Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதலிரவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வசந்திக்கு மனசெல்லாம் ஒரே படபடப்பு. இந்த இரவுக்குள்ள, இருட்டுக்குள்ள என்ன நடக்கப் போகுதோ என்ற ஏக்கமும் பீதியும் அவளிடம் குடி கொண்டிருந்ததே படபடப்புக்கு காரணமாயிருந்தது.

"வசந்தி.. ரெடியா இரும்மா.. துணிவோட இரு.. அப்பதான் இந்த உலகத்தில பெண்கள் நாங்கள் நினைச்சதைச் சாதிக்கலாம்." சக தோழியின் வார்தைகள் தெம்பாய் காதில் இறங்கினும் படபடப்புத் தீரவே இல்லை.

அதற்குள்.. அவனிடமிருந்து சிக்னல் வந்தது. இஞ்ச வாங்கோ என்று வாயசைக்காது கைகளால் சைகை செய்து வசந்தியை அழைத்தான்.

ஆரம்பத்தில் தயங்கியவளாய் பின் துணிவை வரவழைத்துக் கொண்டு அவனை நோக்கி நகர்ந்து சென்றாள்.

அவளின் தயக்கத்தை உணர்ந்தவனாய், என்ன பயப்பிடுறீங்கள் போல... முதல் அனுபவம் எல்லோ.. ஆரம்பத்தில கொஞ்சம் படபடப்பும் பயமும் இருக்கத்தான் செய்யும். போகப் போக எல்லாம் பழகிடும்.

அவனின் அந்த வார்த்தைகள் மனசுக்கு தெம்பைத் தர அவனை நெருங்கிச் சென்று அருகில் நின்றாள்.

பயப்பிடாம நான் சொல்லுறதை மட்டும் செய்யுங்கோ அது போதும்.

தயக்கத்துடன்.. "ஓம்" என்றாள்.

அடுத்த கணமே.. துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின.

எதிரியின் காவலரணில் இருந்தும் ரவைகளும் ஆர் பி ஜி கணைகளும் தொடராக கிளர்ந்தெழும்பத் தொடங்கின.

வசந்தி அந்த பொயின்ருக்கு இந்தப் பக்கத்தில இருந்து இப்ப அடியுங்கோ. அங்க இருந்துதான் ஆர் பி ஜியால அடிக்கிறாங்கள்...

"ஓம் அடிக்கிறன்...."

வசந்தியின் கையில் இருந்த எல் எம் ஜி முழங்குகிறது. முதற் தடவையா.. முதலிரவுத் தாக்குதலில்.. வசந்தி நேர்த்தியாக எதிரியின் நிலை நோக்கி தாக்குதலைத் தொடுத்தாள்.

சிறிது நேரத்திலேயே எதிரியின் ஆர் பி ஜி நிலை அமைதியாக, போராளிகள் முன்னேறி அதைக் கைப்பற்றி ஆயுதங்களோடு மீள்கின்றனர்.

புன்சிரிப்போடு வசன்.. வசந்தி நீங்கள் தான் இந்த தாக்குதலின் கதாநாயகி. மிக அருமையா அடிச்சீங்கள். இங்க இருந்து சரியா அடிச்சிராட்டி.. எங்கட போராளிகளுக்குத்தான் இழப்பு வந்திருக்கும். இப்ப இழப்பில்லாம ஒரு வெற்றிகரமான அதிரடித் தாக்குதலை செய்து முடிச்சிருக்கிறம்.

"எனக்கும் பெருமையா இருக்குது வசன்."

பின்ன பயந்து கொண்டு எல்லோ வந்தனீங்கள்.

"ஓம். இப்ப நல்ல தெம்பா இருக்கு. இன்னும் நாலு காவலரணை அடிச்சு வீழ்த்தனும் போல இருக்குது."

அப்படித்தான் இருக்கும். எங்களுக்கு தலைவர் இதை ஒரு பயிற்சிக் களமாத் தான் நடத்தச் சொன்னவர். அதால இதோட நிறுத்திட்டு... இதில நின்று கன நேரம் கதைச்சுக் கொண்டிருக்காம.. எதிரி உசாராகி செல் இறக்க முதல்.. எல்லாரும் பழைய நிலைக்குப் போவம் நடவுங்கோ.

