Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெப் ஈழம் தளத்தில் சபேசன் கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட ஒருவரின் கருத்து இது

Featured Replies

வெப் ஈழம் தளத்தில் சபேசன் கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட ஒருவரின் கருத்து இது:

http://www.webeelam.net/?p=329#comment-177

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?எமது பக்கத்து மாநிலமான கருநா(க)டகா காரன் பிழைக்க போன ஒடுக்க பட்ட சிறுபான்மை தமிழ் மக்களை தமிழில் பேசுகிறான்.. தாய்மொழி தமிழ் என்பதற்க்காக வெட்டி காவிரி கரையில் ரத்தமாக விட்டான் தடுப்பதற்கோர் இந்திய தேசம் முன்வரவில்லை மயிரை புடுங்கி கொண்டிருந்தது! அதற்கு காரணமான மான வாட்டாள் நாகராசு இன்னும் அரசியல் வாதியாக மிகபெரிய அவதாரம் எடுத்து சுற்றி கொண்டுதான் உள்ளான்..ஏன் கன்னடக்காரனுக்கு-மராத்திகாரனுக்கும் இன்னும் எல்லை தகாராறு உள்ளது..எங்கே பெங்களூரில் உள்ள அவர்கள் மேல் கைவைக்க சொல்லுங்கள் பார்போம் வாலை ஒட்ட நறுக்குவார்கள்..

இந்த பால்தக்கரேவும் தான் மும்பையில் தமிழரை தாக்கினான் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தது ‘இந்தி’ய அரசு? இன்றும் பத்திரமாகத்தான் உள்ளான் இவ்வாறானவர்களை சிறையில் தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி இருந்தால் இந்த இந்திய தேசத்தை பாராட்டலாம்.. இதுவரை தமிழன் எத்தனை மாநிலங்களில் கலவரத்தை தூண்டினான்? காரணமின்றி யாரையாவது அடித்திருக்கிறானா?மலையாளி கண்ணகி கோட்டம் என்னுடையது என்கிறான்.. கொல்டி பாலாற்றின் குறுக்கே அணைகட்டிகிறான்.. என்ன செய்ய முடிகிறது நம்மால்?

இந்த மீனவர்களை எடுத்து கொள்ளுங்கள்..இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்?

பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் ‘இந்தி’யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா? ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு? சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான். சில மாதங்களுக்கு முன்பு லெபனானில் அவதிப்பட்ட இலங்கைச் சிங்களவர்களுக்கு இலவச விமானம் அனுப்பி ஏற்றி இறக்கிய இந்தியா குவைத்தில் அவதிப்படும் தமிழர்களை மட்டும் உணவுக்குக் கூடப் பிச்சை எடுக்க விட்டிருப்பதன் காரணமென்ன, அவர்கள் தமிழர்கள் என்பதாலா?

இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள்

இந்த பாகுபாட்டைத் தான் ‘இந்தி’ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.

அதாவது ஏனைய பொருளாதார வளங்களுக்கே தமிழரும் தமிழ்நாடும் தேவை படுகிறாரகள்.. அசாமில் பெட்ரோல் எடுக்க அந்த அரசிற்கு உரிமைத் தொகை கொடுத்து வரும் “இந்தி”ய அரசு, தமிழகத்தின் காவிரிப்படுகையிலிருந்தும், நரிமணித்திலிருந்தும் திருடிச் செல்லும் பெட்ரோலுக்கு நம்மிடையே “இறக்குமதி” வரியை விதித்துக் கொள்ளையடிப்பதை என்னசொல்ல?

மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். தமிழத்திலேயே தமிழன் அகதியாக தெருத்தெருவாய் அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் “இந்தி”யத் தேசியத்தை ஆதரிக்கும் அனைவரும்தான் என உணர வேண்டும்

இதுவரை எனைய தமிழர் நலம் சார்ந்த வெளிவிஷயங்களில் இதுவரை இந்தியா தலையிட்டதிலை அது மலேசிய பிரச்சனையாக இருந்தாலும் சரி ..குவைத் தமிழர்கள் பிரச்சனையாக இருந்தாலும் சரி! எங்கோ சரந்தீபு சிங்கு தூக்குதண்டனைக்கு தாம் தூம் என்று குதிக்கும் இந்திய அர்சு இதுவரை தமிழக தமிழர்களுக்காக குதிதது உண்டா?சிந்தித்து பாருங்கள்..மராட்டியர்களின் இன உணர்வில் கால் பங்கு கூட இல்லையா தமிழனுக்கு? கொஞ்சம் வராலாற்றை எடுத்து புரட்டி பாருங்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடிய இனங்களே வாழ்திருக்கின்றன..

ஈழதமிழர்கள் செய்வது ஒன்றும் தவறான விஷயம் அல்ல.. தமிழர்கள் இந்தியாவில் இருந்தாலும் ஈழத்தில் இருந்தாலும் இந்திய ஆளும் வர்க்கம் அவர்களைப் பகைவர்களாகவே கருதுகிறது. விடுதலைப் புலிகள் இந்திய அரசுக்குத் திரும்பத் திரும்ப நேசக்கரம் நீட்டுகிறார்கள். இந்திய அரசு ஒரு பிராந்திய வல்லரசாகச் செயல்படத் துணைபுரிவோம், இந்திய தேசிய இறையாண்மைக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்று கூட உறுதி தருகிறார்ச்கள். ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகளை வீழ்த்தவே முனைகிறார்கள். இது தீராத ஆரிய-தமிழ் இனப்பகையின் வெளிப்பாடு.

நமக்காக குரல் கொடுக்க ஒரு நாடு கட்டாயம் வேண்டும்.. நம் குரல் ஐ.நா. சபையில் எழுப்ப படும்.. அப்போதுதான் தமிழர்களுக்கு கொடுமை செய்யும் எனைய நாடுகள் இந்தியா உட்பட தனது கொட்டத்தை அடக்கும்..

புரட்சியை வெளியில் தேடாதே!! அது உன் உள்ளத்திலேயே உள்ளது!–லெனின்

சேகுவேரா: Today, 02:54 PM

  • கருத்துக்கள உறவுகள்

நிட்சயமாக அந்த நபருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் இந்தியாவின்ர ஆளும் வர்க்கத்தின் கபட நோக்கத்தை உன்மையாக சித்தரித்து எழுதியுள்ளார் அந்த வகையில் அவரை பாராட்ட வேண்டும் இதை தமிழகம் இன்னும் புரிந்து கொள்ள வில்லை ஏன்?

இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க வெளியாட்கள் யாரும் தேவையில்லை

இந்தியாவின் பழமைவாத, முட்டாள் கொள்கை வகுப்பாளர்களே போதும்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

யார் விரும்பியென்ன விரும்பாவிட்டாலென்ன அதிக பட்சம் இன்னும் 25 - 30 வருடங்களுக்குள் இந்தியாவுக்கு ஆப்பு இறுக்கப்படுவதை தவிர்க்கமுடியாது.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க வெளியாட்கள் யாரும் தேவையில்லை

இந்தியாவின் பழமைவாத, முட்டாள் கொள்கை வகுப்பாளர்களே போதும்!!!

வெற்றி அண்ணே நீங்கள் சொல்வது உன்மை

ஏன் இன்னும் இந்த மட்டைகளுக்கு புத்தி தெளிவில்லையா

அல்லது அதே குட்டைல்தான் இன்னும் ஊறி கொண்டு இருக்கிறார்களா தெரியவில்லை இரண்டு பக்கமும் நன்றாக இரண்டு மாநில காரனும் ஆப்புகளை தீட்டி வைத்திருக்கிறான் இரண்டும் தன் கவிடுகளுக்குள் ஏறும்போது தான் புத்திக்கு ஏறும் போல :icon_mrgreen:

தமிழக பொறியியலாளர் ஒருவர் வேலை நிமித்தமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் இங்கு வந்திருந்தார். அவர் கூறினார், தமிழ்நாட்டில் பலர் கணணித் துறையில் படித்து பட்டம் பெற்றிருந்தாலும் அங்கு வேலைவாய்ப்புகள் குறைவாம். அதனால் வேறு மானிலங்களில் வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனராம். பெங்களூர் நிறுவனங்களில்தான் அதிகமான தமிழர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களை மனிதனாகவே மதிக்க மாட்டார்களாம்.

