Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தாலியில் 28 விடுதலைப்புலிகள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தாலியில் பல இடங்களில் 28 தமிழ் புலிகள் என சந்தேகிகப்படுபவர்களை கைது செய்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Italian police arrest 28 suspected Tamil Tigers

NAPLES, Italy (Reuters) - Twenty-eight suspected members of Sri Lanka's Tamil Tigers rebel group have been arrested in Italy, anti-terrorist police said on Tuesday.

A police statement said the 28, all from Sri Lanka, were detained in several cities.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebel movement is fighting for an independent state in the north and east of Sri Lanka.

More details of the operation, which involved about 200 police agents, were expected to be issued later on Wednesday.

(Editing by Andrew Dobbie)

http://news.yahoo.com/s/nm/20080618/wl_nm/...anka_arrests_dc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Police arrest 33 suspected Tamil Tigers in cities across Italy

The Associated PressPublished: June 18, 2008

ROME: Police say they have arrested 33 suspected members of Sri Lanka's Tamil Tiger rebel group in pre-dawn raids across Italy.

Police in Naples said Wednesday that the suspects were picked up in cities including Rome, Genoa, Bologna, Naples and Palermo at the end of a two-year investigation. Two more were being sought in Naples.

Police believe the suspects, all Sri Lankan citizens, extorted money from their fellow nationals in the various cities and sent it home to finance the rebel group.

Luigi Bonacura of the Naples police said the operation effectively dismantles the Tamil Tiger network in Italy.

The Tamil Tiger rebels have fought since 1983 to create an independent homeland for Sri Lanka's ethnic minority Tamils.

http://www.iht.com/articles/ap/2008/06/18/...ger-Arrests.php

Italian police arrest 28 Tamils on terror charges

ROME (AFP) - Italian police arrested 28 Sri Lankan Tamils on Wednesday on charges of aiding and abetting the outlawed Tamil Tigers group fighting a separatist insurgency against the government in Colombo.

Some 200 police were involved in the operation which saw raids across the country from Naples in the south to Bologna in the north, and also on the island of Sicily, an official with the police counter-terrorism cell told AFP.

The 28 people arrested were suspected of membership of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and of providing funding for the group, the official said.

The LTTE is proscribed as a terrorist organisation by the European Union.

The Tigers have been fighting for a separate homeland for the Tamil minority in Sri Lanka since 1972. Tens of thousands have died in the conflict.

http://news.yahoo.com/s/afp/20080618/wl_as...attackssrilanka

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா, பிரான்ஸ் வரிசையில் இத்தாலியும் இப்போ இந்த கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஏற்கனவே கனடாவும் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

ஒரு பக்கம் சிறீலங்கா அரசு மீது மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களையும், விடுதலைப்புலிகள் மீது இவ்வாறான தடைகளையும் ஆதரவாளர்கள் மீது கைதுகளையும் பிரயோகித்து இரு தரப்பையும் தமது வழிக்கு கொண்டு வர அமெரிக்க சார்பு மேற்குலகம் முனைவதாகவே தென்படுகிறது..!

புலம்பெயர் தமிழ் மக்கள் எவ்வாறான அழுத்தங்கள் வரினும்... சோர்ந்துவிடாது, மேற்குலக நடவடிக்கைகளை நெழிவுசுழிவுகளோடு எதிர் கொண்டு தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொய்வின்றி நகர்வதை உறுதி செய்து கொள்வதே இன்றைய வரலாற்றுக் கடமையாகும். அதுவே எந்த ஒரு சக்தியின் அடிபணிதலுக்கும் அப்பால் எமது தாயக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியில் 33 தமிழர்கள் கைது

புதன், 18 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்]

இத்தாலிய காவல்துறையினரால் 33 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவர்களை விடுதலைப்புலிகள் என சந்தேகிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

http://www.pathivu.com/?p=1288

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பக்கம் சிறீலங்கா அரசு மீது மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களையும், விடுதலைப்புலிகள் மீது இவ்வாறான தடைகளையும் ஆதரவாளர்கள் மீது கைதுகளையும் பிரயோகித்து இரு தரப்பையும் தமது வழிக்கு கொண்டு வர அமெரிக்க சார்பு மேற்குலகம் முனைவதாகவே தென்படுகிறது..!

மன்னிக்கோணும் நெடுக்குசாமி!இந்த மரமண்டைக்கு உந்த வசனம் விளங்கமாட்டன் எண்டுது.அதை ஒருக்கால் அக்குவேறை ஆணிவேறையாய் விளங்கப்படுத்தி சொல்லுறியளே :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழர்கள் கொண்டிருக்கின்ற உறுதித்தன்மையில் தான் தமிழீழப் போராட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது. இத்தனை தடைகள் வரினும், அத் தடைகளுக்கு மத்தியில் நின்று தொடர்ந்து நாம் ஆதரவு கொடுத்தோமானால் எம்மவர்களைக் கண்டு நிச்சயம் உலகம் ஆச்சரியத்தோடு பார்க்கும். இவ்வளவு தடைகள் கொடுத்தும், விடாது இருக்கின்றார்களே என்று, ஒருநாள் உலகம் எம் மக்களின் தியாகத்தையும், அர்ப்பாணிப்புக்களையும் கண்டு பணியும்.

