Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரிசனம் தொலைக்காட்சி நிறுத்தப்படப்போகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று இரவு இதுபற்றி தரிசனம் தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார்கள். அத்துடன் நேயர்களின் கருத்துகளையும் நேரடி (Liveஆக) தொலைபேசி ஒளிபரப்பு ஊடாக கேட்டு அறிந்தார்கள். நேற்றைய தினம் மாலையில் இருந்து தரிசனம் டிவி இலவசமாக பார்க்க கூடியதாக திறந்து இருந்தார்கள். இந்த நேரடி ஒலி பரப்பில் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண என்பவரும் இதில் பங்குபற்றி தனது கருத்தை சிங்கள மொழியிலேயே தெரிவித்திருந்தார். அவரின் கருத்தை தரிசனம்காரர் தமிழில் மொழி பெயர்த்து விபரித்தார்கள். அவரது கருத்தின் சுருக்கம் "இலங்கை அரசு நடத்திக்கொண்டிருக்கும் போரில் அரசுக்கு எதிரான செய்திகளை விபரங்களை எந்த ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகினறனவோ அவற்றை எப்படியாவது தடைசெய்து அடக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைப்பாடுதான் இதுவாகும்" என்று தெரிவித்தார்.

மற்றும் தரிசனம் தொலைக்காட்சியில் மேலும் அவர்கள் தெரிவிக்கையில் வசந்தமாளிகை படத்தில் இருந்து பாடல் காட்சிகளை மட்டும் நாம் போட்டுவிட்டு இருந்த்திருந்தால் இன்று எமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் நாம் எப்படியும் மீண்டும் வருவோம் என்று நம்புவதாகவும், சந்தாகாரர்கள் தமது பணத்திற்கு எதுவித கவலையும் கொள்ளத்தேவையில்லை, உங்களின் மிகுதிப்பணங்கள் எப்படியும் மீண்டும் உங்களிடம் வந்து சேரும்....ஆனால் அதற்கு சில காலங்கள் பொறுத்திருக்க வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் தான் சிறிலங்கா அரசின் அழுத்தம் காரணமாக தரிசனம் நிறுத்தப்படப்போகிறது. அவுஸ்திரெலியா, நியூசிலாந்தில் தரிசனம் தொடர்ந்து ஒளிபரப்பாகும். அவுஸ்திரெலியா, நியூசிலாந்தில் உள்ள தரிசனத்துக்குப் பிரச்சனையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சேகுவரா சொன்னது போல அடக்குமுறையாளர்களின் சிந்தனைகள் ஒன்று.. அவை செயற்படும் வடிவங்கள் வெவ்வேறானவை. அமெரிக்க சார்பு மேற்குலகம் என்றால் ஜனநாயகப் பற்றுறுதின் மூலம் என்று எண்ணிக் கொண்டிருந்த நம்மவர்கள் இதை இப்போதுதான் உணர்கிறார்கள். ஆனால் சேகுவரா போன்ற தலைவர்கள் இதை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்துவிட்டனர்.

எமது தேவை அடக்குமுறையாளர்களின் கோரக் கரங்களுக்குள் வாழ்ந்து கொண்டே எமது தேசத்தின் விடுதலைக்கான பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதுதான். அதுதான் எமது வெற்றிக்கு மூலம். எமது பிரதான அடக்குமுறையாளன் எம்மண்ணில் இருந்து விரட்டப்பட்ட பின் நாம் இவர்களுக்கு எல்லாம் அஞ்சத் தேவையில்லை. எமது தேசத்தில் இருந்து கொண்டு உலகை நோக்கி நாம் விரும்பிய வடிவில் வரலாம்.

அதுவரை.. அடக்குமுறையாளர்களின் ஒவ்வொரு அழுத்தத்துக்கும் முகங்கொடுத்தே ஆக வேண்டும். அதற்குள் இருந்து எமது தேசத்தை மீட்கும் செயற்பாட்டுக்கான பணிகளைத் தொடர்வதுதான் முக்கியமானது.. அதைப்பற்றி சிந்திப்பதே சிறந்தது. சோர்வுகள் எம்மை கட்டிப்போடக் கூடாது..!

