Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நட்பு...! காதல்...! கலியாணம்...!

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்,

நட்பு என்று சகீரா அவர்கள் ஒரு கவிதையை எழுதி யாழில் இணைத்து அதுபல நீண்ட விவாதங்களை கண்டது. எமது தரப்பு நியாயத்தை வலுப்படுத்த நானும் ஒரு கவிதையை எழுதி இங்கு இறக்குகின்றேன். தமிழ்கூறும் நல்லுலகம் எனது கவிதையை - கருத்தை வரவேற்கும் என்று நினைக்கின்றேன். எழுத்துப்பிழைகள் ஏதாவது இருந்தால் திருத்தி படிக்கவும். நன்றி! :lol:

உன்னையெனக்கு பிடிச்சிருக்கு! உடலாலும் மட்டுமல்ல

உயிராலும் இணைவதற்கு கரங்கோப்பாய் என்தோழி!

meganneforbessacredrelahn4.jpg

பூவே நான் உனக்கு பூச்சூடி மகிழ்வதற்கு

தகுதியென்ன கேட்கின்றாய்? தயங்காது சொல்லு!

சினேகிதனாய் இருப்பவன் காதலனாய் வருவதில்

தடையென்ன கண்டாய்? தயவுசெய்து சொல்லு!

அன்புடன் பழகியெந்தன் உள்ளத்தை கொள்ளையிட்ட

நண்பியை காதலித்து கைப்பிடித்தல் எனக்கு

கீழ்த்தரமாய் தெரியவில்லை! காதலும் நட்பும்

வேறென்று கூறுவதை மேல்த்தரமாய் அறியவில்லை!

நண்பன் உன்வாழ்க்கை நாயகனாய் வருவதில்

தவறென்ன தோழி? தறுதலைகள் கூறுகின்ற

வியாக்கியானம் கேட்டுப்பின் என்னை வெறுக்காது

சுயமாக கொஞ்சம் சிந்தித்துப்பார் தோழி!

பாகை மானியினால் கோணத்தை குறிப்பெடுத்து

தோகைமயில் உனக்கிவள் எனயாரோ கூற-தலைப்

பாகை அணிந்து கள்ளப்பூசாரி முன்னிலையில்

வாகை சூடிக்கொள்ளும் விசுக்கோத்து நானல்ல!

அன்பைக் காமமென்பார்! அறிவால் வெளுத்து வாங்கி

நண்பியைக் காதலித்தல் பூவுலகில் பாவமென்பார்!

கண்ணே நீ கருவிழியில் காதல் ஒளியேற்றி

நண்பன் எனக்கு நட்புடன் வழிகாட்டு!

நண்பனாய் காதலனாய் நல்லதொரு காவலனாய்

பண்புடன் பழகிநான் உனக்காக வாழ்வேன்!

உன்னையெனக்கு பிடிச்சிருக்கு! உடலாலும் மட்டுமல்ல

உயிராலும் இணைவதற்கு கரங்கோப்பாய் என்தோழி!

தோழியை காதலியாக்கி கைப்பிடிக்க வாழ்த்துக்கள்.

நீங்கள் ஒரு கவிஞனின் மகனா? ஆனால் குரலைக் கேட்டால் அப்படி தோன்றவில்லைத்தான்.

:lol:நல்ல படைப்பு... வாழ்த்துக்கள்.

அன்புடன் பழகியெந்தன் உள்ளத்தை கொள்ளையிட்ட
நண்பியை காதலித்து கைப்பிடித்தல் எனக்கு
கீழ்த்தரமாய் தெரியவில்லை! காதலும் நட்பும்
வேறென்று கூறுவதை மேல்த்தரமாய் அறியவில்லை!
[/codebox]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் முரளி,

உங்கள் நண்பியைக் காதலித்து கைப்பிடித்தல் பாவமன்று,

வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

உங்கள் காதல் விண்ணப்பத்தை உங்கள் நண்பியும் ஏற்றுக் கொண்டால் அவர் உங்கள் காதலியாகவும் மனைவியாகவும் மாற வாய்ப்புண்டு. ஏற்காவிடின் நண்பியாகவே கடைசிவரைக்கும் வாழும் உன்னதத்தை, தொடர்ந்து காதல் என்று பிதற்றி இழக்காமல் இருங்கள். இது வலிப்படுத்த அல்ல நட்பை வளப்படுத்த...

பாகை மானியினால் கோணத்தை குறிப்பெடுத்து

தோகைமயில் உனக்கிவள் எனயாரோ கூற-தலைப்

பாகை அணிந்து கள்ளப்பூசாரி முன்னிலையில்

வாகை சூடிக்கொள்ளும் விசுக்கோத்து நானல்ல!

