Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

  • தொடங்கியவர்

என் இரவுகளுக்கு

அவள் முத்துப்பற்கள்...

வெள்ளையடித்தது...

என் வரண்ட இதயத்தில் அவள்

நீலவிழிகள் நீரை வார்த்தது

விரல்கள் மார்பில் கிளறியது..

இதழ்கள் முத்தம் பதித்தது...

எல்லா செயலும் அவளுடையது...

களவு போன இதயம்

மட்டும் என்னுடையது

  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீல விழிகளா?????? :mellow:

உங்கள் கவிகள் தூறல்களாகவும்,காதல் மழையாகவும் வர வாழ்த்துக்கள். :huh:

விகடகவி உங்கள் அவதாரை தயவுசெய்து மாற்றுங்க

  • தொடங்கியவர்

மாத்திட்டேன்.... சரியா. வெண்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி உங்கள் அவதாரை தயவுசெய்து மாற்றுங்க

இன்று காலையில் அந்த அவதாரை பார்த்த போது எனக்கும் அது பிடிக்கவில்லை .

என்னுடைய கண்ணில் ஏதோ பழுதோ என்றும் நினைத்துவிட்டேன் .

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி வெண்ணிலா . அதனை உடனே மாற்றிய விகடகவிக்கும் நன்றி . :lol:

  • தொடங்கியவர்

விகடகவி முகம் அவ்வளவு மோசமாகவா இருந்தது?.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி முகம் அவ்வளவு மோசமாகவா இருந்தது?.. :D

அதை ஏன் கேட்கிறீங்கள் விகடகவி .........

பகலிலேயே பயமுறுத்தும் படமாச்சே........

இப்போ நீங்கள் நல்ல வடிவு . :lol:

மாத்திட்டேன்.... சரியா. வெண்ஸ்

:lol: ரொம்ப நன்றிங்கோ

விகடகவி முகம் அவ்வளவு மோசமாகவா இருந்தது?.. :lol:

அதை வேறை சொல்லணுமா :D

  • தொடங்கியவர்

நன்றி நன்றி..நிறைய வீட்டு வாசலிலே அந்தப்படத்தைதான் பயன்படுத்துறாங்கள்

  • தொடங்கியவர்

பனிமுத்து மகுடம் தாங்கிய

பச்சைப் புல்ப் பாயின் மேல்

மெல்ல விழுந்தவள்...செம்பூவாய்

அடடா..பார்த்த மனம் வியும்..

அதிகாலை ஆம்பலாய்...

பாதி விழி மூடிக்கொள்ளும்

பாதி விழி பார்த்தழைக்கும்..

வெடித்த மாதுளை இதழை

அவள் உள்ளிழுத்துஈரம் செய்யும்

அமுத வாய் வாசல் கண்டு

இவன் விட்டேத்தி விரல்கள்

தொட்டிடச் செல்லும்..

உள் நோக்கம் அறிந்தாப் போல்

அவளிதழ்கள் பட்டாம்பூச்சி

இறக்கைள் போல்..படபடக்கும்

முத்துவரிசைப் பற்கள்

கொண்டே கதவடைக்கும்

சூடேறிய கன்னங்கள்..

செங்கற்சூழை போல்

சிவக்கும்..மெல்லக்

கடிக்க மனம் அடமிடும்

சீராக மூக்குத்தி மேல்

சின்னதாய் தகதகக்கும்

தங்க மூக்குத்தி..

மனதில் சில்மிசம் செய்யும்..

வில்லான புருவங்கள் குவிந்து

விழுமிடத்தில் வைத்திழுத்த

திலகம் கூட வெக்கமாய்ச்

சிவந்திருக்கும்..செல்லமாய்

முத்தம் கேட்கும்...ஆணவன்

சூடான மூச்சை

சுகத்துக்கு கேட்கும் குவளைக்

கழுத்தோரம் கூந்தல்

கொட்டிக்கிடங்கும்..

