Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகதோழிகளிடையே ஏற்பட்ட போட்டி சிறந்த பெறுபேற்றைப் பெற உதவியது 10 "ஏ' சித்தி பெற்ற மாணவி ஜெயதர்சினி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Tue Apr 8 9:10:00 2008

சகதோழிகளிடையே ஏற்பட்ட போட்டி சிறந்த பெறுபேற்றைப் பெற உதவியது 10 "ஏ' சித்தி பெற்ற மாணவி ஜெயதர்சினி

சகதோழிகளிடையே ஏற்பட்ட போட்டி நாம் சிறந்த பெறு பேறு களைப் பெற உதவியது.

பரீட்சை நடைபெற்ற வேளையில் பரீட்சை எழுதிவிட்டு மண்டபத்தை விட்டுவெளியேறும்போதுஅந்தப் பாடத்திற்கு"ஏ' சித்தி கிடைக்குமென நம்பினேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. எனது நம்பிக்கையினை மென்மேலும் வளர்க்க ஒரு பொறியியலாளராக வந்து மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க வேண்டும்.

ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சையில் பத்து பாடங்களிலும் அதி சிறப்பு பெறுபேறுகளைப் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி செல்வி ஜெயகணேசன் ஜெயதர்சினி மேற்கண்டவாறு தனது விருப்பத்தினை வெளிப்ப டுத்தினார்.

சாவகச்சேரி, கச்சாய் வீதி, உப்புக்கேணியைச் சேர்ந்த ஜெயகணேசன் ஜெயதர்சினி உதயனுக்கு மேலும் தெரிவித்ததாவது:

ஆரம்பக் கல்வியை கைதடி நாவற்குளி அ.த.க. பாடசாலையில் கற்று இடப் பெயர்வு காரணமாக அங்கிருந்து வெளியேறி எனது தந்தையாரின் தொழில் காரணமாக சாவகச்சேரியில் மீளக்குடியமர்ந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியினை மேற்கொண்டேன்.

எனது தந்தை ஒரு விஞ்ஞான பாட ஆசிரியர். தாயார் வீட்டுப் பணி. எனது பெற்றோர் தந்த ஆதரவினால் ஒரு பொறியியலாளராக வரவேண்டுமென்ற எனது இலட்சியத்தின் ஒரு படியினை சுலபமாகத் தாண்ட முடிந்தது.கல்லூரி அதிபர் மற்றும் எனது வகுப்பில் கற்பித்த ஆசிரியர்களும் "ரியூசன்' ஆசிரியர்களும் எனது உயர்வுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தனர். பரீட்சையில் நான் சிறந்த பெறுபேற்றினை பெறவேண்டுமென்ற பலரும் தந்த ஊக்குவிப்புகளை என்னால் மறைக்க முடியாது. அத்துடன் எனது வகுப்பு சினேகி திகளி டையே ஏற்பட்ட போட்டியும் சிறந்த பெறுபேறு கிடைக்க வழி சமைத்தது. என் னுடன் போட்டியிட்டு படித்த சக தோழிக்கும் பத்து பாடங்களிலும்,அதிசிறப்புச் சித்தி கிடைத்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.

சாவகச்சேரி நகரசபையின் பொது நூலகமும், இந்துக் கல்லூரி நூலகமும் எனக்குக் கல்வியில் ஏற்பட்ட சந்தேகங்களைப் போக்கும் ஆசான்களாகத் திகழ்ந்தன.

படிக்கும் வேளையில் எமது கவனத்தை சிதறடிக்கும் குண்டுவெடிப்பு சத்தங்களின் மத்தியிலும் எமது மாணவர்கள் இவ்வருடம் சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்து பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்றார் ஜெயதர்சினி.

http://www.uthayan.com/

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் சகோதரிகளே. நான் படித்த பாடசாலைக்கு பெருமை சேர்த்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.101vg3.gif

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரிகளே!

உங்களுக்கு நல்ல நண்பிகள் கிடைத்தார்கள். நாங்கள் படிக்கின்ற காலத்தில் படித்த நண்பர்கள், மாங்காய் புடுங்கவும், நெல்லிக்காய் புடுங்கவும் தான் போட்டி போட்டமே தவிர, படிக்கின்ற காலத்தில் என்றைக்குமே போட்டி போட்டதில்லை. ஏதோ ஈ அடிக்கின்றதற்குத் தான் கொஞ்சம் போட்டியிருந்தது. அதிலும் நிறையப் பேருக்குப் பெருந்தன்மை... விட்டுத் தருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் சகோதரிகள்.

