Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசர எச்சரிக்கை???

Featured Replies

அவசர எச்சரிக்கை: அன்பான கருத்துக்கள உறவுகளுக்கு, சில விசமிகள் யாழ் இணையத்தை ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்கள். (porntube) malware எனப்படுகிற ஒன்றை தொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். கருத்துக்களத்துக்கு வருகை தரும் உறவுகளே, கருத்துக்களத்தை நீங்கள் திறக்க முற்படும்போது, அது Porntube என்கிற Porno தளத்தின் மாதிரித் தளம் (fake) தானாகவே திறக்கும். தயவுசெய்து அங்கிருக்கும் காணொளிகளைத் திறக்காதீர்கள். அங்கிருக்கும் காணொளிகள் ஊடாக Trojana என்கிற மின்கிருமி உங்கள் கணினியில் தரவிறங்க வாய்ப்புள்ளது. அதனூடாக உங்கள் கணினி ஊடுருவப்படலாம். [மேலதிக விபரங்கள் விரைவில்] யாழ் இணையத்தில் ஏற்பட்ட இந்த பிழையை விரைவில் சரிசெய்ய முயற்சிக்கிறோம். இதுவரை இதனால் ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு வருந்துகிறோம். நன்றி. - யாழ் இணைய நிர்வாகம்.

என்னங்க இது? எனக்கும் தமிழ்தங்கை ஓர் மடல் அனுப்பி இப்படி அருவருக்கத்தக்க பொப் அப் மடல்கள் யாழுக்கு போகும்போது வருகின்றது எப்படி அவற்றை நிறுத்துவது என்று கேட்டு இருந்தார். எனக்கு அப்படி ஒன்றும் வரவில்லை.. வேற யாருக்காவது அப்பிடி வருகிதோ? :wub:

கருத்துக்களத்தை அழுத்தும் போது watch full movie onlie என்டு வருது. நான் நினைச்சன் ஏதோ பொங்குதமிழ் காணொளி ஆக்கும் என்டு. ஆனால் நான் அதை தவிர்த்துவிட்டேன்

  • தொடங்கியவர்

ஆமா ஆமா எனக்கும் வருகிது. யாழ்.கொம் எண்டு உள்ளுக்க வந்து பிறகு கருத்துக்களம் எண்டுறத அமத்த இப்பிடி வருகிது. நீங்கள் எல்லாரும்

http://www.yarl.com/forum3

எண்டு அடிச்சு உள்ளுக்க வந்தால் பிரச்சனை வராதே?

நேற்றும் எனக்கு இப்படி ஒண்டு வந்தது. நான் கவனிக்கவில்லை..

Edited by முரளி

நிர்வாகம் ஏன் ஒன்டும் அறிவித்தல் விடேலை?

நல்ல காலம் எனக்கு அப்படி ஓன்றும் வரேல்லை. ஆனால் யாழ் திறக்கும்போது வைரஸ் எச்சரிக்கை வருகின்றுது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வித்தியாசமாக ஒன்றும் வரவில்லை.

நிர்வாகம் ஏன் ஒன்டும் அறிவித்தல் விடேலை?

வணக்கம் லீ,

நிர்வாகம் கருத்துக்களத்தின் மேற்பகுதியில் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் நிர்வாக உறுப்பினர்களுக்கு இதுபோன்ற பிரச்சனை வராததால் பிரச்சனை என்னவென்று எமக்கு தெரியாதிருந்தது. கருத்துக்கள உறுப்பினர்கள் சிலர் தமக்கு ஏற்பட்ட பிரச்சனையை தனிமடலூடாக அறியத் தந்ததை அடுத்து, யாழ் இணையம் ஊடுருவப்பட்ட விடயம் தெரிய வந்தது. அதனால் உடனடியாக எச்சரிக்கை விடுத்திருந்தோம்.

இப்போது பிரச்சனை சரிசெய்யப்பட்டு விட்டது (என்று நம்புகிறோம்). தொடர்ந்தும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக எமக்கு அறியத் தரவும்.

