Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியாருக்கு 95 அடியில் சிலை: கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாருக்கு 95 அடியில் சிலை: கருணாநிதி

திங்கள்கிழமை, டிசம்பர் 3, 2007

சென்னை: சென்னையில், தந்தை பெரியாருக்கு 95 அடியில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 75வது பிறந்த நாளையொட்டி சென்னையில் விழா எடுக்கப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு வீரமணியை வாழ்த்திப் பேசினார்.

அப்போது முதல்வர் பேசுகையில், அண்ணா ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசுகையில், என்னை ஒரு திராவிடன் என்று கூறிக் கொள்வதில், தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிநிதி என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார்.

அண்ணாவின் வழியில், நானும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் துயர் துடைக்க, அவர்களின் நலன் காக்கும் பணியில் தொடர்ந்து தொய்வின்றி பாடுபடுவேன், உழைப்பேன். தமிழர்களுக்காக எத்தனை காலத்திற்கு உழைக்க வேண்டுமானாலும் அதற்கு நான் தயார்.

தந்தை பெரியாருக்கு 95 அடியில் சிலை வைக்க வேண்டும் என வீரமணி கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்கிறேன். சென்னையில் பெரியாருக்கு 95 அடியில் சிலை நிறுவப்படும். அந்த சிலை பெரியாரின் போதனைகளை பரப்பும் வகையில் அமையும்.

9 அடி, 10 அடியில் வைக்கப்படும் பெரியார் சிலைகள் மூலமாகவே அவரது கொள்கைகள் வேகமாக பரவி வரும் நிலையில், 95 அடியில் சிலை வைத்தால் இன்னும் வேகமாக பரவும். பெரியாரின் புகழைப் பாடும்.

இந்த சிலை வைப்பதால் ஏற்படும் எந்த விளைவையும் சந்திக்கத் தயார். என்ன ஆனாலும் பரவாயில்லை, இந்த சிலையை வைத்து சாதித்துக் காட்டுவேன்.

தமிழகத்தில் மொழிப் போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதைப் போல, ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் போது சிறை சென்ற, உயிரிழந்த குடும்பத்தினருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றார் கருணாநிதி.

கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு பேசுகையில், ராமர் பாலத்தைக் காக்கிறோம் என்ற போர்வையில் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்போர் நாட்டின் எதிரிகள் என்று வர்ணித்தார்.

நடிகர் சத்யராஜும் விழாவில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், தமிழர்களுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர் ராமர். இங்கேயே உள்ளூர் தெய்வங்கள் நிறைய உள்ளன. அவர்கள் தமிழக மக்களைப் பாதுகாத்துக் கொhttp:

thatstamil.oneindia.in/news/2007/12/03/tn-i-will-continue-work-for-welfare-of-tamils-cm.htmlள்வார்கள் என்றார்.

கொஞ்ச நேரத்தில இந்த பக்கத்தில பட்டாசு எல்லாம் கொழுத்தபடும் கறுப்பி அக்கா பிறகு பொலிஸ் வந்து தான் நிலைமையை கட்டுபாட்டிகுள் கொண்டுவரவேண்டும் :lol: !!இப்படி சிலை வைக்கிறதில என்ன பிரயொசனமோ தெரியவில்லை யாரும் தெரிந்தவை சொல்லுங்கோ :wub: ........ஆனா எனக்கு மட்டும் கண்டிப்பா சிலை வைத்து போடுங்கோ சொல்லிட்டேன் இப்பவே!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி டவுட்-

"கோயிலில சிலை வைக்க கூடாது என்று உடைத்தார் :wub: (இங்கே எங்கயோ தான் வாசித்தனான் பிழையா இருந்தா சொறி) இவர் பட் இவருக்கே சிலை வைக்கிறார்கள் என்றா" :D

சந்தையில பொருளுக்கு விற்பனை குறைஞ்சிட்டா விளம்பரம் செய்துதானே ஆகனும். அப்படித்தான்.... இவர்களும்.. சிலைகளும்.. கொள்கைகளும்..! :lol::D

சந்தையில பொருளுக்கு விற்பனை குறைஞ்சிட்டா விளம்பரம் செய்துதானே ஆகனும். அப்படித்தான்.... இவர்களும்.. சிலைகளும்.. கொள்கைகளும்..! :lol::wub:

