Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்தோட நிற்கிற தொலைக்காட்சி எது?

Featured Replies

ஐரோப்பாவில ரிவி காட் புதிப்பிக்கவேணும் தேசியத்தோட நிற்கிற தொலைக்காட்சி எது?

கேள்வி: ஐரோப்பாவில ரிவி காட் புதிப்பிக்கவேணும் தேசியத்தோட நிற்கிற தொலைக்காட்சி எது?

இ.அழகரட்ணம் பாரிஸ் 13

பதில்: இஞ்ச எல்லாரும் எண்டைதான் தேசியத்திற்கான தொலைக்காட்சி எண்டு புழைப்புத்தேடி தொலைக்காட்சிகளை ஓட்டியினம்.

சத்தியமாய் இப்ப உண்மையில தேசியத்தை நேசிக்கிற தொலைக்காட்சி புலம்பெயர் மண்ணில இல்லை.

தாயகத்திலிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்வுகளை தென்னாசியவிலிருந்து களவாடி தொலைக்காட்சியில் போட்டிட்டு என்ர தொலைக்காட்சி தேசியத்துடன் நிற்கிற தொலைக்காட்சி என கனபேர் தம்பட்டம் அடிக்கினம்.

இதெல்லாம் புலி பலவீனமடைந்து போட்டுது எண்டு நினைச்சு வெளிக்கிட்டாக்கள். கனகாலத்துக்கு நிலைக்கமாட்டினம்.

நீர் காட்டைப் புதுப்பிக்கிறத முதல்ல நிம்பாட்டும். இன்னும் இரண்டு கிழமையில ஐரோப்பாவில தேசியத்தோட நிற்கிற உண்மையான தொலைக்காட்சி வருகுது.

வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பார்க்து மகிழும். இச்ச உமக்கு சந்தோசம் தானே

http://www.pathivu.com/index.php?subaction...mp;ucat=38&

  • Replies 78
  • Views 15k
  • Created
  • Last Reply

ITTN இன்ற்கு சற்று வித்தியாசமான விளம்பரம்.

இன்னொரு முயற்சி:

பழந்தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரே தேசிய தொலைக்காட்சி எது?

blah blah blah....

இன்னமும் 2 வாரங்களில் பொறுத்திருக்க முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதைத்தான் எங்கடை கனசனம் வாயைதிறந்து ஆவெண்டு பாத்துக்கொண்டு நிக்கினம்.ஏனெண்டால் எனக்கு ஒருத்தர் சொன்னார் தம்பி நாங்கள் சற்ரலைட் பூட்டின நாள் தொடக்கம்(இவர் 97தொடக்கம் ஐரோப்பாவிலைதான் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறார்) ஓசியிலை தமிழ் ரிவி பாக்கிறம்(இதில் மதம் சம்பந்தமான ஜில்மா ரிவிகளும் அடங்கும்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு முயற்சி:

பழந்தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரே தேசிய தொலைக்காட்சி எது?

blah blah blah....

இன்னமும் 2 வாரங்களில் பொறுத்திருக்க முடியுமா?

சும்மாய் கத்திக்கொண்டுருக்காமல் மக்கள்தொலைக்காட்சியை கொண்டுவருவதற்கு முயற்சிக்கலாமே!!!!ஏனெனில் எம்மவர்க்கு அந்த தொலைக்காட்சி மூலம் .............. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி பதிவு எந்த தேசியம் சார்ந்தது.

புலுடா செய்திகள் வெளியிட்டு தேசியத்தை கொச்சைப்படுத்துற பதிவு தமிழ்த் தேசியத்திற்கு சான்றிதழ் வழங்குதோ?

விமானம் கண்டுபிடிச்சது இந்துக்கள் என்ற அறிவியல் கட்டுரை வெளியிடும் பதிவு தமிழ்த் தேசியத்தின் பதிவா? இந்து பாசிசத்தின் பதிவா?

மெய்ப்பொருள் காண கனநாள் எடுக்காது.