அடக்குமுறையாளனின் அடக்குமுறை வடிவங்களை, சாத்தியமான சட்ட அணுகுமுறைகளுக்கான வாய்ப்பிருப்பின் அதன் மூலம் அனைத்துலகுக்கும் வெளிப்படுத்துவது அவசியம். அமெரிக்க சார்பு மேற்குலகின் இந்த அடக்குமுறைகளை முழு உலகுக்கும் சொல்ல சரியான சட்ட அணுகுமுறைகளைக் கையாண்டு இவர்களின் நகர்வுகள் செய்யும் அடக்குமுறை வடிவங்களை உலகுக்குச் சொல்ல வேண்டும். அதற்கு இவர்கள் செவிமடுக்கிறார்களோ இல்லையோ இவர்களின் உண்மை முகத்தை அனைத்துலகம் ( அமெரிக்க சார்பு உலகம் அல்ல அதையும் தாண்டியது) அறியச் செய்ய வேண்டும்..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரிசனம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நிறுத்த இலங்கை அரசாங்கம் சதி!

ஐரோப்பாவில் இயங்கி வரும் ஈழத்தமிழ் தொலைக்காட்சியான தரிசனம் தொலைக்காட்சி தற்பொழுது இலங்கை அரசாங்கம் இதன் ஒளிபரப்பு அனைத்தையும் முடக்கும் வேலையில் இறங்கியுள்ளது. ஈழத்தமிழர்களின் அவலங்களை புலம்பெயர் மக்களுக்கு எடுத்து வந்த ஊடகமான தமிழ் ஓளி (ttn) இலங்கை அரசால் நிறுத்தப்பட்டவுடன், தரிசனம் தொலைக்காட்சி ஐரோப்பாவிற்கு தனது ஒளிபரப்பினை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை அரசாங்கம், இலங்கையில் மட்டும் அல்லாது புலம்பெயர் நாடுகளிலும் தனது ஊடக அடுக்கு முறையினை மேற்கொண்டு வருகின்றது. ஈழத்தமிழர்களின் அவலங்களை எந்த ஊடகம் அம்பலப்படுத்தி வந்தாலும் அதனை முடக்கி வருகின்றது.

தரிசனம் தொலைக்காட்சியினை நிறுத்துமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதனை ஈழத்தமிழர்கள் அனைவரும் வன்மையாக கண்டனம் செய்து வருகின்றார்கள்.

தமிழ்செய்தி ஐரோப்பிய நிருபர்- ஈழக்கண்ணன்

http://www.tamilseythi.com/tamilar/tharisa...2008-06-20.html

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் பல லட்சம் ஈழத்தமிழர்கள் இருந்தும் ,

எமக்கென்று தனித்தன்மையுடன் ஒரு தொலைக்காட்சியை தொடர்ந்து நடாத்த முடியாமலிருப்பது வேதனையான விடயம்.

ஐரோப்பிய ஜனநாயக நாடுகளில் கூட கருத்துச்சுதந்திரம் பேச்சு சுதந்திரம் என்பற்றுக்கு கடிவாளம் போடப்படுகிற வேதனைக்குரிய நிலமை... தனக்கென்று ஒரு நாடில்லாததால் தனிமைப்படுத்தப்பட்ட மிக வேதனைக்குரிய இனம் தமிழினம்..

இந்தநிலமையை தமிழனாய்ப் பிறந்து தமிழின விடியலுக்கெதிராக செயல் புரியும் அனைத்துப்Nபுரும் உணர்ந்து விடியலுக்கு இடம் கொடுத்து விலகி நில்லுங்கள்

வரலாற்று அவப்பெயரை உங்கள் பரம்பரைக்கே சேர்த்துவிடாமல்.. உங்கள் பாவத்தை கழுவிக்கொள்ளுங்கள்..

தமிழ்மக்களின் தொலைக்காட்சிக்கு எதிரான நடவடிக்கையில் சில தமிழரின் செய்ல்பாடுகள் இருப்பது மிக வேதனைக்குரியது...

காலத்தின் தேவைகருதி.. தமிழ்தேசியம் என்ற ஒற்றுமைக்கோட்பாட்டிற்குள் செயற்படுங்கள்

தயை செய்து

தமிழர்களின் அரசியல் தொடர்புகள் பிணைப்ப்புகள் வெளினாடுகளீல் போதது...

இந் நிலைமை மாறும் வரை இப்படியான பிரசனைகள் தொட்ரப்போகிறது....

