Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வினை எட்ட முடியாது: யுத்தத்தின் மூலமே தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் - கொழும்பு பேராயர்

Featured Replies

பொன்னையாண்ணை....... பாம்படிக்கமுதல்தடிதேடுவம்!

குகதாஸ் அண்ணனின் "காலம் பதில் சொல்லும்" வார்த்தைகளின் அழுத்தமான பதிலிலேயே எல்லவற்றிற்கும் பதில் சொல்லி விட்டார்.... அவரின் கடவுள் நம்பிக்கை உட்பட....

காலம் சொல்லும் பதில்கள் மிக அழுத்தமானது...வலிமையானது

.....

மற்றய தலைப்புக்களில் எம் விடுதலைப்போராட்டம் மலிவடைகின்றது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முனைவார். மக்களின் நம்பிக்கை இழக்க வைக்க முயலுவார். இது மெதுவான வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அமையும்.

ஒரு ஊசி குத்தினா வெடிக்கிற பலூன் கணக்கிலா தமிழ் தேசியம் ஊசாலடுகிறது... ஐயோ பரிதாபம்!

சிங்களச் செய்தி ஊடகங்களில் வருகின்ற செய்திகளை யாழில் இணைப்பது தவறு என்பேன். சிலர் ஜனநாயகம், ஊடகதர்மம் பற்றிப் பிதற்றக்கூடும். ஆனால் தமிழ்நெற்றை இலங்கையரசு தடை செய்தபோது அது அவர்களிடம் இருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும்

அப்புறம்?... சிரிலங்கா அரசு தமிழ்நெட்டை தடைசெய்ததற்கு இங்க சிங்கள செய்திகளை தடை செய்கிறார் எங்கடை பொன்னையர்.....சிங்களச் செய்திகளில தங்களுக்கு சாதகமான சமாச்சாரங்களை கண்டா உடன முன்வரிசையில போடுற புதினம் எங்க நீங்க எங்க!

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் புதிய விடயமல்லவே.

20080723_04.jpg

20080723_02.jpg

img: defence.lk

பாதுகாப்பமைச்சின் இணையத்தளப் படங்களின் பிரகாரம்.. சீருடையணிந்த இராணுவத்தைக் கொண்டு மடுமாதா தேவாலயம் புரனமைக்கப்படும் காட்சியைக் காணலாம். இராணுவப் பிரசன்னம்... அதை இராணுவ இலக்காக்கினால்.. மடுவைத் தாக்கிவிட்டார்கள் என்பார்கள். ஆனால் புலிகள் தேவாயலத்தை அண்டிக் கூட நிற்கக் கூடாது என்பார்கள். புலிகள் இதையே புனருத்தாரனம் என்று செய்தால்.. அதை இராணுவம் புலிகள் பதுங்கு குழி அமைக்கிறார்கள் என்று சொல்லித் தாக்கினாலும் புலிகள் தங்களைத் தாங்களே தாக்கினர் என்று அறிக்கை விடுவார்கள்.

மடு தேவாலயம்.. மத அனுஷ்டானத்துக்குரிய நிலையில் இருந்து இராணுவ வெற்றியை இனங்காட்டும் இராணுவ இலக்காக்கப்பட்டிருப்பதும்.. அதற்கு ஆயர்கள் உட்பட பலரும் மெளனமாக இருந்து ஒத்துழைப்பதும் வருத்தம் தருகின்ற விடயமாகவே இருக்கிறது..!

கொழும்புப் பேராயர் அடிப்படையில் ஒரு சிங்களவர். அதன் பின்னர் தான் அவர் ஆயர். அவர் இப்படிப் பல தடவைகள் அறிக்கைவிட்டுள்ளார். சந்திரிக்கா அம்மையார் காலத்திலும் இதே தொனியில் அரசியல் சார்ந்து அறிக்கை விடுபவர்கள் அவர்கள். மனித நேயம் அவர்களைப் பொறுத்தவரை இரண்டாம் பட்சம்.

ஏன் வத்திகான் கூட உலகில் அமெரிக்கா செய்து வரும் மனித உரிமை மீறல்களை காத்திரமாகக் கண்டிக்கவோ.. தடுத்து நிறுத்தவோ முனைவதில்லை..!