அந்த நண்பர் மேலும் கூறினார், பெங்களூரிலாவது பரவாயில்லை மும்பாயில் கால் தூசுக்கும் தமிழனை மதிக்க மாட்டார்களாம். தமிழனுக்கு மட்டும் ஏனிந்த நிலை ?

இந்தியத் தமிழர்கள், எப்படி பிழைத்துகொள்ளலாம் என்பதில் தான் கண்ணாக இருப்பார்கள்.

அதனால் சமூக நலன்களில் அக்கறை இல்லை. அவர்களைப் பிழை சொல்ல முடியாது ஏனென்றால் பொருளாதார கஸ்டம் காரணமாக வாழ்க்கை மிகவும் கடினம்.

தன்னுடைய நிலை ஓரளவு ஸ்திரமானவனுடைய பார்வையே சமூகத்தின் மீது திரும்புகிறது. இங்கு தன்னுடைய நிலைமையே கேள்விகுறி, அப்படி இருக்க இன ரீதியான சிந்தனையை இந்தியத் தமிழரிடம் எதிர்பார்ப்பது வீணே.

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் Posted இன்று, 06:06 PM

தமிழக பொறியியலாளர் ஒருவர் வேலை நிமித்தமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் இங்கு வந்திருந்தார். அவர் கூறினார், தமிழ்நாட்டில் பலர் கணணித் துறையில் படித்து பட்டம் பெற்றிருந்தாலும் அங்கு வேலைவாய்ப்புகள் குறைவாம். அதனால் வேறு மானிலங்களில் வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனராம். பெங்களூர் நிறுவனங்களில்தான் அதிகமான தமிழர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களை மனிதனாகவே மதிக்க மாட்டார்களாம்.

அந்த நண்பர் மேலும் கூறினார், பெங்களூரிலாவது பரவாயில்லை மும்பாயில் கால் தூசுக்கும் தமிழனை மதிக்க மாட்டார்களாம். தமிழனுக்கு மட்டும் ஏனிந்த நிலை ?

இது தெரியாமல் மத்திய அரசுக்கு தூக்கு குண்டு பிடித்துஇருக்கிறார்கள் தமிழகத்தில்

வாழ்க தமிழகம் :: ஈழதமிழன் யார் வாகனம் ஓட்டுறான் ,யார் ஆறு மணிக்கு மேல அகதி முகாமை விட்டு வெளியேறுகிறான் ,யார் அதிக சொத்து வைத்திருக்கிறான் இவர்களை பிடிக்கதானே நேரம் வாழ்க

........................அடுத்து யார் படத்துக்கு பூசை ,யார் படத்துக்கு கோதாரி விழா எடுக்கிறது ,உழியின் ஓசையும் ,உலக்கை ஓசையும் இதுக்கும் தானே நேரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தெரியாமல் மத்திய அரசுக்கு தூக்கு குண்டு பிடித்துஇருக்கிறார்கள் தமிழகத்தில்

வாழ்க தமிழகம் :: ஈழதமிழன் யார் வாகனம் ஓட்டுறான் ,யார் ஆறு மணிக்கு மேல அகதி முகாமை விட்டு வெளியேறுகிறான் ,யார் அதிக சொத்து வைத்திருக்கிறான் இவர்களை பிடிக்கதானே நேரம் வாழ்க

........................அடுத்து யார் படத்துக்கு பூசை ,யார் படத்துக்கு கோதாரி விழா எடுக்கிறது ,உழியின் ஓசையும் ,உலக்கை ஓசையும் இதுக்கும் தானே நேரம்

முனிவர் சொல்லுறதுதான் சரி இவங்களுக்கு உதக்கதைகட்கத்தான் நேரம்

எங்கட உரிமையை நாங்கள் தான் எடுக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

யார் விரும்பியென்ன விரும்பாவிட்டாலென்ன அதிக பட்சம் இன்னும் 25 - 30 வருடங்களுக்குள் இந்தியாவுக்கு ஆப்பு இறுக்கப்படுவதை தவிர்க்கமுடியாது.