ஓ அப்படியா நெடுக்ஸ் தாத்தா :lol: சா அப்ப எனக்கு சிலை வைத்து போடாதையுங்கோ அதை வாபஸ் வாங்கி கொள்கிறேன்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

தற்போதைய சூழ்நிலையில் கலைஞரை விமர்சிப்பதை தவிர்க்க நினைத்தாலும் பெரியார் சிலை குறித்த செய்தியை படிக்கும் போது முதல்வரின் மஞ்சள் துண்டும் பெரியாரின் பகுத்தறிவு கொள்கையும் ஒரே நேரத்தில் நினைவு வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது முதல்வர் பேசுகையில், அண்ணா ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசுகையில், என்னை ஒரு திராவிடன் என்று கூறிக் கொள்வதில், தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிநிதி என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார்.

இந்த டயலாக்குக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.வீதி வீதியாக ஒரு வேளை உணவுடன் மிக கேவலமான இருபிடங்களில் வசிக்கும் ஈழ தமிழ் அகதிகளை போய் பார்த்து அவர்களின் குறைகளை கேட்க வக்கில்லை.தமிழுக்கு இவர்கள் எப்படி சேவை செய்கிறார்கள் என்பது நகைப்புக்கு உரியது.

சிலைகள்

உடைத்த

பெரியாருக்கு

சிலைகள் :)

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவாம் சிலைக்கு "கும்ப அபிஷேகம்"?

சந்தையில் பொருளுக்கு விற்பனை குறைந்தால் வியாபாரம் செய்யத்தான் வேண்டும். அதனால்தான் தெருவுக்கு தெரு கோயில்களை கட்டி வருகின்றார்கள்.

வினோதமான உருவங்களை கடவுள் என்று சொல்லி மூலைக்கு மூலை சிலை வைக்கின்றார்கள்.

இவர்கள் எப்படித்தன் விளம்பரம் செய்தாலும், அறிவு வளர்கின்ற போது இவர்களுடைய வியாபாரம் வீழ்ந்துதான் ஆகும்.

தமிழர்கள் என்றைக்குமே இந்த உருவங்களை எல்லாம் வணங்கிக் கொண்டும், ஏமாந்து கொண்டும் இருக்க மாட்டார்கள் என்பதற்கு அடையாளம்தான் பெரியார் சிலைகள். இந்தச் சிலைகள் எதிர்வினைகள்தான்.

தமிழர்களுக்கு குரங்கிற்கும், ஆரிய ராமனிற்கும், யானைத் தலையனுக்கும், இன்னும் வேறு வேறு உருவங்களிற்கும் சிலை வைத்து வணங்குவதை நிறுத்தும் போது, பெரியார் சிலைகள் வைக்கப்படுவதும் நின்று விடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணாவின் வழியில், நானும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் துயர் துடைக்க, அவர்களின் நலன் காக்கும் பணியில் தொடர்ந்து தொய்வின்றி பாடுபடுவேன், உழைப்பேன். தமிழர்களுக்காக எத்தனை காலத்திற்கு உழைக்க வேண்டுமானாலும் அதற்கு நான் தயார்.

கலைஞருக்கு நகைச் சுவை நன்றாகவே வருகிறது, ஏனோ ஈழத்தமிழர்களும் மலேசியத் தமிழர்களும் மனதில் வந்துபோகிறார்கள்.

தமிழர்கள் என்றைக்குமே இந்த உருவங்களை எல்லாம் வணங்கிக் கொண்டும், ஏமாந்து கொண்டும் இருக்க மாட்டார்கள் என்பதற்கு அடையாளம்தான் பெரியார் சிலைகள். இந்தச் சிலைகள் எதிர்வினைகள்தான்.

தமிழர்களுக்கு குரங்கிற்கும், ஆரிய ராமனிற்கும், யானைத் தலையனுக்கும், இன்னும் வேறு வேறு உருவங்களிற்கும் சிலை வைத்து வணங்குவதை நிறுத்தும் போது, பெரியார் சிலைகள் வைக்கப்படுவதும் நின்று விடும்.

இந்து மதம் பற்றிய கருத்தாடல்களில் எவராவது திரு.ஈ.வெ.ராமசாமியின் திருகுதாளங்கள் பற்றி எழுதிவிட்டால் உடனே "இந்து மதம் பற்றி விவாதம் செய்யும் போது இந்து மதம் பற்றிய கருத்துக்களை வையுங்கள் எதற்கு தேவையில்லாமல் ஈ.வெ.ரா பற்றி எழுதி கருத்தாடலை திசை திருப்புகிறீர்கள்" என்று எழுதி புலம்பும் நீங்கள், ஈ.வே.ரா பற்றிய தலைப்பில் தேவையில்லாமல் ஏன் இந்து கடவுள்களை பற்றி இழுக்கிறீர்கள்.

