Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேதிகளில் உதயமானவர்களுக்கு...

Featured Replies

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு...

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் அக்கிரகம் போலவே உலகின் இயக்கத்தை தீர்மானிக்க வல்லவர்கள். வருங்கால தலைவர்கள் நீங்கள். உங்களது ஊக்கம் நிறைந்த செயற்பாடுகள் உங்களை மென்மேலும் வலுப்படுத்தவல்லது. சிறந்த ஆழுமை கொண்ட நீங்கள் எடுத்த கரியத்தில் தீவிரமான போக்கு உடையவர்களாக தென்படுவீர்கள். பணத்தை நீங்கள் தேடிச்செல்ல மாட்டீர்கள் பணம் உங்களைத் தேடி வரவேண்டுமென்றே நினைப்பீர்கள.; சிறுபிள்ளைகள் அழகியகாட்சிகள் உங்களை எளிதில் கவர்ந்துவிடவல்லன. சூரியனின் ஆதிக்கம் அதிகமாகவே இருப்பதால் உடலில் உஷ்ணம் சற்று அதிகமாகவே காணப்படும். இதனால் விரைவிலேயே கண்ணுக்கு கண்ணாடி அணியவேண்டிய தேவை ஏற்படலாம். தலைமுடி உதிர்வதற்கான வய்ப்பக்களும் நிறையவே உண்டு. உங்களிடம் உள்ள பிடிவாதங்களை சற்று குறைபிபீர்களேயானால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி உண்டு.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு...

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர் நீங்கள். சந்திரனுக்கு சுய ஒளிகிடையாது. இருப்பினும் சூரியனின் ஒளியில் அது இயங்குகிறது. இத்தன்மை உங்களிலும் உண்டு. பெரிய பெரிய காரியங்களை எல்லாம் தொடங்கவீர்கள் ஆனால் பலரது கருத்தையும் கேட்டபின்பு இடையிலேயே விட்டுவிடுவீர்கள். மனதில் கற்பனை அலைபுரண்டோடும். ஆனால் அதை எட்டுவதற்கு பணப்பிரட்சினை உட்பட பல பிரட்சினைகள் தடையாக இரந்தவண்ணம் இருக்கம். நிற்கிற குருவியை பறக்குது என்று சொல்லி வாதிடும் திறமை உங்களிடம் உண்டு. பேச்சிலே தணல் பறக்கும். வீரியம் பேசுவதிலும் வல்லவர்கள் நீங்கள். ஆனால் உண்மையிலேயே பயந்த சுபாவம் கொண்டவர்கள் நீங்கள்தான். ஆதிகமாக விபத்துக்களினால் உங்களுக்கு ஆபத்து அதிகம் உண்டு. சலிக்காமல் உழையுங்கள் வாழ்கையில் வெற்றி நிச்சயம்.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு...

குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். குருவைப்போலவே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு தெரியாத ஒரு கலையே இல்லை எனலாம். அன்பு காட்டுபவர்களுக்கு நீங்கள் சிறந்த கொடை வள்ளல்கள். மற்றவரை பார்த்தமாத்திரத்திலேயே புரிந்துகொள்ளும் தன்மை கொண்ட நீங்கள் எடுத்தகாரியத்தில் மனவைராக்கியத்துடன் செயற்படுவீர்கள். உங்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு நீங்கள் எவ்வறு கட்டுப்பட்டு நடக்கின்றீர்களோ அதுபோன்றே உங்களுக்கு கீழ் உள்ளவர்களும் உங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என கருதுகின்றீர்கள். இதனால் சிலவேளைகளில் கோபமடைகின்றீhகள். உங்களுக்கு பிடிக்காத விடயங்களை எதிர்க்கின்றீர்கள் அல்லது அப்பகுதியை விட்டு விலகிவிடுகின்றீர்கள். பொதுவாகவே இந்த இலக்கத்தில் பிறந்த நீங்கள் பிறந்த இடத்தில் வாழ்வது குறைவே. புpறந்த இடம் ஒன்றாகவம் வழுமிடம் ஒன்றாகவுமே இருக்கும். தன்னம்பிக்கையுடன் போராடுங்கள் உலகம் உங்கள் கையில்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் உதயமானவர்களுக்கு...

ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். ஊண்மையிலேயே கம்பீரமான தோற்றத்தைக் கொண்டு விளங்குவீர்கள். உலகில் புதிது புதிதாக நடைபெறும் மாற்றங்களை அறிந்து கொள்வதில் என்றும் ஆர்வத்துடன் செயற்படுவீர்கள். எச்சந்தர்ப்பத்திலும் உங்கள் தகுதியை குறைத்துக்கொள்ள மாட்டீர்கள். செல்வச்செழிப்புடன் இனிய எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவீர்கள். எவ்வளவுதான் வலிமையான தோற்றப்பாடடை நீங்கள் கொண்டிருந்தாலும் உங்கள் உள்ளம் கருணை நிறைந்தது. நீங்கள் மற்றவரிடத்தில் காட்டுகின்ற அளவுகடந்த அன்பே சில வேளைகளில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். வலிமையான உடற்கட்டமைப்பை கொண்ட உங்களின் வாழ்க்கை முழவதும் ஒரு மனக்கவலை தொடர்ந்த வண்ணமே இருக்கும். இத்துணைக்கும் மேலாக நீங்களே பலர் மத்தியில் பெரும் செல்வந்தப்புள்ளிகளாக விளங்குவீர்கள். மனக்கவலைகளை மறந்து வாழ்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மகிழ்சியாக இருங்கள் வெற்றி உங்களதே.

5, 14, 23 ஆகிய தேதிகளில் உதயமானவர்களுக்கு...

புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். புதுமையின் விரும்பிகள். புதிய ஆடைகள். வாசனைத்திரவியங்கள். வாகனங்கள் என்று எல்லாவற்றையும் நேசிப்பீர்கள். வீரியமான உடற்தோற்றத்தைக்கொண்ட நீங்கள் மனதளவில் மிகவும் பலவீனமானவர்களே. நகைச்சுவையாக பேசுகின்ற தன்மை உங்களுடனேயே பிறந்தது. பேரிய பெரிய தோல்விகளையும் இலகுவில் மறந்துவிடுகின்ற தன்மை கொண்டவர்கள் ஆகையால். வாழ்க்கையில் கவலைகள் என்பது குறைவே. பெரும்பாலும் வர்த்தகத்துறையில் பெரும் ஈடுபாடு கொண்ட நீங்கள் அத்துறையினையே பின்பற்றி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டியவர்கள். வர்த்தகத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களாகையால் குறுக்கு வழிகளில் சிந்திக்கப்பார்பீர்கள். ஊங்கள் ஆற்றலை நேர்வழியில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிநடை போடுங்கள் எதிர்காலத்தின் சிறந்த தொழிலதிபர்கள் நீங்களே.

6, 15, 24 ஆகிய தேதிகளில் உதயமானவர்களுக்கு...

சுக்கிரனின் ஆதிக்கத்தில் உதயமானவர்கள் நீங்கள். அக்கிரகம் போலவே கவர்ச்சியான தோற்றத்தை கொண்டிருப்பீர்கள். வாழ்வின் தோல்விகளை எல்லாம் வெற்றிப்படிகளாக மாற்றிக்கொள்வீர்கள். மிகவும் கலகலப்பாக இருக்கும் நீங்கள் மற்றவர் யாராவது உங்களின் சிறு குறைகளை கூறியவுடன் மனமுடைந்து போய்விடுவீர்கள். எப்பாடுபட்டாவது வாழ்வில் ஒரு உன்னத நிலையை எட்டி விடுவீர்கள். செய்யும் வேலைகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பீர்கள். ஊங்களிடம் உள்ள உன்னதமான குணம் பக்கத்திருப்பவர் துன்பம் பாத்திருக்க மாட்டீர்கள். கையில் உள்ளதை உடனேயே கொடுத்து விடுவீர்கள். வாழ்கையில் ஆசைகள் அலைகடலென நீண்டிருக்கும். முடிந்தவரை உங்கள் உணர்வுகளையும்,ஆசைகளையும் கட்டுப்படுத்தப்பழகிக்கொள்ள

Edited by ithayanila

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சாஸ்திரத்தில எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் Numerology சில யதார்த்தத்தைச் சொல்லிச் சொல்வதை அவதானித்திருக்கிறேன். அதற்காக அது 100% உண்மையானது என்பதல்ல எனது கருத்து.

