Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Zihran-Mamdani-New-York.webp?resize=750%

நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் ஆளுனர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர்.

கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி ஆரம்பமான வாக்குப்பதிவின் முடிவில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகரின் வாழ்க்கைச் செலவு மற்றும் மலிவுத் திறன் போன்ற முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இவரது பிரச்சாரம் அமைந்திருந்தது.

தனது முற்போக்கு கருத்துகளால் நியூயோர்க் இளைஞர்கள், இடதுசாரி கருத்துடையவர்கள் மத்தியில் ஸோரானுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, 1969 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகளவிலான வாக்குகளாக 20 இலட்சம் வாக்குகள் பதியப்பட்டதாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

இவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (தந்தை குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம்; தாய் ஒடிசாவைச் சேர்ந்த இந்து).

இதனிடையே, ஸோரான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும்நிலையில், மேயர் தேர்தலில் ஸோரான் வெற்றி பெற்றால், நியூயோர்க் நகரத்துக்கு குறைந்தபட்ச நிதியைத் தவிர அனைத்து நிதியையும் நிறுத்தி விடுவதாக ட்ரம்ப் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1452021

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு முஸ்லிம், முஸ்லிம் வெறுப்பை எதிர்த்துப் போராடுவோம் - மேயராக தெரிவானபின் சொஹ்ரான் மம்தானி உரை

நான் ஒரு முஸ்லிம். நான் ஒரு ஜனநாயக சோசலிஸ்ட். முஸ்லிம் வெறுப்பை எதிர்த்துப் போராடுவோம்.  நான் இளமையாக இருக்கிறேன். நாங்கள் ஒரு அரசியல் வம்சத்தை வீழ்த்திவிட்டோம்.  நியூயார்க் குடியேறிகளின் நகரமாகவே இருக்கும். குடியேறிகளால் கட்டமைக்கப்பட்ட, குடியேறிகளால் இயக்கப்படும். இன்றிரவு முதல், ஒரு குடியேறியவரால் வழிநடத்தப்படும் நகரம். (நியூயார்க் நகர மேயராக தெரிவான பின் சொஹ்ரான் மம்தானி  ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

https://www.jaffnamuslim.com/2025/11/blog-post_12.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவைத் தந்த நியூ யோர்க் தேர்தல்👍.

இவர் திட்டமிடும் எல்லா விடயங்களையும் நடைமுறைப்படுத்த இயலாது. ஆனால், பலஸ்தீன ஆதரவு, இஸ்ரேல் எதிர்ப்பிற்கு ஒரு தலைமைக் குரலாக இருத்தல், குடியேறிகளை வரவேற்கும் போக்கு, என்பன காரணமாக என் போன்ற குடியேறிகளின் முழுமையான ஆதரவு மம்தானிக்கு!

பி.கு: ட்ரம்பின் சிவப்புக் கட்சிக் காரர்களுக்கு செம அடி நேற்று, நியூ ஜேர்சியில் எப்போதும் போல நீலக் கட்சியின் பெண் ஆளுனர் 15% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி (கமலா நியூஜேர்சியில் அதிபர் தேர்தலை வென்றது ட்ரம்பை விட 6% வாக்குகளால் தான், எனவே இது சாதனை!)

வேர்ஜினியா மாநில ஆளுனர் பதவி சிவப்புக் கட்சியிடம் இருந்து நீலக் கட்சியிடம் - இன்னொரு பெண் ஆளுனரிடம்- சென்று விட்டது.

பென்சில்வேனியாவின் உச்ச நீதி மன்றத்தின் லிபரல் நீதிபதிகள் மூவர் சிவப்புக் கட்சியினரின் பிரச்சாரத்தையும் மீறி வென்றிருக்கின்றனர் -ட்ரம்ப் வந்து தேர்தல் மோசடி வழக்குப் போடும் போது குட்டி அனுப்பி விடுவார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

நான் ஒரு முஸ்லிம், முஸ்லிம் வெறுப்பை எதிர்த்துப் போராடுவோம் - மேயராக தெரிவானபின் சொஹ்ரான் மம்தானி உரை

நான் ஒரு முஸ்லிம். நான் ஒரு ஜனநாயக சோசலிஸ்ட். முஸ்லிம் வெறுப்பை எதிர்த்துப் போராடுவோம்.  நான் இளமையாக இருக்கிறேன். நாங்கள் ஒரு அரசியல் வம்சத்தை வீழ்த்திவிட்டோம்.  நியூயார்க் குடியேறிகளின் நகரமாகவே இருக்கும். குடியேறிகளால் கட்டமைக்கப்பட்ட, குடியேறிகளால் இயக்கப்படும். இன்றிரவு முதல், ஒரு குடியேறியவரால் வழிநடத்தப்படும் நகரம். (நியூயார்க் நகர மேயராக தெரிவான பின் சொஹ்ரான் மம்தானி  ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

https://www.jaffnamuslim.com/2025/11/blog-post_12.html

மம்தானியின் முழு உரையும் கீழே இருக்கும் இணைப்பில் இருக்கின்றது. முழு உரையின் சில பகுதிகளை வெட்டி மேலே உள்ளதை உருவாக்கியிருக்கின்றார்கள். மம்தானியின் முழு உரையின் பொருள் வேறு. அவரை நியூயோர்க் மக்கள் தெரிவு செய்ததன் பின்னணியும் அதுவே. அதிபர் ட்ரம்பிற்கும், அவரது கட்சியினரின் அர்த்தமில்லாத நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளுக்கு எதிரான ஒரு மனநிலையே இன்று இங்கு நிலவுகின்றது.