ஊருக்கு தான் உபதேசம் உனக்கல்லடி மகளே என்ற திரு. ஈ.வே.ரா வின் பகுத்தறிவு பாரம்பரியமா?! :unsure:

வடக்கே இந்துமதம் என்று ஒன்று இருந்து இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் நாடு பிடிக்கும் பேராசைக்கு தடை போட்டு இருக்காவிட்டால், நீங்களும் சுன்னத்து செய்து மத்ரஸாக்களுக்கு தான் இப்போது போய் கொண்டு இருப்பீர்கள். உங்கள் வீட்டு பெண்களும் முக்காடிட்டு இருந்து இருப்பார்கள்.

திரு ஈ.வெ.ரா வும் ஈரோட்டில் "ராமசாமி நாயக்கர் மண்டி" க்கு பதிலாக "ரவுப்டீன் மரிக்கார் மண்டி" என்று பெயர் வைத்து 4 பெண்களை திருமணம் செய்து, முக்காடிட்டு மூலையில் வைத்து விட்டு தேவைப்பட்டால் தலாக் சொல்லி விவாகரத்தும் செய்து விட்டு, அரபு மொழியில் ஆண்டவன் பேசினான் ஆகவே அதுவே உலகில் முதல் மொழி கூவிக்கொண்டு திரிந்திருப்பார்!

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் வரும் முன், இன்றைய பாகிஸ்தானில் அன்று இருந்த பல்வேறு ஆதிக்குடிகளின் கலாச்சாரங்களுக்கும், மொழிகளுக்கும், மதங்களுக்கும் என்ன நடந்தது, அவர்களுக்கு இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் செய்தது என்ன என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதம் பற்றிய கருத்தாடல்களில் எவராவது திரு.ஈ.வெ.ராமசாமியின் திருகுதாளங்கள் பற்றி எழுதிவிட்டால் உடனே "இந்து மதம் பற்றி விவாதம் செய்யும் போது இந்து மதம் பற்றிய கருத்துக்களை வையுங்கள் எதற்கு தேவையில்லாமல் ஈ.வெ.ரா பற்றி எழுதி கருத்தாடலை திசை திருப்புகிறீர்கள்" என்று எழுதி புலம்பும் நீங்கள், ஈ.வே.ரா பற்றிய தலைப்பில் தேவையில்லாமல் இந்து கடவுள்களை பற்றி இழுக்கிறீர்கள்.

ஊருக்கு தான் உபதேசம் உனக்கல்லடி மகளே என்ற திரு. ஈ.வே.ரா வின் பகுத்தறிவு பாரம்பரியமா?! :lol:

அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவருக்கு நெகிழ்வுப் போக்கும் மற்றவர்களுக்கு இறுக்கத்தையும் காட்டி நிற்கும் நிர்வாகமே இதற்குக் காரணம்..!

இதை நிர்வாகத்துக்குச் சுட்டிக்காட்டினால் விதண்டாவாதம் செய்பவர்களுக்கு தாங்கள் பதிலளிக்கமாட்டார்களாம்..! மற்றும்படி தாங்கள் பக்கம் சாராதவையாம்..! :lol::unsure:

ஒரு ஊடகத்தை நடத்துபவர்கள் பல்வேறு கொள்கைகளை சார்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் அந்த ஊடகம் பக்க சார்பில்லாது நடுநிலை பேணும் போது தான் அதன் வீச்சும், வாசகர் வட்டமும் வளர்கிறது. இல்லையென்றால் அந்த ஊடகம், ஊடகத்தை நடத்துபவர்களின் கொள்கை பரப்பு மேடையாகிவிடும். நடுநிலை பேணும் தளம் என்னும் வாசகர்களின் நம்பிக்கையையும் இழந்து விடும். அவ்வளவு தான்!!!

Edited by vettri-vel

வெற்றிவேல்!

உங்களுடைய விளக்கம் தவறானது.