இங்க யாரார் விசுக்கோத்துகள் இருக்கிறீங்கள்? :lol:

குருவே எனக்கு சொல்லவே இல்ல யாரந்த தோழி...(சா.சா தோழியை போய் எப்படி உடலால இணைய சொல்லி கேட்கிறது இது என்ன கொடுமை :lol: )..என்னால முடியாது..என்னவோ குருவிற்கு பிடித்திருந்தா ஒகே..(நம்மளிற்கு சரி பட்டும் வராது :lol: )..அச்சோ நம்ம தோழி வீட்ட எல்லாம் போறனான் அவையின்ட அம்மா,அப்பா எல்லாம் என் மேல எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கீனம் அத போய்..(கொடுமை நான் செய்ய மாட்டன்).. :lol:

ம்ம்..தோழியை லவ் பண்ணுறது அவரவரை பொறுத்து அல்லொ குருவே இப்ப பாருங்கோ எனக்கு வாழை பழம் பிடிக்கும் குருவிற்கு வாழை பழம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாமா அதை போல தான் இதுவும் பாருங்கோ.. :lol:

இப்ப சொல்லுறன் தீர்ப்பு தோழி காதலியா மாற முடியாது ஆனா காதலி தோழியா மாற முடியும்..(இது எப்படி இருக்கு சும்மா அதிருதிலலல :lol: )..

தறுதலையா இருந்தன் தோழியே

நீ வந்தாய்..

இன்று தலையாகி நிற்கிறேன்

உன்னை காதலித்தால்

மீண்டு நான்

தறுதலை அல்லவா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா..கலைஞன்,

தோழி மேல் காதல் வருவது தப்பில்லை,,,ஆனால் தோழமைக்குள் 'காதல்" நுழைவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. 'நட்புக்காலம்" என்ற படைப்பில் அறிவுமதியின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகின்றது. 'இவள் என் நிச்சயிக்கப்பட்ட நண்பி" என்பார்.

நட்பு வேறு காதல் வேறு!! காதலைவிட நட்பு உன்னதம் என்பேன் நான். ....

'நட்போடு இருந்து காதலாகி இணைந்து பிறகு இரண்டையும் தொலைக்கும் நிலை வருவது மகா கொடுமை!

'காதலி நல்ல தோழியாக இருக்கட்டும்" ...:lol:))

  • தொடங்கியவர்

கருத்துச்சொன்ன எல்லாருக்கும் நன்றிகள்!

ஏற்கனவே சகீராவின் நட்பு என்ற கவிதை விவாதத்தில் பல விசயங்கள் பற்றி விவாதித்துவிட்டோம். இப்போது மீண்டும் இதுபற்றி விரிவாக விவாதம் செய்ய நேரம் இல்லை. கவிதையுடன் சரி. நேரம் கிடைக்கும்போது இதுபற்றி விவாதிக்கின்றேன். :D

தப்பேயில்லை நண்பிக்கும் சம்மதமென்றால். வாழ்த்துக்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தமாம்.பழகினமாம்,கலியாண

ம் கடினமாம் என்று இருங்கோ மாப்ஸ்....வாழ்த்துகள்

  • தொடங்கியவர்

நன்றி கவி, புத்துமாமா...

  • கருத்துக்கள உறவுகள்

நண்பன் உன்வாழ்க்கை நாயகனாய் வருவதில்

தவறென்ன தோழி? தறுதலைகள் கூறுகின்ற

வியாக்கியானம் கேட்டுப்பின் என்னை வெறுக்காது

சுயமாக கொஞ்சம் சிந்தித்துப்பார் தோழி!

தவறொன்றும் இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

பாகை மானியினால் கோணத்தை குறிப்பெடுத்து

தோகைமயில் உனக்கிவள் எனயாரோ கூற-தலைப்

பாகை அணிந்து கள்ளப்பூசாரி முன்னிலையில்

வாகை சூடிக்கொள்ளும் விசுக்கோத்து நானல்ல!

ஆஆஆஆஆ 25 வருஷமாச்சு , நா, நாங்கள் விசுக்கோத்துகள் என்று தெரியாமல் போச்சே குருஜி!!! பரவாயில்லை இறையருள் கூடினால் இன்னும் 75 வருஷம்கூட இப்படி விசுக்கோத்துகளாகவே இருக்கலாம்தான். :):wub:

  • தொடங்கியவர்

நன்றி நு.விலான்.

சுவை,

இப்பவாவது தெரிஞ்சு கொண்டீங்களே நீங்கள் விசுக்கோத்து எண்டு. அதுவே போதும்! :icon_mrgreen:

எண்டாலும்...

விசுக்கோத்தாக இருக்கிறதிலையும் ஒரு வசதி இருக்கிது..

ஏன் விசுக்கோத்தா இருந்து படுகிறபாட்டை அனுபவிச்சா வராது வார்த்தைகள் தெரியுமோ?