ஏதோ ஒன்று அல்லது சில அடையாளங்களுடன் இந்த வெற்றி மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக, இது பெரும்பாலான, வேறு வேறு அடையாளங்கள் கொண்ட மக்களின் இன்றைய அரசுக்கு எதிரான ஒரு தீர்மானம். எந்த ஊடகங்களாலும் திரிபுபடுத்த முடியாத வாக்குமூலம் ஒன்றை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள்.

https://www.theguardian.com/us-news/2025/nov/05/zohran-mamdani-victory-speech-transcript

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மம்தானி வெற்றி பெற்றது பெரிய விடமல்ல.ஏனெனில் அமெரிக்கா குடியேறிகளால் வளர்ந்த/வளர்க்கப்பட்ட நாடு. எனவே அங்கு சகல கலாச்சாரங்களும் மதங்களும் இருக்கும்.

இங்கே மம்தானிக்கு வாக்களித்தவர்கள் யார் என்பதை கணக்கெடுத்தாலே பல உண்மைகள் வெளி வரலாம். நியூயோர்க் நகரில் எவ்வளவு வீதமான வெளிநாட்டு வம்சாவளிகள் வாழ்கின்றனர் என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

afp-68fc083fc917-1761347647.webp

எனது பார்வையில் மம்தானி சாதாரண மனிதனாக தெரிந்தாலும்..... உலக முஸ்லீம்கள் இந்த வெற்றியை தங்கள் வெற்றியாக கொண்டாடும் போதுதான் நான் பதட்டப்படுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

முழு உரையின் சில பகுதிகளை வெட்டி மேலே உள்ளதை உருவாக்கியிருக்கின்றார்கள். மம்தானியின் முழு உரையின் பொருள் வேறு.

எங்களில் சிலர் கமலா ஹாரிஸ்சை வட மாகாணத்தை சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடியது போன்று அதை விட தீவிரமாக மதத்தை கொண்டாடுகின்ற தனது இனம் தான் பின்பற்றுகின்ற முஸ்லிம் மதம் என்று சொல்கின்ற இலங்கையில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இருக்கின்றார்கள் அவர்கள் சோர்வடைந்து போகாமல் இருப்பதற்கு சந்தோசபட வைத்து நம்பிக்கை கொடுத்து உற்சாகபடுத்த தான் அவர்கள் பத்திரிக்கை அப்படி எழுதியுள்ளது. அவர்கள் சொல்ல வருவது அமெரிக்க நியூயோர்க் நகரமே முஸ்லிம் மதத்தின் கட்டுபாட்டின் கீழ் வந்துள்ளது.அடுத்து அமெரிக்க நாடு. அமெரிக்காவை முஸ்லிம் மதம் ஆண்டால் உலகையே முஸ்லிம் மதம் ஆட்சி செய்யும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அமெரிக்காவை முஸ்லிம் மதம் ஆண்டால் உலகையே முஸ்லிம் மதம் ஆட்சி செய்யும்

இப்படியான ஒரு நப்பாசை அமெரிக்காவிற்கு வெளியே இல்லாமல் இல்லை 😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தல் முடிவுகளை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், ஆளும் குடியரசுக் கட்சிக்கு சார்பானவர்கள் மிக அதிக இடைவெளிகளில் தோற்றுப் போயிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. அந்த இடைவெளியே அதிபர் ட்ரம்பையும், அவருடைய கட்சியினரையும் பதற்றப்படவைக்கின்றது. 'வாக்குச் சீட்டுகளில் என் பெயர் இல்லை. அதனாலேயே தோற்றோம்..................' என்று அதிபர் ட்ரம்ப் காரணம் சொல்வது அவரது சிறுபிள்ளைத்தனமான கூற்றுகளில் ஒன்று. நாட்டின் அதிபராக, குடியரசுக்கட்சியின் முகமாக அவர் எல்லா தேர்தல்களிலும் குடியரசுக்கட்சியின் சார்பாக நிற்கின்றார். அதிபர் ட்ரம்பிற்கு மட்டும் இல்லை, எல்லா நாடுகளிலும், ஆட்சியில் இருக்கும் எல்லா தலைவர்களுக்கும் இது பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டீன், ரசோ அண்ணாக்களிடம் ஒரு கேள்வி (ஏனைய அமெரிக்க வாழிகளும் பதில் சொல்லலாம்).

