Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள யதார்தங்களும் பிரச்சாரங்களும்--சி.இதயச்சந்திரன்

Featured Replies

http://www.tamilnaatham.com/audio/2008/jul...egi20080721.mp3

http://www.tamilnaatham.com/audio/2008/jul...egi20080721.m3u

இதை வைச்சு புலம்பெயர்ந்த ஊடகத்தளத்தில் எத்தினை கட்டுரை வந்திருக்கும் கடந்த 2 கிழமைகளில்?

இதுவே இளந்திரையன் நாங்கள் மதவாச்சியில் நிப்பம் எண்டு சொல்லியிருந்தா அதுக்கு கை கால் காது மூக்கு எல்லாம் வைச்சு முன்பு ஓயதஅலைகளில் கேணல் தீபன் தொலைத் தெடர்பு கருவியில கெப்பேகடுவவுக்கு இப்பிடிச் சொன்னவர். கேணல் பாணு அலைகள் ஓய்வதில்லை 2 இல் ஸ்வாட்ஸ்கொவ்விற்கு எம்எஸ்என் இல அப்பிடிச் சொன்னவர் எண்டு ஆய்வுகள் 5...6 எழுதியிருப்பம்.

  • Replies 62
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குறூக்ஸ், தமிழ் ஊடகங்கள் கன்றாவி ஆகிவிட்டன என்பதில் எந்த வித ஐயமுமில்லை. ஏனெனில் ஒருவர் அவசரப்பட்டு உண்மைநிலையை எழுதும் போது மற்றவர்கள் அவர் மீது துரோகி பட்டம் கட்ட வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள் என்பது தான் தமிழ் ஊடகங்களின் இன்றைய பரிதாப நிலை. :lol:

ஓ அப்பிடியே விசையம். நல்ல பயனுள்ள தகவல் அண்ணை. விளங்கப்படுத்தினதுக்கு நன்றி.

பாலஸ்தீனக்காரன் இன்னொரு பாலஸ்தீனக்காரனுக்கு அவனுடைய போராட்டம் பற்றி பரப்புரை செய்வது இல்லை. ஒரு யூதன் இன்னொரு யூதனுக்கு அவனுடைய போராட்டம் பற்றி பரப்புரை செய்வதில்லை. எதிரிகளாக இருக்கின்ற இந்த இரண்டு தரப்புமே தமது பரப்புரைகளை சர்வதேசத்தை நோக்கித்தான் செய்கின்றன.

இந்த xxxxதமிழனுக்கு மட்டும் அவனுடைய போராட்டம் பற்றி அவனிடமே பரப்புரை செய்ய வேண்டும். உலகம் எல்லாம் பொங்குதமிழ் நடத்தி அவனை தூக்கம் கலைந்து எழுந்திருக்கச் செய்ய வேண்டும்.

சண்டைக்குப் போகின்ற ஒரு புலிப் போராளிக்கே தான் எங்கே சண்டை செய்யப் போகின்றோம் என்று பல நேரங்களில் தெரிந்திருப்பது இல்லை. ஆனால் இந்தப் புலம்பெயர்ந்த xxxxதமிழனுக்கு பானு எங்கே நிற்கிறார், தீபன் எங்கே நிற்கிறார், சார்ள்ஸ் அன்ரனிப் படையணி எங்கே நிற்கின்றது என்று எல்லாம் தெரிய வேணுமாம்.

தெரிந்தால்தான் அவன் ஒழுங்கா பங்களிப்பை செய்வானாம். இதில் ஆய்வாளர்களை குற்றம் சொல்லி என்ன பயன்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களில் பலர் "என்ன நடக்குதாம்? இப்படியே போனா என்ன தீர்வுதான் வரப் போகுதோ? எப்படியாவது ஒரு தீர்வு வந்தால் சரி" என்று ஏன் கதைக்கிறார்கள்? ஏன் தமிழீழம்தான் ஒரே தீர்வு என்று யூதர்கள் மாதிரியும், பாலஸ்தீனர்கள் மாதிரியும் உறுதியாய் தமிழர்கள் இல்லை? எல்லாம் இரத்தத் திலகம் இட்டால் தலைவர்கள் நாடு பெற்றுத் தருவார்கள் என்று ஒரு காலத்தில் நம்ம்பிருந்தவர்கள் வழியில் வந்தவர்கள்தானே..

