Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரூரில் விஜய்யின் வாகனத்தை மையப் பகுதிக்குள் போக நிர்பந்தம் செய்ததே காரணம்.. கிருஷ்ணசாமி புகார்

Velmurugan PPublished: Sunday, September 28, 2025, 2:36 [IST]

reason is that the police forced Vijay s vehicle to enter the central area in Karur Krishnasamy

கரூர்: விஜய் நாமக்கல்லிலிருந்து கூட்ட நிகழ்வுப் பகுதிக்கு வந்தபோதே, எண்ணற்ற மக்கள் கூடியிருந்தனர். அவரது வாகனம் வேலுச்சாமிப்புரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

திரை உலகின் பிரபலம் என்பதாலும், புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதாலும் அவரது நிகழ்ச்சிக்குக் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்வது இயல்பு. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கூட்டம் கூட்டுவதற்கு உரிமை உண்டு. ஆனால், தொடக்கம் முதலே விஜய் அவர்களின் கூட்டங்களுக்கு நடைமுறைக்கு ஒத்துவராத கட்டுப்பாடுகளை விதிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.

துவக்கத்தில் கரூரில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பிறகு, வேண்டா வெறுப்பாக கரூர் - ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் என்ற பகுதியில், 22 அடி அகலம் மற்றும் 200 அடி நீளம் மட்டுமே விஸ்தாரணம் உள்ள மிகக் குறுகலான சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று காவல்துறைக்குத் தெரிந்திருந்தும், அக்குறுகலான இடத்தை ஒதுக்கியது ஏன்?

மேலும், அவர் நாமக்கல்லிலிருந்து கூட்ட நிகழ்வுப் பகுதிக்கு வந்தபோதே, எண்ணற்ற மக்கள் கூடியிருந்தனர். அவரது வாகனம் வேலுச்சாமிப்புரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது.!

கூட்ட அனுமதி வழங்குவதில், தமிழ்நாடு அரசு ஆளுங்கட்சிக்கு ஓர் அளவுகோலும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அளவுகோலும் கொள்ளக் கூடாது; காவல்துறை நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசும், காவல்துறையும்மே பொறுப்பேற்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

  • Replies 237
  • Views 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யாயினி
    யாயினி

    Vijay Really Waste Fellow ..இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேணும். ஒரு நடிகனை நம்பி கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், வயோதிபர்கள், இயலாதவர்கள் என்று பல்வேறு பட்டவர்களளும் இவ்வாறன கூட்ங்களுக்கு செல்வதை

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய் அரசியலுக்கு உகந்தவர் கிடையாது என்பது ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒன்று. அவரைச் சுற்றி இருப்பவர்களின் முதிர்ச்சியற்ற மற்றும் பேராசைகளுக்கு விஜய் இன்று பலியாகிக் கொண்டிருக்கின்றார். புஸ்ஸி ஆனந்த, ஆத

  • ரசோதரன்
    ரசோதரன்

    முண்டி அடித்து நெருங்கி ஒருவர் மேல் ஒருவர் என்று ஒருவர் மேல் அறுவர் என்று வீழ்ந்து இறந்து போன உடல்களில் ஆறு அழகாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு புத்தம் புதிய வெள்ளைகளால் முழுவதும் சுற்றப்பட்டு புதிய நீ

  • கருத்துக்கள உறவுகள்

CM MK Stalin | விஜய் சென்னை வந்த நிலையில் கரூர் புறப்பட்டுச் செல்லும் முதலமைச்சர் | சினிமா வில்லன்களை விட மோசமானவர்கள் திமுக வினர்

  • கருத்துக்கள உறவுகள்

திமுக இப்படித்தான் அரசியல் செய்யும். இதுதான் அரசியல்.காசை வாங்கிக்கொண்டு வாக்குப் போட்டு திமுக வை தெரிவு செய்து விட்டு இப்போது அழுது என்ன பலன். இலங்கையில்>வங்கதேசத்தில்>நேபாளத்தில்நடந்தது போல ஒரு பெரும் எழுச்சி பெற்று திமுக குடும்ப ஆட்சியை இன்றே வெளியேற்றும் புரட்சியைச் செய்யுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே திமுகவின் கூட்டத்தில் நடந்து இருந்தால் திமுகவின் தலைவர் பத்திரிகையாளர்களி; கேள்விகளுக்கு முகம் கொடுத்து இது அதிமுகவின் சதி என்று கூசாமல் பதிலளித்துவிட்டு கூலாகச் சென்றிருப்பார். இது தான் அரசியல். விஜை போல் பத்திரிகையாளர்களை பார்த்து பயந்து ஓடமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் முதல் தடவை நடக்கும் விபத்தல்ல இதற்கும் முன்னரும் நடந்துள்ளது என்பதுதான் நிலமையின் தீவிரத்தினை உணர்த்துகிறது.

ஒரு கூட்டத்தினை கூடவா பாதுகாப்பாக நடத்தமுடியவில்லை இவர்களுக்கு?

ஆனால் தமிழக அரசியல் சாக்கடையில் இது ஒரு சாதாரண விடயமாக போய்விடும், பாதிக்கப்ப்பட்ட குடும்பங்களுக்கு வழமையான வருத்தம், உதவி தொகை என கடந்து விடுவார்கள், ஆனால் அந்த குடும்பங்கள் மட்டும் மீள முடியாத இழப்பில் இருந்து கொண்டே இருக்கும்.

இன்னும் சில காலங்களின் பின்னர் இன்னொருவர் வருவார் மாற்றம் கொண்டுவருகிறேன் என, ஆனால் மக்களின் வாழ்வில் எந்த மாற்றமும் இருக்காது, ஆனால் அரசியல்வாதிகளின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் இருக்கும்.

தலமை பண்பு என்பது இயல்பாக வரும் விடயமாக இருந்தாலும் அதற்கான கற்கை நெறிகைகளினூடாகவும் பயிற்றுவிக்கிறார்கள், முதலில் தேர்தல் ஆணையகம் தேர்தலில் ஈடுபடும் அனைவருக்கும் இந்த கற்கை நெறியினை கட்டாயமாக்க முற்படவேண்டும்.