கொஞ்சம் நுகரக்

காதல்த் தீ திராவகம் கொப்பளிக்கும்

கலைந்த நூற்ச்சேலை

தோளிலும் மார்பிலும்

நீங்காமல் நின்று..

தவழும்..விலகும்..

மூடும் முறைக்கும்...

கைவிலக்க நினைத்தாலும்..

கன்னி கையில் தானிருக்கும்..

வன்முறை காட்டி

விலக்கிய வெளிகளில்

வன்மையாய் தெரிந்திடும்

மென்மையின் காட்சிகள்

கச்சைக்குள் கைதிகளாய்..

அழுத்தி வைத்த வீரம்

சிவந்து முறைத்திருக்கும்..

முடிச்சொன்று விழுந்த இடம்

கன்றிக் கவலை தரும்..

முரட்டு உதடுகள் உத்தடச்

சுகத்தால்தான் மொத்தமும்

சீராகும்..சிறப்பாகும்..

விடுதலை பெற்ற

வீரமடுக்களை

மங்கை கை மறைத்திருக்கும்..

கெஞ்சிப் பார்க்கின்றவன்

நிலை மேல் இரங்கும்

வஞ்சி வாய்ப்புத் தர

அந்த மில்லை அது

ஆரம்பம் ஆரம்பம்..

செக்கச்சிவப்பிடத்தில்

மனம் பசையாயே ஒட்டிக்கொள்ளும்

விழிகள் நிமிர்ந்தவன்

காணாமல் சட்டென்று நிமிர்ந்து

அவளை நோக்கி

அசடுவழிகின்ற அக்கணத்தில்

அஜானபாகு போலவேயிருந்தாலும்..

அவனும் அசட்டுக் காதலன்தான்

  • தொடங்கியவர்

கறுப்புத்திரை வரித்த

வெள்ளைப்பூக்கள்

பூகம்பக் கோலம் கொள்ளும்...

அவசியஅதிசயம்...

தமிழீழமண்ணில்..

நாளை மொட்டுக்களுக்காய்!!

பேச்சுக்கு சொல்வார்கள்

உடல் மண்ணுக்கு

உயிர் தமிழுக்கு என்று

கரும்புலி தெய்வங்கள்

செயலில் காட்டுவார்கள்

உயிரும் தமிழும்

தமிழ் மண்ணுக்கே என்று

கதிரவனைக் கண்டு

கருமுகில்கள் கண்ணீர்

வடிக்கும் "சோ"வென்று

கரும்புலிகளைக் கண்டு

கதிரவனே கண்ணீர் வடிப்பான்..

தியாகங்களைப் பாரென்று

பெற்ற மனம் பித்து

பிள்ளை மனம் கல்லு

என்பார்..இங்கே பார்

பிள்ளையை வெடிக்க அனுப்பிவைத்து

வெற்றிச்சேதிக்காய் வாசல் காத்திருக்கிறாள்

ஈழத்தாய்..அவள்தானடா வீரத்தாய்

எல்லா உறவுகளும்..

எல்லா உணர்வுகளும்..

என் போலதானே உனக்கும்

அண்ணா...ஆனால்..

மண்ணுக்காக உயிர் துறந்து

நீ தியாகியாயும்..

உயிரைக் காக்க மண்ணை விட்டுவந்து

நான் எனக்கே ஓர் துரோகியாயும்...

எப்படி அண்ணா என்

இரத்தத்தில் பயம் கலந்தது?

என் இரத்தத்தில்..என் சித்தத்தில்

என் உணர்வுகளில் உன் உயிரில்

விடுதலையின் வேட்கையையும்..