எப்படியாவது ஒரு தீர்வு வந்தால் சரி"

இல்லை அண்ணா நான் இப்ப இதை எல்லாம் தாண்டி மோட்டு தமிழருக்ககக விடுதலை புலிகள் போராடியது ்போதும் இனியயவது சிங்கள அரசின் கைகளில் சிக்காமலும் சர்வதேச கோர்டில் தலைகுனிந்து நிக்காம எங்கையாவது நாட்டில் வாந்தால் போதும்...

அப்படி வந்த ஒருவரைத்தானே உள்ளுக்கை கொஞ்சக் காலம் வைத்திருந்து விட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். அவரும் பழையபடி கல்வி, அபிவிருத்தி என்று கதைக்க ஆரம்பித்துள்ளார்..

பாலஸ்தீனக்காரன் இன்னொரு பாலஸ்தீனக்காரனுக்கு அவனுடைய போராட்டம் பற்றி பரப்புரை செய்வது இல்லை. ஒரு யூதன் இன்னொரு யூதனுக்கு அவனுடைய போராட்டம் பற்றி பரப்புரை செய்வதில்லை. எதிரிகளாக இருக்கின்ற இந்த இரண்டு தரப்புமே தமது பரப்புரைகளை சர்வதேசத்தை நோக்கித்தான் செய்கின்றன.

அண்ணை பலஸ்தீனத்துக்கு உங்கட ஆக்களை போல தூரோகிகள் இல்லை, இஸ்ரேலியனுக்கையும் இல்லை...!! உங்களை சுத்தி கூடாரம் போட்டு தமிழனை எதிரா வைச்சு கொண்டு நல்ல மிடுக்காதான் எழுதுறீயள்....!!!

பல எதிரிகள் புலிகள் ஆதரவாளராகத்தான் காட்டி கொள்கிறார்கள்... வெளிப்படையானவை கொஞ்சபேர்தான்...!!

அவை என்ன செய்யினம் எண்டு தெரிந்து கொண்டு கதைகட்ட வெளிகிடுங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டுவழிதாண்இருக்கிண்றது?

இப்பவே கதை சொல்ல தொடங்கிட்டார்கள் புலிகள் நோர்வையுடன் ஒப்பந்தமாம் அதாவது யுத்ததில் தோற்றால் குறிப்பிட்ட சில தளபதிகளை நோர்வையில் தங்க விடுவது என்றாம் உண்மையோ?/?????????

நெருப்பில்லாமல் புகையாது. எத்தனையோ விசையங்களை தீர்க்க தரிசமாக செய்தவைக்கு உந்த ஏற்பாடுகள் எல்லாம் யுயுஜிப்பி. :unsure: சொந்தக்காறர் நண்பர்கள் எண்டாலும் ஏதாவது கிடைக்குமோ எண்டு விசாரிச்சு சொல்ல முடியுமே?

இரண்டுவழிதாண்இருக்கிண்றது?

1 குடிசார் தகவல் படி செய்தி எழுதுறது 2 வது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை பலஸ்தீனத்துக்கு உங்கட ஆக்களை போல தூரோகிகள் இல்லை, இஸ்ரேலியனுக்கையும் இல்லை...!! உங்களை சுத்தி கூடாரம் போட்டு தமிழனை எதிரா வைச்சு கொண்டு நல்ல மிடுக்காதான் எழுதுறீயள்....!!!

பல எதிரிகள் புலிகள் ஆதரவாளராகத்தான் காட்டி கொள்கிறார்கள்... வெளிப்படையானவை கொஞ்சபேர்தான்...!!

அவை என்ன செய்யினம் எண்டு தெரிந்து கொண்டு கதைகட்ட வெளிகிடுங்கோ...