நன்பர்களே! உங்களின் ஆதங்கம் புரிகின்றது. எனினும் கொஞ்சம் தாமதமாய்ப் போச்சுது!!!! :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் சகோதரிகளே

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் சகோதரிகளே

இம்.. போட்டி போட்டுப் படிச்சிட்டீங்கள் என்றீங்கள்..! வாழ்த்துக்கள்.

நான் எல்லாம் போட்டியே போட்டதில்ல.. ஏன்னா என்னைத் தவிர மிச்ச எல்லாருமே கெட்டிக்காரங்க. :lol:

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் சகோதரிகளே!

உங்களுக்கு நல்ல நண்பிகள் கிடைத்தார்கள். நாங்கள் படிக்கின்ற காலத்தில் படித்த நண்பர்கள், மாங்காய் புடுங்கவும், நெல்லிக்காய் புடுங்கவும் தான் போட்டி போட்டமே தவிர, படிக்கின்ற காலத்தில் என்றைக்குமே போட்டி போட்டதில்லை. ஏதோ ஈ அடிக்கின்றதற்குத் தான் கொஞ்சம் போட்டியிருந்தது. அதிலும் நிறையப் பேருக்குப் பெருந்தன்மை... விட்டுத் தருவார்கள்.

ம்ம்ம்..சா..சா எவ்வளவு பெரிய அறிவாளியை நாம வீணா இழந்து விட்டோம் பாருங்கோ :( ..(தூயவன் நானா கூட அன்னைக்கு யாரும் போட்டி போட்டு இருந்தா :) )..இன்னைக்கு தூயவன் நானா தான்..(முடியல என்னால :( )...அண்ணா இது உங்களுக்கே ஓவரா தெரியல... :wub:

அட ஜம்மு பேபி கூட படிக்கிற காலத்தில நிறைய பேர் போட்டி போட்டவை அல்லோ என்னதிற்கு என்று கேட்கல அது தான் பஸ்ஸில போய் முதல் ஏறுறதிற்கு :( ...(என்ன பார்க்கிறியள் இஸ்ட பார்ட் ஒவ் ட கேம் பாருங்கோ :lol: )...நான் படிக்கிற காலத்தில என்னோட என்ட பிரண்ஸ் எல்லாம் போட்டியில்ல அக்சுவலா அவையின்ட பேரண்ஸ் தான் போட்டி என்றா பாருங்கோ... :D

எனிவே எல்லா சிஸ்டர்சிற்கும் ஜம்மு பேபியின் விசஸ் :) ...வாழ்க வளர்க்க....எனி போட்டி போடாதையுங்கோ என்ன.. :lol: (பிகோஸ் எப்பவுமே போட்டி ஜெயிக்கும் என்று நினைக்க கூடாது பிகோஸ் அதுவே சில நேரம் உங்களை விழுத்தும் பாருங்கோ :( )...

அப்ப நான் வரட்டா!!

பெண்களுக்குள் ஏற்படும் போட்டி நன்மைக்கே என இந்த திரிக்கு தலைப்பு ஏன் வைக்கப்படவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்குள் ஏற்படும் போட்டி நன்மைக்கே என இந்த திரிக்கு தலைப்பு ஏன் வைக்கப்படவில்லை?

ஐயோ ஐயோ.. என்னத்த சொல்ல தூயா பொம்மி.. இது பத்திரிகைக்கு வெளியில சொல்லக்க அப்படித் தான் சொல்லுறது. சொல்லியாகனும். உள்ளுக்க எத்தனை புகைச்சல் என்பது.. நேர இருந்து நோக்கின் புரியும்..! பட் ஆண்கள் இப்படி அல்ல..! அவங்க சொல்லும் செயலும் நேர் நேரானது..! :wub::)

சிறப்பாக சித்தி அடைந்த சிறுமிகளுக்கு வாழ்த்துக்கள்...

பெண்களுக்குள் ஏற்படும் போட்டி நன்மைக்கே என இந்த திரிக்கு தலைப்பு ஏன் வைக்கப்படவில்லை?

தாயகத்திலை எண்டு சேர்த்து போடுங்கோ..

இங்கை லண்டனிலை பாக்கிறமே... பெண்களாலை கத்திக்குத்து எல்லாம் நடக்குது... நேற்று கூட 15 வயசு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது...!