  1. இது அவ்வளவு பெரிய வெற்றிதானா?

    ஜூலியானி போல பல ரிப்பளிக்கன் மேயர்கள் இருந்தது உண்மை எனிலும் 2016க்கு பின், டிரம்ப் வெறுப்பின் தாயகமாக திகழ்வது நியூயார்க் அல்லவா? பதவி இழந்த பின் நியூயோர்க் திரும்பாமல் புளோரிடாவிற்கு போகும் அளவுக்கு டிரம்பிற்கு நியூயோர்க்கில் எதிர்ப்பு எனும் போது - இது வெறுமனே liberal east coast நகரம் ஒன்றில் அதுவும் வெள்ளை அல்லாத குடியேறிகள் நிறைந்த நகரம் ஒன்றில் ஜனநாயக கட்சி அடைந்த வெற்றி எனவே கருதமுடியும் என நான் நினைக்கிறேன். 2010-2024 கன்சவேடிவ் ஆட்சியில் இரண்டு வருடம் தவிர மீதி காலம் எல்லாம் சதிக் கான் தான் இலண்டன் மேயர் ஆனால் தேசிய மட்டத்தில் இது ஒரு பாதிப்பையும் தரவில்லை. மாறாக பிரெக்சிற் உட்பட அதி வலதுசாரி கொள்கைகளே வெற்றி பெற்றன.

  2. அதேபோல் நான் எப்போதும் நம்புவது, ஒபாமா வந்திராவிட்டால், டிரம்ப் வந்திருக்க மாட்டார் என. மக்கெய்ன் 2 தரமும் வென்றிருந்தால், அடுத்த தேர்தலில் டிரம்ப் போல ஒருவருக்கு 2016 இல் பிரைமறிகளில் கிடைத்த எதிர்பாராத ஆதரவு கிடைத்திருப்பது கஸ்டம். இதே போல் ஒரு நிலையை மம்தானி வெற்றியை வைத்து டிரம்ப் உருவாக்குவார் என்பது என் எண்ணம். மம்தானிக்கும் வாய் கொஞ்சம் ஓவர்தான். குறிப்பாக தனது மதத்தை தூக்கி பிடிக்கும் பாங்கு. In god we trust எல்லாம் சரிதான், ஆனால் அது யேசுவுக்கு மட்டுமே😂.

    மம்தானியை வைத்து டிரம்ப் சமய ரீதியில் ஆட்டம் ஒன்று ஆடி (நியூயோர்க்குக்கு தேசிய படையை கூட அனுப்பி) - தனது 3ம் தவணையை அடைந்து விடக்கூடும் என நீங்கள் நினைக்கவில்லையா?

    பிகு

    நாடளாவிய அமெரிக்க மக்கள் போக்கு இனி வரும் midterm elections இல்தான் ஓரளவு புலப்படும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

ஜஸ்டீன், ரசோ அண்ணாக்களிடம் ஒரு கேள்வி (ஏனைய அமெரிக்க வாழிகளும் பதில் சொல்லலாம்).

  1. இது அவ்வளவு பெரிய வெற்றிதானா?

  2. மம்தானியை வைத்து டிரம்ப் சமய ரீதியில் ஆட்டம் ஒன்று ஆடி (நியூயோர்க்குக்கு தேசிய படையை கூட அனுப்பி) - தனது 3ம் தவணையை அடைந்து விடக்கூடும் என நீங்கள் நினைக்கவில்லையா?

    பிகு

    நாடளாவிய அமெரிக்க மக்கள் போக்கு இனி வரும் midterm elections இல்தான் ஓரளவு புலப்படும் என நினைக்கிறேன்.

தேர்தல்கள் நடந்த இடங்கள் எல்லாமுமே ஜனநாயக்கட்சி செல்வாக்குள்ள இடங்களே - நியூயோர்க், நியூ ஜெர்சி, வர்ஜினியா, கலிஃபோர்னியா. ஜனநாயக்கட்சி வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டாலும், ஜனநாயக்கட்சி பெற்ற அதிகமான வாக்கு வித்தியாசமே இதை ஒரு கொண்டாடும் வெற்றியாக மாற்றியுள்ளது, கோஷான்.

அதிபர் ட்ரம்பும், அவரது தீவிர ஆதரவாளர்களும் மம்தானியின் பேச்சை உதாரணமாக காட்டவே போகின்றார்கள். மதம் மட்டும் இல்லை, அவர் ஒரு தீவிர சோஷலிஸ்ட் என்பதும் பிரச்சாரம் ஆக்கப்படப் போகின்றது. ஆனாலும் உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவுகளும், பொருட்களின் விலைகளும், வேலையில்லாமல் போகின்றவர்களின் எண்ணிக்கையும் குடியரசுக்கட்சிக்கு எதிரான ஒரு பொது மனநிலையை உண்டாக்கியிருக்கின்றது போன்றே தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் வெற்றிதான் மறுப்பதற்கில்லை. ஆனால், இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், மம்தானியின் பூர்வீகம் உகண்டா, இந்தியா, முஸ்லிம் என்பதை எல்லாம் விட, அவர் ஒரு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை கவனத்தில் கொள்க. மேலும் அவர் தேர்தலில் நின்ற இடம் டெஸ்சாசோ புளோரிடாவோ அல்ல, அது குடியேற்றவாசிகள் நிறைந்து வாழும் நியூயார்க் மாநகரம் என்பதையும் கவனத்தில் கொள்க. ஆக, பாம்பு பரமசிவனின் கழுத்தில் விழுந்ததால் சௌக்கியமாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