முதலில் இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடு காணப்பட்டபோதும் குறித்த கட்சி கூட்டம் நடத்த அனுமதித்த அரசும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும், பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணமான அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் (எதிர்காலத்தில் இவ்வாறு ஒரு தவறு நிகழாது), அதுதான் ஒரு நல்ல அரசிற்கு அடையாளம்; அவ்வாறு நிகழாவிட்டால் அந்த அரசு கூட இந்த நிகழ்விற்கு காரணகர்த்தாக்களே.

  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/T23vL6AFaL4?si=CbN_HN9YKUfPjA_w

சீமான் மரங்களின்மாநாடு கூட்டத்தில் பேசும்பொழுது ஆரம்பத்திலேயே இந்த நிகழ்வைக் குறிப்பிட்டு தனN இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களுக்கு அஞ்சலி ...இது ஒருவகையில் பொதுமக்களின் அறியாமை என்றுகூட சொல்லலாம். வீட்டில் நேரலையில் பார்க்க முடியாதா ? பசி ,நேரம் செலவிட்டு ,குடிக்க நீர் கூட இல்லாமல் சன நெரிசலால் அவஸ்தைப்பட்டு விஜய்யின் உரையைக் கேட்க வேண்டும் என்பது கடடாய மா ? ஜன நடமாடடம் உள்ள இடங்களில் நோய்த்தொற்று கூட ஏற்படலாம். கர்ப்பிணிகள் வயோதிபர் சிறுகுழந்தைகளை தவிர்த்திருக்கலாம். வரும் மக்களுக்கு என்ன முன்னேற்பாடுகள் செய்தார்கள். விஜய் பதில் சொல்ல வேண்டும். .

  • கருத்துக்கள உறவுகள்

டொக்டர் அர்ச்சுனா சீமானைவிட விஜய் நல்லவர் என்று ஒரு காணொளி வெள்ளி கிழமை வெளியிட்டவராம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமாகப் பலியான அப்பாவி மக்களுக்கு இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

தம்பி விஜய்யும் மனவேதனையில்தான் இருப்பார்" - சீமான்

முந்திரிக்கொட்டை மாதிரி ஒருத்தர் சீமான் எப்படி வந்து இந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுவார், தம்பி விஜய் கட்சியை பிளந்து கட்டுவார் என்று மூக்கு சாஸ்திரம் சொல்லி மூக்கு உடைபட்டு இருக்கிறார்.

சீமானார் நாளைக்கும் இதே கருத்ததோடு இருந்தால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானிசம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுப் பயணத்தை பாதியில் முடித்து கரூர் விரைந்த துணை முதல்வர் உதயநிதி

28 Sep 2025, 11:02 AM

Karur tragedy Udhayanidhi Stalin press meet

கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டம் நேற்று நடந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள கரூர் சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கரூரில் குவியத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துபாயில் இருந்த நிலையில் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 39 பேரில் 13 பேர் ஆண்கள், 17 பேர் பெண்கள், குழந்தைகள் 9பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 32 பேர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2 பேர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் உடல் பிரேத பரிசோதனைக்க பின் உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. 7 அமைச்சர்கள் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலித்தி உள்ளோம்.
அரசு சார்பாக என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துள்ளோம்.

கரூர் மாவட்டத்தில் உள்ள 200 மருத்துவர்கள் மற்றம் மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அது தவிர சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, கோவை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 145 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.என தெரிவித்தார்.

எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு குறித்த வேள்விக்கு, இந்த இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. அதற்காகதான் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை ஆணைத்தின் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

https://minnambalam.com/karur-tragedy-udhayanidhi-stalin-press-meet/#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் கைதா? கரூர் மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

28 Sep 2025, 4:45 AM

stalin-news.jpg

கரூர் கூட்ட நெரிசலில் இதுவரை 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று (செப்டம்பர் 27) மாலை கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய பலர் கவலைக்கிடமாக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இவர்களில் 39 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில் சென்னையில் இருந்து கரூர் வந்த முதல்வர் ஸ்டாலின், அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

அதன் பின் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். 

தொடர்ந்து அதிகாலை 3.45 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘மிகுந்த துயரத்தோடும் கனத்த இதயத்தோடும் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். 

கரூரில் நடந்திருக்க கூடிய இந்த கொடூரமான விபத்தை பற்றி விவரிக்க முடியாது. அந்த அளவிற்கு ஒரு சோக சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. 

அதைப் பற்றி விவரமாக பேசுவதற்கு கூட என் மனது இடம் கொடுக்கவில்லை. அவ்வளவு வேதனையில் இருக்கிறேன். 

நேற்று இரவு 7.45 மணிக்கு சென்னையில் நான் அதிகாரிகளோடு பேசிக் கொண்டிருந்தபோது, கரூரில் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டு இருக்கிறது. 

கூட்ட நெரிசலில் சிக்கி பல பேர் மூச்சு திணறலுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் என்று தகவல் கிடைத்தது. 

அந்த செய்தி கிடைத்த உடனே, கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு, இந்த செய்தி உண்மையா என்று கேட்டேன். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று என்னவென்று பாருங்கள் என்று சொன்னேன். 

அதன் பிறகு கலெக்டரிடமும் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவரும் சில விஷயங்களை எல்லாம் சொன்னார்.

முதலில் 4,5 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று செய்தி வந்தது. போகப் போக அதிகமானோரை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு போகிறார்கள் என்று செய்தி தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 

அதைத்தொடர்ந்து மரண செய்திகளும் வர ஆரம்பித்துவிட்டன. இதை கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவில்லை. மரண செய்தி வந்ததும் எனக்கு அச்சம் ஏற்பட்டு, இந்த மாவட்டத்தின் பக்கத்து மாவட்டத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசினேன். 

அந்த சமயத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தார். அவரை உடனே கரூர் செல்லுமாறு உத்தரவிட்டேன். 

அதற்குப் பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனையும் தொடர்பு கொண்டு உடனடியாக கரூர் சென்று என்னவென்று பாருங்கள் என்று அவரையும் அனுப்பி வைத்தேன்.

பிறகு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக இந்த விவகாரத்தை கவனிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டு அவர்களையும் அனுப்பி வைத்தேன்.

