Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தண்ணி அடிப்பவர்களை (மதுபானம் அருந்துபவர்களை) குடிமக்கள் / குடிகாரர் என்று சொல்வது சரியானதா?

தண்ணி அடிப்பவர்களை (மதுபானம் அருந்துபவர்களை) குடிமக்கள் / குடிகாரர் என்று சொல்வது சரியானதா? 23 members have voted

  1. 1. தண்ணி அடிப்பவர்களை (மதுபானம் அருந்துபவர்களை) குடிமக்கள் / குடிகாரர் என்று சொல்வது சரியானதா?

    • மிகவும் தவறானது!
      8
    • கொஞ்சம் தவறானது!
      0
    • கொஞ்சம் சரியானது!
      1
    • மிகவும் சரியானது!
      9
    • இது தேவையில்லாத ஒரு ஆராய்ச்சி!
      5
    • தெரியவில்லை!
      0
    • வேறு ஏதாவது பதில்!
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

வணக்கம்,

இண்டைக்கு யாழில ஒரு தலைப்பு ஒட்டப்பட்டு இருந்திச்சிது. அது என்னவெண்டால் பா.ம.க கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் மது அருந்துபவர்களிற்கு பெண்களை கலியாணம் கட்டிக்கொடுக்ககூடாது என்று கூறி இருந்தார்.

எனது கேள்வி என்னவென்றால் தண்ணி அடிப்பவர்களை - மது அருந்துபவர்களை குடிகாரர் / குடிமக்கள் என்று சொல்லலாமா?

குடி என்பது குடிமக்களை குறிக்கின்றது. ஆனால் பலர் விசமத்தனமான முறையில் தண்ணி அடிப்பவர்களை - மதுபானம் அருந்துபவர்களை குடிமக்கள் / குடிகாரர் என்று கூறிவருகின்றார்கள்.

தண்ணி அடிப்பதே தவறானது. அடிப்பது தான் அடிக்கிறார்கள், அவர்களை குடிகாரர் / குடிமக்கள் என்று கூறுவது இன்னும் தவறானது. குடிகாரர் / குடிமக்கள் என்பவர் நிம்மதியாக, மகிழ்வுடன் குடும்பம் நடாத்தும் பொதுமக்கள். தண்ணி அடிப்பவர்களோ வீட்டில் செய்யும் சேட்டைகள், ரவுடித்தனங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. இவர்களை எப்படி குடிகாரர் / குடிமக்கள் என்று கூறலாம்? தண்ணி அடிப்பதை நிறுத்தும்வரை முதலில் இவர்களது குடியுரிமை பறிக்கப்படவேண்டும்.

மதுபானம் அருந்துபவர்களை எவ்வாறு அழைக்கலாம்? இதற்கு தமிழில் வேறு ஏதாவது சொற்பதங்கள் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கோ.

இப்போதைக்கு இவர்களை குடிகாரர் / குடிமக்கள் என்று அழைக்காமல் தண்ணி அடிப்பவர்கள் என்று கூறுவது சிறப்பானது என்று நினைக்கின்றேன். :lol:

அல்லது மதுப்பிரியர்கள் என்று இவர்களை கூறலாம். :lol::(

இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ.

உங்கள் கருத்துக்களிற்கு நன்றி!

சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூரில் இன்று காலை ஒரு திருமண விழா நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதா வது:-

ஒவ்வொரு மனிதருக்கும் தாயே உயிர். அதனால்தான் நாம் மொழியைக்கூட தாய் மொழி என்கிறோம். என்றும் தாயை மதிக்க வேண்டும். பெண்களை யாரும் அடிமை யாக நடத்தக்கூடாது. பேசும் தெய்வம் தாய் தான். தாய் - தந்தையருக்கு என்றும் அன்பு செலுத்த வேண்டும்.

குடிப்பழக்கம் மோச மானது. மதுவால் நாட்டுக் கும், வீட்டுக்கும், உயிருக் கும் கேடு என்று எழுதி வைத்துவிட்டு அரசே மதுபான கடைகளை ஏற்று நடத்துகிறது. என் குடும்பத்தில் 2 தம்பிகள் குடிப்பழக்கத்தால் அல்பஆயுசில் போய் சேர்ந்து விட்டார்கள்.

குடிகாரர்களுக்கு யாரும் பெண் கொடுக்காதீர்கள். அவர்களுக்கு நாயை கட்டி வையுங்கள்.

டாஸ்மாக் மூலமாக ஒருவரிடம் இருந்து 100 ரூபாயை பறித்துக் கொண்டு 10 ரூபாய் அளவுக்கு நலத்திட்ட உதவிகள் செய்கிறார்கள். கடந்த ஜனவரி 1-ந் தேதி ரூ.100 கோடிக்கு மது குடித்து இருக்கிறார்கள். காணும் பொங்கல் அன்று ரூ.70 கோடிக்கு மது குடித்து இருக்கிறார்கள். இதுதான் நம் மக்களின் சாதனை. காமராஜர் ஆட்சியில் கிராமந்தோறும் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக் கப்பட்டன. அன்று கல்வி அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. தற்போது கல்வி தனியார் வசம் உள்ளது. தனியார் வசம் இருந்த மதுபான கடைகளை அரசு ஏற்று நடத்துகிறது.

