Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கு நடுவிரல் காட்டிய சனத் ஜெயசூரியா!

Featured Replies

எனினும் நம்மில் சிலர் இன்னமும் சிங்களவர்களோடு சேர்ந்து இலங்கைத் தீவை மீண்டும் சொர்க்க புரியாக மாற்றலாம் என்று கனவு காண்கின்றார்கள்.

மேலே ஒரு பக்கம் சபேசனும் தன் பங்கிற்கு ஏதோ விளையாட்டை நேரில் பார்த்தவர் போலவும், ஜெயசூரியா நடுவிரல் காட்டும் விதத்திற்கு இல்லாத ஒரு விபரத்தையும் புகுத்தி, வழமை போல் தனது இணையத்தளத்தை பரபரப்பாக்க பாடுபடுகின்றார். ஆதாரத்திற்கு தனது இணையத்தள முகவரியையே இணைத்து விடுவார். மேலும் இதில் வேடிக்கை என்னவென்றால் இதே செயல்முறையை புஸ்பவிஜி செய்யும் போது அவருக்கு பலமுறை எச்சரிக்கை விடும் நிர்வாகம் சபேசன் விடயத்தில் தாராளப் போக்கு.

மேலும் இங்கே எவரும் சிங்களவருடன் சேர்ந்து இலங்கையை சொர்க்கபுரி ஆக்கிவிடலாம் என்ற கனவுடன் வாழவில்லை. ஒருவேளை ஒன்றுபட்ட இலங்கையினுள் தான் தீர்வு என்ற நிலை வந்தால் நீங்கள் எல்லோரும் அதனை ஏற்காது ஒதுங்கி விடுவீர்களா?? தேவையில்லாத விடயங்களிலெல்லாம் கற்பனைக்் கதைகளை எல்லாம் பரப்பி நேரத்தை வீணாக்குவதை விட தேவையான விடயங்களில் இவற்றைப் பயன்படுத்தலாமே?? இதே தளத்தில் எத்தனை கட்டுக்கதைகள் பரப்பப்பட்டன.

ஒருமுறை சுவிசில் தமிழ்மொழி மூலமாக எல்லாப் பாடங்களும் படிப்பிக்கப் படுவதாகவும், அதில் வரலாற்றுப் பாடத்தில் விடுதலைப்புலிகளின் வரலாறு படிப்பிப்பதால், அதைத் தடை செய்யுமாறு இலங்கை அரசு சுவிஸ் அரசை கேட்டதன் பேரில், சுவிஸ் அரசும் வரலாற்றுப்பாடத்தை தடுக்கப் போவதாகவும் ஒருவர் செய்தி இணைத்தார். அந்தச் செய்தியையும் நம்பிப் பலர் அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று பதில்க் கருத்தும் பதிந்தனர். ஆனால் எவராவது ஒருவர் ஐரோப்பாவில் நாம் அகதியாகவுள்ள ஒரு நாட்டில், இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் எல்லாப் பாடத்தையும் தமிழ்மொழி மூலம் கற்பது சாத்தியமா என்று சிந்தித்தனரா?? எழுந்த மானத்திற்கு பதில்க் கருத்தினை மட்டும் எழுதினார்கள். பின்பு நான் இந்த விடயத்தை சுட்டிக் காட்டியவுடன் எவரும் பதில் எழுதவில்லை.. இதிலும் வேடிக்கை என்னவென்றால் நிர்வாகமும் இச்செய்தியை நம்பி விட்டு வைத்திருப்பது.

அதே போல் இலங்கை வங்கிகளில் இருக்கும் தமிழரின் பணங்கள் யாவும் அரசாங்கத்தால் யுத்தநிதிக்காக அபகரிக்கப் படப்போவதாக பலவருடங்களுக்கு முன்னரே கதையைக் கட்டி விட்டார்கள். ஆனால் இன்றுவரை எவரின் வங்கிக் கணக்கு அபகரிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாகவே ஒரு வங்கியிலிருக்கும் கணக்கை ஒருவர் பல வருட காலமாக பேணாத பட்சத்தில் அந்த வங்கிக் கணக்கை மூடி பணத்தை எடுப்பதற்கு வங்கிக்கு அதிகாரமுள்ளது. இது வங்கி விதிமுறைகளிலேயே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. அப்படியிருந்தும் தமது அறியாமைகளை காட்டுவது போல் கருத்தெழுதுவதிலேயே பலர் இருந்தது யாருக்கு அவமானம்.

