Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒசாமா தோற்பது ஏன்? - முதல் பத்துக் காரணங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Top ten reasons why Osama is losing as a terrorist

Edited by பண்டிதர்

அருமை அருமை

மிகநன்றாகவே செய்யப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்...

என்னால் முடிந்தவரை இதை முன்னுக்கு கொண்டுவர செய்கிரேன்... எனது நன்பர்களுக்கும் இதை சொல்லுவேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் நீங்கள் வேலை செய்யும் இடங்களூடாக group e-mail இல் அங்கத்தவராக இருப்பவர்கள் அங்கு இந்த link ஐ அனுப்புவதன் மூலம் விரைவாக பரவச்செய்யலாம்.

இது எல்லா இனத்தவருக்கும் இலகுவில் விளங்கக் கூடியதும் (ஓரளவுக்கு :lol: ) நகைச்சுவையுடன் கூடியதும் என்பதை கவனத்தில் கொள்க.

youtube இல் ஒருகிழமைக்குத் தான் honours குடுப்பார்கள். அதுக்குப் பிறகு news and politics என்ற பகுதியில் இது வராது. எனவே விரைவாக முன்னுக்கு கொண்டுவரவேண்டும்.

அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எனது பங்களிப்பு என்னால் முடிந்தவரை செய்யப்பட்டுள்ளது. பண்டிதர், உங்கள் முயற்சிக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

எமது காணொளிகளுக்கு மட்டுமல்ல எமக்கு சார்பான காணொளிகளுக்கும் rate பண்ணுங்கள் யூடியுபில் ltte என தேடினால் முன்னுக்கு வருவது எமக்கு எதிரான காணொளிகளே இதற்கு காரணம் நாம் யூடியுபில் பார்வையிட மட்டும் செய்வதே ஆகவே எமக்கு சார்பான காணொளிகளை rate பண்ணுங்கள் அல்லது குறைந்தது கடைசி திறந்து அதனை rate பண்ணுங்கள் ltte என தேடும் 3ம் நபர் எமது போராட்டத்தினை பற்றி தவறான விளக்கங்களையே பெறுகின்றனர் இதனை என் வேற்று நாட்டு நண்பர்கள் சொல்லி அறிந்தேன் எம்மால் முடிந்த ஆக குறைந்த செயலை எமது பரப்புரைகாக செய்வோம்

அது மட்டுமல்ல எமக்கு சார்பான காணொளிகளை தரவேற்றும் நண்பர்களுக்கு ஒரு நன்றியாவது சொல்லி விடுங்கள் அது அவர்களை இன்னும் ஊக்கப்படுத்தி இன்னும் தீவிரமாகசெயற்பட உதவும்

நல்ல ஆரம்பம்! ஆனால் இது போன்ற பிரசாரங்கள் மிக கவனமாக வடிவமைக்கப்பட வேண்டும்.

1** ஒசாமாவை ஒரு பயங்கரவாதியாக சித்தரிக்கும் போது , இதை வாசிக்கும் இஸ்லாமியரின் உணர்வு எப்படி இருக்கும்? மேற்கு நாடுகளின் பயங்கரவாதிகள் பற்றிய வரைவிலக்கணத்தை ஆதரிப்பவர்களாக நம்மை காட்டாதா? நாம் ஏதோ முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் என்ற சிறீலங்காவின் பிரசாரத்துக்கு துணை போகாதா என்பதையும் ஆராயவேண்டும்

2** Top Ten Reasons - Why Osama is Losing as A Terrorist? என்ற தலைப்பின் மூலம் வெல்ல வேண்டுமானால் ஒசாமா செய்ய வேண்டிய 10 விடயங்கள் எவை? என்ற கருத்தும் மறைந்துள்ளதே? இன்னும் தீவிரமாக ஒசாமா செயற்பட வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போல் உள்ளதே (இது இந்த வீடியோவை காட்டிய போது எங்கள் பல்கலைகழகத்தின் மேற்கத்தைய பேராசிரியர் ஒருவர் கேட்ட கேள்வி!)

