Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கு நடுவிரல் காட்டிய சனத் ஜெயசூரியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:கையில் உள்ள ஐந்து விரல்களில் (ஆறு விரல்கள் உள்ளவர்கள் ஆறு விரல்களில் என்று எடுத்துக் கொள்ளவும்) நடுவிரல் மட்டுமே நீளம் கூடியது. மற்றும்படி இந்த நடுவிரலை அடித்துக் காட்டுவதற்குரிய விளக்கத்தை இங்கு தர முடியாது. அது சென்சார் செய்யப்பட வேண்டியது. நீங்களாகவே புரிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். :rolleyes::lol:

எனக்கு நடுவிரல் காட்டுது ஏன் என்று தெரியும். ஆனால் எதற்கு நடுவிரலை தேர்வு செய்தாங்க என்பதை.. இப்ப வசம்பண்ணன் சொல்லித் தான் அறியுறன். இப்படி எல்லாம் தெரிஞ்ச அண்ணங்கள் நமக்கு அவசியம்..! :lol:

  • Replies 107
  • Views 15.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதே தமிழ் மக்கள் மலையகத்தமிழரை கேவலமாக பேசுவதும் உண்டே. மேலும் இந்த கொழும்புத்தமிழர் ஏன் முரளியை கூப்பிட்டார்கள். வேறு எவரும் கிடைக்கவில்லையா.

சனத் விரலைக்காட்டினார் என்றால், விரலைகாட்டும் அளவுக்கு ரசிகர்கள் என்ன செய்தார்கள்? சனத் இனவாதியல்ல என்றோ அல்லது இனவாதியென்றோ நான் கூறவரவில்லை. ஆனால் விளையாட்டு மைதானத்தில் அவர் அப்படி செய்யவேண்டிய நோக்கம் என்ன? ஏன் இந்த தமிழர் அவரின்ட விளையாட்ட பார்க்க போனவை?

அவரை விரும்பாத, புறக்கணித்த தமிழர்கள் மைதானத்தினுள் ஏன் சென்றார்கள்? இணைக்கப்பட்ட முதல் ஒளிக்காட்சியில் மைதானதினுள்ளே போராட்டம் நடத்துவது தெரிகிறது :rolleyes: .

புலத்திலே தான் எம்மவர்கள் இலங்கையின் விளையாட்டைப் புறக்கணிக்கிறார்கள். இலங்கையிலே சர்வதேச போட்டிகள் நடக்கும் போது, தென்இலங்கையில் பல்கலைக்கழகங்களில் படிக்கும் எனது நண்பர்கள் உட்பட பல தமிழ் மாணவர்கள் காலி மைதானம், கொழும்பு சரவணமுத்து மைதானம், கண்டி, தம்புள்ளை என பல இடங்களுக்கும் வாகனம் ஒழுங்கு செய்து கூட போய் பார்த்திருக்கிறார்கள் :lol: . நான் புலத்திலே செய்யப்படும் செயற்பாடுகளை விமர்சிக்கவில்லை, இலங்கையில் நடைபெறும் சம்பவத்தையே கூறினேன். அண்மையில் கூட இலங்கை - இந்தியா இடையில் நடந்த போடிகளைபார்க்க பேராதனை பொறியியல் பீட மாணவர்களான எனது நண்பர்கள் இந்த நாட்டு சூழ்நிலையிலும் கூட வாகனம் ஒழுங்குசெய்து காலிக்கு போயிருந்தார்கள்.

நாளை எமது தமிழீழ துடுப்பாட்ட அணி வேறு ஒரு நாட்டு அணியுடன் விளையாடும் போது யாராவது, எதோ ஒரு காரணத்திற்காக போராட்டம் நடத்தினால் எமது வீரர்கள் என்ன செய்வார்கள்? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:கையில் உள்ள ஐந்து விரல்களில் (ஆறு விரல்கள் உள்ளவர்கள் ஆறு விரல்களில் என்று எடுத்துக் கொள்ளவும்) நடுவிரல் மட்டுமே நீளம் கூடியது. மற்றும்படி இந்த நடுவிரலை அடித்துக் காட்டுவதற்குரிய விளக்கத்தை இங்கு தர முடியாது. அது சென்சார் செய்யப்பட வேண்டியது. நீங்களாகவே புரிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். :rolleyes::lol:

ஓகோ ........... இப்போ புரிந்துவிட்டது வசம்பு . :lol:

சாதாரண விரலை காட்டியதுக்கே இந்த ஆர்ப்பாட்டம் என்றால் இந்த நாய் என்னத்தை காட்டுகிறான் என்று பாருங்கள், மனட்சாட்சியை கொண்டு சொல்லுங்கள் விரலா? இதுவா பெரிசு?

canada_20081014012.jpg

எனக்கு நடுவிரல் காட்டுது ஏன் என்று தெரியும். ஆனால் எதற்கு நடுவிரலை தேர்வு செய்தாங்க என்பதை.. இப்ப வசம்பண்ணன் சொல்லித் தான் அறியுறன். இப்படி எல்லாம் தெரிஞ்ச அண்ணங்கள் நமக்கு அவசியம்..! :lol:

அட அட நெடுக்கிற்கு எப்பேர்ப்பட்ட விடயத்தில் என் விளக்கம் பயன்பட்டிருக்கின்றது. நினைக்கவே புல்லா அரிக்குதப்பா................... :rolleyes::lol:

அவரை விரும்பாத, புறக்கணித்த தமிழர்கள் மைதானத்தினுள் ஏன் சென்றார்கள்? இணைக்கப்பட்ட முதல் ஒளிக்காட்சியில் மைதானதினுள்ளே போராட்டம் நடத்துவது தெரிகிறது :unsure: .

