Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுப் படம் பார்க்க போனதுக்கு எனக்கு செருப்பாலை அடிக்கோணும்

Featured Replies

சும்மா இருக்கமாட்டாமால்...எனக்கு இன்றைக்கு முதல் நாளே தசவதாரம் படம் பார்க்க வெளிக்கிட்ட் எனக்கு செருப்பாலை அடிச்சால் மட்டும் காணாது.இன்னும் என்ன என்ன கேடு கெட்டதாலை எல்லாத்தாலையும் அடிக்கோணும் ....எனக்கு உது வேணும் ...உதுக்கு மேலையும் வேணும் ...

தியேட்டருக்கு என்ன இருந்தாலும் அரை மணித்தியாலம் முன்னர் போய் விட்டன்.அந்த தியேட்டர் தொகுதியில் உள்ள டிக்கட் கவுண்டரில் போய் அதிலை இருந்த வெள்ளைக்கார பெட்டை இடம் கேட்டன்.உதுக்களை தமிழ் படம் ஒன்று ஓடுதல்லோ...அதுக்கு ஒரு டிக்கட் தா பிள்ளை என்று ...தமிழில் இல்லை ..அரை குறை ஆங்கிலத்தில் தான் கேட்டன்..பிள்ளை சின்ன சிரிப்போடை என்னை பார்த்துது ....இந்த காட்சிக்கல்ல அடுத்த காட்சிக்கான டிக்கிட் எல்லாம் விற்று தீர்ந்து விட்டது..என்று சொல்லி என்ரை மடியலை நெருப்பை வார்த்துது..கனகாலம் தியேட்டரில் படம் பார்த்து அதுவும் கமலின் படம் என்று பார்க்க போனால் இப்படி இடி என்ரை தலையில் விழும் என்று கண்டனே...

கண்டறியாத இண்டர் நெற்றில் சனம் எல்லா புக் பண்ணி போட்டுதாம்.

அதோடை இப்ப வெளி நாட்டில் கண்ட படி டிக்கட்டின் விலையை நிர்ணயிக்க கட்டுபாடு போலை.

டிக்கட்டின் விலையும் ஓரளவு கட்டுபடியாக இருந்தமையால் குஞ்சும் குருமன் எல்லாம் தியேட்டர் உள்ளட்டு நிரம்பி போட்டுதுகள் போலை...இந்த படத்தை பார்க்க என்ன கோதாரியோ தெரியலை ..பஞ்சாபிக்காரன் போறான் ,துருக்கிக்காரன் போறான் , தசவதாரம் ஹிந்தி படம் இரண்டு கிழமை லேட் என்ற படியால் உள்ள வட இந்தியா ஆக்களும் போயினும் அப்ப எனக்கு என்ன என்று டிக்கட் கிடைக்கும்....தமிழ் படத்துக்கு உந்த மரியாதை கிடைக்குதே என்று ஒரு பக்கம் நல்லாதாக நினைச்சாலும் எனக்கு படம் பார்க்க கிடைக்க இல்லை என்ற கவலையோடு கோப்பி க்கடையில் கோப்பி குடிக்க போனான் அசதியில் தூங்கிவிட்டேன்.

உந்த படத்தை மிஸ் பண்ணினாலும் ...அருமையா படம் அருமையான கனவில் அந்த படத்துக்கு தசவாதரம் என்ற பெயரோ தெரியாது அந்த பட விமர்சனத்தை சொல்லட்டோ கேட்கிறியளே,,அதிலையும் கமல் தான் கதாநாயகன் ,,,இந்த படத்திலை இதிலையும் பத்து வேடம் தான்....