இந்து மதம் ஒரு மிகப் பெரிய மதம் என்று சொல்கிறீர்கள். அந்த மதத்தைப் பற்றிய கண்டனத்தை நாங்கள் சொல்கின்ற போது, அதற்கு விளக்கம் தருவதுதான் சரி. பெரியாரைப் பற்றிப் பேசாமல் இந்து மதம் பற்றி நன்றாகவே பேச முடியும்.

ஆனால் பெரியார் இந்து மதத்தின் கொடுமைகளை எதிர்த்து உருவான ஒரு தலைவர். அவரைப் பற்றி பேசுகின்ற போது இந்து மதம் பற்றிப் பேசத்தான் வேண்டும்.

கோயில் கட்டுவதற்கும், கடவுள் சிலைகளை வைப்பதற்கும் காரணம் பெரியார் அல்ல.

ஆனால் பெரியார் சிலை வைப்பதன் காரணம், இந்து மத சிந்தனைகளுக்கு எதிர்ப்பை காட்டுவதுதான்.

பெரியார் சிலையை பூசை செய்து வழிபடுவதற்கு யாரும் வைப்பதில்லை. பெரியாரின் கொள்கைகளின் அடையாளமாக, அவைகளை பரப்பவும் வைக்கப்படுகின்றன.

மூடநம்பிக்கையில் கடவுள் சிலைகளை வைத்து மக்கள் வழிபடும் வரை, அதை எதிர்ப்பவர்கள் பெரியார் சிலைகளை வைத்துக் கொண்டிருப்பார்கள் என்று நான் சொன்ன பதில் சரியானது. உண்மையானதும் கூட.

இதற்கு வேறு பதிலை தர முடியாது.

ஆனால், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக சொல்லப்படும் இந்து மதம் பற்றிக் கேள்வி கேட்டால், நூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்த பெரியாரை இழுக்காமல், ஒழுங்கான முறையில் பதில் தர முடியும்.

அத்துடன் சில கேள்விகளை பொறுத்தும் பதில்கள் அமையும்

பெரியாரை விட்டு அண்ணா ஏன் பிரிந்தார் என்று கேட்டால் அங்கே இந்து மதத்தை இழுக்காமல் பதில் சொல்ல முடியும்.

ஆனால் பெரியார் ஏன் ராமர் சிலையை செருப்பால் அடித்தார் என்றால், ராமர் பற்றி பேசாமல் பதில் சொல்ல முடியாது.

பெரியார் சிலைகள் வைக்கப்படுவதன் காரணமே, மூடக் கொள்கைகளுக்கான எதிர்ப்புணர்வைக் காட்டுவதற்குத்தான். ஆகவே அது குறித்துப் பேசாது பதில் சொல்ல முடியாது.

ஆனால் இந்து மதத்தில் எதைப் பற்றி கேள்வி கேட்டாலும், பெரியாரை இழுக்க வேண்டிய அவசியமே வராது.

ஆனால் இங்கே இந்து மதத்தில் உள்ள அழுக்குகளுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் வலிந்து பெரியாரை வாதத்திற்குள் இழுத்து வாதத்தையே திசை திருப்புவர்ர்கள். அதைத்தான் நான் கண்டிக்கிறேன்.

போராட்டத்தையும் மத நம்பிக்கையையும் இனைப்பது முட்டாள்த்தனம்

அது மட்டும் இல்லை பெரியாருக்கு ஆதராவாக பேசும் உறவுகளும் அதே போல கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் போராட்டத்தை அதற்க்குள் இழுப்பது ஆரோக்கியம் இல்லை

ஒற்றுமையாக இருந்தால் எவளவு சாதிக்கலாம்.................

குறிப்பாக சபேசன் அண்ணா அண்ட் நெடுக்ஸ் அண்ணா போன்றோர் யாழ்களத்தில் ஒற்றுமையாக இருந்து போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும் ..

இரத்தகண்ணீர் படத்தில் எம்ஆர் ராதா ஒரு வசனம் சொல்லுவார்.. 'சாந்தா.. அன்று பெற்ற தாயை காலால் உதைத்தேனே.. இன்று நடக்க முடியவில்லையே?' ஒரு பகுத்தறிவு வாதி ததனது பகுத்தறிவு பேசும் படத்தில் பேசும் வசனம்..

இது ஒரு உதாரணம். இதைத்தான் சமயமானது, 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்றோ, 'அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்' என்று கூறுகிறது.

ஒரு உண்மையான விடயத்துக்கு ஒருவன் 'பக்தி' சாயம் பூசுகிறான். இன்னொருவன் பகுத்தறிவுச் சாயம் பூசுகிறான்.