தமிழ் உணர்வையும்..கணமும்

பூப்பூக்கச் செய்கின்ற கரும்புலிகள் தெய்வங்களுக்கு

என் இதய அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

வீர காவியமான கரும்;புலிகளுக்கு கவி படைத்த விகட கவிக்கு என் நன்றிகள்

  • தொடங்கியவர்

நன்றி நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுக்கு சொல்வார்கள்

உடல் மண்ணுக்கு

உயிர் தமிழுக்கு என்று

கரும்புலி தெய்வங்கள்

செயலில் காட்டுவார்கள்

உயிரும் தமிழும்

தமிழ் மண்ணுக்கே என்று

நூற்றுக்கு நூறு உண்மையான வரிகள் விகடகவி .

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

நன்றி :lol:

  • தொடங்கியவர்

தூறல் நாள் 92

சாக்கடைக்குள்

விழுந்த பூக்களைப்

போல்...ஆகிவிடும்

போதைமோகம் கொண்ட

குழந்தைகள்...

பாதி வழி கடந்துவிட்டால்..

திரும்பமுடியாத..ஒரு

ஒற்றைவழிச் சூனியப்பாதை அது

உன் மௌனத்திலிருந்து

நான் எடுத்துக் கோர்த்த வார்த்தைகள்தான்

நம் காதல் நான் மறுக்கவில்லை..

முத்துக்கள் பொய் என நீ

மறுத்துவிட்டாலும் பெண்ணே...

என் காதல் கோர்க்கும் நூலென்பது..

அது நித்திய ஜிவிதம் என்பதும்

சத்தியமடி!!

இரத்த உறவுகளைக் கண்ணுக்கு

காட்டக் கூட

பாழாய்ப்போன பணம் என்கிற

பூதக் கண்ணாடி தேவையாய்

இருக்கிறதே!

மீண்டும்..

அதிகாலை வரும்..

மீண்டும்

பனிமூட்டம் வரும்..

மீண்டும் நான்..

சாலையில் ஓடுவேன்...

மீண்டும்..

வெள்ளைச்சுடிதாரில்

விண்ணுக்கு வருவாளா

அந்த அழகி?

இந்தப்பூக்களில் கூட

தேனோடு முள் இருக்கிறதாம்..

இவள் சொல்கிறாள்...

அது வண்டைக்கீறவல்ல

என்று இவளிடம் சொல்லுங்கள்..

பூவிட்டுபூத்தாவும்

வண்டுக்கே பூக்கள் தேனைக் கொடுத்து

மகிழ்விக்கின்றன...ஒரே

காதல் என உயிரைவிடும் எனக்கு

ஒரு முத்தம் கூட

பெரிய பாடாய்க்கிடக்கிறதே!

பிறப்பால் தாய் தந்தையரை

மகிழ்விக்க முடியாத குழந்தைகள்..

சபிக்கப்பட்டவர்களல்ல...

யாருடைய பாவத்தையோ

தங்கள் முதுகில் சுமக்கும்

குழந்தை யேசுக்கள்!

சுற்றத்திற்கு உதவமுடியாதவன்

மனம் காட்டு மரம் போல

பெற்றவளைப் பேணமுடியாதவன்

மனம் பட்டமரம் போல

Edited by vikadakavi

  • தொடங்கியவர்

அதிகாலை..

யாரும் எழவில்லை...

நான் தூங்கவில்லை...

சேவலின் விழிப்புக்காக-இன்னும்

காத்துக்கொண்டிருக்கிறேன்...

சேவல் கூவியதும்..

அவள் கூவுவாளாம்...

காதலின் வேகத்தை நினைக்கிறேன்...

மனம் படபடத்துக்கொண்டிருக்கிறது..

இது சரிதானா...

இந்த வேகமும்..செயலும் முறைதானா...

காதலித்தாலே..இப்படி

அதிகாலை புகைவண்டியில் ஏறி

ஓடிவிட வேண்டுமா..

இந்த பயம் ஊரிலுள்ள சண்டியர்களுக்கா..

பெற்றவர்களுக்கா..மற்றவர்களுக

்கா

அவளொன்றும் அழகாய்த்தோணவில்லை

அவளொன்றும்..கவர்ச்சியாயும் இல்லை..