577002567_10238984932232570_398148034099

மம்தானி மனைவியின் இஸ்லாம் உடை பற்றி ஆராய இன்னும் ஒருத்தனும் கிளம்பலையா?

Ashroff Shihabdeen

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

577002567_10238984932232570_398148034099

மம்தானி மனைவியின் இஸ்லாம் உடை பற்றி ஆராய இன்னும் ஒருத்தனும் கிளம்பலையா?

Ashroff Shihabdeen

இவரின் தாயார் ஒரு அருமையான திரைப்பட இயக்குனர். நானா பட்டேகர் நடித்த சலாம் பாம்பே எனும் திரைப்படம்தான் அவரின் முதலாவது திரைப்படம்.

என் அபிமான முதல் 10 படங்களுக்குள் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

577002567_10238984932232570_398148034099

மம்தானி மனைவியின் இஸ்லாம் உடை பற்றி ஆராய இன்னும் ஒருத்தனும் கிளம்பலையா?

Ashroff Shihabdeen

அது காத்தான்குடி பக்கமிருந்துதான் ..முதலில் கிளம்பும் ..அது அப்படியே உடனடுயாக யாழில்வரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

இவரின் தாயார் ஒரு அருமையான திரைப்பட இயக்குனர். நானா பட்டேகர் நடித்த சலாம் பாம்பே எனும் திரைப்படம்தான் அவரின் முதலாவது திரைப்படம்.

என் அபிமான முதல் 10 படங்களுக்குள் வரும்.

இவரின் தந்தை உகண்டா முஸ்லீம் என்றும்… அதில் தாயாரின் பெயரை இந்திய இணையம் ஒன்றில் பார்க்க மலையாள இந்துக்களின் பெயர் போல இருந்தது. உண்மையா என தெரியவில்லை.

13 minutes ago, alvayan said:

அது காத்தான்குடி பக்கமிருந்துதான் ..முதலில் கிளம்பும் ..அது அப்படியே உடனடுயாக யாழில்வரும்

காத்தான்குடிகாரருக்கு இந்த நியூயோர்க் செய்தி எட்டவில்லைப் போலுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை, ஜூம்மா தொழுகையின் பின்…. அந்தப் பெண்ணின் உடையை பிரித்து மேய்ந்து விடுவார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

நாளை வெள்ளிக்கிழமை, ஜூம்மா தொழுகையின் பின்…. அந்தப் பெண்ணின் உடையை பிரித்து மேய்ந்து விடுவார்கள். 😂

எப்படி?

29 minutes ago, goshan_che said:

இவரின் தாயார் ஒரு அருமையான திரைப்பட இயக்குனர். நானா பட்டேகர் நடித்த சலாம் பாம்பே எனும் திரைப்படம்தான் அவரின் முதலாவது திரைப்படம்.

என் அபிமான முதல் 10 படங்களுக்குள் வரும்.

எனக்கு பிடித்த Kama Sutra: A Tale of Love படத்தையும் இவரின் அம்மாதானே இயக்கினார்? 😊😊😊❣️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

எப்படி?

மசூதியில் வைத்து… மௌலவி சொன்னால், பக்கிகள் பாய்ந்து பிறாண்டி விடும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

ஜஸ்டீன், ரசோ அண்ணாக்களிடம் ஒரு கேள்வி (ஏனைய அமெரிக்க வாழிகளும் பதில் சொல்லலாம்).

  1. இது அவ்வளவு பெரிய வெற்றிதானா?

    ஜூலியானி போல பல ரிப்பளிக்கன் மேயர்கள் இருந்தது உண்மை எனிலும் 2016க்கு பின், டிரம்ப் வெறுப்பின் தாயகமாக திகழ்வது நியூயார்க் அல்லவா? பதவி இழந்த பின் நியூயோர்க் திரும்பாமல் புளோரிடாவிற்கு போகும் அளவுக்கு டிரம்பிற்கு நியூயோர்க்கில் எதிர்ப்பு எனும் போது - இது வெறுமனே liberal east coast நகரம் ஒன்றில் அதுவும் வெள்ளை அல்லாத குடியேறிகள் நிறைந்த நகரம் ஒன்றில் ஜனநாயக கட்சி அடைந்த வெற்றி எனவே கருதமுடியும் என நான் நினைக்கிறேன். 2010-2024 கன்சவேடிவ் ஆட்சியில் இரண்டு வருடம் தவிர மீதி காலம் எல்லாம் சதிக் கான் தான் இலண்டன் மேயர் ஆனால் தேசிய மட்டத்தில் இது ஒரு பாதிப்பையும் தரவில்லை. மாறாக பிரெக்சிற் உட்பட அதி வலதுசாரி கொள்கைகளே வெற்றி பெற்றன.

