Jump to content

தீவாளி


sathiri

Recommended Posts

பதியப்பட்டது

தீவாளி

ஒரு பேப்பரிற்காக

தீபாவளியை தீவாளி என்றுதான் பேச்சு வழக்கில் ஊரில் சொல்லுவோம்.வருசா வருசம் தீபாவளி வரும்போதெல்லாம் இப்பொழுது தீபாவளி தமிழருடையதா??தீபாவளியை கொண்டாடலாமா? கூடாதா??என்று சர்ச்சைகளும் கட்டுரைகளும் வெளிவர ஆரம்பிக்கும். தீபாவளி ஏன் கொண்டாட வேணும் எண்டு எப்பவோ யாரோ சொல்லிவிட்டு போன நரகாசுரன் கதையிலை கொலைசெய்யப்பட்ட நரகாசுரனுக்கு வாழ்த்து சொல்லுற அளவுக்கு இப்ப நிலைமை வந்திட்டிது. ஏன் எதுக்கு எண்டு சரியான விபரம் தெரியாமலேயோ தமிழர் கொண்டாடுற பல பெருநாளிலை இதுவும் ஒண்டு.

அதையெல்லாம் ஒரு கரையிலை வைச்சிட்டு ஊரிலை சின்னிலை கொண்டாடின என்ரை சில தீபாவளி நினைவுகளை உங்களோடை பகிர்ந்து கொள்ளுறன். தீபாவளியை பலபேர் பல மாதிரி கொண்டாடுவினம் .இந்தியாவிலை அதுவும் வடநாடுகள்மற்றும் ராஜஸ்தான் மானிலத்திலை பெரியளவிலை 3 நாளைக்கு கொண்டாடறவை. ஒரு தீபவாளி கொண்டாட்டத்தை நான் ராஜஸ்தானிலை பார்த்திருக்கிறன். ஆனால் அங்கையெல்லாம் அன்று விரதம் இருந்து லக்சுமி தெய்வத்திற்கு படையல் செய்வது வழைமை.எங்கடை நாட்டிலையும் சிலபேர் அப்பிடிதான் செய்யிறவை ஆனால் எங்கடை ஊர்ப்பக்கம் தீபாவளி கொண்டாடுற விதமே தனி. சாதாரணமா மரக்கறி சாப்பிடுறவை கூட அண்டைக்குதான் மச்சம்(இறைச்சி). சாப்பிடுவினம். வீட்டுக்கு வெளியிலை அடுப்பு மூட்டி அதிலை ஆடு கிடந்து கொதிக்கும்.

அது மட்டுமில்லை பொதுவா தண்ணியடிக்காதவை கூட அண்டைக்கு மூக்கு முட்ட அடிச்சிட்டு செய்யிற கூத்துகள் அதுவே ஒரு திருவிழா மாதிரித்தான்.சிலர் கொஞ்சமா அடிச்சிட்டு சும்மா சினிமா காட்டுறவையும் இருந்தவை. பெரும்பாலும் ஊருக்கை பழைய கோபதாபங்களும் அண்டைக்குதான் தீர்க்கபடுறதுமட்டுமில்லை தண்ணியடிச்சவர் யாரோ தன்பாட்டிலை சிவனே எண்டு போய் கொண்டிருக்கிறவரை பாத்து டேய் உன்ரை பார்வை சரியில்லை எண்டு வம்புக்கிளுப்பினம் .சிலநேரம் அவருக்கு உண்மையிலேயே வாக்கு கண்ணாகவும் இருக்கும்.அண்டைக்கு எங்கடை ஊர் ஆஸ்பத்திரியிலை நேஸ்மாருக்கு வேலையும் கூட .ஏணெண்டால் வெட்டு கொத்து பட்டு கனபேர் வருவினம். அடுத்தா எங்கடை ஊரிலை தீபாவளி நாளுக்கெண்டே ஆட்டுக்கிடாயள் வளக்கிறவை. வீட்டிலை பிள்ளைக்கு பால்மா இருக்கோ இல்லையோ ஆட்டுக்கெண்டு விசேசமா முருக்கங்குளை தவிடு எண்டு ஊட்டி ஊட்டி வளப்பினம்.