ஆனால் இங்கிருந்து வந்த செய்திகள் எல்லாம் என் மனதை கலங்கடித்தது. அதன் பிறகு உடனடியாக தலைமைச் செயலகத்துக்கு சென்று துரைமுருகன், நேரு, வேலு உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், டிஜிபி ஆகியோரை அழைத்து கலந்து பேசினேன். 

பல்வேறு மாவட்ட ஆட்சித்தலைவர்கள், அதிகாரிகள், கரூரை ஒட்டி இருக்கக்கூடிய ஐந்து ஆறு மாவட்ட அரசு அதிகாரிகளை  மருத்துவர்களை கரூருக்கு செல்ல உத்தரவிட்டேன். அந்த வகையில் அவர்களும் வந்து சேர்ந்திருக்கிறார்கள். 

இப்படிப்பட்ட நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த சம்பவத்தில் மொத்தம் 39 உயிர்களை இழந்திருக்கிறோம். 

இதில் ஆண்கள் 13 பேர். பெண்கள் 17 பேர். ஆண் குழந்தைகள் 4 பேர் பெண் குழந்தைகள் 5 பேர் ஆவர்.

ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது இதுவரை நடக்காதது. இனிமேலும் நடக்கக்கூடாது. 

51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 26 பேர் ஆண்கள். 25 பேர் பெண்கள். இவர்கள் விரைவில் குணமடைந்து வரவேண்டும். 

இறந்து போன உயிர்களுக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களது குடும்பத்தினரை என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் திக்குமுக்காடி கொண்டிருக்கிறேன்.

மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.  காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். 

அதுமட்டுமல்ல ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதி அரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று காலை 9:30 மணிக்கு தான் மருத்துவமனைக்கு வரலாம் என்று விமான டிக்கெட்டை பதிவு செய்திருந்தேன். ஆனால் இந்த கொடூரமான காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் பார்த்தபோது எனக்கு மனது கேட்கவில்லை. 

ஒரு மணி அளவில் விமானத்தை பிடித்து இங்கு வந்து சேர்ந்து இருக்கிறேன்” என்றார்.

இதைத்தொடர்ந்து விஜய் கைது செய்யப்படுவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு முதல்வர் ஸ்டாலின்,   ”ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விசாரணை அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  அரசியல் நோக்கத்தோடு நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. யார் கைது செய்யப்படுவார்கள், கைது செய்யப்பட மாட்டார்கள் என நீங்கள் எந்த எண்ணத்தில் கேட்கிறீர்களோ அதற்கு நான் உட்படுவதற்கு தயாராக இல்லை” என்று கூறினார். 

உரிய இடம் ஒதுக்கப்படவில்லை பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்..

https://minnambalam.com/is-vijay-arrested-chief-minister-stalin-interview-at-karur-hospital/

  • கருத்துக்கள உறவுகள்

கரூர் பேரணி நெரிசல் உயிரிழப்பு: தமிழக் வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கைதாவாரா? - தமிழக ஊடகச் செய்திகள்

Published By: Digital Desk 1

28 Sep, 2025 | 09:59 AM

image

தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைது செய்யப்படலாம் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 தமிழகத்தின் சட்டசபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களையும், மக்கள் சந்திப்புகளையும் முன்னெடுத்துள்ளன.

குறிப்பாக ஆளும் கட்சியான தி.மு.க பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மற்றும் பெறும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் த.வெ.க ஆகிய கட்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் மக்கள் சந்திப்பு நடத்தியிருந்தார்.

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

இந்நிலையில் அதிக மக்கள் தொகை காரணமாக பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதில் சிக்கில் 50க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 சிறுவர்கள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இதற்கு முன்னர் மத நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட நெரிசலில் தான் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகளவில் நடந்து இருக்கிறது. ஆனால் ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இவ்வளவு பேர் பலியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஏற்கனவே ஆந்திராவில் கடந்த 2022ஆம் ஆண்டு நெல்லூர் கண்டுகூரில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் விஜய் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என உயர் நீதிமன்றம் ஷகூறியிருந்தது.

இந்தநிலையில் தான் கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 39 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனால் விஜய் உள்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விஜய் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/226280

  • கருத்துக்கள உறவுகள்

39 பேரை பலி கொண்ட விஜய் பிரசார கூட்டம்- புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் எந்த நேரத்திலும் கைது? தலைமறைவா?

28 Sep 2025, 8:45 AM

Karur Vijay TVK Case

கரூரில் நேற்று செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 39 பேர் இறந்துள்ளனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரூரில் விஜய் பிரசார கூட்டத்துக்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் 39 பேர் இறந்துள்ளனர். இதனையடுத்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வழக்கு விவரம்:

  • குற்ற எண் 855/2025 பிரிவு 105,110,125 (b)r, 223 r/w 3 of,TNPPDL Act A1 குற்றவாளி மாவட்டச் செயலாளர் மதியழகன்

  • A2 பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்

  • A3 நிர்மல் குமார் மற்றும் பலர் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் கைது?

புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், மதியழகன் ஆகிய 3 பேரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தவெக தலைவர் விஜய்யையும் இந்த வழக்கில் விசாரணைக்கு பிறகு குற்றவாளியாக சேர்க்கவும் வாய்ப்பு உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைமறைவா?

கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

https://minnambalam.com/vijays-campaign-rally-claims-40-lives-pussy-anand-nirmal-kumar-to-be-arrested-anytime/

  • கருத்துக்கள உறவுகள்

TVK.jpg?resize=750%2C375&ssl=1

கரூரில் அரசியல் கூட்டம் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு! விஜய் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!

நடிகர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நேற்று கரூரில் நடத்திய அரசியல் கூட்டத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 5 சிறுவர்களும், 5 சிறுமிகளும், 17 பெண்களும், 12 ஆண்களும் அடங்குகின்றனர்.

அதேநேரம் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 21 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, உடற்கூராய்வு நிறைவடைந்த சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கரூரில் இருந்து நேற்றைய தினம் விமானம் மூலம் உடனடியாக விஜய் சென்னைக்கு திரும்பியுள்ள நிலையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து தனது x தளத்தில் உருக்கமான பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பும்  வழங்கப்பட்டுள்ளது.

நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு ஒரு பொலிஸ் ஆய்வாளர் தலைமையில் 15 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக மத்திய அரசு அவருக்கு  ‘Y’ பிரிவு பாதுகாப்பை வழங்கி உள்ளது. தற்போது கரூரில் நடந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, அவரது வீட்டுக்கு பாதுகாப்பு கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் விஜய் வீட்டின் அருகே சாலைத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

https://athavannews.com/2025/1448740

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் யார்யார்? உருக்கமான பின்னணியுடன் முழு விவரம்

கரூர், தவெக பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல், விஜய் பிரசாரம்

படக்குறிப்பு, உறவுகளை இழந்து கதறும் குடும்பத்தினர்

28 செப்டெம்பர் 2025, 02:08 GMT

புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 10 குழந்தைகளும் 16 பெண்களும் அடங்குவர்.

அவர்களில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. எஞ்சிய 5 பேரின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

உயிரிழந்தவர்கள் யார்?

1. தாமைரக்கண்ணன் (25), பாகநத்தம், கரூர்

2. ஹேமலதா, விஸ்வநாதபுரி, கரூர்

3. சாய்லெட்சனா (8), விஸ்வநாதபுரி, கரூர்

4. சாய்ஜீவா (4), விஸ்வநாதபுரி, கரூர்

5. சுகன்யா (33), காவலர் காலனி, கரூர்

6. ஆகாஷ் (23), காமராஜ்புரம் வடக்கு, கருர்

7. தனுஷ்குமார் (24), காந்திகிராமம், கரூர்

8. வடிவழகன் (எ) வடிவேல் (54), பசுபதிபாளையம், கரூர்

9. ரேவதி (52), கொடுமுடி, ஈரோடு

10. சந்திரா (40), ஏமூர் புதூர், கரூர்

கரூர், தவெக பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல், விஜய் பிரசாரம்

படக்குறிப்பு, உயிரிழந்த ஹேமலதா, சாய் லக்ஷனா, சாய் ஜீவா (தாய் மற்றும் குழந்தைகள்)

11. குருவிஷ்னு (2), வேலுச்சாமிபுரம், கரூர்

12. ரமேஷ் (32), கோடங்கிபட்டி, கரூர்

13. சனுஜ் (13), தாந்தோனி கிராமம், கரூர்

14. ரவிகிருஷ்ணன் (32), எல்.என்.எஸ் கிராமம், கரூர்

15. பிரியதர்ஷணி (35), ஏமூர் கிராமம், கரூர்

16. தரணிகா (14), ஏமூர் கிராமம், கருர்

17. பழனியம்மாள் (11), வேலுச்சாமிபுரம், கரூர்

18. கோகிலா (14), வேலுச்சாமிபுரம், கரூர்

19. மகேஷ்வரி (45), அருகம்பாளையம், மண்மங்கலம்

20. அஜிதா (21), அரவக்குறிச்சி, கரூர்

கரூர், தவெக பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல், விஜய் பிரசாரம்

படக்குறிப்பு, தாமரைகண்ணன் (வேடசந்தூர்), மணிகண்டன் (வெள்ளக்கோவில்), ரமேஷ் (கோடங்கிபட்டி)

21. மாலதி (36), ராயனூர் வடக்கு, கரூர்

22. சுமதி (50), ரெத்தினம் சாலை, கரூர்

23. மணிகண்டன் (33), காங்கேயம், திருப்பூர்

24. சதீஷ்குமார் (34), கொடுமுடி, ஈரோடு

25. கிருத்திக்யாதவ் (7), 5 ரோடு, கரூர்

26. ஆனந்த் (26), சுக்காம்பட்டி, சேலம்

27. சங்கர் கனேஷ் (45), குஜிலியம்பாறை, திண்டுக்கல்

28. விஜயராணி (42), பிச்சம்பட்டி, கரூர்

29. கோகுலபிரியா (28), காங்கேயம், திருப்பூர்

30. பாத்திமாபானு (29), ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்

31. கிஷோர் (17), அன்பு நகர், கரூர்

32. ஜெயா (55), வெங்கமேடு, கரூர்

33. அருக்காணி (60), ஏமூர், கரூர்

34. ஜெயந்தி (43), வேலாயுதம்பாளையம், புகளூர்

கரூர், தவெக பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல், விஜய் பிரசாரம்

உயிரிழந்தவர்களின் உருக்கமான பின்னணி

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த தாமரைக் கண்ணனுக்கு திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆகிறது. அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவர்களில் கரூர் விஸ்வநாதபுரியைச் சேர்ந்த ஹேமலதாவும், அவர்களது குழந்தைகள் சாய் லெட்சனா, சாய்ஜீவாவும் அடங்குவர். சாய் லெட்சனா கரூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தார்.

உயிரிழந்தவர்களில் 28 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏமூர் கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடையாளம் காணப்பட்டவர்களில் 8 பேர் குழந்தைகள் எனத் தெரியவந்துள்ள நிலையில் மொத்தம் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு

கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 52 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5yj40lvvego

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் இங்கே முதலமைச்சர் முதலமைச்சர் என்று எழுதுகிறார்கள். ஆனால் நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மகனாகிய.., என்ற கனவோடு இருக்கும்......???? அந்த கனவை குறிவைக்கும் விஜய் இனி தம்பியின் திரை உலகமுகத்தை கண்டு நடுங்கி இருப்பார் இனி அரசியல் முகத்தை முழுமையாக பார்ப்பார்

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/v/1B5J2FpzDu/

https://www.facebook.com/share/1BchKSNCU6/

தூக்கம் தொலைந்த இரவானது

இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்று இரவு முழுவதும் நேரலைகளைப் பார்த்துப் பார்த்துக் கண்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டன. கனவுகளுக்கு வாய்ப்பே இல்லாத நிகழ்வுகளால் மொத்த இரவும் விழித்திருந்த இரவாகிவிட்டது. பத்துமணி வாக்கில் பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரனின் முகநூல் குறிப்புதான் ஆரம்பம். அதில் ஆவேசமாக எழுதியிருந்தார்.

எனக்குக் கிடைத்த தகவல்களின் படி:

விஜய் நாமக்கலில் பேசுவதற்கு அனுமதிபெற்ற நேரம் காலை 8.45. அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ஆனால், அவர் சென்னை விமானநிலையத்தில் புறப்பட்டதே 8.45 மணிக்குத்தான். பிறகு திருச்சி விமானநிலையம் 10 மணிக்கு வந்தார்.