தி.ஆபிரகாம்

Edited by தி.ஆபிரகாம்

  • கருத்துக்கள உறவுகள்

இலவசமாமோ நல்லது சந்தோசம் நான் பாக்க தயார். ஆனால்ஒரு ஆறு மாதத்தாலை அய்யய்யோ சட்டிலைற்ருக்கு வாடைகை கட்ட காசு இல்லை காப்பு சங்கிலி காசுபணமாயிருந்தாலும் தாங்கோ எண்டு கேட்காவிட்டால் சரி. காது தாங்காது

ஐரோப்பாவில் ரிவி காட் புதுப்பிக்கணும்.

எது தேசியத்தோட தொலைக்காட்சி ?

இந்தக் கேள்வியூடாகவே பதிவின் நோக்கம் தெளிவானது.

ஒருவர் தான் வைத்திருக்கும் தொலைக்காட்சியின் காட்டை புதுப்பிக்க

பதிவிட்ட கேட்க மாட்டினம்.

எங்க எப்படி புதுப்பிக்கலாம் என்று அந்த தொலைக்காட்சி நிறுவனத்திடம்தான் கேட்பினம்.

இது சாதாரணமாக விளங்க கூடிய ஓன்று.

இங்கு விடயம் என்னவெனில் தரிசனம் தொலைக்காட்சி மீது பதிவும் அது சார்ந்தவர்களும் கொண்டுள்ள

பொறாமை இயலாமை காரணமாக இவ்வாறான கேள்விகளை தாங்களாகவே கேட்டு பதில் சொல்கின்றனர்.

இதேபோன்ற பல கேள்விகளை ஈழமுரசு அசுரன் பதில்களிலும் தாங்களாகவே கேட்டு தாங்களாகவே பதில்

சொல்லியிருக்கினம்.

விடயம் தெளிவானது தரிசனம் மீதுள்ள கோபத்தை நேரடியாக வெளிப்படுத்த முடியாது.

இவ்வாறான கேள்வி பதில்கள் ஊடாக வெளிப்படுத்துகின்றனர்.

பதிவில் அழகரட்ணம் கேட்டுள்ள கேள்விக்கு பதில் இதுதான்.

தேசியம் சார்ந்த தொலைக்காட்சியோ வானொலியோ எதுவும் அத மண்ணில்

இருந்து வருபவைதான்.

அந்த வகையில் என் ரீ ரீ தேசியத் தொhலைக்காட்சி மண்ணில் உள்ளது.

புலத்தில் தேசியம் என்று எதுவும் இல்லை...வரப்போறதும் இல்லை.

யாவும் தேசியத்துக்கு வலுச் சேர்கும் நேச ஊடகங்காளக இருக்கலாமே ஒழிய

வேறோன்றும் இல்லை.

அது இரண்டோ அல்லது 1 வருடத்திலையோ வாற எந்த ஊடகத்துக்கும் பொருந்தும்

மற்றது தேசியவாதிகள் யார் ? தேசிய ஆதரவானவர்கள் யார் ? தேசத் துரோகிகள் என்று சொல்லவும் !

போன்ற " தேசிய" கேள்விகளுக்கு பதில் சொல்வும்...தீர்மானிக்கவும்

யாருக்கும் புலத்தி;ல் அதிகாரம் இல்லை....

தேசியத்தின் முழு உருவாய் எமக்கு தேசியத் தலைவர் இருக்கின்றார்.

அவருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு என்பதனை பதிவு பெரியவர் நினைவில் வைத்து

கொள்ள வேண்டும்.

அதனைவிடுத்து இவ்வாறு அதிகார தொனில் புலத்தில் கதையளப்பவர்களே தேசியத்தின்

முதல் துரோகிகள்.

தமிழீழ தேசியப் போராட்டமானது மக்களுக்கானது.

அந்த மக்கள் தங்கள் போராட்டத்தை வென்றெடுக்க எழுர்ச்சி கொள்வது

காலத்தின் தேவை.

அவ்வாறு தேசியத்துக்கும் வலுச் சேர்கும் வகையில் எந்த செயல்பாட்டுக்கும்

இடையூறு செய்யாமல் இருப்பதே இப்போதைய தேவை.

தலைவரின் 2007 மாவீரர் நாள் உரையில் பூமிபந்தில் உள்ள அனைத்து மக்களையும்

வீறு கொண்டு எழ அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் தேசியவாதிகள் மட்டும்(?) வீறு கொண்டு; எழுங்கள் என்று அழைப்பு விடவில்லை.