நடந்து கொண்டே.. எல்லாரும் தலைவரின் உத்தரவு வரும் வரை இதே வீரத்தோட காத்திருப்பம். சரியோ என்றான் வசன்.

"ஓம்.." என்றபடி நெஞ்சை நிமிர்த்தி வெற்றிப் பெருமிதத்துடன் , பயிற்சிக்காலத்தில் கூட உணராத புதுவித துணிச்சலை உணர்ந்தவளாய் எல் எம் ஜியை உயர்த்திக் காட்டியபடி.. சக போராளிகளோடு வசந்தியும் பாசறை நோக்கி நடந்தாள்.

(யாவும் கற்பனை)

Edited by nedukkalapoovan

  • Replies 52
  • Views 17.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்புதமான கதை உண்மையை சொல்லி சென்றதுபோல் ஓர் உணர்வு . வாழ்த்துக்கள் நெடுக்ஸ் :) . தொடருங்கோ உங்கள் பணியை

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை பார்த்ததும் பயந்து போட்டன்

நெடுக்..ஷ் பின்பு சுதாகரித்து கொண்டேன்

நன்றி இணைத்தமைக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ் அண்ணா .........

நானும் எதோ என்று ...வீர பெண் மணி வசந்தி போல இன்னும் பலர்

சேர வாழ்த்துக்கள் ,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அண்ணே, இது தங்களது மூன்றாவது படைப்பு என்று நினைக்கிறேன். மூன்றுமே மிகவும் யதார்த்தமாக உள்ளன, வாழ்த்துக்கள்.

Edited by Tigerblade

ம்ம்.."முதலிரவு" கதை இருளிள் ஒரு வெளிச்சம்...கதையை நகர்த்திய விதம் கடசி வரை என்ன நடக்க போகிறது என்ற ஆவலை தூண்டுகிறது :mellow: ..வாழ்த்துக்கள் கதாசிரியரே..(நெடுக்ஸ் தாத்தா)... :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அட தலைப்பை பார்த்து விட்டு கதையை வாசிக்க தொடங்கி சில வினாடிகளில் என்னை சுதாகரித்து கொண்டேன்.தொடருங்கள் நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கால போவார்

ம்ம்ம்..... பரவாயில்லை.....தலைப்புகளே வாசகனை இழுத்து வந்துவிடும். .

எழுத்தோட்டம் முன்னரைவிட நன்றாகவே இருக்கு. ஒரு சிறு துரும்பால் பெருதாகவே தாக்கிவிட்டீர்கள்.... பாராட்டுகள்.

சின்னதாக ஒரு மனக்குறை....

இளமைகால கனவுகள் மறந்து,தாயக விடுதலையே உயிர் மூச்சென கொண்டவர்களின் கதைகள் இப்படியான தலைப்புகளால் தரம் குறைந்துவிடாதா....? தவறென சொல்லவில்லை.... தவிர்த்துக்கொள்ள முடியாதாவென கேட்கிறேன்....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளமைகால கனவுகள் மறந்து,தாயக விடுதலையே உயிர் மூச்சென கொண்டவர்களின் கதைகள் இப்படியான தலைப்புகளால் தரம் குறைந்துவிடாதா....? தவறென சொல்லவில்லை.... தவிர்த்துக்கொள்ள முடியாதாவென கேட்கிறேன்....?

முதலிரவு என்பது அதுவாக தவறான சொல் அல்ல. முதல் அனுபவத்துக்குரிய சொல். ஆனால் அது பாவிக்கப்படும் இடத்தால் அதன் தன்மை மாறுபட்டு நிற்கிறது.

அதுமட்டுமன்றி ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் போராளிகளாக வாழும் இக்காலத்தில் கூட.. பெண்களுக்கு சாந்தி முகூர்த்தம் நடத்திறம் என்று ஆண்களின் ஆசைக்கு அடக்கி வைக்கும்.. நிகழ்வுகள் தமிழர் சமூகங்களில் இன்னும் உள்ளது. பெண்ணின் விருப்புக்கே இடமின்றி நடக்கும் நிகழ்வுகளும் உண்டு.

வீரத்துக்கு உதாரணமான தமிழ் பெண்களின் வாரிசுகள்.. இன்னும் பூவே.. மலரே.. தேனே என்ற மயங்கும் நிலையில்.. இருப்பதால் தான்.. தலைப்பை இரு பொருள் பட இட்டு வைத்தேன்..!