பிறகு தீபாவளியண்டு நாலைஞ்சு குடும்பமா சேந்து வீட்டு வளவுக்கை இல்லாட்டி ஊர் ஒதுக்குபுறமா ஒரு இடத்தலை ஆட்டை வெட்டி பங்கு போடுவினம். பங்கு போடேக்கை சில நேரம் ஆட்டுக்குடலுக்குஅடிபட்டு ஆக்களின்ரை குடல் வெளியிலை வந்த கதையளும் நடந்திருக்கு.இதெல்லாம் பெரியாக்களின்ரை தீபாவளியெண்டால் இனி எங்கடை தீபாவளிக்கு வருவம். தீபாவளியண்டு எல்லாருக்கும் புது உடுப்பு வாங்கிறது வழக்கம். ஆறு ஏழு பிள்ளையள் எண்டு இருக்கிற நடுத்தர குடும்பங்களிலை எல்லா பிள்ளையளிற்கும் விதம்விதமாய் உடுப்ப வாங்கிறது எண்டது இயலாத காரியம்.அது மாதிரிஎங்கடை வீட்டிலையும் நாங்கள் ஆறு உருப்படி். அதாலை விசேசமான நாட்களிலை எங்கடை ஊர் சங்கக் கடைக்கு இலங்கை கைத்தெறி கூட்டுத்தாபனம் சிங்களத்திலை சலுசலா எண்டு சொல்லுறவை அந்த சலுசலா துணி வாறது ஒரு குறிப்பிட்ட டிசைன் துணி மட்டும் வரும்.விலையும் மலிவு.

அதைவிட எங்கடை மாமா ஒருதர் சங்கக்கடை மனேச்சரா இருந்தவர் அவரிட்டை சொல்லி விட்டால் இன்னமும் கொஞ்சம் மலிவா வாங்கியருவார். அனேகமான தீபாவளிக்கு எங்களுக்கு எல்லாருக்கும் சலுசலாதுணியிலை டிசைன் போட்டது சில மீற்றர் டிசைன் போடாதது சில மீற்றர் எண்டு வாங்குவினம்.எங்கடை ஊரிலை ஒரு தையல் காரர் இருந்தவர் எனக்கு தெரிந்து இதுவரை உலகத்திலேயோ மீற்றர் அளவை பாவிக்காமல் பார்வையிலேயே அளவெடுத்து தைக்கிற ஒரேயொரு கெட்டிக்கார தையல்காரர் அவர்தான். அவரிட்டை துணியையும் குடுத்து எங்களையும் காட்டிவிட்டால் போதும். அது மட்டுமில்லை தையல் காரரிட்டை அப்பா ஒரு வசனம்சொல்லுவார் "வளர்ற பிள்ளையள் பாத்து கொஞ்சம் பெருசா தையுங்கோ எண்டுவார்." பிறகென்ன பார்வையிலையே அளவெடுக்கிற தையல்காரர் எங்களை பார்க்காமலேயே தைக்கிற காற்சட்டையை நாங்கள் போட்டு அதுக்கு இரண்டு பக்கமும் ஊசி குத்திவிட்டால்தான் இடுப்பை விட்டு கீழை விழாமல் நிக்கும். அதோடை ஒரு கலர் துணியிலையே அண்ணனுக்கு சேட்டு அக்காக்கு சட்டை எனக்கு காற்சட்டை தங்கைக்கு பாவாடை எண்டு எல்லாம் தைச்சு மிச்ச துணி கொஞ்சம் பெரிசா மிஞ்சினால் வீட்டுக்கு யன்னல் சீலை அதிலையும் மிஞ்சினால் தலைகணி உறை எண்டு பல கலர் மயமா இல்லாமல் ஒரோயொரு கலர் மயமா இருக்கும்.

அடு்த்ததா தீபாவளியண்டு எங்களையெல்லாம் வரிசையா இருத்தி குளிக்க வாத்து புது உடுப்பை போட்டு எங்களுக்கு கையிலை ஆளுக்கொரு கற்பூரகட்டியை கையிலை தந்து கோயிலுக்கு அனுப்பி விடுவினம் கோயிலுக்கு போய் அதை கொளுத்தி கும்பிட்டிட்டு அடுத்த வேலையா ஊரிலை இருக்கிற எங்களுக்கு படிப்பிக்கிற வாத்தியார் மற்றும் எங்கடை சொந்த காரர் வீடுகளுக்கு போய் புது உடுப்பை காட்டிபோட்டு அவை கையிலை தாற சில்லறைகளை வாங்கி கொண்டு சந்தோசமா வருவம்.தீபாவளிக்கு மறுநாள் மட்டும் பாடசாலைக்கு சீருடை போடத் தேவையில்லை ஒரு நாள் விசேட சலுகை தருவினம் அண்டைக்கு நாங்கள் தீபாவளி உடுப்பை போட்டு கொண்டு போய் பள்ளிகூடத்திலையும் கலர் காட்டலாம்.

