Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் கடும் இழப்பு - 25 போராளிகள் வீரச்சாவு

Featured Replies

  • தொடங்கியவர்

இன்னுமொரு அவதானிப்பை பாருங்கள்.. ஓயாத அலைகள் 3 இல் மீட்கப்பட்ட சாவகச்சேரியில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேற்றப்பட்டதில் இருந்து புலிகள் இதுவரை நிலங்களை தக்க வைக்க போராடி மடிந்து போகின்றனரே தவிர.. புதிதா எதையும் கைப்பற்றவில்லை.

சாவகச்சேரி சமரில் இருந்து இராணுவம் நூற்றுக்கணக்கான போராளிகளின் உடலங்களை கையளித்துள்ளது. குறிப்பாக இராணுவத்தின் விமானப்படை மற்றும் பல்குழல் மற்றும் இதர சூட்டாதரவுத் திறன் வளர்ச்சியடைந்த பின் புலிகள் உடலங்களை பல சமர்க்களங்களில் கைவிட்டு விட்டு வரும் நிலையே நீடிக்கிறது.

இது.. பல கேள்விகளை எழுப்பவே செய்கிறது..??! இது குறித்து இளந்திரையன் அவர்கள் எந்தத் தகவலும் சொல்லவில்லை..??! :):D

கேள்விப்படும் செய்திகளைப் பார்க்கும் போது போராளிகள் எதிர்பாராத நேரத்தில் அவர்களின் முகாம் முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறதாக் தெரிகிறது. 25 போராளிகளின் இழப்பு விடுதலைப் புலிகளிற்குப் பேரிழப்பு என்பது உண்மைதான். இது குறித்து மக்களிற்கு விளக்கத்தை விடுதலைப் புலிகள் விரைவில் தெரிவிப்பார்கள்.

ஓயாத அலைகள் மூன்று யாழில் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து அங்கு படையினரால் கொண்டுவரப்பட்ட பல்குழல் பீரங்கிகளின் வரவைத் தொடர்ந்து போர்ச்சூழலில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. எறிகணைச் சூட்டாதரவினால் ஏற்படும் இழப்புக்களைக் குறைப்பதற்காக படையினருக்கு மிக மிக அருகில் நின்றே சமரிடவேண்டிய ஆபத்தான களநிலைமை அப்போது ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாகவே வீரச்சாவடைந்த பல போராளிகளின் உடல்கள் படையினரிடம் இழக்க வேண்டியேற்றபட்டது.

எனினும் தீச்சுவாலைப் படைநடவடிக்கைகையைத் தொடர்ந்து தற்காப்பு போர்முறையில் பாரிய மாற்றங்கள் வடபோர்முனையில் ஏற்பட்டன. என்னதான் படையினர் பாரியளவில் எறிகணைச் சூட்டாதரவையோ அல்லது வான் தாக்குதலையோ மேற்கொண்டாலும் போராளிகளின் இழப்புக்கள் மிகக்குறைவாகவே அமைக்கின்றன. படையினரின் எந்தவொரு படை நடவடிக்கையுமே அங்கு வெற்றியைக் கொடுத்ததில்லை.

மன்னார் வவுனியா மணலாறு களமுனைகளில் வடபோர் முனை போன்று போராளிகளின் காப்பரண்கள் நெருக்கமாக அமைந்திருக்கவில்லை. வடபோர்முனையில் ஒரு காப்பரணில் போராளிற்கு சிக்கல் என்ற அதற்கு அருகில் இருக்கும் காப்பரணிலிருந்து உதவி கிடைக்கும். ஆனால் மன்னார் - வவுனியா - மணலாறு களமுனைகளில் இருக்கும் போராளிகளின் காப்பரண்களிற்கிடையேயான தூரம் அதிகமானது. இங்கே படையினர் தனியொரு அல்லது இரு காப்பரண்களை இலக்கு வைத்தே நகருகின்றனர். சிலவேளைகளில் இரகசிய நகர்வை மேற்கொண்டு சடுதியான தாக்குதலை நடத்தி குறித்த காப்பரணைக் கைப்பற்றுவார்கள் அல்லது இலக்கு வைக்கப்படும் காப்பரண்களையும் சூழ சூழ உள்ள பகுதிகள் மீதும் பாரிய எறிகணைச் சூட்டாதரவை வழங்கி வழங்கல்களை தடுத்த பின்னரே அவற்றை நெருங்கி தாக்குகின்றனர். இப்படியான தாக்குதல்களிலிலேயே போராளிகளின் வித்துடல்கள் படையிரின் கைகளிற்குச் செல்கின்றன. எனினும் இப்படியான தாக்குதல்களிற்கான வாய்ப்புக்கள் அண்மையாக நாட்களாகக் குறைந்து பெரியளவில் படையினர் நிலங்களை வல்வளைப்புச் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த மூன்று நான்கு நாட்களிற்கு பாரியளவு நிலங்கள் வல்வளைப்புச் செய்ய இடம்கொடுக்கப்பட்டிருக்கிறத

  • Replies 63
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதுகாப்பு வேலியில் இடையிடையே இராணுவம் முன்னேறி பலமுனைகளைத் திறக்கும்போது இப்படி நடக்கும். ஏனைய இடங்களையும் விட்டுப் பின்வாங்கி பாதுகாப்பு வேலியை ஓரளவாவது நேர்கோடாக அமைக்காத பட்சத்தில் தற்காப்புப் போர்முறை மிக அதிக இழப்பைச் சந்திக்குமென்பது யுத்த நடைமுறை.