  2. அதேபோல் நான் எப்போதும் நம்புவது, ஒபாமா வந்திராவிட்டால், டிரம்ப் வந்திருக்க மாட்டார் என. மக்கெய்ன் 2 தரமும் வென்றிருந்தால், அடுத்த தேர்தலில் டிரம்ப் போல ஒருவருக்கு 2016 இல் பிரைமறிகளில் கிடைத்த எதிர்பாராத ஆதரவு கிடைத்திருப்பது கஸ்டம். இதே போல் ஒரு நிலையை மம்தானி வெற்றியை வைத்து டிரம்ப் உருவாக்குவார் என்பது என் எண்ணம். மம்தானிக்கும் வாய் கொஞ்சம் ஓவர்தான். குறிப்பாக தனது மதத்தை தூக்கி பிடிக்கும் பாங்கு. In god we trust எல்லாம் சரிதான், ஆனால் அது யேசுவுக்கு மட்டுமே😂.

    மம்தானியை வைத்து டிரம்ப் சமய ரீதியில் ஆட்டம் ஒன்று ஆடி (நியூயோர்க்குக்கு தேசிய படையை கூட அனுப்பி) - தனது 3ம் தவணையை அடைந்து விடக்கூடும் என நீங்கள் நினைக்கவில்லையா?

    பிகு

    நாடளாவிய அமெரிக்க மக்கள் போக்கு இனி வரும் midterm elections இல்தான் ஓரளவு புலப்படும் என நினைக்கிறேன்.

ரசோவின் பதிலோடு உடன்படுகிறேன், அதற்கு மேலதிகமாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்:

1. "நியூயோர்க் நகரில் ஒரு கழுதையை நீலக் கட்சி நிறுத்தினாலும் அது வெற்றி பெறும்" என ஒரு ஜோக் இருக்கிறது. அது உண்மை என்றாலும், இந்த தேர்தலில் கூமோ (Andrew Cuomo) என்ற முன்னாள் நியூயோர்க் மாநில ஆளுனரும் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டார். லிபரல், நீலக் கட்சிக் காரரான அவர் போட்டியிடக் காரணமே, மம்தானியின் சோசலிஸ்ட் கொள்கை, முஸ்லிம் மத அடையாளம், இஸ்ரேல் எதிர்ப்பு என்பன நீலக்கட்சியின் வாக்குகளை மம்தானி பக்கமிருந்து தன் பக்கம் திருப்பும் என்ற நம்பிக்கை தான். அப்படியிருந்தும் 9% வித்தியாசத்தில் மம்தானிக்கு வெற்றி என்பது எவ்வளவு தூரம் அவர் மீது சுமத்தப் பட்ட முத்திரைகள் வேலை செய்யவில்லை எனக் காட்டுகிறது.

இன்னொரு ஜோக்கும் நடந்தது. தேர்தலுக்கு இரு நாட்கள் முன்பு ட்ரம்ப் "மம்தானியை விட கூமோவை நான் ஆதரிக்கிறேன்!" என்று ஒரு "பாரிய பாறாங்கல்லை" கூமோவின் கழுத்தில் கட்டி விட்டார்😂 - அன்றே கூமோவின் வெற்றி வாய்ப்பு பூச்சியமாகி விட்டது!

2. வேர்ஜினியா மாநிலம் எப்போதும் சிவப்பு நீலம் என மாறிக் கொண்டிருக்கும் ஒரு மாநிலம். அங்கே நீலக் கட்சியின் பெண் ஆளுனரும், மாநில சட்டமா அதிபராக ஒரு ஆபிரிக்க அமெரிக்கரும் வென்றிருக்கிறார்கள். எனவே, இது நியூயோர்க்கை விட முக்கியமான ஒரு அமிலப் பரிசோதனை முடிவு எனலாம்.

3. நியூஜெர்சி- இது நான் வசிக்கும் மாநிலம். இதுவும் பல ஆண்டுகளாக நீல மாநிலம், ஆனால் சிவப்புக் கட்சியினர் ஆளுனர்களாக இருந்திருக்கின்றனர் - 2018 வரையில் இது சாத்தியமாக இருந்தது. போன வருடம் அதிபர் தேர்தலில், நியூஜேர்சி மாநிலத்தை வெறும் 6% வாக்கு வித்தியாசத்தில் கமலா ட்ரம்பை வென்றார் . அப்போதே நியூஜேர்சி சிவப்புக் கட்சியின் பக்கம் சாய்கிறதோ என அச்சம் வெளிப்பட்டது. ஆனால், இந்த ஆளுனர் தேர்தலில், ஷெரில் 15% வித்தியாசத்தில் சிவப்புக் கட்சி வேட்பாளரான ட்ரம்ப் விசிறியை வென்றிருக்கிறார். இந்த வாக்கு வித்தியாசம் தான் முக்கியமானது.