இப்போது தான் கவனித்தேன்.

நன்றிகள்..! தற்போது பிரச்சினை இல்லை

என்னங்க இது? எனக்கும் தமிழ்தங்கை ஓர் மடல் அனுப்பி இப்படி அருவருக்கத்தக்க பொப் அப் மடல்கள் யாழுக்கு போகும்போது வருகின்றது எப்படி அவற்றை நிறுத்துவது என்று கேட்டு இருந்தார். எனக்கு அப்படி ஒன்றும் வரவில்லை.. வேற யாருக்காவது அப்பிடி வருகிதோ?

எனக்கும் இந்தப்பிரச்சினை நேற்று இருந்தது இன்று இல்லை

எனக்கு நேற்றில் இருந்து இன்று பின்னேரம் வரை இருந்த்து .............

யாழ் இணையம் மட்டுமல்ல, வேறு தமிழ்த் தளங்களும் இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. சாதாரணமாக மின்னஞ்சலூடாகவே அதிகமாகப் பரவும் இந்த malware எனப்படுவது இந்த ஆண்டிலிருந்து இணையத்தளங்களூடாகப் பரவுவது அதிகரித்துள்ளது. பொதுவாக அதிகமாகப் பார்க்கப்படும் தளங்களே இதன் பாதிப்புக்கு உள்ளாகின்றன. முன்னர் அமெரிக்க அரசுத்துறை சார்ந்த இணையத்தளங்கள், வியாபார அல்லது நிறுவன இணையத்தளங்கள் போன்றன இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன. பின்னர் பயண நிறுவனங்களின் இணையத்தளங்கள் தொடர்ச்சியாக இதன் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிப் பாதிக்கப்பட்ட இணையப்பக்கங்களின் ஊடாக அதன் பார்வையாளர்கள் வேறு சில இணையத்தளங்களுக்கு திருப்பப்படுவார்கள். அந்த இணையத்தளங்கள் உண்மையான சில இணையத்தளங்களின் மாதிரி (fake) இணையத்தளங்களாக இருக்கும். அவை பொய்யான இணையத்தளங்கள் என்பதை அவற்றின் இணையமுகவரியை கூர்ந்து கவனித்தால் அறிந்துகொள்ளலாம். அந்த இணையத்தளங்களில் ஏதாவது ஒரு மென்பொருளை (உதாரணம்: active.x) தரவிறக்குமாறு அறிவுறுத்தப்படும். ஆனால் அவையும் உண்மையான மென்பொருட்களாக இருக்காது. மின்கிருமிகள் அல்லது கணினியை ஊடுருவப் பயன்படும் சில கோப்புகள் சேர்க்கப்பட்ட பொய்யான மென்பொருட்களாகவே அவை இருக்கும். அதனை நம்பி தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவினால் (install), அது உங்கள் கணினியில் trojana போன்ற மின்கிருமிகளையும் சேர்த்துவிடும். இதனூடாக உங்கள் கணினியில் இருக்கும் முக்கியமான தகவல்கள், மறைவுச்சொற்கள், online banking தகவல்கள் போன்றன களவாடப்படலாம். எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.

விடயம் அறியாமல் இதுபோன்ற மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்து நிறுவியவர்கள், malware ஐ அல்லது மின்கிருமிகளை அழிக்கும் மென்பொருள் கொண்டு தேடி அழிக்கவும். சில மின்கிருமி எதிர்ப்பு மென்பொருட்கள் இதனைத் தேடித் தர வல்லன அல்ல. எனவே இதற்குரிய மென்பொருட்களை சரியான ஆலோசனையுடன் பெற்றுக்கொள்ளவும். எதுவும் சரிவராவிட்டால் கடைசி வழி கணினியை முழுமையாக format செய்து மீள நிறுவவும்.

