Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தள்ளாடி இராணுவ தளம் மீது ஆட்லறித் தாக்குதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரின் இதயப் பகுதியில் அமைந்துள்ள பிரமாண்டமான தள்ளாடி இராணுவ தளம் மீது விடுதலைப்புலிகள் ஆட்லறித் தாக்குதல் நடத்தியதில் 6 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டு சுமார் 10 பேர் வரை காயமடைந்துள்ளனராம்.

விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி ஆட்லறிகள் மற்றும் மல்ரி பரல் வெடிகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தின. இதனால் மன்னார் நகரமே அதிர்ந்து போயுள்ளது..!

தற்போது கிடைத்த சிங்கள ஊடகங்களின் செய்திகளின் படி இன்று காலை விடுதலைப் புலிகள் நடத்திய மோட்டார்த் தாக்குத்லில் ஆறு ஆக்கிரமிப்புப் படையினர் இறந்துள்ளதுடன் பத்து படையியனர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றது. புலிகளின் ஷெல் தாக்குதலில் தள்ளாடியிலுள்ள சென் செபாஸ்தியான் ஆலயம் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதெனவ

Edited by Janarthanan

மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிறிலங்காப் படையினரின் ஆட்டிலெறிப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

தற்போது கிடைத்த தகவலின் படி 15 க்கு அதிகமான சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.....

தற்போது கிடைத்த பிந்திய குடிசார் தகவல்களின் படி தள்ளாடி தரைமட்டமாகி நிலத்துக்கு கீள தாண்டு போச்சாம்.

ஆமி சென். அந்தனீஸ் தேவாலயத்துக்க இருக்கேக்க கொல்லப்பட்டதாக தமிழ்நெட்டில இருக்கிதே?

சென்.அந்தனீஸ் தேவாலயத்துக்கு அருகில ஆமி இருந்தது ஏன்? கடவுள் பக்தியோ?

தேவாயலம் தாக்குதலிற்கு உள்ளாகியதோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமி சென். அந்தனீஸ் தேவாலயத்துக்க இருக்கேக்க கொல்லப்பட்டதாக தமிழ்நெட்டில இருக்கிதே?

சென்.அந்தனீஸ் தேவாலயத்துக்கு அருகில ஆமி இருந்தது ஏன்? கடவுள் பக்தியோ?

தேவாயலம் தாக்குதலிற்கு உள்ளாகியதோ?

சென் அந்தனீஸ் அல்ல சென் செபஸ்ரியன் தேவாயலம்.

தேவாலயம் அல்ல தாக்குதல் இலக்கு. தாக்குதல் இலக்கு அதன் முகப்பில் கூடியிருந்த இராணுவ நடவடிக்கைக்கு கொண்டு செல்லத் தயாராக இருந்த இராணுவம்.

ஆனால் இராணுவமோ சிரமதானம் செய்யத் தேவாலயத்துக்குப் போனதாம். இவ்வளவு குடிமக்கள் உள்ள இடத்தில் ஏன் இராணுவம் மட்டும் சிரமதானம் செய்ய வேணும்..??! :lol:

தேவாலயத்தை அண்டி இராணுவம் நிலை கொண்டிருந்ததானது தேவாலயத்தின் புனிதத்துக்கு இழுக்கு என்பது மட்டுமன்றி அதுவே தேவாலயம் தேசமடையவும் காரணமானது.

பொதுமக்கள் எவரும் இச்சம்பவத்தில் பாதிக்கப்படவில்லை. எனவே இராணுவத்தின் சிரமதானம் என்பது.. கேள்விக்குறிய ஒன்று. படை நடவடிக்கைக்காக களத்துக்கு கொண்டு செல்லக் கூடியிருந்த படை நிலைகள் மற்றும் இதர நிலைகள் மீதே 130 எம் எம் ஆட்லறிகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன..!