  • தொடங்கியவர்

அப்ப விசுக்கோத்து பற்றி ஒரு வெண்பா பாடுங்கோ ஆதி ..!!

விசுக்கோத்து என்றால் என்னங்க? சாப்பிடுற பிஸ்கட்?

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் முரளி. விரைவில் அந்த நண்பியுடன் நீங்கள் திருமண பந்தத்தில் சிறையிருக்க..!

நட்பா இருக்கும் வரைதான் நண்பியின் விளைவு. அவளே துணைவியானாள்.. அது ரகம் இரண்டு. :blink:

என்ன நெடுக்கு ரகம் என்பதன் முன் ஒரு எழுத்தை விட்டுட்டாப்போல எழுதினா வடிவா எழுதோனும் ஆதி எழுதுகிறன் பாருங்க 'ந"ரகம் :blink:

வெண்பாவும் தெரியாது கரும்பாவும் தெரியாது

மசுக்குட்டி தொட்டணைச்சா விசுக்கோத்து வாழ்வுஅது

அரிக்கும் தடிக்கும் அவதியுறும் ஆனந்தம்

சுனைக்கும் சுகமே சொல்

அசப்பில் வெண்பா மாதிரி இருக்கா மாப்பு?

  • தொடங்கியவர்

அவளே துணைவியானாள்.. அது ரகம் இரண்டு.

அது என்ன ரகம் இரண்டு? :blink:

மசுக்குட்டி தொட்டணைச்சா விசுக்கோத்து வாழ்வு அது

அரிக்கும் தடிக்கும் அவதியுறும் ஆனந்தம்

சுனைக்கும் சுகமே சொல்

கவிதை நல்லா இருக்கிது.. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்எழுதிய இரு ரகத்தில் ஒன்று ஆதி கூறிய ந ரகம். மற்றது வி ரகம் ஆக இருக்கலாம்.

ஆதி! அது வெண்பாவா? இல்லை பொன்பா! எப்படி ஆதி இப்படி டக் கெண்டு!

கவி காளிதாசன் பரம்பரையா?

குருஜி! நாமெல்லாம் மாவாயிருந்து குழைபட்டு, இழுபட்டு ,வெந்து,நொந்து,நூலாகி இப்ப விசுக்கோத்தாகப் பயன்படுகிறம்.

நீங்கள் இப்பதான்குழைந்த மாவாக இருக்கிறீங்கள். விரைவில் விசுக்கோத்தாக மாறி சின்ன சின்ன இஞ்சி பிஸ்கட், பூ பிஸ்கட் எல்லாம் பொரித்து வாழ வாழ்த்துகள்!!! :blink::blink:

  • தொடங்கியவர்

குருவுக்கு சீடன் இப்படி சாபம் தருவது கொஞ்சம் கூட நல்லா இல்லை... :icon_mrgreen:

----

மற்றது, உங்களுக்கு ஆதியின் திறமைகள் பற்றி தெரியவில்லை போல இருக்கிது. ஆதி பகிடியாக எழுதினாலும் யாழில் உள்ள மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்று கூறலாம். நான் பல தடவைகள் அவரது கவிதையை படித்து பாராட்டி உள்ளேன். குறிப்பாக மரபுக்கவிதையை ரசிக்கத்தக்க வகையில் யாழில் எழுதக்கூடிய ஒருத்தர் ஆதி..! ஆதியின் புரபைலுக்கு போய் அவர் எழுதியுள்ள கவிதைகளை வாசிச்சு பாருங்கோ.

மேலும்...

நீங்களும் நன்றாக கவிதை எழுதுபவர் தான். உங்கள் கவிதைகளை கவிதை அந்தாதியில் படித்து ரசித்துள்ளேன். :icon_mrgreen:

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குருஜி! இது சாபமல்ல வரம். அதது அந்தந்த காலங்களில் நடைபெறுவது இயல்பானதே! இது என் அனுபவமும்கூட.

மேலும் ஆதி, கந்தப்பு போன்றோரின் திறமையையும், ஆளுமையையும் நீங்கள் உட்பட பல இடங்களில் பார்த்து ரசித்துள்ளேன். :icon_mrgreen::icon_mrgreen:

  • தொடங்கியவர்

ஓமோம் இது சாபம் அல்ல. வரம்தான். இண்டைக்கு யாழில இருக்கிற பிரபலமான ஒருத்தருக்கு இந்த வரம் வாறமாதம் கிடைக்கப்போவதாய் அறிவிச்சு இருக்கிறீனம். அவரும் ஒரு விசுக்கோத்தாக மாற எமது வாழ்த்துகள்! :icon_mrgreen::icon_mrgreen:

கந்தப்பு கவிதை எழுதுறவரா? நீங்கள் வேற யாரையோ சொல்லுறீங்கள் போல இருக்கிது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.