்டு வருகின்றார். அதேபோன்று தான எடப்பாடி பழனிசாமியும் கருத்து வெளியிடுகின்றார். ஆனால் விஜயை பொறுத்தவரையில் அவர் கூறிய கருத்து இளைஞர்கள் மத்தியில் சிந்தனையை தூண்டியுள்ளதாக இலங்கை அரசாங்கம் கருதுகின்றது. விஜய்க்கு இந்தியாவில் எவ்வளவு ஆதரவு இருக்கின்றதோ? அதேபோன்று இலங்கையின் தமிழ், சிங்கள இளைஞர்கள் மத்தியிலும் பெருமளவான ஆதரவு இருக்கின்றது. ஆகவே, விஜயின் அந்த கருத்து வலுவாக எடுபடும் என அரசாங்கம் நம்புகின்றது. இந்த பிரச்னைக்கு விரைவாக முற்றுப் புள்ளி வைக்கலாம் என இலங்கை அரசாங்கம் எண்ணியுள்ளது.'' எனவும் அவர் குறிப்பிட்டார்.

கச்சத்தீவு, இந்தியா - இலங்கை, தமிழ்நாடு அரசியல், விஜய் பேச்சு, தவெக மாநாடு

பட மூலாதாரம், PMD SRI LANKA

ஜனாதிபதியின் கச்சத்தீவு விஜயம் - அரசாங்கம் என்ன சொல்கின்றது?

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் இந்த விஜயம் அமைந்திருந்ததாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாக அவரது ஊடக செயலாளர் க.கிருஷாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் மற்றும் அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து சுற்றுலா திட்டமொன்றை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது ஆராய்ந்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g0gnvxlgxo

  • கருத்துக்கள உறவுகள்

541974863_1201362148695422_4950734936960

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்திய அரசியல்வாதிகளுக்காக ஜனாதிபதி கச்சத்தீவு செல்லவில்லை - நளிந்த ஜயதிஸ்ஸ

04 Sep, 2025 | 05:13 PM

image

(எம்.மனோசித்ரா)

தென்னிந்நிய அரசியல்வாதிகளுக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கச்சதீவு செல்லவில்லை. அது எமக்கு உரித்தான நிலப்பரப்பாகும். எனவே கச்சதீவு தொடர்பில் நாம் மீண்டும் பேச வேண்டிய தேவை இல்லை. அரச தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு செல்ல முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்

அபிவிருத்தி திட்டங்கள் சிலவற்றை ஆரம்பித்து வைப்பதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். யாழ்ப்பாணத்தில் மாத்திரமின்றி கிழக்கு மற்றும் ஏனைய மாகாணங்களிலும் அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைக்கும் நிகழ்வுகளில் எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதியின் கச்சதீவு விஜயம் அதிவிசேடமானதல்ல.

தென்னிந்தியாவில் அவ்வப்போது அரசியல் தலைவர்கள் கச்சதீவு குறித்து பேசுவது வழமையானதொரு விடயமாகும். அவர்கள் தமக்காக வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு கச்சதீவு தொடர்பிலோ அல்லது வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலோ வாக்குறுதிகளை வழங்குவர்.

எனவே கச்சதீவு தொடர்பில் நாம் மீண்டும் பேச வேண்டிய தேவை இல்லை. கச்சதீவு எமக்கு உரித்தான நிலப்பரப்பாகும். அதில் சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து , அப்பகுதியை அபிவிருத்தி செய்வது குறித்தும் கூடுதல் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

அந்த வகையில் தென்னிந்தியாவில் கூறப்பட்ட கருத்துக்கும் ஜனாதிபதியின் கச்சதீவு விஜயத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அரச தலைவர் என்ற ரீதியில் நாட்டிலுள்ள சகல பிரதேசங்களுக்கும் ஜனாதிபதியால் செல்ல முடியும்.