சென்று அங்கிருந்து நாமக்கல் சாலை மார்க்கம் செல்ல வேண்டும் (90 கிமீ) பொதுவாக சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். எனில் 8.45 க்கு வர வேண்டியவர் கிளம்பியிருக்க வேண்டிய நேரம் என்ன? ஏற்படும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு எப்போது கிளம்ப வேண்டும்?

சுமார் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.

அவர்கள் கரூரில் பேச பெற்ற நேரம் 12 !

வந்து சேர்ந்தது சுமார் 7 .

இந்தக் கால தாமதத்திற்கு பொறுப்பு ?

கூட்டத்தால் நடந்த காலதாமதம் அல்ல.

திட்டமிட்டு கூட்டம் கூடட்டும் என காத்திருக்க வைத்தது ஏன்? தனி விமானத்தில் வரக்கூடிய வசதிபடைத்தவர் குறித்த நேரத்தில் வராமல் போனது ஏன்?

ஊடகங்களுக்கு ஏதாவது கொஞ்சம் அறிவுண்டா? ஒவ்வொரு அடிக்கும் ஒரு கேமரா கிளம்பிட்டார், கார் இங்கே, பஸ் இங்கே. சிரிக்கிறார், கை அசைக்கிறார் , மாஸ் என்று ஏகத்திற்கு hype செய்த உங்களுக்கு வெறும் டி ஆர் பி வெறி .

கால தாமதமாக புறப்பட்ட விஜய் . காத்திருக்கும் ரசிகர்கள் . அவதியில் அல்லாடும் மக்கள் என்று செய்தி வந்திருக்க வேண்டும் ! இல்லை

சரி , நாமக்கலில் சிலர் மயங்கி விழுந்தனர். பெயர் பலகை பெயர்ந்து நொறுங்கி சிலர் காயம் . அதை எழுதி அடுத்த இடத்திலிருக்கும் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை செய்தீர்களா?இல்லை

கரூர் கூட்டத்தில் நெரிசல், வாகனம் செல்ல இயலவில்லை. மேலும் கூட்டம் வேண்டாம் என்று எச்சரிக்கையாவது செய்தீர்களா? இல்லை

உங்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ளுங்கள்! அப்படி ஏதும் இருக்க வாய்பில்லை .

இந்தப் பதிவிற்கு, “ நேரலையில் முகத்தை காட்டும் ஆசையைத் தூண்டிய ஊடகங்களைப் பொறுப்பாக்கி வழக்குப் பதிய வேண்டும்” எனப் பின்னூட்டம் போட்டுவிட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்தேன். வீட்டில் இருக்கும் நாட்களில் மாலை ஆறு மணிக்குச் சன் தொலைக்காட்சியின் செய்திகளோடு உணவுநேரத் தலைப்புச் செய்திகளைப் பார்ப்பதும் கேட்பதும் தவறுவதில்லை. அதல்லாமல் உணவுநேரத் தலைப்புச் செய்திகள் மூன்றும் கேட்கும் பட்டியலில் உண்டு. தமிழ்த்தொலைக்காட்சி அலைவரிசைகளில் புதியதலைமுறையும், சன்செய்திகளும் தவறாமல் கேட்கும் பட்டியலில் இருக்கின்றன. வாரத்தில் சில நாட்கள் கேட்கும் அலைவரிசைகளாகப் பாலிமர், தந்தி, நியூஸ் 18.

காலையில் ஒன்பது மணிக்கு முன்பு சாப்பிட உட்கார்ந்தால் ஒன்பது மணித் தலைப்புச் செய்தியைக் கேட்பது வழக்கம். பிற்பகலில் இரண்டு மணி தலைப்புச் செய்தி; இரவு உணவின் போது 8 மணிக்குரிய தலைப்புச் செய்திகள். விஜயின் மதுரை மாநாட்டு நேரலைகளைப் பார்த்தபின்பு, “சனிக்கிழமை” நேரலைகளைப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்திருந்ததால் நேற்று பகலில் நாமக்கல், கரூர் பயணங்களைப் பார்க்கவில்லை.

பகலெல்லாம் கோவில் திருவிழாக்களை நேரலையாக வருணிக்கும் பட்டிமன்றப்பேச்சாளர்கள் போல ‘விஜயின் வருகைக்குக் கட்டியங்கூறிய அலைவரிசைகள், திரும்பவும் நேரலையாக மருத்துவமனைக் காட்சிகளைக் காட்டத் தொடங்கின. ஒவ்வொரு தொலைக்காட்சியும் இறந்தவர்களின் எண்ணிக்கையை மாற்றிமாற்றிச் சொல்லிக்கொண்டிருந்தன. அடுத்தடுத்து நடந்த ஒவ்வொன்றும் இரவு முழுவதும் தூக்கத்தை இல்லாமல் ஆக்கிவிட்டன.

கூட்டத்தை நடத்திவிட்டுப் பொறுப்பில்லாமல் போய்விட்ட அந்த நடிகன் மீதும், அவனைப் பார்க்கவும் தலைவனாக ஆக்கவும் வந்த கூட்டத்தின் மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தபோது, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட முட்டாள்களின் கூச்சல்கள். ஆளுங்கட்சியைக் குறைசொல்லித் திசை திருப்பும் வாதங்கள் எனத் தமிழ்நாட்டைப் பைத்தியக்காரர்களின் சிறைச்சாலையாக ஆக்காமல் ஓயமாட்டார்கள் என்று தோன்றியது.