இன்றைய தமிழ் பெண்களின் முதலிரவு.. போர்க்களத்தினில்.. எதிரியுடனான போரில் எதிரியை வீழ்த்திய வீரத்தில் இருந்து எழுகிறது என்ற புதிய வரைவிக்கணம்.. இதனூடு கொடுக்கப்பட வேண்டும் என்பதும் எனது விருப்பு..! :wub::mellow:

--------

குட்டிக்கதையைப் படித்துக் கருத்துரைத்த உறவுகளை அனைவருக்கும் நன்றிகள். நேரமின்மையால் தனியத் தனிய நன்றி சொல்ல முடியவில்லை. :wub:

Edited by nedukkalapoovan

ஹீஹீ தலைப்பை பார்த்துட்டு என்னமோ என்று வந்து பார்த்தேன்.

வித்தியாசமான தலைப்பை வைத்து நல்ல கதை சொல்லி இருக்கிறீங்க.

எப்படித்தான் இபப்டி எல்லாம் சிந்திக்க தோணுதோ தாத்தா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹீஹீ தலைப்பை பார்த்துட்டு என்னமோ என்று வந்து பார்த்தேன்.

வித்தியாசமான தலைப்பை வைத்து நல்ல கதை சொல்லி இருக்கிறீங்க.

எப்படித்தான் இபப்டி எல்லாம் சிந்திக்க தோணுதோ தாத்தா

நீங்களும் ஏமாந்திட்டீங்களா..?! :mellow:

முதலிரவு என்பது அதுவாக தவறான சொல் அல்ல. முதல் அனுபவத்துக்குரிய சொல். ஆனால் அது பாவிக்கப்படும் இடத்தால் அதன் தன்மை மாறுபட்டு நிற்கிறது.

அதுமட்டுமன்றி ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் போராளிகளாக வாழும் இக்காலத்தில் கூட.. பெண்களுக்கு சாந்தி முகூர்த்தம் நடத்திறம் என்று ஆண்களின் ஆசைக்கு அடக்கி வைக்கும்.. நிகழ்வுகள் தமிழர் சமூகங்களில் இன்னும் உள்ளது. பெண்ணின் விருப்புக்கே இடமின்றி நடக்கும் நிகழ்வுகளும் உண்டு.

வீரத்துக்கு உதாரணமான தமிழ் பெண்களின் வாரிசுகள்.. இன்னும் பூவே.. மலரே.. தேனே என்ற மயங்கும் நிலையில்.. இருப்பதால் தான்.. தலைப்பை இரு பொருள் பட இட்டு வைத்தேன்..!

இன்றைய தமிழ் பெண்களின் முதலிரவு.. போர்க்களத்தினில்.. எதிரியுடனான போரில் எதிரியை வீழ்த்திய வீரத்தில் இருந்து எழுகிறது என்ற புதிய வரைவிக்கணம்.. இதனூடு கொடுக்கப்பட வேண்டும் என்பதும் எனது விருப்பு..! :wub::mellow:

போராளிகளை கொச்சைப்படுத்துகிறது தலைப்பு! வேறு தலைப்பு கிடைக்கவில்லையா? அது குறித்த நியாயப்படுத்தல் அதைவிட மோசம்

Edited by Thalaivan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளை கொச்சைப்படுத்துகிறது தலைப்பு! வேறு தலைப்பு கிடைக்கவில்லையா? அது குறித்த நியாயப்படுத்தல் அதைவிட மோசம்

எந்த வகையில் மோசம் என்பதை பட்டியலிடுங்கள்.. எந்த வகையில் கொச்சைப்படுத்துகிறது என்பதை பட்டியலிடுங்கள்.. சும்மா.. கதையளப்பதிலும்.. அது உபயோகமாக இருக்கும்..!

போராளிகள் அந்நியரல்ல.. எமது சகோதர்களும் சகோதரிகளும் நண்பர்களும் நண்பிகளுமே..! அவர்களைக் கொச்சைப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை..! இத்தலைப்பு உங்களைப் போன்றவர்களுக்கு முதல் இரவுத் தாக்குதல் என்பதாக நிற்கும்..! :wub::mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளை கொச்சைப்படுத்துகிறது தலைப்பு! வேறு தலைப்பு கிடைக்கவில்லையா? அது குறித்த நியாயப்படுத்தல் அதைவிட மோசம்

போராளிகளை கொச்சைப்படுத்தும் படியாக என்ன வசனம் இதில் இருக்கிறது என்று எழுதினால் புரிந்து கொள்ளலாம். கதையின் நாயகிக்கு அது போராட்டத்திற்கான முதல் இரவு. நெடுக்கு சிந்திக்கும்விதம் நலல்லாயிருக்கு தொடருங்கள்.