அவ்வாறு செல்லும் போது மக்களுடன் கலந்துரையாடி, அப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் நேரடியாக அவதானம் செலுத்தினால் அது சிறந்ததாகும். நாம் அறிந்த வகையில் இதுவரையில் அரச தலைவரொருவர் கச்சதீவுக்குச் செல்லவில்லை. அந்த வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் மிக முக்கியத்துவமுடையதாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/224207

  • கருத்துக்கள உறவுகள்

ம் . ..... அப்படிப்போடு அரிவாளை ........... !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் கச்சதீவு கச்சதீவு எண்டு கத்துறாங்கள். அங்கை என்னதான் இருக்கு எண்டொருக்கால் போய் பாப்பம் எண்டுட்டு தான் கச்சதீவுக்கு போனவராம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2025 at 16:01, alvayan said:

விஜய் தான் அனுரவுக்கு போட்டி ..கூப்பிடுங்க நம்ம வீட்டு மருமகனை ....

544490644_1202878051877165_6492605234608

  • கருத்துக்கள உறவுகள்

கச்சைதீவின் கண்ணீர்.😢

இந்தியாவில் கிடைக்காத இலங்கைப் பொருட்களையும், இலங்கையில் கிடைக்காத இந்தியப் பொருட்களையும், தீர்வின்றிப் பாதுகாப்பாக பண்டமாற்று செய்யப் பேருதவி புரிந்து வந்தேனே. மீனைக்காட்டி, கச்சையை உருவி என் மானத்தை வாங்குகிறார்களே பாவிகள்.😭

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2025 at 17:10, ஈழப்பிரியன் said:

இதுவரை காலமும் கச்சதீவை பாவத்திற்கு இரங்கி இந்தியா கொடுத்ததாகவே எண்ணியிருந்தேன்.

இந்த அண்மையில் ஒரு காணொளியை பார்த்த போதே

கச்சதீவு இலங்கைக்கே உரித்தானது.

இந்தியா தம்வசப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.

கச்சத்தீவு: இந்திரா காந்தி தாரை வார்த்த போது கருணாநிதி என்ன செய்தார்? இன்று வரை பிரச்னை ஏன்?

இராமநாதபுரம் அரசருக்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவை 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியா ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருவதை அடுத்து இத்தீவு பற்றிய உரிமை தமிழக அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கச்சத்தீவை மீட்டு இந்தியாவின் பகுதியாக உரிமை நிலைநாட்டிட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் இணைக்க வழியுறுத்தி பல்வேறு கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். இந்திய அரசு உச்சநீதி மனறத்தில் கச்சத் தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்து தரவில்லை என உறுதிமொழி வழங்கியுள்ளது.[1]

தற்போதைய முதல்வர் செ. செயலலிதா அவர்கள் கச்சத்தீவை இலங்கைக்கு "தாரைவார்த்தது" சட்டப்படி தவறு என்று உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட அறமன்றம் இந்திய ஒன்றிய அரசிற்கு தாக்கீது அனுப்பியது. தற்போது திமுக தலைவர் கருணாநிதி டெசோ அமைப்பின் தீர்மானப்படி கச்சத்தீவை இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் படி விட்டுக் கொடுத்ததை ரத்து செய்து இந்தியா திரும்ப்ப் பெறவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட அறமன்றம் மத்திய, மாநில அரசு, மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.[2]

இதனையடுத்து முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதியை கடுமையாக சாடியுள்ளார். அதில் "தனது ஆட்சிக் காலத்தில் தடுத்து நிறுத்தாமல் இருந்துவிட்டு தற்போது தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக வழக்கு தொடுத்துள்ளார்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.[3]

சட்டமன்றத்தில் தீர்மானம்

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் கச்சத்தீவு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு வருவாய்த்துறையையும் சேர்க்கவேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சூன் 13, 2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[4]

தன் மீது விமர்சனக்கணைகளை வீசத்தான் இந்த தீர்மானம் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.[5]

மேற்கண்ட தீர்மானத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்து "வழக்கிற்கு பயந்தே கச்சத்தீவை தாரை வார்த்தார் கருணாநிதி" என்று சட்டமன்றத்தில் பேசினார்.[6]

இன்னொரு தீர்மானம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் செயலலிதாவால் மே 3, 2013 அன்று கச்சத்தீவை மீட்க இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி கொண்டுவரப்பட்டது.[7] அத்தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மீது சரமாரியாக குற்றம் சாட்டினார்.

  • கருத்துக்கள உறவுகள்

542759494_4121930561470767_6647827515010

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியும்.

- சீமான் கடும் எச்சரிக்கை. -

Abdul Munaf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.