தயா .சபேசன் சொன்ன இந்தக்கருத்து நான் பல காலமாகவே சொல்லி வருகின்ற கருத்துத்தான். சபேசனின் இந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு ஏனெனில் சபேசனும் ஆய்வுகட்டுரை எழுதுபவர்தான். என்னைப் பொறுத்தவரை புலம் பெயர் தேசத்தில் தமிழர் தரப்பில் பரப்புரைக்காக நியமிக்கப் பட்டிருப்பவர்கள் பரபரப்புரைகள் எழுதி காலத்தை வீணடித்து தங்கள் தமிழ்ப்புலைமையையும் தங்கள் எழுத்தின் வீரப்பிரதாபத்தை தமிழர்களிடமே நிலைநாட்டுவதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறாரகளே தவிர இவர்கள் வாழுகிற நாட்டில் அந்த நாட்டு மொழியில் அந்த நாட்டு பத்திரிகையில் இவர்களது ஏன் எமது போராட்டம் பற்றி அதனது தேவை பற்றி ஒரு கட்டுரை . வேண்டாம் ஒரு வசனமாவது வெளிவந்திருக்கிறதா??முடியாது . ஆனால் ஆயுத விடுதலைப்போராட்டம் தொடங்கி முப்பதாவது ஆண்டினை முடிவுசெய்யும் நிலையிலும் எமக்கு ஏன் ஆயுதப் போராட்டம் தேவை எண்டதை எங்கடை ஆக்களுக்கே விளங்கப்படுத்தினமாம். என்னைப் பொறுத்தவரை முப்பது வருசஆயுதப் போராட்டதில் எமக்கு ஏன் போராட்டம் எண்டு விளங்காத ஒரு ஈழத்தமிழனிற்கு அதை விழங்கப்படுத்துவதில் எந்தவித பிரயோசமும் இல்லை. இனி அவன் விளங்கியும் ஒண்டும் புடுங்கப் போறதும் இல்லை. ****

Edited by மோகன்
***** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலஸ்தீனக்காரன் இன்னொரு பாலஸ்தீனக்காரனுக்கு அவனுடைய போராட்டம் பற்றி பரப்புரை செய்வது இல்லை. ஒரு யூதன் இன்னொரு யூதனுக்கு அவனுடைய போராட்டம் பற்றி பரப்புரை செய்வதில்லை. எதிரிகளாக இருக்கின்ற இந்த இரண்டு தரப்புமே தமது பரப்புரைகளை சர்வதேசத்தை நோக்கித்தான் செய்கின்றன.

இந்த xxxxதமிழனுக்கு மட்டும் அவனுடைய போராட்டம் பற்றி அவனிடமே பரப்புரை செய்ய வேண்டும். உலகம் எல்லாம் பொங்குதமிழ் நடத்தி அவனை தூக்கம் கலைந்து எழுந்திருக்கச் செய்ய வேண்டும்.

சண்டைக்குப் போகின்ற ஒரு புலிப் போராளிக்கே தான் எங்கே சண்டை செய்யப் போகின்றோம் என்று பல நேரங்களில் தெரிந்திருப்பது இல்லை. ஆனால் இந்தப் புலம்பெயர்ந்த xxxxதமிழனுக்கு பானு எங்கே நிற்கிறார், தீபன் எங்கே நிற்கிறார், சார்ள்ஸ் அன்ரனிப் படையணி எங்கே நிற்கின்றது என்று எல்லாம் தெரிய வேணுமாம்.

தெரிந்தால்தான் அவன் ஒழுங்கா பங்களிப்பை செய்வானாம். இதில் ஆய்வாளர்களை குற்றம் சொல்லி என்ன பயன்?

சபேசனின் பலகருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லையாயினும் அவரின் இந்தகருத்து நூற்றுக்குநூறு உண்மை.அதற்காக சபேசன் வாழ்க என்று கோஷம் போட மாட்டேன் :unsure:

உலகளாவிய ரீதியில் நடந்த பொங்குதமிழை எம்மவர்களை விழிப்படைய செய்ய மட்டும் தான் பயன்பட்டது என்று நாமே குறைத்து மதிப்பிடக் கூடாது. அது சர்வதேச அரங்கில் நடந்தது. ஊடக கவனம், விடையங்கள் பரப்பப்பட்ட மொழி என்பவற்றில் நம்மவர்களை நோக்கியது போன்ற தோற்றப்பாடு இருந்தாலும் அது காலப் போக்கில் மாற்றமடையும்.