இத்தாக்குதல் சிங்களப் படைகளின் எந்த இராணுவ முகாமும் அவர்களுக்குப் பாதுகாப்பற்றது என்பதை மீண்டும் ஒரு தடவை நினைவுறுத்தி இருக்கும்..! :)

Edited by nedukkalapoovan

புனித அந்தோனியார் ஆலையம் என்பதுதான் சரியானது காரணம் தள்ளாடி முகாமுக்குப் பக்கத்தில் அந்தோனியார் ஆலையம் தான் உண்டு ஆனால் மன்னார் பெருய கடையில் தான் புனித செபத்தியார் ஆலையம் உண்டு எனவே புனித அந்தோனியார் ஆலையம் என்பது தான் சரி

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புனித அந்தோனியார் ஆலையம் என்பதுதான் சரியானது காரணம் தள்ளாடி முகாமுக்குப் பக்கத்தில் அந்தோனியார் ஆலையம் தான் உண்டு ஆனால் மன்னார் பெருய கடையில் தான் புனித செபத்தியார் ஆலையம் உண்டு எனவே புனித அந்தோனியார் ஆலையம் என்பது தான் சரி

நன்றி

Six soldiers who were at the St. Sebastian church premises were killed while another ten received injuries due to this incident.

defence.lk

  • கருத்துக்கள உறவுகள்

According to SLA reports, the LTTE shelling caused damage to St. Antony's church and killed 6 soldiers staying in the premises. The church shares a common fence with the mini-camp.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24627

அண்ணைமார் லேற்றெஸ்ர் ஸ்கோர் 42 பலி 53 காயம்.

ஒவ்வொரு நாளும் 10 புலிகளை கொல்ல வெளிக்கிட்ட பொன்சேக்க முழுசுவார் எண்டு நினைக்கிறன்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24633

இந்த நேர்முகவருணனைக்கு ஆதரவு தருவோர் புலம்பெயர்ந்த மந்தைகளின் மனத்தை கொள்ளை கொண்ட MD பழரசம், யாம் மற்று மீன இறச்சி மசாலா தயாரிப்பாளர்கள்.

சுவை பொலிவு மலிவிற்கு கேட்டு வாங்குங்கள் MD தயாரிப்புகளை.

Edited by kurukaalapoovan

நெடுக்கு இலங்கை ராணுவத்தை நம்பிற அளவு எங்கடை சக கருத்தாளர்களை நம்பத்தயாரில்லை போல!

(நான் நினைக்கிறன் நெடுக்கு இப்ப கூகிள் உலகத்தையும், விகிபீடியாவை திறந்து வைச்சு யோசித்துக் கொண்டிருப்பார் எப்பிடி செபஸ்டியனை அந்தோனியார் ஆக்குவது என்று, ஏனென்றால் ஒரு நாளும் முன்வைத்த காலை பின்வைத்தது கிடையாது! அது பிழை என்று தெரிந்தாலும் கூட) :lol:

குறுக்கருக்கு ஸ்கோர் போடவும் விருப்பம், ஆனா போட விருப்பம் இல்லாத மாதிரி காட்டவும் விருப்பம்!

இதைதான் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்டிறதோ?

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு இலங்கை ராணுவத்தை நம்பிற அளவு எங்கடை சக கருத்தாளர்களை நம்பத்தயாரில்லை போல!

(நான் நினைக்கிறன் நெடுக்கு இப்ப கூகிள் உலகத்தையும், விகிபீடியாவை திறந்து வைச்சு யோசித்துக் கொண்டிருப்பார் எப்பிடி செபஸ்டியனை அந்தோனியார் ஆக்குவது என்று, ஏனென்றால் ஒரு நாளும் முன்வைத்த காலை பின்வைத்தது கிடையாது! அது பிழை என்று தெரிந்தாலும் கூட) :lol:

எனது செய்தியை நான் ரெயிலிமிரரின் அடிப்படையில் எழுதினேன். மேலதிக விபரங்களை பாதுகாப்பமைச்சின் இணையத்தளத்தில் பார்த்தேன். குழப்பம் எனதல்ல. நான் பின்வாங்கவும் முன்னேறவும். போய் உங்க பாதுகாப்பமைச்சைக் கேளுங்கள்.. இல்ல தமிழ்நெட்டைக் கேளுங்கள் எது சரியென்று..! இராணுவ இணையத்தளமும் செபஸ்ரியன் என்றுதான் எழுதியுள்ளது. தமிழ்நெட் மட்டும் மாறி எழுதியுள்ளது..! :)

எனது செய்தியை நான் ரெயிலிமிரரின் அடிப்படையில் எழுதினேன். மேலதிக விபரங்களை பாதுகாப்பமைச்சின் இணையத்தளத்தில் பார்த்தேன். குழப்பம் எனதல்ல. நான் பின்வாங்கவும் முன்னேறவும். போய் உங்க பாதுகாப்பமைச்சைக் கேளுங்கள்.. இல்ல தமிழ்நெட்டைக் கேளுங்கள் எது சரியென்று..! இராணுவ இணையத்தளமும் செபஸ்ரியன் என்றுதான் எழுதியுள்ளது. தமிழ்நெட் மட்டும் மாறி எழுதியுள்ளது..! :lol:

ஆ..............மறுபடியும்! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ..............மறுபடியும்! :)

நீங்கள் உங்கள் எண்ணத்தில் வடித்து வைத்துள்ள நெடுக்காலபோவனை இந்தச் செய்தியை கொண்டு இனம்காட்டனும் என்று பாடுபடுறியளே தவிர... செய்தி மீது அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. காரணம் இரு தரப்பும் ஒரே சம்பவத்துக்கு இரு வேறு வடிவங்களில் தந்த விளக்கத்தை அணுகாமல்.. நெடுக்காலபோவனை அதற்குள் இழுத்து.. விடயத்தை திசை திருப்புறது.. ஆஆஆ... முடியல்ல..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆ... முடியல்ல..! :lol::wub:

கறுப்பியின் தனிப்பாணியை கொப்பி பண்ணுவதை வன்மையாக கண்டிக்கிறேன் :):D

அண்ணைமார் லேற்றெஸ்ர் ஸ்கோர் 42 பலி 53 காயம்.

ஒவ்வொரு நாளும் 10 புலிகளை கொல்ல வெளிக்கிட்ட பொன்சேக்க முழுசுவார் எண்டு நினைக்கிறன்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24633

இந்த நேர்முகவருணனைக்கு ஆதரவு தருவோர் புலம்பெயர்ந்த மந்தைகளின் மனத்தை கொள்ளை கொண்ட MD பழரசம், யாம் மற்று மீன இறச்சி மசாலா தயாரிப்பாளர்கள்.

சுவை பொலிவு மலிவிற்கு கேட்டு வாங்குங்கள் MD தயாரிப்புகளை.

:lol::):D

தள்ளாடியில் படைத்தளம் மீது ஆட்டிலறித் தாக்குதல்: 15 படையினர் பலி! 50 படையினர் காயம்

சிறீலங்காப் படையினரின் தள்ளாடிப் படைத்தளம் மீதும் அதனைச் சூழவுள்ள படை நிலைகள் மீதும் விடுதலைப் புலிகளால் ஆட்டிலறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் தள்ளாடிப் படைத்தளம் மீதான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 50 படையினருக்கு மேல் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் இதைவிட மஅதிகம் எனத் தெரியவருகின்றது. தள்ளாடி எறிகணைத் தாக்குதலை அடுத்து மன்னாருக்கான போக்குவரத்துகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன

http://www.pathivu.com/

அந்தோனியார் ஆலய வளாகத்தில் படையினரின் தற்காலிக முகாம்கள்

மன்னார் மாவட்டத்தில் மிக அண்மை யில் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து அந்தோனியார் ஆலய தேவாலய வளாகத் தில் தற்காலிக படை முகாம்கள் அமைக் கப்பட்டன.

