Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அன்புச்சோலை" மூதாளர் பேணலகத்தின் புதிய கட்டடம் திறப்பு

Featured Replies

கிளிநொச்சி "அன்புச்சோலை" மூதாளர் பேணலகத்தின் புதிய விடுதிக் கட்டடத்தை திருமதி மதிவதனி பிரபாகரன் நேற்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி பிரபாகரன்

திருமதி தமிழ்செல்வன்

திருமதி சங்கர்

பா நடேசன்

பொன் தியாகம்

கரிகாலன்

திருக்குமரன்

சோ தங்கன்

பாலகுமாரன்

என்று எல்லாம் பெரியாக்கள் போய் திறந்து வைத்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் விமானக் குண்டுகள் விழுகின்றன இன்னொரு பக்கம் தாயகத்தின் கட்டுமானமும் எழுந்து கொண்டே செல்கிறது. தாயக மக்களின் போராளிகளின் விடுதலையின் பாலுள்ள மன வலிமை பிரமிக்க வைக்கிறது. இருப்பினும் அவதானம் அவசியம்..!

http://www.sankathi.com/live/content/full_...amp;ucat=1&

ஏன் இந்த திடிர் மாற்றம். இரண்டு நாளைக்கு முன்னர் தேசியத் தலைவர் விமானத் தாக்குதலின் போது சிறு காயங்களுக்குள்ளானார் என்று சீறிலங்கா சொன்னது.....

சிறீலங்கா தலைவரைக் காயப்படுத்தினது மட்டும் தான்.. அண்டை நாடான இந்தியா கொன்றே விட்டது. அதுவும் 1989 இல் என்று நினைக்கிறேன்..! நீங்கள் என்னடான்னா...??! :lol::D

Edited by nedukkalapoovan

போயும் போயும் சிறீலங்காவின்ரை மாதிரி ஒரு யுஜிப்பி விமானப்படைக்கா...

  • கருத்துக்கள உறவுகள்

:lol: ஏன் இந்த திடிர் மாற்றம். இரண்டு நாளைக்கு முன்னர் தேசியத் தலைவர் விமானத் தாக்குதலின் போது சிறு காயங்களுக்குள்ளானார் என்று சீறிலங்கா சொன்னது.....

நண்பரே!

ஒன்று எதிரியை நம்புங்கள். அல்லது எம்மவர்களை நம்புங்கள். இளந்திரையன் சொன்ன பிறகும் உந்தச் சந்தேகம் கிளப்பல் எதற்காக. பேசாமல் எதிரி சொல்வதை மட்டும் நம்பிக் கொண்டு இருக்கலாம் தானே.

தலைவர் போன முறை வந்தபோது (2003) சமாதானகாலம். எனவே அவருக்கு நிறைய ஓய்வு கிடைத்தது. பாதுகாப்புப் பிரச்சனையும் அதிகமாகத் தேவைப்படவில்லை. ஆனால் இம்முறை யுத்தகாலம் இரவிலும் தூக்கத்தைத் தொலைத்து இருக்க வேண்டிய காலம் இது. இந்த நேரத்தில் இப்படியான நிகழ்வுகளில் பங்குபற்றுவது என்பது கடினம் மட்டுமல்ல. பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலானது.

டிபிஎஸ்சைப் பொறுத்தவரைக்கும், அவருக்கு ஏதாவது வாராவாரம் எழுதினால் தான் காசு கொடுப்பார்கள். எனவே இப்படியான கதைகளைக் கிளப்பி விடுவார். மேலும், திலீபன் மருத்துவமனை என்பது பொது மருத்துவமனையே தவிர, புலிகளுடைய போராளிகளுக்கானது அல்ல. பொதுமக்களோடு உளவாளிகள் நடமாடுகின்ற ஒரு மருத்துவமனையில் வைத்தியம் பார்த்தார் என்பது எப்படியான கட்டு;ககதை. டிபிஎஸ்சுக்குத் தெரிந்த மருத்துவமனை தீலிபன் மருத்துவமனை மட்டும் என்பதால் அதைச் சொன்னார்.