அதற்காக நாம் தொடர்ந்து எம் ஆதரவினை மேலும், மேலும் காட்ட வேண்டும். ஈழத்தில் எதிரியோடு களமாடி, உயிர்த்தியாகம் செய்கின்றபோது, இந்தத் தடைகள், மிரட்டல்கள் எமக்குப் பெரியதொன்றல்ல என்பதை இவ்நாட்டு அரசாங்கங்கள் புரிந்து கொள்ளவேண்டும். மரணமே பெரிதல்ல, அதையே எதிர்த்து நம்மவர்கள் போராடும்போது, இந்த மிரட்டல்கள் எம்மை எதையும் செய்துவிடாது எனக் காட்ட அனைத்துத் தமிழ்மக்களு;ம, விடுதலைப்போருக்கான ஆதரவைக் காட்ட வேண்டும்.

சில விடயங்களை ஒரே மக்களை செய்வதால் தான் இப்படி முடக்க முயல்கின்றனர். கூட்ட ஒழுங்குபடுத்தல்போன்றவற்றை ஒரு தரப்பம், இதரவிடயங்களை மற்றவர்களும் பொறுப்பெடுத்து புத்திசாலித்தனமாகச் செய்தாக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கோணும் நெடுக்குசாமி!இந்த மரமண்டைக்கு உந்த வசனம் விளங்கமாட்டன் எண்டுது.அதை ஒருக்கால் அக்குவேறை ஆணிவேறையாய் விளங்கப்படுத்தி சொல்லுறியளே :lol:

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தான் இப்போ அமெரிக்காவினதும் நேட்டோவினதும் பார்வை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஈரான் மற்றும் சீனா. அதிலும் சீனாவின் ஆதிக்கம் பிராந்தியத்தில் தலையெடுப்பது அமெரிக்காவுக்கு கசிக்கின்ற விடயம். அதேபோல இந்தியாவின் வளர்ச்சியும் மேற்குலகுக்கு ஒன்றும் பூரண இசைவானதல்ல.

இந்த நிலையில் சிறீலங்கா தம்மை விட்டு சீனா பக்கமோ அல்லது ஆசிய பிராந்தியத்தில் தமக்கு எதிரான பக்கமோ ஓடாதிருக்க அதன்மீது ஓரளவான அழுத்தத்தைக் கொடுக்க மனித உரிமை மீறல்களையும்.. விடுதலைப்புலிகள் விவகாரத்தையும் மேற்குலகம் தனது நலனுக்காக இலாவகமாகக் கையாள்கிறது.

விடுதலைப்புலிகள் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனிமைப்பட்டுத்தப்பட்டுள்ள நிலையை தனக்கு சாதமாக்கிக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்துவதாக சிறீலங்காவுக்கு ஒருப்பக்கம் ஆதரவுக் கருத்தையும் இன்னொரு பக்கம் சிறீலங்கா தங்களை மீறிப்போனால் மனித உரிமைகள் விவவாகரம் பூதாகரமாகும் என்பதையும் மேற்குலகம் தனது இராணுவ பொருளாதார வலிமையின் அடிப்படையில் சொல்லிக் கொண்டிருக்கிறது.

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்களையும் முற்றாக பயங்கரவாதிகள் என்று கூறிக் கொண்டு அழித்தொழிக்க நேரடி நடவடிக்கைகளை நேட்டோ எடுக்கப் போவதில்லை. அதற்கு அவசியம் இல்லை. ஆனால் தாங்கள் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு புலிகளின் வலிமையை தாங்களே தீர்மானிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக.. புலிகளின் நிதி வருவாயையும் ஆயுதபலப்படுத்தலையும் மட்டுப்படுத்த நினைக்கிறது மேற்குலகம். புலிகளின் சுதந்திர செயற்பாட்டை தடைகள் மூலம் கட்டுப்படுத்தி.. அவர்கள் மீது தம்மால் இயன்ற அழுத்தங்களைக் கொடுத்து தமது உத்தரவுக்கு அமைய செயற்படக் கூடிய நிலையில் அவர்களை பேணுவதே மேற்குலகின் இன்றைய நிலைப்பாடு.

இது சிறீலங்கா எப்போதும் மேற்குலகம் மீது தங்கி இருக்கச் செய்ய அவசியமானதாகும்.

அமெரிக்க சார்பு மேற்குலக நாடுகளுக்கு தமிழ் மக்கள் உரிமை பெற்று வாழ்ந்தால் என்ன விட்டால் என்ன.. தமது நலனுக்காக சண்டையிடும் இரு தரப்பையும் பாவிக்கக் கூடிய நிலையில் அவர்களை வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் அவர்களின் முதன்மை நோக்கம். புலிகள் பூரணமாக பலவீனம் அடையவும் கூடாது.. தம் சொல்லை மிஞ்சும் அளவுக்கு பலம் பெறவும் கூடாது. சிறீலங்கா தம் சொல்வழி போக வேண்டிய நிலையில் இருக்க வேண்டும்.. சொல்வழி மீறிப் போனால் தம்மோட மோசமாக மோத வேண்டி ஏற்படும் என்று அதற்கும் எச்சரிக்கைகள் போகின்றன.