புலத்திலே தான் எம்மவர்கள் இலங்கையின் விளையாட்டைப் புறக்கணிக்கிறார்கள். இலங்கையிலே சர்வதேச போட்டிகள் நடக்கும் போது, தென்இலங்கையில் பல்கலைக்கழகங்களில் படிக்கும் எனது நண்பர்கள் உட்பட பல தமிழ் மாணவர்கள் காலி மைதானம், கொழும்பு சரவணமுத்து மைதானம், கண்டி, தம்புள்ளை என பல இடங்களுக்கும் வாகனம் ஒழுங்கு செய்து கூட போய் பார்த்திருக்கிறார்கள் :lol: . நான் புலத்திலே செய்யப்படும் செயற்பாடுகளை விமர்சிக்கவில்லை, இலங்கையில் நடைபெறும் சம்பவத்தையே கூறினேன். அண்மையில் கூட இலங்கை - இந்தியா இடையில் நடந்த போடிகளைபார்க்க பேராதனை பொறியியல் பீட மாணவர்களான எனது நண்பர்கள் இந்த நாட்டு சூழ்நிலையிலும் கூட வாகனம் ஒழுங்குசெய்து காலிக்கு போயிருந்தார்கள்.

நாளை எமது தமிழீழ துடுப்பாட்ட அணி வேறு ஒரு நாட்டு அணியுடன் விளையாடும் போது யாராவது, எதோ ஒரு காரணத்திற்காக போராட்டம் நடத்தினால் எமது வீரர்கள் என்ன செய்வார்கள்? :lol:

நீங்கள் முதலாவது இணைப்பை நன்றாகப் பாருங்கள். அதில் எம்மவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்துத் தான் குரல் எழுபு்புகின்றார்கள். ஜெயசூரியாவையோ இலங்கை கிரிக்கெட் அணியையோ எதிர்த்தல்ல. ஆர்ப்பாட்டம் செய்யும் நம்மவர்களுக்கு முன்னால் சிங்கக் கொடியுடனே பலர் நிற்கின்றார்கள். அவர்கள் சிங்கள மக்களாக இருக்க வேண்டும். ஜெயசூரியா நடுவிரலைக் காட்டியிருந்தால், அதை முன்னால் நிற்கும் சிங்கள மக்களுக்கும் சேர்த்துக் காட்டியதாகவே கருத முடியும். ஆனால் படத்தில் ஜெயசூரியா கையை வைத்திருக்கும் முறையையும் அவரின் முகபாவனையையும் பார்க்கும் போது நிச்சயம் அப்படித் தெரியவில்லை. ஒரு புகைப்படத்தை வைத்து எந்த முடிவிற்கும் வர முடியாது. அதனால் இச்சம்பவத்தின் ஒளிப்பதிவை யாராவது இணையுங்கள் என்றால், ஒருவரும் இணைக்கவில்லை. நம்மவர் செய்யும் ஆர்ப்பாட்டத்தை ஒளிப்பதிவு செய்த நம்மவர்கள் நிச்சயம் ஜெயசூரியாவின் செய்கையையும் ஒளிப்பதிவு செய்திருப்பார்கள். அப்போ எங்கே அந்த ஒளிப்பதிவு. ஜெயசூரியாவை நியாயப்படுத்த இங்கே எவரும் முனையவில்லை. ஆனால் ஒருவரில் குற்றஞ் சாட்டும் போது அதன் நம்பகத் தன்மையும் முக்கியம். ஒரு படத்தை வைத்து பொய்யாக ஒரு புரளியைக் கிளப்பினால், பின்பு மெய்யாகவே ஒரு விடயம் நடந்திருந்தாலும் அது நம்பகத்தன்மை அற்றதாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எல்லாம் யாருக்கும் நடுவிரலை காட்டுவது இல்லையே.

நடு விரலை தவிர மற்ற விரலைஎல்லாம் மடக்கி விடுவேனே

நடுவிரல் காட்டுவதில் தப்பு இல்லை. அது ஆபாசமான அர்த்தம் இல்லை என்று எங்கேயோ வாசித்திருக்கின்றேன். உண்மையில் எம்மால் முடியும் என்பதன் அர்த்தம்தான் அது. . . பிரான்ஸ் பிரிட்டன் யுத்தகாலப்பகுதியில் நடந்த ஒரு சம்பவம்தான் அது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

:o கொழும்பில் தமிழ் மாணவர்கள் வாகனம் பிடித்து கிரிக்கட்டைப் பார்க்கப் போனார்கள் என்பது நம்பக் கடிணம். சிலவேளை அவர்கள் இந்திய வீரர்களைப் பார்க்கப் போயிருக்கக் கூடும்.

அடுத்தது மேல் இணைக்கப்பட்ட ஒளிப்பட இணைப்பில் தமிழர்கள் அங்கு போட்டி பார்க்கப் போகவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. அவர்கள் தலைவருக்காகவும் ஈழத்துக்காகவும் ஆதரவாகத்தான் கோஷம் எழுப்புகிறார்கள்.

நாம் இலங்கையிலிருந்து வரும், இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்யும் எந்த விளையாட்டு வீரரையோ அல்லது விளையாட்டையோ ஆதரிப்பது தவறு. இலங்கையில் யுத்தம் என்று ஒன்றில்லை. கிரிக்கட் விளையாடுமளவிற்கு நிலமை சுமூகம் என்று அரசு செய்யும் பிரச்சாரத்தை சர்வதேசம் நம்புவதற்கு இந்த விளையாட்டு நல்லாகவே பாவிக்கப்பட்டு வருகிறது.அதை விடவும் இலங்கையை கிரிக்கட்டில் முன்னுக்குக் கொண்டுவரப் பாடுபட்டவர் என்று பரவலாக நம்பப்படும் அவ்வணியின் முன்னால்த் தலைவர் அர்ஜூன ரணதுங்க ஒரு பெயர் பெற்ற பேரினவாதி. சிகல உருமயவின் ஸ்த்தாபகர்களில் இவரும் ஒருவர்.பின்னர் தனது தகப்பனாரின் செல்வாக்கினால் சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கொண்டவர். இன்னும் பல முன்னணி வீரர்கள் பகிரங்கமாகவே ராணுவத்துக்கு உதவிகளும் பணமும் கொடுத்து தமது தேசப்பற்றைக் காட்டியிருக்கிறார்கள். இலங்கை கிரிக்கட் அணியில் உள்ள பெரும்பாலானோர் கொழும்பிலுள்ள சிங்கள பவுத்த பேரினவாதத்தில் நன்கு ஊறிய துறவிகளால் நடத்தப்படும் பிரபல கல்லூரிகளான, ஆனந்த, நாலந்த, டி.எஸ்.சேனனாயக்க போன்ற கல்லூரிகளி இருந்தும், காலி, மாத்தறை போன்ற 100 % சிங்களவர்களைக் கொண்ட பாடசாலைகளில் இருந்துமே தெரிவுசெய்யப்படுகிறார்கள் என்பது ரகசியமில்லை. . தமிழர் என்பதற்காகவே முரளிதரன் என்னும் உலகப் பிரசித்தி பெற்ற சுழல்ப் பந்துவீச்சாளன் உதவி அணித் தலைவர் பதவிக்குக் கூட லாயக்கற்றவர் என்ற நிலை இருப்பதற்கு என்ன காரணம் என்று நான் சொல்லவேண்டிய தேவையில்லை. இது போதாது என்று முன்னர் விமானப்படையைச் சேர்ந்த சஜீவ டி சில்வா என்ற வேகப் பந்து வீச்சாளரும், அண்மையில் பி.ஏ.டபிள்யூ மெண்டிஸ் என்கிற ராணுவத்தின் ஆட்டிலெறிப் பிரிவைச் சேர்ந்தவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுனர்.