17 நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தின் வடமாரட்சி பிரேதசத்தில கடல் புகுந்த சுனாமியோடு படம் ஆரம்ப மாகிறது .....அந்த சுனாமியோடு கல்லோடு கட்டோடு கட்டப்பட்ட வைணவரும் கரை ஒதுங்கி அதிசயமாக ஒதுங்கி அதிசயமாய உயிர் தப்புகிறார். அந்த வைணவர் பாத்தரத்தில் கமல்.ஒதுங்கிய அவர் வல்லிபுரம் என்ற இடத்தில் ஒரு கிருஸ்ண கோயில் கட்டுகிறார் ...சைவர்கள் அதிகம் வாழும் இடத்தில் இந்த கோயில் அமைந்திருந்தாலும் எந்த எதிர்ப்பும் இல்லாமால் அந்த கோயில் கிருஸ்ண ஆழ்வார் கோயில் என்று அழைக்கபட்டு கொண்டிருந்தது

தீடிரென்று இந்த காலத்துக்கு கதை வந்து சம்பந்தமில்லாமால் லண்டன் வீதிகளில் சண்டை நடக்கிறது அதில் ஈழத்து புலம் பெயர் தமிழ் விஞ்ஞானி கமலுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் ....இதில் இரண்டு புலம் பெயர் இளைஞர் கோஸ்டியினர் ...அந்த இளைஞர் கோஸ்டியின் ஒன்றின் தலைவரும் கமல்தான்.....தீடிரென கதை கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் கதை செல்கிறது அதில் மரிக்காராக கமல் கொச்சிக்கடை முஸ்லிம் தமிழ் நடையில் பேசி அசத்தலாக செய்கிறார்.......மரிக்காரின் நண்பராக தமிழ் கலந்து சிங்களம் பேசும் உபாலியாக அதுவும் கமல் தான்

தீரென்று கதை யாழ்ப்பாணம் செல்கிறது...அதில் கோயில் பிரசங்க நடக்க அதில் பிரசங்கியாக தங்கம்மா அப்பாகுட்டி மாதிரி அந்த வயோதிப மாது வேடத்தில் அதுவும் கமல் தான்

திரைபடத்தில் தீவுப்பகுதியிலிருந்து யாழ்ப்பாண்த்தை படம் பிடித்திருக்கிறார்கள் கடலினூடக யாழ்நகரை பார்க்கிற மாதிரி அழகாக படமாக பட்டிருக்கிறது அழகாகவும் இருக்கிறது .

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் புலம் பெயர் கமிரா கவிஞன் அஜீவனின் திறமை மிக வெளி கொணருப்பட்டிருக்கிறது

இந்த படத்தின் பாடல் கதிர்காம்த்து கந்தா ,,,கதிர்காமத்து கந்தா என்ற பாடலும் ..

கல்லை கண்டால் நாயை காணன் ..நாயை கண்டால் கல்லை காணன் என்ற பாடலும் நன்றாக இருக்கிறது ...மற்ற பாடல்கள் கேட்க கூடியதாக இல்லை

இந்த படத்தின் திரை கதையை கமல் எழுதினாலும் கதை வசனத்தை பாலச்சந்திரன் அவர்கள் மிக நன்றாக எழுதியுள்ளார்

கனவு என்ற படியால் பத்தாவது பாத்திரத்தை இப்படி அமைஞ்சுதோ தெரியவில்லை பதிவர் சின்னக்குட்டியை லண்டனில் வைத்து விஞ்ஞானி கமல் சந்திக்கும் காட்சியில் பேசப்படும் வசனங்கள் அருமையாக உள்ளன....

அந்த சின்னக்குட்டி பாத்திரமும் கமல் தான்

இந்த கனவு படமும் நல்லாய் தான் இருக்கு...இனிமாய் சனம் நெருக்கம் குறைய ஆறுதலாய் தசவதாரம் பார்த்தால் போச்சு

http://sinnakuddy.blogspot.com/2008/06/blog-post_13.html

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

செருப்பு பாவம்ங்க.

  • கருத்துக்கள உறவுகள்

செருப்பு பாவம்ங்க.

அப்ப சப்பாத்தால அடிக்கலாம் தானே ?