அருமையான களம், எழுத்து நடையும் ஒரு குட்டி கதைக்கே உரிய சிறப்பு. வாழ்த்துக்கள்.

போராளிகளை கொச்சைப்படுத்துகிறது தலைப்பு! வேறு தலைப்பு கிடைக்கவில்லையா? அது குறித்த நியாயப்படுத்தல் அதைவிட மோசம்

எதையும் நல்லதாக பார்க்க பழகிக்கொள்ளுங்கள். பிறர் மீது பிழை பிடிக்கும் வேலை குறையலாம்.

"கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம்" என்பது உங்களுக்கு நண்றாகவே பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

வசன்: இதுதான் முதல் ராத்திரி

இந்தா எல் எம் ஜி

இதை நீ பிடி

வசந்தி : தலைவா கொஞ்சம் காத்திரு

பொயின்ற் அடிக்கிறேன்

கொஞ்சம் பாத்திரு

வசன்: எல் எம் ஜி முழங்க ஆர் பிஜி அடங்க

இழப்பேதும் இல்லாத அதிரடி

அடடா இந்த முதலடி

இனி தருவோம் நாம் பேரிடி

வசந்தி : அனுபவம் புதுமை அது இனி வழமை

அடங்காது எங்கள் அடிதடி

எம் அண்ணன் ஆணை வரும்வரை

மீண்டும் செல்வோம் எங்கள் பாசறை

நல்லதொரு கதை தந்த நெடுக்ஸ் உங்களுக்கு பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்மட குட்டிக்கதையும் படிச்சு மேலும் மேலும் எழுதத் தூண்டும் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள். :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு சாமியோவ்!உங்கடை கதை சின்னனாய் இருந்தாலும் கனம் பெரிசாய் இருக்கு :wub:

எங்கடை சனத்துக்கு முதலிரவு எண்டு ஒரு சொல்லு வந்தாலே போதும் இல்லாதது பொல்லததுகளை யோசிக்க வெளிக்கிட்டுடுவினம் :mellow:

எந்த வகையில் மோசம் என்பதை பட்டியலிடுங்கள்.. எந்த வகையில் கொச்சைப்படுத்துகிறது என்பதை பட்டியலிடுங்கள்.. சும்மா.. கதையளப்பதிலும்.. அது உபயோகமாக இருக்கும்..!

போராளிகள் அந்நியரல்ல.. எமது சகோதர்களும் சகோதரிகளும் நண்பர்களும் நண்பிகளுமே..! அவர்களைக் கொச்சைப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை..! இத்தலைப்பு உங்களைப் போன்றவர்களுக்கு முதல் இரவுத் தாக்குதல் என்பதாக நிற்கும்..! :wub::mellow:

பட்டியல் எதுக்கு கடைக்கு சாமான் வாங்க போகவா? அகராதியை பாருங்கள் புரியும். தவறை எவர் செய்தாலும் தவறு தவறுதானே? அதுக்கேன் இந்தக் கோபம்? :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டியல் எதுக்கு கடைக்கு சாமான் வாங்க போகவா? அகராதியை பாருங்கள் புரியும். தவறை எவர் செய்தாலும் தவறு தவறுதானே? அதுக்கேன் இந்தக் கோபம்? :mellow:

உங்களுக்கான பதிலை சாத்திரி, பொய்கை, கு.சா போன்றவர்கள் தந்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை.. எனது இந்தக் குட்டிக் கதையை அகராதி வைத்துப் படிக்க வேண்டும் என்ற நிலை இல்லை என்பது தெளிவானதே..! ஏனெனில்.. கதையைப் படிப்பவருக்கு அதன் போக்கு விளங்கும்.. அதன் அர்த்தம் புரியும்..! :wub:

---------

நன்றிகள்.. சாத்திரி, பொய்கை, காவலூர் கண்மணி மற்றும் கு.சா. :wub:

தாயகம் பற்றி நல்லா சிந்திக்கிறீங்கள் நெடுக்கு பபா. வாழ்த்துகள்'.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயகம் பற்றி நல்லா சிந்திக்கிறீங்கள் நெடுக்கு பபா. வாழ்த்துகள்'.. :D

தாயகத்தான் தாயகம் பற்றியும் சிந்திக்கத்தானே வேணும். தாய் மடியை மறந்து...செவிலியின் செழிப்பில்.. மயங்கிக் கிடக்கலாமோ..!