ஆக பிராந்தியத்தில் சீனாவின்.. ஈரானின்.. இந்தியாவின் போக்குக்கு ஏற்ப மேற்குலம் செய்ய உள்ள காய்நகர்த்தலுக்கு எமது போராட்டம் பகடைக்காய் ஆக வேண்டும். இன்றேல் அது ஆபத்தை எதிர்கொள்ளும் என்பதுதான் மேற்குலகின் நிலை. பலஸ்தீனப் பிரச்சனையும் இவ்வகையில் மேற்குலகால் கையாளப்பட்டு வருவதனாலேயே அதுவும் தீர்க்கப்படக் கூடாத பிரச்சனை ஆகி இருக்கிறது. ரஷ்சியாவைப் பலப்படுத்தி தம்மை பலவீனப்படுத்தக் கூடிய கொசவோ போன்ற பிரச்சனைகளை இராணுவத் தலையீடுகள் மூலம் உடனடியாகத் தீர்த்து வைத்தமை அமெரிக்க நேட்டோ சார்பு மேற்குலகின் நலனுக்கே அன்றி மனித உரிமை அக்கறையில் அல்ல..! :rolleyes:

உங்களை அகதியாக உள்வாங்கி வைத்திருப்பதும் ஒன்றும் மனித உரிமைக் காப்புக்காக அல்ல. மனித வலுவுக்காக.. தங்களின் கண்காணிப்பை கட்டுப்பாடுகளை தங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள ஆகும்..!

மேற்குலக எஜமானர்கள் வைன் போத்தல்களோட இருந்து என்ன சிந்திப்பார்கள் என்று தெரியாத முட்டாள்கள் அல்ல தமிழர்கள்..! :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப் போன்ற பாமரமக்களும் விளங்கிக்கொள்ளுமளவிற்கு விரிவான விளக்கம் தந்த நெடுக்குசாமிக்கு நன்றிகள். :rolleyes:

மனித உரிமைகளை ஒரு அரசு மீறும் போது அதற்கு ஏற்படும் அழுத்தங்களும், அதனையே அரசு சாராத இராணுவ அமைப்பு செய்யும் போது ஏற்படும் அழுத்தங்களும் முற்றிலும் வேறானவை.

புலிகள் பேரூந்துகளிலும், பொது மக்களை இலக்கு வைத்து பொது இடங்களிலும் குண்டு வைத்துக் கொண்டு தம்மை ஒரு விடுதலை அமைப்பாக ஒரு போதுமே அடையாளப் படுத்த முடியாது

இம் முறையும் நாம் இலங்கை அரசு மீது ஏற்பட்டு வரும் சர்வதேச எதிர்ப்பை சரியாக இனம் காணவும், பயன் படுத்திக் கொள்ளவும் இல்லை.

"அங்கை குண்டு வைத்தால் இங்கவும் பெடியல் குண்டு வைத்து பாடம் புகட்டுவாங்கள்" என்று சொல்லி சந்தோஷ பட மட்டும் தான் முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

அப்ப நீங்களும் சொல்கிறீர்கள்

" பெடியள் உந்த ஆமிக்கு அடிக்காமல், அவன் தாறதைத் தரட்டுமெண்டு வாங்கிக் கொண்டு பேசாமல் இருந்திருந்தால் உந்தப் பிரச்சினைகள் ஒண்டும் வந்திராது"

என்று??

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்ஸில குண்டு வைக்காத பல அமைப்புக்களும் அமெரிக்காவின்... ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கே. அவை எப்படி வந்தன..???!

பஸ்ஸில குண்டு வைச்ச அமைப்புக்கள் பயங்கரவாதப் பட்டியலில் இருந்தும் அமெரிக்க தொடர்புகள் பேணப்படும் நிலையில் இருக்கின்றனவே அது எப்படியானது..???!

பஸ் குண்டு வெடிப்புக்கள் சாட்டே தவிர.. நடவடிக்கைகள்.. பிராந்தியத்தில் அவர்களின் நலன் வேண்டியதாகவும் புலிகளின் பிராந்திய செல்வாக்குடன் தங்கியதுவுமாகவே உள்ளன.

அல்குவைடா அமெரிக்காவில் ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டதற்கு காரணம் இருக்கு.. அது சர்வதேச அளவில் வன்முறைகளைச் செய்தது.

ஆனால் தமிழர் போராட்டம் சிறீலங்கா அரசுக்கு எதிராக மட்டுமே அமைந்துள்ளது. அமெரிக்காவுக்கோ அல்லது சர்வதேசத்துக்கோ அச்சுறுத்தலாக இருக்கவில்லையே...???! அப்படி இருக்க.. ஏன் அல்குவைடா பாணியில்.. புலிகளை நடத்த வேண்டும்..???! :)

பிரபா,

ஆமி தாரதை வாங்கி கொண்டு சும்மா இருங்கள் என்று நான் கூறவில்லை, அப்படி நீங்கள் கருதும் அளவிற்கு என் கருத்து அமையவும் இல்லை.

