Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவரிடம் இதை மட்டும் சொல்லாதிங்க…!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணவரிடம் இதை மட்டும் சொல்லாதிங்க…!

August 19, 2008

கணவன்-மனைவி இடையே எந்த ரகசியமும் இருக்கக் கூடாது. இருவரும் ஒருவரை ஒருவர் அகமும் புறமும் அறிந்திருக்க வேண்டுமென்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் அப்படி திறந்த புத்தகமாக இருக்காதீர்கள், அது நன்மையை விட தீமையைத் தான் அதிகம் ஏற்படுத்தும் என்கிறார்கள் உளவியல் நிபுணணர்கள். தம்பதிகள் காக்கும் தலையாய ரகசியங்களாக அவர்கள் கூறும் விஷயங்கள்.

பழைய நட்பு, காதல்…

திருமண வாழ்க்கை மீதும், புதிதாக வாழ்வில் இணைந்திருக்கும் கணவர் மீதும் அளவற்ற மரியாதை வைத்திருக்கும் பெண்கள், தங்களின் முந்தைய காதல், நட்பு பற்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டும், இல்லற வாழ்க்கையை ரகசியங்களுடன் ஆரம்பிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது வேலைக்காகாது. நல்ல ‘மூடில்’ அதை ரசித்துக் கேட்கும் கணவர் கூட, பின்னாளில் பிரச்சனை என்று வரும் போது அதைக் குத்திக் காட்டலாம். மனைவி முன்பு செய்த தவறை ஏன் மீண்டும் செய்யமாட்டாள் என்று கணவன் நினைக்கலாம். கணவன் ‘ஆட்டோ கிராப்’ பாணியில் தனது காதலை விவரித்தால், மறுபடியும் அவர் மலர் தாவ நினைப்பாரோ என்று மனைவிக்குச் சந்தேகம் எழலாம். எனவே இந்த விஷயத்தில் வாயை இறுக மூடிக் கொண்டிருப்பதே நல்லது.

பண விவகாரம்

தம்பதிகளுக்கு இடையே நடைபெறும் 60 சதவீத வாக்குவாதங்கள் பணம் தொடர்பானவையே. கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் வங்கி அக்கவுண்ட் விவரங்கள், பின் நம்பர்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை அப்படியே ஒப்பிக்க வேண்டியதில்லை என்கிறார்கள். இது ஒருவர் நிதி விவகாரத்தில் ஒருவர் புகுந்து பிரச்சினை ஏற்படுத்த வழிவகுக்கலாம்;. கணவன் மனைவியாக இருந்தாலும் அவரவர் தனித்தனியாக செலவழிக்க நினைக்கும் விஷயங்கள் இருக்கலாம். அக்கவுண்ட் நம்பர், பின் நம்பர்களை அறிந்திருப்பதனால், அந்த செலவு பற்றி துணை அறிய நேரும் போது, ‘ஏன் அந்தச் செலவு தேவையா?’ என்ற கேள்வியை எழுப்ப நேரலாம். எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யப் போகிறீர்கள் அல்லது சேமிப்புத் திட்டத்தில் ஈடுபடப் போகிறீர்கள் என்றால் குடும்பத்தில் விவாதித்துக் கொள்வது நல்லது.

நண்பர்களைப் பற்றிய ரகசியங்கள்.

கணவன் - மனைவி தங்களுடன் படித்த, வேலை பார்த்த நண்பர்களைப் பற்றிய மிகவும் ரகசியமான விஷயங்களைப் பேச்சு சுவாரசியத்தில் பரிமாறிக் கொள்ள வேண்டாம். இவ(ர்) சரியான ஓட்டை வாயா இருப்பா(ர்) போலிருக்கிறதே? என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தும். இருவர் சம்பந்தப் படாத மூன்றாம் நபர் பற்றிய விஷயம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். அது நினைத்துப் பார்த்திராத, எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும். ’அறியாமல் தவறு செஞ்சீட்டிங்க.. இதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்’ என்று உங்கள் நண்பர், தோழிக்கு உறுதி அளித்திருந்தால் அது உங்களின் துணையையும் சேர்த்து தான். உங்கள் நண்பரைப் பொறுத்தவரை உங்கள் துணை மூன்றாம் நபர் தான். அவரிடம் உங்கள் நண்பர் பற்றிய ரகசியங்களைப் போட்டுடைப்பது எந்த வகையில் நியாயம்?