சித்தப்பா... கற்பனை அந்தமாதிரி இருக்கிது. ஆரம்பத்தில வாசிக்கேக்க உண்மையான கதையோ எண்டு திகைப்பா இருந்திச்சிது. பிறகு இடைவழியில தான் லூட்டா பண்ணி இருக்கிறீங்கள் எண்டு கண்டுபிடிச்சன். அருமை அருமை :unsure:

அருமையான கற்பனை

உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் போது எப்போதும் சுவாரசியம் குறைவதில்லை. பாராட்டுக்கள்!!!

சில வருடங்களுக்கு பிறகு தியேட்டருக்கு சென்று பார்க்கலாம் என்று நினைத்துள்ள படம் இது. உங்கள் விமர்சனம் ஆரம்பத்தில் பயமுறுத்திவிட்டது.

பின் வாசித்து கொண்டு போகும் போது தான் புரிந்தது சின்னக்குடியாரின் எண்ணக்குடிலில் தோன்றிய வண்ணத்த்திரை காவியம் இதுவென்று :unsure:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கற்பனை சின்னக்குட்டி. பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சின்னகுட்டியர் அடுத்த முறை கனவு காணும் பொழுது இப்படி காணுங்கோ.அதாவது 17 ஆம் நூற்றண்டில் சுனாமி அடிக்கும் பொழுது தமிழ் பெளத்த துறவி அடிபட்டுவந்ததாகவும் அவர் நாகதீபத்தில் தமிழ்விகாரை அமைத்து நாகருக்கு(பூர்வீககுடிகள்)தமி

ழில் பெளத்தம் போதித்ததாகவும்.........

கனவு நல்லாய் இருக்குது.அதுசரி அப்துல்கலாம் கனவு கானும் படி சொன்னபடியால் நீங்களும் கனவு கண்டனீங்கள் போல...

சின்னக்குட்டி அண்ணை,

பேசாமல் நீங்கள் ஒரு படத்துக்கு கதை வசனம் எழுதி இயக்கலாமே.

அவன் அவன் உலகத்திலை இருக்கிற எல்லா மொழிகளிலையும் களவெடுத்துப் படமெடுக்கிறான். நீங்கள் சுயமாச் சிந்திச்சிருக்கிறியள்.

சின்னக்குட்டி

வழமைபோல் அசத்திட்டீங்க. வாழ்த்துக்கள். :unsure::unsure:

ஆனாலும் ஒரு சின்னக் கண்டனம். தங்கம்மா அப்பாக்குட்டி போல் ஒரு பாத்திரப்படைப்பை உருவாக்கிய நீங்கள் மில்க்வைற் கனகராசாவின் பாத்திரத்தை உருவாக்காமல் விட்டுவிட்டீர்கள். ஏன்?? பொதுவாகவே தங்கம்மா அப்பாக்குட்டி ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டால் அங்கு கனகசாசாவும் வந்துவிடுவார். அதுபோல் கனகராசா ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டால் அங்கு தங்கம்மா அப்பாக்குட்டியும் பிரசன்னமாய் இருப்பார். அப்படியிருக்க நீங்க எப்படி அவரின் பாத்திரத்தை கைவிட முடியும்?? :unsure::unsure:

எல்லாரும் இதக் கனவெண்டே நினைச்சனிங்கள்...

சின்னக்குட்டி அண்ணை படத்தை பார்த்திட்டு.. தான் பட்ட எரிச்சலை நேர எழுதி..அவங்கட மனச நோகடிக்க வேண்டாமே எண்டு பாத்திரங்களோட.. இடத்தோட பெயரை மாத்தி எழுதி இருக்கார்..

விசயம் ஒண்டுதான்..

ஓம்தானே அண்ணா...

உது என்னமோ தசவதாரத்துக்கு கடி போல எல்லோ தெரியுது. :unsure:

சின்னக்குட்டி தாத்தா நல்லா கனவு கண்டு இருக்கிறியள் அது என்ன கோப்பி குடிச்ச உடனே உறங்கிட்டியள் அதுவும் கனவு காணும் அளவுக்கு :unsure::unsure:

  • தொடங்கியவர்

வணக்கம் ...கறுப்பி,தமிழ்சிறி, முரளி,லீ,காவியா,விகடவி,வெற்றி

Edited by sinnakuddy

சின்னக்குட்டி

நான் தஸவதாரம் என்று வாசித்துக் கொண்டு போகும் போது

சிறைச்சாலை படம் போல மனதுக்குள் சறுக்கியது

ஏமாற்றினாலும்

நல்லா ஏமாற்றிற்றீங்க..........