இவை நாம் ஏன் சிறிலங்காவை ஆதரிக்கக் கூடாது என்பதற்குப் போதுமான காரணங்கள் என்று நான் நினைக்கிறேன்.

தமிழீழத்துக்கென்று ஒரு கிரிக்கட் அணியிருந்து, இன்று சிங்கள தேசம் செய்யும் இன அழிப்பை தமிழீழ மக்கள் அப்போது நடத்துவார்கள் என்றால் நிச்சயம் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களையோ கோஷங்களையோ எதிர்பார்க்கத்தான் வேண்டும். அதற்காக இப்போது நடக்கும் எமது புலம் பெயர்ந்த மக்களின் எதிர்ப்பைத் தவறு என்று வாதிடுவது அறியாமை.

முதலில் நாங்கள் இன்னும் சிறிலாங்காவைச் சேர்ந்தவர்கள் என்ற நினைப்பைக் கைவிட வேண்டும். சிறிலங்கா என்பது எமது எதிரி அயல் நாடு. அதன் விளையாட்டுக்களை நாம் பகிஷ்கரிப்பதே சரி.

அவ்வணியில் உள்ள ஒரு வீரரின் மேல் உள்ள அபிமாணத்தினாலோ அல்லது மொத்த அணியிலும் மேல் உள்ள அபிமாணத்தாலோ அவர்களையும் சிங்களவர்களாகப் பார்ப்பதில் இருந்து நாம் இலகுவாக விலகிவிடுகிறோம் என்றுதான் நினைக்கிறேன்.தமிழர்களை அடக்க வேண்டும், ஒடுக்க வேண்டும் என்கிற எண்ணம் சாதாரண சிங்கள மக்களிடம் இயல்பாகவே உள்ள ஒரு குணாம்ஸம், இதற்கு கிரிக்கட் வீரர்கள் விதிவிலக்கல்ல.

பல ஊடகங்களிலும், மற்றும் போட்டிக்குச் சென்ற மக்களாலும் சனத் என்கிற சிங்கள வீரன் செய்த இழிசெயல் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட பின்பும் நாம் இன்னும் அப்படி நடக்கவில்லை என்று அடம்பிடிப்பது அவர்மேல் உள்ள அபிமானத்தால்த்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. அதை முதலில் விட்டெறியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எல்லாம் யாருக்கும் நடுவிரலை காட்டுவது இல்லையே.

நடு விரலை தவிர மற்ற விரலைஎல்லாம் மடக்கி விடுவேனே

ஆஆஆ.. நீங்களுமா. கெட்ட பொண்ணு நீங்க. நானும் ஏதோ நல்ல பிள்ளை என்றெல்லோ நினைச்சன்.. இவ்வளவு நாளும்..! :o

ஜம்மு

எனக்கொரு சந்தேகம். நடுவிரலைக் காட்டினார் என்ற பிரைச்சினை எமது தமிழர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளில் வந்தது போல் ஏன் மற்றைய பத்திரிகைகளில் வரவில்லை. அப்படி ஏதாவது வந்திருந்தால் அதையும் இணைகக்கலாமே?

naduviralqz6.jpg

எனக்குத் தெரிந்து நடுவிரல் காட்டுவது என்றால் இப்படித்தான். அதற்காக இவர்கள் உமக்குத் தான் நடுவிரலை காட்டுகின்றார்கள் என்று

( அப்படிக் காட்டியிருந்தாலும் பெண்பிள்ளைகள் என்பதால் ஜம்மு மனதிற்குள் சந்தோசப்படுவார் என்பது எனக்குத் தெரியும்) பிறகு ஜம்முவும் பிரைச்சினை கிளப்பிறதில்ல.........

ம்ம்..எத்தனையோ நாளா..ளா எனக்கு நடுவிரல் காட்ட வேண்டும் எண்ட ஆசையை வசபண்ணா நிறைவேற்றிட்டார் போல இருக்கு..கு.. :D

ஆனா உதுக்கு எல்லாம் கவலைபடமாட்டன் நான்..ன்..!! :D

மற்றது..து..வசபண்ணா...ணா நீங்க கேட்ட கேள்வி வாஸ்தவம் தான் பாருங்கோ..கோ ஏன் ஏனைய மொழி பத்திரிகைகளிள் இணைக்கவில்லை உது தொடர்பான செய்திகளை எண்டு..டு,ஏனைய பத்திரிகையாளர்கள் இதனை கவனித்து இருக்காமல் விட்டிருக்கலாம் அல்லவா..??.. :D

ஆனாலும் இதை ஏனைய பிற மொழி ஊடகங்களின் கவனிதிற்கு கொண்டு வந்தார்களோ..ளோ இல்லையா என்பது பத்தி எனக்கு தெரியா..யா அவ்வாறு கொண்டு வராவிடில் அது பிழை தான் ஒத்து கொள்கிறேன் இங்கே வந்து அவன் கையை காட்டி விட்டான்..ன்

எண்டு புலம்புவது..து..(நகைப்பிற்கிடம

ஒரு வார்த்தையில் கூற போனால்..ல் சில செய்திகளை இணைப்பதன் மூலம் பிரபலயமும் அடையலாம் இதற்கு மேலும் நான் சொல்ல விரும்பவில்லை..லை.. :D

அது தான் தற்போது நடக்கிறது போல் தெரிகிறது..து..!! :(

அப்ப நான் வரட்டா!!