சில வருடங்களுக்கு முன் சுவிஸ் தலைநகர் பேர்ணில் பொலிஸ் தலைமை அதிகாரி உள்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நலன்புரி அமைப்புகளின் உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் தமிழர்களுக்கான சந்திப்பு ஒன்று நடந்தது. அப்போ பொலிஸ் தலைமை அதிகாரி உட்பட வேறு சிலரும் சேர்ந்து சொன்ன விடயம் என்ன தெிரியுமா?? இங்கு ஆயிரக் கணக்கான சிங்கள மக்களும் இருக்கின்றார்கள். அவர்களால் எங்களுக்கு எந்தவித பிரைச்சினையும் இல்லை. சிங்கள மக்கள் எமது மக்களை அனுசரித்து எம்முடன் சேர்ந்து வாழ பழகிக் கொள்கின்றார்கள். ஆனால் இங்குள்ள பல தமிழ் மக்களால்த் தான் எமக்கு பிரைச்சினையே. சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிங்களமக்களால் தமிழ் மக்களுக்கு பிரைச்சினை என்பதை எம்மால் நம்ப முடியாமல் உள்ளது. எனவே தமிழ் மக்களாகிய நீங்கள் சுவிசில் பிரைச்சினை இல்லாது வாழ வேண்டுமாயின் மற்றவவர்களை அனுசரித்து வாழப் பழகிக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. இதை ஏனைய தமிழ் உறவுகளுக்கும் தெரியப்படுத்தி விடுங்கள் என்பதே. ஆனால் இன்றுவரை இந்தநிலை இங்கு மாறவில்லை என்பது தான் வேதனையான விடயம்.

அடுத்தவனை அவமானப்படுத்துவதாக நினைத்து ஆதாரமில்ா விடயங்களில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வதால் எம்மை நாமே மற்றவர்களின் பார்வையில் தரம் தாழ்த்திக் கொள்கின்றோம். சிங்கள அரசின் கொடுமைகளை ஆதாரத்தடன் வெளிக்கொணர எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அதைச் செய்யலாம். கனடாவில் கிரிக்கெட் போட்டி நடந்தபோது வெளியில் இருந்து எமது மக்கள் தமது எதிர்புக்களைத் தெிரிவித்தார்கள் . அது சரியானதே. ஆனால் மைதானத்தில் நின்று மற்ற கிரிக்கெட் இரசிகர்களுக்கும் இடைஞ்சலாக எமது மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபடும் போது, அது ஏனைய நாட்டு இரசிகர்களுக்கு எரிச்சலைத் தான் உண்டு பண்ணும். பல விடயங்களில் எமது போராட்டத்திற்கு ஏனையவர்களின் ஆதரவை திரட்டுவதற்குப் பதிலாக, அவர்களின் ஆத்திரத்தை தான் எமது தவறான பல நடவடிக்கைகளால் திரட்டியுள்ளோம். இதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு செயற்பட்டால் எமக்கும் விடிவு நிச்சயம்.

Edited by Vasampu

  • Replies 107
  • Views 15.1k
  • Created
  • Last Reply

ஜெயசூரியா தனது இனவாதத்தைக் காட்டும்போது அதனை ஒரு தமிழன் படமெடுத்து வெளிக்கொண்டுவர இங்கே கிரிக்கெட் மோகத்தில் இலங்கை கிரிக்கெட் அணிமீது இருக்கும் மோகத்தில் உள்ள எம்மவர்களிற்கு அது பொறுக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அடியடா சக்கை , அம்மன் கோயில் புக்கை எண்டானாம் .