ஒருவன் தெய்வத்தை சிலையில் வைத்து மாலை போடுவான்.. அலங்காரம் செய்வான்.. பூசை செய்வான். இன்னொருவன் தனது தலைவரை சிலையில் வைத்து மாலை போடுவான்.. வருடாவருடம் அலங்காரம் செய்வான்.. மந்திரத்துக்கு பதிலாக மைக்கை பிடித்து வசனங்களால் துதி பாடுவான்.. என்ன...? அந்த மந்திரம் வடமொழி.. இது தமிழ் மொழி..

பெரியார் கட்சிக்காரன் (திராவிடர் கழகம்) கறுத்த சட்டை மாட்டுறான். கோயிலுக்கு போகிறவன் வெள்ளை வேட்டி சால்வை போடுறான்.. உடுப்பில்கூட அடிப்படைல ஒற்றுமை இருக்கிறதுதானே?!

ஆக, அடிப்படையில் இவற்றில் என்ன வித்தியாசம் இருக்கென்று எனக்கு தெரியேலை.. ஒரு பலாபலன் இருக்கு.. அதுதாங்க நாம பிரிந்து கொண்டே போவது.. :):lol:

Edited by sOliyAn

மிகச்சரியாக சொன்னீர்கள்!

1. கோடிக்கணக்கான ரூபாய்கள் ஊழல்

2. சாதி அரசியல்

3. உயிருடன் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து விட்டு தலைவனுக்காக தீக்குளித்த தியாகி என

__பட்டமளிக்கும் கொடூரம்.

4. கோவில் கதவுகளை மூடி வைத்து விட்டு திருட்டுத்தனமாக சாமி கும்பிடுவது (சென்னையில்

__உள்ள திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் தான்!!! வேறு எங்கும் அல்ல)

5. ஜோதிடரின் அறிவுரைப்படி மஞ்சள் துண்டு அணிந்து கொள்வது

இப்படி உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை ஏமாற்று வேலைகளையும், செப்படிவித்தைகளையும் செய்து விட்டு, கேட்டால் அவர்கள் தான் பகுத்தறிவாளர்களாம். கடவுளை நம்பிய மாபெரும் விஞ்ஞானிகளான

Newton, Oppenheimer போன்றவர்கள் கூட பகுத்தறியாதவர்களாம் :lol::lol::wub:

Edited by vettri-vel

இரத்தகண்ணீர் படத்தில் எம்ஆர் ராதா ஒரு வசனம் சொல்லுவார்.. 'சாந்தா.. அன்று பெற்ற தாயை காலால் உதைத்தேனே.. இன்று நடக்க முடியவில்லையே?' ஒரு பகுத்தறிவு வாதி ததனது பகுத்தறிவு பேசும் படத்தில் பேசும் வசனம்..

இது ஒரு உதாரணம். இதைத்தான் சமயமானது, 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்றோ, 'அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்' என்று கூறுகிறது.

ஒரு உண்மையான விடயத்துக்கு ஒருவன் 'பக்தி' சாயம் பூசுகிறான். இன்னொருவன் பகுத்தறிவுச் சாயம் பூசுகிறான்.

ஒருவன் தெய்வத்தை சிலையில் வைத்து மாலை போடுவான்.. அலங்காரம் செய்வான்.. பூசை செய்வான். இன்னொருவன் தனது தலைவரை சிலையில் வைத்து மாலை போடுவான்.. வருடாவருடம் அலங்காரம் செய்வான்.. மந்திரத்துக்கு பதிலாக மைக்கை பிடித்து வசனங்களால் துதி பாடுவான்.. என்ன...? அந்த மந்திரம் வடமொழி.. இது தமிழ் மொழி..

பெரியார் கட்சிக்காரன் (திராவிடர் கழகம்) கறுத்த சட்டை மாட்டுறான். கோயிலுக்கு போகிறவன் வெள்ளை வேட்டி சால்வை போடுறான்.. உடுப்பில்கூட அடிப்படைல ஒற்றுமை இருக்கிறதுதானே?!

ஆக, அடிப்படையில் இவற்றில் என்ன வித்தியாசம் இருக்கென்று எனக்கு தெரியேலை.. ஒரு பலாபலன் இருக்கு.. அதுதாங்க நாம பிரிந்து கொண்டே போவது.. :):lol:

வேட்டி சட்டை மத அடையாளமா? இன அடையாளமா?