இது போன்ற தொகுப்புகளில் சொல்லப்பட்டுள்ள செய்தியை எம் போன்ற ஈழத்தவர்கள் சட்டென்று புரிந்து கொள்வார்கள். ஆனால் மேற்கு நாடுகளை சேர்ந்தவர்களும் ஈழப்பிரச்சினையின் தாற்பரியம் சரிவர புரியாதவர்களும் வேறு விதமாக புரிந்து கொள்ள கூடும். ஆகவே அது போன்றவர்கள் தெளிவாக புரிந்து கொள்ளும் வண்ணம் தொகுப்புகளை வடிவமைத்தல் சிறப்பாக இருக்கும். Otherwise result will be counter productive

அதிலும் நமக்கும் சரியென படுகிறதோ இல்லையோ, வேறு கலாச்சாரங்களால் போராளிகளாக கருதப்படுபவர்களை விமர்சிக்கும் போது மிக கவனமாக இருக்கவேண்டும்

ஆனாலும் உங்கள் முயற்சி நல்லதொரு ஆரம்பம். இனிவரும் தொகுப்புகள் மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகள்

Edited by vettri-vel

பண்டிதர் மாமா நன்னா செய்திருக்கிறியள் அருமை வாழ்த்துக்கள்.. :lol: (கண்டிப்பா இதனை பல்கலைகழக மற்றும் வேலை ஸ்தல நண்பர்களுக்கு அனுப்பி வைக்கிறேன் :lol: )...இன்னும் பல ஆக்கங்களை தாருங்கள் வாழ்த்துக்களும் நன்றிகளும்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஆரம்பம்! ஆனால் இது போன்ற பிரசாரங்கள் மிக கவனமாக வடிவமைக்கப்பட வேண்டும்.

...

வணக்கம்,

உங்கள் கருத்துக்கு நன்றி.

உலகின் top 2 பயங்கரவாதிகளில் ஒருவராக George W. Bush ஐ குறீப்பிட்டிருக்கிறேனே (#8th reason). இதனால் கிறிஸ்தவரின்/அமெரிக்கரின் கோபத்துக்கு ஆளாவோமா?

ஒசாமாவை ஆதரித்து செய்ததாக சந்தேகம் கொள்வோர் சற்று ஆராய்ச்சி மூட்டிற்கு சென்று boycottsrilanka channel இலுள்ள மற்றைய வீடியோக்களையும் பார்ப்பார்களேயானால் எல்லா சந்தேகமும் தீர்ந்துவிடும். (அதுவும் ஒருவகையில் நோக்கம் தான்)

இந்த வீடியோ அமெரிக்காவின் most liberal frequency யிலுள்ளவர்களை இலக்குவைத்து செய்தது. முக்கியாமாக david letterman இன் lateshow ரசிகர்களை மனதில் வைத்து செய்தது. lateshow வின் top ten list பார்க்கும் எவரும் இதில் சொல்லப்பட்டுள்ள அடிப்படைக்கருத்தை 100% புரிந்துகொள்வார்கள் என்பது எனது எதிர்பார்ப்பு (lateshow விற்கு மில்லியன் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தான் அமெரிக்காவின் most liberals)

உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு நன்றி.

தொடர்ந்தும் விமர்சனங்களையும் வேறு என்னமாதிரி செய்யலாம் என்ற ஐடியாக்களையும் எதிர்பார்க்கிறேன்.

Edited by பண்டிதர்

வெற்றிவேலின் கருத்தையே என்னுடைய கருத்தும் ஒத்துள்ளது.

ஒசமாவிற்கும் எங்களுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஒசாமாவை நேசிக்கும் கோடிக் கணக்கான இஸ்லாமிய மக்கள் உள்ளனர். ஒசாமா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவை சிக்க வைத்திருப்பது, வேறு பல நாடுகளை அமெரிக்காவிடம் இருந்து காத்துள்ளது.

ஒசாமாவிற்கு எதிரான கருத்துக்களை நாம் பரப்பத் தேவை இல்லை. ஒசாமாவை விட புஸ்தான் பயங்கரவாதி.

நாங்கள் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடும் மக்கள் பக்கம் நிற்போம். புஸ் போன்றவர்களுக்கு மறைமுக பிரச்சாரம் நாம் செய்யத் தேவையில்லை.

#6 - Most Discussed (Today) - News & Politics - Canada

#57 - Most Viewed (Today) - Canada

#1 - Most Viewed (Today) - News & Politics - Canada

#10 - Most Viewed (This Week) - News & Politics - Canada

#28 - Top Favorites (Today) - Canada

#1 - Top Favorites (Today) - News & Politics - Canada

#35 - Top Favorites (Today) - News & Politics

#38 - Top Rated (Today) - Canada

#1 - Top Rated (Today) - News & Politics - Canada

#73 - Top Rated (Today) - News & Politics

#13 - Top Rated (This Week) - News & Politics - Canada

ஈழவன் சொன்னது போல் எமக்கு ஆதரவான பதிவுகளைப் பார்த்தால் அதற்கு rating & favourite & comment மூன்றையும் செய்யவும். இதற்கு உங்களுக்கு நிறைய நேரம் தேவையில்லை. 1 நிமிடத்தில் முடிந்துவிடும். youtube இல் இதுவரை கணக்கில்லாதவர்கள், தயவுசெய்து ஒருமுறை பதிந்துகொள்ளவும். அதன்மூலம் ஈழம் சார்ந்த காணொளிகளைப் பிரபலப்படுத்த உதவமுடியும்.