ஒருவேளை ஜேசு மீண்டும் வந்தார் என்றால் இந்த மதப் பெரியவர்களைத்தான் சாட்டையால் அடிப்பார்..! :huh:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

குகதாசனின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. அதில் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் மதம் மக்களின் இனத்துவ அடையாளத்தை இல்லாமல்ச் செய்யுமா என்று தெரியவில்லை.

உதாரணத்துக்கு, எமது தமிழ்க் கத்தோலிக்க பாதிரிமாரில் அநேகர் தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவானவர்கள். கருணாரட்னம் அடிகளார், சிங்கராயர் அடிகளார் போன்றோரை இங்கு குறிப்பிடலாம். இங்கு அவர்கள் கத்தோலிக்கர்களாக நடந்து கொண்டதைக் காட்டிலும் தமிழர்களாகவே நடந்து கொண்டனர் என்பது எனது கருத்து. ஏனென்றால் தமிழீழத் தமிழர்களுக்கான எமது போராட்டம் சமய வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால் இஸ்லாம் சமயம் போராட்டத்திலிருந்து விலகிப்போனது துரதிஷ்ட்டம்.

தமிழர்களாக இருக்கும் எவரும் போராட்டத்துக்கு உதவ வேண்டிய தேவை இருப்பதால் இங்கு மதம் ஒரு பொருட்டாகப் படவில்லை. ஏனென்றால் 500 வருடங்களுக்கு முன்னர் ஈழத்தில் கிறீஸ்த்தவம் பரவ முதல் எல்லாரும் இந்துக்களே ! ஆகவே நான் இந்து நீ கிறீஸ்த்தவன் என்று வாதிடுவதில் எந்தப் பயனும் இல்லை.

அதேபோல சிங்களவரிலும், பாதிரிமாராக இருந்தாலும் அவர்களும் அடிப்படையில் சிங்களவர்களே. கிறீஸ்த்தவர்களாக இருப்பதால் அவர்கள் மற்றச் சிங்களவரிலும் வேறுபட்டு நடுநிலையாக நடந்து கொள்வார்கள் என்று நினைப்பது தவறு. உதாரணத்துக்கு, சிகள உறுமய என்ற பேரினவாதக் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான குணசேகர ஒரு கிறீஸ்த்தவர். முன்னாள் ராணுவத்தளபதி ஜெரி டி சில்வா ஒரு கிறீஸ்த்தவர். விமானப்படைத் தளபதி குணதிலக ஒரு கிறீஸ்த்தவர். இவர்கள் எல்லோருமே தம்மைக் கிறீஸ்த்தவர்களாக அடையாளப்படுத்துவதை விட சிங்களவராகவே அடையாளப்படுத்திக் கொண்டனர்.அந்த வரிசையில் இம்முறை சிங்கள கிறீஸ்த்தவப் பாதிரியார் ஒருவரும் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

மேலும் நான் பொன்னையாவின் கருத்துடன் உடன்படுகிறேன். இங்கு ஒருவர் அடிக்கடி இந்து, கிறீஸ்த்தவ மதங்களுக்கிடையில் பிரிவினை உண்டுபண்ணும் விதமாகக் கருத்து எழுதி வருகிறார். இவரது கருத்துக்கள் பற்றி நான் சில தடவை நிர்வாகத்திடன் முறையிட்டும் இருக்கிறேன். சில வேளைகளில் புலிகளின் நகர்வுகளைக் குறை கூறும் இவரின் கருத்துக்கள் மற்றவர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் விதமாகவும் அமைவதுண்டு. அதற்காக நான் சாணக்கியனின் கருத்துக்கு இப்ப பதில் சொல்லப் போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளின் துணையுடந்தான் எமது போராட்டம் நடைபெற வேண்டும் என்ற கருத்து இவரிடம் பலமாக இருக்கிறது. அதை விமர்சிக்கும்போது நாங்கள் தேசிய விரோதிகளாகக் காட்டப்படுவது வழக்கமாகி விட்டது.

இறுதியாகக் குகனிடம்,

கிறீஸ்த்தவப் பாதிரிகளிடம் மதிப்பு வைப்பதில் தவறில்லை. அவர் தமிழராக, தேசியத்தை ஆதரிப்பவராக இருக்கும் பட்சத்தில்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்கள் கருத்தில் உண்மை இருக்கிறது.