நியூயோர்க் போலவே லண்டனும் ஒரு உலக ரீதியில் முக்கியமான நகரம் - சந்தேகமில்லை. ஆனால், அமெரிக்காவினதும் உலகினதும் பொருளாதார தலை நகரம் என்ற வகையில் ஒரு சோசலிஸ்ட் வென்றிருப்பது கவனத்திற்குரிய ஒன்று என நினைக்கிறேன். அச்சமின்றி, யூதர்களின் நிறுவனங்கள் ஆளும் நியூயோர்க் நகரிலேயே இஸ்ரேல் எதிர்ப்பை வெளிக்காட்டிய படி மம்தானி வென்றிருக்கிறார் என்பது இனப்படுகொலையை ஆதரிக்கும் தீவிர இஸ்ரேலியர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும் ஒரு விடயம்!

  • கருத்துக்கள உறவுகள்

"நிறைய இழக்க நேரிடும்" - மம்தானிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை

06 Nov, 2025 | 01:29 PM

image

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானிக்கு (Zohran Mamdani), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அமெரிக்க அரசுடன் மம்தானி "அன்பாக நடந்துகொள்ள வேண்டும்" என்றும், ஒத்துழைக்கவில்லை என்றால் அவர் "நிறைய இழக்க நேரிடும்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில், மம்தானியின் வெற்றிக்குப் பின்னரான பேச்சு குறித்து டிரம்ப் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:

"மம்தானி தனது வெற்றி உரையின் போது பேசியது மிகவும் கோபமான பேச்சு என்று நான் நினைக்கிறேன். அதில் நிச்சயமாக என் மீது கோபமாக இருந்தது. அவர் ஒரு மோசமான தொடக்கத்திற்குச் சென்றுவிட்டார். அவர் என்னிடம் மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் அமெரிக்க அரசுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். மம்தானி ஒத்துழைக்கவில்லை என்றால் அவர் நிறைய இழக்க நேரிடும். நியூயோர்க் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே நாங்கள் அவர்களுக்கு உதவுவோம்." (முன்னதாக, மம்தானி வெற்றி பெற்றால் மத்திய நிதியுதவிகளைக் குறைப்பேன் என்று டிரம்ப் அச்சுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது).

மம்தானியின் கொள்கைகளைத் தொடர்ந்து 'கம்யூனிசம்' என்று விமர்சித்து வரும் டிரம்ப், தனது பேட்டியில் மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தினார்,

"ஆயிரம் ஆண்டுகளாக, கம்யூனிசம் என்ற கருத்து வேலை செய்யவில்லை. இந்த முறை அது வேலை செய்யுமா என்று நான் சந்தேகிக்கிறேன். அது உண்மையில் ஒருபோதும் வேலை செய்யவில்லை. நியூயோர்க்கில் கம்யூனிசத்தில் இருந்து தப்பி ஓடுபவர்களுக்கு விரைவில் புளோரிடா நகரம் அடைக்கலமாக இருக்கும்."

மம்தானி, தனது வெற்றியை அடுத்து ஆற்றிய உரையில் ஜனாதிபதி டிரம்பை நேரடியாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது உரையில், 

"நீங்கள் பார்ப்பது எனக்குத் தெரியும் டொனால்ட் டிரம்ப். நான் உங்களுக்காக நான்கு வார்த்தைகள் வைத்திருக்கிறேன், சத்தத்தைக் கூட்டுங்கள் (Turn the volume up)" என்று சவால் விடுத்திருந்தார். மேலும், டிரம்ப் போன்ற கோடீஸ்வரர்கள் வரி ஏய்ப்பு செய்வதை நிறுத்தி, நிலப்பிரபுக்கள் தங்கள் குத்தகைதாரர்களைச் சுரண்டுவதைத் தடுக்க, ஊழல் கலாச்சாரத்தை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம்" என்றும் அவர் சூளுரைத்தார்.

மம்தானியின் வெற்றி, அமெரிக்க அரசியலில் இரு துருவங்களுக்கிடையேயான மோதலை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/229631

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க் மேயர் தேர்தலில் ஜோரான் மம்தானி வெற்றி

நவம்பர் 5, 2025

பாரதி ஆனந்த்

35-5.jpg?fit=678%2C395&ssl=1

மெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு, வெற்றி உரையில் ட்ரம்ப்பை தெறிக்கிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார் ஜோரான் மம்தானி (Zohran Mamdani). இவர் நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும், முதல் இந்திய அமெரிக்க முஸ்லிம் என்பதும், இந்த நூற்றாண்டில் நியூயோர்க்கின் இளம் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ஜோரான் மம்தானி? – நீங்கள் ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற திரைப்படங்கள், ‘ஸோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ போன்ற ஆவணப்படம் பற்றி அறிந்திருந்திருந்தால், அதனை இயக்கிய மீரா நாயரையும் தெரிந்திருக்கும். அந்த பிரபல இயக்குநர் மீரா நாயர் மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த மஹமூத் மம்தானியின் மகன் தான் இந்த ஜோரான் மம்தானி.