அதற்கு இடம் தர முடியாது எனக் காட்டத் தொடங்கினார் தமிழ்நாட்டரசின் முதல்வர். அரசு நிர்வாகம் என்ன செய்யும் என்பதை எடுத்த எடுப்பிலேயே காட்டிநார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கரூர் நோக்கிக் கிளம்புகிறார் என்ற செய்திக்குப் பின் எல்லாம் மாறத்தொடங்கின. கரூரின் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியும் மருத்துவமனைக்குப் போய்விட்டார். இன்னொரு அமைச்சர் அன்பில் மகேஸ் வந்துகொண்டிருந்தார். மாவட்ட ஆட்சித்தலைவர்,காவல்துறை, மருத்துவத்துறை எல்லாம் களம் இறங்கியபின் தொலைக்காட்சிகளின் நேரலைக் காட்சிகளும் த்வனியும் மாறத்தொடங்கியது. கணினித் திரையில் முகநூலும் தொலைக்காட்சியில் நேரலை ஓட்டங்களும் என மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்ததில் நள்ளிரவு தாண்டி விட்டது. படுக்கப் போனால் தூக்கம் வரவில்லை

திரும்பவும் தொலைக்காட்சியைத் திறந்தால் சென்னையிலிருந்து காவல்துறையின் உயரதிகாரியின் செய்தியாளர் சந்திப்பு. சொல்ல வந்ததைச் சொல்லாமல் பத்திரிகையாளர்களின் கேள்விகளை அனுமதித்ததில் கொஞ்சம் பதற்றம். முதல்வர் கரூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி வைத்தது. அவற்றைக் கேட்டுவிட்டுப் படுத்தால் தூக்கம் வரவில்லை. திரும்பவும் முகநூலில் நடக்கும் அக்கப்போர்களையும் வாசித்துக்கொண்டிருந்தபோது முதல்வர் வருகையும் மருத்துவமனையில் இறந்தோர்களுக்குச் செலுத்திய அஞ்சலிக் காட்சிகளும் உலுக்கி விட்டன. எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு அவர் பேசிய அந்த உரை பக்குவமான அரசியலின் அடையாளம்.

********

இந்தக் கோர மரணங்களுக்குப் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நடிகரின் கட்சி மட்டுமே காரணமல்ல; அவரைப் பின்னின்று இயக்கும் சக்திகளும் தான் காரணங்கள். அவர்களோடு கூட்டுச் சேர்ந்து நேரலையில் காட்டித் தங்கள் வியாபாரத்தையும் அரசியல் தந்திரங்களையும் காட்டும் தொலைக்காட்சி ஊடகங்களும் தான் காரணம். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது; கட்சி ஆரம்பிக்கக் கூடாது என்பதல்ல; ஆனால் அவர்களால் அரசியலின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை என்பதுதான் எப்போதும் நான் சொல்லும் வாதம்.

தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்துத் தனது நடிப்புத் திறனைக் காட்டிய நடிகர் பிரகாஷ்ராஜ் அரசியல் தான் பேசுகிறார். அவர் பேசுவது மாநில அரசியல் அல்ல; தேசிய அரசியல். இந்திய நாட்டிற்கே தேவையான மாற்று அரசியல். ஆனால், தமிழின் நாயக நடிகர்களும் நடிகைகளும் பேச விரும்புவது மாநில அளவைத் தாண்டாத அரசியல்.

அவர்களின் சிந்தனை, ஈடுபாடு, கருத்தியல் வெளிப்பாடு சார்ந்து உருவான அரசியலை அவர்கள் பேசியதில்லை. பந்தயத்திடலுக்குள் ஓடும்படி தள்ளிவிடப்பட்டவர்களின் பதற்றத்தோடு அரசியலுக்குள் வருகிறார்கள். வரும்போதே தமிழ் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே குறிவைக்கிறார்கள். மாநிலக் கட்சிகளையே விமரிசிக்கிறார்கள். நீண்ட காலமாகத் தமிழக அரசியலைத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் திராவிட இயக்கக் கருத்தியலையும் அதன் வழியாக உருவான தேர்தல் அரசியலையுமே திசைமாற்றம் செய்ய நினைக்கிறார்கள். இதனால் தான் நடிகர்களின் அரசியலைத் தேசியகட்சிகள்/ ஒன்றிய ஆட்சியாளர்கள் பின்னின்று இயக்குகின்றார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.திராவிட இயக்கத்தை/ அதன் கருத்தியல் தலைமையாக இருக்கும் பெரியாரை வெறுப்பவர்களால் இயக்கப்படுகிறார்கள் என்கிறோம். மறைந்து நிற்கும் கைவிரல்களில் சுண்டுதலுக்கேற்பப் பேசும்/ஆடும் பொம்மைகள் என்று சொல்ல நேரிடுகிறது.

தனக்கென - தனது நடிப்புக்கென ஒரு பாணியை - திரைக்கதை வடிவத்தை உருவாக்கிக் கொண்டு அதே வழியில் தொடர்ந்து படங்களைத் தரும் நாயக நடிகர்களின் சினிமாக்கள் வணிக வெற்றியை உறுதி செய்துள்ளன. அதே நேரம் தங்கள் பாணியிலிருந்து விலகிய சினிமா ஒன்றில் நடிக்கும் ஆசையுடன் முயற்சி செய்யும் நடிகரின் விருப்பத்தை அவரது ரசிகர்களே ஒத்துக் கொள்வதில்லை. தோல்விப்படமாக ஆக்கிவிடுவார்கள்.

அத்தகைய சூத்திரம் ஒன்றை அரசியலுக்காகக் கண்டுபிடித்து கட்சி நடத்தும்போது அரசியலிலும் நிலைத்து நிற்கின்றார்கள். ஏழைப்பங்காளன்; பெண்களின் காவலன்; தாய்மார்களின் அன்புக்குரியவன்; சினிமாவில் சம்பாதித்த பணம் என்னிடம் இருக்கிறது. எனவே ஊழல் செய்யவேண்டிய அவசியமில்லை; உங்களின் ரத்தத்தின் ரத்தமாக இருப்பேன் எனக்காட்டிக் கொண்ட அரசியல் சூத்திரம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுடையது. அவர் உருவாக்கிய அதிமுகவிற்கு வேறுவிதமான அரசியல் பொருளாதாரக்கொள்கை எதுவும் கிடையாது. அதே சூத்திரத்தில் மாற்றமில்லாத ஒன்று விஜய்காந்தின் தேமுதிகவின் சூத்திரமாகவும் இருந்தது. தன்னைக் கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லி அவரது வாரிசாகக் காட்டினார். இப்போது தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டில் சின்னக்குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தானே தாய்மாமன் என்றார். விஜய்காந்த் எனது முன்னோடி என்றார். எம்.ஜி.ஆர்., விஜய்காந்த், விஜய் - மூவரும் நம்பியது மதுரை மண்ணை.

