Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு சென்ற இந்திய உயர்மட்டக்குழு பொட்டம்மானை பணயமாக கேட்டது: "சுடரொளி" வார ஏடு தகவல்

Featured Replies

கொழும்பு சென்ற இந்திய உயர்மட்டக்குழு பொட்டம்மானை பணயமாக கேட்டது: "சுடரொளி" வார ஏடு தகவல்

[வெள்ளிக்கிழமை, 11 யூலை 2008, 06:15 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு கடந்த மாதம் சென்ற இந்திய உயர் அதிகாரிகள் குழு, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிராயச்சித்தமாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானை தமிழர் தரப்பு தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியாதாக "சுடரொளி" வார ஏடு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தனுடனான சந்திப்பின் போதே இந்திய உயர் அதிகாரிகள் குழு மேற்படி கோரிக்கையை முன்வைத்ததாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பொட்டம்மானை பணயம் கேட்கும் இந்தியா" என்ற தலைப்பில் "சுடரொளி" வார ஏட்டின் பிந்திய பதிப்பில் இது பற்றி மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்திய உயர்மட்டக் குழுவினர், கடந்த மாதம் மூன்றாம் வாரம் திடுதிப்பெனக் கொழும்புக்கு வந்திருந்த சமயம், தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனை சுமார் ஒன்றேகால் மணி நேரம் சந்தித்துப் பேசியிருந்தது.

அந்தச் சந்திப்பின்போது இடம்பெற்றதை சூடான வாய்த்தர்க்கம் என்று கூறினால் அது மிகையாகாது.

தமது இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் பாரதம் மேற்கொண்ட குயுக்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் விசனத்தையும், ஆதங்கத்தையும், எரிச்சலையும் அங்கு தாம் ஒருவராகத் தனித்து நின்று வார்த்தைகளில் வெளிப்படையாக - அப்பட்டமாக - அள்ளிக்கொட்டி, இந்திய உயரதிகாரிகள் தரப்பின் கடுஞ்சீற்றத்துக்கு ஆளானார் சம்பந்தர்.

இந்தியத் தரப்பில் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்தான் சம்பந்தரோடு வாய்த்தர்க்கத்தில் அதிகம் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் சம்பந்தரின் சரமாரியான குற்றச்சாட்டுக்களினால் ஈடாடிப்போன நாராயணன் -

"எங்கள் நாட்டின் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு தலைவரை (ராஜீவ் காந்தியை) நீங்கள் படுகொலை செய்துவிட்டு, அந்த விவகாரத்தை வெகு "சிம்பிளாக" ஒதுக்கி வைத்துவிட்டு ஈழத் தமிழர்களுக்காக நியாயம் செய்யுங்கள் என்று நீங்கள் கேட்பதில் அர்த்தமில்லை. ராஜீவ் காந்தி படுகொலைக்காக உரியவர் யாரேனும் தண்டிக்கப்படுவதுதான் சரி. அந்தப் பிரயச்சித்தத்தை நீங்கள் செய்தால்தான் இந்தியா உங்களுக்காகத் தலையிட்டு எதையும் செய்யமுடியும்" - என்று குறிப்பிட்டு சம்பந்தரின் வாயை அடக்க முயற்சித்தார். தொடர்ந்து அவர் ஒரு குண்டையும் தூக்கிப்போட்டார்.

"சரி. உங்கள் விடுதலைப் போராட்ட அணியின் தலைவர் பிரபாகரனை விட்டு விடுங்கள். அந்தப் படுகொலைக்கு வியூகம் வகுத்து, கட்டளைகள் வழங்கிய பொட்டம்மானவாது தண்டிக்கப்பட்டாக வேண்டும். அதற்காக குறைந்தபட்சம் அவரையாவது இந்தியாவிடம் கையளிக்க உங்கள் பக்கத்தினர் தயாரா? என்று அதிரடிக்கேள்வியைத் தூக்கிப் போட்டார் நாராயணன்.