ஆனால் பலருக்கு தாய்தகப்பன் தீபாவளி உடுப்பே பள்ளிக்கூட சீருடையை வாங்கி குடுத்திருப்பினம் அவைபாடு அண்டைக்கு கவலைதான். இப்படித்தான் ஒரு தீபாவளிக்கு வழைமை போல எங்கள் ஆறு பேருக்கும் சலுசலா ஒரேகலர் துணியிலை தைச்ச உடுப்பை போட்டுக்கொண்டு நாங்கள் வரிலையாய் கோயிலுக்கு போய்கொண்டிருக்க வீதியிலை போன யாரோ ஒருத்தர் " சலுசலா விளம்பரம் போகுதடா டோய்" எண்டு கத்த அப்ப கொஞ்சம் வளந்திருந்த அண்ணன் கோபத்திலை வீட்டை வந்து சேட்டை கழட்டி எறிஞ்சதோடை சலுசலா துணி உடுப்பிலை கொஞ்சம் மாற்றம் வந்தது. பிறகு நாங்களும் வளர வளர வீட்டிலை காசை வாங்கி எங்களுக்கு பிடிச்ச துணியை வாங்கி யாழ்ப்பாணம் புதிய சந்தை கட்டிடத்திலை இருந்த நியூ டீசன்ஸ். ஈரான். எண்டு பிரபலமான தையல் கடைகளை நோக்கி போக ஆரம்பித்து விட்டடோம்.ஆனாலும் பார்வையிலேயே அளவெடுத்து தைக்கிற எங்கள் ஊர் தையல்காரருக்கும் மவுசு இருந்துகொண்டேதான் இருந்தது. இப்படியாக எங்களிற்கு நரகாசுரனை பற்றியதோ கிருஸ்ணர் அவதாரம் எடுத்து கொலை செய்ததை பற்றி கதையை பற்றிய அக்கறை எதுவுமே இல்லை. பின்னர் நாட்டில் பிரச்சனைகள் தொடங்கிய போதும் கூட குண்டுச்சத்தங்கள் வெடியோசைகளின் நடுவிலும் எங்களை பொறுத்தவை மகிழ்ச்சியான ஒரு பண்டிகையாக தீபாவளி வருடா வருடம் வந்து போய் கொண்டிருந்தது.

1987ம் ஆண்டும் தீபாவளி வந்தது ஆனால் வழைமையான இலங்கை இராணுவத்தின் வெடியோசையுடன் அல்ல மாறாக அமைதிகாக்கும் படை என்கிற முத்திரையுடன் வந்த இந்திய அழிவுப்படையின் வெடியோசைகள் மத்தியில் அந்த தீபாவளிநாள் விடிந்தது அன்று எனது தந்தையையும் எனது சகோதரியையும் இந்தியப்படைகள் எங்கள் வீதியில் வைத்து சுட்டுகொன்று கொழுத்திவிட்டு போயிருந்தனர். அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளி நாளும் எங்கள் குடும்பத்திற்கு நினைவுநாளாகி போனது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வழமையான நகைச்சுவைப்பானியில் உங்கள் பதிவைப்போட்டுவிட்டு கடைசியில் இப்படி .ம்ம்ம்..எப்போ எங்ழுக்கு ஒரு விடிவு வருகுதோ அப்பதான் எந்தக்கொன்டாட்டங்களும் உன்மையாகும்.

Posted

எப்பவும் ரொம்பவும் நகைச்சுவையாக தரும் கதைகளில் இதுவும் ஆரம்பத்தில் நகைச்சுவையாக இருந்த போதிலும் இறுதியில் முடித்தவிதம் ,,, ஆம் அதுதான் உண்மை எனும் போது கவலையாக இருக்குது சாத்ரி தாத்தா.

Posted

சாத்திரி அங்கிள் வழமைபோலவே உங்கள் பாணியில் நகைசுவையாக கதையை கொண்டு சென்ற விதம் அருமை :unsure: இறுதியில் ஒவ்வொரு தீபாவளியும் உங்களுக்கு நினைவு நாள் என்பதை அறிந்ததில் கவலையாக இருக்கிறது!! :unsure:

அது சரி சாத்திரி அங்கிள் அந்த கண்ணால பார்த்து தைக்கிற தையல் காரர் என்னும் இருக்கிறாறோ :unsure: ஏன் கேட்கிறேன் என்றா நானும் ஒன்றை தைத்து பார்போம் என்று தான்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Posted

அது சரி சாத்திரி அங்கிள் அந்த கண்ணால பார்த்து தைக்கிற தையல் காரர் என்னும் இருக்கிறாறோ :unsure: ஏன் கேட்கிறேன் என்றா நானும் ஒன்றை தைத்து பார்போம் என்று தான்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஜம்முபே(ய் )பி என்ன செய்ய அந்த தையல் காரருகக்கு இப்ப கண்தெரியாதாம். :unsure::unsure:

மற்றும் வெண்ணி சஜுவன் கருத்திற்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மைதான் சாத்திரி! அப்படியான தையல்காரர்கள் எல்லா ஊர்களிலும் ஒருத்தராவது இருப்பார்கள். அத்துடன் அவர்களுக்கு தனது வாடிக்கையாளரின் அளவுகள் எல்லாம் அவர்களின் மெமரியிலேயே பதிந்திருக்கும். அவ்வளவு அத்துப்படி. இனி நமது பெற்றோரும் அவர்களிடம் சொல்வது, வளர வளரப் போடுறமாதிரி இருக்கட்டும் என்றுதான். அவர்களும் 7வயதுப் பிள்ளைக்கு 10 வயது சைசில் போட்டுத் தாக்கியிருப்பார்கள். :lol::lol:

Posted

பழைய அனுபவங்களை அசைபோட்டவாறு மிகைப்படுத்தாமல் எழுதியுள்ள சாத்திரியின் அனுபவங்களை இரசித்து வாய்விட்டுச் சிரித்தவாறு வாசித்துக் கொண்டிருந்தேன். இறுதியில் சாத்திரியின் குடும்பத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வை அறிந்ததும் மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊரிலை சின்னிலை கொண்டாடின என்ரை சில தீபாவளி நினைவுகளை உங்களோடை பகிர்ந்து கொள்ளுறன். தீபாவளியை பலபேர் பல மாதிரி கொண்டாடுவினம் .இந்தியாவிலை அதுவும் வடநாடுகள்மற்றும் ராஜஸ்தான் மானிலத்திலை பெரியளவிலை 3 நாளைக்கு கொண்டாடறவை. ஒரு தீபவாளி கொண்டாட்டத்தை நான் ராஜஸ்தானிலை பார்த்திருக்கிறன். ஆனால் அங்கையெல்லாம் அன்று விரதம் இருந்து லக்சுமி தெய்வத்திற்கு படையல் செய்வது வழைமை.எங்கடை நாட்டிலையும் சிலபேர் அப்பிடிதான் செய்யிறவை ஆனால் எங்கடை ஊர்ப்பக்கம் தீபாவளி கொண்டாடுற விதமே தனி. சாதாரணமா மரக்கறி சாப்பிடுறவை கூட அண்டைக்குதான் மச்சம்(இறைச்சி). சாப்பிடுவினம். வீட்டுக்கு வெளியிலை அடுப்பு மூட்டி அதிலை ஆடு கிடந்து கொதிக்கும்
.

சில நேரத்திலை மத்தியானச்சாப்பாடு சைவமாயிருக்கும்.ஆனால் இரவு படையலிலை ஆடு,கோழி,மீன் எண்டு சொல்லி ஒரு புடி புடிச்சுடுவமில்லே

இப்ப இஞ்சை ஒருநேரம் இறைச்சி இல்லாட்டி தொண்டேக்காலை ஒண்டும் இறங்காதாம்

அது மட்டுமில்லை பொதுவா தண்ணியடிக்காதவை கூட அண்டைக்கு மூக்கு முட்ட அடிச்சிட்டு செய்யிற கூத்துகள் அதுவே ஒரு திருவிழா மாதிரித்தான்.சிலர் கொஞ்சமா அடிச்சிட்டு சும்மா சினிமா காட்டுறவையும் இருந்தவை. பெரும்பாலும் ஊருக்கை பழைய கோபதாபங்களும் அண்டைக்குதான் தீர்க்கபடுறதுமட்டுமில்லை தண்ணியடிச்சவர் யாரோ தன்பாட்டிலை சிவனே எண்டு போய் கொண்டிருக்கிறவரை பாத்து டேய் உன்ரை பார்வை சரியில்லை எண்டு வம்புக்கிளுப்பினம் .சிலநேரம் அவருக்கு உண்மையிலேயே வாக்கு கண்ணாகவும் இருக்கும்.அண்டைக்கு எங்கடை ஊர் ஆஸ்பத்திரியிலை நேஸ்மாருக்கு வேலையும் கூட .ஏணெண்டால் வெட்டு கொத்து பட்டு கனபேர் வருவினம்.