:o:D

ம்ம்..வசி அண்ணாவின்ட சிரிப்பை பார்த்தா..தா வசி அண்ணாவும் ரொம்ப நல்லவர் போல..ல.. :D

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முதலாவது இணைப்பை நன்றாகப் பாருங்கள். அதில் எம்மவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்துத் தான் குரல் எழுபு்புகின்றார்கள். ஜெயசூரியாவையோ இலங்கை கிரிக்கெட் அணியையோ எதிர்த்தல்ல. ஆர்ப்பாட்டம் செய்யும் நம்மவர்களுக்கு முன்னால் சிங்கக் கொடியுடனே பலர் நிற்கின்றார்கள். அவர்கள் சிங்கள மக்களாக இருக்க வேண்டும். ஜெயசூரியா நடுவிரலைக் காட்டியிருந்தால், அதை முன்னால் நிற்கும் சிங்கள மக்களுக்கும் சேர்த்துக் காட்டியதாகவே கருத முடியும். ஆனால் படத்தில் ஜெயசூரியா கையை வைத்திருக்கும் முறையையும் அவரின் முகபாவனையையும் பார்க்கும் போது நிச்சயம் அப்படித் தெரியவில்லை. ஒரு புகைப்படத்தை வைத்து எந்த முடிவிற்கும் வர முடியாது. அதனால் இச்சம்பவத்தின் ஒளிப்பதிவை யாராவது இணையுங்கள் என்றால், ஒருவரும் இணைக்கவில்லை. நம்மவர் செய்யும் ஆர்ப்பாட்டத்தை ஒளிப்பதிவு செய்த நம்மவர்கள் நிச்சயம் ஜெயசூரியாவின் செய்கையையும் ஒளிப்பதிவு செய்திருப்பார்கள். அப்போ எங்கே அந்த ஒளிப்பதிவு. ஜெயசூரியாவை நியாயப்படுத்த இங்கே எவரும் முனையவில்லை. ஆனால் ஒருவரில் குற்றஞ் சாட்டும் போது அதன் நம்பகத் தன்மையும் முக்கியம். ஒரு படத்தை வைத்து பொய்யாக ஒரு புரளியைக் கிளப்பினால், பின்பு மெய்யாகவே ஒரு விடயம் நடந்திருந்தாலும் அது நம்பகத்தன்மை அற்றதாகிவிடும்.

முதலில் விளக்கமே இல்லாமல், ஒரே ஒரு எண்ணத்தை மட்டும் குறிக்கோளாக வைத்து வாதிடுவதை நிறுத்துங்கள். அது உங்கள் மீதான கருத்தியல் நம்பிக்கையை கேவலப்படுத்தி விடும்.

நான் இணைத்த காணோளி இறதிநாள் நடந்த போட்டி தொடர்பானது. ஆனால் 2ம் நாளில் தான் சனத் ஜயசூர்யா கை காட்டினார் என்று ஏலவே சொல்லப்பட்டது. நீங்கள் என்னவென்றால் இறுதிநாள் காணொளியைப் பார்த்து விட்டு, இவ்வாறு ஏதோ எல்லாம் தெரிந்தவர் போல வாதிடுகின்றீர்கள். உங்களை என்னவென்று சொல்வது.

தவிர,இறுதிநாளில் ஓரளவு இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் வந்திருந்தார்கள். 2ம்நாளில் வந்தவர்கள் 100ற்கும் குறைவானவர்களே. அப்படியான நிலையில் தமிழ் மக்களுக்குத் தனியே காட்டுவது கஸ்டமானதல்ல.

மேலும் சனத் என்ன செய்கின்றார் என்பதை ஒளிப்பதிவு செய்து கொண்டிருப்பது அனைவரின் வேலையுமல்ல. அவர் அந்தக் கணப் பொழுதில் செய்ததை படம் பிடித்தவர்கள், பார்த்தவர்கள் தான் மனச்சாட்சியோடு சொல்கின்றார்கள்.

வசம்பு என்ற யாரோ ஒரு ... நம்ப வேணுடும் என்றோ, அல்லது அவரை நம்ப வைக்க வேண்டும் என்ற தேவையோ யாருக்கும் கிடையாது. காணோளி இணைத்தால் தான் நம்புவேன் என்றால் அதற்காக நாம் ஒன்றும் அழமுடியாது. விரும்பினால் நம்புக, இல்லாவிட்டால் போகலாம். யாரும் அதில் குறைந்து விடப் போவதில்லை....

நல்லது நண்பர்களே!

போய்ப் பார்த்தவர்களை மற்றவர்களை நம்புவதில்உங்களுக்குள்ள பற்றை வரவேற்கின்றேன். வாழ்க !

http://ca.youtube.com/watch?v=i9HQwr_Uxcs

மேலே நீங்கள் ஒளிப்பதிவை இணைக்கும் போது என்ன எழுதியிருக்கின்றீர்கள். அதன் அர்த்தம் என்ன? அதில் எங்காவது இது இறுதிநாளில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளீர்களா? பின்பு எதை வைத்து எனக்கு விளக்கமில்லை என்கின்றீர்கள். உங்களுக்கு குறைவாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று முடிவுகட்டி விடுவதா. நான் கனடாவில் நடந்த இந்நிகழ்வுகளை தொலைக்காட்சியில் கூட பார்க்க விருப்பவுமில்லை, பார்க்கவுமில்லை. ஆனால் அதனை பார்க்கச் சென்றவர்கள் பின்பு இப்படி கதையளப்பதற்காகவா பார்க்கச் சென்றார்கள்??

ஏதோ நீங்கள் நேரில் சென்று பார்த்தவர் போல் எப்படி வாதம்் செய்கின்றீர்கள்?? அடுத்தவர்களை இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கும் முன் முதலில் உங்களையும் ஒரு முறை கேட்டிருக்கலாமே.