திடுக்கிட்டுப் பதில் கூறமுடியாத சம்பந்தர் நேரடியாக இக்கேள்விக்குப் பதிலேதும் கொடுக்காமல் சமாளித்தார்.

இந்திய உயரதிகாரிகள் தரப்பைப் பொறுத்த வரை இக்கேள்விக்குச் சம்பந்தர் உடனடியாகத் தம்பாட்டில் விடை ஏதும் தரக்கூடிய நிலையில் இல்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். இந்தத் தகவலை சம்பந்தர் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு எடுத்துச்சென்று, புலிகளின் தலைமையின் பிரதிபலிப்பை தமக்குத் தெரியப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் அதிகம் இருந்தது.

ஆனால், இந்தக்கேள்வியை அந்த இடத்தில் காதில் வாங்கியதோ: இந்த விடயத்தில் வேறு எதையும் சம்பந்தர் மேற்கொண்டு செய்யவில்லை என்று தெரிகின்றது. இதை ஒரு முக்கிய விவகாரமாக அவர் புலிகளின் தலைமைக்கு எடுத்துச்சென்று தெரிவித்தார் என்ற தகவல் இல்லை. அப்படி எடுத்துச்சென்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதில் பயன் ஏதுமில்லை என்று கருதி அதனை அப்படியே அவர் விட்டு விட்டிருக்கலாம்.

ஆனால், புலிகளுடன் இந்தியா எதிர்காலத்தில் இணங்கிப் போவதற்குக் குறைந்த பட்சம் ராஜீவ் காந்தி படுகொலை விவகாரத்தில் இந்தியத் தரப்பினால் குற்றவாளியாகக் கருதப்படும் பொட்டம்மானையாவது புலிகள் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை இந்தியாவின் தற்போதைய அதிகாரவர்க்கத்தின் எதிர்பார்ப்பு, நிபந்தனை என்ற தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புலிகளின் தலைமைக்குத் தெரியப்படுத்தினாரா? அவர்களின் பிரதிபலிப்பு என்ன? போன்ற மேலதிக விடயங்களை அறிந்து கொள்வதில் இந்தியத் தரப்பு இன்னும் வெகு எதிர்பார்ப்போடு இருப்பதை உறுதி செய்ய முடிகின்றது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுக்கு வாய் இல்லையா..

எங்கட திலீபன் அண்ணா.. பூபதியம்மா.. குமரப்பா.. புலேந்திரன்.. கிட்டண்ணா.. இவர்களுக்குப் பணயமாக **** ம் ஈழத்துக்கு அனுப்பி வைக்கக் கேட்டிருக்கலாமே.

அவைக்கு எப்படி ராஜீவ் காந்தி பெரிசோ.. அதேபோலத்தான் எங்களுக்கும் எங்கட தலைவர்கள் பெரிசு. இதைச் சொல்லத் தெரியல்லையா சம்பந்தன் ஐயாவுக்கு..! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் 8000 பேரைக் கொன்றொழித்த கொடுமைக்காக இந்தியா ஈழத் தமிழரிடம் எவரை ஒப்படைக்கத் தயாராக உள்ளனர்? ராஜிவ்வைத் தாங்களாகக் கொன்று போட்டு விட்டு, பழிவாங்க எம்மிடம் கேட்பார்களாம்.

Edited by பொன்னையா

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொன்னது சரி. ஆனால் இன்னும் எங்கட "இந்திய வால் பிடிகள்" சிலர் தமிழர் தரப்பின் தவறுகள் என சூசகமாகக் காட்டிக் கொடுத்தல் பாணியில் எழுதியும் பேசியும் வருகிறார்கள். இங்கே ஒரு கேரளக் காரருடன் இவை பற்றி விவாதம் செய்வதுண்டு. ஒரு தடவை அவர் சொன்னார்: ஈழத்தமிழர்கள் தங்கள் தற்போதைய தலைமையை (புலிகளை) விலக்கி விட்டு வேறு தலைவர்களை ஏற்றுக் கொண்டால் இந்தியா தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாம். புரிகிறதா இவர்கள் சொல்லும் "மாற்றுத் தலைமை" யார் என்று?. இப்படி நிறையக் கற்பனைகளோடு தான் நகர்கிறது இலங்கை பற்றிய இந்தியக் கொள்கை.