வலி தருகின்ற இராணுவத்திற்கு எதிரான தாக்குதலும், அதனை கட்டமைத்து ஏவி விடும் தலைமைத்துவமும், சிங்கள இராணுவ கட்டமைப்பும் அழிக்கப் பட வேண்டும், அதன் மூலம் மட்டுமே தமிழ் மக்கள் மீதான் சகல வன்முறைகளும், தமிழ் நிலம் மீதான ஆக்கிரமிப்பும் நிறுத்தப் படும்

ஆனால் பொது மக்கள் மீதான தாக்குதல் மூலம் இது சாத்தியப்படும் என்று யாராவது கருதினால், நிச்சயம் அது தவறான கருத்து என்றே கூறுவேன். எம் தமிழ் மக்கள் பிரயாணம் செய்யும் வாகனங்கள் மீது கிளைமோர் வைக்கும் இராணுவம் கட்டுப்பத்தையிழும், பிலியந்தலையிலும் அல்ல முகாமிட்டு இருகின்றான்... கடைசி காவலரணுகு அப்பால், அருகில் தான் இருக்கின்றான்

எம் போராட்டத்தின் நியாயாதிக்கமே, சிங்கள அரசுகளின் உரிமை மறுப்பிழும், அதனை கேட்ட எம் மீதான அவனின் வன்முறை பிரயோகத்திழும் தான் சார்ந்து உள்ளது. இலங்கை அரசு எம் மீது ஏவும் பயங்கரங்களை சிங்கள பொது மக்கள் மீது நாம் ஏவினால் எம் போராட்டம் மீதான நியாயம் கேள்விக்குட்படுவதனை தவிர வேறு எதுவும் நடக்கப் போவது இல்லை

அவனால் கொல்லப்பட்ட எம் குழந்தைகளினதும், சகோதர உறவுகளின் சிதைக்கப் பட்ட உடல்களினதும் புகைப் படங்கள் தாங்கி நாங்கள் புலம் பெயர் நாடுகளிம் பேரணி போய் சர்வதேசத்தை நியாயம் கேட்கும் போது, அதே நியாயத்தை சிங்கள மக்களும் அதே போன்று கேட்க கூடிய சூழ் நிலைகளே உருவாகின்றன.

புலிகள் நடத்திய வான் தாக்குதலின் போது, பொது மக்கள் எவரும் பலியாகாததால், அதனை நாம் பிரத்தியோகமாக சொல்லிக் கொள்ளவில்லையா? அதனையே எமக்கான ஆதரவுக்கான விடயமாக பார்க்கவில்லையா? அப்படி இருக்கும் போது, மீண்டும் அவர்களையே இலக்காக கொள்ளும் போது, எவ்வாறு எம்மால் நியாயப் படுத்த முடியும்?

இல்லை பஸ்ஸில் குண்டு வைத்தால் என்ன. தப்பேதும் இல்லை. இரு இனமும் தான் போரை சந்திக்கிறது.

குண்டை அமெரிக்காவிலோ, பிரித்தானியாவிலோ புலிகள் வைத்தால் தான் பிழை.

தடை என்பது தமிழ் இனத்துக்கு எதிரான ஒரு செயலே தவிர புலிகளுக்கு எதிரானது அல்ல...

வடக்கு கிழக்கில் அல்லல் உறும் தமிழ் மக்களுக்கு இந்த நாடுகள் நேரடியாக மனிதாபிமான உதவிகளை அந்த மக்களூக்கு செய்கின்றாதா என்றால் இல்லை. அப்படியானால் அந்த மக்களுக்கு தமிழர் சார்பாக புலம் பெயர் மக்களால் செய்யப்படும் உதவியை எப்படி புலிகளுக்கு உதவி என்று தமிழர் பொது அமைப்புக்களை தடை செய்வது.

தடை செய்த நாடுகள் தமிழீழ மக்களுக்கு நேரடியாக உதவி செய்ய புலம் பெயர் தமிழர்கள் வற்புறுத்த வேண்டும்.

இல்லையேல் எதிரான போராட்டங்கள் நடத்தி அரசுகளை பணிய வைக்க வேண்டும்.

எல்லாம் தெரிந்த ஐயா நெடுக்காலபோவானுக்கு,

உங்கள் அளவுக்கு எனக்கு சர்வதேச அறிவு இல்லை.

உலகில் உள்ள எல்லா நாடுகளும் தம் நலன் சார்ந்தே இயங்கும், பிராந்திய நலனையே முதன்மை படுத்தும். அதில் ஒரு சந்தேகமும் இல்லை. அப்படி இருந்தும், அப் பிராந்திய நலன்களை , தன்னல நாடுகளின் நலன்களை தமக்கேற்றவாறு சரியாக பயன்படுத்தி கொண்டு, அடிமைப்பட்ட பல நாடுகளும், இன குழுமங்களும் விடுதலை பெற்றுக் கொண்டுதான் வருகின்றன. இந்த விடயதில் நாம் எவ்வளவு தூரம் வெற்றி அடைந்து இருக்கின்றோம்?

அண்மையில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அழுத்தங்கள் அதன் மோசமான மனித உரிமைகளுக்கெதிராக கொண்டு வரப்பட்டவையே. இலங்கை அரசின் செயல்களும், அதனை வெளியே கொண்டு வந்த அமைப்புகளுமே இதற்கான காரணம். இவ் அரசு அப்படி நடந்து கொண்டிராவிட்டால் இப் பிராந்திய நலன் பேணும் அரசுகள் புலிகளை மட்டுமே மேலும் இறுக்கி இறுக்கும்

பேருந்துகளில் குண்டு வைத்த/வைக்காத அமைப்புகளுடன் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் தொடர்பினை மேற் கொள்கின்றது தானே என்று, விவாதம் செய்து கொண்டு நாம் மேலும் இப்படி நடந்து கொள்ளும் போது அதன் தாக்கம் எமக்கே அதிகமாக இருக்கும். பல வழிகளில் நாம் அடக்கு முறையை எதிர் நோக்கி இருக்கும் போது, மிக மோசமான அழிவுகளை சந்தித்துக் கொண்டு எம் ஆதரமான சமூக கட்டுமாங்களை இழந்து கொண்டு இருக்கும் போது, மேழும் சர்வதேசத்துடன் முரண் படுவது கடும் மோசமான விளைவுகளுக்கே வழி வகுக்கும்