குடும்ப விஷயங்கள்.

ஒவ்வொரு குடும்பமும் வெளியே கசியாமல் பாதுகாக்கும் ரகசியங்கள் உண்டு. அவற்றையும், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பற்றிய அந்தரங்க, வெளித் தெரியாத விஷயங்களைப் பட்டியலிட்டு கூற வேண்டுமென்பதில்லை. கணவன் - மனைவிக்கு இடையே வாய்ச் சண்டை ஏற்படும் போது நீ(ங்க) அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவ(ங்க) தானே? என்ற வார்த்தை வந்து, குடும்ப நிம்மதிக்கு ‘குண்டு’ வைத்து விடலாம். தவிர உறவினர் ஒருவரின் நடத்தை, பழக்க வழக்கம் பற்றி துணையிடம் விவரிக்கும் போது அவர், குறிப்பிட்ட உறவினரைச் சந்திக்கும் முன்பே ஒரு முன் முடிவுக்கு வந்து விடுவார். அது நன்மை தராது.

அலுவலக ரகசியங்கள்.

ஒவ்வொரு அலுவலகத்திலும் வெளியே தெரிய விடாமல் காக்க வேண்டிய ரகசியங்கள் என்று எழுதப்படாத விதி உள்ளது. துணையிடம் கூட அதை மீறக் கூடாது. அது நீங்கள் பணி புரியும் அலுவலகத்துக்குக் கொடுக்கும் மரியாதை மட்டுமல்ல, அடிப்படை நெறியும் கூட. அலுவலக விஷயம் பற்றி மனைவி ஆவலாகக் கேட்டால் கூட, ‘நீ வெளியே சொல்ல மாட்டாய்(மாட்டீர்கள்). நான் நம்புகிறேன். ஆனால் இதைச் சொல்வது சரியாக இருக்காது.’ என்று மென்மையாகக் கூறலாம். ‘அதையெல்லாம் சொல்லக் கூடாது’ என்று ஆரம்பத்திலேயே வெட்டி விடுவதும் நல்லது தான். ஒரு நிறுவனம் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைத் தகர்ப்பது சரியாகாது. சட்டத்துறை, ஊடகத்துறை, மருத்துவத் துறைகளுக்கு இது மிக முக்கியமாகப் பொருந்தும்.

paristamil.com

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பழையதை, தெரிஞ்சும் தெரியாமலும் கூடித்திருஞ்சதுகள மறைச்சு... கள்ளப்பட்டு வாழுறதிலும் பேசாமல் கலியாணம் கட்டாமலே வாழ்ந்திடலாம். வாறவனுக்கும் நிம்மதி வாழப் போறன் என்றவைக்கும் நிம்மதி..!

ஏமாற்ற நினைக்கிறவள்.. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏமாற்றியே தீருவாள்..! அதற்கு அவள் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிக்கத் தயாராகவும் இருப்பாள். :)

Edited by nedukkalapoovan

இவை அனைத்தையும் சொல்ல வேண்டாம் என்றால், அப்ப எதா தான் திருமணத்தின் பின் கதைப்பது... :)

பதில் கிடைக்கும் மட்டும் நான் திருமணம் பன்னாம இருக்க வேண்டியது தான்!! :lol:

Edited by இனியவள்

பதில் கிடைக்கும் மட்டும் நான் திருமணம் பன்னாம இருக்க வேண்டியது தான்!!

:):lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இனிய இல்லறம் காண 7 வழிகள்

சிறு தவறுகளை சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்ளாவிடில் அவைகளே பெரிய பிரச்சினைகளுக்கு வித்திட்டுவிடும்.

இல்லற வாழ்க்கையில் கணவனோ அல்லது மனைவியோ அல்லது கணவன் மனைவி இணைந்தோ தியானம் மேற்கொள்ள பல்வேறு ஆன்மீக மார்க்கங்கள் உள்ளன.

இல்லறத்தில் சில்லரை பேதங்கள் அதிகம் ஏற்படவே செய்யும். ஆனாலும் அதிலிருந்து விடுபட்டு தம்பதிகள் ஒற்றுமையாக வாழ அவர்களுக்குள்ளே இயல்பான சில ஒற்றுமை உணர்வுகள் அவசியம்.

அப்படியான ஏழு அணுகுமுறைகளை கடைபிடிக்க வேண்டியது மிகமிக அவசியம். இதோ அத்தனையும் உங்கள் பார்வைக்கு.