இனியும் இந்தியா எங்களுக்கு உதவும் என்று எதிர்பார்ப்பது எங்களை நாங்களே

முட்டாளக்குவதற்கு சமன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,,,,,,,,,,,,,

தலையை தந்தால் கிரீடம் தருகிறேன் என்று பேரம் பேசினாரா? நாராயணன்!!! :rolleyes:

கட்டை விரலை தா மிட்டாய் வாங்கி தருகிறேன் என்று பேரம் பேசுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் நாராயணன்!!!

ஒரு வல்லமை மிக்க நாட்டின் மூத்த புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர், இரத்தக்கொதிப்பு மிகுந்து இப்படி மனநோயாளி போல் பேசுவது இந்திய புலனாய்வுத்துறைக்குத் தான் அவமானம்! எமக்கல்ல!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ராஜீவ் காந்தியைக் காட்டிக் காட்டியே தங்கள் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு தமிழனைப் பணயம் வைக்கிறது இந்திய அரசு.

திரையுலக பெரிய நட்சத்திரங்களை வீரப்பன் பிடிச்சுக்கொண்டு போகேக்கை அப்பாவிப்பொதுமக்களை அடிக்கறதுக்கெண்டே அங்கு ஒரு கூட்டம் இருக்கு...இப்படியானவர்களுக்க

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொன்னது சரி. ஆனால் இன்னும் எங்கட "இந்திய வால் பிடிகள்" சிலர் தமிழர் தரப்பின் தவறுகள் என சூசகமாகக் காட்டிக் கொடுத்தல் பாணியில் எழுதியும் பேசியும் வருகிறார்கள். இங்கே ஒரு கேரளக் காரருடன் இவை பற்றி விவாதம் செய்வதுண்டு. ஒரு தடவை அவர் சொன்னார்: ஈழத்தமிழர்கள் தங்கள் தற்போதைய தலைமையை (புலிகளை) விலக்கி விட்டு வேறு தலைவர்களை ஏற்றுக் கொண்டால் இந்தியா தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாம். புரிகிறதா இவர்கள் சொல்லும் "மாற்றுத் தலைமை" யார் என்று?. இப்படி நிறையக் கற்பனைகளோடு தான் நகர்கிறது இலங்கை பற்றிய இந்தியக் கொள்கை.

அவை இந்தியாவின் கற்பனை மட்டுமல்ல. அதற்கு இந்தியா செயல்வடிவமும் கொடுத்து வருகிறது.

கருணா பிரிந்து நின்று கொண்டு.. பொட்டம்மானைத்தான் குறிவைத்துப் பேசினார். இப்போ பிள்ளையான் தலைவரையும் பொட்டம்மானையும் தான் குறி வைத்துப் பேசுறார். இதன்படி.. இவர்களின் பின்னால் இவர்களை இயக்குவது யாரென்பது புரியும்.

நான் சிறீலங்காவில் கல்வி கற்கும் போது ஒரு சிங்களப் பேராசிரியரே சொன்னார்.. பிரபாகரன் போன்ற தலைமைத்துவப் பண்புள்ள ஒரு தலைவரை சிறீலங்கா இன்னும் அடையவில்லை என்று. அந்தளவுக்கு தலைவரின் அசாத்தியமான திறமைகள் தொடர்பில் சிங்களவருக்கே ஒரு மரியாதை உண்டு. அந்த அசாத்தியத் திறமைக்குத்தான் இவர்கள் அஞ்சுகிறார்கள். அதைத் தகர்த்துவிட்டால் ஈழத்தமிழரை தாம் நினைத்தபடி விலைக்கு வாங்கி தாங்கள் ஆட ஆடும் கைப் பொம்மைகளாக்கலாம் என்று தான் உலகம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.