1998 இல் மன்னார் ஆலயத்தில் தங்கியிருந்த அகதிகள் மீது சந்திரிக்காவின் ராணுவப் பேய்கள் தாங்கித் தாக்குதல் நடத்தி 40 பேரைக் கொன்ற போது தமிழோசை அங்கிருந்த பாதிரியார் ஒருவரைப் பேட்டி கண்டது. அவர் இதை ராணுவமே செய்ததாக ஒத்துக்கொண்டார். ஆனால் ஆயரோ "யார் செய்தது என்று தெரியவில்லை, இருதரப்பினரும் அங்கிருந்தனர்" என்று மழுப்பல் பதில் அளித்தார். அன்று அந்த ஆயர் தனது கடமையைச் சரியாகச் செய்யவில்லை.

நீங்கள் சொல்வதுபோல அமெரிக்காவின் செயல்களைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் வத்திக்கானும் நடுநிலமை என்ற இடத்திலிருந்து விலகி நெடுங்காலமாகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் , நீங்கள் கிண்டலடிக்க எடுத்துக்கொண்ட விடயம் ஒன்றும் ஊசி குத்தி பலூன் வெடிக்கும் விளையாட்டல்ல. அது எமது தேசியம் என்பது நினைவிலிருக்கட்டும் ! அதுசரி உங்களுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் ? நீங்கள் தாராளாமாகக் கிண்டலாம்.

உங்களுக்கு சிங்களப் பத்திரிகைகளில் வரும் செய்தி படிக்கவே நேரம் சரியாக இருக்கும், அப்புறம் எங்கே இங்கு வந்து குப்பை கொட்ட நேரம் இருக்கப் போகிறது. வாழ்க உங்கள் ஜனநாயகப் பத்திரிகா தர்மம் ! ஒன்று செய்யுங்கள், இங்கு "சிங்களப் பத்திரிகைகளில் இருந்து " என்ற தலைப்பில் உங்களின் ஜனநாயகத் தர்மத்தைக் காட்டலாமே? நாங்களும் எதற்கு வீணாக புதினம் பொறுக்கி எடுக்கும் செய்திகளைப் படிக்க வேணும் ? அப்படியே இலங்கைப் பாதுகாப்பு அமைச்சினதோ அல்லது தேசிய பாதுகாப்பு மைய்யத்தினதோ செய்திக் குறிப்பையும் இணைத்து விடுங்கள். இன்னும் விசேசமாகக இருக்கும். என்ன நான் சொல்லுறது ?!

மதத்தலைவர்கள் நீதியா நடந்தார்கள் நடப்பர்கள் என்று எந்த உத்தரவாத்முமில்லை... அவர்கள் அரசியலறிக்கை விட்டா அதுக்குப்பிறகு அவர்களை மதத்தலைவர்களெண்டதுக்காக விமர்சிக்காமல் இருக்கமுடியாது.

அதனால் மதநம்பிக்கை உள்ளவர்கள் புண்படுவார்கள் என்றால் அதுக்கு பொறுப்பு அந்தமதத்தலைவர்களாகத்தான் இருக்கமுடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஊசி குத்தினா வெடிக்கிற பலூன் கணக்கிலா தமிழ் தேசியம் ஊசாலடுகிறது... ஐயோ பரிதாபம்!

அப்புறம்?... சிரிலங்கா அரசு தமிழ்நெட்டை தடைசெய்ததற்கு இங்க சிங்கள செய்திகளை தடை செய்கிறார் எங்கடை பொன்னையர்.....சிங்களச் செய்திகளில தங்களுக்கு சாதகமான சமாச்சாரங்களை கண்டா உடன முன்வரிசையில போடுற புதினம் எங்க நீங்க எங்க!

தமிழ் தேசியத்தை ஊசிகள் குத்துவதற்கு ஏன் அனுமதிக்க வேண்டும்?? :huh:

உங்களை வாயார யாராவது புகழ்ந்தால் புகழாதே என்று அடிக்கவா போகின்றீர்கள்? வாய் பிளந்து நிற்கமாட்டீர்களா? எல்லோரும் அதைத் தான் விரும்புவார்கள். ஆனால் திட்டப்படும்போது வருகின்ற பதில் வேறாக இருக்கும்.