இல்வாழ்க்கை என்பது கணவனும், மனைவியும் இணைந்து நடத்தும் ஒரு தெய்வீகத் தன்மை கொண்ட இனிய வாழ்க்கை.

உலகில் எத்தனையோ வகை ஜீவராசிகள் இருப்பினும், மனித குலத்திற்கேற்ற இறைவனால் அருளப்பட்ட ஒரு தெய்வீக மார்க்கம் தான் இல்வாழ்க்கை என்பது.

இல்வாழ்க்கை ஒரு தராசைப் போன்றது. தராசின் இரு தட்டுக்களும் சமமாக இருந்தால் தான் இல்லறம் இனிக்கும். இல்வாழ்க்கையை ஒரு வண்டியின் இரு சக்கரங்களாகப் பாவித்தால், இரு சக்கரங்களும் ஒரே சீராய் இயங்கினால் தான் வண்டி சரியான பாதையில் செல்வது போல், வாழ்க்கையும் சரியான பாதையில் செல்லும்.

இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர நம்பிக்கை தழைத்தோங்க வேண்டும். இந்த பரஸ்பர நம்பிக்கை எந்த சூழ்நிலையிலும் யாராலும் அசைக்க முடியாத தன்மை பொருந்தியதாக இருத்தல் வேண்டும். பரஸ்பர நம்பிக்கையின்றி மேற்கொள்ளும் வாழ்க்கையில் சிறுபிணக்குகள் தோன்றி னாலே அவைகள் பெரும் பிரச்சினைகளாக மாறி வாழ்க்கையை சூனியமாக்கிவிடும்.

1. பரஸ்பரஸ் நம்பிக்கை

காதல் திருமணம் செய்பவர்கள், திருமணத்திற்கு முன்பே ஒருவரையொருவர் புரிந்து கொண்டு பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வர். பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் செய்பவர்களும் தற்போதையகாலச்சூழலில் திருமணத்திற்கு முன்பே பழகும் வாய்ப்பு நேரிடுவதால் பரஸ்பர நம்பிக்கையை துளிர்விடச் செய்ய வேண்டும். இவ்வகையில் ஆண்கள் தங்களுக்கே உரிய ஆணாதிக்கத்தைப் பெண்கள் மீது பாய்ச்சக் கூடாது.

காதல் மணமாகவோ அல்லது பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாகவோ இருக்கட்டும், இரண்டு வகைகளிலும் ஒரு பெண் தன்னை ஈன்றெடுத்து, வளர்த்து, சகல சவுபாக்கியங்களையும் பெறச் செய்த பெற்றோர், உற்றார், உறவினர் அனைவரையும் ஒரே மூச்சில் உதறித் தள்ளிவிட்டு கணவன் என்ற ஒரு நம்பிக்கையில் தஞ்சம் புகுகிறாள். இந்நிலையில் கணவன் ஒரு ஆள் மட்டுமே அப்பெண்ணின் நம்பிக்கைக்குரிய முதல் நாயகன் ஆனால் அவள் கொண்ட நம்பிக்கையை விட அந்த ஆண் அவள் மீது ஒருபடி மேலாகவே நம்பிக்கை வைப்பது தான் நியாயமான ஒன்றாகும்.

கணவனே கண்கண்ட தெய்வம் எனபோற்றும் நமது கலாசாரத் தில் ஒரு பெண் இறைவனைவிட கணவனையே அதிகம் நம்புகி றாள் என்பது தான் உண்மை. இத்தகைய பரஸ்பர நம்பிக்கை வைத்தலே இல்வாழ்க்கையின் முதல் இனிய படியாக அமைகின்றது.

2. ஒளிவு மறைவின்மை

இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவியிடையே ஒளிவு மறைவு என்பது இருத்தல் கூடாது. மனைவியால் செய்யப்படும் எந்த ஒரு சிறிய நற்காரியமாகவே இருக்கட்டும்! அது கணவனுக்கும் தெரியும் வகையில் செய்தல் தான் உத்தமம். அதுமாதிரி கணவனும் அப்படியே நடந்து கொள்ள வேண்டும்.

இல்லற வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒரு வருக்கொருவர் சமம் என்பதை முதலில் தெளிவாக்கிக் கொள்ளல் வேண்டும். கணவன் மனைவி இருவருமே எந்த ஒரு செயலிலும் ஒருவருக்கொருவர் சகிப்புத் தன்மையைக் கையாளல் மிகமிக நன்று.

