Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடியிடை பெண்கள் புத்திசாலிகள்: ஆய்வில் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொடியிடை பெண்கள் புத்திசாலிகள்: ஆய்வில் தகவல்

வாஷிங்டன் :

கொடியிடைப் பெண்கள், மற்றவர்களை விட புத்திசாலிகளாக இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் திறமைசாலிகளாக உள்ளனர்.

பெண்களின் உடல் எடை தொடர்பாக ஒரு லட்சம் பெண்களிடம் நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. பொதுவாக கடந்த நூற்றாண்டில், அதிக எடை உள்ளவர்கள், பணக்காரர்களாக கருதப்பட்டனர். தங்கள் அந்தஸ்து அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே, கண்டதையும் உண்டு, எடையை அதிகரிப்பது வழக்கமாக இருந்தது.

அமெரிக்க அழகியாக முடிசூடப்பட்ட லில்லியன் ரஸ்செல், 90 கிலோ எடையுள்ளவர். ஆனால், 1904ம் ஆண்டுக்கு பின் நிலைமையில் மாற்றம் ஏற்படத் துவங்கியது. ஐந்தே கால் அடி உயரம் கொண்ட கலிபோர்னியா மாகாணம் சான்டா மோனிகாவை சேர்ந்த எம்மா நிவ்கிர்க், அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவரது எடை 62 கிலோ. அவரது உயரத்துக்கு அதிகபட்சமாக இருக்க வேண்டியை எடையை ஒட்டி இருந்தார். ஆனால், ஆண்டுக்கணக்கில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, எலும்பும் தோலுமாக இருப்பதே அழகு என்ற எண்ணம் பெண்களிடம் ஏற்படத் துவங்கியது. குறிப்பாக 1992ம் ஆண்டுக்கு பின் தான் இந்த மனமாற்றம் ஏற்படத் துவங்கியது.

கடந்த 30 ஆண்டுகளாக தேர்வு செய்யப்பட்டு வரும் அமெரிக்க அழகிகள், தங்கள் உயரத்துக்கு ஏற்ப எடை கொண்டவர்களாக இல்லை. குறைந்த எடை பெண்கள் தான் இந்த பட்டத்தை பெற்று வந்துள்ளனர். ஐந்தே கால் அடி உயரத்துக்கு வெறும் 45 கிலோ எடை கொண்ட பெண்கள், அழகிப் போட்டியில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் உடல் எடை குறித்து பெரிதும் கவலை தோன்றியுள்ளது. இதன் காரணமாகத் தான், பெண்கள் தங்கள் எடையை குறைத்து, எலும்புக்கு மேல் கொஞ்சம் சதை, அப்புறம் தோல் என்ற நிலைக்கு வந்து விட்டனர்.

உயரத்துக்கு அதிகமான எடை கொண்டவர் களுக்கு, இருதய நோய் பிரச்னைக்கு ஆளாகின்றனர். இதனால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது உண்மைதான். எலும்பும் தோலுமாக இருப்பவர்களுக்கு, இருதய நோய், புற்று நோய் தாக்குவது பெரிதும் குறைவுதான். ஆனால், மற்ற எல்லா நோய்களாலும், மற்றவர்களை விட இவர்கள் அதிக உயிரிழப்புக்கு ஆளாகின்றனர்.

பெண்களின் புத்திசாலித்தனத்துக்கு அவர்களின் எடை மட்டுமின்றி, உடலின் தோற்றமும் முக்கிய காரணம். இடுப்பு பெரிதாகவும், இடை சிறிதாகவும் இருக்கும் பெண்கள் இயல்பாகவே புத்திசாலிகளாக இருக்கின்றனர். இடுப்புக்கும் இடைக்கும் அளவு குறையக்குறைய அவர்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கிறது. அதே போல, இடுப்பு பெருத்து, இடைசிறுத்த பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் திறமையானவர்களாக உள்ளனர். இதற்கு காரணம் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு, இடுப்பு மற்றும் தொடைப்பகுதியில் உள்ள கொழுப்புச் சத்து தான் முக்கியமாக இருக்கிறது. இது போன்ற பெண்களுக்கு இந்த பகுதிகளில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான விகிதாச்சாரத்தில் கொழுப்பு உள்ளது.

