Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற உறுப்பினராக கருணா சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இணையம் - தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

வடமத்திய மாகாண சபை தேர்தலில்போட்டியிடும் முகமாக பாரளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.வசந்த சமரசிங்கவின் வெற்றிடத்திற்கே விநாயகமூர்த்தி முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ் பதவியேற்பு நிகழும் சமயம் எதிர்கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய சுதந்திர முன்னனியின் விமல் வீரவன்ச ஆகியோரே சபையில் இருந்தனர். ஐக்கிய தேசிய கட்சி , ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவ் பதவியேற்பு நிகழ்வினை பகிஷ்கரிப்பு செய்துள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்த வேலைக்கு சிறந்த சன்மா

Demo-Crazy at Its Best

சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி!

நம்ம சனநாயகம் வாழ்ந்தா போதும் அண்ணாச்சி!

கையில காசு வாயில தோச!

குத்தி நிமித்தினேன் குடுத்தாங்க நாக்காலி!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தி பிரமாணம் எது

நான் இந்த பைத்தியக்காரர் மகிந்த கூட்டத்தோடு சேர்ந்து அவர்கள் செய்யும் செய்யப்போகும் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் பாலியல் வல்லுறவுக்களுக்கும் ஆள் கடத்தல்களுக்கும் என்னால் முடிந்த உதவியை செய்வேன் என தேரரின் மொட்டந்தலையில் அடித்து சத்தி எடுக்கிறேன் அதற்கு கொல்லிவால் பிசாசு சோமவன்சவும் சாட்சி.

இதுவா? :mellow::mellow::huh:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கிழமை பாதுகாப்பு பிரதி அமைச்சராக பதவி ஏற்றாலும் ஏற்பார்............

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கென்னவோ இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி கருணாவிற்கு நிலைக்காது என்றே தோன்றுகின்றது. மகிந்த கருணாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்க நினைத்தால் ஜே.வி.பி அதற்கு உடன்படாது. இது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் பதவி. இதற்கெதிராக அவர்கள் இப்போது நீதிமன்றில் வழக்குத் தொடுத்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்பதை.

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு அனுப்பி அலைக்கழிச்ச மாதிரி ,

இனி பாராளுமன்றத்துக்கும் , நீதி மன்றத்துக்கும் அலைக்கழிக்க போகின்றார்களோ ......... :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

obdopqrfcf4hfn453b2qjf45_1008.jpg

மூன்று குரங்குகள்.. மூன்று வகையில்.. சன நாய் அகத்தில் வாழ்வது எப்படி என்று சொல்கின்றன..!

obdopqrfcf4hfn453b2qjf45_1010.jpg

குட்டிக் குரங்குகளுக்கு தமிழீழ அப்பத்தைப் பிச்சுப் போடும்.. பெரிய குரங்கு.

வாழ்க குரங்குக் கூட்டம். வாழ்க புலி எதிர்ப்பு சன நாய் அகம். வாழ்க.. பிரதேசவாதம்..! :mellow::mellow:

படங்கள் டெயிலிமிரர்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

obdopqrfcf4hfn453b2qjf45_1008.jpg

மூன்று குரங்குகள்.. மூன்று வகையில்.. சன நாய் அகத்தில் வாழ்வது எப்படி என்று சொல்கின்றன..!

இந்த குரங்குகளை பார்க்க , கிழநரிக்கு தான் சன நாய் அகத்தில் , இணைய முடியவில்லையே என்று கவலையாக இருக்குமே ............ :mellow:

மானத்தை விற்றால் இப்படி கூட வாழலாம்.சிங்களவனிடம் நக்கித்தின்பது என்று முடிவு எடுத்தால் செய்யவேண்டியது தானே கடத்தி வைத்து காசை மட்டும் ஏன்டா தமிழனிடம் பறிக்கின்றாய்.அதையும் சிங்களவனிடமே செய்ய வேண்டியது தானே?