என்ன காதல்..இந்த வாழ்க்கை

எப்படி போகப்போகிறது..

இருமனங்கள் ஒத்தபிறகு..

திருமணம் காணத் தடையேன் போடுகிறார்கள்..

ஓடிப்போன ஜோடிக்காய்..

தலைமுழுக்கு போடப்போகிறார்கள்?..

பேரன் பிறந்ததும்

ஓடி வந்து சேரப்போகிறார்கள்..

என்ன புதிதாகவா

ஏதாவது நடக்க போகிறது..

இந்த சிக்கல்களை தவிர்க்க

இப்போNது சேர்த்துவைத்தால் என்ன?

குழப்பங்கள் நெஞ்சில் குழைய..

சேவல் கூவியது..

அவளும் கூவினாள்..

விரைவாக உந்தூர்தியை

உருட்டிக்கொண்டு...

வெளியே வந்தபோது..

அவள்..தைரியமான பெண்

நெஞ்சில் படபட..

கைகளில்கூட சிறு உதறல்..

அது பனியின் படபடப்பு என்று

என்னை சமாதானம் செய்து

அவளைநெருங்க..

சிரித்தாள்..அட

சிரிக்கும்போது அழகாகத்தான் இருக்கிறாளோ..

சிந்தையோட்டம் தேவையா என்று மனம்

திட்டிக்கொண்டது..

பின்னிருக்கையில் தொற்றியவள்..

தோளைப் பற்றிக்கொண்டாள்..

நடுக்கத்தை கண்டுகொண்டாளோ..

என்ன பயமா?..அவள்

என்ன பயமா..எனக்கா.. நான்

எதிரே சுருட்டுடன் சுந்தரம் அண்ணா..

தொலைந்தது..புகைவண்டி ஏற முன்னே

ஊரில் புகையப்போகிறது

அவளையும் கண்டுவிட்டார்..

வேகமாக மிதித்தேன்..

இவளொரு அறிவுஜீவி...

இப்போதுதான் மொட்டாக்குக்குள்

மறைகிறாளாம்..முட்டாள்..

மனதுக்குள் திட்டிக்கொண்டேன்

பாவம் கேட்டால் கவலைப்படுவாள்..

ஓடிப்போகும் அளவு இன்னும் வயது வரவில்லையோ..

இரண்டு வருடத்துக்குள் குழந்தை..குடும்பம்..

தாயாக இவளை நினைக்கவே சங்கடமாயிருக்கிறதே..

என்று எனக்குள் சலனங்கள் சங்கமிக்க..

புகையிரத நிலையம் வந்தோம்..

அவசர அவசரமாய்..

நிலையத்துக்குள் போய்..

நான் மட்டும் உள்ளே போய்...

சீட்டெடுக்கும்போது..தெரிந்த முகங்களுக்கு

சின்னசின்னபொய்கள்..

தேவையா எனக்கு இவை..

தூர சத்தம் புகைவண்டி வருகிறது..

சில வினாடிகள்..நிமிடங்கள்..

புகைவண்டி நகர..

நானும் நகரப்போகிறேன்..

வந்த பாதை நோக்கி..எனக்கு

எட்டிக் கையசைத்தார்கள்..

ஓடிப்போகும் என் ஆருயிர் நண்பனும்..

அவன் காதலியும்..

நன்றி நவிலும் முகங்கள்..

நல்லாயிருக்கட்டும்..

வாழ்த்திய மனதின் திருப்தி

நீடிக்கவில்லை..டேய்...

என் பெயரை சொல்லியபடி..

ஒரு கூட்டம் ஒரு

கூடை கொலைவெறியோடு...

இப்படியா விதி மாறும்..

வெட்டு வாங்கிவிட்டா விளக்கம் சொல்லமுடியும்..