இதுதான் உண்மை

அதே நேரம் அதை உணர்த்துபவர்களும்

உந்துசக்தியாக இருப்பவர்களும்

மத்திய அரசிலேயே உள்ளனர்

வேறு எங்குமல்ல?????????

விடுதலைப்புலிகள் இந்தியாவுக்கு நேசக் கரம் நீட்டுவதற்கு பதிலாக சீனாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் நேசக் கரம் நீட்டுவது நல்லது

அப்போது தான் இந்தியா திருந்தும்

  • கருத்துக்கள உறவுகள்

அறுபதுகளில் தொடங்கிய கிந்தி எதிர்ப்புப் போராட்டம் முழு வடிவம் பெற்றிருந்தால் இன்று தமிழ்நாடு இந்த நிலமைக்கு வந்திருக்காது. தமது அரசியல் லாபங்களுக்காகவும், பதவி மோகத்துக்காகவும் அந்தப் போராட்டத்தை விட்டுக் கொடுத்து இந்திய ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்துகொண்ட விபச்சார அரசியல் வாதிகள் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சி மத்திய அரசுடன் கூட்டணி வைத்துக்கொள்வதற்கு முடியாது என்று சொல்லி ஒரு காரணத்தை முன்வைக்கும்போது(இது பகட்டுக்காகவாவது தமிழரின் நலன் சார்ந்ததாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்), இன்னொரு கட்சி எந்த வெட்கமோ ரோசமோ இன்றி ஓடோடிப்போய் அந்த ஆளும் கூட்டணியுடன் இணைந்து கொள்கிறது. இதை எப்போவாவது தமிழக வாக்காளர்கள் ஏன் என்று கேட்டிருப்பார்களா? அவர்களுக்கு வேண்டியதெல்லாம் தாம் ஆதரிக்கும் கட்சி வெற்றிபெற வேண்டும், அவ்வளவுதான். அது யாருடன் கூட்டுச் சேர்கிறது என்பதோ, அல்லது அக்கூட்டணியின் தமிழக மக்கள் தொடர்பான கொள்கை என்னவென்பதோ முக்கியமில்லை. திருப்பித் திருப்பித் தமிழக மக்கள் விடும் இந்தத் தவறினால்த்தான் இன்றுள்ள தமிழக அரசியல் கட்சிகள் தமிழக மக்களின் தன்மானத்தை மிகவும் கீழ்த்தரமான விலைக்கு அடகு வைத்து தமது வயிறை வளர்த்துக்கொண்டிருக்கின்றன.

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

தமிழகத் தமிழரை இந்தியர்கள் மதிப்பதேயில்லை. என்னதான் குதித்தாலும் தமிழர் அங்கு வாலைத்தான் ஆட்ட முடியுமா? ஒட்ட நறுக்கிவிடுவார்கள் ஏனைய மாவட்டத்தினர்.

நுற்றாண்டுக்கணக்கில அடிமைபாட்டு கிடந்ததாலோ என்னமோ தமிழனுக்கு இந்தநிலை...

இடையில் வந்த இந்துமதமும் பார்ப்பணியமும் சாதி முறையை ஊட்டி பொருளாதரத்தை சுரண்டி தமிழனை நிரந்தர அடிமைகளாக்கினதும் ஒருகாரணாம்.