ஆக திருடர்கள்,கொள்ளைக்காரர்கள,; முடிச்சு மாறிகள,; கள்ளச் சாரய முதலைகள் பெண்பித்தர்கள் கடைசியில் கொலைக்காரனையும் இனத் துரோகியையும் ஜனநாயக நாமத்தோடு கூட்டணியில் சேர்த்தாகி விட்டது. இனி நடக்கும் கொலைகள் கொள்ளைகள் எல்லாவற்றுற்கும் ஜனநாயக சாயம் பூசி வேடிக்கை பார்க்கலாம். நல்ல கூத்தணி. பக்கத்துணையா டக்கியும் வேறு இனி என்ன. நடத்தவேண்டியது தான்

தமிழர்க்கு வன்முறை பாதை அற்ற மாற்று தலைமை பற்றி பேசும் சர்வதேச சனனாயக அரசுகள் வாழ்த்தி ஒரு அறிக்கையும் இன்னமும் விட வில்லையா? பாவம் அவ் நாடுகள் சிங்கள அரசு இந்தளவிற்கு கீழ் இற்ங்கிப் போகும் என்று நினைத்திரா...

பிரித்தானியாவில் இருக்கும் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் கொஞ்சம் 'லொபி' செய்தால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கவனியுங்கள்

தமிழ்நாடே இவ்வளவு அமங்களப்படுகிறது இந்த வன்னியை நினைத்து

இந்த சனநாயகத்துக்கு முண்டுகுடுக்கிறம் என்று வாய்கிழியக்கத்திற இந்த .............???கள் ஏதாவது

ஒரு அறிக்கை விட்டதுகளே????

இந்த குரங்குகளை பார்க்க , கிழநரிக்கு தான் சன நாய் அகத்தில் , இணைய முடியவில்லையே என்று கவலையாக இருக்குமே

கதிர்காமர் இடத்துக்க வரக்கனவு கண்டவருக்கு கருணா அளவுக்கேனும் ஒண்டும் கிடைக்கவில்லையே என்றால் எப்படி கவலை இல்லாமல் இருக்கும்? அவருக்கும் ஏதாச்சும் கவ்வுறதுக்கு பிச்சு போடுவாங்கள் மகிந்த கூட்டம், அவங்களுக்கு சனநாயகத்தின் பேரில் தாராள மனசு இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

:o கருணாவுக்குப் பாராளுமன்றப் பதவி கிடைத்ததுபற்றி நண்பர் ஒருவரிடம் கதைத்தபோது, " உங்களுக்கென்ன, ஈழந்தான் வேணும் எண்டு சண்டை பிடிப்பியள், நாங்களெல்லோ ஆமியிட்டையும், எச், ரீ, எfப் இட்டையும் அடி வாங்கவேணும்? உப்பிடி அடிவாங்கிறதை விட பேசாம அரசியலுக்க போயிட்டால் மரியாதையாவது கிடைக்கும். நாங்களும் சந்தோஷமாக இருக்கலாம்." என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுது. சும்மா பகிடிக்குத்தான் சொல்லுறாராக்கும் எண்டு நானும் நினைச்சுக்கொண்டு, " அதுக்கிலையப்பா, ஈழம் வேணும் எண்டு இவ்வளவு காலமும் தலைவரோட நிண்டு சண்டை பிடிச்சுப்போட்டு, இண்டைக்கு எந்த வெக்கமும் ரோசமும் இல்லாம சிங்களவன்ர கு.. கழுவுகிறானே" எண்டு கேட்டன்.

அதுக்கு அவர்,"பிள்ளையான் வரும்போதும் உப்பிடித்தான் உங்கட ஆக்கள் சொன்னவை, ஆனால் இண்டைக்குப் பிள்ளையான் பெரிய ஆள், உங்கட தலைவரோட இருந்திருந்தால் உதெல்லாம் கிடைத்திருக்குமோ?", "அம்மாணுக்கும் நல்ல பதவி கிடைக்கும், எல்லாம் உங்கட தலைவர் விட்ட பிழை. பேசாமல் அம்மாணை அநுசரிச்சுப் போயிருந்தால் இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காது" என்று சொன்னாரே பார்க்கலாம் !

ஒன்று மட்டும் புரிந்தது. எம்மில் பலருக்கு எதற்காக நாம் இவ்வளவு காலமும் போராடுகிறோம் என்பது இன்றுவரை தெரியாது. இனியும் தெரியப்போவதில்லை.தெரிந்ததெல