அவர் அழைப்பு விடுத்திருப்பது அனைத்து தமிழ் மக்களையுமே.

அந்த வகையில் இங்கு தாங்கள்தான் தேசியச் செயல்பாட்டாளர்கள் அது இதுவென்று கூறித் திரியிறவர்கள்

மீண்டும் ஒரு தடவை ஆற அமர இருந்து "தலைவரின் சிந்தனையில் " கூற்றுக்களை படியுங்கள்.

படித்து வி;ட்டு வாருங்கள்.

ரிரிஎன் தொலைக்காட்சி மீண்டும் தனது ஒளிபரப்பை ஆரம்பிக்க இருக்கிறது. இதற்கான அறிவித்தல் சுவரொட்டிகள் பாரிஸ் லாசப்பலில் காணப்படுகின்றன

தற்போது உள்ள தொலைக்காட்சியில் எதுவுமே தேசியதிற்கு ஆதரவு இல்லை தரிசனம் உட்பட! வெகு விரைவில் தேசியத்திற்கு ஆதரவான புது தொலைக்காட்சி வரவுள்ளது. காத்திருங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

தரிசனம் வரும்போதும் இப்படித் தான் கதைத்தீர்கள். ஒரு ஊடகத்தை எதிர்த்தும், ஆதரித்தும் காலத்துக்குக் காலம் கதைப்பது, நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும்.

இருந்தாலும் புதிய ஊடகமாக இலவசமாக வருகின்ற இவ்வூடகத்தின் மீது அதிக நம்பிக்கை உண்டு. நடந்து கொள்வார்கள் என நம்புகின்றோம்.

சுவீடன் ஏசியா றிபுன் கும்பலின் தொடர்பாளரும் ரிரின் தொலைக்காட்சியின் தமிழகக் கிளை தடை செய்யப்படுவதற்கு ரோவின் விருப்பப்படி நாடகமொன்றை திறம்பட அரங்கேற்றியவருமான ஒருவர் கடந்த 6 மாத காலமாக தமிழகத்தில் தங்கியpருந்து பல சந்திப்புகளை நடத்திவிட்டு தற்போது பாரிஸ் வந்திருக்கிறார். இவர் வந்திருக்கிறார் என்பதை விட ரோவால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.தமிழ் தேசியத்துக்கு ஆதரவான ஊடகங்களை ஆரம்பிக்க முயல்பவர்கள் யார்? பாரிசில் தமிழ் தேசிய ஆதரவுசெயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் புதிதாக யார் வந்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் கண்டறிந்து உரிய இடத்துக்கு தெரிவிப்பதே இவரது பாரிஸ் வருகையின் நோக்கம் என்று தெரிய வருகிறது. கடந்த சில நாட்களாக இவர் பலரை அணுகி இவை தொடர்பான தகவல்களை கதை விட்டு கேட்டதாக அறிய முடிந்தது. நள்பர்களே உசார்?.....

Edited by navam

  • தொடங்கியவர்

தேசியத்திற்கு ஆதரவான புதியதொரு தொலைக்கட்சி வருவது மகிழ்ச்சியான செய்தி. அதுவும் இலவச ஒளிபரப்பு செய்ய உள்ளது மேலும் மகிழ்ச்சிக்குரிய செய்தி.

ஆனால் தம்மோடு இருந்த ஒரு ஊடகத்தின் மீது பாராதூரமான குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக தெரிவிக்க முனைவது சரியாகப்படவில்லை.

"தரிசனம் தேசியத்தை ஆதரிக்கவில்லை."

"தாயகத்தில் இருந்து வரும் நிகழ்வுகளை களவாடியே ஒளிபரப்பு நடக்கிறது."

"தரிசனத்தின் தொலைக்காட்சி அட்டைகளை புதுப்பிக்க வேண்டாம்"

இது போன்ற வசனங்கள் மிகவும் பாரதூரமானவை.

இரு தரப்பிற்கும் சரி வரவில்லை என்றால், தனித்தனியாக இயங்கலாம். ஆனால் இப்படியான குற்றச்சாட்டுக்களை மாறி மாறி தெரிவிக்கக்கூடாது. தேசியத்திற்கு ஆதரவான இரண்டு தொலைக்காட்சிகள் இருந்தால் அது நல்லதுதானே!