வாழும் நாடுகளில் அ நியப்பட்டுள்ளோம் அந்த நாடுகளின்,அரசுகள் அரசியல் கட்சிகளுடன்

எமது வாக்குரிமைகளை வைத்து மிகப்பலமான எமது போரட்ட விளக்கங்கள் தெளிவு படுத்தலுடன் கூடிய இணைப்பு பலமாக இருந்தால் இலங்கையின் அவியல்கள் ஒரு இடமுமும்

எடுபடாது.....

நாங்கள் மிகவும் சிந்தித்து நடக்க்கவேண்டிய காலாம் இது.

அரசியலையும் தாயகம் தொடர்பான கதைகளையும் வெறும் பொழுதுபோக்கிற்கான விடயங்களாகவே எம்மவரில் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

தொலைக்காட்சிக்கு முன்னமர்ந்து பார் உந்தச் சிங்கவன்களின்ரை வேலையை. தமிழ் சனத்தைக் கொண்டு தள்ளுறாங்கள் எண்டு புலம்புகின்ற எத்தனை பேர் சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.

விருந்துபசாரங்களில் ஓரிரு பெக்குகளை உள்ளே அனுப்பி விட்டு உவங்களுக்கு சரியான அடி குடுத்தால் தான் திருந்துவாங்கள் என்று வீர வசனம் பேசும் எத்தனை பேர் எமது போராட்டத்தின் நியாயத்தனமையை கூடத் தொழில் செய்யும், அயலில் வாழும் இந்த நாட்டு மக்களிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறாரகள்.

ஆக இவர்களின் அரசியல் வீட்டிற்கள்ளும் தமிழர் கூடும் இடங்களில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கு

சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தம்.அதனால்தான் எங்களால் தொலைக்காட்சி சேவையை நடத்த முடியவில்லை என்;று காது குத்த வேண்டாம்.அல்ஜசீரா தொலைக்காட்சியை நிறத்துவதற்கு அமெரிக்கா கொடுக்காத அழுத்தமா?புலம் பெயர்ந்த குர்தியர்களால் பிரான்சிலும் ஜேர்மனியிலும் இருந்து நடத்தப்படும் (3) தொலைக்காட்சிகளை நிறுத்தும்படி துருக்கி அரசு கொடுக்காத அழுத்தமா? பலஸ்தீன வானொலியையும் தொலைக்காட்சியையும் தடுப்பதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் செய்யாத முயற்சியா? இவற்றையெல்லாம் தாண்டி இந்த வானொலிகளும் தொலைக்காட்சிகளும் எவ்வாறு செயற்பட்டு வருகின்றன? என்பதை பற்றி யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா? நமது உடகத்துறைக்குள் நான் பெரிதா நீ பெரிதா என்ற போட்டி? ஊடகத்துறை சாராதவர்கள் உடக கட்டமைப்பை தீர்மானிக்கும் அவலம்.(தாயகத்திலே ஊடகத்துறை சார்ந்தவர்களாலே ஊடக கட்டமைப்பும் ஊடக வடிவமும் தீர்மானிக்கப்படுவதோடு ஊடகத்துறை சார்ந்தவர்களே ஊடகங்களுக்கு பொறுப்பாகவும் இருக்கிறார்கள்)நான் அறிந்த வரை புலம் பெயர்ந்த சிங்களவர்கள் 3 தொலைக்காட்சிகளை நடத்துகிறார்கள்.12 வரையிலான புலம்பெயர்ந்த சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் ஊடகத்துறை கல்வி கற்று சர்வதேச ஊடகங்களுக்கு நுழைந்திருக்கிறார்கள்.அங்கு நமக்கெதிரான பரப்புரையை தொழில் சார் முறையில் திறம்படச் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம் எத்தனை பேரை தொழில் சார் உடகவிலாளர்களாக உருவாக்கி சர்வதேச ஊடகப்பரப்புக்குள் நுழைந்திருக்கிறோம்?உண்மையில் உடகங்கள் என்ற சொல்லிக் கொண்டு இங்கு நடக்கும் கூத்துகளை பார்க்கும் பொழுது தாயகத்தில் களமுனையில் நின்று ஏதாவது செய்திக்கலாமே என்று மனம் வருந்துகிறது.

.............