  • கருத்துக்கள உறவுகள்

:o கருணாவுக்குப் பாராளுமன்றப் பதவி கிடைத்ததுபற்றி நண்பர் ஒருவரிடம் கதைத்தபோது, " உங்களுக்கென்ன, ஈழந்தான் வேணும் எண்டு சண்டை பிடிப்பியள், நாங்களெல்லோ ஆமியிட்டையும், எச், ரீ, எfப் இட்டையும் அடி வாங்கவேணும்? உப்பிடி அடிவாங்கிறதை விட பேசாம அரசியலுக்க போயிட்டால் மரியாதையாவது கிடைக்கும். நாங்களும் சந்தோஷமாக இருக்கலாம்." என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுது. சும்மா பகிடிக்குத்தான் சொல்லுறாராக்கும் எண்டு நானும் நினைச்சுக்கொண்டு, " அதுக்கிலையப்பா, ஈழம் வேணும் எண்டு இவ்வளவு காலமும் தலைவரோட நிண்டு சண்டை பிடிச்சுப்போட்டு, இண்டைக்கு எந்த வெக்கமும் ரோசமும் இல்லாம சிங்களவன்ர கு.. கழுவுகிறானே" எண்டு கேட்டன்.

அதுக்கு அவர்,"பிள்ளையான் வரும்போதும் உப்பிடித்தான் உங்கட ஆக்கள் சொன்னவை, ஆனால் இண்டைக்குப் பிள்ளையான் பெரிய ஆள், உங்கட தலைவரோட இருந்திருந்தால் உதெல்லாம் கிடைத்திருக்குமோ?", "அம்மாணுக்கும் நல்ல பதவி கிடைக்கும், எல்லாம் உங்கட தலைவர் விட்ட பிழை. பேசாமல் அம்மாணை அநுசரிச்சுப் போயிருந்தால் இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காது" என்று சொன்னாரே பார்க்கலாம் !

ஒன்று மட்டும் புரிந்தது. எம்மில் பலருக்கு எதற்காக நாம் இவ்வளவு காலமும் போராடுகிறோம் என்பது இன்றுவரை தெரியாது. இனியும் தெரியப்போவதில்லை.தெரிந்ததெல??லாம் வடபகுதி மக்களுக்காக நடக்கும் போராட்டத்தில் அநியாயமாக கிழக்கு மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்கிற நியாயம் தான்.

இது தப்பான உங்கள் பார்வை

தெரிந்ததெல்லாம் வடபகுதி மக்களுக்காக நடக்கும் போராட்டத்தில் அநியாயமாக கிழக்கு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்

இது மிகவும் தப்பான உங்கள் கண்ணேட்டம்

அப்படி பார்த்தால் கூட வடபகுதி மக்களை விட பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கு மக்கள் தான்

  • கருத்துக்கள உறவுகள்

குகன்,

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.

நான் இறுதியாக எழுதியது என்னுடன் பேசிய அந்த நண்பரின் கண்ணோட்டத்தைத்தான்.

அவரது பார்வையில்" வடக்கு மக்களுக்காக நடக்கும் போராட்டத்தில் கிழக்குத் தமிழர்கள் அநியாயமாக பாதிக்கப்படுகிறார்கள். கிழக்கு மக்கள்(அவரும் இன்னும் சிலரும்) ஈழத்தைக் கேட்கவில்லை, நிம்மதியான வாழ்வைத்தான் கேட்கிறார்கள்".

இவை என்னுடைய கருத்துக்கள் அல்ல. அதேபோல இவை கிழக்கு மக்களின் கருத்துமல்ல. கருணா என்கிற தனிமனிதனை தலைவர் தண்டித்ததால் இவருக்கு வந்த கோபம்தான் இந்தக் கருத்துக்களின் பின்னணி..

நீங்கள் அது தெரியாமல் என்னுடம் மல்லுக்கு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

karunaai.jpg

பதவியோடை பாதுகாப்பாயிருக்க நல்லவழி

வட்ட எ சேம்..... :o

தமிழர் சார்பிலை ஒரு விளக்குமாறு பட்டு குஞ்சம் கட்டி கொள்கிறது.

.

நீங்கள் அது தெரியாமல் என்னுடம் மல்லுக்கு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

:o:lol::lol:

ரகு அண்ணன் அதே தான்.

இது உண்மை சம்பவம்

மட்டக்களப்பில் இருக்கும் பிரபலமான அரசாங்க பயிற்சி சேவை இதில் மன்னார், சிலாபம், யாழ், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை சகல இடங்களில் இருந்தும் கல்விகற்கின்றார்கள்.பயிற்சி முடிவில் கட்டாய செயல் முறை பயிற்சிக்காக(1 மாதம்) கொழும்புக்கு சென்றார்கள்.இதில் கிட்டத்தட்ட 100 பேர் இருந்தார்கள்.