ஆனால் ஒன்று மட்டும் தெரிகின்றது சாணக்கியன். அப்படியான செய்திகளைக் கண்டால் உங்களுக்கு அடிவயிறு பற்றி எரிகின்றது என்று.

தமிழர் விரோதியான சிங்களவரான கொழும்பு பேராயர் சொன்ன செய்தி உண்மைதான். முன்பு எப்படி பிரித்தானியா, போத்துக்கேயர், ஒல்லாந்தருக்கு ஆமாப் போட்டு மாமன்னர் சங்கிலியன், பண்டாரவன்னியனுக்கு எதிராகச் செயற்பட்டார்களோ, அவ்வாறே தற்பொழுது விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள அரசுவோடு சேர்ந்து ஆமாப் போடுகிறார்.

ஒருவேளை ஜேசு மீண்டும் வந்தார் என்றால் இந்த மதப் பெரியவர்களைத்தான் சாட்டையால் அடிப்பார்..!

அவர்கூட தன்தலையில் தான் அடித்துக்கொண்டு போயிருப்பார் இந்த உலகை பார்த்து... :huh:

எனது பதில் யாவரும் இந்து.... கிறிஸ்தியன்..... முஸ்லீம்..... சிங்களவன்.... இந்த போரால் குளம்பி...போயுள்ளோம் குளப்பிக்கொண்டே இருப்பர்... குளம்பிக்கொண்டுள்ளோம்.... இதற்கு எல்லாம் தீர்வு தமிழீழம் உருவாகுவதே... அதுகூட யாவரும் அறிந்ததே... தமிழனுக்கு தேவை தமிழீழம் இல்லயேல் யாவரும் அழிந்து கொண்டே போவோம்...... இதுவே யதார்த்தம் இந்த இலங்கையில்...... :o :o

Edited by Netfriend

  • கருத்துக்கள உறவுகள்

மற்றய தலைப்புக்களில் எம் விடுதலைப்போராட்டம் மலிவடைகின்றது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முனைவார். மக்களின் நம்பிக்கை இழக்க வைக்க முயலுவார். இது மெதுவான வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அமையும்.

ஒரு ஊசி குத்தினா வெடிக்கிற பலூன் கணக்கிலா தமிழ் தேசியம் ஊசாலடுகிறது... ஐயோ பரிதாபம்!

சாணக்கியன்,

நன்றாகப் படித்துப் பாருங்கள். அவர் ஊசி குத்தின பலூனைப் பற்றி எழுதவில்லை. வாழைப்பழத்தில் ஊசி குத்திறதைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறார். இரண்டுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்? :huh:

உங்களுக்குப் புலிகள் மேல் காழ்ப்புணர்ச்சி இருக்கலாம்.. அதற்காக வாதத்துக்கேனும் தமிழ் தேசியத்தைக் கொச்சைப் படுத்தாதீர்கள். அப்படிச் செய்வீர்களானால், சிங்களவனிடம் அடிவேண்டுகிற நேரத்தில் வேண்டிக்கொண்டு ஈனப்பட்டு வாழுங்கள் என்று சொல்லாமல் சொல்லுகிறீர்கள் என்று அர்த்தம். கறுப்பு ஜூலை அன்று பட்ட ரணம் என் போன்றவர்களுக்கு இன்னும் ஆறவில்லை. அதை மேலும் கிளறி விடாதீர்கள். இதைச் சரியான விதத்தில் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவரைத் தனிப்பட்ட விதத்தில் தாக்குவதாக இணையவன் போன்ற அறிவாளிகள் இக்கருத்தைத் தூக்கலாம். ஆனால் இவர் எழுதுகின்ற கருத்தின் நோக்கங்களைப் புரியாமல் விட்டுவிடுவார்கள்.

தேவையில்லாதவற்றை விட்டு தேவையானதையே இங்கு சிலபேர் தூக்கினம். தூக்கும்போது இவர்களால் காரணம் தெரிவிக்கமுடியுமா அல்லது களவிதிகளைதான் இவர்களால் பின்பற்றமுடியுமா?