ஜெயசிக்குறுவில்கூட கண்டிவீதியில் தாண்டிக்குளத்துக்குப்பிறகு இராணுவம் சண்டைபிடித்து எந்த இடத்தையும் பிடிக்கவில்லை. பக்கவாட்டாக காடுகளுள் முன்னேறியதால் புலிகள் படிப்படியாக கண்டிவீதியில் பின்வாங்கி மாங்குளம்வரை வந்தார்கள்.

இப்போது பின்வாங்குவதில்லை என்று நின்றதாலோ என்னவோ இப்படி நடந்திருக்கிறது. முன்னேறி நிற்கும் இராணுவத்தின் இருமுனைகள் திடீரென ஒரு நடவடிக்கையில் தொடுக்கும்போது அதற்கிடையில் நிற்கும் புலியணிகள் முழுமையான முற்றுகைக்குள் அகப்படும்.

சிலமுனைகள் முன்னேறி நிற்கும் இராணுவத்துக்கும் இதேயளவு பாதகமுண்டு. ஆனால் புலிகள் வலிந்த தாக்குதல் செய்தால் மட்டுமே அது பாதகமாக அமையும்.

தற்போது நடந்துள்ள இச்சம்பவத்தோடு புலிகள் இன்னும் சிலஇடங்களிலிருந்து பின்வாங்கவேண்டி வரும். அதேவேளை இந்நடவடிக்கை, புலிகளை சில மட்டுப்படுத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களைச் செய்ய வைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா- வவுனியா கள முனையில் இராணுவம் கண்டுள்ள முன்னேற்றம்.

mannarvavuniya1tc3.jpg

img: nedukks

சிவப்பு தடித்த கோடு - புதிய தற்காலிக முன்னணி நிலைகள்

மஞ்சள் தடித்த கோடு - சமாதான காலத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த முன்னணி நிலைகள்.

சிவப்பு சரிவுக் கோடு - இராணுவம் பிடித்த மற்றும் பிடிக்க உடனடிச் சாத்தியமுள்ள பகுதிகள்.

(எல்லைகள் பருமட்டானது.)

-----------

இதற்கிடையே கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் இதே மன்னார் - வவுனியா போர் முனைகளில் நடந்த சண்டைகளில்..

வியாழக்கிழமை 25 போராளிகளின் உடலங்களும் வெள்ளிக்கிழமை மன்னார் களமுனையில் ஒரு போராளியின் உடலமுமாக மொத்தம் 26 உடலங்களைக் கைப்பற்றி உள்ள இராணுவம் தனது தரப்பில் மொத்தமாக 9 பேருக்கு காயம் மட்டும் என்று தெரிவித்திருக்கிறது.

மொத்தமாக இம் மாதத்தில் மட்டும் இராணுவம் 50க்கும் மேற்பட்ட போராளிகளின் உடலங்களை வன்னிப் போரரங்கில் கைப்பற்றிக் கையளித்துள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட போர்க்கலங்கள் உட்பட பல இராணுவ தளபாடங்களும் இராணுவத்தால் மீட்க்கப்பட்டுள்ளன. பெருமளவு நிலப்பிரதேசம் வன்பறிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இதே காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் குறைந்தது 3 - 5 இராணுவத்தின் உடலைகளை மட்டுமே கைப்பற்றி இருந்தனர். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சம் துடிக்குதையா .எமது மண்ணுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கங்கள். பார்க்கும் எங்களுக்கே இப்படி நெஞ்சம் துடிக்குது என்றால் இவர்களை வளர்த்து எடுத்த தலைவருக்கும் இவர்களின் போராடும் ஆற்றலைக்கண்டு வியந்த தளபதிகளுக்கும் இவர்களுடன் போராடிய ஏனைய சகோதரர்களுக்கும் என்ன சொல்லி அறுதல் சொல்வது என்று தெரியவில்லை. இதற்கு தலைவர் தகுந்த படம் கற்பிப்பார் . வீரர்களே உங்களது குருதி வீணாக சிந்தப்படவில்லை , இந்த மண்ணில் பிறக்கும் அனைவரும் உங்கள் பெயர் சொல்லி உங்களுடைய இலட்சியத்தி்ற்காக உழைப்பார்கள். இன்று தமிழீழத்திலே பூக்கும் அனைத்து பூக்களும் காவியமாகிப்போன எமது வீரர்களுக்ககவே பூக்கட்டும்.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இதே காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் குறைந்தது 3 - 5 இராணுவத்தின் உடலைகளை மட்டுமே கைப்பற்றி இருந்தனர்

கொல்லப்பட இராணுவம் பல. அவர்களின் உடல்களை கைப்பற்ற வேண்டிய அவசியமில்லையே. அனுராதபுரத்தில் எமது போராளிகலுக்கு ஏற்பட்ட நிலையை ஞாபக படுத்துவது நல்லது என நினைக்கிறேன்.