சபாஸ்!!!

இது படம்தான் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா சின்னக்குட்டி!

கலையென்பது எல்லோருக்கும் வருவதில்லை.உங்கள் கதைகளில் அதிக நளினம் உள்ளது.அது எல்லோருக்கும் விளங்குமா என்பது சந்தேகம்?

உங்கள் கதைகளை மேயும் ஆயிரங்களில் நானுமொருவன்.

  • தொடங்கியவர்

வணக்கம் ..அஜீவன்,...தம்பி கு.சா...பதிவை பார்த்து கருத்து கூறி பாராட்டியதுக்கு மிக்க நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமர்சனத்தை முதல்லையே படிச்சிரந்தால் அந்தக் கண்றாவியை நான் பாக்ககப்போயிருந்திருக்க மாட்டடன்..இந்த சனி ஞாயிறு லண்டனிலை நிண்டனான் சனியிரவு சினேகிதர்கள் கேட்டாங்கள் கமலின்ரை தசாவதாரம் ஓடுது பாப்பமோ எண்டு. எனக்கு கமலின்ரை நடிப்பு பிடிக்கும் எண்டதாலை சரி பேவம் எண்டு போய் இருந்தால்.கமல் முதலிலை ஆழ்வாராக வாற காட்சிக்குப்பிறகு . அமெரிக்காவிலை இருந்து இந்தியாவுக்கு ஓடுறார்...ஓடுறார்.....அதைப்பாத்த

ு நான் களைச்சுப்போனன். கடைசியாய்படம் முடிஞ்சு வெளியிலை வந்தால் பிறகு நண்பனிட்டை சொன்னன். என்னடாப்பா கமல் இந்த ஓட்டம் ஓடுறான் பேசாமல் முதல் 10 நிமிசத்தோடை எழும்பிப் போயிருக்கலாமெண்டன் . அப்பதான் அவன் என்னட்டை குருவி படம் பாாத்திட்டியா எண்டு கேட்டான் . இல்லையெண்டன் .அப்பிடியா அப்ப தயவு செய்து பாக்காதை அதிலை விஜய் இதைவிட வேமாய் ஓடுறான் எண்டான். <_<:lol:

Edited by sathiri

இந்த விமர்சனத்தை முதல்லையே படிச்சிரந்தால் அந்தக் கண்றாவியை நான் பாக்ககப்போயிருந்திருக்க மாட்டடன்..இந்த சனி ஞாயிறு லண்டனிலை நிண்டனான் சனியிரவு சினேகிதர்கள் கேட்டாங்கள் கமலின்ரை தசாவதாரம் ஓடுது பாப்பமோ எண்டு. எனக்கு கமலின்ரை நடிப்பு பிடிக்கும் எண்டதாலை சரி பேவம் எண்டு போய் இருந்தால்.கமல் முதலிலை ஆழ்வாராக வாற காட்சிக்குப்பிறகு . அமெரிக்காவிலை இருந்து இந்தியாவுக்கு ஓடுறார்...ஓடுறார்.....அதைப்பாத்த

ு நான் களைச்சுப்போனன். கடைசியாய்படம் முடிஞ்சு வெளியிலை வந்தால் பிறகு நண்பனிட்டை சொன்னன். என்னடாப்பா கமல் இந்த ஓட்டம் ஓடுறான் பேசாமல் முதல் 10 நிமிசத்தோடை எழும்பிப் போயிருக்கலாமெண்டன் . அப்பதான் அவன் என்னட்டை குருவி படம் பாாத்திட்டியா எண்டு கேட்டான் . இல்லையெண்டன் .அப்பிடியா அப்ப தயவு செய்து பாக்காதை அதிலை விஜய் இதைவிட வேமாய் ஓடுறான் எண்டான். <_<:lol:

சாத்திரி அண்ணா..உங்கட நண்பன் சொன்னது உண்மை.மக்கள் விபரமானாலும்.. சினிமாத் தரத்தை இன்னும் குப்பையாக்கி மாசாலா படத்தையே எடுப்பது கவலைக்குரியது...