  • தொடங்கியவர்

மதம், கடவுள் என்பவை பற்றி இங்கு பிரச்சனையில்லை. ஆனால் கொழும்பு பேராயர் அரசியல் பேசுகிறார். அது வெளிப்படைபாகவே தெரிகிறது. அல்லது அப்படிப்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டிருக்கலாம்.

"போராட்டத்தில் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்காக முழுத் தமிழர்களும் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார்."

இந்த விடயம் யார் போராடுகிறார்கள்? யார் பாதிக்கப்படுகிறார்கள்? பாதிக்கப்படுபவர்களையும், போராடுபவர்களையும் எப்படி இனங்காணுவது, என்பதை தெளிவுபடுத்தினால்தான் அதனை விளங்கிக் கொள்ள முடியும்.

மதமும் ஒரு வகை அரசியல்தான். யார் எதைச் சார்ந்திருக்கின்றார்களோ, அது சார்ந்ததாகத்தான் விவாதங்களுமிருக்கும். இனம், மதம், மொழி என்பன அப்படிப்பட்டவைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஙரழவந யெஅநஸ்ரீ'சயபரயெவாயn' னயவநஸ்ரீ'துரட 24 2008இ 11:04 Pஆ' pழளவஸ்ரீ'431555'ஸ

குகதாசனின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. அதில் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் மதம் மக்களின் இனத்துவ அடையாளத்தை இல்லாமல்ச் செய்யுமா என்று தெரியவில்லை.

இறுதியாகக் குகனிடம்

கிறீஸ்த்தவப் பாதிரிகளிடம் மதிப்பு வைப்பதில் தவறில்லை. அவர் தமிழராகஇ தேசியத்தை ஆதரிப்பவராக இருக்கும் பட்சத்தில்.

நன்றி.

குகதாஸ் அண்ணனின் "காலம் பதில் சொல்லும்" வார்த்தைகளின் அழுத்தமான பதிலிலேயே எல்லவற்றிற்கும் பதில் சொல்லி விட்டார்.... அவரின் கடவுள் நம்பிக்கை உட்பட....

காலம் சொல்லும் பதில்கள் மிக அழுத்தமானது...வலிமையானது

--------------------

ஈழம் என்றொரு தேசம் - அங்கே

புலிக்கொடி பட்டொளி வீசும்.

- சுதேசிகன்.

பாதுகாப்பமைச்சின் இணையத்தளப் படங்களின் பிரகாரம்.. சீருடையணிந்த இராணுவத்தைக் கொண்டு மடுமாதா தேவாலயம் புரனமைக்கப்படும் காட்சியைக் காணலாம். இராணுவப் பிரசன்னம்... அதை இராணுவ இலக்காக்கினால்.. மடுவைத் தாக்கிவிட்டார்கள் என்பார்கள். ஆனால் புலிகள் தேவாயலத்தை அண்டிக் கூட நிற்கக் கூடாது என்பார்கள். புலிகள் இதையே புனருத்தாரனம் என்று செய்தால்.. அதை இராணுவம் புலிகள் பதுங்கு குழி அமைக்கிறார்கள் என்று சொல்லித் தாக்கினாலும் புலிகள் தங்களைத் தாங்களே தாக்கினர் என்று அறிக்கை விடுவார்கள்.

மதமும் ஒரு வகை அரசியல்தான். யார் எதைச் சார்ந்திருக்கின்றார்களோஇ அது சார்ந்ததாகத்தான் விவாதங்களுமிருக்கும். இனம்இ மதம்இ மொழி என்பன அப்படிப்பட்டவைதான்

அனைவரினதும் கருத்துக்களுக்கு நன்றி

மீண்டும் சொல்கின்றேன்

இங்கு மதம் பற்றிய விவாதமாக இது ஆரம்பிக்கவில்லை

ஒருவர் சொல்லாததை அவர் எமக்கு எதிரியாக இருப்பினும்

அவர் சொன்னதாக அவசரப்பட்டு.அதுவும் எமது மக்களை புண்படுத்தும் செய்திகளை வியாபாரநோக்கில் எழுதுவதைத்தான் நான் விமர்சித்தேன்........