சேலம், தர்மபுரி, விழுப் புரம் மாவட்டங்களில் அதிகம் பேருக்கு மது பழக்கம் உள்ளது. அதில் இருந்து விடுபட வேண்டும். அதே போன்று பெண் சிசு கொலைகள் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் அதிகம் நடக்கிறது. அதனை தடுக்க முன்வர வேண்டும். பெண்களை படிக்க வைத்து நன்றாக ஆளாக்க வேண்டும். அவர்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும்.

கொளத்தூர் பகுதியில் மனித உரிமை மீறல்கள் நடந்து உள்ளது. அதில் பெண்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார் கள். இதை நான் மக்கள் தொலைக்காட்சி சந்தனகாடு தொடரில் பார்த்த போது மனம் கொதித்து போய்விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாநில வன்னியர் சங்க தலைவர் குரு பேசும்போது, "திராவிட கழக தலைவர் வீரமணியை கண்டித்து பேசினார்.

இதில் செந்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, தமிழரசு, கண்ணையன், காவேரி, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

viparam .com

உவையளுக்கு கதைக்க வேறை கதையொண்டும் கிடைக்கேல்லையோ

இதை நான் மப்புறுப்பினர் என்ற வகையில் வன்மையாக கண்டிக்கின்றேன் :o

குடி என்ற ஒன்றை ஒழித்தால் குடிகாரன் என்றொருவர் இருக்க மாட்டார்.

முந்தநாள் பிறந்த குஞ்சுகுருமனெல்லாம் குடியைப்பற்றி புத்திமதி சொல்ல வெளிக்கிட்டுட்டுதுவள் :(

எங்கை போய் முட்டுறதண்டு தெரியேல்லை

:( உலகக்குடிடிடிடி மக்களை கேவலப்படுத்தும் இந்தக்கருத்தை வன்மையாகக்கண்டிக்கிறேன்

எங்கை முட்டுறதோ கு சா ஒவ்வொருநாளும் முட்டி மோதித்தானே வீட்டை போறநாங்கள்

நன்றீறீறீறீ :o

:huh:

நானும் வன்மையா கண்ணடிக்கிறன் சே....கண்டுபிடிக்கிறன். ..இல்லை கண்டிக்கிறன் ஒய் கு.சா ...சின்னா எங்கடை பிறப்புக்கே அவமானம் ..குடிகாரருக்கு பெண் குடுக்ககூடாது எண்டால் அப்ப இனி யார் எங்களுக்கு பெண்தருவாங்கள். :( :

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

எனது பொன்னான வாக்கை மிகவும் தவறானது என்பதற்கு குத்தியுள்ளேன். :( 3-4 வயதிலிருந்தே உடன் பனங்கள் உடலுக்கு குளிர்மை என அப்பா தருவார். அது கிட்டத்தட்ட 5 ம் வகுப்பு படிக்குமட்டும் பாடசாலைக்கு போக முன்னர் குடிச்சிட்டு தான் போவேன். 6ம் வகுப்புக்கு பாடசாலை மாறியவுடன் மணக்கும் எண்டு நானாக வேண்டாம் எண்டு குடிக்கிறதில்லை. பின்னர் 8ம் 9ம் வகுப்பு படிக்கிற காலங்களில நாங்களா கேட்டால் தருவினம் எங்களிடம் பனைக்காணி இருத்தது. அதைக் கள் இறக்குபவருக்கு வாடகைக்கு கொடுத்தால் வாடகையாக ஒரு பனைக்கு ஒரு போத்தல் ஒவ்வொரு நாளும் காலையில் தருவார்கள். எல்லா பனையும் வாடகைக்கு கொடுக்க மாட்டோம் காரணம் பனங்காயை சீவுவதால் பனம்பழம் வராது. பனை ஓலைகளும் வெட்டுபட்டும் எண்டு நினைக்கிறேன். அதனால் சீசனுக்கு 1 அல்லது 2 பனைதான் வாடகைக்கு கொடுப்போம். அதனால் அனேகமாக வீட்டில் உடன் கள் இருக்கும். உடன் கள்ளின் சுவை தெரியாதவர்கள் கள்ளு குடிப்பதை கொச்சை படுத்த வேண்டாம். :lol:

பிறகு இஞ்சாலை வந்தா பிறகு கள்ளு இல்லை. ஆரம்பத்தில் வெக்கை தணிய கொஞ்ச பீர் பின்னர் யூனி இல படிச்ச காலத்தில பெரிசா இல்லை. சமஸ்ரர் தொடங்கைக்கை றிபிறஸ்மன்ற் க்கு ஒரு பாட்டி. பிறகு மிட்ரேம் தொடங்க பிறசா படிக்கிறதுக்கு ஒரு பாட்டி. மிட்ரேம் நல்லா செய்தா சந்தோசத்துக்கு ஒரு பாட்டி. நல்லா செய்ய இல்லையெண்டால் கவலைக்கு ஒரு பாட்டி. இடைக்கிடை அசைன்மன்ற் லாப் செய்யிற ஸ்றெஸ் போக ஒரு பாட்டி. பிறகு பைனல் எக்சாம் பிறிபறேசனுக்கு ஒரு பாட்டி. பரீட்சை கொட்டுபட்டா கவலையிலை ஒரு பாட்டி. நல்லா செய்தா சந்தோசத்தில ஒரு பாட்டி. சமஸ்ரர் முடிய முடிவுக்கு ஒரு பாட்டி. பரிட்சை நேரங்களில 4 பேர் றூமெட் எண்டால் சிலநேரங்களில வேற வேற பாடங்கள் எடுத்தோம். அப்ப கூட்டி கழிச்சு பாத்தா அதிலையே 10 - 12 பாட்டி வந்திடும். மற்றபடி நண்பர்களின் பேத்டே பாட்டி. இதுகளை விட யூனிக்கு புதிசா வாற மாணவர்களுக்கு புறேஸ் பாட்டி. முடிஞ்சு போறாக்களுக்கு பெயவெல் பாட்டி. முக்கியமானது இங்கை பொறியியல் படித்தவர்கள் இரும்பு மோதிரம் பெறும் நாள், அந்த றிங் விழா ட்றிங் பாட்டியில முடியும். இப்படியான பாட்டிகளில நண்பர்களின் மனம் கோணாமல் பாட்டிசிபேட் பண்ணுவது. இதைப் போய் குடிகாறர் எண்டு சொல்றதை தப்பு எண்டுறது மட்டுமல்லாது மாப்புக்கு எனது கண்டணத்தையும் தெரிவித்து கொள்கிறேன். :huh::o