ஆனால், இந்த பெண்கள் தங்கள் குழந்தை பேற்றை தள்ளிப்போட்டால் மட்டுமே இதற்கு வாய்ப்பு ஏற்படும். 19 வயதுக்கு முன்பாக இந்த பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற்பட நேரிடுகிறது. ஆனால், பாரம்பரியமாக சிறுத்த இடையுடன் இருப்பவர்களின் குழந்தைகள் இதில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன.

தினமலர்

பெண்களிண்ட மூள இடையிலையா இருக்கிது? இல்லாட்டி இடை மூளையிலையா இருக்கிது?

நல்ல ஆராய்ச்சி. ஆராய்ச்சி ஆராய்ச்சி எண்டு சொல்லிப்போட்டு என்னத்தவும் எழுதித்தள்ளட்டும். தலைய ஆட்டிக்கொண்டு கேக்க நாங்கள் இருக்கிறம்தானே.

ஆண்களிண்ட மூள எங்க இருக்கிது? நீண்ட தொடை கொண்ட இல்லாட்டி தொந்தி வயிறு கொண்ட ஆண்கள் புத்திசாலிகளா எண்டு யாராவது ஒரு ஆராய்ச்சி செய்து பார்க்கலாமே?

உண்மையாக இருக்கலாம் , நான் ரொம்ப புத்திசாலியாக இருக்கிறனாக்கும் :lol::lol:

Edited by செவ்வந்தி

ஒரு ஆள புத்திசாலி எண்டு எத வச்சு சொல்லிறது? படிப்பை வச்சா? ஐகூவ வச்சா? பேர்சனாலிட்டிய வச்சா?

மேற்கூறிய ஆராய்ச்சி முடிவு சரியாக இருக்கும் எண்டு நான் நினைக்க இல்லை.

எனக்கு தெரிந்த ஏராளம் சாக்கு மாடுகள் இருக்கிதுகள். அதுகளப் பார்த்தா ப** மாதிரி இருக்கும். ஆனா படிப்பில மிகவும் கெட்டிக்காரர்கள்.

எனக்கு தெரிந்த நிறைய பெண் மருத்துவர்கள், புரபசர்கள், உயர் பதவியில இருக்கும் பல பெண்கள் உடற்பருமனில் மிகவும் பெரியவர்கள்.

இடையின் அளவுக்கும் ஐக்கியூவுக்கும் சம்மந்தம் இருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

சிலவேளைகளில் கொடியிடை பெண்கள் அதிகளவில் பொய் சொல்பவர்களாய் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் முதல் பெண்களுக்கு எங்க கொடி இடை இருக்குது. :lol: முள்ளந்தண்டே கொடியைப் போல பல மடங்கு இதுக்க கொடியாம் இடையாம். இந்த இந்திய ஊடகங்களுக்கு "கைப்புள்ள அரிவாளோட வாறார் எத்தனை தலை உருளப் போகுதோ" என்று உசுப்பி விட்டு உச்சாரக் கொப்பில உக்கார வைச்சு பெண்களை மதி கெட வைக்கிறது என்றால் அது கை வந்த கலை..! :lol:

கொடிஇடைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்னப்பா சம்மந்தம்

கொடியிடைப் பெண்கள் ஒரு விடயத்துக்கு மிகவும் சிறந்தவர்கள் விடயத்தச்சொன்னா இணையவன் வெட்டருவாளோட வருவார் நமக்கேன் வம்ப

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியால ஒருதருக்கும் கொடி இடை இல்லை எல்லாருக்கும் இடி இடை தான் இருக்கு என்ன நான் சொல்றது ஜம்ஸ்.... :lol::lol::D

அவுஸ்திரேலியால ஒருதருக்கும் கொடி இடை இல்லை எல்லாருக்கும் இடி இடை தான் இருக்கு என்ன நான் சொல்றது ஜம்ஸ்.... :lol::lol::D

ஓகோ அதுதான் சங்கதியா! கங்காருநாட்டுக்காரர் சிலர் ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று யோசித்தேன்!