இப்படித்தான் தைப்பொங்கலையும் சமயச் சாயம் பூசி...

Edited by இளைஞன்

சைவமும் தமிழும் ஒன்றோடொன்று கலந்திருந்தது ஒரு காலம்.. அதனால்தான் சைவமில்லாமல் பண்டைய தமிழ் இல்லை.

இன்று எங்கும் எதற்கும் எந்த ஆடையும் அணியலாம். ஆனால் மதச் சடங்குகள் என வரும்போது, சம்பந்தப்பட்டவர் கட்டாயம் வேட்டி அணியவேண்டும். ஆக.. ??? :D:D

  • கருத்துக்கள உறவுகள்

சோழியான் இவர்கள் ஏற்றுக் கொண்டால் என்ன விட்டால் என்ன தைப்பொங்கல் சைவத் தமிழ் மக்களால் தான் கொண்டாடப்படுகிறது. அதுதான் உலக யதார்த்தம். கிறீஸ்தவ மதத்தைப் பின்பற்றும் தமிழ் மக்களாலோ அல்லது இஸ்லாமிய தமிழ் பேசும் மக்களாலோ கொண்டாடப்படுவதில்லை..!

தைப்பொங்கல் பண்டைய சூரிய வழிபாட்டுடனும் தொடர்புடைய ஒரு உழவர் பண்டிகை..! அது தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக அமைகிறது என்பதற்காக சைவத் தமிழ் மக்களால் மட்டுமே கொண்டாடப்படுவதை மறைக்க முற்படக் கூடாது.! சைவம் இன்றேல் பொங்கல் கூட இருந்திருக்காது. தமிழர்களுக்கு என்று ஒரு பாரம்பரிய பண்டிகையை இனங்காட்டக் கூட முடியாது போயிருக்கும். அந்தளவுக்கு காலனித்துவ ஆட்சியாளர்களின் மத விரிவாக்கம் அமைந்திருந்திருக்கிறது..! :lol:

Edited by nedukkalapoovan

சைவமும் தமிழும் ஒன்றோடொன்று கலந்திருந்தது ஒரு காலம்.. :(அதனால்தான் சைவமில்லாமல் பண்டைய தமிழ் இல்லை.

இன்று எங்கும் எதற்கும் எந்த ஆடையும் அணியலாம். ஆனால் மதச் சடங்குகள் என வரும்போது, சம்பந்தப்பட்டவர் கட்டாயம் வேட்டி அணியவேண்டும். ஆக.. ??? :unsure::unsure:

இருக்கலாம். இளங்கோ அடிகள் சிலநேரம் இல்லை என்டும் சொல்லலாம். சீழ்தலை சாத்தனார் சீ என்டும் சொல்லலாம். எங்கட முன்னோர் தெளிவா மதத்தையும் எமது பண்பாடு கலாசாரத்தையும் வேறு படுத்தி வைத்திருக்கினம். நாமதான் மண்டிக் கள்ளு குடிக்கிற ஆக்களாசே.

யார் எங்கே எப்போது வேறுபடுத்தி வைத்திருக்கிறார்கள்?

ஒரு இலக்கியத்தை தூக்கி போடுங்கள் பார்க்கலாம்?

அகர முதல எழுத்தெல்லாம்

ஆதி பகவன் முதற்றே உலகு.

பொதுவான இறைவனை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் என்றால்.. அவரது காலத்திலே வேறு சமயங்களும் தமிழுள் புகுநஇதுவிட்டனவா?

'காப்பு' இல்லாத பண்டைய ஆக்கங்கள் எதையாவது கொண்டுவாருங்கள்.. காப்பு பொதுவாக இறைவனைக் குறித்ததாக இருக்குமென்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை!

மண்டிக்கள்ளுக் குடிச்சாலும், மப்பில விழுந்தெழும்பினாலும்... சைக்கிளில ஏத்திவிட்டால் ஆடாம அசையாம.. வீட்டு படலையடில போய் இறங்குற வல்லமையும் நம்மாக்களுக்குத்தான் இருக்கு.. அதுபோதும்தானே?! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதைவிடப் பெரியாற்றா பெயரில் 4 கக்கூசு கட்டினாலாவது சனம் போய் வர ஈசி. எத்தனை சனம் பரிதாபமாக மரத்துக்குப் பின்னால பதுங்குதுகள் கண்டியளோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.