நன்றிகள். :lol:

:lol: தலைப்பை பார்த்துவிட்டடூது முதலிரவு என்று வேறு தோரணையில் நினைச்சுக்கொண்டு வந்து கதையை படித்தால்.................. கதையின் போக்கும் வேறுவிதமாக பட்டுவிட்டது போல :lol:

தாத்தா எல்லோரது பார்வைகளும் நேர்ப்பார்வையாக இருக்காது தானே..................... :D

கு சா தாத்தா சொன்னது போல முதலிரவு எனில் என்னமோ தப்பான அர்த்தமாகவே போய்விட்டதுப்பா. :lol:

நெடுக் தாத்தா நீங்கள் தொடருங்கள். குட்டிக்கதையில் கனக்க விசயத்தை சொல்லுங்கள்.

உங்களுக்கான பதிலை சாத்திரி, பொய்கை, கு.சா போன்றவர்கள் தந்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை.. எனது இந்தக் குட்டிக் கதையை அகராதி வைத்துப் படிக்க வேண்டும் என்ற நிலை இல்லை என்பது தெளிவானதே..! ஏனெனில்.. கதையைப் படிப்பவருக்கு அதன் போக்கு விளங்கும்.. அதன் அர்த்தம் புரியும்..! :lol:

வசந்தியின் கையில் இருந்த எல் எம் ஜி முழங்குகிறது. முதற் தடவையா.. முதலிரவுத் தாக்குதலில்.. வசந்தி நேர்த்தியாக எதிரியின் நிலை நோக்கி தாக்குதலைத் தொடுத்தாள்.

தலைப்பில் மட்டுமல்ல : உங்கள் கதையில் கூட பயிற்சி பெறாத பெண்களை படையில் முன்னிறுத்துவது போல யதார்த்தமே இல்லாத விதத்தில் கதை புனைந்திருக்கிறீர்கள்.

போர்க்களத்தில் இருக்காதவர்களுக்கு இது சினிமா பாணிதான். ஆகா..ஓகோதான்..ஆனால் போர்க்களத்தில் இருந்தவர்களுக்கு இது ஒரு மட்டமான ஆதர்சனம். நன்கு பயிற்சி பெற்றவர்களே போருக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் அன்றுதான் LMGயை கையில் தொடுவதாக கதை வடித்திருக்கிறீர்களே? நீங்கள் எல்லாம் இனிப்பு போல் விசம் ஏற்றுபவர்கள். இப்படியான கருத்துகள் எமது போராட்டத்தில் பயிற்சி இல்லாத அப்பாவிகளை தள்ளிவிடுவது போன்ற கருத்தை பலர் மனதில் உருவாக்கிவிடும்.

நீங்கள் எதையும் எழுதுங்கள்.பரவாயில்லை. பாராட்டலாம். ஆனால் நாட்டிலோ அல்லது அந்த போராட்ட களத்திலோ இல்லாதவர்கள் அது குறித்து கற்பனைக் கதைகளைக் கூட எழுதும் போது அவதானமாக இருங்கள்.

இது கோபத்தினால் எழுந்த வரிகளல்ல. அதை புரிந்து கொள்வீர்களோ தெரியாது?

பேச்சுக்கு சொல்லலை நெடுக்ஸ்..உங்க கதைகள் அருமையாக இருக்கு. சின்னதா ஒரு கருவை வச்சு சின்னதாவே எழுதிடுறிங்க..நல்லாயிருக்கு.

தலைப்பை பார்த்த உடனேயே, தலைப்புக்கு பொதுவாக இருக்கும் ஒரு அர்த்தத்தை உடைப்பதாகவே உங்கள் கதையிருக்கும் என நினைத்தேன்..என் நினைப்பு தப்பாகவில்லை..

இப்படி எத்தனை வீரசகோதர,சகோதரிகள் இருக்கின்றார்கள். அவர்கள் காலத்தில் வாழ்வதே பெருமை தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.