புலிகள் பேரூந்துகளிலும், பொது மக்களை இலக்கு வைத்து பொது இடங்களிலும் குண்டு வைத்துக் கொண்டு தம்மை ஒரு விடுதலை அமைப்பாக ஒரு போதுமே அடையாளப் படுத்த முடியாது

தெற்கில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று புலிகள் ஏற்கனவே கூறியுள்ளனர், சில குண்டு வெடிப்புகளுக்கு எல்லாளன் படை என்ற ஒரு அமைப்பு உரிமைகோரியுள்ளது. தமக்கும் எல்லாளன் படைக்கும் தொடர்பில்லை என்றும் புலிகள் கூறியுள்ளனர்.

அண்மைய கொழும்புத் தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ள எல்லாளன் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை எனப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் கூறுகிறார்.

சமீப காலமாக கொழும்பில் நடக்கும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக எல்லாளன் படை என்கிற அமைப்பு, ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் ஊடகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலம் உரிமை கோரியிருந்தது.

இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் நடப்பதற்கு பதில் நடவடிக்கையாகத் தாங்கள் இந்தத் தாக்குதல்களை நடத்துவதாக இந்த அமைப்பு கூறியிருந்தது.

இந்த எல்லாளன் படைக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

தமிழ்வின்

புலிகள் குண்டுவைத்ததாக சிங்களம் சொல்வதை அடிப்படை கருத்தாக முன்வைத்து அதற்கு மேல் உங்கள் கருத்துக்களை அடுக்கி கொண்டு போகின்றீர்கள் என்பதை முதலில் கவனத்தில் கொள்ளுங்கள். அடிப்படையில் புலிகளின் கூற்றை நிராகரித்து அரசின் கூற்றை ஏற்றுக்கொண்டு நீங்கள் கருத்தாடுகின்றீர்கள். அதற்கு மேல் நீங்கள் அடுக்கும் கருத்துக்கள் தமிழ்மக்கள் சார்பாக எந்த வித முக்கியத்துவமும் அற்றது.

சுகன்,

நீங்கள் கூறுவதனை நம்பும் அளவுக்கு நானும், சிந்திக்க தெரிந்த மனிதர்களும், உலகமும் அறிவற்றவர்கள் இல்லை. ஒரு ஆரோக்கியமான விவாததிற்கு உங்களின் கருத்து ஒவ்வாது...

இது எப்படி இருக்குதென்றால், தமிழ் மக்கள் மீது கிளைமோர் தாக்குதலினை இராணுவம் செய்து விட்டு, அதனை புலிகள் தான் செய்தார்கள் என்று கூறுபதனை நம்பும் சில சிங்கள மக்கள் உள்ளது போல் உள்ளது..

தூங்குகின்றவர் போல நடிப்பவர்களை கூட எழுப்பலாம், போதை மருந்து உண்டு மயக்கத்தில் கிடப்பவர்களை முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

மேலோட்டமாக பார்க்கும்போது உங்கள் கருத்து வலுவானது. ஆனால் எங்கள் விடுதலைப் போராட்டம் வெறும் தமிழினம் சார்ந்து மேற்கொள்ளப்படுகின்ற ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள். உலகின் பல்வேறு விடுதலை இயக்கங்களுக்கு பல்வேறு நாடுகளின் ஆதரவுகள் இருந்திருக்கின்றன. ஆனால் எங்களது மிகவும் வேறுபட்டது. அது ஏன் அப்படி உள்ளது என்கிற விவாதத்துக்குள் நான் வரவில்லை.

ஆனால் எதிரியானவன் பிச்சையெடுத்தாவது போரிடும் ஆற்றலைப் பெற்றுள்ளான். எம்மவர்களைக்காட்டிலும் குறைந்தது பத்து மடங்கு ஆட்பலம் கொண்டவன். ஆயுத வளம் பல மடங்கு அதிகமுள்ளவன். இவனுடன் எப்படிப் போர் புரிவது? போர்வலுச் சமநிலையைப் பேணுவது?

இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட அவசியமானவை சில திரை மறைவு உத்திகள். இவை மேலோட்டமாக நியாயமில்லாதவைதான். ஆனால் வேறு வழியில்லை. எதிரி திரை மறைவு வேலைகளால் வன்னி மக்களை சிறிது சிறிதாகக் கொன்று மிரட்சியைத் தோற்றுவித்து புலிகளுக்கு ஒரு மறைமுக அழுத்தத்தை அதே மக்கள் குழாம் மூலம் கொடுக்க விளைகிறான். இதே உத்தி கிழக்கில் வேறு விதமாகப் பின்பற்றப்பட்டது. அங்கே நேரடியாக எறிகணைகளை வீசி மக்களை பலமுறை இடம் பெயர்த்தி அதன் மூலம் புலிகளைப் பின்வாங்கச் செய்தார்கள். இப்போது வேறுவிதத்தில் நடைபெறுகிறது. கிளைமோர் செய்துவிட்டு தாங்கள் செய்யவில்லை என்பது. அல்லது மக்கள்மீது வான்தாக்குதல் செய்துவிட்டு புலிகள் முகாம் அழிந்ததூ என்று அறிவிப்பது.