நானும் ஒரு புகைப்படப்பிடிப்பாளர் தான். ஒருவர் நடுவிரலைக் காட்டினார் என்பதை எதேச்சையாக எடுக்கப்பட்ட ஒளிப்பதிவிலிருந்து பார்ப்பது சாத்தியம். ஆனால் அவர் நடுவிரலைக் காட்டியதை பாார்த்துவிட்டு அதை ஒருவர் படம் எடுப்பது அசாத்தியமான காரியம். சில செக்கனிலேயே நடக்கும் சம்பவத்தை புகைப்படக் கருவியை தயார் செய்து எடுக்க முடியுமா??

:o இறுதியாக, எனது கருத்தில் நீங்கள் நம்பிக்கை வைத்தால் தான் செல்லுபடியாகும் என்பது எனக்குத் தெரியாது. :D அப்படி உங்கள் நம்பிக்கைக்காக எனது கருத்துக்களை நான் எழுதவுமில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

:D கொழும்பில் தமிழ் மாணவர்கள் வாகனம் பிடித்து கிரிக்கட்டைப் பார்க்கப் போனார்கள் என்பது நம்பக் கடிணம். சிலவேளை அவர்கள் இந்திய வீரர்களைப் பார்க்கப் போயிருக்கக் கூடும்.

ரகு அண்ணை, போன பெடியள் என்னோட ஒண்டா படிச்சு, விளையாடி, ஊர் சுத்தினவங்கள்.. ஒரு பிரபல தளத்தில முரளி, சனத், சங்ககார, ஜெயவர்த்தனா எல்லாரோடையும் காலி மைதானத்தில் நிண்டு எடுத்த படம் போட்டிருக்கிறாங்கள் :o . அவங்களின்ட அனுமதி இல்லாமல் நான் இணைக்க விரும்பவில்லை அத்துடன் என்னால் அவங்களுக்கு வீண் பிரச்சனை ஏற்றபடுவதை நான் விரும்பவில்லை. இந்தியாவ பாக்கப் போனால் ஏன் இவயளோட நிண்டு படம் எடுக்கோணும்? அதோட அவங்கள் படிக்கிற காலத்தில இருந்து யாருக்கு ஆதரவு என்பது எனக்கு நன்கு தெரியும். :D

முதலில் நாங்கள் இன்னும் சிறிலாங்காவைச் சேர்ந்தவர்கள் என்ற நினைப்பைக் கைவிட வேண்டும். சிறிலங்கா என்பது எமது எதிரி அயல் நாடு. அதன் விளையாட்டுக்களை நாம் பகிஷ்கரிப்பதே சரி.

உங்களுக்கு வேறநாட்டு பிரஜா உரிமை இருந்தாப்போல எல்லாருக்கும் அப்பிடி இல்லை. :D நான் கூட மாணவனாகத்தான் இருக்கிறேன், நாளையே கல்வி முடிந்த பின்னர் வீட்ட போ என்றால் எங்கள எங்க போகச்சொல்லுறீங்க? :D நான் உட்பட எத்தனையோ பேர் இப்பவும் இலங்கை கடவுச்சீட்டுடன் தான் இருக்கிறம்..

தமிழர்களை அடக்க வேண்டும், ஒடுக்க வேண்டும் என்கிற எண்ணம் சாதாரண சிங்கள மக்களிடம் இயல்பாகவே உள்ள ஒரு குணாம்ஸம், இதற்கு கிரிக்கட் வீரர்கள் விதிவிலக்கல்ல

உங்களுக்கு எத்தனை சிங்கள மக்களைத் தெரியும்? :D என்னத்த அடிப்படையா வைத்து இந்தக்கருத்தைக் கூறுகிறீங்க? எனது அப்பா இனக்கலவரத்திலே உயிர் தப்பியதற்கு காரணமே ஒரு சிங்கள குடும்பம். அலுவலக விடயமாக வெளிநாடு சென்று நாடு திரும்பியபோதே கலவரமும் நடந்தது. அவரை எற்றச் சென்ர அலுவலக வாகனம் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் ஒரு சிங்கள குடும்பத்தினரின் உதவியுடன் தப்பினார். நான் கூட கொழும்பிலே இருந்தபோது பல தடவைகள் இராணுவத்திடமிருந்து என்னுடன் படித்த சிங்கள நண்பர்களின் உதவியுடன் தப்பியிருக்கிறேன்.

பல ஊடகங்களிலும், மற்றும் போட்டிக்குச் சென்ற மக்களாலும் சனத் என்கிற சிங்கள வீரன் செய்த இழிசெயல் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட பின்பும் நாம் இன்னும் அப்படி நடக்கவில்லை என்று அடம்பிடிப்பது அவர்மேல் உள்ள அபிமானத்தால்த்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. அதை முதலில் விட்டெறியுங்கள்.

பல ஊடகங்களா? :( நான் அறிய இரு தமிழ் ஊடகங்களில் மட்டும் இச் செய்தி வந்திருக்கிறது. அப்பிடி வேறு தமிழ் அல்லாத ஊடகங்களில் வந்து இருப்பின் அதனை தயவு செய்து இணைக்க முடியுமா? அத்துடன் யார் எங்கே நிரூபித்தார்கள்? ஒரே ஒரு படம் போடப்பட்டுள்ளது, அதைப்பற்றியது தான் விவாதமே அத்துடன் இணைக்கப் பட்ட ஒளிக்காட்சிக்கும் விவாதத்திற்கும் தொடர்பில்லை. எனக்கு சனத்தின் மீதோ இலங்கை அணியின் மீதோ ஒருவிதமான அபிமானமும் இல்லை, அவர்களுக்காக கதைக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை. இது விவாத்திட்குரிய களம் எனவே தக்க சான்றுகளை இணைத்து உங்களது கருத்தை நிரூபியுங்கள் :D . வசம்பு அண்ணா சொன்னது போல, "ஒருவர் நடுவிரலைக் காட்டினார் என்பதை எதேச்சையாக எடுக்கப்பட்ட ஒளிப்பதிவிலிருந்து பார்ப்பது சாத்தியம். ஆனால் அவர் நடுவிரலைக் காட்டியதை பாார்த்துவிட்டு அதை ஒருவர் படம் எடுப்பது அசாத்தியமான காரியம். சில செக்கனிலேயே நடக்கும் சம்பவத்தை புகைப்படக் கருவியை தயார் செய்து எடுக்க முடியுமா??" என்பதுதான் எனது கருத்துமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நீங்கள் ஒளிப்பதிவை இணைக்கும் போது என்ன எழுதியிருக்கின்றீர்கள். அதன் அர்த்தம் என்ன? அதில் எங்காவது இது இறுதிநாளில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளீர்களா? பின்பு எதை வைத்து எனக்கு விளக்கமில்லை என்கின்றீர்கள். உங்களுக்கு குறைவாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று முடிவுகட்டி விடுவதா. நான் கனடாவில் நடந்த இந்நிகழ்வுகளை தொலைக்காட்சியில் கூட பார்க்க விருப்பவுமில்லை, பார்க்கவுமில்லை. ஆனால் அதனை பார்க்கச் சென்றவர்கள் பின்பு இப்படி கதையளப்பதற்காகவா பார்க்கச் சென்றார்கள்??