017911.jpg

:(

அவுஸ்திரேலியால ஒருதருக்கும் கொடி இடை இல்லை எல்லாருக்கும் இடி இடை தான் இருக்கு என்ன நான் சொல்றது ஜம்ஸ்....

சுண்டல் அண்ணா நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை :lol: உது என்னை வம்பில மாட்டி வைக்கிற பிளான் போல இருக்கு :lol: !!சிட்னி கேள்சே உங்களை போய் நான் அப்படி சொல்லுவேனா சொல்ல விட்டா ஒரு படி மேல சொல்லுவன் :wub: இணையவன் அண்ணாவிற்காக போறேன்!! :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"கொடி இடை இருந்தா போல உடுப்பை காய போடமுடியுமா" :lol:

ஓகோ அதுதான் சங்கதியா! கங்காருநாட்டுக்காரர் சிலர் ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று யோசித்தேன்!

சாணக்கியன் அண்ணா இது கங்காருகளை அவமானபடுத்துற மாதிரி இருக்கு :lol: நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன்!! :wub:

இப்படிக்கு,

வரும்கால அவுஸ்ரெலிய பிரதமர்,

ஜெனரல் ஜம்மு பேபி!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

உலகப் பெண்களின் இயல்பைத் தீர்மானிக்க ஒரு லட்சம் பெண்கள் ஒரு விஞான பூர்வமான மாதிரியே இல்லை. குறைந்ந்தது 20 அல்லது 30 கோடிப் பெண்களையாவது ஆராய வேண்டுமே. அப்போதும்கூட மனித இயல்புகளையும் உடல் அமைப்பையும் இணைக்க முடியுமென்று நம்பவில்லை. இது ஒரூ புதிய எண் சாத்திரமாகிவிடலாம். எனக்கு தெரிந்த சின்னம் சிறு பெண்கள் வட்டதில்கூட இது பொருந்தி வரவில்லை.

அவுஸ்திரேலியாவில் ஆண்களளுக்கு பெண்களளின் பெயர் வைப்பார்களாமே பேச்சு வாக்கில் சொல்கிறார்கள் உண்மையா? :-))))

அவுஸ்திரேலியாவில் ஆண்களளுக்கு பெண்களளின் பெயர் வைப்பார்களாமே பேச்சு வாக்கில் சொல்கிறார்கள் உண்மையா? :-))))

அண்ணா பெயர் மட்டும் இல்லை ஆளே மாறலாம் அவுஸ்ரெலியாவில............. :(:wub:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா பெயர் மட்டும் இல்லை ஆளே மாறலாம் அவுஸ்ரெலியாவில............. :(:wub:

அப்படியா நான் அதிகம் விவரம் தெரியாத கேழ்விச் செவியன். அவுஸ்திரேலிய பல்கலைக் களகப் பையன்கள் பெண்களது பெயரைச் சூடிக் கொள்ளவே அதிகம் விரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது என்று இங்கு ஒரு பேச்சிருக்கிறது.

அப்படியா நான் அதிகம் விவரம் தெரியாத கேழ்விச் செவியன். அவுஸ்திரேலிய பல்கலைக் களகப் பையன்கள் பெண்களது பெயரைச் சூடிக் கொள்ளவே அதிகம் விரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது என்று இங்கு ஒரு பேச்சிருக்கிறது.

ம்ம்ம் குறிபிட்ட சில பெண் பெயர்களை விரும்பி வைத்து கொள்வார்கள் இங்குள்ள இளைஞர்கள் அண்ணா!! :(

என்னங்க அது..

கொடியிடையா?

இலக்கியங்களோட தொலைஞ்ச எதையோ வைரமுத்து தேடுறாப்போல தேடிப்பார்த்திட்டேன்..

கொடியைக்காணோம்...

இடை மட்டும் எல்லோருக்குமே...அந்தா மாதிரி..

அங்கேயே இருக்கு....

அப்படின்னா பொண்ணுங்கள்ல புத்திஜீவிங்களே இல்லையான்னு எங்கிட்ட கேட்காதீங்க...