அதோடை அண்டைக்குத்தான் கதியால் புடுங்கின பிரச்சனை,வயல் வரம்புப்பிரச்சனை பழைய உறுதிப்பிரச்சனை எண்டு அண்டைக்குத்தான் புதுசாய் அலசி ஆராயப்படும்

பிறகு தீபாவளியண்டு நாலைஞ்சு குடும்பமா சேந்து வீட்டு வளவுக்கை இல்லாட்டி ஊர் ஒதுக்குபுறமா ஒரு இடத்தலை ஆட்டை வெட்டி பங்கு போடுவினம். பங்கு போடேக்கை சில நேரம் ஆட்டுக்குடலுக்குஅடிபட்டு ஆக்களின்ரை குடல் வெளியிலை வந்த கதையளும் நடந்திருக்கு :lol: .இதெல்லாம் பெரியாக்களின்ரை தீபாவளியெண்டால் இனி எங்கடை தீபாவளிக்கு வருவம். தீபாவளியண்டு எல்லாருக்கும் புது உடுப்பு வாங்கிறது வழக்கம். ஆறு ஏழு பிள்ளையள் எண்டு இருக்கிற நடுத்தர குடும்பங்களிலை எல்லா பிள்ளையளிற்கும் விதம்விதமாய் உடுப்ப வாங்கிறது எண்டது இயலாத காரியம்.அது மாதிரிஎங்கடை வீட்டிலையும் நாங்கள் ஆறு உருப்படி். அதாலை விசேசமான நாட்களிலை எங்கடை ஊர் சங்கக் கடைக்கு இலங்கை கைத்தெறி கூட்டுத்தாபனம் சிங்களத்திலை சலுசலா எண்டு சொல்லுறவை அந்த சலுசலா துணி வாறது ஒரு குறிப்பிட்ட டிசைன் துணி மட்டும் வரும்.விலையும் மலிவு.

பத்துதரம் கிணத்தடியிலையோ இல்லாட்டி குளக்கரையிலையோ வைச்சு சன்லைட் இல்லாட்டி மில்க்வைட் சவுக்காரம் போட்டு எப்புடித்தான் தோச்சாலும் அந்த மண்ணெண்ணை வாசம் போகவே போகாது .அதோடை அந்த துணியிலை தைச்ச பாவாடையோ இல்லாட்டி சாறமோ கிழிஞ்சு போக கணக்காய் தைப்பொங்கல் வரும்.

அதைவிட எங்கடை மாமா ஒருதர் சங்கக்கடை மனேச்சரா இருந்தவர் :huh: அவரிட்டை சொல்லி விட்டால் இன்னமும் கொஞ்சம் மலிவா வாங்கியருவார். அனேகமான தீபாவளிக்கு எங்களுக்கு எல்லாருக்கும் சலுசலாதுணியிலை டிசைன் போட்டது சில மீற்றர் டிசைன் போடாதது சில மீற்றர் எண்டு வாங்குவினம்.எங்கடை ஊரிலை ஒரு தையல் காரர் இருந்தவர் எனக்கு தெரிந்து இதுவரை உலகத்திலேயோ மீற்றர் அளவை பாவிக்காமல் பார்வையிலேயே அளவெடுத்து தைக்கிற ஒரேயொரு கெட்டிக்கார தையல்காரர் அவர்தான். அவரிட்டை துணியையும் குடுத்து எங்களையும் காட்டிவிட்டால் போதும். அது மட்டுமில்லை தையல் காரரிட்டை அப்பா ஒரு வசனம்சொல்லுவார் "வளர்ற பிள்ளையள் பாத்து கொஞ்சம் பெருசா தையுங்கோ எண்டுவார்." பிறகென்ன பார்வையிலையே அளவெடுக்கிற தையல்காரர் எங்களை பார்க்காமலேயே தைக்கிற காற்சட்டையை நாங்கள் போட்டு அதுக்கு இரண்டு பக்கமும் ஊசி குத்திவிட்டால்தான் இடுப்பை விட்டு கீழை விழாமல் நிக்கும். அதோடை ஒரு கலர் துணியிலையே அண்ணனுக்கு சேட்டு அக்காக்கு சட்டை எனக்கு காற்சட்டை தங்கைக்கு பாவாடை எண்டு எல்லாம் தைச்சு மிச்ச துணி கொஞ்சம் பெரிசா மிஞ்சினால் வீட்டுக்கு யன்னல் சீலை அதிலையும் மிஞ்சினால் தலைகணி உறை எண்டு பல கலர் மயமா இல்லாமல் ஒரோயொரு கலர் மயமா இருக்கும்.
என்ன இருந்தாலும் சீத்தைதுணியிலை களிசான் தைச்சு போடுற சுகமே தனி.

தீபாவளிக்கு மறுநாள் மட்டும் பாடசாலைக்கு சீருடை போடத் தேவையில்லை ஒரு நாள் விசேட சலுகை தருவினம் அண்டைக்கு நாங்கள் தீபாவளி உடுப்பை போட்டு கொண்டு போய் பள்ளிகூடத்திலையும் கலர் காட்டலாம்.

நான் வந்து தமிழ்க்கலவன் அரசினர் பாடசாலையிலை படிச்சபடியாலை உந்தச்சோலி இல்லை.