  • கருத்துக்கள உறவுகள்

மனம் மகிழ்கிற அளவு குடிக்கலாம், மதி மயங்கிற அனவு கூடாது.

அவர்களைக் குடிகாரர் என சொல்வது தப்பு. அதுவும் அவருக்கு முன்னால் சொன்னீங்களோ அப்புறம் அவற்ற அறுவை தாங்க முடியாது. :lol::o

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு,ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து இப்ப இதுவா :( நீங்கள் மேல போட்ட தெரிவுகளில் இன்னும் ஒன்று வந்திருக்கனும்.அதாவது

மது அருந்தும் விதத்தைப்பொறுத்தது எனறு. :lol:

மனம் மகிழ்கிற அளவு குடிக்கலாம், மதி மயங்கிற அனவு கூடாது.

இதுதான் எனது பதிலும் :o

  • தொடங்கியவர்

எனது பொன்னான வாக்கை மிகவும் தவறானது என்பதற்கு குத்தியுள்ளேன். :( 3-4 வயதிலிருந்தே உடன் பனங்கள் உடலுக்கு குளிர்மை என அப்பா தருவார். அது கிட்டத்தட்ட 5 ம் வகுப்பு படிக்குமட்டும் பாடசாலைக்கு போக முன்னர் குடிச்சிட்டு தான் போவேன். 6ம் வகுப்புக்கு பாடசாலை மாறியவுடன் மணக்கும் எண்டு நானாக வேண்டாம் எண்டு குடிக்கிறதில்லை. பின்னர் 8ம் 9ம் வகுப்பு படிக்கிற காலங்களில நாங்களா கேட்டால் தருவினம் எங்களிடம் பனைக்காணி இருத்தது. அதைக் கள் இறக்குபவருக்கு வாடகைக்கு கொடுத்தால் வாடகையாக ஒரு பனைக்கு ஒரு போத்தல் ஒவ்வொரு நாளும் காலையில் தருவார்கள். எல்லா பனையும் வாடகைக்கு கொடுக்க மாட்டோம் காரணம் பனங்காயை சீவுவதால் பனம்பழம் வராது. பனை ஓலைகளும் வெட்டுபட்டும் எண்டு நினைக்கிறேன். அதனால் சீசனுக்கு 1 அல்லது 2 பனைதான் வாடகைக்கு கொடுப்போம். அதனால் அனேகமாக வீட்டில் உடன் கள் இருக்கும். உடன் கள்ளின் சுவை தெரியாதவர்கள் கள்ளு குடிப்பதை கொச்சை படுத்த வேண்டாம். :o

பிறகு இஞ்சாலை வந்தா பிறகு கள்ளு இல்லை. ஆரம்பத்தில் வெக்கை தணிய கொஞ்ச பீர் பின்னர் யூனி இல படிச்ச காலத்தில பெரிசா இல்லை. சமஸ்ரர் தொடங்கைக்கை றிபிறஸ்மன்ற் க்கு ஒரு பாட்டி. பிறகு மிட்ரேம் தொடங்க பிறசா படிக்கிறதுக்கு ஒரு பாட்டி. மிட்ரேம் நல்லா செய்தா சந்தோசத்துக்கு ஒரு பாட்டி. நல்லா செய்ய இல்லையெண்டால் கவலைக்கு ஒரு பாட்டி. இடைக்கிடை அசைன்மன்ற் லாப் செய்யிற ஸ்றெஸ் போக ஒரு பாட்டி. பிறகு பைனல் எக்சாம் பிறிபறேசனுக்கு ஒரு பாட்டி. பரீட்சை கொட்டுபட்டா கவலையிலை ஒரு பாட்டி. நல்லா செய்தா சந்தோசத்தில ஒரு பாட்டி. சமஸ்ரர் முடிய முடிவுக்கு ஒரு பாட்டி. பரிட்சை நேரங்களில 4 பேர் றூமெட் எண்டால் சிலநேரங்களில வேற வேற பாடங்கள் எடுத்தோம். அப்ப கூட்டி கழிச்சு பாத்தா அதிலையே 10 - 12 பாட்டி வந்திடும். மற்றபடி நண்பர்களின் பேத்டே பாட்டி. இதுகளை விட யூனிக்கு புதிசா வாற மாணவர்களுக்கு புறேஸ் பாட்டி. முடிஞ்சு போறாக்களுக்கு பெயவெல் பாட்டி. முக்கியமானது இங்கை பொறியியல் படித்தவர்கள் இரும்பு மோதிரம் பெறும் நாள், அந்த றிங் விழா ட்றிங் பாட்டியில முடியும். இப்படியான பாட்டிகளில நண்பர்களின் மனம் கோணாமல் பாட்டிசிபேட் பண்ணுவது. இதைப் போய் குடிகாறர் எண்டு சொல்றதை தப்பு எண்டுறது மட்டுமல்லாது மாப்புக்கு எனது கண்டணத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