ஏதோ நீங்கள் நேரில் சென்று பார்த்தவர் போல் எப்படி வாதம்் செய்கின்றீர்கள்?? அடுத்தவர்களை இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கும் முன் முதலில் உங்களையும் ஒரு முறை கேட்டிருக்கலாமே.

நானும் ஒரு புகைப்படப்பிடிப்பாளர் தான். ஒருவர் நடுவிரலைக் காட்டினார் என்பதை எதேச்சையாக எடுக்கப்பட்ட ஒளிப்பதிவிலிருந்து பார்ப்பது சாத்தியம். ஆனால் அவர் நடுவிரலைக் காட்டியதை பாார்த்துவிட்டு அதை ஒருவர் படம் எடுப்பது அசாத்தியமான காரியம். சில செக்கனிலேயே நடக்கும் சம்பவத்தை புகைப்படக் கருவியை தயார் செய்து எடுக்க முடியுமா??

:o இறுதியாக, எனது கருத்தில் நீங்கள் நம்பிக்கை வைத்தால் தான் செல்லுபடியாகும் என்பது எனக்குத் தெரியாது. :D அப்படி உங்கள் நம்பிக்கைக்காக எனது கருத்துக்களை நான் எழுதவுமில்லை. :D

வழமையாக உங்களின் கருத்துக்களில் வடிவாகப் படி, திரும்பப்படி , என்று அறிவுரை செய்வீர்கள். ஆனால் இந்தக் காணொளியின் தலைப்பில் கூட அது இறுதிநாள் போட்டி என்று குறிப்பிடப்பட்டதோடு மட்டுமல்லாமல், விமானத்தில் இலங்கை தொடர்பான வாசகமும் பதிவாகியுயுள்ளது. (T20 Canada Final - Srilanka Vs Pakistan- Tamil boys with Eelam Flag)புரிந்து கொள்ளாததோ, அல்லது அந்த நிகழ்வு பற்றி ஒன்றுமே தெரியாததோ உங்களின் தவறு. விமானத்தில் இலங்கை தொடர்பான வாசகம் கொண்டு செல்லப்பட்டரது இறுதிநாள் நிகழ்வில் என்பது செய்ி ஊடகங்களில் வந்த ஒன்று.

நான் அந்தக் காணொளி தொடர்பாகவோ, அல்லது மற்றய காணொளி தொடர்பாகவே எதும் சொல்லாதபோது, நீங்கள் எடுத்த தவறான முடிவுக்கு யார் பொறுப்பாக முடியும்.

நீங்கள் புகைப்படபிடிப்பாளர் என்பது அதில் மேதை என்ற அர்த்தம் ஆகாதது தானே. இப்போது எல்லாம் 100 பிராங்கிற்கு ஒரு கமரா வாங்கினால் எல்லோரும் புகைப்படப்பிடிப்பாளர் என இலட்சனை குத்திக் கொள்கின்றார்கள்.

நான் நேரே அதைப் பார்க்கவில்லைத் தான். ஆனால் சனத் செய்ததைக் கண்டவர்களில் என் நண்பர்களும் உள்ளனர்.

ஒரு சில கணப்பொழுது என்றால் உடனே ஒரு செக்கனில் கையை காட்டி, உடனே மடக்குவதல்ல. குறித்தளவு நேரம் விநாடிகள்.

தவறான விதண்டாவாதம், பிழையான விளக்கத்தை நியாயப்படுத்திக் கொண்டு, மற்றவர்களைப் பார்த்து கதையளக்கவா, கத்தரிக்காய் விற்கவா என்று ஒப்பாரி வைக்கின்றீர்கள். வேண்டாப் பொண்டாட்டி கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்பது தானா நம்மவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக கதையளப்பு என்ற வாதம்??

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள்வர்களின் பாரம்பரிய நடனமான க(?)ண்டி நடனம் பாருங்கோ,இதைப்போய்..........................

போய்ப் பார்த்தவர்களை மற்றவர்களை நம்புவதில்உங்களுக்குள்ள பற்றை வரவேற்கின்றேன். வாழ்க ! என்று எழுதி ஒரு காணொளி இணைப்பை இணைத்திருந்தீர்கள். அதை எவரும் சம்பவம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட காணொளி என்றே கருதிப் பார்ப்பார்கள். அது போலவே நானும் பாரத்த்தேன். அத்துடன் இணைப்பையும் உடன் பெரிப்பித்துப் பார்த்ததில் நீங்கள் சொன்ன வாசகங்களை பார்க்க முடியாமல் போய்விட்டது. அதை கவனிக்காது விட்டதில் என்னிலும் தவறு தான். அதற்காக முழுத்தவறும் என்னில் என்பது போல் நீங்கள் சுமத்த முயல்வது தவறு. அதைவிட உங்களுக்கு காணொளியில் விமானம் இழுத்துச் செல்லும் பதாதையில் இருப்பது தெரிகின்றதா?? உண்மையில் உங்களுக்கு ஞானக்கண் தான். ஏனெனில் காணொளியைப் பார்த்த எவருக்கும் தெரியாதது உங்களுக்கு மட்டும் தெரிகின்றதென்றால் சும்மாவா??