  • கருத்துக்கள உறவுகள்

இதனை தான் பெரும் தன்மை என்று கூறுவார்கள் , ரகுநாதன் . :rolleyes:

சிறி, நீங்கள் எதைப் பெருந்தன்மை என்று கூறுகிறீர்கள் ? புரியவில்லையே ?!

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயசூர்யா ஓய்வு பெறும் வயதுக்கு வந்து விட்டார் அதனால் அவர் அடுத்த பஸ்(அரசியல்)பிடிக்கப்பாக்கிற

ார்!

அடியடா சக்கை , அம்மன் கோயில் புக்கை எண்டானாம் .

எங்கை...... எங்கை........

  • கருத்துக்கள உறவுகள்

இது பெருந்தன்மை

புக்கைக்கு அடுத்த பொங்கல் மட்டும் பொறுக்கவும் .

  • கருத்துக்கள உறவுகள்

இது பெருந்தன்மை

புக்கைக்கு அடுத்த பொங்கல் மட்டும் பொறுக்கவும் .

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இங்கே எவரும் சிங்களவருடன் சேர்ந்து இலங்கையை சொர்க்கபுரி ஆக்கிவிடலாம் என்ற கனவுடன் வாழவில்லை. ஒருவேளை ஒன்றுபட்ட இலங்கையினுள் தான் தீர்வு என்ற நிலை வந்தால் நீங்கள் எல்லோரும் அதனை ஏற்காது ஒதுங்கி விடுவீர்களா?? தேவையில்லாத விடயங்களிலெல்லாம் கற்பனைக்் கதைகளை எல்லாம் பரப்பி நேரத்தை வீணாக்குவதை விட தேவையான விடயங்களில் இவற்றைப் பயன்படுத்தலாமே?? இதே தளத்தில் எத்தனை கட்டுக்கதைகள் பரப்பப்பட்டன.

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு எப்படியான தீர்வு கிடைத்தால் அமைதியாக வாழலாம் என்பதையும் கூறிவிட்டால் நல்லது.

1. அதிக அதிகாரங்கள் கூடிய வட-கிழக்கு இணைந்த மாகாண சபை

2. உள்ளக சுயநிர்ணய உடைய (விரும்பினால் பிரியக்கூடிய உ+ம்: கியூபெக்) அதிகாரங்கள் நிறைந்த மாநில சுயாட்சி

3. ஒரு நாடு, இரு தேசங்கள் என்ற அமைப்பு முறை (இராணுவ, பொருளாதார, வெளியுறவு தவிர்ந்த அனைத்தும் தனித்தனியான தேசங்களில்)

தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்கக்கூடிய எந்தவோர் தீர்வையும், சர்வதேச நாடுகள் வற்புறுத்தினால் கூட, சிங்கள அரசு தரப்போவதில்லை. எனவே ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் கண்ணியமான முறையில், அமைதியாக சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை. சிலவேளை மலையகத் தமிழர்கள் போல் உரிமைகள் அற்று சாதாரண மக்கள் வாழும்போது, அரசியல் தலைவர்கள் பணம் பெருக்கி வாழக்கூடிய நிலை வரலாம். அப்படியான நிலையில் இலங்கைத் தீவு சொர்க்கமாகத் தோன்றலாம்.

பி.கு. சனத் ஜெயசூரியா நடு விரலைக் காட்டினாரா, இல்லையா என்பது கிறிக்கெற் பார்க்கப் போனவர்களுக்குத்தான் தெரியும். சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைக் காட்ட, காசு கொடுத்துக் கிறிக்கெற் பார்க்கப் போவதும் ஒரு வழிதான் போலுள்ளது.

Edited by kirubans

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதின அனைத்து உறவுகளுக்கும் நன்றி. நான் எல்லா சிங்களவர்களும் நல்லவர்கள் எண்டோ அல்லது அவர்களுடன் இணைந்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு எண்டோ கூற வரவில்லை. ஆனால் தமிழ்த்தேசியத்தலைமை கூட முன்னர் நடந்த சமாதானப் பேச்சுக்களின் போது சமஸ்டி முறைத் தீர்விற்கு இணங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது :rolleyes: .