பெண்களுக்கை போட்டி வந்தால் எனக்கு தெரிய குடுமி, விக் எல்லாம் பிடிச்சு இளுத்து சண்டையும் பேடுகிறார்கள்...!! இதை தனி அனுபவங்களாக எழுதணும்...! ரோட்டாலை, பஸ்ஸிலை, நிலகீள் தொடரூந்துல போக முடியல்ல.. ஒரே சம்பங்களா இருக்கு... பெடியள் சண்டை பிடிச்சா அதுக்கும் காரணம் அக்காமாராத்தான் இப்பெல்லாம் இருக்கு...! :):wub::lol:

Edited by தயா

அப்படியா தயா?

எனக்கு தெரிந்து இப்படி எதுவுமே நடந்ததில்லை..அதனால் கருத்து சொல்ல முடியவில்லை..

லண்டனில் அதிகம் தான் போல..

  • 6 years later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரிகளே!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரிகளே!

 

புலவர், என்ன... நித்திரையா? :D

2008´ம் ஆண்டு சித்தியடைந்த மாணவிக்கு, 6 வருஷம் கழித்து வாழ்த்துச் சொல்றீங்கள். :lol:

அந்த மாணவி, இப்போ.....  பொறியியலாளராக எங்கோ வேலை செய்து கொண்டிருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரிகளே!

 

தாங்கமுடியல..... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்கமுடியல..... :D

 

நேற்றிரவு வாசிச்சவுடனை எனக்கு மயக்கமே வந்துட்டுது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜமுனாவின் கருத்தைப் பாத்து விட்டு தான் திகதியை பார்த்தேன். :rolleyes: சரி அந்த மாணவி இப்ப என்ன நிலைமையாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜமுனாவின் கருத்தைப் பாத்து விட்டு தான் திகதியை பார்த்தேன். :rolleyes: சரி அந்த மாணவி இப்ப என்ன நிலைமையாம். :)

 

நானும்.... புலவரை பார்த்து,  ஒரு வாழ்த்தை சொல்லுவம் என்று விட்டு....

மாணவியின் பெயரை பார்ப்போம் என்று, மேலே... எனது பார்வையை செலுத்தினால்.

யாழ்களத்தில், காணாமல் போன சனம் எல்லாம் கருத்து எழுதியிருக்குது.

இதென்ன கோதாரி எண்டு, திகதியை பார்த்தால்..... அது, அரதப் பழசு. :rolleyes:

 

புலவர், எங்களை....  சோதிச்சுப் பார்த்திருக்கிறார் போலை கிடக்கு. :D

 

நான் காலையில்,  உசார் படுத்தாமல் விட்டிருந்தால்.....

கன சனம் வாழ்த்தியிருக்கும் என்று, எனக்கு வடிவாய் தெரியும். :lol:

நானும்.... புலவரை பார்த்து,  ஒரு வாழ்த்தை சொல்லுவம் என்று விட்டு....

மாணவியின் பெயரை பார்ப்போம் என்று, மேலே... எனது பார்வையை செலுத்தினால்.

யாழ்களத்தில், காணாமல் போன சனம் எல்லாம் கருத்து எழுதியிருக்குது.

இதென்ன கோதாரி எண்டு, திகதியை பார்த்தால்..... அது, அரதப் பழசு. :rolleyes:

 

புலவர், எங்களை....  சோதிச்சுப் பார்த்திருக்கிறார் போலை கிடக்கு. :D

 

நான் காலையில்,  உசார் படுத்தாமல் விட்டிருந்தால்.....

கன சனம் வாழ்த்தியிருக்கும் என்று, எனக்கு வடிவாய் தெரியும். :lol:

:D  :D  :D  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
தலைப்பை பதிந்த கறுப்பி கூட,
இரண்டாவது வாழ்த்தும் சொல்லி,
இன்று, மூன்றாவது வாழ்த்தும்..... சொல்லியிருப்பா..... :wub: . :D  :lol:  :icon_mrgreen:  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

10 A  எடுத்த பிள்ளை.. மற்றவர்களுக்கு உதாரணமாக
 எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.

உங்களுக்கெல்லாம் விசயம் தெரியாதா ?  புலவருக்கே நேற்று தானே தெரிந்தது. அந்த பிள்ளை புலவரிடம் ஆரம்பகால கல்வி பயின்றுள்ளது. அதனால் தான் சிஷ்யபிள்ளையை வாழ்த்தியுள்ளார். என்ன தான் தன் முயற்சியில் பிள்ளை நல்ல சித்தி பெற்றிருந்தாலும் புலவரின் வலுவான அடித்தளமே இதற்கு முக்கிய காரணம் என்பதனை இங்கு பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன். சிரிக்காமா வாழ்த்திவிட்டு போங்கோ புலவரை.... சிரிச்சு வயிறு நோவுது...  :D  :lol:  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.