ஆனால் பலருக்கு தாய்தகப்பன் தீபாவளி உடுப்பே பள்ளிக்கூட சீருடையை வாங்கி குடுத்திருப்பினம் அவைபாடு அண்டைக்கு கவலைதான். இப்படித்தான் ஒரு தீபாவளிக்கு வழைமை போல எங்கள் ஆறு பேருக்கும் சலுசலா ஒரேகலர் துணியிலை தைச்ச உடுப்பை போட்டுக்கொண்டு நாங்கள் வரிலையாய் கோயிலுக்கு போய்கொண்டிருக்க வீதியிலை போன யாரோ ஒருத்தர் " சலுசலா விளம்பரம் போகுதடா டோய்" எண்டு கத்த அப்ப கொஞ்சம் வளந்திருந்த அண்ணன் கோபத்திலை வீட்டை வந்து சேட்டை கழட்டி எறிஞ்சதோடை சலுசலா துணி உடுப்பிலை கொஞ்சம் மாற்றம் வந்தது. பிறகு நாங்களும் வளர வளர வீட்டிலை காசை வாங்கி எங்களுக்கு பிடிச்ச துணியை வாங்கி யாழ்ப்பாணம் புதிய சந்தை கட்டிடத்திலை இருந்த நியூ டீசன்ஸ். :lol: ஈரான். எண்டு பிரபலமான தையல் கடைகளை நோக்கி போக ஆரம்பித்து விட்டடோம்.ஆனாலும் பார்வையிலேயே அளவெடுத்து தைக்கிற எங்கள் ஊர் தையல்காரருக்கும் மவுசு இருந்துகொண்டேதான் இருந்தது. இப்படியாக எங்களிற்கு நரகாசுரனை பற்றியதோ கிருஸ்ணர் அவதாரம் எடுத்து கொலை செய்ததை பற்றி கதையை பற்றிய அக்கறை எதுவுமே இல்லை. பின்னர் நாட்டில் பிரச்சனைகள் தொடங்கிய போதும் கூட குண்டுச்சத்தங்கள் வெடியோசைகளின் நடுவிலும் எங்களை பொறுத்தவை மகிழ்ச்சியான ஒரு பண்டிகையாக தீபாவளி வருடா வருடம் வந்து போய் கொண்டிருந்தது.

1987ம் ஆண்டும் தீபாவளி வந்தது ஆனால் வழைமையான இலங்கை இராணுவத்தின் வெடியோசையுடன் அல்ல மாறாக அமைதிகாக்கும் படை என்கிற முத்திரையுடன் வந்த இந்திய அழிவுப்படையின் வெடியோசைகள் மத்தியில் அந்த தீபாவளிநாள் விடிந்தது அன்று எனது தந்தையையும் எனது சகோதரியையும் இந்தியப்படைகள் எங்கள் வீதியில் வைத்து சுட்டுகொன்று கொழுத்திவிட்டு போயிருந்தனர். அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளி நாளும் எங்கள் குடும்பத்திற்கு நினைவுநாளாகி போனது.

ஒவ்வொரு மனிதனின் பின்னாலும் எத்தனை சோகக்கதைகள்.அதில் சாத்திரி நீங்களும் விதிவிலக்கல்ல என்பதனை உங்கள் நகைச்சுவை கதைமூலம் உணர்த்தியுள்ளீர்கள்.இனி வரும் ஒவ்வொரு தீபாவளியும் உங்கள் தந்தையும்,சகோதரியும் என் நினைவில்........ :lol:

உங்கள் கதை ஒரு தனி மண் வாசனை.வாழ்த்துக்கள் தொடருங்கள்........ :wub:

Posted

நன்றிகள் சுவி இணையவன் மற்றும் குமாசாமி எங்களிற்கு இழப்புகளும் சோகங்களும் எங்களிற்கு புதிதல்ல ஆனால் அதை சிலர் தங்களின் சுயநலத்திற்காக பாவிக்கின்ற பொழுது தான் வேதனையாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழைய நினைப்புகளை மறக்காம அப்படியே கதையா தாறது அழகு சாத்திரி.

Posted

நகைச்சுவயாக ஆரம்பித்த கதை முடிவில் சோகமான நினைவு நாளாக மாறியதை வாசிக்கும்போது மனம் கனத்தது இப்படி ஒவ்வொருவர் பின்னும் பலப் பல கதைகள் உள்ளன. தீபாவளி முடிந்து கந்தசஸ்டி தொடங்கி சூரன் போருக்கு முன்னர் எனது ஊரிலும் (சாவகச்சேரி) இந்தியன் ஆமிக்காரன் வரும்போது சில தும்பியல்சம்பவம் நிகழ்ந்தது... இன்று நான் உயிருடன் இருப்பதே அதிசயம்தான்...! :rolleyes:

Posted

பொதுவாக எனது பகுதி தீபாவளி அமர்க்களங்களும் இப்படித்தான் அமைந்திருக்கும்.. புது உடுப்புகளை சாமி படத்துக்கு முன்னால் வைத்து, அதன் கொலர் மூலையிலோ அல்லது கீழ் விளிம்பு முனையிலோ மஞ்சள் தடவி பிள்ளைகளுக்கு அணிவிப்பார்கள்!