***

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Edited by மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்களோடு உளவாளிகள் நடமாடுகின்ற ஒரு மருத்துவமனையில் வைத்தியம் பார்த்தார் என்பது எப்படியான கட்டு;ககதை. டிபிஎஸ்சுக்குத் தெரிந்த மருத்துவமனை தீலிபன் மருத்துவமனை மட்டும் என்பதால் அதைச் சொன்னார்.

அதுமட்டுமன்றி அண்மைக் காலமாக நோயாளர் காவு வண்டிகளை இலக்கு வைத்து ஆழ ஊடுருவும் அணி தாக்குதல் நடத்தி வருவதை அண்மையில் யுனிசெப்பிடமும் புலிகள் சுட்டிக்காட்டி இருந்தனர். அரசு தனது தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் திலீபன் மருத்துவமனை என்பது புலிகளின் ஒரு கட்டமைப்பு என்று காட்டிவிடத் துடிக்கின்றது..! இப்படித்தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் புலிகள் அமைப்பின் சொத்தாகக் காட்டப்பட்டது..!

இந்தச் செய்தி பல பரிமான நோக்கோடு எதிரியால் வெளியிடப்பட்ட ஒன்று. எனவே இதற்கு முக்கியத்துவம் அளிப்பது அதிக அவசியமில்லை. இருந்தாலும் இவ்விடயமாக மக்களைத் தெளிவுறுத்துவது அவசியமானதே..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பரே!

ஒன்று எதிரியை நம்புங்கள். அல்லது எம்மவர்களை நம்புங்கள். இளந்திரையன் சொன்ன பிறகும் உந்தச் சந்தேகம் கிளப்பல் எதற்காக. பேசாமல் எதிரி சொல்வதை மட்டும் நம்பிக் கொண்டு இருக்கலாம் தானே.

துயவன் ஒரு குறுகிய வட்டமல்ல அரசியல் என்பது. நீண்ட நோக்கு வேண்டும். உங்கள் வாதத்திற்கு என்னால் எதிர் கருத்து வைத்து சரியான பதிலை வழங்க முடியும். (இராமர் கதை போல :lol: ) ஆனால் சில இடங்களில் அதனை செய்தால் நமக்கு நாமே தீமுட்டுவதாக போய்விடும்.

நீங்கள் தமிழ் இணைதளங்கள் சொல்பவற்றை மட்டும் தான் கருத்தில் கொண்டு எழுதுகின்றீர்கள் என்பதும் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தாரளமாக வைக்கலாம். இப்படி விசித்திரமான சந்தேகங்களைக் கிளப்பி மக்கள் மனதில் தீ மூட்டிக் கொண்டிருப்பதை விட, அது ஒன்றும் புதிதாக இருக்கப் போவதில்லை.

இராமர் பாலம் தொடர்பாக தாங்கள் என்ன செய்தீர்கள் என்பது குறித்து நான் அறியேன். நீங்கள் பங்குபற்றிய விவாத்தில் நான் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை

நாங்கள் தமிழ் ஊடகங்களை மட்டும் வைத்துத் தான் எழுதுகின்றோம். நீங்கள் சிங்கள ஊடகங்களை வைத்து எழுதுவதால் தான் பிரச்சனையே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தாரளமாக வைக்கலாம். இப்படி விசித்திரமான சந்தேகங்களைக் கிளப்பி மக்கள் மனதில் தீ மூட்டிக் கொண்டிருப்பதை விட, அது ஒன்றும் புதிதாக இருக்கப் போவதில்லை.

இராமர் பாலம் தொடர்பாக தாங்கள் என்ன செய்தீர்கள் என்பது குறித்து நான் அறியேன். நீங்கள் பங்குபற்றிய விவாத்தில் நான் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை

நாங்கள் தமிழ் ஊடகங்களை மட்டும் வைத்துத் தான் எழுதுகின்றோம். நீங்கள் சிங்கள ஊடகங்களை வைத்து எழுதுவதால் தான் பிரச்சனையே.