ஒன்றை எதிரியாக்கி, துரோகிப்பட்டம் கட்டி ஊடுருவல்களுக்கு இடமளிக்கக்கூடாது.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

"தரிசனத்தின் தொலைக்காட்சி அட்டைகளை புதுப்பிக்க வேண்டாம்"

இவற்றை மட்டுமே என்காதுபட கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவீடன் ஏசியா றிபுன் கும்பலின் தொடர்பாளரும் ரிரின் தொலைக்காட்சியின் தமிழகக் கிளை தடை செய்யப்படுவதற்கு ரோவின் விருப்பப்படி நாடகமொன்றை திறம்பட அரங்கேற்றியவருமான ஒருவர் கடந்த 6 மாத காலமாக தமிழகத்தில் தங்கியpருந்து பல சந்திப்புகளை நடத்திவிட்டு தற்போது பாரிஸ் வந்திருக்கிறார். இவர் வந்திருக்கிறார் என்பதை விட ரோவால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.தமிழ் தேசியத்துக்கு ஆதரவான ஊடகங்களை ஆரம்பிக்க முயல்பவர்கள் யார்? பாரிசில் தமிழ் தேசிய ஆதரவுசெயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் புதிதாக யார் வந்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் கண்டறிந்து உரிய இடத்துக்கு தெரிவிப்பதே இவரது பாரிஸ் வருகையின் நோக்கம் என்று தெரிய வருகிறது. கடந்த சில நாட்களாக இவர் பலரை அணுகி இவை தொடர்பான தகவல்களை கதை விட்டு கேட்டதாக அறிய முடிந்தது. நள்பர்களே உசார்?.....

அய்யா நவம் நீங்கள் எவ்வளவு காலமா இந்த புலனாய்வு துறையிலை இறங்கியிருக்கிறீங்கள் சரி அவர்: இவர் ஒருவர் எண்டதை விட்டிட்டு ஏசியன் ரிறிபுன் நடத்திறது யாரெண்டு எல்லாருக்கும் தெரியும் கே.ரி.ராஜசிங்கம் ரங்கூன் இல்லம் புலோலி மேற்கு புலோலி இது அவரின்ரை சொந்த விலாசம் இவர் யாரை வைத்து றோ ஊடாக எந்த நபரை வைத்து எந்த தொலைக்காட்சியை இயக்குகிறர். பகிரங்கமாகவே எழுதவும் அதை விட்டிட்டு சும்மா தென்னிந்திய சினிமா பாணியில் கிசு கிசு மாதிரியோ *** எழுதவேண்டாம்

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது உள்ள தொலைக்காட்சியில் எதுவுமே தேசியதிற்கு ஆதரவு இல்லை தரிசனம் உட்பட! வெகு விரைவில் தேசியத்திற்கு ஆதரவான புது தொலைக்காட்சி வரவுள்ளது. காத்திருங்கள் !

நாங்களும் 1990ம் ஆண்டு பிரான்சிலை முதல் வானொலி தொடங்கினதிலை இருந்து இந்த வசனத்தைதான் கேட்டுக்கொண்டிருக்கிறம் புதிசா ஏதாவது சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள சுத்தமான தமிழ் தேசியக் காப்பாளர்களே.. ரிரிஎன் கூட கொஞ்சக்காலம்.. நிதர்சனம் இணையத்தளம் கூட கொஞ்சக்காலம்.. போதாக்குறைக்கு பதிவு புதினம் கூட கொஞ்சக்காலம்.. அப்புறம் தரிசனம் கூட கொஞ்சக்காலம் என்று உங்க "தூய" தமிழ் தேசிய ஆராய்ச்சி நின்றபாடாத் தெரியல்ல.

ஒன்று செய்யுங்க.. இந்த யாழ் கள "தூய" தமிழ் தேசிய மூஞ்சிகள் எல்லாம் ஒன்றிணைஞ்சு (முடியும் என்றால்) ஒரு "தூய" தமிழ் தேசிய தொலைக்காட்சியை நடத்துங்கோவன் பார்ப்பம்.