ஆனால் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் இங்கிலாந்தில் மஹிந்தவிற்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் வெ|றும் இரண்டாயிரம் பேர் தானா? மஹிந்தவின் பயங்கரவாதச் செயலைக் கண்டு கொதித்தவர்கள் வெறுமத் இரண்டாயிரம் பேர் தானா? விருந்துபசாரங்களிலும் தமிழ் நிகழ்வுகளிலும் என்னட்டை ஒரு துவக்கிருந்தால் உந்த எருமையைச் சுட்டுத் தள்ளுவன் என்று சொன்னவர்க்ள எல்லாம் அன்றைய தினம் எங்கே போயிருந்தார்கள்.

எமது மக்களைக் கொன்று தள்ளும் ஒரு பயங்கரவாதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கூடத் கலந்து கொள்ள விடாமல் தடுத்தது எது? என்குடும்பம் என்பிள்ளை என் சொத்து என்ற சுயநலமா?

உதிலை போய் கலந்து கொள்ளுற நேரம் வேலைக்குப் போனால் நாலு காசு சம்பாதிக்கலாம் எண்ட அசட்டைத் தன்மையா?

பககத்திலை சிங்களவங்களும் ஆர்ப்பாட்டம் செய்யிறாங்களாம். அதிலை ஏதாவது பிரச்சினை வந்தாலும் வரும். வீட்டிலையே இருப்பம் எண்ட கோழைத்தனமா?

இப்படியான எங்கள் சுயநலங்கள் தான் எதிரிக்கு தாம் நினைத்ததை எல்லாம் செய்யலாம் என்ற துணிவைத் தந்திருக்கிறது.

இன்னொரு விடயம் கனடாவிலே உலகத் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்டதற்கு அங்கு வாழும் 3 இலட்சம் தமிழர்கள் என்ன செய்திருக்கிறார்க்ள. மூன்று இலட்சம் தமிழர்களும் ஒன்று பட்டு அல்லல் படும் தமிழர்களுக்கு உதவி செய்யும் தமிழ் நிறுவனங்களை தடை செய்தது அநியாயம் என்று ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தால் அடுத்த முறை தடை செய்யக் கனடா அரசாங்கம் சற்றுச் சிந்திக்கும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தம்.அதனால்தான் எங்களால் தொலைக்காட்சி சேவையை நடத்த முடியவில்லை என்;று காது குத்த வேண்டாம்.அல்ஜசீரா தொலைக்காட்சியை நிறத்துவதற்கு அமெரிக்கா கொடுக்காத அழுத்தமா?புலம் பெயர்ந்த குர்தியர்களால் பிரான்சிலும் ஜேர்மனியிலும் இருந்து நடத்தப்படும் (3) தொலைக்காட்சிகளை நிறுத்தும்படி துருக்கி அரசு கொடுக்காத அழுத்தமா? பலஸ்தீன வானொலியையும் தொலைக்காட்சியையும் தடுப்பதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் செய்யாத முயற்சியா? இவற்றையெல்லாம் தாண்டி இந்த வானொலிகளும் தொலைக்காட்சிகளும் எவ்வாறு செயற்பட்டு வருகின்றன? என்பதை பற்றி யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா? நமது உடகத்துறைக்குள் நான் பெரிதா நீ பெரிதா என்ற போட்டி? ஊடகத்துறை சாராதவர்கள் உடக கட்டமைப்பை தீர்மானிக்கும் அவலம்.(தாயகத்திலே ஊடகத்துறை சார்ந்தவர்களாலே ஊடக கட்டமைப்பும் ஊடக வடிவமும் தீர்மானிக்கப்படுவதோடு ஊடகத்துறை சார்ந்தவர்களே ஊடகங்களுக்கு பொறுப்பாகவும் இருக்கிறார்கள்)நான் அறிந்த வரை புலம் பெயர்ந்த சிங்களவர்கள் 3 தொலைக்காட்சிகளை நடத்துகிறார்கள்.12 வரையிலான புலம்பெயர்ந்த சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் ஊடகத்துறை கல்வி கற்று சர்வதேச ஊடகங்களுக்கு நுழைந்திருக்கிறார்கள்.அங்கு நமக்கெதிரான பரப்புரையை தொழில் சார் முறையில் திறம்படச் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம் எத்தனை பேரை தொழில் சார் உடகவிலாளர்களாக உருவாக்கி சர்வதேச ஊடகப்பரப்புக்குள் நுழைந்திருக்கிறோம்?உண்மையில் உடகங்கள் என்ற சொல்லிக் கொண்டு இங்கு நடக்கும் கூத்துகளை பார்க்கும் பொழுது தாயகத்தில் களமுனையில் நின்று ஏதாவது செய்திக்கலாமே என்று மனம் வருந்துகிறது.