இருக்கும் அப்பிடின்னு என் சந்தேகத்தை முடிவா சொல்லிடுவன்.... :(

:(:wub::wub: உடற்பயிற்சி இயந்திரங்களுக்கு விளம்பரம் படுத்துவதற்காக இப்படி ஒரு வதந்தி வந்திருக்குமோ? :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:(:wub::wub: உடற்பயிற்சி இயந்திரங்களுக்கு விளம்பரம் படுத்துவதற்காக இப்படி ஒரு வதந்தி வந்திருக்குமோ? :lol:

சீ அப்படியெல்லாம் இருக்காதுங்க.

சீ அப்படியெல்லாம் இருக்காதுங்க.

:( அப்போ குண்டானவங்க அறிவாளிகள் இல்லையா?

நம்ம பாடசாலை அதிபர் ரொம்ப குண்டு பெண்மணி. அபப்டின்னா அவா :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கொடிஇடைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்னப்பா சம்மந்தம்

கொடியிடைப் பெண்கள் ஒரு விடயத்துக்கு மிகவும் சிறந்தவர்கள் விடயத்தச்சொன்னா இணையவன் வெட்டருவாளோட வருவார் நமக்கேன் வம்ப

எனக்குத் தெரியுமே! :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:( அப்போ குண்டானவங்க அறிவாளிகள் இல்லையா?

நம்ம பாடசாலை அதிபர் ரொம்ப குண்டு பெண்மணி. அபப்டின்னா அவா :wub:

உங்க பாடசாலை அதிபரா வரேக்கே மெல்லிசா இருந்திருப்பா. இப்போ குண்டா வந்ததால புத்தி குறைஞ்சிருக்கும் எண்டு நான் சொல்லவில்லை. ஆய்வு சொல்லுது

உங்க பாடசாலை அதிபரா வரேக்கே மெல்லிசா இருந்திருப்பா. இப்போ குண்டா வந்ததால புத்தி குறைஞ்சிருக்கும் எண்டு நான் சொல்லவில்லை. ஆய்வு சொல்லுது

அப்போ மெல்லிசாக இருந்தப்போ அறிவாளி அதே ஆள் குண்டானால் அறிவிலி.

உந்த ஆய்வை மறுபரிசீலனைக்கு அனுப்பணும். :(

ஆமாம் இனிக் கொடியிடையாளிடம் கவனமாக இருப்போம். அவர்கள் அறிவாளிகள் என்று சொன்னது, மற்றவர்களின் அறிவை மயக்குவதால்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'எஎளiஎய' னயவநஸ்ரீ'ழேஎ 15 2007இ 12:42 யுஆ' pழளவஸ்ரீ'360021'ஸகொடிஇடைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்னப்பா சம்மந்தம்கொடியிடைப் பெண்கள் ஒரு விடயத்துக்கு மிகவும் சிறந்தவர்கள் விடயத்தச்சொன்னா இணையவன் வெட்டருவாளோட வருவார் நமக்கேன் வம்பஜஃஙரழவநஸவிடயம் கொஞ்சம் வில்லங்கமானதாக இருக்கும் போல????தனிமடலில் முடியுமா? ஒருவராலும் வெட்டவோ ஒட்டவோ முடியாது.....

017911.jpg:)
ஓருகாலத்தில இருந்ததல்லே....................பெண்களுக்

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனான்னா ஜமுனான்னா இந்த சிவான்னா என்னத்த பற்றி பேசுறார்னு நேக்கு இப்ப தெரின்ஞாகனும்... :unsure::)

ஜமுனான்னா ஜமுனான்னா இந்த சிவான்னா என்னத்த பற்றி பேசுறார்னு நேக்கு இப்ப தெரின்ஞாகனும்... :D:)

நானே பேபி என்னத்தை கேட்டா நேக்கு என்ன தெரியும் இன்றைக்கு ஒன்றுகூடலின் போது தளபதியுடன் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணுவோம் :lol: ஆனா நான் காதை பொத்தி கொள்கிறேன் :unsure: !!சிவா அண்ணா சுண்டல் அண்ணா சரியா பீல் பண்ணுறார் :( ஒருக்கா விளங்கபடுத்திவிடுங்கோ நான் அங்கால போன பிறகு!! :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.