இவர்களை இவர்களின் பாணியிலேயே நம்மவர்கள் கையாள்கிறார்கள். வேறுவழியில்லை. தாமதித்தாலோ சிறிது சுணங்கினாலோ கூண்டோடு அழியவேண்டியதுதான். சர்வதேசம் வன்னி கிளைமோரையுயும், வான் தாக்குதலையும் ஒருபோதும் கண்டிக்கப்போவதுமில்லை. தலையிடப் போவதுமில்லை. ஆகவே புலிகளுக்கும் வேறு வழியுயில்லை.

இவ்வளவும் செய்த / தெரிந்த புலிகளுக்கு இந்த விடையத்தை சிந்திக்கும் தன்மை இல்லாமலா போயிருக்கும்? நம்புங்கள் தலைவரை. அவரின் வழி நடத்தலே எங்களைக் கரை சேர்க்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியில் நடைபெற்ற பொங்கு தமிழைக் குழப்ப சிங்களவன் முயற்சி செய்து தோல்வியுற்றான். ஆனால் பிரச்சாரங்கள் செய்து தமிழர்களைக் கைது செய்ய சிங்களவன் வெற்றி பெற்று விட்டான்.

டங்குவார் அண்ணா,

தலைவர் மீதான நம்பிக்கை என்பது "நான் இந்த நிமிடம் உயிருடன் உள்ளேன்" என்று என்னையே நம்புவதனை விட அதிகமானது, சந்தேகம் அற்றது.

...என்னைப் பொறுத்தவரைக்கும், இலங்கை அரசு தமிழ் மக்களை கொன்று குவித்து, புலிகளை ஆத்திரமூட்டி மேலும் மேலும் தெற்கில் அழிவுகளை, குண்டு வெடிப்புகளை ஏற்படுத்த முயல்வதாகவே தோன்றுகின்றது. தன் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை மறைக்கவும், தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதமாகவும் காட்டவும் சிங்கள அரசுகள் எந்தளவு தூரமும் செல்லக்கூடியது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை கேட்கிறன் நிழலி... இயன்ற மட்டும் சிங்கள பொதுமக்களின் இழப்புக்களை தவிர்த்து தாக்குதல்கள் செய்தபோது, உலகம் என்ன நம் மீது பூவையா தூவியது?

போரின் பரிமாணம் மாறிவிட்டது. ஜே.ஆர் காலம், பிரேமா காலம், சந்திரிக்கா காலம் பார்த்த சிங்களம் அல்ல இன்றிருப்பது. இராட்சத ஆள்-ஆயுத பலத்துடனும், போருக்காக பாரிய நிதி ஒதுக்கீட்டுடனும், இந்தியாவிடமிருந்து என்றுமில்லாதளவு ஆயுத பொருளாதார உதவியுடன், போரை வெல்ல எந்த கேவலமான எல்லை வரை செல்லவும் தயாராக இருக்கின்றது இன்றைய சிங்களம்.

இவ்வாறான நிலையில் நீங்கள் சொல்வது போல் ஒரு ஒடுக்கப்பட்ட நலிந்த இனமாகிய நாம் இரணுவத்தை மட்டும் தாக்கிக் கொண்டிருந்தால், தெற்கில் உல்லாசமாக இருந்தபடி சிங்களத்தால் காலம் முழுக்க போர் புரியமுடியும். போர் முடிவில் தமிழினம் மட்டும் செத்து சுண்ணாம்பாயிருக்கும்.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். சிங்களத்தின் படு மோசமான அரசியல்-இராணுவ-பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் தான், இத்தீவில் இரு-நாடுகள் தான் தீர்வு என்ற முடிவுக்கு உலகம் வரும்.

சுகன்,

நீங்கள் கூறுவதனை நம்பும் அளவுக்கு நானும், சிந்திக்க தெரிந்த மனிதர்களும், உலகமும் அறிவற்றவர்கள் இல்லை. ஒரு ஆரோக்கியமான விவாததிற்கு உங்களின் கருத்து ஒவ்வாது...

இது எப்படி இருக்குதென்றால், தமிழ் மக்கள் மீது கிளைமோர் தாக்குதலினை இராணுவம் செய்து விட்டு, அதனை புலிகள் தான் செய்தார்கள் என்று கூறுபதனை நம்பும் சில சிங்கள மக்கள் உள்ளது போல் உள்ளது..

தூங்குகின்றவர் போல நடிப்பவர்களை கூட எழுப்பலாம், போதை மருந்து உண்டு மயக்கத்தில் கிடப்பவர்களை முடியாது

உங்கள் சிந்தனை வளம் , சிந்தனை வளம் உள்ள மனிதர்கள் அவர்கள் சார்ந்த அறிவுள்ள உலகம் மேலும் போதை மருந்து உண்ணாத நிலை இவைகள் பற்றி எனக்கு அவ்வளவு ஆழமாக தெரியாது.

சிங்களம் கடந்த ஐம்பது வருடமாக எண்ணிலடங்கா அழிவுகளை செய்த போது அவலங்களை ஏற்படுத்தியபோது சிந்திக்க தெரிந்த மனிதர்களும் அறிவும் மேலும் போதை உட்கொள்ளாதவர்களும் என்ன கதியில் இருந்தார்கள்?