மனிதன் என்று பிறந்து விட்டால் பொதுவாக யாராக இருந்தாலும் வாழ்க்கையில் சிறுசிறு தவறு கள் செய்வது இயற்கை. மனதறியாமலேயே சிறிய தவறுகள் நடந்து விட வாய்ப்புகள் உள்ளன. சிறுசிறு தவறுகளை சகிப்புத்தன்மை யுடன் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்குடன் செயல்பட் டால் பெரிய தவறுகள் நேரிட்டாலும் அவை களை எளிதில் மூடிக் கவிழ்த்து விடலாம்.

3. சகிப்புத்தன்மை

சிறு தவறுகளை சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்ளாவிடில் அவைகளே பெரிய பிரச்சினைகளுக்கு வித்திட்டுவிடும். ஒருவருக்கொருவர் காட்டும் சகிப்புத் தன்மை பரஸ்பரம் அன்பைக் கூட்டுவதோடு அபிமானத்தை வெளிப்படுத்தும் சக்தியாக மாறும். ஒரு கணவன் தன் மனைவி தனக்கு என் னென்ன நன்மைகள் செய்தாள் என்பதை யும், ஒரு மனைவி தன் கணவன் தனக்கு என்னென்ன செய்தான் என்பதையும் பரஸ் பரம் மனதளவில் நினைத்தாலே போதும். உண்மையான சகிப்புத் தன்மை உரு வாகிவிடும்.

குடும்பத்தில் செயல்படும் இக்குணம் உற்றார், உறவினர் மற்றும் வெளிவட்டாரத்திலும் ஏற்படுவதால் பிறரிடம் அல்லது பிறர் மனதில் நாம் உன்னத நிலையை அடைய லாம்.

4. வேண்டாமே கோபம்

கோபம் என்றால் என்ன? கோபம் எதனால் வருகிறது? கோபம் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? நாம் கோபப்படுவதைப்போல் பிறர் நம்மிடம் கோபம் கொண்டால் விளைவுகள் என்ன? ஒரு மனிதன் சிறிதளவு கால அவகாசம் ஒதுக்கி தனிமையில் மேற்கண்ட கோபம் குறித்த கேள்விகளுக்கு விடைகளை சிந்தித் துப் பார்த்தால், தான் கோபம் கொள்ளநேரிடும் அனேக சூழ்நிலை களைத் தவிர்க்கலாம். தனக்குத் தானே கட்டளையிடும் `ஆட்டோ சஜசன்’ என்ற முறையில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் நான் ஒருபோதும் எவரிடத்தும் கோபம் கொள்ளமாட்டேன்.

மனமே எதை நினைத்தும் கோபம் கொள்ளாதே என்று சங்கல்பத்தை குறைந்தது 10 தடவை தன் மனதிற்குள் சொல்ல வேண்டும்.

ஓரிரு மாதங்கள் கழித்து தனது கோபப் படும் குணத்தை ஆராய்ந்து பார்த்தால் கண்டிப்பாக கோபம் கொள்ளும் தன்மை குறைந்து வரும். கணவன் மனைவியிடையே ஒருபோதும் எந்த ஒரு செயல் நிமித்தமும் கோபம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு, கனிவான முறையில் பேசிப்பழகிட வேண்டும். கோபம் கொள்ளும் செயல் என்று ஒருசெயலை அல்லது ஒரு நிகழ்வினைக் கூட சுட்டிக் காட்டுதல் கூடாது.

கோபம் கொள்ளும் தன்மை எவர் ஒருவரி டம் அறவே இல்லையோ, அவரை குடும்ப மும், சுற்றத்தாரும் ஏன்? இந்த சமுதாயமே இனிய மனிதராக ஏற்றுக் கொள்ளும். அதன் மூலமே நாம் பல்வகையான பயன் களை அடைந்து வாழ்வில் ஏற்றம் பல பெறலாம்.

5. வீண் தம்பட்டம்

வீண் தம்பட்டம் என்றால் ஒருவருக் கொருவர் தன்னைப் பற்றியோ, அல்லது தன்னைச் சார்ந்தவர்களைப் பற்றியோ, வெட் டித் தனமாக பெருமை பேசிக் கொள்ளுதல் ஆகும். இல்லற வாழ்க்கையை நன்முறை யில் வாழ எத்தனிக்கும் கணவன் மனைவி யிடையே, எவரேனும் ஒருவர் கூட தன்னைப் பற்றியோ, தன் சுற்றம் சூழல் குறித்தோ வீணாக பெருமை பேசுதல் கூடாது.