மேலும் ஒரு வேளை நீங்கள் 100 பிராங் கமெராக்காரர்களை மட்டும் சந்தித்து இருப்பீர்கள் போல. ஆனால் நான் ஊரிலேயே கமெரா தொழில்நுட்பம் கற்றுத் தேர்ந்தவன். பிரபலமான ஒரு புகைப்படப்பிடிப்பு நிலையமும் வைத்திருந்தவர்கள். அதனால் என்னை நான் மேதை என்று ஒரு போதும் சொன்னதில்லை. உங்களைப் போன்ற பலர் வெளிநாடு வந்தபின் தான் கமெரா வாங்கியிருப்பீர்கள். அதற்காக எல்லோரையும் அப்படி நினைத்து விடாதீர்கள். உண்மையில் நடுவிரல் அடிப்பதென்பது சில செக்கனில் நடைபெறும் ஒரு நிககழ்வே. இதனைப் பார்த்தவிட்டு அதை படம் எடுப்பது முடியாத காரியம். வேண்டுமென்றால் உங்களுக்கு தெரிந்த புகைப்பட மேதைகள் யாராவது இருந்தால் அவர்களிடமே கேட்டுப் பாருங்களேன்.

மற்றும்படி நடைமுறைச் சாத்தியத்தைத் தான் நான் எழுதுகின்றேனே தவிர. உங்களைப் போல குய்யோ முறையோ என்று ஒப்பாரி நான் வைக்கவில்லை. நீங்களே ஒப்பாரி வைத்துக் கொண்டு, அடுத்தவனை ஒப்பாரி வைப்பது என்று கூறினால் உங்களுக்கு இதிலும் பிரைச்சினையா????????? :lol::lol::(

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள்வர்களின் பாரம்பரிய நடனமான க(?)ண்டி நடனம் பாருங்கோ,இதைப்போய்..........................

:lol::lol::(

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான்,

எனக்குச் சிங்களவர்களைப்பற்றி என்ன தெரியும் என்று கேட்கிறீர்கள். நல்லது, உங்கள் திருப்திக்காக சில தகவல்களைத் தருகிறேன். நான் பிறந்தது 1973. கொழும்பில் வாழத்தொடங்கியது 1974. அன்றிலிருந்து நான் இறுதியாக அவுச்த்திரேலியா வரும்வரையிலும்(2002) நான் படித்தது, வளர்ந்தது, பல்கலைக்கழம் போனது எல்லாமே கொழும்பில்த்தான். இடையில் 3 வருடங்கள் மட்டக்களப்பில் வாழவும் சந்தர்ப்பம் கிடைத்தது வேறு கதை.கிட்டத்தட்ட 25 வருடங்கள் சிங்களவருடன் வாழ்ந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக ஐந்து வருடங்கள் நான் பல்கலைக்கழம் போகும் நாட்களில் கட்டுப்பெத்தையில் ஒரு சிங்களவரின் வீட்டில்த்தான் தங்கியிருந்தேன். சீ. வீ.குணரத்திண தற்கொலைத்தாக்குதலில் கொல்லப்பட என்னையும் இன்னும் 60 எனது சக தோழர்களையும் மொரட்டுவைப் பொலீசில் வைத்து மூன்றுநாள் நல்ல சாப்பாடு தந்தவங்கள். எங்களைப் புலிகளெண்டும், அமைச்சர் கொல்லப்பட்டதற்கு கொண்டாட்டம் நடத்துகிறோம் என்றும் பொலீசில் காட்டிக்கொடுத்தது மட்டுமல்லாமல் எங்கள் விடுதி அறைகளுக்குப் பொலீச்காரரைக் கூட்டிக்கொண்டு வந்ததும் என்னுடன் 5 வருடம் படித்த சிங்கள நண்பர்கள்தான். மூன்று நாட்கள் முடிந்து நான் திரும்பி வந்தபோது எனது புத்தகங்கள் உடுப்புகள் எல்லாம் எனது அறையிலிருந்து எடுத்து வெளியே குவித்து எரிக்கப்பட்டிருந்தது. இறுதியாண்டுப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த எங்களுக்கு அப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிடிபடாது தப்பிய தமிழர்கள்தான் "குப்பியெடுத்து" எங்களைக் கரை சேர்த்தார்கள்.

பல்கலைக்கழகத்தில் புலிகள் புகுந்து விட்டார்கள், அவர்களை இன்றிரவே வெட்ட வேண்டும் என்று மாணவர் சங்கம் உற்பட அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு என்று பலகலைக்கழக சுவரெல்லாம் எமது புகைப்படங்களுடன் சுவரோட்டிகள் வரைந்ததும் எனது சிங்கள நண்பர்கள்தான். இதற்குச் சாட்சி அன்றைய நாட்களில் வெளிவந்த திவயின, த ஐலணட் பத்திரிக்கைக் கட்டுரைகள்.

1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் சிங்களவருடன் சேர்ந்து சிறிலங்கா வெல்ல வேண்டும் என்று கூச்சலிட்டவர்களில் நானும் ஒருவன். அரவிந்தா, அர்ஜுனா, ஜயசூரிய என்றால் எனக்கு கீரோக்கள் மாதிரி. இதனாலேயே என் சக தமிழ் மாணவர்களுடன் அடிக்கடி தர்க்கமும் செய்திருக்கிறேன். சிங்கள அணியை ஆதரிக்கிறாயே ? நீ தமிழந்தானா? என்று எத்தனை பேர் கேட்டிருப்பார்கள். அப்போதெல்லாம், அரசியல் வேறு, விளையாட்டு வேறு என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொள்வேன்.ஆனால் இப்போது அது முடியாது. விளையாட்டு என்பது சிங்களவனின் கோரமுகத்தை மறைக்கப் பயன்படும் ஒரு முகமூடியான பிறகு அதைத் தெரிந்து கொண்டே ஆதரிக்க முடியவில்லை.