ஒரு ஓசிப் பேப்பரையே ஒழுங்கா நடத்தக் காணம்.. அதுக்குள்ள...???! :):unsure::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எங்கட, இது நம்மட, என பிரிவினை காட்டி தேசியத்தை உரத்து கதைக்கிறவர்கள் பற்றி அவதானமாயிருக்க வேண்டும்.

ஏனெனில் சருகுப்புலிகள்தான் இப்படிக் கதைப்பினம்.

அவர்களுக்கும் துரோகிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை.

அது பதிவு இணையமாக இருக்கட்டும் அல்லது தரிசனம் தொலைக்காட்சியாக இருக்கட்டும் தேசியம் என்பது நடைமுறையில் தெரியவேண்டும்.

பார்வையாளர்கள்தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும்.

தேசியப்பற்றாளன், நாட்டுப்பற்றாளன் இப்போலிகளை இலகுவில் கண்டடைவான்.

புலிகள் மக்களை இணைப்பவர்கள்.

தரிசனம், பாரிசில் இருந்து வெளிவரவுள்ள ரிரிஎன், சுவிசில் இருந்து வெளிவரவுள்ள பெயரிடப்படாக தொலைக்காட்சி, யாராயினும் மக்கள் முன் பார்வைக்கு வரட்டும். அவர்கள் தீர்மானிப்பார்கள் யார் தேசியத்தின் பக்கமென்று. மற்றவர் எல்லாம் சருகுப்புலிகள்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவு புதினம் சங்கதி.தரிசனம் எல்லாமே தேசியத்திற்காய் பாடுபடுகின்றன. இதில் யாழும் அடக்கம்.

பதிவில் சில செய்திகள்(சிலவேளை நிதர்சனத்திலிருந்து கிடைக்கும் செய்திகளாக இருக்கலாம்) வந்து விடுகின்றன. ஆனால் அந்த செய்திகள் வேறொன்றிலும் வரமால் உறுதிப்படுத்தப்படாமல் அவர்கள் போட்டுவிடுகின்றார்கள். சிலவேளை ஆர்வத்தில் தவறுகள் செய்யப்படலாம். அதற்காக அவர்களை உரசிப்பார்த்தால் அது நல்லதல்ல

யாழும் இதில் அடக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரிசனம், பாரிசில் இருந்து வெளிவரவுள்ள ரிரிஎன், சுவிசில் இருந்து வெளிவரவுள்ள பெயரிடப்படாக தொலைக்காட்சி, யாராயினும் மக்கள் முன் பார்வைக்கு வரட்டும். அவர்கள் தீர்மானிப்பார்கள் யார் தேசியத்தின் பக்கமென்று. மற்றவர் எல்லாம் சருகுப்புலிகள்தான்.

xxxxxxxxxx

Edited by அபி

நான் நினக்கிறன் தீபம் தான் தேசிய தொலைக்காட்சி எண்டு. எந்த குத்துப்பாடும் இல்லாம நடத்துகினம். அவைக்கு கொழும்பிலயும் கிளை அலுவலகம் இருக்காம்.

மகேஸ்வரனை சாக்காட்டிய சக்தி ரங்காவும் தீபத்தில நிகழ்ச்சிகள் தர இருக்கிறாராம். அப்ப அதுதானே தேசிய தொலைக்காட்சி

r60413_166193.jpg

தமிழ் ஊடகங்கள் அதிகம் புலத்தில் வர வேண்டும்.

அதுவே ஆரோக்கிமானது.

ஆரம்பமாகவிருக்கும் ஒரு ஊடகத்தை உருவாகாாமல் இருக்க சதி செய்வதோ

இருக்கிற ஒரு ஊடகத்தை அழிக்க நினைப்பதோ

நமக்கு நாமே குழி பறித்து அழித்துக் கொள்வதற்கு சமமாகும்.

இலங்கை தமிழ் சினிமா வளராததற்கும்

புலம் பெயர் நாடுகளில் ஒரு உருப்படியான சினிமா வளராததற்கும்

இதுவே முக்கிய காரணம்.

இவை புலம் பெயர் தமிழர் தொலைக் காட்சிகளால் ஆவது

சரி செய்யப்படும் எனும் நம்பிக்கை இருந்தது.