34 வயதான ஜோரான் மம்தானி ஒரு சட்ட வல்லுநர். இவர் தனது தேர்தல் உரைகளில், “அமெரிக்க அரசியலில் மாற்றம் தேவை. இது மக்களுக்கான, அவர்களின் தேவைகளுக்கான அரசியலாக இருக்க வேண்டுமே தவிர உயரடுக்கு மக்களுக்கானதாக இருக்கக் கூடாது” என்று கூறியிருந்தார். நியூயோர்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மம்தானி, அபார வெற்றி பெற்றுள்ளார். 20 இலட்சம் வாக்குகளுக்கும் மேல் பெற்று அபார வெற்றிச் சரித்திரத்தை பதிவு செய்துள்ளார். ஜனவரி மாதம் மம்தானி நியூயோர்க் மேயராக பதவியேற்பார்.

கவனம் ஈர்த்த வெற்றி உரை: மம்தானி தனது வெற்றி உரையில் அப்படி என்னதான் பேசினார்? – “நான் உங்கள் ஆதரவால் மேயராகியுள்ளேன். இனி என் கடமை, ஊழல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது. இந்த ஊழல்தான் ட்ரம்ப் போன்ற பெரும் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்ய வழிவகுத்தது. முதலில் உள்ளூர் அரசியலில் உள்ள ஊழலை ஒழிப்பேன். நான் இந்த நகரின் மேயராக உயரடுக்கு செல்வந்தர்களுக்காக மட்டும் செயல்படுபவராக இல்லாமல், இந்த நகரில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் செயல்படுவேன்.

அதிபர் ட்ரம்ப்புக்கு இன்று நான் சில வார்த்தைகளை சொல்ல விரும்புகிறேன். உங்களை அதிபராக்கிய மக்களுக்கு உங்களை வெளியேற்றவும் தெரியும். இன்றைய இரவு இந்த நியூயோர்க் நகரின் நிண்ட வரலாறாக இருந்த அரசியல் சகாப்தத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். குடியரசுக் கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ கூமோ தோல்வியடைந்துள்ளார். இந்த நாள் நியூயோர்க் நகரில் அரசியலில் ஒரு திருப்புமுனை. இன்றைய தினம், சிலருக்கு மட்டுமே ஆதாயமாக இருக்கு ஓர் அரசியலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் ஓர் இளைஞர். நான் ஒரு முஸ்லிம். நான் ஒரு ஜனநாயக சோஷலிஸ்ட். ஆனால், நான் இதில் எதற்காகவும் மன்னிப்பு கோரப்போவதில்லை.” என்றார். ரமா துவாஜி என்ற சிரிய நாட்டில் பிறந்த ஓவியர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார் மம்தானி.

நேருவை மேற்கோள் காட்டி… – மேலும் தனது உரையில் மம்தானி சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சையும் மேற்கோள் காட்டியிருந்தார். “ஜவஹர்லால் நேருவின் வார்த்தைகளை நான் இப்போது நினைவுகூர்கிறேன். பழையதில் இருந்து புதியததற்குள் புகும்போது ஒரு வரலாற்றுத் தருணம் உருவாகிறது. ஓர் யுகம் முடிந்து, ஒரு தேசத்தின் ஆன்மா ஒலிக்கும்போது ஒரு வரலாறு உருவாகிறது. நாம் இன்று பழையதிலிருந்து புதியதற்குள் அடியெடுத்து வைக்கிறோம்” என்றார்.

ட்ரம்ப் விடுத்திருந்த எச்சரிக்கை என்ன? – முன்னதாக நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் ”நான் சாமானியர்களுக்கான மேயராக இருப்பேன், இன வேற்றுமைக்கு எதிரான மாற்றங்களைக் கொண்டு வருவேன், பொருளாதார சமத்துவமின்மையைப் போக்குவேன், அரசு நடத்தும் மளிகைக் கடைகள் நியூயோர்க்கில் உருவாக்கப்படும், மக்களுக்காக இலவச பேருந்து சேவை வழங்கப்படும், காவல் துறை செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வரப்படும்” என்று பல்வேறு வாக்குறுதிகளை மம்தானி கொடுத்திருந்தார்.

மம்தானி முன்வைத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, பெரும் பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கூடுதல் வரிகளை விதிப்பதாகும். கோடீஸ்வரர்களுக்கு 2% வரியை உயர்த்தி அதன்மூலம் கோர்ப்ரேட் வரியை 11.5%ஆக அதிகரித்து நகரின் வருமானத்தைப் பெருக்குவேன் என்று வாக்குறுத்தி அளித்தார்.