நீங்கள் சொல்லிய அந்த 83 கலவரங்கள், உங்கள அப்பா ஒரு சிங்களவரால் காப்பற்றப்பட்டது எல்லாமே நானும் கேள்விப்பட்டவைதான். அந்த நன்றியுணர்ச்சியில் 83 கலவரத்தை செய்தவர்களே அந்தச் சிங்களவர்தான் என்பதையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது.எல்லாச் சிங்களவருமே நல்லவர்களாக இருந்தால் நாங்கள எதற்கு இவ்வளாவு காலமும் இவ்வளவு கஷ்ட்டங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோ

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

உங்கள் அனுபவத்தில் சில பகுதிகள் எனக்கும் நேர்ந்திருக்கின்றன. பிறந்ததிலிருந்து 83 கலவரம் வரைக்கும் நான் இருந்தது கொழும்பில்தான். எங்களுக்குத் தெரிந்த பல சிங்கள‌ முகங்கள் கலவரத்தின்போது முன்னுக்கு நின்று கொள்ளை, கொலை மற்றும் தீவைப்புகளில் ஈடுபட்டது கண்கொள்ளாக்காட்சி. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது கொழும்பிலும், பிற பகுதிகளிலும் தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே பலர் சிறைபிடிக்கப்படுகின்றார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலர் இன்னமும் சிங்களவர்களோடு சேர்ந்து இலங்கைத் தீவை மீண்டும் சொர்க்க புரியாக மாற்றலாம் என்று கனவு காண்கின்றார்கள்.

:rolleyes::rolleyes:

தும்பளையான்,

எனக்குச் சிங்களவர்களைப்பற்றி என்ன தெரியும் என்று கேட்கிறீர்கள். நல்லது, உங்கள் திருப்திக்காக சில தகவல்களைத் தருகிறேன். நான் பிறந்தது 1973. கொழும்பில் வாழத்தொடங்கியது 1974. அன்றிலிருந்து நான் இறுதியாக அவுச்த்திரேலியா வரும்வரையிலும்(2002) நான் படித்தது, வளர்ந்தது, பல்கலைக்கழம் போனது எல்லாமே கொழும்பில்த்தான். இடையில் 3 வருடங்கள் மட்டக்களப்பில் வாழவும் சந்தர்ப்பம் கிடைத்தது வேறு கதை.கிட்டத்தட்ட 25 வருடங்கள் சிங்களவருடன் வாழ்ந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக ஐந்து வருடங்கள் நான் பல்கலைக்கழம் போகும் நாட்களில் கட்டுப்பெத்தையில் ஒரு சிங்களவரின் வீட்டில்த்தான் தங்கியிருந்தேன். சீ. வீ.குணரத்திண தற்கொலைத்தாக்குதலில் கொல்லப்பட என்னையும் இன்னும் 60 எனது சக தோழர்களையும் மொரட்டுவைப் பொலீசில் வைத்து மூன்றுநாள் நல்ல சாப்பாடு தந்தவங்கள். எங்களைப் புலிகளெண்டும், அமைச்சர் கொல்லப்பட்டதற்கு கொண்டாட்டம் நடத்துகிறோம் என்றும் பொலீசில் காட்டிக்கொடுத்தது மட்டுமல்லாமல் எங்கள் விடுதி அறைகளுக்குப் பொலீச்காரரைக் கூட்டிக்கொண்டு வந்ததும் என்னுடன் 5 வருடம் படித்த சிங்கள நண்பர்கள்தான். மூன்று நாட்கள் முடிந்து நான் திரும்பி வந்தபோது எனது புத்தகங்கள் உடுப்புகள் எல்லாம் எனது அறையிலிருந்து எடுத்து வெளியே குவித்து எரிக்கப்பட்டிருந்தது. இறுதியாண்டுப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த எங்களுக்கு அப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிடிபடாது தப்பிய தமிழர்கள்தான் "குப்பியெடுத்து" எங்களைக் கரை சேர்த்தார்கள்.

பல்கலைக்கழகத்தில் புலிகள் புகுந்து விட்டார்கள், அவர்களை இன்றிரவே வெட்ட வேண்டும் என்று மாணவர் சங்கம் உற்பட அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு என்று பலகலைக்கழக சுவரெல்லாம் எமது புகைப்படங்களுடன் சுவரோட்டிகள் வரைந்ததும் எனது சிங்கள நண்பர்கள்தான். இதற்குச் சாட்சி அன்றைய நாட்களில் வெளிவந்த திவயின, த ஐலணட் பத்திரிக்கைக் கட்டுரைகள்.

1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் சிங்களவருடன் சேர்ந்து சிறிலங்கா வெல்ல வேண்டும் என்று கூச்சலிட்டவர்களில் நானும் ஒருவன். அரவிந்தா, அர்ஜுனா, ஜயசூரிய என்றால் எனக்கு கீரோக்கள் மாதிரி. இதனாலேயே என் சக தமிழ் மாணவர்களுடன் அடிக்கடி தர்க்கமும் செய்திருக்கிறேன். சிங்கள அணியை ஆதரிக்கிறாயே ? நீ தமிழந்தானா? என்று எத்தனை பேர் கேட்டிருப்பார்கள். அப்போதெல்லாம், அரசியல் வேறு, விளையாட்டு வேறு என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொள்வேன்.ஆனால் இப்போது அது முடியாது. விளையாட்டு என்பது சிங்களவனின் கோரமுகத்தை மறைக்கப் பயன்படும் ஒரு முகமூடியான பிறகு அதைத் தெரிந்து கொண்டே ஆதரிக்க முடியவில்லை.

நீங்கள் சொல்லிய அந்த 83 கலவரங்கள், உங்கள அப்பா ஒரு சிங்களவரால் காப்பற்றப்பட்டது எல்லாமே நானும் கேள்விப்பட்டவைதான். அந்த நன்றியுணர்ச்சியில் 83 கலவரத்தை செய்தவர்களே அந்தச் சிங்களவர்தான் என்பதையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது.எல்லாச் சிங்களவருமே நல்லவர்களாக இருந்தால் நாங்கள எதற்கு இவ்வளாவு காலமும் இவ்வளவு கஷ்ட்டங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோ

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார், கிருபன், காட்டாறு, சபேசன், உதயம் !

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இதனை தான் பெரும் தன்மை என்று கூறுவார்கள் , ரகுநாதன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.