இன்னுமொரு அவதானிப்பை பாருங்கள்.. ஓயாத அலைகள் 3 இல் மீட்கப்பட்ட சாவகச்சேரியில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேற்றப்பட்டதில் இருந்து புலிகள் இதுவரை நிலங்களை தக்க வைக்க போராடி மடிந்து போகின்றனரே தவிர.. புதிதா எதையும் கைப்பற்றவில்லை.

என்றாலும் முகமாலையில் பல தடவை வாங்கி கட்டியதை இத்தருணத்தில் நினைவு கூருவோம். எதோ இழப்பில்லாமல் எங்கேயாவது போர் நிகழ்ந்தால் கூறும்படி கருத்து கனவான்களை கேட்கிறேன்.இன்று எமது போராளிகளுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.இப்படி எமது 30 வருட போரில் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. எல்லாவற்றையும் ஒரு படிப்பினையாக எடுக்க வேண்டும்.

முடிவாக எனது கருத்தும் உலக மக்களின் கருத்தும் என்னவெனில் ஒரு முன்னோக்கிய பாச்சல் என்பது நடைபெறும் போது இப்படியான தாக்குதல்களுக்கு எப்போதுமே இடம் இருந்திருக்காது.

விடுதலை புலிகளின் வரலாற்றில் வருடக்கணக்கான சண்டைகளில் கூட ஒரிரு தினங்களில் வென்ற களங்கள் பல பல.

இதற்கு உதாரணங்கள் பல. என்றாலும் யாழ் கள விலாங்கு மீன்களாக வாழ்வதிலும் பார்க்க சாதாரண மகன் போல வாழ்வது எவ்வளவு மேல்.

இதே 25 போராளிகள் தான் அனுராதபுரத்தை துவம்சம் செய்தவர்கள். ஆகவே இப்போராளிகள் போராடி மடிவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை என்னும் போதே தெரிகிறது சதி யின் வடிவம் என்று.

அது சரி உலக நாடுகளின் அங்கீகாரம் என்றொரு நிலைமை வராமல் ஏன அவசரப்பட்டு இடங்களை பிடிக்கவேண்டும்.?

வீழ்ந்து விதையாகிபோன வீரர்களுக்கு வீர வணக்கங்கள்

வீரவணக்கம் செலுத்தி வீரு கொண்டு எழும் எம் வீர வேங்கைகளுக்கு ஆறுதல் சொல்லி ஆக வேண்டியதற்க்கு உதவியாய் இருக்க வேண்டியவர்கள் அதைரியப் படக்கூடாது என உரிமையுடன் தமிழ் ஈழ சகோதரர்களை கேட்டுக் கொள்கிறேன். முன்னைய இழப்புகளை முறைப்படுத்தி கூறி சோகத்தில் இருக்கும் எம்மவரை இன்னும் இன்னும் அதைரியத்துக்கு ஆளாக்குவதை தயவு செய்து தவிர்க முயலுங்கள். சுய பலத்தை மதிப்பீடு செய்யும் ஆற்றலும் அறிவும் தமிழர் சேனைகளுக்கு இருக்கும் என்பதனை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது போல் அம்மக்களையும் புலம் பெயர் மக்களையும் உளவுரன் பாதிக்க கூடிய வகையில் நாமே ஏன் பிரசங்கம் செய்ய வேண்டும்? அதைத் தான் சிங்களவர் வெகு சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார்களே!

எதிரி சாதாரனமானவனாக இருப்பினும் அவனுக்கும் பின்னால் இருந்து அவனுக்கு வேண்டியதை செய்து அவன் படைநடத்த பலவும் செய்து கொண்டிருப்பவர்கள் உலகத்து நாடுகளில் பல என்பதால் போர் களங்களில் வெற்றி தோல்வி, பின்னடைவு என்பது இயல்பு இறுதித் தீர்வை, கனவை, லட்சியத்தை எட்டும் வரை அதைரிய படாமல் தாக்கு பிடிப்பவர்க்கே வெற்றி விடைக்கும். அதைத்தான் நம் தளபதிகள் தாக்கு பிடிப்பவர்க்கே வெற்றி என்று கூறிவருகிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். எம் சகோதர்களிடம் வீர லட்சுமி ஏற்கனவே இருக்கிறால் அதனால் அவர்களிடம் வெற்றி லட்சுமி விரைவில் வந்து சேர்வாள் என்ற நம்பிக்கையுடன் உலகத்திலிருக்கும் அத்துனை படைகள அறிவையும் அவர்கள் பெற ஆண்டவனை பணிந்து போற்றி ஆக வேண்டியதை செய்து விவேகத்துடன் கடமையாற்றுங்கள் நாளைய வரலாறு நம்மை பேசும். இன்றைய பின்னடைவுகள் நாளைய வெற்றிக்கு பாதையாக, பாடமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

நன்றி

சிவராஜா

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்.. நாங்கள் சொல்லிக் கொள்கின்றோம் இராணுவத்துக்கு இழப்பு என்று ஆனால் ஆதாரங்களை எம்மால் கொடுக்க முடியவில்லையே முகமாலை போன்று.