இவர்களின் ஆசைகளுக்குத் தீனி போடுபவர்களாக இருக்கிறார்கள் அரசியலற்ற அரசியல் ஆய்வாளர்கள், நடிகர் அரசியல் என்பது தமிழ்நாட்டில்/ இந்தியாவில் அரசியலற்ற வாக்காளத்திரளை ( apolitical )உருவாக்கும் ஒன்று. அரசியலற்ற நடிகர் அரசியலை நேரடியாக ஒளிபரப்பும் காட்சி ஊடகங்களுக்கு அரசியலற்ற அரசியல் ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள். கட்சி அரசியலில் சாய்வுகளற்றவர்கள் போலக் காட்சிதரும் இவ்வகை அரசியல் ஆய்வாளர்கள் நடிகர் அரசியலைக் கொண்டாடுபவர்களாகவும் இருக்கிறார்கள். சாதி அரசியலையும் வரவேற்கின்றார்கள். அதே நேரம் கருத்தியல் அரசியலுக்கு எதிராக நிற்கின்றார்கள். மொத்தத்தில் ஆபத்தானவர்கள்.

நடந்தவை கோர விபத்துகள் அல்ல. திட்டமிடாத கொலைகள் எனச் சட்டத்தின் மொழி எழுதினாலும், முட்டாள் தனமான ஒருவனின் சொல்லைக் கேட்டுக் கூட்டம் கூட்டிச் செய்யப்பட்ட படுகொலைகள் இது என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். கூட்டங்கள் பற்றியும் கூட்டங்களில் பங்கேற்பது பற்றியும் விழிப்புணர்வுப் பாடங்கள் தேவைப்படுகின்றன. வெகுமக்கள் அரசியலில் திரளும் கூட்டத்தின் இயல்பு பற்றி கற்பிக்கும் திரைப்படங்கள் எடுக்கப்படவேண்டும். காட்சிப்படுத்தப் படவேண்டும். தமிழ்நாடும் தமிழ் மக்களும் காப்பாற்றப்படவேண்டும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

555671387_813715701182248_79423537752315

557068686_813715887848896_30157270134391

555622377_813715737848911_59359459211026

555569117_813715784515573_24839889791436

555913697_813715821182236_34336301291750

557610590_813715921182226_62725704013989

555576073_813715857848899_72952978129549

கரூரில் நேற்றிரவு விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழப்பு - சம்பவ இடத்தின் தற்போதைய காட்சி.

Vijay Kumar

###############################

இந்த இடத்தைப் பார்க்கும் போது.... நேற்று எவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டு அந்த 39 பேரும் அவலமாக இறந்திருப்பார்கள் என்று ஊகிக்க முடிகின்றது.

இவ்வளவு மக்கள் கூடும் அரசியல் கூட்டங்களுக்கு சிறுவர், சிறுமிகளை ஏன் அழைத்துச் செல்கிறார்கள் என தெரியவில்லை.

சிறுவர், சிறுமிகளுக்கு அரசியல் தெரியுமா, சினிமா தெரியுமா, விஜயை தெரியுமா.... ஏண்டா உங்களுடைய அரிப்புக்கு, அதுகளை கூட்டிக் கொண்டு போய் அதுகளின் உயிரை எடுக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

556249642_813752644511887_33501653026508

  • கருத்துக்கள உறவுகள்

[ நடந்தவை கோர விபத்துகள் அல்ல. திட்டமிடாத கொலைகள் எனச் சட்டத்தின் மொழி எழுதினாலும், முட்டாள் தனமான ஒருவனின் சொல்லைக் கேட்டுக் கூட்டம் கூட்டிச் செய்யப்பட்ட படுகொலைகள் இது என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும்.

தமிழ்நாடும் தமிழ் மக்களும் காப்பாற்றப்படவேண்டும். ]

சரியான கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/p/1ZHehqq6fZ/?mibextid=wwXIfrஎச்சரிக்கை - கொலைகாரத் திமுக

சந்திரன் ராஜாவின் பதிவு

100% திட்டமிட்ட அரசியல்

பலிகள்தான்.ஒரு ஒழுங்கான திட்டம் தெரிகிறது.செந்தில் பாலாஜி உட்பட காவல்துறை அதிகாரிகள் மிக சரியாக 8.15 நிமிடங்களில் அங்கே ஆஜர்..அதாவது மாவட்ட SP மட்டும் அல்ல வெளியே இருந்து உயர் அதிகாரிகள் வரை..

68 கள்ள சாராய படுகொலைக்கு கள்ள குறிச்சி பக்கம் எட்டி பார்க்காமல் இருந்த ஸ்ரீமதி மரணம் தொடர்பாக எழுந்த கலவரத்தின் போது கூட வெளியே தலை காட்டாமல் பதுங்கி இருந்த வயிற்று பலி மகேஸ்..சூத்திரதாரியான செந்தில் நெஞ்சில் முகம் புதைத்து அழுகிறார்....

துபாய்க்கு பாலிடாயில் சென்றால் அதாவது பெத்தம்மாக்களை மாதத்தில் பலமுறை சந்திக்கச் சென்றாலும் வராத செய்தி குறிப்பு..இன்று குடும்பம் சகிதமாக அதிகமாக ஊடகங்களில் காட்டப்படுகிறது.

குறிப்பாக அட்டென்சனுக்காக பாலிடாயில் மகளைக்கூட காட்டுகிறார்கள்.

திராவிடர்கள் எதிர் பார்த்ததோ ஒன்றிரண்டு பலிகள்.

அதை தொடர்ந்து விஜய்யை மெளனிக்க வைப்பது ..

ஆனால் நிகழ்ந்ததோ..மாபெரும் படுகொலை..!

மாவடியன் கோயில் தெரு என்கிற பகுதியில் உள்ள திமுகவின் ரவுடிகளின் தலைமையில்தான் இந்த கலவரம்

வித்திடப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.

அங்கேதான் முதலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருக்கிறது...

அதை தொடர்ந்து காவல்துறை கூட்டத்திற்குள் தடியடி நடத்தி இருக்கிறார்கள்..

தொலைக்காட்சிகளின்

பல டிரோன் ஷாட்டுகள் அதை உறுதி செய்து இருக்கிறது.