இப்பழக்கம் ஒருவருக்கொருவர் இடையே தாழ்வு மனப்பான்மையை ஏற் படுத்த நேரிடும் இதுவும் குடும்ப சச்சரவுகள் ஏற்பட முதன்மை வாய்ப்பினை உருவாக்கும்.

ஒரு பெண்ணானவள் திருமணத்திற்குப் பின் தான் புகுந்த வீட்டை தன் வீடாகப் பாவித்து அங்குள்ளவர்களை தன் சுற்றத்தார் என்ற முதன்மை நிலையில் பாவித்தால், அந்த வீட்டில் உண் மையிலேயே அவள் “திருமகள்” என்ற நிலையை அடைவாள்.

மாறாக புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம், தான் பிறந்த வீட்டுக் கதையை பெருமைபட பேசினால் வீண் எரிச்சல் தன்மைக்கு ஆளாகநேரிடும்.

6. தியாகம்

இல்வாழ்க்கையில் கணவன் மனைவி இருவருமே எந்த அளவிற்கு தியாக மனப்பான்மையோடு வாழ்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களுக்கு பெயரும் புகழும் ஏற்படுவதோடு மன மகிழ்ச்சியும் ஏற்படும் என்பதில் எள்முனையளவும் ஐயம் இல்லை.

இல்லறத்தில் தியாக மனப்பான்மை என்பது சற்று வேறு பாடானதாகும். அதாவது கணவன் தன்னிடமுள்ள பொருளால் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தன் மனைவியைச் சார்ந்தவர் களுக்கும் நண்பர்களுக்கும் உதவும் மனப்பாங்காகும்.

அவ்வண்ணமே மனைவிக்கும் இது பொருந்தும். கணவன் பிறருக்கு பொருளாதார ரீதியில் உதவிட நேரிடும் போது அதனை மனைவி தியாக மனப்பாங்கோடு ஏற்றுக் கொள்வதே இதன் உட்கருத்தாகும்.

மாறாக மனைவியானவள் தன் கணவன், அவன் சுற்றத்தார்க்கு செய்யும் உதவியைக் கண்டு எரிச்சலடைந்து அதனைத் தடுக்க முற்படுவதும், தன் சுற்றத்தார்க்கு செய்வது கண்டு இன்பமுறுவதும் முரண்பாடான ஒன்று. அவ்வண்ணமே கணவனுக்கும் இது பொருத்த முடையதாகும்.

பொருளாதார உதவி மட்டுமின்றி பல்வேறு வகை உதவிகளும் உபசரணைகளும் இதில் அடங்கும். இத்தகைய தியாக மனப்பான்மையோடு விளங்குவ தால் ஒருவனுடைய இல்லறத்தில் இன்பம் காணப்படுவது மட்டுமின்றி அவர்களைச் சுற்றி யுள்ள அனைத்து தரப்பினர்களாலும் போற்றப் படுவர்.

7. தியானம்

இல்லறம் இனியதாக அமைய மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தையும் அடிப்படை நிலையிலேயே மேற்கொண்டால் நன் மைகள் பல பயக்கும். இருப்பினும் மேற்கூறிய கருத்துக்களை மனதிற் கொண்டு செயல்பட ஒவ் வொரு மனிதனுக்கும்.. தியானம் என்ற நிலை பல வழிகளில் பயன்படுகிறது.

இல்லறத்தில் தியானம் என்றால் காவி உடை தரித்து கமண்டலம் கொண்டு காடாள வேண்டுமென்பதல்ல. இல்லற வாழ்க்கையில் கணவனோ அல்லது மனைவியோ அல்லது கணவன் மனைவி இணைந்தோ தியானம் மேற்கொள்ள பல்வேறு ஆன்மீக மார்க்கங்கள் உள்ளன.

மேற்படி தியான வகைகளில் மனதை ஆட்கொள்ளச் செய்வ தால் மனமானது ஒருமைப்படும். மனம் ஒருமைப்படும் போது வேண்டாத செயல்களுக்கும், ஒவ்வாத எண்ணங்களுக்கும் இடமளிக்காமல், ஒன்றுபடும் மனநிலையில் மன அமைதி மற்றும் நிம்மதி ஏற்படுகிறது.