இப்படி விசித்திரமான சந்தேகங்களைக் கிளப்பி மக்கள் மனதில் தீ மூட்டிக் கொண்டிருப்பதை விட, அது ஒன்றும் புதிதாக இருக்கப் போவதில்லை.

இப்படியான சந்தேகங்கள் ஈழ மக்கள் மனதில் ஏற்படாமல் பயணிக்க வேண்டியது விடுதலைப்புலிகளின் கடமை. அப்போ அநுராதபுரத்திலும் விசித்திரமான சந்தேகமா வந்தது :lol: . :lol:

பொறுத்திருப்போம் அநுராதபுரம் போல விடுதலைப் புலிகள் சொல்லுமட்டும் :)

ஆனால் இரண்டையும் ஒரே நோக்கில் நோக்க வேண்டாம்

நாங்கள் தமிழ் ஊடகங்களை மட்டும் வைத்துத் தான் எழுதுகின்றோம். நீங்கள் சிங்கள ஊடகங்களை வைத்து எழுதுவதால் தான் பிரச்சனையே.

அது தான் நமது சிலர் செய்யும் தவறு. ஒரு குறுகிய வட்டத்தினுள் நிற்பதால் தான் 30 வருடங்கள் போய்விட்டன.

உங்களுக்கு ஒன்று தெரியுமா எமது தளங்களை விட இந்திய பாகிஸ்தான் தளங்களில் தான் எம்மை பற்றி நிறைய உரையாடுவார்கள் என்று

  • கருத்துக்கள உறவுகள்

பட்டும் படாமல், எழுதி நழுவிப் போவதை விட, புரியும் படி எழுதி விவாதத்திற்கு வருவதே மேல்.

நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளுங்கள். தமிழ் ஊடகங்களில் வருவதை மட்டும் என்பதை.." என்று நான் சொல்ல வந்தது. எமது தரப்பை மட்டும் நம்பித் தான் கருத்து எழுதுகின்றோம் என்பதை.

சிங்கள ஊடகங்கள் என்பது சிங்களவரால் நடத்தப்படுகின்ற தமிழ் ஊடகங்களாகவும் இருக்கலாம்.

எந்தச் செய்தியைப் படித்தாலும், நம்மவர்களை முதலில் நம்பாமல் தலைவருக்குக் காயம் என்ற சிங்கள அரசின் செய்தியை முக்கியத்துவம் கொடுத்துச் சந்தேகத்தை ஏன் கிளப்பினீர்கள். அதைத் தான் நான் தவறாகக் காண்கின்றேன்.

அதற்குப் பெயர் விரிந்த வட்டத்தில் நின்று உரையாடுகின்றேன் என்ற அர்த்தமில்லை. நம்மவர்களை நம்பாமை. அல்லது தமிழ்மக்களுக்குள் பிரிவினைகளை உருவாக்குதல்.

அனுராதபுரத்துச் செய்தி என்று உங்களின் அகண்ட வட்டத்தில் உள்ள ஏதோ பாகிஸ்தான் தளத்தில் படித்து விட்டீர்கள் போலுள்ளது. அதற்காகப் பரபரப்புக்காரர் போ பரபரப்பாக எழுதுவதற்கு முயற்சி செய்யாதீர்கள்

ஒன்று மட்டும் உண்மை! எங்கேயோ ஓர் பெரிய ஓட்டை தோன்றியுள்ளது!! அண்மைக்கால செய்திகள் இவற்றை ஆதாரப்படுத்துவதாகவே உள்ளது!!!

இவ்வோட்டை அடைக்க முதல் இப்படியானவைகள் நிச்சயமாக தவிர்க்கப்படல் வேண்டும்!!!

இந்த ஓட்டை எமக்கு யுத்தநிறுத்தம் தந்த பரிசு!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் உண்மை! எங்கேயோ ஓர் பெரிய ஓட்டை தோன்றியுள்ளது!! அண்மைக்கால செய்திகள் இவற்றை ஆதாரப்படுத்துவதாகவே உள்ளது!!!