அது இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது?

மேலே ஒரு தொலைக் காட்சி அட்டையை புதுப்பிக்க வேண்டாம் என்று

சொல்லுவதை விட தரமான நிகழ்ச்சிகளை தரும் பட்சத்தில்

மக்கள் வரவிருக்கும் தொலைக் காட்சியை நிச்சயம் பார்ப்பார்கள்.

போட்டி தேவை

பொறாமை அல்ல.

போட்டி என்று வந்தால்தான் நல்ல தரமான படைப்புகள் வரும்.

இல்லாவிட்டால் சக்கைகளும் குப்பைகளும்தான் வீடுகளுக்குள் கொட்டும்.

தகுதியான இளைஞர்கள் புலம் பெயர் நாடுகளில் உருவாகி வருகிறார்கள்.

அவர்களுக்கான சரியான களம் இல்லை.

அவர்கள் பல காரணங்களுக்காக ஊக்குவிக்கப்படவில்லை.

அண்மையில் ஒரு சில இளைஞர்கள் யுகம் 2 எனும்

டீவீடி ஒன்றை உருவாக்கி வெளியிட்டிருந்தார்கள்.

வந்தோர் 100 பேருக்கும் குறைந்த தொகையினரே!

அந்த இளைஞர்களது பெற்றோர் கூட

அந்த நிகழ்வுக்கு வரவில்லை.

ஒரு இளைஞனின் படைப்பை பார்க்க

தாயும் தந்தையும் இருவர் வீதம் வந்திருந்தால் கூட

100 + 200 = 300 பேர் அரங்கத்தில் நிறைந்திருப்பார்கள்.

தனது குழந்தையை தன் பெற்றோரே பாராட்ட தவறும் பட்சத்தில்

வேறு யார் பாராட்டுவது?

அவர்கள் நாளை உங்களை விட்டு செல்வது தவிர்க்க முடியாதது.

இது நம்மவரிடம் உள்ள ஒரு மன நோய்க்கான அறிகுறியாகவே இருக்கிறது.

தென் இந்திய கலைஞர்களையும் அவர்களது படைப்புகளையும்

எதிர்த்து வசைபாடும் அனைவரும் கூட

அவர்களைத்தான் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறார்கள்.

அவர்களது படங்களைத்தான் பார்க்கிறார்கள்.

அவர்களது தொலைக் காட்சி படைப்புகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

தென் இந்திய படைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விட

இங்கும் தரமான படைப்புகளை தர முடியும்.

இலங்கையில் இருந்து சென்னை சென்றவர்களால் ராஜ் தொலைக்காட்சி

ஒன்றை உருவாக்க முடியுமானால்

இலங்கையிலிருந்து சென்ற பாலு மகேந்திராவால்

நல்ல படைப்பாளியாக ஜொலிக்க முடியுமானால்

அவரது மாணவர்கள் திரையை கலக்க முடியுமானால்

புலம் பெயர்ந்து அனைத்து நாடுகளிலும்

கொடி கட்டி பறப்பதாக சொல்லும்

தமிழர்களால் ஏன் உருப்படியானதை செய்ய முடியவில்லை?

இங்கே நமக்கான படைப்பு ஒன்று உருவாவதல்ல பலருக்கு முக்கியம்

அவர்களது லாபமான வியாபாரமே முக்கியம்?

தன்னோடு இருப்பவனை அழித்து விட்டு

எப்படி நம் படைப்புகளை கொண்டு வர முடியும்?

தமிழர் படைப்புகள்

புலம் பெயர் நாடுகளில் வர வேண்டும் என பேசும்

பலர் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல்

பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

திறமையானவர்களை அடையாளம் கண்டு கொண்டாலும்

அவர்களை பயன்படுத்துவதற்கு அஞ்சுகிறார்கள்.

அதற்கு காரணம்

தன்னில் நம்பிக்கை இல்லாமை

அல்லது

அச்ச உணர்வு.

கலை என்பது தனி ஒரு மனிதனால் செய்ய முடியாதது.

அதற்கு பல திறமையானவர்கள் தேவை.

ஒருவரால் ஒரு வானோலியை வேண்டுமானால் செய்ய முடியும்.

அதுவும் எத்தனை நாளைக்கு?