சபேஸ் உங்கட உள்ளக்குமுறல் விளங்கிது. என்ன செய்யுறது? இளம் சமுதாயத்த மதுபோதையில இருந்து காப்பாற்ற வேண்டி உள்ளது. நீங்கள் மூண்டாம் வகுப்பிலயே சுவைக்க துவங்கினனீங்கள். தாராளமாக அடியுங்கோ. பாவம் நீங்கள், இனி இருவது வருசத்தால உத விடுறது எண்டால் கஸ்டம் தானே? :(

மனம் மகிழ்கிற அளவு குடிக்கலாம், மதி மயங்கிற அனவு கூடாது.

அவர்களைக் குடிகாரர் என சொல்வது தப்பு. அதுவும் அவருக்கு முன்னால் சொன்னீங்களோ அப்புறம் அவற்ற அறுவை தாங்க முடியாது. :huh::lol:

முன்னால சொல்ல ஏலாது எண்டுதான் இப்படி இணையத்தில சுவரொட்டி எழுதி ஒட்டுறம். இதுதான் பாதுகாப்பான வழி சுவை அண்ணை. :o

மாப்பு,ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து இப்ப இதுவா :( நீங்கள் மேல போட்ட தெரிவுகளில் இன்னும் ஒன்று வந்திருக்கனும்.அதாவது

மது அருந்தும் விதத்தைப்பொறுத்தது எனறு. :lol:

இதுதான் எனது பதிலும் :(

மது அருந்தும் விதமா? அது எப்பிடி எண்டு சொல்லுங்கோ. :(

மதுபானத்தோட கொக்கோகோலாவ ஊத்தி கலந்து குடிச்சா அது மதுபானம் இல்லையா?

நாட்டின் பெருங்குடிமக்கள் என்ற பெயரைப்போடாமல் விட்டதை இட்டு நாம் கவலைப்படுகிறோம்

:wub::(:lol:

எனது பொன்னான வாக்கை மிகவும் தவறானது என்பதற்கு குத்தியுள்ளேன். :lol: 3-4 வயதிலிருந்தே உடன் பனங்கள் உடலுக்கு குளிர்மை என அப்பா தருவார். அது கிட்டத்தட்ட 5 ம் வகுப்பு படிக்குமட்டும் பாடசாலைக்கு போக முன்னர் குடிச்சிட்டு தான் போவேன். 6ம் வகுப்புக்கு பாடசாலை மாறியவுடன் மணக்கும் எண்டு நானாக வேண்டாம் எண்டு குடிக்கிறதில்லை. பின்னர் 8ம் 9ம் வகுப்பு படிக்கிற காலங்களில நாங்களா கேட்டால் தருவினம் எங்களிடம் பனைக்காணி இருத்தது. அதைக் கள் இறக்குபவருக்கு வாடகைக்கு கொடுத்தால் வாடகையாக ஒரு பனைக்கு ஒரு போத்தல் ஒவ்வொரு நாளும் காலையில் தருவார்கள். எல்லா பனையும் வாடகைக்கு கொடுக்க மாட்டோம் காரணம் பனங்காயை சீவுவதால் பனம்பழம் வராது. பனை ஓலைகளும் வெட்டுபட்டும் எண்டு நினைக்கிறேன். அதனால் சீசனுக்கு 1 அல்லது 2 பனைதான் வாடகைக்கு கொடுப்போம். அதனால் அனேகமாக வீட்டில் உடன் கள் இருக்கும். உடன் கள்ளின் சுவை தெரியாதவர்கள் கள்ளு குடிப்பதை கொச்சை படுத்த வேண்டாம். :)