குடும்ப அமைதி என்பது கணவன் மனைவியிடையே ஏற்படும் கூட்டான மனஅமைதியே மேற்படி நிலையினை தியானம் மூலம் அடையும் போது கணவன் மனைவிடையே பரஸ்பர நம்பிக்கை ஏற்பட்டு அவர்களுக்குள்ளே ஒளிவு மறைவு இல்லாத நிலை ஏற்படுகிறது. அதனால் ஒருவருக்கொருவர் கோபதாபங் களின்றி சகிப்புத் தன்மையுடன் கூடிய பாகுபாடு இல்லாத தியாகமனப்பாங்குடனான மனித நேயமிக்க மனிதர்களாகத் திகழ்வதால் அமைதி அதிகம் பெற்று இனிய இல்லறத்தைக் காணலாம்.

- டாக்டர் ரா. முருகேசன்-

http://www.dinasari.com/?p=130

இவை அனைத்தையும் சொல்ல வேண்டாம் என்றால், அப்ப எதா தான் திருமணத்தின் பின் கதைப்பது... :lol:

இவை அனைத்தையும் பற்றித்தான் கதைக்கிறது அதாவது மற்ற ஆக்களின் காதல் குடும்ப விடயங்கள் பற்றி :lol:

கேட்டதற்கு விடை கிடைத்த படியால் உங்கள் கல்யாண அறிப்பை விரைவில் வெளிவிடுங்கள் :)

பின்குறிப்பு: கறுப்பி இணைத்த கட்டுரையில் எனக்கு பெரிதும் உடன்பாடே.....

  • கருத்துக்கள உறவுகள்

என்னைபோல் முற்றும் துறந்த முனிவராக இருங்கோ :lol::wub:

எந்த பிரச்சினையும் வராதுங்கோ :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைபோல் முற்றும் துறந்த முனிவராக இருங்கோ :lol::)

எந்த பிரச்சினையும் வராதுங்கோ :):lol:

ஏதும் ஜந்துக்கள் கடிக்காதோ :lol::wub: ? (இல்லை முற்றும் து(தி) றந்தனிங்களே அதான் கேட்டனான் ) :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா! நுனா கூறியது அனைத்துமே மிகவும் எளிமையானவைதாம். இவற்றைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் பிரச்சனைகளே வராது. அவ்வளவு எளிமையாய் இருப்பதனால்தான் அவற்றைக் கடைப்பிடிப்பது கல்லில் நார் உரிப்பதைவிடக் கடிணமாய் இருக்கிறது.

பேசாமல் முதலிலேயே எல்லாத்தையும் போட்டு உடைத்துவிடுங்கள். முதல் சில மாதங்கள் ஏச்சு,பேச்சு, முணகள்,முறைத்தல் என்று சுமாராய்நகரும். பின் அதில் மாற்றம் இல்லாவிட்டாலும் பழகிவிடும். ஆறுமாதங்களுக்குப் பின் இவையெல்லாம் நகைச்சுவையாக மாறி மாலை நேரத் தேநீருடன் மற்றவர்கள், அயலவர்களுடன் சிரித்துப்பேசி அரட்டையடிக்கிற விடயமாய்ப் போய்விடும். அதன்பின் வாழ்க்கையானது வழுக்கை விழுந்த பின்பும்கூட அமைதியான நதியில் அசைந்து போகும் ஓடம் போல் சுவாரசியமாகச் செல்லும்.

'அறிவு சமயத்தில் காலைவாரி விட்டாலும் விடும்.

அனுபவம் ஒருபோதும் கைவிடாது" காதுள்ளவன் கேட்கக் கடவன்.

ஒரே குளப்பமா இருக்கு....

நம்பிக்கைதான் வாழ்க்கை.

நம்பிக்கைதான் வாழ்க்கை.

இப்போ சொல்ல சொல்றிங்களா? இல்லையா? ;)

இவை அனைத்தையும் சொல்ல வேண்டாம் என்றால், அப்ப எதா தான் திருமணத்தின் பின் கதைப்பது... :)

பதில் கிடைக்கும் மட்டும் நான் திருமணம் பன்னாம இருக்க வேண்டியது தான்!! :lol:

இப்போ சொல்ல சொல்றிங்களா? இல்லையா? ;)

ஓ! சொல்வதற்கு நிறைய இருக்கிறது போல் உள்ளது :lol::lol::wub:

Edited by vettri-vel

ஓ! சொல்வதற்கு நிறைய இருக்கிறது போல் உள்ளது :):lol::lol:

நல்ல காலம்..சொல்வதற்கு ஆள் இருக்கு போல என கேட்காமல் விட்டிங்க :P

  • கருத்துக்கள உறவுகள்

ஏதும் ஜந்துக்கள் கடிக்காதோ :):lol: ? (இல்லை முற்றும் து(தி) றந்தனிங்களே அதான் கேட்டனான் ) :wub:

இந்த லொள்ளுதானே வேணாங்கிறது சுப்பண்ணை :):(:(

கடிக்க வாரதை சூப்பு போட்டு கொடுப்பார்கள் என் சிஸ்யைகள் சூப்பராக இருக்கும்

அதிலையும் பாம்பு சூப்பு சுப்பர் :lol:

சுப்பண்ணை ஒருக்கா வந்து சூப் குடிச்சிற்று போறது :lol:

நல்ல காலம்..சொல்வதற்கு ஆள் இருக்கு போல என கேட்காமல் விட்டிங்க :P

சரி இப்போ இருக்கு என்று சொல்றீங்களா? இல்லை என்று சொல்றீங்களா? :)

  • கருத்துக்கள உறவுகள்

Posted Yesterday, 01:16 PM

ஒரே குளப்பமா இருக்கு....

உண்மைதான் தூயா! நீங்கள் மிகவும் குழம்பித்தான் போய்யிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த லொள்ளுதானே வேணாங்கிறது சுப்பண்ணை :):D:D

கடிக்க வாரதை சூப்பு போட்டு கொடுப்பார்கள் என் சிஸ்யைகள் சூப்பராக இருக்கும்

அதிலையும் பாம்பு சூப்பு சுப்பர் :rolleyes:

சுப்பண்ணை ஒருக்கா வந்து சூப் குடிச்சிற்று போறது :blink:

யார் சூப்பு போட்டு குடுக்கிறது :unsure: ? உங்கட சிஸ்யைகளோ :o அதுகளே பெருங்கடிகள் அதுக்குள்ளே கடிக்கவாறதுகளை அவை கடிக்கப்போகினமே . நல்ல கடி ஆச்சிரமம் தான் போல இருக்கு :lol: . தெய்வமே எனக்கு ஒரு சூப்பும் வேண்டாம் ஆளைவிடுங்க .

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னாலும் பிரச்சனை சொல்லட்டாலும் பிரச்சனை.திருவிழா தொடங்கிறது என்டு முடிவெடுத்தல் கொடி இறக்கும் மட்டும் கச்சேரிதான். :rolleyes:

இவை அனைத்தையும் பற்றித்தான் கதைக்கிறது அதாவது மற்ற ஆக்களின் காதல் குடும்ப விடயங்கள் பற்றி :lol:

கேட்டதற்கு விடை கிடைத்த படியால் உங்கள் கல்யாண அறிப்பை விரைவில் வெளிவிடுங்கள் <_<

அட பாவமே,இது மட்டும் கதைக்க திருமணம் பன்னாம இருக்கலாமே,

கதைக்க எத்தின விடையம் இருக்கு.... நாம எப்ப தான் திருந்தப்போரம்

:D:huh::lol:

நீங்க நல்லாத்தான் மற்றவங்க பெற்றி கதைகிறீங்க என்று தெரிது...கிகிகி

Edited by இனியவள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் ஒருவர் புரிந்திருப்பதே இருமனம் சேர்ந்த திருமணம்.

ஆனால் இதற்கு ஒருவருக்கு ஒருவர் உண்மையாகவும் இருத்தல்

வேண்டும். இன்று மட்டும் இல்லை, முன்னும் என்றும்.

அதாவது ஒருவர் ஒருவரின் வாழ்வில் நிகழ்ந்த அனைத்தும்

பரிமாறுதலே திருமண வாழ்வுக்கு இனிமை.

கணவனோ மனைவியோ தங்கள் வாழ்வில் நிகழ்ந்ததை

தாங்கள் சொல்லி அறியாமல் இன்னொருவர் சொல்லி

தெரிவது, அவமானம் இல்லையா... இருவருக்குமே. இதில்

மேலும் மனதால் பாதிக்கப்பட இருப்பது நிகழ்வை அறியா

கணவனோ மனைவியோ.