போரில் இழப்புக்கள் சகஜம். ஆனால் சாவகச்சேரி முதல் இன்று வரை ஒவ்வொரு சண்டையிலும் உடலங்கள் விடப்பட்டு விடும் வகையில் சண்டை இப்போ தீவிரமாக எதிரி தரப்பால் நடத்தப்படுகிறதா என்ற கேள்வி வருகிறது.

அப்படியாயின் அதை சமாளிப்பது எப்படி.

கடந்த ஒரு வாரத்தில் 7 + 5 + 1+ 25 என்று விடுதலைப்புலிகளின் உடலங்கள் கையளிப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் எமது ஊடகங்களிலோ முறியடிப்பு முறியடிப்பு என்று தான் செய்தி வருகிறது. இந்தப் போராளிகளின் தியாகங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன.

சர்வதேசம் அங்கீகரிக்கும் வரை இராணுவம் நிலங்களைப் பிடிக்க அனுமதிக்கலாம் என்றீங்களா நுணாவிலான்.

அப்படி அனுமதித்துவிட்டால் சர்வதேசம் எம்மை அங்கீகரிக்கும் என்றா நினைக்கிறீர்கள்.. எமது போராளிகள் களத்தில் வீழ்வதை சர்வதேசம் கருசணையோடு பார்க்கிறது என்றா நினைக்கிறீர்கள். இல்லவே இல்லை. எமது போராளிகளின் ஒவ்வொரு அடியும் வெற்றி அடியாக என்று மாறுகிறதோ அப்போதுதான் எம்மை சர்வதேசம் அங்கீகரிப்பது பற்றி சிந்திக்கும். இப்படி அடிவாங்கிக் கொண்டிருந்தம்.. ஏறி மிதிப்பார்கள் எல்லோரும். றோட்டில போற சிங்களவன் கூட மிதிப்பான். :)

எமது போராளிகளின் உடலங்களைக் கைப்பற்றி நகைப்புக்கிடமான வேலைகளைச் சிங்களவன் செய்து கொண்டிருக்கிறான்..

20080628_mann2.jpg

சிங்கள பாதுகாப்பு அமைச்சு.

இதில் வழமையாக சண்டையில் ஈடுபடும் சிங்கள இராணுவத்தினர் உடலங்களை கையளிப்பதைத் தவிர்த்து.. சண்டைக் களத்துக்கே போகாத சிங்களத்திகளைக் கொண்டு கையளிக்கின்றனர்..

இதன் அர்த்தம் என்ன என்று கூட எம்மால் உணர முடியாமலா உணர்வற்று இருக்கிறோம்...! இந்த நிலை எமது போராளிகளுக்கு ஏன்.. இன்னும் தொடர்கிறது என்ற ஆதங்கம் பொதுவாக மக்களிடம் உள்ள ஒன்றுதான்.

Edited by nedukkalapoovan

சில வேளைகளில் யதார்த்தம்... கசப்பானது... நம்பமுடியாதாயும் இருக்கும்..

இராணுவ நகர்வுகள்.. அதற்கான பதில் எல்லாம்.. நாங்கள் சிந்திப்பதற்கும்... நாங்கள் தீர்வை எட்டநினைப்பதற்கும் முன்... சிந்திக்கவும் செயற்பட வைக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்...

நீங்கள் உங்கள் மனங்களை குழப்பிக்கொள்ளாமல்..உங்களால் இயன்ற ஊக்குவிப்புக்களை தமிழின விடியலுக்கு வழங்குங்கள்... மனச்சோர்வை உண்டுபண்ணக்கூடிய கருத்துகளை யாரும் தயவுடன் எழுதாதீர்கள்..ஒவ்வொரு தமிழனுக்கும் விடியலில் நம்பிக்கை வேண்டும்..ஒவ்வொரு தமிழனது பங்களிப்பும் தமிழின விடியலுக்கு வேண்டும்..

களமாடி வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கனவோடு களமாடி சாவடைந்த வீரர்களிற்கு வீரவணக்கங்கள். இதயம் கனக்கிறது. வெல்வோம் நிச்சயம் வெல்வோம். இது ஒரு சதியாகத்தான் கட்டாயம் இருக்கும்.

நிமிர்வோம் நாமெல்லோரும்......

இது சதிபோல்தான் எனக்குப்படுகிறது

ஏனெனில் உடல்களில் காயங்களில்லை

அதை விட முக்கியபடையணியென்றும் கதைவிடுகிறார்கள்

எனவே போராளிகளையும் எம்மையும் சோர்வடைய வைக்க இப்படி நாடகமாடலாம்???

அதேநேரம் 3 நாட்களுக்குமுன் என்று நினைக்கின்றேன்?

மன்னாரில் 45 பேர் கைதானதாக தகவல்கள் தெரிவித்தன....

அவர்களாக கூட இருக்கலாம்???

எனவே உறுதிப்படுத்தும்வரை எந்த ஊகங்களையும் தெரிவிக்காமல் இருப்போம்....