உண்மை... :):lol:

இனி இணைய தொலைக்காட்கிகளை உருவாக்காலமே...

அதை அவர்கள் எப்படி நிறுத்துவார்கள்....??? :lol: :lol:

Edited by Netfriend

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு காலத்தில் இன்னுமொரு தொ.காக்காக தரிசனத்துக்கும், துரோகிப்பட்டம் சூட்டி மகிழ்ந்தோம் அல்லவா? அனுபவிப்போம்....

போராட்டத்தில் எத்தனையோ சந்தித்த தமிழினம் இது வெறும் தூசி......

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னையா அண்ணாவின் சார்பாக நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன்,ஊடக சுகந்திரம் மறுக்கபடுகிறது இதை சர்வதேச ரீதியில் தமிழ் மக்கள் எல்லாரும் வீட்டுகுள் இருந்து யாழ்களத்திள் போராட வேண்டும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

செய்மதி தொலைக்காட்சிகள் இப்போது குடிசைக் கைத்தொழில்போலாகிவிட்டது.

ஒரு தொலைக்காட்சியை தடைசெய்வதால் அதை நிறுத்திவிட முடியாது அது மீண்டும்

எப்போதோ ஒரு நாள் வேறொரு பெயரில் ஆரம்பிக்கப்படத்தான் போகிறது.

அண்மைக்காலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் தரிசனம் மூடப்படுவதற்கு அதன்

சீர்குலைந்த பொருளாதாரம் தான் காரணம் என்பதையே குறிகாட்டி நிற்கின்றது.

தமிழ் தொலைக்காட்சி போட்டிகள் நிறையவே உள்ள ஒரு ஊடகத்துறை.

அதுபோக தரிசனம் தொலைக்காட்சி ஒப்பீட்டு அளவில்கூட சிறந்த

தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை.

தாய்நாட்டு நிலவரங்களை மட்டும் செய்தியாக்கி அதன்மூலம் எத்தனை நாட்களுக்குத்தான்

தொலைக்காட்சி நடத்துவது. என்போன்ற தேசியத்தை நேசிக்கும் எத்தனையோ தமிழ்மக்கள்

தரிசனத்தின் நேயர்கள். தடை செய்தால் அது ஒரு இழப்புத்தான். தமது பிழைகளைத்

திருத்தி இன்னும் அதிக விவேகத்துடனும் பன்மடங்கு பலத்துடனும் தொழில் நுட்பத்துடனும்

மறுபிறப்பு எடுப்பார்கள் என எதிர்பார்ப்போம்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வா சாவா என்ற சவாலுக்கு மத்தியில் இயங்கும் தொழில்துறை எதுவாகினும் ஒரு சிறப்பான நிர்வாகம்,

பலமான பொருளாதார பின்புலம், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் என்பவற்றுடன் காலத்துடன்

இசைவாக்கத்திற்கான நாட்டம் என்ற நான்கில் எது குறைந்தாலும் கதவை வேகமாகவே இழுத்து

மூடவேண்டிய நிலை வரத்தான் செய்யும். இதில் சொன்ன எதுவும் தரிசனம் தொலைக்காட்சி

நிறுவனத்திடம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. வெறும் தமிழ் தேசியம் என்ற சென்டிமென்ட்

பேசியே ஒரு தொலைக்காட்சி உயிர்வாழ முடியாது. அத்துடன் மக்கள் புதிய புதிய தொழில்நுட்பங்களைப்

பயன்படுத்தி இப்போது முற்றிலும் இலவசமாகவே தொலைக்காட்சி பார்க்கத் தொடங்கிவிட்டதால்

அதுவும் தொலைக்காட்சி அட்டைகளின் விற்பனையை பெருமளவு குறைத்து

தொலைக்காட்சி நிறுவனங்களின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துவிட்டது.