பிறகு இஞ்சாலை வந்தா பிறகு கள்ளு இல்லை. ஆரம்பத்தில் வெக்கை தணிய கொஞ்ச பீர் பின்னர் யூனி இல படிச்ச காலத்தில பெரிசா இல்லை. சமஸ்ரர் தொடங்கைக்கை றிபிறஸ்மன்ற் க்கு ஒரு பாட்டி. பிறகு மிட்ரேம் தொடங்க பிறசா படிக்கிறதுக்கு ஒரு பாட்டி. மிட்ரேம் நல்லா செய்தா சந்தோசத்துக்கு ஒரு பாட்டி. நல்லா செய்ய இல்லையெண்டால் கவலைக்கு ஒரு பாட்டி. இடைக்கிடை அசைன்மன்ற் லாப் செய்யிற ஸ்றெஸ் போக ஒரு பாட்டி. பிறகு பைனல் எக்சாம் பிறிபறேசனுக்கு ஒரு பாட்டி. பரீட்சை கொட்டுபட்டா கவலையிலை ஒரு பாட்டி. நல்லா செய்தா சந்தோசத்தில ஒரு பாட்டி. சமஸ்ரர் முடிய முடிவுக்கு ஒரு பாட்டி. பரிட்சை நேரங்களில 4 பேர் றூமெட் எண்டால் சிலநேரங்களில வேற வேற பாடங்கள் எடுத்தோம். அப்ப கூட்டி கழிச்சு பாத்தா அதிலையே 10 - 12 பாட்டி வந்திடும். மற்றபடி நண்பர்களின் பேத்டே பாட்டி. இதுகளை விட யூனிக்கு புதிசா வாற மாணவர்களுக்கு புறேஸ் பாட்டி. முடிஞ்சு போறாக்களுக்கு பெயவெல் பாட்டி. முக்கியமானது இங்கை பொறியியல் படித்தவர்கள் இரும்பு மோதிரம் பெறும் நாள், அந்த றிங் விழா ட்றிங் பாட்டியில முடியும். இப்படியான பாட்டிகளில நண்பர்களின் மனம் கோணாமல் பாட்டிசிபேட் பண்ணுவது. இதைப் போய் குடிகாறர் எண்டு சொல்றதை தப்பு எண்டுறது மட்டுமல்லாது மாப்புக்கு எனது கண்டணத்தையும் தெரிவித்து கொள்கிறேன். :(:D

அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றீ

:lol::D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பொறுத்தவரை அது தவறு சென்று சொல்ல முடியாது. இங்கு மேழைத்தேசங்களில் இருக்கும் வழக்க வழக்கங்களுக்கும் இந்திய பழக்க வழக்கங்களுக்கும் நிறையவே வேறு பாடு உண்டு. ராமதாசின் கோணத்தில் குடிகாரர் என்பது அளவுக்கதிகமாக குடிப்பவர்களை என்று நினைக்கிறேன்.

கலைஞன் சொன்னது போல குடி -மக்கள் என்றும் கொள்ள முடியும் அதே நேரம்

குடி -குடித்தல் என்றும் பெருள்படவும் சொல்ல முடியும். எனவே குடிப்பவரை குடிகாரர் என்று சொல்வதில் என்ன தவறு?

குடிப்பவன் -குடிகாரன் என்று சொல்ல முடியாதா? அது தானே உண்மையும் கூட, சமைப்பவன் -சமையல்காரனாகும் போது , பேப்பர்காரன், கடைக்காரன், இப்படி எத்தனையோ காரன்கள் இருக்கும் போது ஏன் குடிகாரன் என்று சொல்ல கூடாது என்பது எனது கேள்வி.

சரி இனி பார்ட்டிகளில் பியர் குடித்தால் என்ன லிக்கர் குடித்தால் என்ன, ஏன்.. கோலாவே குடித்தால் என்ன குடிகாரன் தானே?

இதில் குடிகாரன் என்பதில் தவறல்ல ஆனால் நாங்கள் குடிகாரன் என்றால் அது மது போதையில் இருப்பவன் என்று எண்ணுவது தான் தவறு..

இது என்னோட சின்ன தாழ்மையான விளக்கம் ஏற்றுக்கொள்ள வேணும் என்று இல்ல

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றீ :lol::lol::D

சின்னப்பூபூபூபூபூ நக்கல் எண்டது மட்டும் விளங்குது. :wub: இங்கை பலருக்கு முக்கியமா கலைஞனுக்கு தண்ணி போடுறதுக்கும் வெறிபோடுறதுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கு. அதுக்காண்டி தான் அந்த நீண்ட விளக்கம். ஒரு பொழுது (குடிக்காமலோ) வெறிபோடாமலோ அல்லது வெறிய போட்டுட்டு ஆக்களோட பிரச்சனைபடுறது (முக்கியமா குடும்பத்தோட) பொருட்களை சொத்துகளை சேதம் படுத்திறதுக்கும் பம்பலுக்கு தண்ணி போடுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. :)

Edited by Sabesh

  • தொடங்கியவர்

பல பெரியவர்கள் வந்து பெரிய பெரிய கருத்துக்கள் சொல்லி இருக்கிறீங்கள்.

அதிலையும் சின்னப்புவிண்ட ஆக்கினை தாங்க முடியவில்ல. சும்மா குடிமக்கள் எண்டு வேண்டாமாம். பெருங்குடி மக்கள் எண்டு சொல்லட்டாம். எல்லாம் காலம்.. :lol:

அப்ப சபேஸ் மதுபானம் அருந்திற ஆக்களில நல்ல ஆக்கள் இருக்கிறீனம் எண்டு சொல்லுறீங்கள்? நீங்கள் நல்லவர் எண்டு எனக்கு தெரியும். ஆனா எல்லாரையும் இந்த கட்டகரியுல போட ஏலாது.

இது நான் எண்ட வாழ்க்கை அனுபவங்களில கண்டததான் சொல்லிறன்.