மடுமாதா.............சார்ந்தவர்களில் எனக்கு நம்பிக்கையில்லை..............

நான் அவர்களை நேரிலேயே கேள்விகேட்டுள்ளேன்...............

அதனால்தான் கோடியில் ஒன்றை உதாரணமாக எடுக்கவேண்டாம் என்றேன்

கொழும்பு பேராயர் ஒரு சிங்களவர் என்பதனை ஏற்றுக்கொண்டாலும்

அவரது கருத்துக்களுக்கு அவர் பதில்கூறவேண்டிய இடம் மிகவும் பெரியது????????????????

என்பதே என் கருத்து........

அதனால்தான் உடனேயே அவர் இதனை மறுத்திருக்கின்றார்

மற்றும் சிலருடன் விவாதம் செய்வது வீண்விரயம் என நன்கு தெரிந்தும்

நேரத்தை இழந்ததற்கு காரணம் தோலுரிக்கவேண்டும் என்பதே............

நன்றி..நன்றி..நன்றி..

இறுதியாகக் குகனிடம்

கிறீஸ்த்தவப் பாதிரிகளிடம் மதிப்பு வைப்பதில் தவறில்லை. அவர் தமிழராகஇ தேசியத்தை ஆதரிப்பவராக இருக்கும் பட்சத்தில்.

நன்றி.

இந்த கருத்தில் 100 வீதம் உடன்படுகின்றேன்

ஒரு ஊசி குத்தினா வெடிக்கிற பலூன் கணக்கிலா தமிழ் தேசியம் ஊசாலடுகிறது... ஐயோ பரிதாபம்!

அப்புறம்?... சிரிலங்கா அரசு தமிழ்நெட்டை தடைசெய்ததற்கு இங்க சிங்கள செய்திகளை தடை செய்கிறார் எங்கடை பொன்னையர்.....சிங்களச் செய்திகளில தங்களுக்கு சாதகமான சமாச்சாரங்களை கண்டா உடன முன்வரிசையில போடுற புதினம் எங்க நீங்க எங்க!

என்ன அண்ணா

கொஞ்சநாளைக்குமுன்னம் மென்மையைப்பத்தி பேசிப்போனிங்கள் லண்டனிலையும் கனடாவிலையும் சனம் அதிகமா வந்ததால போனனிங்கள் இப்ப பலூனோட நிக்கிறிங்கள் என்ன சங்கதி?

தமிழ் மக்களின் போராட்டம் உடையுறதுக்கு ஒண்டும் பலூன் இல்லை...

சரி அதுகிடக்கட்டன்... பலூனில்லை எங்க குத்தினாலும் அனுமதிக்க முடியாது...

எங்காவது மென்மையான இடங்கிடந்தா சொல்லுங்கோ எல்லாரும் போய் குத்தலாம்.

Edited by Sooravali

என்ற பதிலை வாசிச்சனீங்கள் எதுக்கு அப்பிடி பதில் எழுதினது என்று வாசிச்சனீங்களே?

ஒருவர் இங்க ஊசியோட திரியுராராம், இப்ப இங்க யாழ்களத்தில வாழைப்பழத்தில ஊசி ஏத்திறாராம், இப்படியே விட்டா அவர் தமிழ் தேசிய பலுனில ஊசியை செருவி அதை உடைச்சுப் போடுவார் என்று ஒருவர் ஒப்பாரி வைக்கிறார். உங்கடை பதிலை அவருக்கெல்லோ சொல்ல வேணும்...!

ஸ்ஸ்ஸ்........சப்பா.... கண்ணக்கட்டுது!

தேவையில்லாதவற்றை விட்டு தேவையானதையே இங்கு சிலபேர் தூக்கினம். தூக்கும்போது இவர்களால் காரணம் தெரிவிக்கமுடியுமா அல்லது களவிதிகளைதான் இவர்களால் பின்பற்றமுடியுமா?

கள விதிகளுக்கு முரணான கருத்துக்கள் இயன்ற அளவு மட்டுறுத்தினர்களால் நீக்கப்படுகின்றன. விதிகளுக்குட்படாதவையாக நீங்கள் கருதும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படாதிருந்தால் முறைப்பாடு (REPORT) மூலம் நிர்வாகத்திற்கு அறியத் தரலாம்.