இராணுவம் அங்கே முன் நேறி விட்டது இங்கே முன் நேறி விட்டது என்று புலத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டு எதோ வெட்டிப் புடுங்குபதைப் போல் எழுதுபவர்களும் சிறிலங்கா இராணுவத்தின் பிரச்சரைத்தை மேற் கொள்ளுகிறவர்களும் ஜெயசிகுரிவின் போது இராணுவம் மாங்குளம் வரையும் முன் நேறியதையும் பின்னர் ஓர் இரு கிழமைகளில் பாரிய பின் அடைவைச் சந்தித்ததையும் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இராணுவத் தந்திரோபாயாம் என்பது எதிரியைத் தோற்கடிப்பதிலும் இறுதி வெற்றியை அடைவதிலுமே இருக்கிறது.

அதற்கு இராணுவ மூலோபாயாம் பற்றிய அடிப்படை அறிவும் போரிடும் நடைமுறைப் பட்டறிவு என்பன வேண்டும்.சிறிலங்கா இராணுவத்தின் வளம் என்ன எமது வளம் என்ன இராணுவத்தின் மூலோபாய நகர்வு என்ன அதற்கான எமது மூலோபாயம் என்ன என்பதையெல்லாம் தீர்மனிக்க வல்லவர்கள் நாற்காலியில் இருந்து கணணி முன் இருந்து தட்டிக் கொண்டு இருப்பவர்கள் அல்ல.

தற்காப்பின் போது எமக்கு உயிரிழப்புக்கள் குறைவாகவும் முன் நேறும் இராணுவத்திற்கு அதிகமாகவும் இருக்கும்.இராணுவம் பல முனைகளில் முன் நேறும் போதும் பரந்து பட்ட இடங்களைப் பிடிக்கும் போதும் படைச் செறிவென்பது குறைந்து கொண்டு போகும்.அவ்வாறு நிகழும் போது படைத் தரப்பின் பல்வீனமான பல முனைகள் வெளிப்படும்.அத்தகைய நிலையிலேயே புலிகள் தமது எதிர்ச் சமரைத் தொடங்குவார்கள்.ஒரு இராணுவம் வெற்றி பெறுவது என்பது எதிரியின் வளங்கள் தமது வளங்கள் பற்றிய மதிப்பீட்டிலும் முலோபாய நகர்வுகளிலுமே தங்கி இருக்கிறது.சண்டை என்பது இறுதி நிகழ்வு.முலோபாயத்திலையே வெற்றி தோல்வி என்பது நிச்சயிக்கப்படுகிறது.வேலுப்

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் அங்கே முன் நேறி விட்டது இங்கே முன் நேறி விட்டது என்று புலத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டு எதோ வெட்டிப் புடுங்குபதைப் போல் எழுதுபவர்களும் சிறிலங்கா இராணுவத்தின் பிரச்சரைத்தை மேற் கொள்ளுகிறவர்களும் ஜெயசிகுரிவின் போது இராணுவம் மாங்குளம் வரையும் முன் நேறியதையும் பின்னர் ஓர் இரு கிழமைகளில் பாரிய பின் அடைவைச் சந்தித்ததையும் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

தற்காப்பின் போது எமக்கு உயிரிழப்புக்கள் குறைவாகவும் முன் நேறும் இராணுவத்திற்கு அதிகமாகவும் இருக்கும்.இராணுவம் பல முனைகளில் முன் நேறும் போதும் பரந்து பட்ட இடங்களைப் பிடிக்கும் போதும் படைச் செறிவென்பது குறைந்து கொண்டு போகும்.அவ்வாறு நிகழும் போது படைத் தரப்பின் பல்வீனமான பல முனைகள் வெளிப்படும்.அத்தகைய நிலையிலேயே புலிகள் தமது எதிர்ச் சமரைத் தொடங்குவார்கள்.ஒரு இராணுவம் வெற்றி பெறுவது என்பது எதிரியின் வளங்கள் தமது வளங்கள் பற்றிய மதிப்பீட்டிலும் முலோபாய நகர்வுகளிலுமே தங்கி இருக்கிறது.சண்டை என்பது இறுதி நிகழ்வு.முலோபாயத்திலையே வெற்றி தோல்வி என்பது நிச்சயிக்கப்படுகிறது.வேலுப்??ிள்ளை பிரபாகரனின் இராணுவ முலோபாயத் திறன் என்பது முன்னரும் பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒன்று..

இடை இடையே சில துர்ப்பாகியமான இழப்புக்கள் ஏற்படும். போர் என்னும் போது இது நிகழ்த்தான் செய்யும்.அவற்றில் இருந்து பாடக்களைக் கற்று திருத்திக் கொள்ள புலிகளுக்குத் தெரியும்.

ஆகவே இங்கிருந்து அரைகுறை அறிவுடன் தாங்கள் தான் புலிகளின் இராணுவத் தந்திரோபாயங்களை வழி நடாதுவதாகவும் புலிகள் என்ன செய்கிறார்கள் எனவும் பிரசங்கம் செய்பவர்கள் கொன்ச்சக் காலம் பொறுத்து இருங்கள்.களத்தில் இதற்கான பதில்கள் மிக விரைவில் கிடைக்கும்.உங்கள் அவசரத் தனம் மேதாவித் தனம் என்பன எதிரியின் உளவியற் பிரச்சாரதுக்கே உதவுதாக இருக்கும். நீங்கள் நினைப்பதைப் போல் போர் புரிந்து அனியாயமாக உயிர்கள் இழக்கப்பட முடியாது.அதற்கான பொறுப்பு தலமைக்கு இருக்கிறது.