இவ்வோட்டை அடைக்க முதல் இப்படியானவைகள் நிச்சயமாக தவிர்க்கப்படல் வேண்டும்!!!

இந்த ஓட்டை எமக்கு யுத்தநிறுத்தம் தந்த பரிசு!!!!!

விடுதலைப்புலிகளைப் பற்றி உலகம் மட்டுமல்ல.. தமிழர்களே இன்னும் சரியாப் புரிஞ்சுக்கல்ல..! :lol:

உண்மைதான் நெடுக்ஸ்!!

அன்று உமாமகேஸ்வரன் தொடங்கி ... மாத்தையா ஈறாக .... கருணா உள்ளிட்ட ..... எல்லோரும் விடுதலைப்புலிகளீன் உறுப்பினர்களே!!! அதுவும் இவர்கள் சாதாரன உறுப்பினர்கள் அன்று!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த திடிர் மாற்றம். இரண்டு நாளைக்கு முன்னர் தேசியத் தலைவர் விமானத் தாக்குதலின் போது சிறு காயங்களுக்குள்ளானார் என்று சீறிலங்கா சொன்னது.....

ஏன் உங்களுக்கு தலைவர் சொன்னவரோ இந்நிகழ்வுக்கு வருவதாக. பெரிய ஆச்சரியத்துடன் கேள்வி வேறை.தலைவரின் பாதுகாப்பு கருதி வராமல் விட்டிருக்கலாம்.இதற்காக நீங்கள் ஏதோ தலைவரை எதிர்பார்த்து போலும் அவர் வரவில்லை என்பது போலும், இந்திய ஊடகங்கள் ஏதோ வெட்டி புடுங்குவது போல் உங்களது கருத்து அமைகிறது.

அனைத்து தமிழ்ர்களும் நலம் அடைய தமிழீழ அரசின் கட்டுமானப்பணிகளுக்கு எல்லாரும் சேர்ந்து கை கோர்த்து ஒத்துளைப்பு வழங்கவேண்டிய நேரத்தில் வீண் வாதங்கள் தவிர்கலாம் தானே

  • கருத்துக்கள உறவுகள்

quote name='hirusy' date='Dec 17 2007, 06:14 PM' post='368940']

அனைத்து தமிழ்ர்களும் நலம் அடைய தமிழீழ அரசின் கட்டுமானப்பணிகளுக்கு எல்லாரும் சேர்ந்து கை கோர்த்து ஒத்துளைப்பு வழங்கவேண்டிய நேரத்தில் வீண் வாதங்கள் தவிர்கலாம் தானே

அப்படி ஒன்றுமில்லையே நண்பரே. நகைசுவையாளர் போல் வந்து நாடகம் ஆடுபவர்களை விடவே முடியாது.நீங்கள் யார் என்பதை உய்த்தறிந்திருப்பீர்கள்.

வர வர யாழ் களம் தேவையில்லாத விசயங்களுக்க்கெல்லாம் துணைபோக வெளிக்கிட்டுது.

விட்டா இங்க கனக்கப்பேர் தலைவருக்கே program list போட்டுக்குடுப்பினம் போல கிடக்கு,

அவர் என்ன செய்ய வேணும் என்று.........

தேவையில்லாத கருத்துக்கள் எழுதி வம்பழக்கிற வேலைய விட்டிட்டு,போய் தேசியத்திற்க்கு

பலம் சேர்க்கிற வேலையைப்பாருங்கோ,அதுவும் ஏலாட்டி உங்கட வேலையை எண்டாலும் பார்க்கலாம்

தானே!!!!(தேவையில்லாமல் அலட்டி,மக்களை திசைதிருப்புபவர்களுக்கு)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மைக்காலமாக ஒரு சில கருத்து மன்னர்கள் தாங்கள் ஏதோ களநிலையில் இருந்து நேரடிவர்ணனை போல் கருத்துக்களை அள்ளி வீசுகின்றார்கள்.இவர்களுக்கு எல்லாம் தெரியுமென்றால் ஏன் வெளி நாடுகளிலிருந்து வீரவசனம் பேச வேண்டும்.அங்கே போய் போட்டு தாக்க வேண்டியது தானே. எல்லாருக்கும் வந்து வாச்சிருக்கு ஒளிச்சிருந்து எழுதுறதுக்கு அதுதான் இன்ரநெட்

கலைநேசன் அருமையாகச் சொன்னீர்கள்.