நிறையபேர் மதுபானம் அருந்துவதை ஒரு திறமையா நினைக்கிறீனம். சிலர் மதுபானம் அருந்தாமல் இருப்பதை தமது ஒரு தகுதிக்குறைவாக நினைக்கிறீனம். என்ன செய்யுறது? :)

  • கருத்துக்கள உறவுகள்

வெறி வராமல் நுனி நாக்கை நனைக்கிறதில ஒரு பிரியோசனமும் இல்லை. அதுக்காக கண்ட இடத்திலையும் அடிச்சு அசிங்கப்படக் கூடாது. இதுக்குத்தான் இடம் பொருள் ஏவல் அறிந்து தண்ணியடி என்று அந்தக்காலத்திலயே பெரியவா சொல்லியிருக்கா..! :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பொறுத்தவரைக்கும் போத்திலின்ரை கழுத்தை திருகி அதுக்குள்ளை இருக்கிறதை ஒரு கரைகண்டுதான் ஓய்வுக்கு வாறது :lol:

எண்டாலும் சின்னப்பு சொல்லுற மாதிரி அளவோடை அடிச்சால் வாழ்க்கை முழுக்க அடிக்கலாம் :huh:

நான் நினக்கிறன் உவர் காமதாஸ் கசிப்பு,பட்டைச்சாராயம் அடிக்கிறவையைப்பாத்துத்தான் உந்த வசனத்தை வாந்தியெடுத்திருக்கிறார் :lol:

மற்றது உது தேவையில்லாத ஆராய்ச்சி எண்டதுக்குத்தான் புள்ளி போட்டிருக்கிறன் :wub:

மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்

பெருங்குடி மக்கள் மட்டுமல்ல, பெருங்குடி மகளிரும் விழாக்களில் பங்கெடுப்பதுண்டு. ஒதுக்கமான அறையில் குளிர்பானங்களுடன் லைட்டாக ஆரம்பிப்பவர்கள் நேரஞ் செல்லச் செல்ல ஆள்பாதி ஆடைபாதி என்ற நிலைக்குப் போவதுண்டு. வெஸ்டர்ன் ஸ்டைலில் குடிக்கும் மகளிர் அதே ஸ்டைலில் ஜீன்ஸ், சுடிதார், பஞ்சாபியுடன் இருப்பது சாலச் சிறந்தது. அப்போதுதான் டைனிங்டேபிள் பேப்பரும், கம்பளமும் கம்பளியாக மாறும் அவலத்தைத் தவிர்க்கலாம். (இதை எழுத கவலையாய் இருக்கிறது. ஆயினும்...). :huh::wub:

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியானம் 12 மணிக்கு முன்னமே தண்ணி அடிக்கிறவர்கள் - பச்சைக் குடிகாரர்கள்..

மத்தியானம் கழிந்த பின்னர் குடிப்பவர்கள் - அளவான குடிகாரர்கள்

மணித்தியாலக் கணக்காக இருந்துகொண்டு மெதுவாகக் குடிப்பர்வர்கள் - மதுப்பிரியர்கள்

ஒரு பெக்/பாதி பியர் குடிப்பவர்கள் - "மணக்கிறவர்கள்"

குடித்துக்கொண்டே உலக நியாயங்களை ஆவேசப்பட்டு உரத்துக் கதைப்வர்கள் - புத்திசீவிக்குடிகாரர்

வைன் மட்டும் (சாப்பாட்டிற்குப் பின் கொஞ்சம் கொனியாக்) குடிப்பவர் - மேல்தட்டுக் குடிகாரர்

குடித்துவிட்டு மற்றவர்கள் மேல் வன்முறையில் ஈடுபடுவர்கள் - முரட்டுக் குடிகாரர்கள்

அதிகம் குடித்தால் ஒருசொல் பேசாமல் அமைதியாய் இருப்பவர்கள் - ஊமைக் குடிகாரர்கள்

குடித்துவிட்டு சோகங்களை அழுது தீர்ப்பவர்கள் - உணர்ச்சிக் குடிகாரர்கள்

------

-----

மொத்தத்தில் மதுபானம் பாவிப்போர் பலவகையாக உள்ளனர்..

  • தொடங்கியவர்

மத்தியானம் 12 மணிக்கு முன்னமே தண்ணி அடிக்கிறவர்கள் - பச்சைக் குடிகாரர்கள்..

மத்தியானம் கழிந்த பின்னர் குடிப்பவர்கள் - அளவான குடிகாரர்கள்

மணித்தியாலக் கணக்காக இருந்துகொண்டு மெதுவாகக் குடிப்பர்வர்கள் - மதுப்பிரியர்கள்

ஒரு பெக்/பாதி பியர் குடிப்பவர்கள் - "மணக்கிறவர்கள்"

குடித்துக்கொண்டே உலக நியாயங்களை ஆவேசப்பட்டு உரத்துக் கதைப்வர்கள் - புத்திசீவிக்குடிகாரர்

வைன் மட்டும் (சாப்பாட்டிற்குப் பின் கொஞ்சம் கொனியாக்) குடிப்பவர் - மேல்தட்டுக் குடிகாரர்

குடித்துவிட்டு மற்றவர்கள் மேல் வன்முறையில் ஈடுபடுவர்கள் - முரட்டுக் குடிகாரர்கள்

அதிகம் குடித்தால் ஒருசொல் பேசாமல் அமைதியாய் இருப்பவர்கள் - ஊமைக் குடிகாரர்கள்

குடித்துவிட்டு சோகங்களை அழுது தீர்ப்பவர்கள் - உணர்ச்சிக் குடிகாரர்கள்

------

-----

மொத்தத்தில் மதுபானம் பாவிப்போர் பலவகையாக உள்ளனர்..