என்ரை குஞ்சு ராசா சபேசன் நாங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்கள் பக்கம் நிண்டு சுடச் சுட கொழுக்கடை சாப்பிடுவம் வாங்கோ. முதல் எங்கடை விடுதலை அதற்கான அங்கீகாரம் அதை விரைவுபடுத்துவதற்கும் நடைமுறையில் சாத்தியப்படுத்துவதற்குமான வழிவகைகள் பற்றி சிந்திப்பம். ஊர்உலகத்தில இருக்கிற ஆக்கிரமிப்புகளிற்கு எதிராக நாங்கள் கோசம் போட்டு ஒண்டையும் காண முடியாது. புலம்பெயர்ந்த மந்தைகள் 90 வீதம் என்ன 95 வீதமே அமெரிக்க சார்பு நேச மேற்குலகில் தான் பிச்சை எடுத்து கு*டி கழுவி சீவியத்தை ஓட்டுகிறார்கள். அவர்கள் இரைமீட்கிற வேலையை விட்டுட்டு ஏதாவது உருபடியாக செய்ய முடியும் என்றால் அது அமெரிக்கா சார்பு நேச நாடுகளின் நலன்களை எமது தேசிய நலனோடு இணைக்கும் கருத்தியலை உருவாக்குவதாகத்தான் இருக்க முடியம். அதுவே இப்ப கிட்டத்தட்ட முயல் கொம்பாகத்தான் இருக்கு இந்தப் பன்னாடைகளுக்கு. இந்தக் கேவலத்தில "இடது சாரி" "அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக" "ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் மக்கள் பக்கம்" என்று நல்லா வெறுவாய் சப்பலாம். ஆனால் நடை முறையில் நீண்ட கால நோக்கில் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது.

இந்தியா அமெரிக்க "ஏகாதிபத்தியத்திற்கு" எதிராக இயங்கப்போவதில்லை. இந்தியா இந்து சமுத்திர பிராந்தியத்தில் மாத்திரமல்ல மெல்ல மெல்ல ஒரு பரந்த அளவில் அமெரிக்காவின் strategic partner ஆக மாறி வருகிறது. இந்தியாவின் நீண்டகால ரஸ்ய உறவினை பலவித கூக்குவிப்பு திட்டங்கள் நன்கொடைகள் மூலம் அமெரிக்க படிப்படியாக பலவீனப்படுத்தி வருகிறது. இதற்கப்பால் இந்தியாவின் எதிர்கால (இளய) அரசியல் தலமை மேற்குலகம் அமெரிக்க சார்பாகத்தான் இருக்கும். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், பொருளாதாரப் பிணைப்புகள் என்று இந்தியா அமெரிக்க உறவுகள் மேலும் பலமடையுமே அன்றி விரிசல் அடையப் போவதில்லை.

அமெரிக்காவுக்கு இன்று சிறீலங்காவில தளம் வேணும் என்றால் உருவாக்க முடியும். அதை பாதிக்கும் வகையில் அமெரிக்காவின் ஈராக் ஆப்கானின்த்தான் ஈடுபாடுகள் இல்லை. மறுவளமாக ஆப்கானிஸ்தானின் நடவடிக்கைகளிற்கு ஒரு பாதுகாப்பான கடற்படை வசதிகளினுடன் கூடிய பின்தளத்திற்கு சிறீலங்கா பொருத்தமானது. ஒசமா அமெரிக்காவின் வளங்களை முடக்கிப் போட்டார் எண்டா எப்படி AfCom முயற்சிகள் நடக்குது?

சபேசன் அண்ணே.............. :rolleyes::wub::lol::lol::lol::D:lol:

ஏதோ நம்மால் முடிஞ்சதுங்கோ.......

.