மற்றொரு தொலைக்காட்சியில் இதுபற்றிய கருத்தரங்கு ஒன்று அண்மையில்

ஒளிபரப்பப்பட்டதை பலர் பார்த்திருப்பார்கள். ஏறத்தாள அடுத்தவருட நடுப்பகுதிவரை

என்னிடம் தரிசனத்திற்கான சந்தா உண்டு. இப்போது நாட்களை எண்ணவேண்டிய நிலை

வந்துவிட்டதை எண்ணி கொஞ்சம் கவலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் ரிரி என் நிறுத்தப்பட்டது பின்னர் இப்ப தரிசனம் பிரான்சிலை பணியாளர்கள் கைது லண்டனிலை கைது கனடாவிலை உலகத் தமிழர் தடை எல்லாத்தையும் சுலபமாய் இலங்கையரசு செய்தது என்று பிரச்சாரத்திற்காக சுலபமாய் சொல்லிப்போட்டு போகலாம். ஆனால்ம இலங்கையரசு முயற்சிமட்டும்தான் செய்தது ஆனால் நிறைவேற்றியது நாங்கள்தான்.எங்களுக்குள்ளை நாங்களே யார் பெரியவர் என்று அடிபட்டுக்கொண்டிருக்கும்வர

தமிழனை விழிப்போடு வைத்திருக்க , தாய்மண்ணை மறக்காமல் இருக்க தங்கள் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் தமிழ் தொலைக்காட்சிகள் புலிகள் முத்திரை குத்தபட்டு தடை செய்வது ஜரோப்பாவின் சுதந்திர ஊடகம் எப்படி யானது என்பதை தமிழர்கள் இப்போ நேரே அறிகிறார்கள்...

ஏன் தீபம் தொலைக்காட்சிக்கு மாத்திரம் இந்த தொந்தரவு இல்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது அருமை உறவின் கருத்தை இங்கே முன் மொழிகின்றேன்.

இதனையும் நோக்கி விட்டு தொடருங்கள் :icon_idea:

சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தம்.அதனால்தான் எங்களால் தொலைக்காட்சி சேவையை நடத்த முடியவில்லை என்;று காது குத்த வேண்டாம்.அல்ஜசீரா தொலைக்காட்சியை நிறத்துவதற்கு அமெரிக்கா கொடுக்காத அழுத்தமா?புலம் பெயர்ந்த குர்தியர்களால் பிரான்சிலும் ஜேர்மனியிலும் இருந்து நடத்தப்படும் (3) தொலைக்காட்சிகளை நிறுத்தும்படி துருக்கி அரசு கொடுக்காத அழுத்தமா? பலஸ்தீன வானொலியையும் தொலைக்காட்சியையும் தடுப்பதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் செய்யாத முயற்சியா? இவற்றையெல்லாம் தாண்டி இந்த வானொலிகளும் தொலைக்காட்சிகளும் எவ்வாறு செயற்பட்டு வருகின்றன? என்பதை பற்றி யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா? நமது உடகத்துறைக்குள் நான் பெரிதா நீ பெரிதா என்ற போட்டி? ஊடகத்துறை சாராதவர்கள் உடக கட்டமைப்பை தீர்மானிக்கும் அவலம்.(தாயகத்திலே ஊடகத்துறை சார்ந்தவர்களாலே ஊடக கட்டமைப்பும் ஊடக வடிவமும் தீர்மானிக்கப்படுவதோடு ஊடகத்துறை சார்ந்தவர்களே ஊடகங்களுக்கு பொறுப்பாகவும் இருக்கிறார்கள்)நான் அறிந்த வரை புலம் பெயர்ந்த சிங்களவர்கள் 3 தொலைக்காட்சிகளை நடத்துகிறார்கள்.12 வரையிலான புலம்பெயர்ந்த சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் ஊடகத்துறை கல்வி கற்று சர்வதேச ஊடகங்களுக்கு நுழைந்திருக்கிறார்கள்.அங்கு நமக்கெதிரான பரப்புரையை தொழில் சார் முறையில் திறம்படச் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம் எத்தனை பேரை தொழில் சார் உடகவிலாளர்களாக உருவாக்கி சர்வதேச ஊடகப்பரப்புக்குள் நுழைந்திருக்கிறோம்?உண்மையில் உடகங்கள் என்ற சொல்லிக் கொண்டு இங்கு நடக்கும் கூத்துகளை பார்க்கும் பொழுது தாயகத்தில் களமுனையில் நின்று ஏதாவது செய்திக்கலாமே என்று மனம் வருந்துகிறது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரிசனம் தொலைக்காட்சியின் செய்மதியினை இஸ்ரேல் நிறுத்துகிறது!

தரிசனம் தொலைக்காட்சியின் செய்மதியினை இஸ்ரேல் அரசாங்கம் நிறுத்தவுள்ளதாக இன்று (20.06.2008) அறிவித்துள்ளது.இதனால் இன்னும் சில நாட்களில் தரிசனம் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு அனைத்தையும் நிறுத்தும் நிலமை எற்பட்டுள்ளது.