காந்தியின் சத்தியாகிரகம் பலஸ்தீனத்தின் இன்ரபாடா என்பன எப்படி ஒரு குறியீடுகளாக உதாரணங்களாகப் பேசப்பட்டதோ அதே போல் பொங்கு தமிழ் என்பது ஏனை போராட்டங்களிற்கு ஒரு குறியீடாக உதாரணமாக பேசப்படும் அகராதியில் இடம் பிடிக்கும் காலம் வரும்.

ஒவ்வொரு முறையும் ஒழுங்கு படுத்தும் போது குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. சந்ததி சந்ததியாக கோயில் சினிமா என்று இருந்த இனம் மாற்றமடைவது என்பது இலகுவான காரியமல்ல. தவறுகளை திருத்தி திறம்படச் செய்ய காலம் எடுக்கும்.

06 -ஆனி -- 2005 க்கு பின் குறுக்ஸ் எழுதிய கருத்துகளில் என்னை கவர்ந்தது. உண்மையும் கூட.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்காலபோவன் எதை உண்மையாக எழுதுகின்றார் என்பதைக் கண்டு பிடிக்கவே காலம் கரையுது

தயா .சபேசன் சொன்ன இந்தக்கருத்து நான் பல காலமாகவே சொல்லி வருகின்ற கருத்துத்தான். சபேசனின் இந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு ஏனெனில் சபேசனும் ஆய்வுகட்டுரை எழுதுபவர்தான். என்னைப் பொறுத்தவரை புலம் பெயர் தேசத்தில் தமிழர் தரப்பில் பரப்புரைக்காக நியமிக்கப் பட்டிருப்பவர்கள் பரபரப்புரைகள் எழுதி காலத்தை வீணடித்து தங்கள் தமிழ்ப்புலைமையையும் தங்கள் எழுத்தின் வீரப்பிரதாபத்தை தமிழர்களிடமே நிலைநாட்டுவதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறாரகளே தவிர இவர்கள் வாழுகிற நாட்டில் அந்த நாட்டு மொழியில் அந்த நாட்டு பத்திரிகையில் இவர்களது ஏன் எமது போராட்டம் பற்றி அதனது தேவை பற்றி ஒரு கட்டுரை . வேண்டாம் ஒரு வசனமாவது வெளிவந்திருக்கிறதா??முடியாது . ஆனால் ஆயுத விடுதலைப்போராட்டம் தொடங்கி முப்பதாவது ஆண்டினை முடிவுசெய்யும் நிலையிலும் எமக்கு ஏன் ஆயுதப் போராட்டம் தேவை எண்டதை எங்கடை ஆக்களுக்கே விளங்கப்படுத்தினமாம். என்னைப் பொறுத்தவரை முப்பது வருசஆயுதப் போராட்டதில் எமக்கு ஏன் போராட்டம் எண்டு விளங்காத ஒரு ஈழத்தமிழனிற்கு அதை விழங்கப்படுத்துவதில் எந்தவித பிரயோசமும் இல்லை. இனி அவன் விளங்கியும் ஒண்டும் புடுங்கப் போறதும் இல்லை. ****

சாத்து..!

பிரச்சாரப்படுத்தல் என்பது எப்போதுமே எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரு அலகு...

பொங்குதமிழை எடுத்துக்கொள்ளுங்கள்... கடுமாயான ஊடக செயற்பாடுகள் விளிப்பூட்டல்களின் மத்தியில் 100000 மக்கள் வாழும் லண்டனில் இருந்து ( தூர இடங்களில் இருந்தும்) வந்தவர்களுன் தொகை 40 000 .... அதுக்கு காரணம் என்ன எண்று எப்போதாவது ஜோசித்தீர்களா..??

சரி இணைய இணைப்பை வைத்து தமிழ் கட்டுரைகளை படிக்கும் மக்களின் விகிதாசாரம் என்ன இருக்கும்..? ஒரு 20% தேறாதது என்பதுதான் சரியாக இருக்கும்... மக்கள் ஒண்றில் இணையத்தை உபயோகிக்க தெரியாதவராக இருக்கிறார்.. அல்லது தமிழ் தளங்களில் நேரங்களை செலவிட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.... தமிழ் கடைகளில் இருந்து எடுத்து போகும் இலவச பேப்பர்களை கூட பலர் படிப்பதில்லை... இணைய வித்துவான்களின் கட்டுரைகள் எத்தினை பேரை போய் சேர்ந்து விடும்..."இணைய வித்துவான்களின் கட்டுரைகள் எத்தினைபேர் படிப்பார்கள்..? அப்படி அந்த கட்டுரைகளை படிப்பவராக இருந்தால் அவர் உண்மையில் விளக்கம் கூடிய பகுத்தறிய தெரிந்தவர்களாக இருப்பர்...