தமிழ் இணையத்தள நடத்துனர்களுக்கு

உங்கள் இணையப்பக்கங்களிலும் இந்த malware பிரச்சனை ஏற்படுகிறதா என்பதை கவனிக்கவும். இதனால் உங்கள் பார்வையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் வழங்கியில் உள்ள இணையப்பக்கங்களை திறந்து பார்க்கவும். குறிப்பாக எல்லா index.html, index,php, index.asp, index.htm, index.shtml போன்ற முதற் பக்கங்களையும் திறந்து பார்க்கவும். அதில், புதிதாக மேலதிகமாக javascript ஒன்று decrypt செய்து இணைக்கப்பட்டிருக்கும். அவற்றை நீக்கிவிட்டு மீள இணைக்கவும். இதன்மூலம் இந்த பிரச்சனையை தீர்க்கமுடியும். ஆனாலும் தொடர்ந்தும் பாதிக்கப்படாமல் இருக்க வழங்கியில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும்.

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

இப்படிப் பாதிக்கப்பட்ட இணையப்பக்கங்களின் ஊடாக அதன் பார்வையாளர்கள் வேறு சில இணையத்தளங்களுக்கு திருப்பப்படுவார்கள். அந்த இணையத்தளங்கள் உண்மையான சில இணையத்தளங்களின் மாதிரி (fake) இணையத்தளங்களாக இருக்கும். அவை பொய்யான இணையத்தளங்கள் என்பதை அவற்றின் இணையமுகவரியை கூர்ந்து கவனித்தால் அறிந்துகொள்ளலாம். அந்த இணையத்தளங்களில் ஏதாவது ஒரு மென்பொருளை (உதாரணம்: active.x) தரவிறக்குமாறு அறிவுறுத்தப்படும். ஆனால் அவையும் உண்மையான மென்பொருட்களாக இருக்காது. மின்கிருமிகள் அல்லது கணினியை ஊடுருவப் பயன்படும் சில கோப்புகள் சேர்க்கப்பட்ட பொய்யான மென்பொருட்களாகவே அவை இருக்கும். அதனை நம்பி தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவினால் (install), அது உங்கள் கணினியில் trojana போன்ற மின்கிருமிகளையும் சேர்த்துவிடும். இதனூடாக உங்கள் கணினியில் இருக்கும் முக்கியமான தகவல்கள், மறைவுச்சொற்கள், online banking தகவல்கள் போன்றன களவாடப்படலாம். எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.

நேற்றில் இருந்து யாழ்களத்துக்கு மட்டும் வரும் போது தான் எனக்கு பிரச்சனை ஆரம்பித்தது இப்போது இல்லை.......

10 மூறிக்கு மேல் முயற்சி செய்து விட்டு இனி யாழுக்கு வரவது இலலி என்ற அளவுக்கு பிரச்சனை வந்து விட்டது

ஏன் என்றால் அபோது வரும் படங்கள் குட்ம்பத்தில் பிரச்சனையை உருவாக்கி விடும் புரியும் என நினைகிறேன்

...

  • தொடங்கியவர்

அட அட மந்திர ஆலோசனை முடிஞ்சு வந்திட்டீனம்..

எனக்கு இந்த பிரச்சனை நேற்று இருந்தது. வீட்டில் உள்ளவர்களின் முன்னால் இது வந்தது எனக்கு ரொம்பவே அசிங்கமாகிவிட்டது. காலையில் எழும்பினால் யாழுக்கு வராட்டா தூக்கமே வராதே. இன்று தயங்கித்தயங்கி வந்தேன் அப்படி ஒன்றும் வரவில்லை

எனக்கு இதுவரை எந்தப் பிரச்சனையும் வரவில்லை. நான் பயர்வோல் வைத்திருக்கிறேன். அதனால் எனக்கு எந்த பொப்அப்பும் வருவதில்லை. :D:D:D

எனக்கு இந்த பிரச்சனை நேற்று இருந்தது. வீட்டில் உள்ளவர்களின் முன்னால் இது வந்தது எனக்கு ரொம்பவே அசிங்கமாகிவிட்டது. காலையில் எழும்பினால் யாழுக்கு வராட்டா தூக்கமே வராதே. இன்று தயங்கித்தயங்கி வந்தேன் அப்படி ஒன்றும் வரவில்லை