இலங்கை அரசின் நெருக்கடி காரணமாக தாம் செய்மதியினை நிறுத்துவதாக செய்மதி நிறுவனம் தெரிவித்துள்ளது. தரிசனம் தொலைக்காட்சி விடுதலைப்புலிகளுக்கு ஆதராவு தெரிவித்து வரும் காரணத்தால் செய்மதியினை நிறுத்துமாறு இலங்கை அரசு இஸ்ரேல் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளது. தமிழ் ஊடகங்களுக்கு இலங்கையில் மட்டும் அல்லாது தற்பொழுது புலம் பெயர் நாடுகளிலும் ஊடக அடக்குமுறையினை மேற்கொண்டு வருகின்றது.

http://www.tamilseythi.com/tamilar/tharisa...2008-06-20.html

எமது விடுதலைப் போராட்டத்தில் மிகப் பெரிய பேராழிவுகளை உண்டாக்கியதில் இ;;சுரேலின் பங்கு மிக முக்கியமானது.சிங்கள இராணுவத்தை பலப்படுத்தியதிலும் பௌத்த சிங்கள பேரனவாதத்துக்கு தோள் கொடுப்பதிலும் முதல் நாடாக இருக்கும் இசுரேலில் தரிசனத்தை பதிவுசெய்தின் பின்னணி அதிhச்சயளிக்கிறது

சிறிலங்காவிலும் இந்தியாவிலும் எப்படி தமிழ் தேசியத்துக்கு ஆதரவான ஒரு தொலைக்காட்சியை பதிந்து நடத்த முடியாதே அவ்வாறே தங்களது விடுதலைக்கும் போராடும் பலத்தீனிய மக்களின் கரலை அவர்களது வானொலி தொலைக்காட்சிகளை அழிப்பதற்கும் தடுப்பதற்கும் இடையறது முயன்று கொண்டிருக்கும் இசுரேல் நாட்டில் எமக்கான ஒரு தொலைக்காட்சியை பதிந்துவிட்டு அந்த நாடு எமது பரப்புரைக்கு உதவும் என்று மற்றவர்களை நம்ப வைத்தது உண்மையிலேயே.......... இதற்குமேல் நான் அதைச் சொல்ல விரும்பவில்லை

Edited by athiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரிசனம் தொலைக்கட்சிக்கோ அந்த தொலைக்காட்சி கொண்டிருக்கும் உலகநாடுகளின் அனுமதி பத்திரத்திற்கோ எந்த சிக்கலும் இல்லை.

செய்மதி தொடர்புக்கு மட்டுமே இலங்கை அரசு ஆப்பு இறுக்கியுள்ளது.

அதுவும் சட்டபடியாக இல்லை

நாடுகளின் இராணுவ வர்த்தக உறவு ரீதியாகவே

ஆகவே

பிரித்தானியா, ஜரோப்பிய நாடுகளில் செல்வாக்கைவிடவும் சட்டமே பலமானது,

ஆகவே

ஒரு புலிகளை தடை செய்த நாடாக இருந்தாலும்

சட்டபடியாக ஒரு தொலைக்காட்சியை நாம் நடாத்தும்போது இலங்கை அரசு இத்தகய குரங்கு சேட்டைகளை விடமுடியாது.

ரி.ரி.என் என்றாலும் சரி தரிசனம் என்றாலும் சரி சட்டபடி ஒரு தொலைக்காட்சியாக இயங்க முயற்சிக்காத வரைக்கும் அவை போலி தொல்லைக் காட்சிகளாக மட்டம் இருந்தவிட்டு போகும்.