பலர் வந்து தம்பி ஊரிலை என்னப்பு நடக்குது எண்று கேட்பது( எனக்கு நடப்பது வழமை) உங்களுக்கு கூட நிகழ்ந்து இருக்கும் யோசித்து பாருங்கள்... அவர்கள் எல்லாம் தாயகத்தில் அக்கறை இல்லாதவர்கள் அல்ல... புறச்சூழல் அவர்களை மாற்றி வைத்து இருக்கிறது... அவர்களை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டியது ஊடகராக உங்களது கடமை...

நீங்கள் மக்களை திட்டி எந்த பயனும் இல்லை... அவர்களை பிரச்சாரப்படுத்தி ஒருங்கிணைக்க முடியவில்லை எனும் இயலாமையின் வெளிப்பாடு....!!

(இதுக்கு யாழ்களத்தின் உள்ளேயே வெளியேறி பொன பலரை உதாரணமாக சொல்ல விருப்பம் ஆனால் வெட்டப்பட்டு விடும் என்பதால் விட்டு விடுகிறேன்)

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயா

அதே நிலமை தான் இங்கும். தமிழ்க் கடைகளுக்குப் போனால் ஈழமுரசுப் பேப்பர் அப்படியே தொடப்படாமல் இருக்கும். ஆனால் சனம் எச். பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் ஆரும் வரீனம் எண்டால் டிக்கெட் விக்கத் தொடங்க முதலே கடை கடையா ஏறி இறங்கும்.

இங்கு உதயம் என்ற பெயரில இலனக்கை அரசாங்கத்தின் உதவியுடன் அரசாங்கத்தின் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ஒரு பத்திரிக்கை வருகிறது. அதை இங்கு வந்து தம்மை பாசிச எதிர்ப்பு வாதிகள், ஜனநாயக வாதிகள் என்று காட்டிக்கொள்ளும் சிறிலங்கா ஏஜெண்ட்டுகள் செய்து வருகிறார்கள். அவர்களின் பத்திரிகைக் கட்டுக்குப் பக்கத்தில தான் ஈழமுரசுக் கட்டும் இருக்கும். வித்தியாசம், ஈழமுரசில் இருந்து ஒன்று அல்லது ரெண்டு பேப்பர் மட்டும்தான் போயிருக்கும், உதயம் பத்திரிகையின் கயிறு கூட அவிழ்க்கப்படாமல் இருக்கும்.

சனத்துக்கும் இங்கு சோலி அதிகம். ஆனால் மாவீரர்தினம் போன்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது ஓரளவு திருப்தியாகத்தான் இருக்கிறது.பெருமளவு மக்கள் வராவிட்டாலௌம், ஓரளவுக்காவது வருகிறார்கள்.

அடுத்தது கட்டாயம் வரவேண்டும் என்றும் இல்லையே. அவரவர் வசதிக்கேற்றவாறுதான் வருகிறர்கள்.அதற்காக அவர்கள் ஈழத்தில் நடப்பவை பற்றி அறிய ஆவல் இல்லாதவர்கள் என்றெல்லாம் கூறிவிட முடியாது.

Edited by ragunathan

ரகுநாதன்..

இந்த தலைப்பில் நடந்தவைகளின் சுருக்கம்:

விசாலமாக மேடை போட்டு கொடுத்து ஆடுங்கள் எண்று சொன்னதுக்கு, முன்னாலிருந்து ஆடிக்கொண்டு இருக்கும் வேல்ஸ் அருசும், இதயசந்திரனும் கேவலமாக ஆடுகிறார்களாம்...