அது திகட்டும் வரைதானே?

தொலைக் காட்சி?

சினிமா போல அல்ல

நிமிடத்துக்கு நிமிடம் உலக நிலவரங்கள் மாறும்

எறும்பாக தேடி படைக்கும்

சுறு சுறுப்பான துடிப்பும்

தகுதி : அனுபவம் : பணிபுரியும் : திறன் : இவை தேவை.

இதுவும் ஒரு யுத்த களம்தான்.

ஒவ்வொரு நொடி நகர்த்தப்படும் காய் நகர்த்தல் போல

புதுமை படைக்க வேண்டும்.

இவை இலகுவல்ல?

வானோலியில்

தொ(ல்)லைபேசியில் பேசி கடலை போட்டு வலை வீசலும்

தொ(ல்)லைக் காட்சிகளில்

வானோலியும்தான் இங்கு நடத்துகிறார்கள்.

பணம் மட்டுமே படைப்புகளை தராது

மனமும்

விவேகமும் தேவை.

அப்படியானவர்கள் ஊடகங்களுக்கு வர வேண்டும்.

ஒருவனை அழிப்பதற்கு நினைப்பதை விட

நாமாக வளர நினைக்க வேண்டும்.

அதுதான் வளர்ச்சி.

முன்னேற்றம்.

இந்த வளர்ச்சி நம்மோடு முடியக் கூடாது.

அடுத்த தலைமுறைக்கு...............போக வேண்டும்?

மேலத்தேச ஊடகங்களுக்குள் போட்டி இருக்கிறது.

இருந்தாலும் அடுத்த ஊடகத்தை அழிப்பதை விட

அடுத்தவனை விட தரமான - வித்தியாசமான சிந்தனைகளோடு கூடிய

படைப்புகளை தர சிந்திக்கிறார்கள்.

அது அடுத்து

எத்தனை தலை முறை வந்தாலும்

ஜெயித்து நிலைக்கும்.

நாம் உருவாக்க சிந்திப்பதை விட

அடுத்தவனை அழிப்பதற்கு

அநியாயமாக காலத்தை விரயமாக்குகிறோம்?

இதுவே நம்மவர் கலைப்படைப்புகள் உருவாவதற்கு

தடையான காரணங்களில் முக்கியமானது.

அழிக்க மட்டும் சிந்தித்தால் நாமும் அழிவோம்

ஆக்குவதற்கு சிந்தித்தால்

நிச்சயம் தொடர்ந்து ஆக்குவோம்.

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் அஜீவன் அண்ணா

பணத்திற்காக உருவாகின்ற துரோகிகள் ஒரு பக்கமிருக்க, தமிழீழத்தை ஆதிரக்கின்றோம் என்ற போர்வையில் எதிரிகளை உருவாக்குவர்கள் மறுபக்கமிருக்கின்றார்கள். இப்படியான செயற்பாடுகளால் என்னமும் இடைவெளி அதிகரித்துச் செல்வதோடு, எதிரி, கைக்கூலி, ஆதிக்க சக்திகள் இந்த இடைவெளியைப் பாவித்துக் கொள்வதும் இலகுவாகின்றது.

நான் நினக்கிறன் தீபம் தான் தேசிய தொலைக்காட்சி எண்டு. எந்த குத்துப்பாடும் இல்லாம நடத்துகினம். அவைக்கு கொழும்பிலயும் கிளை அலுவலகம் இருக்காம்.

மகேஸ்வரனை சாக்காட்டிய சக்தி ரங்காவும் தீபத்தில நிகழ்ச்சிகள் தர இருக்கிறாராம். அப்ப அதுதானே தேசிய தொலைக்காட்சி

ரங்கா தன்னை விளம்பரப்படுத்துவதில் அதிக பிரியர் என்பது உண்மை தான். பல நிகழ்வுகளில் தன்னை முன்ணனிப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். பிச்சைக்காரனுக்குச் சாப்பாடு போட்டாலே, அதையும் தொலைக்காட்சியில் வர வைப்பார் என்பது நிஜம்.