கருத்துக்களுடன் உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டால் அக்கருத்தாளரை தாக்குவதை விடுத்து பண்பான முறையில் உங்கள் பதில் கருத்துக்களை முன்வையுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ற பதிலை வாசிச்சனீங்கள் எதுக்கு அப்பிடி பதில் எழுதினது என்று வாசிச்சனீங்களே?

ஒருவர் இங்க ஊசியோட திரியுராராம், இப்ப இங்க யாழ்களத்தில வாழைப்பழத்தில ஊசி ஏத்திறாராம், இப்படியே விட்டா அவர் தமிழ் தேசிய பலுனில ஊசியை செருவி அதை உடைச்சுப் போடுவார் என்று ஒருவர் ஒப்பாரி வைக்கிறார். உங்கடை பதிலை அவருக்கெல்லோ சொல்ல வேணும்...!

ஸ்ஸ்ஸ்........சப்பா.... கண்ணக்கட்டுது!

வாழைப்பழத்துக்கும், பலூன் என்றதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் யாழ்களத்தில் குப்பை கொட்டுகின்றார்கள்.... சிங்கத்தின் குகைக்குள் இருந்து எழுதுவதால் சிலவேளை அப்படித் தோன்றுமோ என்னவோ?.... பின்னே சும்மாவா... வன்னியில் இராணுவம் மக்களைக் கொல்லும்போது.... புலியாகத் தெரிந்த கண்கள் அல்லவா அது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள விதிகளுக்கு முரணான கருத்துக்கள் இயன்ற அளவு மட்டுறுத்தினர்களால் நீக்கப்படுகின்றன. விதிகளுக்குட்படாதவையாக நீங்கள் கருதும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படாதிருந்தால் முறைப்பாடு (REPORT) மூலம் நிர்வாகத்திற்கு அறியத் தரலாம்.

கருத்துக்களுடன் உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டால் அக்கருத்தாளரை தாக்குவதை விடுத்து பண்பான முறையில் உங்கள் பதில் கருத்துக்களை முன்வையுங்கள்.

ஆக, தமிழீழப் போராட்டத்தைச் சிதைக்கும் வண்ணம் எவ்வளவு நயவஞ்சகத்தோடு ஆனால் பண்பாக எழுதினால் விட்டு வைப்பீர்கள்? அப்படித் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

கவனம்

துயிலெழும்பி வந்ததுவிட்டினம்

ஊசி...........பலூன்........என்று.............பல ...ஆயுதங்களோட தமிழ்தேசியத்தை ஒப்பிட்டு...............குத்திக்குதற .

.............வெளிக்கிட்டிருக்கினம்....

.......

எல்லோரும் களத்தில?????? நில்லுங்கோ..................

தனிய நின்று சமாளிக்க ஏலாது..........

பின் வாங்கினாலும் ஏதாவது சொல்லுவினம்?????????

வாங்கோ.......

குகதாசன்

சிலதுகள் உப்பிடித்தான்.. எங்கட சனம் அடிச்சு புடிச்சு வெண்டா எல்லாம் வருவாங்கள் ஆரவாரமென்ன பாராட்டென்ன...

கொஞ்சம் பின்னடைவெண்டா போது ஏதோ தாங்கள் சொல்லச்சொல்ல கேக்காமல் போய் சண்டைபுடிச்சு சாகிறமாதிரியும்

தங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லாதமாதிரியும் தான் கதைப்பாங்கள்...

எந்த நிலைவந்தபோதும் எங்கள் ஆதரவு எண்றும் மாறாது என்று நினைத்து செயல்ப்படுவோம்... எவனாலும் எங்கள் உறுதியை உடைக்கமுடியாது.

'War is not the solution' Archbishop Gomis

Archbishop Oswald Gomis say the only way for peace in Sri Lanka is through a political solution.

In an interview with the BBC Sandeshaya, Roman Catholic Archbishop of Colombo said that politicians in the south should get together and offer a political solution to engage in discussions with the Tamil Tigers.

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...waldgomis.shtml

செய்தி என்னமோ வேறதான்

ஆனாலும் இந்த செய்தியால் பல்ரிண்ட சுயரூபம் தெரியவந்தது...

நன்றி தயா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.