இராணுவ மூலோபாயம் பற்றிய ஆளமான புரிதல் இன்றி வரைபடம் கீறுபவர்கள் தங்கள் மேதாவித் தனத்தை கொன்சக்காலத்துக் அடைகாக்கவும்.பின்னர் புலிகள் வெற்றி பெறும் போது தாங்கள் தான் களத்தில் நின்று போரிட்டு வெற்றி பெற்றதைப் போல் துள்ளிக் குதிக்கலாம். :)

முக்கியநேரமறிந்து எழுதப்பட்டமடல்

நன்றி நாரதரே

ஆனால் உங்கள்பேருக்கும் இப்படியெழுதுவதற்கும் சம்பந்தமில்லை

ஏனெனில் நாரதர் சமாதானமாக்குபவரல்ல

சமரை ஏற்படுத்துபவர்???

நாரதர் சொல்வது உண்மை.

தோல்வி என்பது போரியல் வரலாற்றில் வழமை. நாம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு என்னவென்றாலும் கதைக்கலாம். ஒரு போராளி எவ்வளவு கடினப்படுகின்றான் என்பதை களத்தில் இருந்துது பார்ப்பவர்களிற்குத்தான் தெரியும். இழப்புக்களை உரமாக்கிக்கொண்டு எழுவோம் மீண்டும் எழுவோம். மனிதனாய்ப்பிறந்த எல்லோருக்கும் கவலை என்பது இருக்கத்தான் செய்யும். அதற்காக துவண்டு போகக்கூடாது. எமக்குள்ளே கவலைகைளைப்போட்டு வைததுவிட்டு வெளியுலகத்திற்கும் எதிரிகளிற்கும் முன்னால் நிமிர்ந்து நிற்போம். எம்மை மனரீதியாகவும் யாராலும் வெல்லமுடியாது என்பதை நிருபித்து காட்டுவோம்.

மேலே குறிப்பிட்டதுபோல 45பேர் கைப்பற்றப்பட்டதில் 25 ஆகவும் இருக்கலாம். கட்டாயம் தலைமைப்பீடத்தில் இருந்து அறிக்கை வரும். அவர்கள் எதையும் மறைக்கவில்லை.. ஆகவே பொறுத்திருப்போம். நிச்சயம் வெல்வோம். நிமிர்ந்து நிற்போம்

Edited by Paranee

  • கருத்துக்கள உறவுகள்

மேலே குறிப்பிட்டதுபோல 45பேர் கைப்பற்றப்பட்டதில் 25 ஆகவும் இருக்கலாம். கட்டாயம் தலைமைப்பீடத்தில் இருந்து அறிக்கை வரும். அவர்கள் எதையும் மறைக்கவில்லை.. ஆகவே பொறுத்திருப்போம். நிச்சயம் வெல்வோம். நிமிர்ந்து நிற்போம்

போராளிகளின் தியாகங்களை இப்படிக் கொச்சைப்படுத்தும் செய்திகளால் கொச்சைப்படுத்தாதீர்கள். தமிழ்நெட்டில் இது குறித்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் விடுதலைப்புலிகளின் உடலங்கள் என்பது குறிப்பிடப்பட்டே உள்ளது.

களத்தில் எதிரியின் பெரும் சுடுபலத்துக்கு முன்னால் போராடி வீழும் வீரனின் வித்துடல்கள் எதிரியின் கைகளுக்குப் போயினும் அவை மதிக்கப்பட வேண்டியவையே.

**** என்பவர் போல் அடுத்தவரை திட்டித் தீர்பதற்கல்ல இந்த வேளை. மக்கள் மனங்களில் எழக்கூடிய கேள்விகளுக்கு விடை சொல்வதும்.. அவர்களின் உள திறனை அதிகரிக்கும். உண்மைகளை மறைக்கப் போய் எதிரியின் நகர்வுகள் வீட்டுப் படலைகளை தட்ட வைத்து மக்களை ஏமாற்றின் மக்கள் விரக்தியின் நிலைக்கே செல்வர்..! :)

Edited by மோகன்
***** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளின் தியாகங்களை இப்படிக் கொச்சைப்படுத்தும் செய்திகளால் கொச்சைப்படுத்தாதீர்கள். தமிழ்நெட்டில் இது குறித்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் விடுதலைப்புலிகளின் உடலங்கள் என்பது குறிப்பிடப்பட்டே உள்ளது.

களத்தில் எதிரியின் பெரும் சுடுபலத்துக்கு முன்னால் போராடி வீழும் வீரனின் வித்துடல்கள் எதிரியின் கைகளுக்குப் போயினும் அவை மதிக்கப்பட வேண்டியவையே.