கிருபன் அண்ணை அவர்கள் தான் மீண்டும் ஒரு அறிவாளி - தத்துவஞானி என்பதை இங்கு பலகோடி மக்கள் முன்னிலையில் நிரூபித்து இருக்கின்றார். அவருக்கு எமது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு,

யாழ் பத்மபூசன் என்ற உயரிய பட்டம் கொடுத்து கெளரவிக்கின்றோம்! :huh:

பிகு: பத்மபூசன் எண்டால் என்ன அர்த்தம் எண்டு என்னை கேக்காதிங்கோ. எனக்கும் தெரியாது. எங்கையோ தெருவில போகேக்க காதில விழுந்திச்சிது.

கிருபன் அண்ணை, பத்மபூசன் எண்டால் என்ன எண்டும் ஒருக்கால் சொல்லிவிடுங்கோ. ஏதோ வாயில வந்திட்டிது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணை, பத்மபூசன் எண்டால் என்ன எண்டும் ஒருக்கால் சொல்லிவிடுங்கோ. ஏதோ வாயில வந்திட்டிது. :huh:

பத்மபூசன் என்றால் பத்மாவை பூசிக்கிறவர் (அதாவது பூஜை செய்பவர்).. இனி பத்மாவைத் தேடவேண்டும் (புசிக்கத்தான்) :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத்தியானம் 12 மணிக்கு முன்னமே தண்ணி அடிக்கிறவர்கள் - பச்சைக் குடிகாரர்கள்-சின்னப்பு,நான்

மத்தியானம் கழிந்த பின்னர் குடிப்பவர்கள் - அளவான குடிகாரர்கள்-வசம்பர்

மணித்தியாலக் கணக்காக இருந்துகொண்டு மெதுவாகக் குடிப்பர்வர்கள் - மதுப்பிரியர்கள்-ஜமுனா

ஒரு பெக்/பாதி பியர் குடிப்பவர்கள் - "மணக்கிறவர்கள்"-கலைஞன்

குடித்துக்கொண்டே உலக நியாயங்களை ஆவேசப்பட்டு உரத்துக் கதைப்வர்கள் - புத்திசீவிக்குடிகாரர்-நெடுக்குசாமி

வைன் மட்டும் (சாப்பாட்டிற்குப் பின் கொஞ்சம் கொனியாக்) குடிப்பவர் - மேல்தட்டுக் குடிகாரர்- கறுப்பி

குடித்துவிட்டு மற்றவர்கள் மேல் வன்முறையில் ஈடுபடுவர்கள் - முரட்டுக் குடிகாரர்கள்-டன்

அதிகம் குடித்தால் ஒருசொல் பேசாமல் அமைதியாய் இருப்பவர்கள் - ஊமைக் குடிகாரர்கள்-Sabesh

குடித்துவிட்டு சோகங்களை அழுது தீர்ப்பவர்கள் - உணர்ச்சிக் குடிகாரர்கள்- சாத்திரியார்

:huh::wub::lol::lol:

நன்றி கிருபன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் இன்னாய்யா ஆச்சு :lol::huh:

பச்சைக்குடிகாரர்களின் புலம்பல்கள் ஒரு காதில் வாங்கி மற்ற காதால விடனும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் அண்ணா.

உதாரண புருஷர்கள் உதைக்க வரப் போகிறார்கள்!

வயதில் மூத்தவர்கள் அண்ணா என்று விளிக்கும்போது புல்லரிக்கின்றது.. பிஞ்சில் பழுத்ததுகளையும் அண்ணா என்று அழைக்கலாம் என்பது உண்மைதான்..

  • கருத்துக்கள உறவுகள்

குடித்துக்கொண்டே உலக நியாயங்களை ஆவேசப்பட்டு உரத்துக் கதைப்வர்கள் - புத்திசீவிக்குடிகாரர்-நெடுக்குசாமி

நான் தண்ணி அடிக்காமலே இப்படின்னா.. தண்ணி அடிச்சனென்றால்.. புத்திமான் பலவான் ஆகிடுவனா..??! :):lol:

மணித்தியாலக் கணக்காக இருந்துகொண்டு மெதுவாகக் குடிப்பர்வர்கள் - மதுப்பிரியர்கள்-ஜமுனா

கு.சா தாத்தா மணித்தியால கணக்கில இருந்து அடிக்கிறது தனி சுகம் பாருங்கோ :lol: சைட் டிஸ் ஊறுகாயை பக்கத்தில வைத்தா நேரம் போறதே தெரியாது பாருங்கோ :D ...அது சரி நீங்க என்ன சைட் டிஸ் பாவிக்கிறனியள்... :)

அப்ப நான் வரட்டா!!

சிரி சிரி சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசி

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியானம் 12 மணிக்கு முன்னமே தண்ணி அடிக்கிறவர்கள் - பச்சைக் குடிகாரர்கள்..