ஆனால் எமக்குப் பலம்.. தலைவரும் அவருக்கு உண்மையான விசுவாசிகளாக உள்ள போராளிகளும் மக்களுமே..! :rolleyes:

ஆனால் எமக்குப் பலம்.. தலைவரும் அவருக்கு உண்மையான விசுவாசிகளாக உள்ள போராளிகளும் மக்களுமே..! :rolleyes:

ஒரே வரியில் ஒரு மகத்தான விடுதலை வேள்விக்கு வரைவிலக்கணம் சொல்லியுள்ளீர்கள் நெடுக்ஸ்! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:rolleyes::lol::lol:

இவ்வாறான சூழ்சிகரமான கருத்துக்களை இன்று மட்டும் அல்ல எமது போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் இந்திய ஆளும் வர்க்கம் விதைத்து வந்துள்ளது.மாத்தையாவிடமும் இதே மாதிரியான கருத்தை விதைத்து வெற்றி கண்டார்கள்.அவர்களின் நோக்கம் உள் இருந்தே பிளவை உருவாக்கி கொள்கைப் பற்றுள்ள தலமையை அழிப்பதே.

இவ்வாறான கருத்துக்களை அவற்றின் நச்சுத் தன்மை உள் நோக்கம் என்பனவற்றை அம்பலப்படுதுவதன் மூலமே நாம் முளையிலையே எறிய வேண்டும்.அல்லது அவை வேரூன்றி இவர்கள் தமது காரியத்தைச் சாதிப்பதற்கான் துரும்பாக ஆக்கக் கூடாது.

நாம் குடுக்கும் நேசக் கரத்தை நாராயணான் போன்றவர்கள் பற்றத் தயாரில்லை.ஆனால் புலிகளும் தமிழரும் விசுவரூபம் எடுக்கும் போது இவர்கள் எம்மை அங்கீகரித்து எமது காலடி தேடி வருவார்கள்.அதுவரை நாம் குழம்பாது தலமையின் கூழ் ஒன்று பட்டுப் போராட வேண்டும்.இவர்களுக்கு வேண்டியது பொட்டம்மான் அல்ல எமது போராடத்தைச் சிதைப்பதே இவர்களின் நோக்கம்.அதற்கு அடித்தளமாக இருப்பவர்களை அழிப்பதன் மூலம் அல்லது அழிக்க வல்ல நச்சுக் கருதுக்களைப் பரப்புவதன் மூலம் இதனைச் சாதிக்க முற்படுகின்றனர்.

இவர்கள் நினைப்பது ஒன்று ஆனால் நடப்பதோ இன்னொன்று ஆக இருக்கும். :rolleyes:

கட்டைவிரலை வெட்டி வேண்டிய கூட்டம்தானே அவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பைத்தியக்காரங்களுக்கு என்னதை கேட்பது என்று விவஸ்தை இல்லையா ?

அது போல தான் இதுகும்.......

சின்னப்பிள்ளைகள் மிட்டாய் கேட்பது போல் இருக்கிறது, கதை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பிள்ளைகள் மிட்டாய் கேட்பது போல் இருக்கிறது, கதை :rolleyes:

அடம் பிடித்தால் அம்புலிமாமாவை காட்ட வேண்டியது தான் ...... :lol:

இந்திய காங்கிரஸ் ஆட்சியில் இதைவிட வேற எதை எதிர்ப்பார்க்க முடியும்.? ஈராஜிவ் கொலையை எமது மக்கள் நேரடியாக நியாயப்படுத்தும் வரைக்கும் இந்த நிலை தொடரும். எமது மக்களில் பலருக்கே இராசீவ் கொலை சரியானதா.? அதை நியாயப்படுத்துவது சரியா எனும் சந்தேகம் உள்ளது. இந்த நிலைதான் எமக்கு பாதகமாக இருக்கிறது.