இவ்வாறு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட் திரு அன்ரனி விக்டர் சூசை பி.பி.ஸிக்குத் தெரிவித்தார்.

மன்னார் தள்ளாடியில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தில் படையினர் முகாமிட்டிருந்தனர். அங்கு வழிபாடுகள் நடைபெறுவதில்லை. இதனால் பொது மக்கள் எவரும் ஷெல் தாக்குதலில் பாதிக் கப்பட்டிருக்கமாட்டார்கள்.

தாக்குதலில் சேதமடைந்த தேவாலயத்தைப் பார்வையிடுவதற்காக மன்னார் மாவட்ட கட்டளையிடும் தளபதியைக் கோரினோம். பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி பார்வையிட முடியாது என்று தள பதி கூறினார்.

புனித அந்தோனியார் தேவாலயம் பல் லாயிரக்கணக்கான மக்கள் வந்து வழி படும் ஒரு தேவாலயம். அண்மையில் இடம் பெற்ற போர்ச் சூழலை அடுத்து தேவால யத்திற்கு செவ்வாய்க்கிழமை மட்டும் மக்கள் வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டி ருந்தனர்.

மிக அண்மையில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து அந்த தேவாலயத்தின் வளவினுள் தற் காலிக படைமுகாம்கள் அமைக்கப்பட் டன.

இதனால்இ அங்கு வழிபாடுகள் நடைபெறவில்லை. அதனால்இ ஷெல் தாக்குதல்கள் நடந்தவேளை மதத் தலைவர் களோ அல்லது மக்களோ அங்க இருக்க வில்லை என்றார்.

நன்றி உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறித்த தேவாயலம் மக்களின் பாவனைக்கு மறுக்கப்பட்டிருந்ததும்.. இராணுவத்தின் களஞ்சியமாக செயற்பட்டதும் பிபிசியில் வெளிவந்துள்ளது.

குறித்த தேவாயலத்தின் பெயர் குறித்த மாறுபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் புதினம் தி நேசனையும் பதிவு ரெயிலிமிரர் என்ற சிங்களப் பேரினவாதிகளின் செய்தி பத்திரிகையின் செய்தியையும் பிரசுரிக்க நிற்கிற நேரத்துக்கு தங்கள் சொந்த தாயகத்தின் மக்கள் கருத்தை நேரடியாக உடனுக்குடன் எடுத்து வர முடியவில்லை என்பது இவ்வூடகங்களின் செயற்பாடு குறித்து வேதனைப்பட வைக்கிறதே தவிர...???! :huh::wub::lol:

Sri Lanka troops killed in church

Artillery fired by Tamil Tiger rebels in the north of Sri Lanka has killed six soldiers as they cleaned up a Roman Catholic church, the military says.

The military says about 15 shells hit St Anthony's Church and the area surrounding the building in the village of Thalladi in the Mannar district.

Rebel leaders in the area denied any knowledge of the attack.

The civil war in Sri Lanka has intensified since the government pulled out of a ceasefire last month.

'Extensive damage'

"This is another sacrilegious act of the meanest degree," a statement by the Sri Lankan army said.

"They bombed St Sebastian's Church in Mannar, when pastors, clergy and a team of soldiers were busy clearing the premises.

"About 15 rounds of rebel artillery fire fell on the church, causing extensive damage to the shrine and other areas."

Victor Sosai, a church official in the Mannar region, told the AP news agency that the military had not allowed civilians to worship in the church over the last two months because of increased fighting in the area.

He said that since fighting in the area has intensified, troops at a neighbouring military base have been using it to store supplies.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7240270.stm

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, இப்பவெல்லாம் தங்கட தங்கட ஆயுதங்களப் பாதுகாப்பா அடுக்கி வைக்கிறதுக்குப் பெயர்தான் சிரமதானமாக்கும். பாவம், கோயில் பாக்கப் போன பாதிரியாரையும் பிடிச்சுப் போட்டாங்கள் போல கிடக்கு சிரமதானம் செய்ய !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.