மத்தியானம் கழிந்த பின்னர் குடிப்பவர்கள் - அளவான குடிகாரர்கள்

மணித்தியாலக் கணக்காக இருந்துகொண்டு மெதுவாகக் குடிப்பர்வர்கள் - மதுப்பிரியர்கள்

ஒரு பெக்/பாதி பியர் குடிப்பவர்கள் - "மணக்கிறவர்கள்"

குடித்துக்கொண்டே உலக நியாயங்களை ஆவேசப்பட்டு உரத்துக் கதைப்வர்கள் - புத்திசீவிக்குடிகாரர்

வைன் மட்டும் (சாப்பாட்டிற்குப் பின் கொஞ்சம் கொனியாக்) குடிப்பவர் - மேல்தட்டுக் குடிகாரர்

குடித்துவிட்டு மற்றவர்கள் மேல் வன்முறையில் ஈடுபடுவர்கள் - முரட்டுக் குடிகாரர்கள்

அதிகம் குடித்தால் ஒருசொல் பேசாமல் அமைதியாய் இருப்பவர்கள் - ஊமைக் குடிகாரர்கள்

குடித்துவிட்டு சோகங்களை அழுது தீர்ப்பவர்கள் - உணர்ச்சிக் குடிகாரர்கள்

------

-----

மொத்தத்தில் மதுபானம் பாவிப்போர் பலவகையாக உள்ளனர்..

கிருபன் அண்ணா... எப்பிடி உங்களால இப்பிடியெல்லாம்... :lol:

  • தொடங்கியவர்

சிரி சிரி சிரிசிரிசிரி சிரிசிரிசிரி சிரிசிரி

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

ஹொ ஹோ ஹோஹோஹோ

ஹீ ஹீ ஹீ ஹீஹீ ஹீ ஹீ

கிருபன் வந்து குடிகாரர்கள் பற்றி அழகாக விளக்கம் கொடுக்க சிரிப்பு

அதற்கு கலைஞன் வந்து தனக்கே விளக்கம் தெரியாதெண்டு ஒரு பட்டம் கொடுத்தாரே அதவிடச்சிரிப்பு

கலைஞன் கொடுத்த பட்டத்துக்கான விளக்கத்த கொடுதடத்திற்று கிருபன் எதையோ தேடுறாராமே சிரிப்போ சிரிப்பு

அப்புறம் கு சா வந்து கிருபன்சொன்னதற்கு விளக்கம் கொடுக்க

அப்புறம் கறுப்பி நெடுக்ஸ் காதல்இளவரசன் எல்லோரும் வந்து பதில் சொல்ல ஒரே சிரிப்புத்தான் போங்கள்

சிரி சிரி சிரிசிரி சிரிசிரிசிரிசிரி

:D கடைசியில சிவா அண்ணை சிரிச்சதை பார்த்து நான் சிரிக்க... பிறகு அம்மா ஏன் சும்மா கொம்பியூட்டர பார்த்து சிரிச்சுக்கொண்டு இருக்கிறாய் எண்டு சொல்லி என்னப்பாத்து சிரிக்க... பிறகு எங்கட அப்பா அம்மாவ பாத்து சிரிக்க.. பிறகு அம்மா அத அண்ணாவுக்கு கோல் எடுத்து சொல்ல அதக்கேட்டு அண்ணா சிரிக்க... அண்ணாவப்பாத்து அண்ணி சிரிக்க... கடைசியில் ஒட்டுமொத்த கனடாவும் சிரிக்க... இப்பிடியே கதை தொடரிது... :lol:

கிருபன் அண்ணா... எப்பிடி உங்களால இப்பிடியெல்லாம்... :D

அதான் அவருக்கு யாழ் பத்ம பூசன் எண்டுற உயரிய விருது குடுத்து கெளரவிச்சு இருக்கிறோமே!

என்னவோ தெரியேலை தண்ணியடிச்சா கெட்டவன் உருப்படாதவன் எண்டு ஒரு பிழையான கருத்து எங்கடை ஆக்களிட்டை இருக்கு ஒண்டுமில்லாத எத்தனை நசுவர்கள்ளர் இருக்கினம் எண்டு சொல்லட்டோ?... ஒரு குடும்பத்தை கெடுக்காத மட்டில் குடிச்சா அது சிறந்த குடிமகனுக்கு அழகு.....எனக்கு மனுசி வீட்டை வைச்சு குடிக்கிறத்துக்கு விசா கொடுத்திருக்கிறா ஆனபடியால் பிழைப்பு பரவாயில்லை.........தற்செயலா பார்ட்டி எண்டு வெளியிலை அடிச்சிட்டு வந்தால் வீட்டிலை நாலுகாலிலை நிண்டுதான் வரவேற்பாள்..... எல்லாருக்கும் என்ரை மனுசிமாதிரி கிடைக்காட்டி கஷ்டம்தான்

  • கருத்துக்கள உறவுகள்

குடித்துவிட்டு சோகங்களை அழுது தீர்ப்பவர்கள் - உணர்ச்சிக் குடிகாரர்கள்- சாத்திரியார்

காலையிலை அலாரம் வைச்சு எழும்பி குடிக்க தொடங்கி முறியவிடாமல் தொடர்ந்தும் குடிச்சிட்டு நித்திரைக்கு போகேக்குள்ளையும் போத்திலை தலைமாட்டிலை இல்லாட்டி தலகணிக்கு கீழை வைச்சிட்டு ஏதாவது கனவு கண்டு திடுக்கிட்டு எழும்பி தலைமாட்டிலை இருக்கிறதை ஒரு முடறு குடிச்சிட்டு திரும்ப படுக்கிறகுடிகாரர்தான் முதன் முதல் உலகம் சுழல்கிறது எண்டு கண்டு பிடிச்சவை அப்பிடி பெரும் குடிமகன் ஊதாரணம். நம்மடை கு.சா அந்த சோகத்திலைதான் நான் குடிக்கிறன். :lol::D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.