36-5.jpg?fit=700%2C452&ssl=1

ஜோரானின் வாக்குறுதிகளுக்கு எல்லாம், பதிலடி கொடுத்த அதிபர் ட்ரம்ப், “இத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற நிதியை ஃபெடரல் அரசு தான் விடுவிக்க வேண்டும். வாக்குறுதிகளை அள்ளி வீசும் மம்தானி ஒரு கம்யூனிஸ்ட்” என்று நிதி ரீதியாக மிரட்டல் விடுத்திருந்தார்.

ஆனால், அதையும் உடைத்தெறிந்து மம்தானி அபார வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் நியூயோர்க் நகரத்தில் மம்தானி பெற்றுள்ள வெற்றி வரலாற்றில் ஒரு மைல்கல் மட்டுமல்ல, ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவும் கூட.

ஏற்கெனவே அரசு முடக்கத்தால் அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்துள்ள சூழலில், இந்தத் தேர்தலில் அந்த எதிர்ப்பலை எதிரொலித்திருக்கிறது. ஜோரான் மம்தானி வெற்றி உரை நிகழ்த்த வந்தபோது பின்னணியில், ‘தூம் மச்சாலே’ என்ற பிரபல பாலிவுட் பாடல் இசைக்கப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னணியில் எலான் மஸ்க்? – ஜோரான் மம்தானியின் வெற்றிக்குப் பின்னால் எலாம் மஸ்க் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் செலவீனங்கள் ரீதியாக மஸ்க் நிதியுதவி அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஸ்க் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். ட்ரம்ப் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பிலும் இருந்தவர். ஆனால் ட்ரம்ப் விதித்த வரிகளால், எலான் மஸ்க் அதிருப்தியடைந்து அவரது நிர்வாகத்திலிருந்து வெளியேறினார். ட்ரம்ப்பின் தீவிர விமர்சகராகவும் மாறினார். இந்தச் சூழலில் ட்ரம்ப்புக்கு எதிராக ஒரு சரித்திர வெற்றியை ஸ்க்ரிப்ட் செய்ய மஸ்க் பின்னணியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://chakkaram.com/2025/11/05/நியூயோர்க்-மேயர்-தேர்தலி/

  • கருத்துக்கள உறவுகள்

தவறான தகவல். மஸ்க் தேர்தலுக்கு முதல் நாள் நான் மேலே குறிப்பிட்ட அன்ட்றூ கூமோவை ஆதரித்திருந்தார்👇.

https://www.foxbusiness.com/politics/musk-slams-mamdani-charismatic-swindler-warns-policies-would-hurt-quality-life-nyc

Business Insider
No image preview

Elon Musk backs Cuomo against Zohran Mamdani in NYC mayor...

Musk encouraged NYC voters to back former Gov. Andrew Cuomo over Zohran Mamdani the day before the city's mayoral election.
1 hour ago, கிருபன் said:

நியூயோர்க் மேயர் தேர்தலில் ஜோரான் மம்தானி வெற்றி

இந்தச் சூழலில் ட்ரம்ப்புக்கு எதிராக ஒரு சரித்திர வெற்றியை ஸ்க்ரிப்ட் செய்ய மஸ்க் பின்னணியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://chakkaram.com/2025/11/05/நியூயோர்க்-மேயர்-தேர்தலி/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இவரின் தந்தை உகண்டா முஸ்லீம் என்றும்… அதில் தாயாரின் பெயரை இந்திய இணையம் ஒன்றில் பார்க்க மலையாள இந்துக்களின் பெயர் போல இருந்தது. உண்மையா என தெரியவில்லை.

தாய் தந்தை இருவருமே பஞ்சாபி என நினைக்கிறேன்.

தாய் நிச்சயம் பஞ்சாபி. முதலில் வேறு ஒருவரை மணம்முடித்து, ரத்தாகி, பின்னர் படப்பிடிப்புக்கு உகண்டா போன நேரம் இரெண்டாவதாக இவரின் தந்தையை மணமுடித்தார்.

தாய் இந்துதான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

எனக்கு பிடித்த Kama Sutra: A Tale of Love படத்தையும் இவரின் அம்மாதானே இயக்கினார்? 😊😊😊❣️

ஓம். கற்பூரப்புத்தி 😂.

நாங்கள் சவோயில் பயந்து பயந்து லைனில் நிற்க, நீங்க “நான் அடல்டுடா” என அசால்டாக டிக்கெட் வாங்கி பார்த்த படம்.

பின்னாளில் டிவிடியில் பார்த்த போதுதான் இலங்கை சென்சாரின் துரோகம் புரிந்தது.

இதே போல் 2000அளவில் இந்திய படங்கள் எல்லாம் கதாநாயகியை சைக்கிள் கூட ஓடாத கன்னி என விபரித்து கொண்டிருக்க, Monsoon Wedding என்று ஒரு படத்தை எடுத்த்தார்.

Dude க்கு எல்லாம் முன்னோடி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி தனியே டொனால்ட் ரம்பிற்கு மட்டுமல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.