என்ன நடந்தது..என்று

எனக்கே புரியமுன்..என்

வேகம்..வேகமாய் போய்க்கொண்டிருக்கும்

புகைவண்டியின் கடைசிப்பெட்டியில்

நானும்..காதலும்

  • தொடங்கியவர்

ஆனந்தம் மட்டுமே பொங்கும்

என் பேனாவின் முனைகள்..

கண்ணீரைக் கசிவது

உனக்கு பிடிக்கவில்லையா...

ஏது..பேனாவைப்

பிடிக்கவில்லையென்று

சொல்லிவிடுவாயோ என்று

பயந்து போய்விட்டேன்..

இந்த பேனாவுக்கு நீதான்

சொந்தக்காரி என்பதனை

மறந்துவிட்டாயோ என்று

நினைத்துவிட்டேன்..

பாலைவனம் உலவுகின்ற

காய்ந்துபோன வெப்பக்காற்று

என்று என்னை யாருமே

தீண்டாத காலத்தில்..

வனதேவதையாய் வந்து

வரங்களாய் அள்ளித் தந்தவளே...

என்று இதமாய் வீசும்

தென்றல் நீ என்கிறார்கள்..

எனக்கு ஜன்னலை அடைத்தவர்கள்..

கதவு திறந்து வைத்து காத்திருக்கிறார்கள்..

மேனியெல்லாம் பட்டுப்போ என்கிறார்கள்..

மெல்லமாய்த்தொட்டுப்போ என்கிறார்கள்..

என் வாசம் உன் சுவாசத்தில்

சுத்திகரீக்கப்பட்டதால்தான் சுத்தமானது...

என் நாதம் உன் இதயவறைகளில்

சம்மதம் கேட்டுத்தான் சத்தமானது..

ஊமையைப் பேச வைத்தவள் நீ

கல்லைக் கடைந்து காட்சியாக்கியவள் நீ...

எல்லாப்புகழும் என்னில் பூத்தாலும்..

அது உனக்கான மாலைதானே...

எனக்குத்தெரியும்.. நீ விலகுவதும்..

எதிர் தோன்றாததும்..

எனக்காக என்று..ஆனால்

நீ தெரிந்து கொள்..

நீயில்லாமல்..

என் விரலுக்கில்லை நாதம்..

என் வீணைக்கில்லை ராகம்..

இந்தக்குயில் ஊமையாய் போகட்டும்..

நீ பாடவைக்கவாவது வருவாய்தானே...

இந்த சிற்பம் கல்லாய் மாறட்டும்.

செதுக்கிவைக்காவாவது நீ வரக்கூடும்தானே...

என் இனியவளே..

கல்லுக்குள் ஈரம் காட்டியவளுக்கு..

உன் இதயத்தைக் கல்லாய் காட்டுவது கடினமில்லைதான்..

இரசிகரின் நாடி தெரிந்தவளுக்கு நடிப்பது கடினமில்லைதான்..

என்னை உச்சிக்கு ஏற்றிவிடுகிறேன் என்ற

ஏணிப்படி நீ....உன்னால்

நான் இறங்கிப்போய்விடுவேன் என்று நீ

மறைந்துவிட்டால்.. நான் உயரத்தில் இருந்து

விழுந்து..உடைந்து..சிதைந்தே

இறந்து போவேன்..என்னை விட்டு விலகிவிடாதே...

என்றும்...என்றென்றும்!!

என்னை உச்சிக்கு ஏற்றிவிடுகிறேன் என்ற

ஏணிப்படி நீ....உன்னால்

நான் இறங்கிப்போய்விடுவேன் என்று நீ

மறைந்துவிட்டால்.. நான் உயரத்தில் இருந்து

விழுந்து..உடைந்து..சிதைந்தே

இறந்து போவேன்..என்னை விட்டு விலகிவிடாதே...

என்றும்...என்றென்றும்!!