**** என்பவர் போல் அடுத்தவரை திட்டித் தீர்பதற்கல்ல இந்த வேளை. மக்கள் மனங்களில் எழக்கூடிய கேள்விகளுக்கு விடை சொல்வதும்.. அவர்களின் உள திறனை அதிகரிக்கும். உண்மைகளை மறைக்கப் போய் எதிரியின் நகர்வுகள் வீட்டுப் படலைகளை தட்ட வைத்து மக்களை ஏமாற்றின் மக்கள் விரக்தியின் நிலைக்கே செல்வர்..! :)

இதில் கொச்சைப்படுத்த ஏதும் இருப்பதாக தெரியவில்லை

அறிக்கை வரும்வரை பொறுக்கும்படி கூறுவது சரிதானே???

களத்தில் எதிரியின் பெரும் சுடுபலத்துக்கு முன்னால் போராடி வீழும் வீரனின் வித்துடல்கள் எதிரியின் கைகளுக்குப் போயினும் அவை மதிக்கப்பட வேண்டியவையே.

இப்படிச்சொல்லி நீங்கள்தான் கொச்சைப்படுத்துமாப்போல் எனக்குத்தெரிகிறது????

அதென்ன???

வித்துடல்கள் எதிரியின் கைகளுக்குப் போயினும்

மதிக்கப்பட வேண்டியவையே.????

யார் நெடுக்காலபோவான் கொச்சைப்படுத்துவது. எந்த ஒரு உயிருமே விலைமதிப்பற்றது. யாரையும் கொச்சைப்படுத்த எமக்கு பழக்கப்படுத்தி தரப்படவுமில்லை. தலைமைப்பீடத்தில் இருந்து உண்மை அறிக்கை வரும்வரைக்கும் எதையுமே நம்பும் நிலையில் நாம் இல்லை. நாம் எதிரிக்கு எந்தளவிலும் விலைபோகமாட்டோம். ஏனெனில் நாம் தமிழர்கள். மனரீதியாக தமிழர்களை குறிப்பாக புலம்பெயர் தமிழர்களை தோற்கடித்துவிடலாம் என எதிரி நினைத்தால் அது அவனது மடைத்தனம். அதற்கு துணைபோகும் உங்களைப்போன்ற இரண்டகர்கள்தான் வெற்றிவந்தால் துள்ளிக்குதிக்கவும் தோற்றால் துவண்டு போயும் இருப்பீர்கள்.

25 புலிகள் பலியாகியிருந்தால் கட்டாயம் அது ஆள்பல ரீதியாக இழப்புத்தான் ஆனாலும் அவர்கள் வெறுமனே மடிந்திருக்கமாட்டார்கள் 10 எதிரியையாவது கொன்றுவிட்டுத்தான் இறந்திருப்பார்கள். அதுதூன் விடுதலைப்புலிகள். அவர்களின் தியாகத்திற்கு நாம் எப்போதுமே தலைவணங்க வேண்டும். நீங்களும் தமிழர் என்ற ரீதியில் சற்று சிந்தியுங்கள் உங்களுடைய சில செய்திகள் எதிரிக்கு உங்களுடைய விளம்பரமாகவே எமக்குத் தோன்றுகின்றது. காலம் கட்டாயம் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் நெடுக்காலபோவான் கொச்சைப்படுத்துவது. எந்த ஒரு உயிருமே விலைமதிப்பற்றது. யாரையும் கொச்சைப்படுத்த எமக்கு பழக்கப்படுத்தி தரப்படவுமில்லை. தலைமைப்பீடத்தில் இருந்து உண்மை அறிக்கை வரும்வரைக்கும் எதையுமே நம்பும் நிலையில் நாம் இல்லை. நாம் எதிரிக்கு எந்தளவிலும் விலைபோகமாட்டோம். ஏனெனில் நாம் தமிழர்கள். மனரீதியாக தமிழர்களை குறிப்பாக புலம்பெயர் தமிழர்களை தோற்கடித்துவிடலாம் என எதிரி நினைத்தால் அது அவனது மடைத்தனம். அதற்கு துணைபோகும் உங்களைப்போன்ற இரண்டகர்கள்தான் வெற்றிவந்தால் துள்ளிக்குதிக்கவும் தோற்றால் துவண்டு போயும் இருப்பீர்கள்.

25 புலிகள் பலியாகியிருந்தால் கட்டாயம் அது ஆள்பல ரீதியாக இழப்புத்தான் ஆனாலும் அவர்கள் வெறுமனே மடிந்திருக்கமாட்டார்கள் 10 எதிரியையாவது கொன்றுவிட்டுத்தான் இறந்திருப்பார்கள். அதுதூன் விடுதலைப்புலிகள். அவர்களின் தியாகத்திற்கு நாம் எப்போதுமே தலைவணங்க வேண்டும். நீங்களும் தமிழர் என்ற ரீதியில் சற்று சிந்தியுங்கள் உங்களுடைய சில செய்திகள் எதிரிக்கு உங்களுடைய விளம்பரமாகவே எமக்குத் தோன்றுகின்றது. காலம் கட்டாயம் பதில் சொல்லும்.

இன்றைய பொழுதில் கள நிலவரம் இப்படின்னு சொல்லுறது தப்பு.. ஆமி முன்னேறவே இல்ல.. நின்ற இடத்தில் இருந்து அரை அங்குலமும் நகரல்ல.. அப்படின்னு எழுதிறது.. உற்சாகமாக இருக்கும் என்று நீங்க நம்புறீங்க.