ஈழத்தில் கொலை வெறி ஆடிய சீக்கியந்தான் , இந்திரா காந்தியை கொண்றான். அவனிடம் இந்திய அரசு மன்னிப்பு கேட்க்கவில்லையா.? அப்படி மன்னிப்பு கேட்க்க வைக்க சீக்கியன் என்ன செய்தான் எண்று சிந்தித்தால் பதில் கிடைக்கும்.

இந்தியா தனக்கு நேரடியாக ஈழப்போரினால் பாதிப்பு வரும் வரை மாறப்போவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டைவிரலை வெட்டி வேண்டிய கூட்டம்தானே அவர்கள்.

ஆமாம் எமக்கு அவர் கட்டைவிரல்தான்

இறுக்கமான ஓரு சூழ்நிலையில் தேசம் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது. இந்தவேளையில் இப்படியான செய்திகள் மனதை சற்று ஆறுதல் படுத்துகின்றுது. காரணம் நகைச்சுவைதான். . .

அம்மானையோ அல்லது எந்த போராளியையோ கொடுத்து ஒண்டும் யாரும் புடுங்க தேவையில்லை எமக்கு எம் போராளிகளே முக்கியம் தம் வாழ்கையை எமக்காக தொலைத்து பல்வேறு கஸ்டங்களை அனுபவிப்பவர்களே எமக்கு முக்கியம் என்றோ ஒருநாள் அடிபணிவார்கள் இந்திய ஆழும் வர்க்கம்

ew Delhi demands "Pottu Amman"

by a Special Correspondent From Colombo

(July 11, Colombo, Sri Lanka Guardian) India has begun to poke its nose into the internal affairs of Sri Lanka, once again, since the failure it faced following its military intervention in the 90's.

India has been keen through out on interfering in the affairs of Sri Lanka and ensuring its geographical and political interests.

Whether it was in the late 80's or whether it is now, the foremost objective of the Indian diplomacy has not been to ensure and preserve peace in Sri Lanka or in the Indian region. In contrast, it has been pre-occupied with looking after and securing its vested interests.

The high power delegation of New Delhi that visited Sri Lanka recently has succeeded in dissuading Sri Lanka from signing any agreement with China for oil exploration in Mannar and, in fact, secured this right for India as the imminent consequence of its visit.

This delegation held discussions with TNA Parliamentary group leader R.Sampanthan for one hour and fifteen minutes, at which, it is reported, that there had been heated exchange of words.

Facing three senior bureaucrats of India, single handedly, put across to them, without mincing his words, the frustration, the anxieties and the disappointment of the Lankan Tamil people over India’s omissions, even earning the fury of these India’s heavy weights. In fact, India’s Defence Secretary, M.K.Narayanan engaged in cross talks with Sampanthan.

At one stage, Narayanan confronted Samapanthan in the following words: "Having assassinated a revered leader of our country (Rajiv), you expect us to simply ignore it and do justice to the Lankan Tamils. It is meaningless. Someone must be punished for the assassination, as an act of atonement. Then and then only can India interfere on your behalf." Narayanan attempted to silence Samanthan that way.

Narayan went further and said "Leave alone LTTE leader Prabaharan, should not you hand over at least Pottu Amman, who designed and made orders for assassination, to be punished? Is your side prepared for it?"

A startled Sampanthan avoided a direct response, and the Indian delegation knew very well that there was little that he could do. But their expectation was whether he could convey it to the LTTE leadership and bring their response. Sampanthan, it appears, did not follow it up and there is no information that he conveyed it to the LTTE.

But, sources confirm, that India is keen to know the LTTE’s response to their request through Sampanthan. It is clear that one of the objectives of the India delegation was to convey this message to the LTTE.