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

ஒசமாவிற்கும் எங்களுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஒசாமாவை நேசிக்கும் கோடிக் கணக்கான இஸ்லாமிய மக்கள் உள்ளனர்

.நன்றி:- சபேசன்

அதிலும் நமக்கும் சரியென படுகிறதோ இல்லையோஇ வேறு கலாச்சாரங்களால் போராளிகளாக கருதப்படுபவர்களை விமர்சிக்கும் போது மிக கவனமாக இருக்கவேண்டும்

நன்றி:-வெற்றிவேல்

முதல் எங்கடை விடுதலை அதற்கான அங்கீகாரம் அதை விரைவுபடுத்துவதற்கும் நடைமுறையில் சாத்தியப்படுத்துவதற்குமான வழிவகைகள் பற்றி சிந்திப்பம். ஊர்உலகத்தில இருக்கிற ஆக்கிரமிப்புகளிற்கு எதிராக நாங்கள் கோசம் போட்டு ஒண்டையும் காண முடியாது.

நன்றி:- குறுக்காலபோவார்

இத்தனை கருத்துக்களும் கவனத்தில் எடுக்கப்படவேண்டியவை

நாம் யாரையும் பகைக்கவும் வேண்டாம்

தூக்கிப்பிடிக்கவும் வேண்டாம்

எமக்குத்தேவை எமது விடுதலை

விடுதலை .....விடுதலை.....

ஊரில் சொல்லுமாப்போல்

அதுவும் பல்குத்த உதவலாம்.............

வணக்கம் பண்டியர்.. மன்னிக்கவும் பண்டிதர்..

ஹாஹா... அந்தமாதிரி சூப்பரா இருக்கிது... :wub::lol:

யாழ் கள புத்திஜீவிகள் சும்மா அப்பிடி இப்பிடி சொல்லுவீனம். அதிகள மனசுல போடாதிங்கோ.

சிறீ லங்கா சிங்களவன் ஒசாமாவயும் புலியயும் வச்சு ஒப்பிட்டு பிரசாரம் செய்யுறான். சிங்களவன் யாராவது முஸ்லீம்கள் பற்றி கவலைப்படுவதா தெரிய இல்ல. இதவிட, முஸ்லீம்களே ஒசாமா பற்றி கவலைப்படுவதாய் தெரிய இல்ல. இஞ்ச என்னடா எண்டால் முஸ்லீம்களிண்ட மனநில பாதிக்கப்படும் எண்டு சொல்லி அழுவுறாங்கள். இத யாரிட்ட சொல்லி அழுவுறது?

இவர்கள் முஸ்லீம்களிண்ட மனநிலை எண்டு சொல்லுவது எங்கட ராவுப் ஹக்கீமிண்ட மனநில பற்றியா இல்லாட்டி.... இந்த வீடியோவ பாத்துப்போட்டு பேரியல் அஷ்ரப் கவலைப்படுவா எண்டா?

பெயருக்கு ஏற்றமாதிரி பாண்டியத்துடன் வீடியோவ உருவாக்கி இருக்கிறீங்கள். தொடர்ந்து செய்யுங்கோ. பின்னால் நிண்டு விசில் அடிக்க நாங்கள் இருக்கிறம்..

நான் உதுக்கு ஒரு வீடியோ ரெஸ்போன்ஸ் குடுத்தன் எங்கட யாழ்போரத்தில இருந்து. அத காண இல்ல. நீங்கள் வீடியோ ரெஸ்போன்ஸ டிஸ்ஸேபில் பண்ணி வச்சு இருக்கிறீங்களா?

யூரியூப் வீடியோவ பேஸ்புக்கில எப்பிடி போடுறது எண்டு யாருக்காவது தெரியுமா? நான் இத பேஸ்புக்கில ஒட்டுவம் எண்டு பாத்தன். ஆனா வீடியோவ அப்பிடியே பேஸ்புக்கில எப்பிடி போடுறது எண்டு எனக்கு தெரிய இல்ல. எனக்கு பேஸ் புக் பெரிதாக பரீட்சயம் இல்லை. யாரவது சொல்லித்தந்தால் பேஸ்புக்கில் இந்தவீடியோவ போட்டு பிரச்சாரம் செய்யலாம்.

எங்க எல்லாருமா சேந்து பண்டிதருக்கு ஒரு ஓ போடுங்கோ..

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ...

பி/கு: யாழ் கள புத்திஜீவிகள் உங்கள் கோவணத்தை எதிர்காலத்தில் உருவமுயற்சிக்கக்கூடும். எனவே, ஒண்டுக்கு பதிலாக இரண்டு, மூண்டு கோவணத்தை பிளாஸ்டர் போட்டு சுற்றிக்கட்டவும்...

ஹலோ மிஸ்டர் நெடுக்காலபோவான்... இதுகள நீங்கள் கண்டுகொள்ள மாட்டீங்களோ? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.