நெருப்பில்லாமல் புகையாது என்ற எமது பழமொழி அப்ப பொய்யா?

quote name='hirusy' date='Dec 17 2007, 06:14 PM' post='368940']

அனைத்து தமிழ்ர்களும் நலம் அடைய தமிழீழ அரசின் கட்டுமானப்பணிகளுக்கு எல்லாரும் சேர்ந்து கை கோர்த்து ஒத்துளைப்பு வழங்கவேண்டிய நேரத்தில் வீண் வாதங்கள் தவிர்கலாம் தானே

அப்படி ஒன்றுமில்லையே நண்பரே. நகைசுவையாளர் போல் வந்து நாடகம் ஆடுபவர்களை விடவே முடியாது.நீங்கள் யார் என்பதை உய்த்தறிந்திருப்பீர்கள்.

நுணாவிலான் உங்கள் கருத்து புரியவில்லை?

http://www.tamilnaatham.com/advert/2007/dec/20071208/PJ59/

சிலதுகளை எழுதினால் .... தூஊஉ....ரோஓஓஒ......கீஈஈஈஇ!!!!!!!! என்று சொல்லாத குறைதான்!!!

என்ன நடக்குது!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.tamilnaatham.com/advert/2007/dec/20071208/PJ59/

சிலதுகளை எழுதினால் .... தூஊஉ....ரோஓஓஒ......கீஈஈஈஇ!!!!!!!! என்று சொல்லாத குறைதான்!!!

என்ன நடக்குது!!!!!!!!!

ஒரு சில வாரங்களில் இதற்கான பதிலை எதிர் பார்க்கலாம்.

:lol::lol:நல்லாத்தான் இந்த விவாதம் போகிறது.

ஏதோ வெளிநாட்டிலை கொஞ்சம் படிச்சிட்டம் எண்டவுடனை, தலைவருக்கே பாதுகாப்புப் பற்றிப் படிப்பிக்க வெளிக்கிட்டிட்டினம். திறப்பு விழாவிற்கு தலைவர் வராமல் மற்றவர்கள் எல்லாரும் வந்தவுடனை தலைவருக்கு ஏதோ ஆகிப்போச்சுது எண்டு குதிக்கினம். சிறிய அமைப்பாக இருக்கும்போதே, பாதுகாப்பு விடயத்தில் மிக அவதானமாக இருந்தவர் எங்கட தலைவர். இங்க கருத்து எழுதுகிறவை அங்க பக்கத்திலை இருந்து பார்த்த மாதிரி எழுதிக் கொண்டிருக்கினம். அங்க தலைவரின்ர அனுமதியில்லாம இப்பிடி ஒரு நிகழ்வே நடந்திருக்காது எண்டதைக் கூட விளங்கிக் கொள்ள முடியேல்லை. நாலு சுவருக்குள்ள இருக்கிறவைக்கு இப்பிடித்தான் விளங்கும். தாங்கள் குழம்பிறது மட்டுமில்லாமல், மற்றவர்களையும் குழப்புகினம். இதைத்தான் குட்டையிலை குழப்பிறது எண்டிறது போல. இதுக்குள்ள இருந்து கருத்துக் கூறி என்ன பிரியோசனம்? தலைவரும் யாழ் களத்திற்கு வந்து அரட்டை அடிக்கிறார் எண்டதுதான் இவையின்ர எண்ணம் போல. அதுதான் அறிவுரைகளை அள்ளி வழங்கினம் போல :):lol:

காரணம் இல்லாமல் அங்கு எதுவும் நடப்பதில்லை. சிங்களமும் நவீன தொழில்நுட்பத்தை நன்றாகப் பயன்படுத்துகிறது என்பது அவர்களுக்கும் தெரியும். அவர்களும் அதற்கேற்றவகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருப்பார்கள். இந்த நிகழ்வு, சிங்களத்திற்கு ஒரு செய்தியைச் சொல்வதற்காக இப்படி நடத்தப்பட்டிருக்கலாம். அதுமட்டுமின்றி, தலைவர் அவர்கள் போராட்ட காலங்களில் நிகழ்வுகளில் கலந்து கொள்வது மிகவும் குறைவு. சமாதான காலத்தின்போது, அரசியல் காரணங்களுக்காக அவர் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். ஆனால், இனிமேல் அப்படியிருக்காது.

இப்படியான வதந்திகளை நம்புபவர்களை நம்பி எப்படிப் போராடுவது? இதனால்தான் எமக்கு இன்னும் விடிவு கிடைக்கவில்லை. அப்படியே ஏதாவது நடந்தாலும், எதுவுமே நடக்காதது மாதிரி இருப்பதுதான் எமது கடமை. வெளிநாட்டிலை இருக்கிற நாங்கள் எல்லோரும் எங்கள் கடமையை தவறாது செய்திருந்தோமேயானால், இதனைப் பற்றி நாம் கவலைப்படவே தேவையில்லை. இனிமேலாவது, உங்கள் கடமையைச் சரிவரச் செய்ய முயற்சி செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழிச்சிக்கு எதிர் கருத்து வைத்து விவாதித்தால் நமக்கு நாமே தீ முட்டிக் கொள்வது போலாகிவிடும் :lol:

சிறிய அமைப்பாக இருக்கும்போதே, பாதுகாப்பு விடயத்தில் மிக அவதானமாக இருந்தவர் எங்கட தலைவர்.

காரணம் இல்லாமல் அங்கு எதுவும் நடப்பதில்லை. சிங்களமும் நவீன தொழில்நுட்பத்தை நன்றாகப் பயன்படுத்துகிறது என்பது அவர்களுக்கும் தெரியும். அவர்களும் அதற்கேற்றவகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருப்பார்கள்.

தலைவரும் யாழ் களத்திற்கு வந்து அரட்டை அடிக்கிறார் எண்டதுதான் இவையின்ர எண்ணம் போல. அதுதான் அறிவுரைகளை அள்ளி வழங்கினம் போல

சமாதான காலத்தின்போது, அரசியல் காரணங்களுக்காக அவர் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். ஆனால், இனிமேல் அப்படியிருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: நடக்கும் எல்லாப் பொது நிகழ்ச்சிகளுக்கும் தலைவர் வருகை தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். அதைவிட அவர் வரவில்லை என்றவுடன் அவருக்கு என்னவோ நடந்துவிட்டது என்று நினைப்பது மகா முட்டாள்த்தனம். இங்கு சிலருக்கு தலைவருக்கு ஏதும் ஆகிவிடக்கூடாதா என்று ஏக்கம் இருப்பதுபோலத் தெரிகிறது. இவர்கள் தமிழ்த்தேசியம் என்று பேசிக்கொண்டு சிங்களவனின் ஊடகங்களில் வரும் செய்திகளை உண்மையாக்கப் பார்க்கின்றனர். இவர்கள் தாம் அச்செய்திகளை நம்புவதுடன் நின்றுவிடாமல் மற்றவர்களையும் அதை நம்பவைக்க பெரும் பாடு படுகின்றனர். இன்னும் சிலர் அதற்கும் மேலே போய் தமிழ்த்தலைமை தொடர்பாகவும், அதன் போராட்டம் தொடர்பாகவும் ஏளனமும், நக்கலும் கொண்டு எழுதி வருகின்றன்ர்.

எங்களுக்குச் சிங்களவன் போன்ற எதிரி தேவையில்ல, இவர்கள் போன்ற ஆட்களே போதும் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.