அந்த மாதத்தில் தான் வான் புலிகள் கொலன்னாவையில் தாக்குதல் நடத்தினார்கள் தாக்குதல் நடத்தி 1 மணித்தியாலத்துக்குள் சிங்கள காடையர்கள் வாள் பொல்லுகளுடன் தமிழர்கள் இங்கு இருப்பதாக சொல்லி தாக்குவதற்கு வந்து பிரதான வாயிலில் காவலாளியுடன் பிரச்சனை பட்டு இருக்கின்றார்கள்.அப்போது அங்கிருந்தவர்கள் நாம் என்ன சும்மா சாவதா என்று சொல்லிவிட்டு சமயலறையில் இருந்த கத்தி கட்டிலில் இருந்த பொல்லு போன்றவற்றை கம்பிகள் போன்றவற்றை எடுத்து தயாராவவே இருந்திருக்கின்றார்கள்.அந்த நேரத்தில் விடுதி மேற்பார்வையாளர் போலிசுக்கு சொல்லி இவர்கள் வந்து பெரிதான வாய்தர்க்கம் நடந்து தான் அன்று அவர்கள் கலைந்து சென்றார்கள்.

நம்மவர்களுடைய ஒற்றுமை எந்த இடத்தில் வெளிக்காட்டப்பட்டு நிற்கின்றதது?

obdopqrfcf4hfn453b2qjf45_1008.jpg

மூன்று குரங்குகள்.. மூன்று வகையில்.. சன நாய் அகத்தில் வாழ்வது எப்படி என்று சொல்கின்றன..!

obdopqrfcf4hfn453b2qjf45_1010.jpg

குட்டிக் குரங்குகளுக்கு தமிழீழ அப்பத்தைப் பிச்சுப் போடும்.. பெரிய குரங்கு.

வாழ்க குரங்குக் கூட்டம். வாழ்க புலி எதிர்ப்பு சன நாய் அகம். வாழ்க.. பிரதேசவாதம்..! :lol::o

படங்கள் டெயிலிமிரர்.

உந்த சிறிபதியான சிறிபதிக்கே Brakeக்கைப் புடுங்கிப் போட்டு ஓட விட்டவங்க..

பேர்னான்டோ பிள்ளைக்கு ஓட்டப் போட்டியில அப்படிய ஓட விட்டவங்கா.

கருணாவை சும்மாவா விடுவாங்க..

இந்தப் பதவி எல்லம் .. தூக்கு மேடைக்கு போறவனுக்கு கடைசியாக் கோடுக்குற .. அவனது ஆசைகள்..

எத்தனை காலமா மகிந்தா.. இவங்க(மூன்று குரங்குகள்) அடிபட விளக்குத் தீக்குறது.. (ஒன்றாத் தீத்து விடுவோம் எண்டுதான்) ...

Edited by Tamilmagan

  • கருத்துக்கள உறவுகள்

குகன்,

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.

நான் இறுதியாக எழுதியது என்னுடன் பேசிய அந்த நண்பரின் கண்ணோட்டத்தைத்தான்.

அவரது பார்வையில்" வடக்கு மக்களுக்காக நடக்கும் போராட்டத்தில் கிழக்குத் தமிழர்கள் அநியாயமாக பாதிக்கப்படுகிறார்கள். கிழக்கு மக்கள்(அவரும் இன்னும் சிலரும்) ஈழத்தைக் கேட்கவில்லை, நிம்மதியான வாழ்வைத்தான் கேட்கிறார்கள்".

இவை என்னுடைய கருத்துக்கள் அல்ல. அதேபோல இவை கிழக்கு மக்களின் கருத்துமல்ல. கருணா என்கிற தனிமனிதனை தலைவர் தண்டித்ததால் இவருக்கு வந்த கோபம்தான் இந்தக் கருத்துக்களின் பின்னணி..

நீங்கள் அது தெரியாமல் என்னுடம் மல்லுக்கு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

அதை இப்போ இங்கே பார்வைக்கு கொண்டுவரவேண்டிய அவசியமென்ன????

ஒருத்தர் சொல்கிறார் என்பது ஊர்கருத்து ஆகுமா???

அல்லது உங்கள் கருத்தும் அதுவா???

என்பதாலேயே எழுதினேன்

வம்புக்கு இழுக்க????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.