இன்றைக்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஈராக்கிய மக்கள் கொல்லப்பட்ட போது, என்னும் தொடர்கின்ற போது? இப்படி ஆயிரம் விசயங்களை அடுக்கி கொண்டு போகலாம்.

அந்தந்த நாட்டின் தேவைக்கேற்பவே மனிதாபிமானம் முன்வைக்கப்படும். மனித உரிமைகள் பேசப்படும். ஈராக்கில் லட்சக்கணக்கில் அமரிக்க கொல்லும் அதே நேரம் வேறு நாடுகளின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும். ஆயுதங்களை வழங்கி கொண்டே போரை தவிர்த்து சமாதானமாக போச் சொல்லும். தேவைக்கு ஏற்ப தனிநாடுகள் உருவாக ஆதரவு தரப்படும் அல்லது எதிர்க்கப்படும்.

உங்களையோ அல்லது சிந்திக்க தெரிந்த மனிதர்களையோ அல்லது உலகத்தை அறிவற்றது என்றோ நான் கூறவும் இல்லை கருதவும் இல்லை. ஆனால் அது எல்லாம் தேவையின் பால் இயங்கும்.

பிரச்சனைகளை நேரடியாக சந்திக்கும் மக்களின் தேவைகள் அதன் நிமிர்த்தம் அவர்கள் எடுக்கும் முடிவுகள் சார்ந்து முரண்படாமல் செல்லுமளவுக்கு எனது அறிவு வேலை செய்தால் போதும் என்று கருதுகின்றேன்.

கட்டுக்கடங்காமல் எம்மவர்களுக்கு அறிவு வேலை செய்வது ஒரு மாபெரும் பலவீனமாக ஒற்றுமைக்கு குந்தகமாக அமைந்தது. அவரவர் சிந்திப்பதும் அறிவு சார்ந்த உலகமும் ஒன்று என்று ஒவ்வொருவனும் கருத வெளிக்கிட்டு ஆளுக்கொரு கருத்தாகவும் கருத்தில் ஒற்றுமை இல்லாமலும் முடிவின்றி சிதறுண்டு சீரளிந்து கிடப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தாயகத்தில் அவலப்படும் மக்கள் எடுக்கும் முடிவுகள் சார்பாக எனது அறிவு இயங்கினால் போதும் என்று கருதுகின்றேன்.

நாளை தென்னிலங்கையில் தனிப்பட்ட பிரச்சனையின் நிமிர்த்தம் ஒருவன் கைகுண்டை வீசினால் கூட அது புலிகள் தலையில் விழும் என்று தெரியும். அல்லது புலிகள் தலையில் விளவேணும் என்றும் வீசலாம். எதுவும் நடக்கலாம். சர்வதேசத்தின் கவனத்தை தமது பக்கம் திருப்புவதற்கு எதுவும் செய்யலாம். புலம் பெயர் தேசத்தில் இருந்து கொண்டு இது சம்மந்தமாக எனக்கு எந்த ஊகமும் அல்லது சிந்தனை எழுச்சியும் இல்லை. அவ்வாறான சிந்தனை, அறிவுப் பெருக்கம் மூலம் நான் எந்த கருத்தையும் முன்வைக்க விரும்புவதும் இல்லை. தென்னிலங்கையில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பாக புலிகள் கூறியதை நான் ஏற்றுக்கொள்கின்றேன் , அதுவே என் கருத்து.

போரின் வலையை உணராத சிங்களவர் தொடர்ந்தும் போரின் மூலம் தீர்வு காணலாம் என்று நம்புவர்.அவர்களீன் ஆதரவே மகிந்த அரசின் போரின் அடித்தளமாக இருக்கிறது.அத்தோடு சர்வதேச பிராந்திய அரசுகள் பொருளாதாரரீதியாக போர் செய்வதற்க்கு ஆதரவு கொடுக்கின்றன.தற்போதைய சர்வதேச பிராந்திய நலன்ங்கள் சிறிலங்கா அரசின் போருக்கு ஆதரவாகவே இருக்கின்றன.புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நேரத்தில் கூட அவர்கள் மீதான சர்வதேசத் தடை அகற்றப்படவில்லை.

மேலும் மனிதாபிமானம் பற்றிக் கதைக்கும் அமெரிகாவும் மேற்குலகும் இசுரேலின் மனிதாபிமானம் பற்றியோ இராக்கில் ஆப்கானில் இருக்கும் மக்களின் மனிதாபிமானம் பற்றியோ போரியல் நியதிகள் பற்றியோ கதைப்பதில்லை.இங்கே மனிதாபிமானம் என்பதும் போரியல் நியதிகள் என்பதும் அவர்களீன் நலன் சார்ந்ததாகவே இருக்கிறது.ஆகவே சிங்கள மக்கள் மீதானா தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் தமிழர் போராட்டாம் அங்கீகரிக்கப்படும் என்பது சிங்கள அரசு/சர்வதேச நலன் சார்ந்த நிலைப்பாடாகவே இருக்கும், அது தமிழர் நலன் சார்ந்த நிலைப்பாடு அல்ல.