திருமணத்தின் முன் நிகழ்ந்ததை சொல்லி இதை வைத்தே பிற்காலத்தில்

பிரச்சினை வரக்கூடும் என்று நிபுணர்கள் சொல்கின்றார்களா. சொல்லாத

இந்த நிகழ்வினால் பிற்காலத்தில் யாரோ சொல்லிக் கேட்டு கணவன்

மனைவிக்குள் பிரச்சினை எழாது என்றும் சொல்கின்றார்களா...?

நம்பிக்கையும் புரிந்துணர்வும் தான் திருமணவாழ்விற்கு நல்வழி.

இந்த நம்பிக்கைக்கும் புரிந்துணர்வுக்கும் அடிப்படைத் தேவை

ஒருவருக்கு ஒருவர் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுவது தான்....

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கடைத் தெருப்பக்கம் போனால் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் சஞ்சிகைகள் புத்தகங்களின் தலைப்புகள் இப்படித் தான் இருக்கின்றன: "பத்து நாட்களில் மில்லியனராவது எப்படி" "வேண்டியது கிடைக்க பத்து எளிய வழிகள்" இப்படி அர்த்தமேயில்லாத தலைப்புகளில் தகுதியே இல்லாதவர்கள் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆலோசனைகளும் நான் நினைக்கிறன் அப்படிப்பட்ட ஒரு ஆங்கிலச் சஞ்சிகையிலிருந்து "சுட்டு" மொழிமாற்றம் செய்த ஒன்று தான். ஆளுக்காள் வேறு படுகிற ஒரு அனுபவத்தைப் பற்றி யாராவது இப்படி விறைப்பான சட்ட திட்டங்களை வகுக்க முடியுமா சொல்லுங்கள்? திருமணத்திற்கு முன்பு குடிப்பழக்கமும் சில பாலியல் சேட்டைகளும் இருந்த ஒரு நண்பன் வயதில் குறைந்த ஒரு அப்பாவிப் பெண்ணை மணம் முடித்தான். ஆனால், கல்யாணத்திற்குப் பிறகு எல்லாத்தையும் திருத்திக் கொண்டு ஏக பத்தினி விரதனாக இருக்கிறான். ஒரு நாள் விருந்தொன்றில் சாடையாகக் குடித்து விட்டு அவன் வந்த போது அதைப் பார்த்தே அந்த மனைவி அழ ஆரம்பித்து விட்டாள். அதன் பின்னர் விருந்தில் கூட குடிப்பதை அவன் விட்டு விட்டான்.. நல்லது தானே?. இப்படிப் பட்ட நிலையில் தான் திருமணத்திற்கு முன்னர் கொண்டிருந்த உறவுகள் பற்றி வெளிப்படையாக அவன் சொல்ல முடியுமா? அது இருவருக்கும் நல்லதா? அதே நேரம் இன்னுமொருவன் தனக்கு வயதில் தோதான ஒரு படித்த பெண்ணைத் தேடிக் கொண்டான். ஆனால் தனக்கிருந்த குடிப் பழக்கம் பழைய காதல் எல்லாம் சொல்லி விட்டான். இரண்டு இடங்களிலும் வேறான அணுகுமுறை தேவைப் பட்டிருக்கிறது. காரணம் தம்பதிகளின் பின்புலம் ஆளுமை என்பன தான் இந்த வெளிப்படைத் தன்மையின் விளைவைத் தீர்மானிக்கின்றன. அதனால் எல்லாக் கூத்தும் ஆடிப் போட்டு ஒரு அப்பாவிப் பெண்ணைக் கட்டிக் கொண்டால் பிரச்சினையில்லை எண்டு யாரும் விபரீதக் கருத்துக் கொள்ள வேணாம் சொல்லிப் போட்டன்!

  • கருத்துக்கள உறவுகள்

உந்த விபரீத விளையாட்டுக்கு நான் வரவில்லை. எந்த நேரம் எந்த பக்கத்தால காத்து அடிக்கும் எண்டு தெரியாது. தேவை இல்லாததை சொல்லாமல் இருக்கிறது எப்பவும் பாதுகாப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த விபரீத விளையாட்டுக்கு நான் வரவில்லை. எந்த நேரம் எந்த பக்கத்தால காத்து அடிக்கும் எண்டு தெரியாது. தேவை இல்லாததை சொல்லாமல் இருக்கிறது எப்பவும் பாதுகாப்பு.

:rolleyes::rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea::D:D

சும்மா ஒரு கதைக்கு சொன்னனான்.... இந்த முழி முழிக்கிறிங்கள். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.