மாமா..மா மனதை தொட்ட துளிகள்..ள்..(ரொம்பவே ரசித்தேன்)..உடலை தீண்டிய மாமாவின் கவிதுளியிள் ஒரு துளி நெஞ்சையும் நனைத்து விட்டது..து.. :o

வாழ்த்துக்கள்..ள் மாமா.!!.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதைகள். வாழ்த்துக்கள் கவிஞரே!!!

  • தொடங்கியவர்

நன்றி ஜம்மு...

நன்றி சுவி

ஜம்ஸ் ஏன் அந்த ள்...து எதிரொலிக்கிறது புரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ....அழகான கவிதை ..........என் இனியவளே "தெரிவதும் மறைவதும் ,எனக்காக என்று தெரியும் ,...நம்புங்கள் நிச்சயம் வருவாள். வாழ்க வளமுடன். ..........நட்புடன் நிலாமதி .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விகடகவி உங்கள் தூறல்களுக்கு. அதிலும் என்னை பல வரிகள் கவர்ந்தாலும் மிகவும் கவர்ந்த வரிகள் இவை.

பிறப்பால் தாய் தந்தையரை

மகிழ்விக்க முடியாத குழந்தைகள்..

சபிக்கப்பட்டவர்களல்ல...

யாருடைய பாவத்தையோ

தங்கள் முதுகில் சுமக்கும்

குழந்தை யேசுக்கள்!

  • தொடங்கியவர்

நன்றி நிலாமதி..நன்றி நுணாவிலான் அண்ணா

  • தொடங்கியவர்

கனவுகள் மெய்பட வேண்டும்...

பாரதி சொன்னார்...எனக்கும்..

என் கனவுகள் மெய்ப்படும்..

அதனால்தான்..என்

தூக்கத்தை இரட்டிப்பாக்க

புரண்டு புரண்டு பார்க்கிறேன்

நீ தூங்கும் போது

வரும் கனவுகள்..வெற்றுக்ககனவுகள்..

உன்னைத் தூங்கவிடாத

கனவுகள் இலட்சியக் கனவுகள்

என்று அறிஞர் சொன்னார்..

என்னைத் தூங்கவிடாத கனவு..

உன் மேல் துளிர்த்த காதல்

காதலை எண்ணித் தவிக்கிறேன்

காதல் துளிர்விட்டு

மறைந்தால் மாயம்..

காதல் வேர்விட்டு

விழுந்தால் காயம்

உன் இதயத்தை சலனப்படுத்துகின்ற

கனவைக் காணாதே...

உன் எதிர்காலத்தை பிரகாசிக்க வைக்கின்ற

பிரமிக்க வைக்கின்ற கனவைக் காண்

என்று தந்தை சொன்னார்..

மீண்டும் சிந்தித்தேன்..

என் கனவு..

அழகான இலட்சியம்..

மலை போன்ற இலட்சியம்..

இலட்சியத்தை நோக்கி..

பயணிக்கிறேன்...

தடைகளும் இன்னல்களும்..

கேளிகளும்..கிண்டல்களும்..

தடக்கி விழுந்துவிட்டேன்..

மனவுறுதி தளர்ந்து

தனியாயிருந்தபோது...

விழாமலே வாழ்வது

சரித்திரமில்லை..

வழுந்தபின் வீரனாய்

எழுவதுதான் சரித்திரம் என்று

வென்ற ஒருவர் சொன்னார்..

இப்போது..

புது வேகம்..

புத்தம் புது மனிதனாய்..

என் பயணம் தொடர்கிறது...

தோல்விகள்

துவண்டுவிட அல்ல

தூக்கி விட

அனுபவ அறிவுரைகள்

எரிந்து விழ அல்ல

எழுந்துவிட

யார் சொன்னாலும்..

நன்று சொல்லச்

செவிமடுத்தால்..நமக்கென்ன

தீதா ஆகிவிடும்..

எப்படியும் வாழலாம்

என்பதென்ன வாழ்வோ

மாறிடும் உலகில்

நேரிட வாழ்ந்து

மடிவதென்ன தாழ்வோ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.