எனக்கு வந்த அவமானம் வெளியே சொல்ல முடியாது க்5 வயது குடுமபம் சகிதமாக வ்ந்து இருந்து அரசியல் கதைகும் போது யாழ்கருத்து களத்துக்கு போனால் நீங்கள் இலங்கை பற்றிய அனைத்து ச்யெதியும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளுவிங்கள் என்று சொல்லி யாழுக்கு போக சொன்னேன் அவரும் தனது 5 வயது மனளை மடியில் தூக்கி வைத்து கொண்டு எனோடு பேசி கொண்டு யாழுக்கு போனார் பிறகு சொல்லவ் வேனும்??

இதுக்கு யாழ் நிர்வாகம் என்ன செய்ய முடியும் ஆனால் அவமாணம் எனக்கு தான்........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கண்கொள்ளா காட்சி என்ரை கண்ணுக்கு இன்னும் படேல்லை :D

:) ஆதிக்குந்தான் ரொம்பச் சோதனையாப் போச்சு.....

ஆதியின் அறிமுகக்காலத்தில ஆனந்தசங்கரி என்ற கள உறுப்பினர் ஆதியின் அறிமுகப்பகுதியில் இணைச்ச அக்கிரம இணைப்பு மாதிரி...... ஆதி அலக்க மலக்க விழிச்சுக் கொண்டிருந்து.... அதாம்பா வீட்ல உள்ள ஆட்கள் பாத்தா ஆதியின் மரியாதை என்ன ஆகிறது? ஆதி கொம்புயூட்டரில நாலுவிசயத்தைப்பாக்கிறன் என்று போய் புத்தி கோணலாகி ஆயிரத்தெட்டு பழி விழுந்து.... பிறகு மொட்டாக்குப் போட்டுக் கொண்டா திரியிறது? நல்ல காலம் ஏதோ கணனியைப் பத்தித் தெரிந்த பிள்ளை உதவி செய்து தப்பிட்டன்..... ஆனா உதவி செய்த பிள்ளையின் பார்வையில இருந்த கிண்டலைத்தான் தாங்கமுடியலை. :(:(:(:(:(:(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கண்கொள்ளா காட்சி என்ரை கண்ணுக்கு இன்னும் படேல்லை :)

:( உதுகளை தேடிப்போகாதேங்கோ குமாரசாமியண்ணை ! குடுத்து வைச்சது அவ்வளவு தான் என்று இருக்கவேண்டியது தான்.

பிறகு ஊர்புதினமும் , உலகநடப்பும் தெரியாது உதுகள் மட்டும் தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அப்படி ஒன்றும் வரல்லை. வலுவான நெருப்புச் சுவரை எழுப்பி, கணணிக் கிருமி எதிரியை நிறுவி.. பொங்குவானை (pop up) தடுத்தால் இந்தப் பிரச்சனை வந்திராது. உங்கள் கணணிக் கிருமி எதிரியில் பெற்றோர் பரிகரிப்பு பகுதியை உச்ச அளவில் வைத்துக் கொண்டால் அது தானா குப்பை கூழங்கள் சேர்வதைத் தடுக்கும். :)

Edited by nedukkalapoovan

நமக்கு மாட்டல

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை என்று நினைக்கிறேன்.. நான் யாழை மூடும்போதெல்லாம் "Watch Video" என்கிற மாதிரி ஒரு பொப் அப் வந்தது. இது ஏதோ வில்லங்கம் எண்டு யாழுக்குப் போவதையே அன்று விட்டுவிட்டேன். <_<

நம்ம சின்னப்புவும், குமாரசாமியண்ணையும் சில நாட்களுக்கு முன் அடிக்கடி களத்திற்கு வந்து கொண்டிருந்தனர். நானும் ஏதோ கால்பந்து விடயமாக கருத்தெழுதவாக்கும் என்று நினைத்திருந்தேன். அட விடயம் இது தானா?? <_<<_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.