நீங்கள் மற்றவரிடத்தில் காட்டுகின்ற அளவுகடந்த அன்பே சில வேளைகளில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

இது மட்டும் எனக்கு உண்மை. நிறைய.. போலி அன்புகளை எல்லாம்.. நிஜம் என்று நம்பி.. ஏமாந்திருக்கிறேன்..! அதற்கு இயல்பாக எனக்குள் உள்ள அன்புப் பார்வையே காரணமாப் போச்சு. இப்ப எல்லாம் அதற்கு எதிர்மாறாவே மாற்றிக் கொண்டு விட்டேன் என்னை. மாற்றியது.. இந்தச் சமூகமே அன்றி.. நானில்லை..! :)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு பித்தலாட்டம் பாருங்கோ, எல்லாத் தேதிகளுக்கும் "உங்களுக்குக் கவலை இருக்கும்" என்று தொடங்கி, "சந்தோஷமாயிருங்கோ, எல்லாம் சரிவரும்" எண்டு முடியுது. இதைச் சொல்ல பிறந்த தேதி எதுக்கு? சாத்திரம் கேட்கிறவர் உயிரோட இருக்கிறாரா இல்லையா எண்டு தெரிஞ்சால் இத நானே சொல்லலாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் வாழ்க்கை முழவதும் ஒரு மனக்கவலை தொடர்ந்த வண்ணமே இருக்கும். .

என்டைக்காவது ஒரு நாள் நிலைமை மாறும் என்று பார்த்தால். மாறாது போல இருக்கே... இதை யார் எழுதியது நிலா? சரியாக இருக்கின்றது....

Edited by chumma....

  • தொடங்கியவர்

கருத்துக்களுடன் உலாவரும் உறவுகளுக்கு வந்தனங்கள் நன்றிகள்.... நிச்சயம் ஒரு விடையத்தை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். சாஸ்திரங்கள் எமது விதியின் தன்மையை நமக்கு இயம்புவன. நமது விதி என்பது எமக்கு இந்த எல்லையற்ற உலக வாழ்க்கையில் நிர்நயிக்கப்பட்ட வட்டம் அதைத் தாண்டி நாம் ஓர் அடி கூட நகர முடியாது. ஓர் அகன்ற புல் வெளியில் 8 அடி கயிற்றில் கட்டப்பட்ட மாடு தன் கயிற்றின் ஆரை கொண்ட ஓரு வட்டத்தினைத்தான் மேய முடியும். அதற்கு அப்பால் ஓர் இஞ்சிகூட நகர முடியாது.

நிச்சையமாக சாஸ்திரங்கள் 100 வீதம் உண்மையானவை என்று சொல்வது தவறு. ஆனால் அவை 100 வீதம் தவறானவை என்று சொல்வது அதைவிட தவறு. எந்த ஒரு விடையத்தினையும் நாம் எப்படி நோக்கப் பொகின்றோம் என்பதில்த்தான் அதன் தாக்கம் எம்மீது தங்கியிருக்கிறது.

நன்றிகள் உறவுகளே இது எனது ஒரு சிறிய பின்னூட்டல்....

யாரையும் பாதிக்கும் அளவு பேசவில்லை பாதித்திருந்தால் மன்னிக்கவும். உங்கள் கருத்துக்கள் தொடரட்டும்....

Edited by ithayanila

ம்ம்..பேசாம இதய நிலா அண்ணா..ணா..இந்த பக்கம் ஒரு சோதிட நிலையம் தொடங்கலாம் போல இருக்கு..கு மக்கள் வெள்ளம் அலை மோதும் பாருங்கோ..கோ.. :o

உங்க பேருக்கு பின்னால சோதிடமாமனி அப்படி இப்படி எண்டு ஏதாச்சையும் வைத்து கொண்டியள் எண்டா என்னும் நன்னா இருக்கும் பாருங்கோ..கோ.. :wub:

சரி அதை விடுவோம்..!!

வருங்கால தலைவர்கள் நீங்கள்.

ம்ம்..இதிலையே போட்டிருக்கு..கு வரும்கால தலவர் நான் தான் எண்டு..டு அப்ப எண்ட பிரதமர் ஆகிற கனவு வெகுதூரத்தில் இல்ல போல தான் கிடக்கும்..கு.. :lol:

உங்களிடம் உள்ள பிடிவாதங்களை சற்று குறைபிபீர்களேயானால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி உண்டு.