உங்கள் ஆக்கத்தின் மூலம் நினைவிடை தோய்ந்தபோது, இறுதியில் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மனதை சற்று உலுக்கியது.

இழப்புக்கள் ஒருவனை இழப்பின் மாற்றீடைத் தேடி இயக்குறது என நினைக்கிறேன்..

Posted

பொதுவாக எனது பகுதி தீபாவளி அமர்க்களங்களும் இப்படித்தான் அமைந்திருக்கும்.. புது உடுப்புகளை சாமி படத்துக்கு முன்னால் வைத்து, அதன் கொலர் மூலையிலோ அல்லது கீழ் விளிம்பு முனையிலோ மஞ்சள் தடவி பிள்ளைகளுக்கு அணிவிப்பார்கள்!

சோழியன் நீங்கள் சொல்லத்தான் மஞ்சள் தடவுற ஞாபகம் வந்தது. அதை எழுதாமல் விட்டிட்டன். முதல்நாள் இரவு உடுப்புகளிற்கு கொஞ்சம் மஞ்சள் தடவி சாமிஅறையில் சாமிப்படங்களிற்கு முன்னால் அடுக்கிவிடுவார்கள். அடுத்தநாள் காலை குளித்து முடிந்ததும் அந்த உடுப்பை எடுத்து போட்டு கோயிலுக்கு அனுப்பிவிடுவினம். :lol:

Posted

நல்ல கதை சாத்திரி அண்ணா . கடைசி பகுதி சோகமாக இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரி

இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்தவர்களால் எம்மவர்கள் பட்ட துன்பம் அதிகம். நீங்கள் அடைந்தது அதை விட அதிகம். இதை ஒரு கதை என்று பார்க்காமல் இந்திய அரசால் நாம் பட்ட துன்பங்களுக்கான சாட்சிகளாகவே பார்க்க முடிகின்றது.

Posted

ம்ம் தீபாவளியை இப்படி எல்லாம் கொண்டாடிப் போட்டுத்தான் இப்ப எங்களை

கொண்டாடவேண்டாம் என்று பெரிசுகள் எல்லாம் கட்டுரை எழுதினம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

புலத்தில் வாழ்ந்தாலும் நாம் வாழ்ந்த நிலத்தில் நாம் அனுபவித்தவைகளை நாம் அசைபோடாமல் இருக்க முடியாது. நம் இளமைக்கால இனிய நிகழ்வுகளை அப்படியே எழுதுவதில் ஒரு சுகம், படிப்பதில் ஒரு சுகம். ஆனால் இதயமே இல்லாத இராணுவக் கொடுமைகளால் என்றுமே அழுதுகொண்டிருக்கும் எம்மவர்களை எண்ணும்போது இதயமே கனக்கின்றது. சாத்திரிக்கு எனது பராட்டுக்கள்.

எனது இளமைக்கால நினைவுகளிலிருந்து

சிறுவர்களாகிய எமக்கு காலையிலிருந்து மாலைவரை உதைபந்தாட்டம்தான் வேலை. அயல் கிராமங்களிருந்தும் நண்பர்கள் தமது பந்துகளுடன் எமது வீட்டிற்குத்தான் வருவார்கள். எமது வீட்டிற்குப் பின்னால் இருந்த வளவிற்குள் ஒரே காற்பந்தாட்டம்தான். பெரிய தோல் பந்தில் நிறையக் காற்றடித்துவிட்டு பலமாக அடிக்கக் கூடாது என்று ஒரு சட்டம் வைத்துவிடுவோம். அப்படி அடித்தால் நாம் தைத்துக்கட்டியிருந்த நூல் அறுந்துவிடும். அதனால் அப்படி பலமாக அடிப்பவர்களுக்கத் தண்டனையாக "கோல்" அடிக்கவிட்டாலும் அடித்தவரின் எதிர் தரப்பிற்கு ஒரு "கோல்" என்று கொடுக்கப்படும். அடிக்கும் பந்தினை பக்கத்தில் இருக்கும் முள் மரங்களைப் பார்த்து அடிக்கவேண்டாம் என்றும் ஒரு நிபந்தனை வைக்போம். ஆனால் பத்தடிக்கும் விறுவிறுப்பில் எந்த நிபந்தனைகளும் அங்கே செல்லுபடியாகாது. சிறிது நேரத்தில் காற்றுள்ள பந்துகள் எதுவும் நீடித்து இருக்காது. அதனால் பழைய சேலைகளைக் கொண்டு சுற்றிய பந்துதான் இறுதிவரை எமக்கு உதவியாக இருக்கும்.