ரகு அண்ணை, உங்களுக்கு அப்பிடிப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம், மற்றவர்களுக்கும் அப்பிடி நடந்திருக்கு. அது உங்களுக்கு வாய்த்த நண்பர்களால் எர்த்பட்டது துரதிர்ச்ச்டமானது எண்டும் சொல்லலாம் :D . ஆனால் என்ன பொறுத்த வரையில என்னோட படித்த பழகிய சிங்கள மாணவர்கள், நண்பர்கள் மிகவும் நல்லவர்கள். நான் ஏன் தமிழர்கள் ஆயுதம் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், தமிழர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டார்கள் என அனைத்து பின்புலங்களையும் அவர்களுக்கு தெளிவாக விளக்கியிருக்கிறேன். அவ்வாறான விளக்கங்களைக்க் கேட்ட பின்னர் எத்தனையோ பேர் எம்முடைய போராட்டம் உண்மையிலேயே நியாயமானதுதான் எனக்கூறியிருக்கிறார்கள். சிலர் அவர்கள் கேட்பதை நியாயப்படி அவர்களுக்கு கொடுத்துவிட்டு நாம் தெற்கை முன்னேற்றுவோம் அவர்கள் தமது ஈழத்தை முன்னேற்றடும் எண்டு கூடக்கூறி இருக்கிறார்கள். சிங்களவர்கள் பார்க்கும், வாசிக்கும், கேட்கும் செய்தி ஊடகங்கள் அனைத்துமே தமிழர் விரோத போக்கைக் கடைப்பிடிப்பவை. அவர்களுக்கு எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை, தேவையை எடுத்துக் கூறும் போது நிச்சயம் மாற்றம் தெரியும். உதாரணத்திற்கு அண்மையில் ஜனக பெரேரா கொல்லப்பட்ட போது இவர் ஏன் இலக்கு வைக்கப்பட்டார் என இங்குள்ள பலரும் யோசித்தார்கள், காரணம் அவரின் மகன் எனது பல்கலையில் தான் முதலாவது வருடம் படிக்கிறார். அப்போது என்னைக் கேள்விகேட்ட பலருக்கும், யார் செய்தார்கள் எனத்தெரியாது ஆனால் அவர் யாழ் குடாநாட்டிற்குப் பொறுப்பாக இருந்த காலகட்டத்திலேயே தான் பாடசாலை மாணவி கிருஷாந்தி உட்பட பல குடாநாட்டு இளைஞர் யுவதிகளுக்கு செம்மணியில் நடந்ததையும் அதற்க்கு காரணமாக இருந்தவர் அவர் என்பதையும் தெளிவு படுத்தினேன். செம்மணி என ஒரு இடம் இருந்ததோ அங்கு நடந்ததோ பலருக்குமே தெரியவில்லை. இவ்வாறான விளக்கத்திற்குப் பின்னர் அப்பாவித் தமிழர்களைக் கொல்லும் அரசிற்கு சிங்கள மக்கள் ஏன் ஆதரவளிக்கிறார்கள் எனக் கேட்டபொழுது அவர்கள் சொன்ன பதிலின் மூலம் உண்மையை அவர்கள் ஒருபோதும் கேட்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகியது. எனது கருத்தின் படி அநேக சிங்கள மக்களுக்கு தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தன்மை தெரியாது. விசேடமாக வளர்ந்து வரும் இளையதலை முறையினர் ஏன் தமது அரசு இவ்வளவு செலவில் போரை நடத்துகிறது என்ற கேள்விக்குக் கூட விடை தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இப்படியானவர்கள் உண்மையை அறியும் போது அவர்களே தமது இனவாத அரசுகளுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தி விடுவார்கள் என்பது ஆனது நம்பிக்கை. சமாதான காலத்திலே எத்தனையோ நண்பர்கள் வாகனம் ஒழுங்கு செய்து விடுமுறையில் யாழ் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான போரின் கொடிய முகத்தினையும் அதனால் இழக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட சொத்துக்களையும் காட்டியபோது அவர்களும் போரின் கொடுமையை உணரக் கூடியதாக இருந்தது. இவ்வாறு உண்மையை காண அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் போது நிச்சயம் அவர்களும் எமது தரப்பு நியாயங்களை நிச்சயம் அறிவர். எத்தனையோ பேர் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பைப் பார்த்து வியந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு வன்னியிலே மலசலகூடம், தண்ணீர்த்தொட்டி, காரியாலயம் என எல்லாவற்றிக்கும் மூன்று மொழிகளிலும் அறிவிப்புப் பலகை போடப்படிருந்ததைக் கண்டு வியந்தார்கள். அதிலும் சிங்களத்திலே எழுதப்பட்டவற்றில் ஒருவித தவறும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். நானும் தென்பகுதி அரச அலுவலகங்களில் தமிழ் படும் பாட்டைச் சொல்லத்தவறவில்லை.