என்னத்தை வேண்டும் எண்டாலும் விட சொல்லுங்கோ..கோ இத மட்டும் விட சொல்லிடாதையுங்கோ கூடவே பிறந்தது நாம நெனைத்தது தான்..ன் சரி..ரி.. :)

சில தடவை இந்த குணத்தால தோற்றிருந்தாலும்..ம் பல தடவை வென்றிருக்கிறன் அல்லோ..லோ..!! :lol:

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில என்ன தேதியில பிறக்கிறோம் என்பது முக்கியமல்ல இறக்கிற தேதிகுள்ள என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்" :lol:

அப்ப நான் வரட்டா!!

என்டைக்காவது ஒரு நாள் நிலைமை மாறும் என்று பார்த்தால். மாறாது போல இருக்கே... இதை யார் எழுதியது நிலா? சரியாக இருக்கின்றது....

அது ஒண்டும் தானா தொடர்வதில்ல பாருங்கோ சும்மா அண்ணா..ணா நீங்களே சும்மா..சும்மா அதை கூட்டி கொண்டு திரியிறியள்..ள்.. :wub:

அது தான் பிரச்சினையே..அதை விட்டியள் எண்டா எல்லாம் தீர்ந்திடும்..ம்..!! :o

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெயரடிப்படையில் அமையும் எண்ணியல்.. சாரம்சம்..

http://www.paulsadowski.com/Numbers.asp

உங்கள் பிறப்புத் திகதி அடிப்படையில்..

http://www.facade.com/numerology/

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சாஸ்திரத்தில எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் Numerology சில யதார்த்தத்தைச் சொல்லிச் சொல்வதை அவதானித்திருக்கிறேன். அதற்காக அது 100% உண்மையானது என்பதல்ல எனது கருத்து.

இது மட்டும் எனக்கு உண்மை. நிறைய.. போலி அன்புகளை எல்லாம்.. நிஜம் என்று நம்பி.. ஏமாந்திருக்கிறேன்..! அதற்கு இயல்பாக எனக்குள் உள்ள அன்புப் பார்வையே காரணமாப் போச்சு. இப்ப எல்லாம் அதற்கு எதிர்மாறாவே மாற்றிக் கொண்டு விட்டேன் என்னை. மாற்றியது.. இந்தச் சமூகமே அன்றி.. நானில்லை..! :o

:lol: பிறந்த திகதியை மாத்தவேண்டியதுதானே ...அதைவிட்டுட்டு எங்கன்ட நல்ல சமுகத்தை குறை சொல்லக்கூடாது :wub:

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

உந்த எண் சோதிட இம்சைகளினால் தமிழர்கள், தமிழில் இல்லாத பெயர்களைப் பிள்ளைகளுக்கு சூடுகிறார்கள். தமிழினி என்ற பெயருடையவர் எண் சோதிட மயக்கத்தினால் Dhamizinii என்று பெயரை மாற்றும் கொடுமைகள் தாங்கமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

:o பிறந்த திகதியை மாத்தவேண்டியதுதானே ...அதைவிட்டுட்டு எங்கன்ட நல்ல சமுகத்தை குறை சொல்லக்கூடாது :lol:

கள்ள பிறப்புச் சான்றிதழ் எடுத்தோ.. அப்படி மாத்தி.. 17 வயது என்று காட்டிப்.. புலம்பெயரினம் எங்கடை ஆக்கள். இன்னும் சில பேர் வயதைக் கூட்டி.. சலுகைகள்.. எடுக்கினம். அது எங்கட ஆக்களிட்ட எடுபடாது. அவை அதில கில்லாடிகள்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் நல்ல திகதியை பார்த்து டாக்குத்தரிடம் சொல்லி சத்திர சிகிச்சை செய்து பிள்ளையை வெளி உலகத்துக்கு கொண்டு வருகிணம் ......அப்பு......கடவுள் நம்பிக்கை எல்லாம் போய் சாத்திரம் சடங்குகளில்தான் அதிக நம்பிக்கை வக்கினம் இந்தகால இளசுகள்.......அதுகளை சொல்லி குற்றமில்லை ...அதுகளை வழி நடத்துற எங்களைதான் குற்றம் சொல்ல வேண்டும்........