எனது மாமாக்கள் ஐவர். ஒருமுறை அவர்களுக்கும் எனது பேரனார் சாத்திரியின் அப்பா செய்ததுபோல மலிவான துணியில் எல்லோருக்கும் "சேட்" தைத்துக்கொடுத்தாராம். எல்லோரும் அவற்றை அணிந்துகொண்டு கோவிலுக்குச் சென்றுவிட்டு, உரும்பிராயில் இருந்த பெரியம்மா வீட்டிற்குச் சென்றார்களாம். அங்கே பெரியம்மா வீட்டிற்கு முன்னால் இருந்த கடைக்காரருடைய மகன் அந்தத் துணியிலே தீபாவளிக்கெனப் புதிதாகத் தைத்த "சாரம்" உடுத்திக்கொண்டு நின்றராம். அதனைக் கண்டதும் எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்து விழித்தார்களாம்.

Posted

ம்ம் தீபாவளியை இப்படி எல்லாம் கொண்டாடிப் போட்டுத்தான் இப்ப எங்களை

கொண்டாடவேண்டாம் என்று பெரிசுகள் எல்லாம் கட்டுரை எழுதினம். :icon_idea:

ஓம் வசி தங்களை விட நீங்கள் பெரியஆளவிலை கொண்டாடிபோடுவீங்கள்எண்டு

Posted

சாத்திரி

இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்தவர்களால் எம்மவர்கள் பட்ட துன்பம் அதிகம். நீங்கள் அடைந்தது அதை விட அதிகம். இதை ஒரு கதை என்று பார்க்காமல் இந்திய அரசால் நாம் பட்ட துன்பங்களுக்கான சாட்சிகளாகவே பார்க்க முடிகின்றது.

அதில் என்ன சந்தேகம் அப்படியே ஒரு வருடத்துக்கு முன்னர் என்னை கடித்து குதறியதை நினைத்து பாருங்கள் :icon_idea:

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தீவாளிக் கதையினை இன்று தான் வாசிக்க நேரம் கிடைத்தது. உரும்பிராய், இணுவில், யாழ் வைத்தியசாலை என இந்தியப் படைகளினால் தீவாளி அன்று எம்மவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். சாத்திரி உங்களின் குடும்பத்துக்கு நடந்த கொடுமைகள் பதிவுகளாக வரவேண்டும்.

கெளரி பாலன், உங்களுக்கு சாவகச் சேரியில் நடந்த கொடுமைகளை எங்களுக்குச் சொல்லுங்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இருப்பவர்களில் பலர் இந்திய இராணுவக் கொடுமைகள் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். அவர்கள் இக்கொடுமைகள் பற்றிய செய்திகளை அறிய வேண்டும்.

Posted

87ல் தீவாளியின் போது இணுவில் கந்தசுவாமி கோவிலில் இருந்தவர்களில் சிலர் வீட்டிற்கு தீபம் ஏற்ற செல்லும் போது இந்தியப் படையின் செல்வீட்சினால் கொல்லப்பட்டார்கள். அவர்களில் உடலங்கள் கோவிலின் பின் பகுதியில் இருக்கும் சைவப்பிரகாச பாடசாலை மைதானத்தில் எரிக்கப்பட்டது. அப்பொழுது எரியும் பிணவாசனையுடன் அன்று முழுவதும் அக்கோவிலில் இருந்த மக்களில் நானும் ஒருவன். (கிட்டத்தட்ட 45 நாட்கள் அக்கோவிலில் அகதியாக இருந்தோம்). 90ம் ஆண்டு தீவாளியின் போது குப்பிழான், எழாலை வடக்கில் விமானத்தாக்குதல்கள் நடைபெற்ற போது காலையில் இருந்து மாலைவரை பதுங்குகுழியில் இருந்தோம். அன்று தான் பலாலி இராணுவத்தினர், விடுதலைப்புலிகளின் தாக்குதலை முறியடித்து முன்னேறி வந்தார்கள். அதனால் குப்பிழான், புன்னாலைக்கட்டுவன், தெல்லிப்பளை, ஏழாலை ,ஊரங்குணைப் பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சூரவத்தை, மல்லாகம், சுன்னாகம், உரும்பிராய், உடுவில், இணுவில் நோக்கி சென்றார்கள். நாங்களும் இடம் பெயர்ந்தோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.