Rajiv Ghanthy arrived in Sri Lanka and signed the Indo-Lanka Accord while LTTE leader Pribaharan, LTTE idelogue Balasingam and LTTE political wing leader Thileepan were still being held at Ashok Hotel in New Delhi.

Prior to his visit to Sri Lanka, Rajiv Ghanthy held direct talks with Prabaharan and Balasingham at PM’s official residence from mid- night until 2am, the day before signing the Accord in July, 1987.

On that occasion, there were two others with them- one was Tamil Nadu minister Pandurutty Ramachandran, the other was M.K.Narayanan, who was then the Director, India’s Intelligence Wing, who is now Defence Advisor and who had a heated exchange of words with Sampanthan demanding Pottu Amman to be handed over to India for atonement.

This gentleman Narayanan is well aware of an unwritten gentleman’s agreement arrived at between Rajiv and Prabaharan. But, Rajiv Ghanthy failed to honour his pledge within a few days. That was why, Thileepan had to perform Sathyagraha, fast unto death and sacrificed his life demanding that the pledge be honoured.

It was in such a back drop, that war broke out and ended up in the assassination of Rajiv Gandhi.

M.K.Narayan, who is quite well aware of all these developments, has made a request to hand over Pottu Amman at a time when the present government of India is faced with a political crisis.

But it is quite obvious that Tamil leadership will not attach any significance to this request. It is learnt that Narayanan later regretted the tone of his argument with Sampanthan, a senior leader, at a time when his people are subjected to serious sufferings and atrocities.

It is also learnt that Narayan requested the Indian High Commissioner Alok Prasad to meet Sampanthan and calm him, console him and in the end Alok Prasad obliged.

- Sri Lanka Guardian

http://www.srilankaguardian.org/2008/07/ne...ottu-amman.html

இனியும் இந்தியா எங்களுக்கு உதவும் என்று எதிர்பார்ப்பது எங்களை நாங்களே

முட்டாளக்குவதற்கு சமன்

  • தொடங்கியவர்

எங்கட திலீபன் அண்ணா.. பூபதியம்மா.. குமரப்பா.. புலேந்திரன்.. கிட்டண்ணா.. இவர்களுக்குப் பணயமாக.....

ஈழத்தில் 8000 பேரைக் கொன்றொழித்த கொடுமைக்காக இந்தியா ஈழத் தமிழரிடம் எவரை ஒப்படைக்கத் தயாராக உள்ளனர்?....

இனியும் இந்தியா எங்களுக்கு உதவும் என்று எதிர்பார்ப்பது எங்களை நாங்களே

முட்டாளக்குவதற்கு சமன்,,,,,,,,,,,,,,,,

ஒரு வல்லமை மிக்க நாட்டின் மூத்த புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர், இரத்தக்கொதிப்பு மிகுந்து இப்படி மனநோயாளி போல் பேசுவது இந்திய புலனாய்வுத்துறைக்குத் தான் அவமானம்! எமக்கல்ல!!

"ராஜீவ் காந்தியைக் காட்டிக் காட்டியே தங்கள் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு தமிழனைப் பணயம் வைக்கிறது இந்திய அரசு.

திரையுலக பெரிய நட்சத்திரங்களை வீரப்பன் பிடிச்சுக்கொண்டு போகேக்கை அப்பாவிப்பொதுமக்களை அடிக்கறதுக்கெண்டே அங்கு ஒரு கூட்டம் இருக்கு...இப்படியானவர்களுக்க

எங்கட போராட்டத்தின் வலியும் உணர்வும் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை!

இவர்கள் நினைப்பது ஒன்று ஆனால் நடப்பதோ இன்னொன்று ஆக இருக்கும்.

கட்டைவிரலை வெட்டி வேண்டிய கூட்டம்தானே அவர்கள்.

பைத்தியக்காரங்களுக்கு என்னதை கேட்பது என்று விவஸ்தை இல்லையா ?