மேடை சரி இல்லை எண்டு சொல்லாமல் விட்டுச்சினமே... சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் நீங்கள் இப்பிடி சொல்லுறியள் ஆனால் பல இராணுவ அiசியல் ஆய்வாளர்மார் இதயச் சந்திரன் உட்பட தாங்கள் அரசியல் ஆய்விலையே தமிழீழம் கிடைக்கப்போகுதெண்டு அடம் பிடிக்கினம்.அடிப்படை இராணுவ அறிவோ சமர்க்கள பூகொள அறிவோ இல்லாமல் கூகிள் விக்கிபீடியா உதவியோடை இவையள் எழுதித் தள்ளுற ஆய்வுகளை பாத்தால்.ஒண்டு விழங்கிது இவையளுக்கு நேரம் கனக்க இருக்குது அதாலை ஏதோ எழுதினம் எண்டு விழங்கிது. அவையளின்ரை ஆசையை ஏன் கெடுப்பான்.

சாத்து மரியாதையாக ஆய்வாளரிடம் மன்னிப்புக் கேட்காவிட்டால் இனி இதயச்சந்திரன் ஐரோப்பாவில் ஆய்வுகளை எழுதுவதில்லையென முடிவெடுத்தும் விடுவார். :mellow:

ஒரு ஆய்வாளரை நாங்கள் இழக்கவிரும்பவில்லை. ஒழுங்கு மரியாதையாக மன்னிப்புக் கேளுங்கள். :mellow:

குறுக்காலபோவன் எதை உண்மையாக எழுதுகின்றார் என்பதைக் கண்டு பிடிக்கவே காலம் கரையுது

தேவையில்லாத ஆய்வுகள் செய்தா உப்பிடித்தான் காலம் கரையும். :unsure:

Edited by shanthy

சாத்து மரியாதையாக ஆய்வாளரிடம் மன்னிப்புக் கேட்காவிட்டால் இனி இதயச்சந்திரன் ஐரோப்பாவில் ஆய்வுகளை எழுதுவதில்லையென முடிவெடுத்தும் விடுவார். :mellow:

ஒரு ஆய்வாளரை நாங்கள் இழக்கவிரும்பவில்லை. ஒழுங்கு மரியாதையாக மன்னிப்புக் கேளுங்கள். :mellow:

மன்னிப்பை சாத்திரி கேட்டா சாத்து சாத்து விழும்...!! சொல்லீட்டன்... விலாசம் வேற தந்து வைச்சு இருக்கார்..!!!

கூலிக்கு மார் அடிக்கிறது எண்டதை கேள்விப்பட்டு இருக்கிறீயளோ...?? வந்தவேலை எல்லாத்தையும் விட்டு போட்டு சொந்த கதை சொல்லி ஒப்பாரி வைப்பினம்...! அதை யாரும் கண்டு கொள்ளுறது இல்லை.. இருக்கும் இரச்சலோடை அதுவும் சேர்ந்து இருந்துவிட்டு போகட்டும் எண்டு விட்டு விடுவார்கள்....!!

அப்படி நாங்களும் இருக்க வேண்டியதுதான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

"விடுதலைக்கு எதிரான சக்திகள், தமக்கிடை யேயுள்ள சிறு வேறுபாடுகளையும் மறந்து ஒரே திசையில் பயணிக்கும் போது, எமது இணையத்தளமொன்றில் ஆய்வாளர்களை அரசியல் அறிவிலிகள் என்று குற்றம் சுமத்தி எமது சக்தியை மழுங்கடிக்கச் செய்யும் நகர்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விடுதலையை நோக்கிய நெருப்பாறு விரைவாக ஓடும். அந்த ஓட்டமானது தன்னால் நிகழ்வதாக வீசும் காற்று கற்பிதம் கொண்டால் நாமென்ன செய்ய முடியும்?

தேசியத் தலைமையின் ஆசீர்வாதத்தோடு வெளியிடப்பட்ட மொட்டைக் கட்டுரை போன்றே அது எழுதப்பட்டுள்ளதாக பல பத்தி எழுத்தாளர்கள் வருத்தம் கொள்கின்றார்கள்.

ஒன்று நிச்சயம். அதாவது, இன்று எமக்குள் பலப்பரீட்சை நடத்தும் நேரமல்ல இது என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்து நடந்துகொள்வதே தமிழினத்திற்கு நன்மை பயக்கும்."

இதயச்சந்திரனைக் காயப்படுத்தியது யார்? அது நிச்சயமாக நானில்லை .