எனக்கு சாஸ்திரத்தில எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் Numerology சில யதார்த்தத்தைச் சொல்லிச் சொல்வதை அவதானித்திருக்கிறேன். அதற்காக அது 100% உண்மையானது என்பதல்ல எனது கருத்து.

அதே தான்... எனக்கும் எண்கணிதம் சில வேளைகளில் அப்படியே பலித்திருக்கிறது... எப்போதும் அல்ல. ஆனால், சோதிடத்தை விட நம்பிக்கை அதிகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சாஸ்திரத்தில எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் Numerology சில யதார்த்தத்தைச் சொல்லிச் சொல்வதை அவதானித்திருக்கிறேன். அதற்காக அது 100% உண்மையானது என்பதல்ல எனது கருத்து.

இது மட்டும் எனக்கு உண்மை. நிறைய.. போலி அன்புகளை எல்லாம்.. நிஜம் என்று நம்பி.. ஏமாந்திருக்கிறேன்..! அதற்கு இயல்பாக எனக்குள் உள்ள அன்புப் பார்வையே காரணமாப் போச்சு. இப்ப எல்லாம் அதற்கு எதிர்மாறாவே மாற்றிக் கொண்டு விட்டேன் என்னை. மாற்றியது.. இந்தச் சமூகமே அன்றி.. நானில்லை..! :o

"நெடுக்ஸ் அண்ணை இது உங்கள் எண்ணுக்கு மட்டுமில்லை; பொதுவா எல்லோருக்கும் பொருந்தும் பாருங்கோ"....** துரோகங்களைக் கண்டு பிடிக்கும் வல்லமை மட்டும் நமக்கு வாய்த்திருந்தால்................!! உறவாடிக் கெடுப்பவர்கள் தான் பலர்..

நான் வேண்டும்' என்று இறைவனிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் "உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் உறவு கலவாமை வேண்டும்"

இந்த எண் சாத்திரம் பிறந்த திகதியினை அடிப்படையாக கொண்டதெனில், அத் திகதி ஆங்கிலேய காலண்டரில் வரும் திகதியா அல்லது தமிழ் காலண்டரில் வரும் தமிழ் வருடத்தை ஒற்றிய திகதியா?

ஆங்கிலேய கலண்டர் எனில், சுக்கிர பார்வை, சனிப்பார்வை, வெள்ளிப் பார்வை போன்ற விண்வெளியில் தானுண்டு தன் உப கோள்கள் உண்டு என்று அப்பாவிகளாக சுற்றி வரும் கோள்களின் பார்வையும் அக் ஆங்கிலேய கலண்டரை அடிப்படையாக வைத்தா கணிக்கப் பட்டது? அதுவும் ஆமெனில், தமிழ் காலண்டரின் திகதிகளில் இக் கிரகங்கள் வேறு திசைகளில் அல்லவா இருக்கின்றன....!!

இன்னும் ஒரு கேள்வி... எண் சாத்திரம் கண்டுபிடிக்கப் பட்டது யாரால்? ஆங்கிலேயர்களாலா அல்லது இந்திய பண்டிதர்களாலா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடையள் மட்டுந்தான் எதுக்கெடுத்தாலும் முட்டையிலை மயிர் புடுங்குங்கள் :huh:

மற்ற எந்த பாசை பேப்பராயிருந்தாலும் சரி ஓசி பேப்பராயிருந்தாலும் சரி எல்லாத்திலையும் தினசரிபலனும் வாரபலனும் வந்து கொண்டுதான் இருக்கு இதிலையிருந்து என்ன தெரியுது ?????? எல்லா மனிச ஜென்மங்களுக்கும் சாத்திர சம்பிரதாயங்களிலை நம்பிக்கை இருக்கல்லோ character0009.gif

எங்கடை பகுத்தறிவானவைக்கும் இப்புடியான எதிலையும் ஈடுபாடு இருக்கோ? k61.gif

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடையள் மட்டுந்தான் எதுக்கெடுத்தாலும் முட்டையிலை மயிர் புடுங்குங்கள் :wub:

மற்ற எந்த பாசை பேப்பராயிருந்தாலும் சரி ஓசி பேப்பராயிருந்தாலும் சரி எல்லாத்திலையும் தினசரிபலனும் வாரபலனும் வந்து கொண்டுதான் இருக்கு இதிலையிருந்து என்ன தெரியுது ?????? எல்லா மனிச ஜென்மங்களுக்கும் சாத்திர சம்பிரதாயங்களிலை நம்பிக்கை இருக்கல்லோ character0009.gif

எங்கடை பகுத்தறிவானவைக்கும் இப்புடியான எதிலையும் ஈடுபாடு இருக்கோ? k61.gif

நானும் பல்கலைக்கழக நூலகத்தில் கூட Numerology புத்தம் இருக்கக் கண்டு வாசித்திருக்கிறேன். வெள்ளையள்.. குறிப்பாக பெண் பிள்ளைகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுவதை அவதானித்திருக்கிறேன். :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் பல்கலைக்கழக நூலகத்தில் கூட Numerology புத்தம் இருக்கக் கண்டு வாசித்திருக்கிறேன். வெள்ளையள்.. குறிப்பாக பெண் பிள்ளைகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுவதை அவதானித்திருக்கிறேன். :wub:

அதென்ன பிறகு பெண் பிள்ளைகள் எண்டு சொல்லி எங்கடை பெண்தெய்வங்களை வம்புக்கிழுக்கிறது ???

நீங்கள் "போய்ஸ்" மட்டும் சாத்திரம் பாக்கிறேல்லையாக்கும் :huh:

நானும் பல்கலைக்கழக நூலகத்தில் கூட Numerology புத்தம் இருக்கக் கண்டு வாசித்திருக்கிறேன். வெள்ளையள்.. குறிப்பாக பெண் பிள்ளைகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுவதை அவதானித்திருக்கிறேன். :)

:huh::wub::lol: நெடுக்குத் தாத்தாவுக்கு எங்களை இழுக்காட்டி நித்திரை வராதே!!!! :lol::wub::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:huh::wub::lol: நெடுக்குத் தாத்தாவுக்கு எங்களை இழுக்காட்டி நித்திரை வராதே!!!! :lol::wub::wub:

தங்கச்சி வேண்டாம் அடங்கு ....அடங்கு :):(

நெடுக்கு தெரியாமல் சொல்லிப்போட்டார் :(

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறந்தது வருசம் பிறக்கே;குள்ளை அதாவது தை முதலாம் திகதி ஆனால் இதிலை உள்ளது போலை ஒண்டுமே எனக்கு பொருந்தேல்லை . அதாவது கண்ணாடி இன்னமும் போடேல்லை .தலையிலை நிறைய முடி இருக்கு . ஆனால் உள்ளை ஒண்டும் இல்லையெண்டது வேறை விசயம்.அப்ப என்ன செய்யலாம்????? :huh::wub:

Edited by sathiri

என்ன ஒரு பித்தலாட்டம் பாருங்கோ, எல்லாத் தேதிகளுக்கும் "உங்களுக்குக் கவலை இருக்கும்" என்று தொடங்கி, "சந்தோஷமாயிருங்கோ, எல்லாம் சரிவரும்" எண்டு முடியுது. இதைச் சொல்ல பிறந்த தேதி எதுக்கு? சாத்திரம் கேட்கிறவர் உயிரோட இருக்கிறாரா இல்லையா எண்டு தெரிஞ்சால் இத நானே சொல்லலாமே?

என்ன பித்தலாட்டம் பாருங்கோ.. எல்லாத் தேதிகளுக்கும் 'உங்களுக்குக் கவலை இருக்கும்' என்று தொடங்கி, 'சந்தோஷமாயிருங்கோ, எல்லாம் சரிவரும்' எண்டு முடியேலை பாருங்கோ!!

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

கணனி வரமுதல் உலகில் பெரிய செயல்களை எண்கள் ஆற்றும் என சொன்னால் யாராவது ஏற்பார்களா?

கணனி வந்த பிறகு ஏற்பார்கள்.. ஏனெனில் கணனிக்கே அடிப்படை இரு இலக்கங்கள்தானே..

ஆகவே... ஆகவே.. :huh::wub:

  • தொடங்கியவர்

உறவுகளுக்கு ஒரு சிறிய பின்னூட்டல்....