அது போல தான் இதுகும்.......

சின்னப்பிள்ளைகள் மிட்டாய் கேட்பது போல் இருக்கிறது, கதை

அடம் பிடித்தால் அம்புலிமாமாவை காட்ட வேண்டியது தான் ...... :rolleyes:

இந்தியா தனக்கு நேரடியாக ஈழப்போரினால் பாதிப்பு வரும் வரை மாறப்போவது இல்லை. :lol:

இறுக்கமான ஓரு சூழ்நிலையில் தேசம் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது. இந்தவேளையில் இப்படியான செய்திகள் மனதை சற்று ஆறுதல் படுத்துகின்றுது. காரணம் நகைச்சுவைதான். . . :lol:

அம்மானையோ அல்லது எந்த போராளியையோ கொடுத்து ஒண்டும் யாரும் புடுங்க தேவையில்லை எமக்கு எம் போராளிகளே முக்கியம் தம் வாழ்கையை எமக்காக தொலைத்து பல்வேறு கஸ்டங்களை அனுபவிப்பவர்களே எமக்கு முக்கியம் என்றோ ஒருநாள் அடிபணிவார்கள் :lol:

இந்திய ஆழும் வர்க்கம்

இனியும் இந்தியா எங்களுக்கு உதவும் என்று எதிர்பார்ப்பது எங்களை நாங்களே

முட்டாளக்குவதற்கு சமன் :D

அவை இந்தியாவின் கற்பனை மட்டுமல்ல. அதற்கு இந்தியா செயல்வடிவமும் கொடுத்து வருகிறது.

கருணா பிரிந்து நின்று கொண்டு.. பொட்டம்மானைத்தான் குறிவைத்துப் பேசினார். இப்போ பிள்ளையான் தலைவரையும் பொட்டம்மானையும் தான் குறி வைத்துப் பேசுறார். இதன்படி.. இவர்களின் பின்னால் இவர்களை இயக்குவது யாரென்பது புரியும். :D

நான் சிறீலங்காவில் கல்வி கற்கும் போது ஒரு சிங்களப் பேராசிரியரே சொன்னார்.. பிரபாகரன் போன்ற தலைமைத்துவப் பண்புள்ள ஒரு தலைவரை சிறீலங்கா இன்னும் அடையவில்லை என்று. அந்தளவுக்கு தலைவரின் அசாத்தியமான திறமைகள் தொடர்பில் சிங்களவருக்கே ஒரு மரியாதை உண்டு. அந்த அசாத்தியத் திறமைக்குத்தான் இவர்கள் அஞ்சுகிறார்கள். அதைத் தகர்த்துவிட்டால் ஈழத்தமிழரை தாம் நினைத்தபடி விலைக்கு வாங்கி தாங்கள் ஆட ஆடும் கைப் பொம்மைகளாக்கலாம் என்று தான் உலகம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.

பாருங்கள்.... பாருங்கள்.... பார்க்க வேண்டியவர்களும் இங்கு பார்பீர்கள் பாருங்கள்..... இதுதான் எமது யதார்த்தம்... இல்லையேல்..... உங்களுக்கும் தெரியும்.... :D அடுத்த பக்டாட் உங்களால்... அது இலங்கை மட்டும் அல்ல..... :icon_idea:

வந்தவங்கள் கேட்ட கேள்விக்களுக்கான பதில்களை... சிங்களவங்களே குடுக்கும்போதுதான் தெரியும்....

ஈழப்பிரைச்சனையை தாறுமாறா கையாண்டதன் விளையுதான் இன்னும் இந்தியா ஒதுங்கி நிக்கவேண்டி இருக்கெண்டதை இன்னும் உணராமல் இருக்கிறார்கள்... சுத்தி சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள்ளதான் நிக்கினம்.

ராஜீவ் காந்தி தற்கொலைதான் செய்துகொண்டாரோ யாருக்குத்தெரியும்?...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.