தீபம் தொலைக்காட்சி புலிகளை தடை செய்த பிரித்தானியாவில் இருந்து சட்டபடி இயங்ககிறது. பலிகளின் செய்திகளை வெளியிட்டுக்கொண்டதான் இருக்கிறது. (காரணம் பிரித்தானியாவில் புலிகளை தடை செய்தாலும் பலிகள் தொடர்பான செய்திகளை வரையறைகளுடன் வெளியிடும் சட்ட உரிமை ஊடகத்திற்கு இருக்கிறது ஆனால் இதைபற்றி எந்த தமிழனும் சிந்தித்தது இல்லை)

சிறிலங்காவிலும் இந்தியாவிலும் எப்படி தமிழ் தேசியத்துக்கு ஆதரவான ஒரு தொலைக்காட்சியை பதிந்து நடத்த முடியாதே அவ்வாறே தங்களது விடுதலைக்கும் போராடும் பலத்தீனிய மக்களின் கரலை அவர்களது வானொலி தொலைக்காட்சிகளை அழிப்பதற்கும் தடுப்பதற்கும் இடையறது முயன்று கொண்டிருக்கும் இசுரேல் நாட்டில் எமக்கான ஒரு தொலைக்காட்சியை பதிந்துவிட்டு அந்த நாடு எமது பரப்புரைக்கு உதவும் என்று மற்றவர்களை நம்ப வைத்தது உண்மையிலேயே.......... இதற்குமேல் நான் அதைச் சொல்ல விரும்பவில்லை

athiyan,

இஸ்ரேல் நாட்டின் ஜென்மவிரொதிகளான ஈரானோடு கூடிகுலவியபோதும் இனவாத இலங்கை அரசுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் இஸ்ரேல் பின்நிற்கவில்லை.

இந்தியா தனது விரோதநாடுகளான சீனா, பாகிஸ்தானோடு கொலைகார இலங்கை அரசு கைகோத்தபோதும் அதற்கு கோடிக்கணக்கில் உதவி செய்வதை நிறுத்தவில்லை.

நாங்கள் ஏலாவளிகள் என்று எல்லாரும் நினக்கிறார்கள். உலகபந்து முழுவதும் பரந்துவாழும் நாம் தான் எங்களுக்காக எதையும் செய்யவேண்டும். தளரோம். தொடர்வோம்.

உலகமெங்கும் விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள் தமக்கென நாடு அமைக்கப்போராடிய வரலாற்றை மறந்துவிட்டார்கள். (பாலஸ்தீனியர்களின் நிலத்தை அபகரித்தது என்பது தனிக்கதை) இன்று அவர்கள் உலக நாடுகளில் குறிப்பாக வல்லரசு நாடுகளில் சக்தி வாய்ந்தவர்களாக Policy makers ஆக இருக்கிறார்கள். பணம் அவர்களிடம் இருக்கிறது.

நாங்கள் எல்லா நாடுகளிலும் வாழ்ந்தாலும் அந்த நாட்டு அரசியலில் எங்கள் செல்வாக்கை செலுத்தும் அக்கரை இல்லாததினால் எங்களால் எதுவும் செய்ய முடிவதில்லை.

நாங்கள் வாழும் நாடுகளில் உள்ள Main stream பத்திரிகைகள்,ஊடகங்களோடு தொடர்பு வைக்கவேண்டும்.

வாழ்ந்தோம் போனோம் என்று இனியும் இருக்கவேண்டாம். ஆனால் எங்கள் நினைப்பு இலட்சியத்தில் இருக்கட்டும்.

Edited by Ponniyinselvan

  • கருத்துக்கள உறவுகள்

தரிசனம் நின்றுவிட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரிசனம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது!

தரிசனம் தொலைக்காட்சி இன்றுடன் (21-06-2008)தனது சேவையினை நிறுத்தியுள்ளது. இஸ்ரேல் அரசாங்கம் தனது செய்மதியினை நிறுத்துவதாக நேற்று அறிவித்திருந்தது. இலங்கை அரசு தரிசனம் தொலைக்காட்சி விடுதலைப்புலிகளுக்கு சார்பாக நடப்பதாக கூறி இஸ்ரேல் அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் தெரிவித்து செய்மதியினை நிறுத்தியுள்ளது.

இலங்கை அரசு தற்பொழுது புலத்தில் வாழும் ஈழத்தமிழர்களின் எழுச்சிகளை நிறுத்துவதற்கு தீர்மானம் செய்து அனைத்தையும் நிறுத்தி வருகின்றது.

மேற்கு நாடுகளில் ஊடக அடக்குமுறையினை மேற்கொண்டு வருகின்றது. இதனை எந்த நாடுகளும் கண்டனம் செய்யாமல் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு வேதனையை தருகின்றது.

இது போன்ற ஊடக அடக்குமுறை நடக்காமல் இருக்க வேண்டுமானல் அனைத்து ஈழத்தமிழர்களும் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்திற்கான போரட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

http://www.tamilseythi.com/tamilar/tharisa...2008-06-21.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.