அதற்குள் சொல்லி வைத்த மாதிரி

திடல் திண்ணி முன்களப்ஸ்கள்

ஒரே மாதிரிக் கூவுகிறார்கள்..

ரைட்டப்கள் எழுதுகிறார்கள்..

சரி இப்போது 10 லட்சம் நிவாரணம்

பொம்மையார் அறிவிக்கிறார்

நேரடியாக களத்திற்கு வருகிறாராம்

வாட் நெக்ஸ்ட்..

அல்லு அர்ஜூனை போல விஜய்யை கைது செய்ய போகிறார்களா..?

நிச்சயமாக மாட்டார்கள் ,செய்ய முடியாது

ஏற்கனவே சாமனியர்கள் இதன் பின்னணி திமுகதான் என்பதை உணர்ந்து காறி உமிழ்கிறார்கள்.

பொது மக்களின் கோபம் விஜய்யின் மேல்வராமல் திமுகவின் திட்டமிட்ட படுகொலை என்பதாகத்தான் இருக்கிறது.

கட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது..

ஜெனரேட்டர் வயர் கட் செய்யப்படுகிறது

தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்படுகிறது...

இதையெல்லாம் இயல்பான கூட்ட நெரிசல் என்று சொன்னால் நம்புவதற்கு மக்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை.

அரசு இயந்திரம் மொத்தமாக செயலிழந்து இருப்பதைத்தான் காட்டுகிறது அதில் உள்ள திட்டமிடல் கொஞ்சம் தட்டையாக அறிவு இருப்பவர்களுக்குக்கூட புரியும்...!

ஆக விஜய்யை கைது செய்தாலும்

பொம்மையாருக்கு பிரச்சினை..

இனி விஜய் திமுக மிரட்டலுக்கு பயந்து

திமுக சார்பு நிலை எடுத்தாலும் அதுவும் எந்தவிதத்திலும் பயன் தராது..

ஆக திராவிடர்களின் கொடூரமான திட்டம் தோல்வியில்தான் முடிந்து இருக்கிறது மக்கள்தான் பலியாடுகள் ஆகி இருக்கிறார்கள்...!

பிரதமர்,உள்துறை அமைச்சர் ,ஜனாதிபதி உட்பட அனைவரும் இதை உற்றுக் கவனிக்கிறார்கள் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.

காலையில் எடப்பாடியார் வருகிறார்..

CBI விசாரணை நிச்சயமாக கோருகிறார்..

ஓங்கோல் குடும்பத்தின் கடைசி அதிகார பசிக்கான பலியாக இது இருக்கட்டும்.தமிழர்கள் இந்தக் குடும்பத்தின் கொடூர அதிகார பசியில் இருந்து தப்பிக்க வேண்டும்...!

2009 ல் லட்சக்கணக்கான உலக தமிழர்கள் அழிக்க படுவதற்குக் காரணம் துணைபோன திமுக.

கடந்த நான்கு வருடத்தில் விமான கண்காட்சியில் 5 பேர் பலி கள்ளக்குறிச்சியில் 68 பேர் பலி என்று

தொடர்ந்து தமிழகத்தில் பலிகளை அரங்கேற்றுகிறார்கள்..!

இதில் வேடிக்கை என்னவென்றால் அதே அருணா ஜெகதீசன் குழு விசாரணைக்கு உத்தரவாம் .

அவர் குற்றவாளி என்று சொன்ன அதிகாரிக்குத்தான் திமுகவினர் பதவி உயர்வு கொடுத்தார்கள்.காலக்கொடுமை

ஆக தீய திராவிடர்களின் திட்டங்கள் நெல் முனையளவும் பலிக்கவில்லை.அப்பாவிகளுக்கு ஏற்பட்ட மரணங்கள் மட்டுமே கொடூரமானது.மத்திய ஒன்றிய அரசு இந்த விடயத்திலும் அமைதியாக கடந்து சென்றால்...அவர்கள் தமிழ் நாட்டில் பிஜேபி என்கிற கட்சி எந்த காலத்திலும் மக்களின் நம்பகத்தன்மையை அடைய போவதில்லை.

நிச்சயமாக காவல்துறை அமைச்சர் மீதும்

தமிழ் நாட்டு உள்துறை அமைச்சர் மீதும்

மத்திய அரசு உடனடியாக விசாரணக்கு உட்படுத்தபட வேண்டும்..!

இங்கே நிகழ்ந்து இருப்பது மிகப்பெரிய

மனித சூறையாடல்.

நீதிமன்றம் தன்னார்வமாக முன்வந்து

CBI விசாரணக்கு உத்தரவிடவேண்டும்..!

திராவிடர்களின் அத்தனை கருணாநிதித்தனமும்..செந்தில் பாலாஜி போன்ற அயோக்கிய அரசியல் அடியாட்களின் வேடமும் கலைய வேண்டும்..

தமிழர்கள் ஒன்றும் அரசியல் பலியாடுகள் அல்ல என்கிற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் எற்பட வேண்டும்..!

விஜய் போன்றவர்கள் அரசியல் செய்யும் முன்பு ...தன்னோடு இருக்கும் டபுள் ஏஜெண்டுகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்

திமுகவின் கையாள்களான

புஸி,ஆதவ் ரெட்டி யெல்லாம்

முட்டு சந்தில் தான் கொண்டு வந்து விடுவார்கள் என்று பல முறை எழுதி இருக்கிறேன் இதுதான் அந்த முட்டு சந்து..!

விஜய் ஓடி ஒழியாமல் தைரியமாக இந்த சூழலை எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது..!

இல்லாவிட்டால் அரசியல் துறவறம் போவது விஜய்யை நம்பும் அப்பாவி

மக்களுக்கு நல்லது..

பின்குறிப்பு: திமுக கையில் அதிகாரம் இருப்பது தமிழர்கள் தங்களுக்கு தாங்களே செய்துகொள்ளும் தற்கொலைக்குச் சமம்.

விஜைக்கு இக்கட்டான நேரத்தில் எல்லாம் சீமான் தோள் கொடுக்கிறார்.அண்ணன் தம்பிக்குள் ஆயிரம் இருக்கும்ஆனால் உற்ற நேரத்தில் தோள் கொடுக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.