நான் உண்மைக் கள நிலவரத்தைச் சொல்லி எதிரியின் பிரச்சாரம் பொய்கள் கலந்து மக்களைக் குழப்ப அனுமதிப்பதிலும்.. மக்களை தெளிவுபடுத்தும் வகையில கள நிலமையை விளக்கனும் என்று சொல்கிறேன். இதுதான் எனக்கும் உங்களுக்கும் உள்ள வேறுபாடு.

மற்றும்படி.. எனது தேசம் பறிபோவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..! தொடர்ந்து ஓடிறதும் வாறதும் பின் ஓடிறதும் என்றிருக்கிறமே தவிர நிரந்தரமா எப்ப தங்கப் போறம் என்றது இன்னும் மக்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது..!

ஏதோ நல்லது நடந்து மக்களின் போராளிகளின் கனவுகள் மெய்ப்பட இறைவனை வேண்டுதலை விட என்ன செய்ய முடியும்..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இது சதி போலத்தான் தெரிகிறது

எவ்வாறு இருந்தாலும் ஆங்காங்கு ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணி கோடாலிக்காம்புகள் ஒழிக

அவர்களைத்தான் அழகு தமிழில் இரண்டகர்கள் என்று தற்போது தாயகம் அறிவித்துள்ளது.

பாரிய இழப்பொன்று தவிர்கக்கப்பட்டதனால் ஏற்பட்ட சிறிய இழப்புத்தான் இது

இது சிறிய இழப்பா என நீங்கள் நினைப்பது புரிகிறது

இதன் விபரம் வெளிக்கொணர வரும்பொழுது புரிந்துகொள்வீர்கள்

உறவுகளே மனம் தளராதீர்கள்

வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்.

தற்பொழுது பல துரோக நடவடிக்கைகள் யாழ் இடம்பெயர்வுக்காலத்தில் இடம்பெற்றது போல் பரவலாக இடம்பெறுகிறது என்பது யாவரும் அறிந்த ஒன்று. பல துரோகிகள் எதிரியின் நப்பாசைக்கு மயங்கி பல காட்டிக்கொடுப்புக்களில் ஈடுபடுகிறார்கள். அதனால் தற்பொழுது களை பிடுங்கும் வேலை நடக்கிறது எல்லாம் இன்னும் சிலகாலத்தால் முடிவு வரும்.....

அவர்களைத்தான் அழகு தமிழில் இரண்டகர்கள் என்று தற்போது தாயகம் அறிவித்துள்ளது.

யாரை சொல்கிறீர்கள்.?

வவுனியாவில் கடும் இழப்பு - 25 போராளிகள் வீரச்சாவு

இப்படி தலைப்பு போட்ட மின்னலையா.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களமாடி வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு முதலில் எனது வீரவணக்கங்கள்.

எப்போது எதனைச் செய்யவேண்டுமென இத்தனை வருடங்களாக மக்களுக்காகவே போர் புரிந்து வரும் விடுதலைப் புலிகளுக்குத் தெரியும். கொஞ்சப் பணமும் கொடுத்துவிட்டு போர்ச்சூழல் அற்ற நாடுகளில் வசித்துக் கொண்டும், கணனி முன் அமர்ந்து அலசுபவர்களுக்கும் அவர்கள் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. முதலாம், இரண்டாம், மூன்றாம் கட்ட ஈழப்போர்களின்போதெல்லாம் எமக்கு இவ்வாறு செய்திகள் வந்துகொண்டிருக்கவில்லை. அதுமட்டுமின்றி, இவ்வகையான இணையச் செய்தி ஊடகங்களும் அவ்வளவாக இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் தரும் செய்திகள் மட்டுமே எமக்கு அப்போது தெரிந்திருந்தன. அதனால், அப்போது ஏற்பட்ட இழப்புகளைப் பற்றி யாருக்கும் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. ஒரு சிறிய வெற்றியாக இருந்தாலும் அதனைப் பெரிதாகக் கொண்டாடி மகிழ்ந்தோம். ஒவ்வொரு பிரதேசத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவர்கள் பலவருடங்கள் போராடினார்கள். அவற்றுள் எத்தனை பிரதேசங்களை அவர்கள் கைவிட்டார்கள் என்று அவர்களுக்குத்தான் தெரியும்.

சமாதானகாலத்திற்குப் பின்னர், எமது எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டன. இப்போதெல்லாம் ஒரு சிறிய தவறு நடந்தாலும் அதனைப் பெரிதாக்குவதிலேயே அநேகம் பேர் இருக்கிறார்கள். எத்தனை பெரிய வெற்றிகள் வந்தாலும் அவை இப்போதெல்லாம் பெரிதாகத் தோன்றுவதே இல்லை.

விரைவில் புலம்பெயர்நாடுகளில் வாழும் இரண்டகர்களுக்கும் ஒரு முடிவு வரும். மீண்டும் நாளாந்த செய்தித் தொகுப்புக்காகக் காத்திருக்கும் நிலை விரைவில் வரவேண்டும். அப்போதுதான் சிலருக்கு விளங்கும்.

நச்சு வாயு பயன்படுத்தப்பட்டுள்ளது......சு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.