இண்டைக்கு தமக்குத்தெரிந்த ஆங்கிலவார்த்தைகளை வெளிலவிட்டு அடிமைகளில் இருந்து தள்ளி இருக்க நினைக்கிறர்களே ஒழிய அடிமை நிலையை மாற்ற முன்வருவதில்லை. இண்டைக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்த்தெரியாதெண்டு ஆணந்தமடைபவர்கள்தான் அதிகம்.... இது எங்கள் ஈழத்திலும் இல்லாமல் இல்லை...

கடைசியாக ஒன்று இந்தியா தன்னைமாற்றாதுபோனால் இந்தியா உடைவதை யாரும் தடுக்கமுடியாது...

தமிழர்களுக் திருந்தாது போனால் தமிழ் மெள்ளச்சாவதும் நிறுத்தமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

:D இந்தியாவில் ஆறரைக்கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் என்ன பயன். கன்னடக்காரன் தண்ணீர் தரமாட்டோம் என்று மிரட்டுகிறான். அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் கர்நாடகத்தில் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர், அவர்களின் சொத்துக்கள் எரிக்கப்படுகின்றன. தமிழகத் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்?

1992 இல் பாபர் மசூதியை இந்து மதவெறியர்கள் உடைத்துவிட அங்கே இந்து முஸ்லீம் கலவரம் வெடித்தது. கலவரத்திலிருந்து தப்பிக்க ஓடி ஒளித்த தமிழர்கள் பால் தாக்கரெயாலும், முரளி மனோகர் ஜோசியாலும் கொல்லப்பட்டார்கள். அன்று தமிழகத் தலைவர்கள் என்ன செய்தார்கள்?

காவிரி நதி நீர், கிருஷ்ணா நதி நீர், இன்று ஒக்கணேக்கால் அணைத் திறப்பு என்று தமிழர்கள் தண்ணீருக்கு அலைகிறார்கள். மத்திய அரசோ கண்ணை இறுக்கி மூடிக்கொண்டிருக்க, கன்னடாவும், ஆந்திராவும் சண்டித்தனம் செய்கின்றன. இதே மத்திய அரசில் எத்தனை தமிழ்நாட்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். என்னத்தைப் புடுங்கினார்கள்? ஒன்றில் தன்னை தெரிந்து அனுப்பிய தனது மக்களுக்காக நீதி கேட்க வேண்டும், அல்லது பதவியைத் தூக்கி எறிந்து விட்டு வரவேண்டும். செய்ய முடியுமா அவர்களால்?

சந்தன வீரப்பன் இருக்கும்வரை ஒக்கணேக்கல் அணைப்பக்கமே வரப் பயந்த கன்னடக்காரர்கள் இன்று பாரம்பரிய தமிழ்க் கிராமாமான அப்பகுதியை தமது என்று உரிமை கொண்டாடுகிறார்கள். தமிழன் பார்த்துக்கொண்டிருக்கிறான். பெயருக்குக் கண்டணம் செய்த நடிகரும் தனது படம் படுத்து விடும் என்ற பயத்தில் மன்னிப்புக் கேட்கிறார்!

எவன் தமிழனைப் பற்றிக் கவலைப் படுகிறான்? இருந்தால்த் தமிழன், போனால் மயிர் என்கிற மாதிரித்தான் எல்லாருமே நினைக்கிறார்கள்.

ஈழத்தில் நாங்கள் அழிக்கப்படுகிறோம். சிங்களவனும், ஆரிய இந்தியனும் எங்களை அழிக்கிறார்கள். தமிழகத்திலும் தமிழன் சிங்களப் படைகளால் கொல்லப்படுகிறான். அதற்கும் ஆரிய இந்தியன் முண்டு கொடுக்கிறான். தமிழகத்தின் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஒன்றில் காதல் கடிதம் எழுதுவார்கள் அல்லது கவிதை எழுதுவார்கள். சிலர் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று அறிக்கை விடுவார்கள்.

தமிழன் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறான்.

ஈழத் தமிழரும், தமிழகத் தமிழனும் ஒன்று பட்டால்த்தான் எமக்கு விடிவு. அல்லது ஈழம் உருவாகும்போது தமிழகத்தில் அடிமைகள மட்டுந்தான் இருப்பார்கள் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.