படத்தைவிட உங்கள் நண்பனின் நகைச்சுவை சிறப்பு ஒரே வரியில் உண்மையை உறைக்க வைத்ததார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விமர்சனத்தை முதல்லையே படிச்சிரந்தால் அந்தக் கண்றாவியை நான் பாக்ககப்போயிருந்திருக்க மாட்டடன்..இந்த சனி ஞாயிறு லண்டனிலை நிண்டனான் சனியிரவு சினேகிதர்கள் கேட்டாங்கள் கமலின்ரை தசாவதாரம் ஓடுது பாப்பமோ எண்டு. எனக்கு கமலின்ரை நடிப்பு பிடிக்கும் எண்டதாலை சரி பேவம் எண்டு போய் இருந்தால்.கமல் முதலிலை ஆழ்வாராக வாற காட்சிக்குப்பிறகு . அமெரிக்காவிலை இருந்து இந்தியாவுக்கு ஓடுறார்...ஓடுறார்.....அதைப்பாத்த

ு நான் களைச்சுப்போனன். கடைசியாய்படம் முடிஞ்சு வெளியிலை வந்தால் பிறகு நண்பனிட்டை சொன்னன். என்னடாப்பா கமல் இந்த ஓட்டம் ஓடுறான் பேசாமல் முதல் 10 நிமிசத்தோடை எழும்பிப் போயிருக்கலாமெண்டன் . அப்பதான் அவன் என்னட்டை குருவி படம் பாாத்திட்டியா எண்டு கேட்டான் . இல்லையெண்டன் .அப்பிடியா அப்ப தயவு செய்து பாக்காதை அதிலை விஜய் இதைவிட வேமாய் ஓடுறான் எண்டான். :(:(

:lol::lol::lol:

இந்த விமர்சனத்தை முதல்லையே படிச்சிரந்தால் அந்தக் கண்றாவியை நான் பாக்ககப்போயிருந்திருக்க மாட்டடன்..இந்த சனி ஞாயிறு லண்டனிலை நிண்டனான் சனியிரவு சினேகிதர்கள் கேட்டாங்கள் கமலின்ரை தசாவதாரம் ஓடுது பாப்பமோ எண்டு. எனக்கு கமலின்ரை நடிப்பு பிடிக்கும் எண்டதாலை சரி பேவம் எண்டு போய் இருந்தால்.கமல் முதலிலை ஆழ்வாராக வாற காட்சிக்குப்பிறகு . அமெரிக்காவிலை இருந்து இந்தியாவுக்கு ஓடுறார்...ஓடுறார்..... அதைப்பாத்து நான் களைச்சுப்போனன். கடைசியாய்படம் முடிஞ்சு வெளியிலை வந்தால் பிறகு நண்பனிட்டை சொன்னன். என்னடாப்பா கமல் இந்த ஓட்டம் ஓடுறான் பேசாமல் முதல் 10 நிமிசத்தோடை எழும்பிப் போயிருக்கலாமெண்டன் . அப்பதான் அவன் என்னட்டை குருவி படம் பாாத்திட்டியா எண்டு கேட்டான் . இல்லையெண்டன் .அப்பிடியா அப்ப தயவு செய்து பாக்காதை அதிலை விஜய் இதைவிட வேமாய் ஓடுறான் எண்டான். :(:(

கலிகாலம் எண்டால் இப்பிடித்தான் சாத்திரி அண்ணை... ஒரே ஓட்டமா ஓடிக்கொண்டு இருக்கவேணும். அதான் எங்கட பெடியள் ஓடுறாங்கள் படத்திலயும்.. :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.