சர்வதேசம் நடு நிலையாக நடப்பதாகத் தமிழர்கள் கருதி இருந்தால் தமிழர்கள் இவ்வாறான தாக்குதல்களைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.போரின் சோகங்களை நாம் நன்கு அறிவோம்.சற்வதேசமும் பிராந்திய சக்திகலும் சிங்கள மக்களும் போரின் மூலம் தமிழரை அட்க்கி விடலாம் என்று கருதுவதாலையே தமிழர்கள் போரிட வேண்டி உள்ளது/மனித நாகரீகத்துக்கு அப்பாற்பட்ட ஒரு போரை சிங்களம் மேற் கொண்டுள்ளது.அதற்கு சர்வதேசமும் பிராந்திய சக்திகளும் பக்கபலமாக இருக்கின்றன.இங்கே மனிதாபிமான ரீதியில் போரை நடாத்த வேண்டுமாயின் முதலில் சர்வதேசம் புலிகள் மீதான் தடையை அகற்றி தமிழர்களின் நியாயப்படுகளை அங்கீகரிக்கட்டும்,சிங்கள மக்கள் போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகளைச் செய்யச் சொல்லிக் கூறட்டும்.அதன் பின் போரிற்கான அவசியம் தமிழர்களுக்கு இல்லை.

பந்து சர்வதேசத்திடமும் இந்தியப் பிராந்திய ஆதிக்கதிடமும் சிங்களா மக்களிடமுமே இருக்கிறது, எம்மிடம் இல்லை.

எமது ஆயுதத்தை எமது எதிரிகளே தீர்மானிகிறார்கள், நாங்கள் அல்ல.வேண்டிய விதத்தில் வேண்டிய தருணத்தில் பலமுறை நாம் போரின் மூலம் தீர்வு காணும் முனைப்பையும் அதன் விழைவுகளையும் பற்றி சர்வதேசத்திடமும் இந்தியாவிடமும் சிங்களா மக்களிடமும் கூறி விட்டோம்.முடிவை எடுக்க வேண்டியது அவர்கள் நாங்கள் அல்ல.

மேலும் எல்லாளன் படை என்பது பிள்ளையான் குழு ஹேல உறுமைய போன்ற ஒரு தீவிரவாத ஆயுதக்குழுவாக இருக்கலாம்.இதற்க்கும் புலிகளுக்கும் சம்பந்தம் அற்று இருக்கலாம்.தமிழர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களால் உருவான ஒரு தனித்து இயங்கும் குழுவாக அது இருக்கலாம்.இவ்வாறாண குழுக்கள் உண்டாவதற்கான புறச் சூழலை சிங்கள அரசும் சர்வதேசமுமே உண்டாக்கியது.மக்களின் அங்கீகாராம் பெற்ற அரசியற் சக்திகளைத் தடை செய்வதனால் தான் இவ்வாறான குழுக்கள் உருவாகின்றன.புலத்திலும் மக்களின் அங்கீகாரம் பெற்ற அமைப்புக்களைச் சர்வதேசம் தடை செய்யும் போது இவ்வாறான மறைமுகமாக இயங்கும் குழுக்கள் புலத்திலும் உருவாகலாம்.அதற்கான ஜன நாயகம் அற்ற புறச் சூழலை இந்த ஏகாதிபத்திய அரசுகளே உருவாக்குகின்றன.

கட்டுக்கடங்காமல் எம்மவர்களுக்கு அறிவு வேலை செய்வது ஒரு மாபெரும் பலவீனமாக ஒற்றுமைக்கு குந்தகமாக அமைந்தது. அவரவர் சிந்திப்பதும் அறிவு சார்ந்த உலகமும் ஒன்று என்று ஒவ்வொருவனும் கருத வெளிக்கிட்டு ஆளுக்கொரு கருத்தாகவும் கருத்தில் ஒற்றுமை இல்லாமலும் முடிவின்றி சிதறுண்டு சீரளிந்து கிடப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தாயகத்தில் அவலப்படும் மக்கள் எடுக்கும் முடிவுகள் சார்பாக எனது அறிவு இயங்கினால் போதும் என்று கருதுகின்றேன்.

பந்து சர்வதேசத்திடமும் இந்தியப் பிராந்திய ஆதிக்கதிடமும் சிங்களா மக்களிடமுமே இருக்கிறது, எம்மிடம் இல்லை.

எமது ஆயுதத்தை எமது எதிரிகளே தீர்மானிகிறார்கள், நாங்கள் அல்ல.வேண்டிய விதத்தில் வேண்டிய தருணத்தில் பலமுறை நாம் போரின் மூலம் தீர்வு காணும் முனைப்பையும் அதன் விழைவுகளையும் பற்றி சர்வதேசத்திடமும் இந்தியாவிடமும் சிங்களா மக்களிடமும் கூறி விட்டோம்.முடிவை எடுக்க வேண்டியது அவர்கள் நாங்கள் அல்ல.

மேற்சொன்ன இரண்டு கருத்துக்களும் நேர்மையாக சிந்திக்க தெரிந்தவர்கள் எவரும் மறுக்க முடியாத கருத்துக்கள். பாராட்டுக்கள்!!!

இன்று நம்மிடையே தேவையானது ஒற்றுமையும் ஒரு தலைமையின் கீழ் செயற்படும் ஒருமுகப்படுத்தப்பட்ட செயற்பாடுகளும் தான்.

வீண் வாதப்பிரதிவாதங்கள் அல்ல !!

இன்று தமிழர் தலைமையின் கீழ் நாம் ஒன்றுபட்டு செயற்பட மறுத்தால் எதிர்காலத்தில்

ஈழத்தமிழினத்தை காப்பாற்ற எவரும் இருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்!!!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.