ஆமா "இரண்டாம் எண் காரருக்கு திடீர் மரணம் ஏற்படும்" என்று ஜாதகங்கள் சொல்கின்றன. உண்மையாக இருக்குமா. ஏனெனில் பாரதியார், காந்தியடிகள், போன்றோர்கள் இரண்டாம் எண்காரர் தான் அவர்களுக்கு ஏற்பட்டது என்ன??? பாரதியார் யானையினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏன் இலங்கைச் செய்தியாளர் ரவிராஜ் (Not ஜெயராம்) கூட இரண்டாம் நம்பர் தான் அவர் எப்படிக் கொல்லப்பட்டார்.

உங்கள் சிந்தனைக்கு நம்பமுடியுமா பாருங்கள்....

Edited by ithayanila

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு ஒரு சிறிய பின்னூட்டல்....

ஆமா "இரண்டாம் எண் காரருக்கு திடீர் மரணம் ஏற்படும்" என்று ஜாதகங்கள் சொல்கின்றன. உண்மையாக இருக்குமா. ஏனெனில் பாரதியார், காந்தியடிகள், போன்றோர்கள் இரண்டாம் எண்காரர் தான் அவர்களுக்கு ஏற்பட்டது என்ன??? பாரதியார் யானையினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏன் இலங்கைச் செய்தியாளர் ஜெயராம் கூட இரண்டாம் நம்பர் தான் அவர் எப்படிக் கொல்லப்பட்டார்.

உங்கள் சிந்தனைக்கு நம்பமுடியுமா பாருங்கள்....

நான் நல்லாய் இருக்க விருப்பமில்லையா?. நான் பிறந்தது 29.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி உந்த சுனாமியின் போது இறந்தவர்கள் எல்லாம் ஒரே எண்களை உடையவர்களா?. அப்படியானால் கிட்டத்தட்ட உலக சனத்தொகையில் 9ல் ஒரு பகுதியினர் 2ம் எண்ணை உடையவர்கள். அவர்கள் எல்லாருக்கும் திடீர் மரணம் ஏற்படுமா?.

ஆங்கிலேயன் 1815ம் ஆண்டு தான் இலங்கைக்கு வந்தான். 1815க்குப் பின்பு தான் எம்மவர்களுக்கு ஆங்கிலத்தேதிகள், எழுத்துக்கள் தெரியும். 1815க்குப்பிறகு தான் எண்சோதிடம் வந்ததா? ஒருவேளை சீனாக்கரர்கள், அரேபியர்கள் போன்ற வேறு நாட்டவர்கள் இலங்கை, இந்தியாவில் வெள்ளைக்காரருக்குப் பதிலாக ஆட்சி செய்து இருந்தால் எண் சோதிடம் சீனா, அரேபியர்கள் அல்லது வேறு நாட்டவர்களின் மொழிகளில் தான் கணிக்கப்படுமா?.

ஈழத்து இந்துக்கள் எண் சோதிட மாயையினால் தமிழிலி இல்லாத வடமொழி, வேறு மொழிப் பெயர்களைப் பிள்ளைகளுக்கு சூட்டி அடையாளத்தை இழக்கிறான். ஈழத்துக் கிறிஸ்தவர்கள் ஆங்கிலப் பெயர் வைத்து அடையாளத்தை இழக்கிறான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளுக்கு ஒரு சிறிய பின்னூட்டல்....

ஆமா "இரண்டாம் எண் காரருக்கு திடீர் மரணம் ஏற்படும்" என்று ஜாதகங்கள் சொல்கின்றன. உண்மையாக இருக்குமா. ஏனெனில் பாரதியார், காந்தியடிகள், போன்றோர்கள் இரண்டாம் எண்காரர் தான் அவர்களுக்கு ஏற்பட்டது என்ன??? பாரதியார் யானையினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏன் இலங்கைச் செய்தியாளர் ஜெயராம் கூட இரண்டாம் நம்பர் தான் அவர் எப்படிக் கொல்லப்பட்டார்.

உங்கள் சிந்தனைக்கு நம்பமுடியுமா பாருங்கள்....

அட இது பரவாயில்லையே எனக்கு திடீர் மரணமா அப்ப இனி கவலை படாம எல்லாம் சாப்பிடலாம். நான் பிறந்தது 29ம் திகதி :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.