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று இதயச்சந்திரனுக்கு ஆரேன் சொல்லிச்சினமோ தெரியாது. :mellow:

]

தேவை ஏற்பட்டால் நேரடியாகவே பத்தி எழுத்தாளர்களை அவர்களால் தொடர்பு கொண்டு விட முடியும். இது ஒன்றும் மதிப்பிற்குறிய இதயச்சந்திரன் அறியாததல்ல!!!

சரி வெற்றிவேல் இனி வெட்டி வேல் தான். நீங்களும் இனி இதயச்சந்திரனின் தேடுவோர் பட்டியலில் ????????? :unsure:

மன்னிப்பை சாத்திரி கேட்டா சாத்து சாத்து விழும்...!! சொல்லீட்டன்... விலாசம் வேற தந்து வைச்சு இருக்கார்..!!!

மன்னிப்பு கேட்காட்டி சாத்திரிக்கு சாத்து விழும் :mellow:

Edited by shanthy

மன்னிப்பு கேட்காட்டி சாத்திரி சாத்து சாத்து விழும் :mellow:

என்ன முழுசுறீயள்..??

சாத்து மன்னிப்பு கேக்க மாட்டார் எண்டதை உறுதியா தெரிஞ்சுதான் அந்த அறிக்கை... :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் பலரின் ஈ-மெயில் முகவரிகளை சேகரிக்கும் முயற்சியா இது?!!!

ம்ம்ம்ம்! உங்களுடன் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கவேண்டும்!!! :mellow:

முருகப்பெருமான்ரை வேலை வைச்சுக் கொண்டு வெற்றி வேல் பயப்பிட்டா முருகன் வீரவேலைப் பறிச்சிடுவார். :mellow:

  • தொடங்கியவர்

உங்களிடம் கேட்கிறேன் இங்கே கருத்துக்களை கக்குவர்களால் ஒரு சிறு ஆய்வைக்கூட செய்ய துப்பில்லாதவர்கள் என்பதுதான் உண்மை

தேச விடுதலைக்காக வாரம் தோறும் நிறைய வலிகளை சுமந்து கட்டுரையெழுதும் இதயச்சந்திரன், அருஷ் போன்றோர்கள் தமிழ் தேசியத்திற்காக செய்யும் பணிகளை நீங்கள் மறந்து வாய்க்கு வந்தபடி பேசுவது ஏன் என்பது ஒருசிலருக்கு வெளிச்சம்..........

இங்கு கருத்துஎழுதும் பல பேர் போர்களமுனையை கண்ணால் கூட பார்க்காதவர்கள் ஆனால் இதயச்சந்திரன் களமுனைகள் பற்றி நன்றாக அறிந்த ஒரு முன்னாள் போராளி. இன்று புலிகள் இயக்கத்தில் இருக்கும் பல போராளிகளின் ஆசிரியர் தமிழ் பந்தி எழுத்தாளர்களில் உலக நடப்புகளோடு ஒப்பிட்டு பந்தி வரைபவர் இங்கு எத்தனை பேருக்கு இலங்கை மீதான சீனாவின் களுகுப்பார்வையின் உண்மையின் தரிசனப் தெரியும் இதை அழகாக முத்துமாலை தொடர் எனும் கோட்பாடில் விழக்கியவர் அவர். சிவராம் ஆரம்பத்தில் எழுதும் போது அவர் சரியில்லை என்று சொன்னவர்கள் ஏன் சொன்னார்கள் என்பது ஒருசிலருக்கு தெரிந்த கசப்பான உண்மை ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் சுத்ந்திரம் தேசியம் என்பது பலவிடயங்களுக்கு அப்பாற்பட்டது.

ஒருவருடைய பின்னணி அவருடைய சேவை என்பவற்றை மதிக்க வேண்டும் இங்கு ஒரு சிலர் சொல்வார்கள் யூதர்கள் யூதர்களுக்கு பிரச்சாரம் செய்யவில்லை என்று உங்களில் உள்ள ஒரு சில புல்லுருவிகளுக்காக தமிழில் பிரச்சாரம் செய்யத்தான் வேண்டும் அத்துடன் இதில் எத்தனை பேர் நீங்கள் வாழும் பிரதேசத்தில் உள்ள மொழிகளில் இலன்கை செய்திகளை பரப்புகிறீர்கள் ????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.