ஆனால் ரங்கா ஒரு ஊடகம் சார்ந்தவர். அமரர் மகேஸ்வரன் மின்னல் நிகழ்ச்சியில் பேட்டி கொடுத்தது என்பதால் தான் கொல்லப்பட்டார் என்பதற்காக ரங்காவைச் சாடுவது எவ்வகை என்று புரியவில்லை.

முன்பு சக்தி தொலைக்காட்சி இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் நிறையவே வேறுபாடு உண்டு. ஓயாதஅலைகள் 3 சமரின் நேரம், எல்லா ஊடகங்களுமே அதைப் பற்றிச் சொல்லும்போது, எழில்வேந்தன் தலைமையில் இருந்த மகாராஜா ஊடகங்கள் அன்றைய அரிசி விலையேற்றத்தைச் சொல்லிக் கொண்டிருந்தன.

அந்த நிலைமையில் இருந்து மாறி, ஐதேக சார்ந்த அமைப்பாக, விளங்கியபோதும், சமகாலச் செய்திகளை அது ஓரளவாவது தருகின்றது. சூரியன் எவ்எம் போல வெறும் ஊடகமாக மட்டும் அது இல்லாமல், வியாபார ஸ்தாபனமாக அது இருப்பதால் அளவோடு தான் செய்திகளை அது தருகின்றது.

எழில்வேந்தனை மீறி ரங்கா உள்ளுக்கு நுழைந்தது என்பது முரண்பாடுகளால் தான். எழில்வேந்தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு(??)க் காரணமாக அவர் பணிப்பாளர் நிலையில் இருந்து நீக்கப்பட்டு, விளையாட்டுத் துறைச் செய்திகளுக்கு மாற்றப்பட்டதும், ரங்கா பணிப்பாளராக மாறியதும் நீண்ட முறுகலான விடயம்.

அதன் தொடர்ச்சியாகத் தான் இணையத்தில் ரங்கா இப்படிப்பட்டவர் என மொட்டைக்கடிதம் போல யாரோ ஒரு முகமூடி எழுதி வந்தார்.

ரங்கா நல்லவர், வல்லவர் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் ரங்கா பற்றிய விமர்சனங்கள் கொஞ்சம் அதிகமாகவே படுகின்றது. பிரிகேடியர் தமிழ்செல்வன் உற்பட்ட தளபதிகளின் பேட்டிகளையும், கருத்துக்களையும் கொழும்பில் உள்ள மக்கள் அறிய அவர் பங்காற்றியிருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை

அதையும் விட, டக்ளஸ் தேவானந்தாவின் கொலை மிரட்டலுக்கு ரங்கா ஆளாகியிருப்பதும், முன்பொரு நிகழ்ச்சியில் டக்ளசைக் கூப்பிட்டு வைத்து, வாரி எடுத்த பின்னர், தன்னுடைய கட்சிக்காரரையோ, அவரோ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

விரைவில் ரிரிஎன் வானலை வழியாக உம் வாசல் தேடி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள சுத்தமான தமிழ் தேசியக் காப்பாளர்களே.. ரிரிஎன் கூட கொஞ்சக்காலம்.. நிதர்சனம் இணையத்தளம் கூட கொஞ்சக்காலம்.. போதாக்குறைக்கு பதிவு புதினம் கூட கொஞ்சக்காலம்.. அப்புறம் தரிசனம் கூட கொஞ்சக்காலம் என்று உங்க "தூய" தமிழ் தேசிய ஆராய்ச்சி நின்றபாடாத் தெரியல்ல.

ஒன்று செய்யுங்க.. இந்த யாழ் கள "தூய" தமிழ் தேசிய மூஞ்சிகள் எல்லாம் ஒன்றிணைஞ்சு (முடியும் என்றால்) ஒரு "தூய" தமிழ் தேசிய தொலைக்காட்சியை நடத்துங்கோவன் பார்ப்பம்.

ஒரு ஓசிப் பேப்பரையே ஒழுங்கா நடத்தக் காணம்.. அதுக்குள்ள...???! :lol::lol::)

இதுதான் என்னுடைய கேள்வியும் ஓசியாய் ஒரு பேப்பரோ ஒழுங்காக நடத்த இயலாமல் இருக்கு இதுக்குள்ளை ஓசியாய் தொலைக்காட்சி நடாத்திறது சாத்தியமாகுமா???

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.