நீங்கள் சொன்னதுபோல பஸ்சிலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் என்னையும் "கொட்டித" எண்டு கேட்டிருகிறாங்கள். நானும் சமாளிதுப்போட்டு எண்ட பாட்டில போனதுதான். ஆனால் அதைவைத்துக்கொண்டு அனைவரையும் இனவாதிகள் எண்டு முத்திரை குத்துவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதாரணத்திற்கு பல தமிழர்கள், நான் அறிய பிரித்தானியாவில் கடனட்டை மோசடியில் ஈடுபட்டிருக்கீனம். அதவச்சுக்கொண்டு தமிழர் எல்லாரும் மோசடி பேர் வழிகள் எண்டு சொல்ல ஏலாதுதானே :( .

இறுதியா, நான் உங்கள நிரூபிக்கச் சொல்லிக் கேட்டது ஏன் எண்டால் முதல் பதிவில நீங்கள் நிரூபிக்கப்பட்டு விட்டது எண்டு சொல்லியிருந்தீர்கள் அதோட பல ஊடகங்களில வெளிவந்த செய்தி எண்டும் போடிருந்தீங்கள் அதுதான் :D . நான் நம்பாட்டில் அந்த செய்தி பிழை எண்டும் இல்லை நீங்கள் நம்பிறதுதான் சரி எண்டும் இல்லை. எனக்கு இலங்கை அணியின் மீது எந்தவித மோகமும் இல்லை நான் சனத்தின் பெரிய விசிறியும் இல்லை :D .

எனது கருத்துப்படி சனத் விரலைக் காட்டியிருக்கலாம் அல்லது காட்டாமல் விட்டும் இருக்கலாம் ஆனால் அதைப் படம் எடுக்க வேண்டுமாயின் வீரர்கள் ஐம்பது அல்லது நூறு அடித்த பின்னர் மட்டையைத் தூக்கிகாட்டுவது போல விரலையும் தூக்கிக் காட்டியிருக்க வேண்டும் :rolleyes: . அப்படி படம் எடுக்க வேண்டி இருப்பின் அதற்க்கு சரியான நிறுத்தி (stand) மற்றும் தரமான வில்லைதொகுதி (lence), சரியான கோணம் right angle) அவசியம். அத்துடன் சனத்தின் களத்தடுப்பு வியுகமும் (fielding position) கவனிக்கப் பட வேண்டும் :lol: . புகைப்படதுறையிலே ஈடுபாடு இருந்தால் விளங்கும் என நினைக்கிறேன். இந்த ஏற்பாடுகளோடு யாரும் அங்கே சென்றிருப்பர்களா என்பது கேள்விக்குறியே. அத்துடன் இவாறு சென்றிருப்பினும் முழு விளையாடையும் அவதானத்துடன் கேமராவும் கையுமாகப் பாத்திருக்க வேண்டும்.

எனது கருத்துப்படி

1)படம் சனத் சக வீரருக்கு களத்தடுப்பு ஆலோசனை சொல்லும் போது எடுக்கப் பட்டிருக்கலாம்.

2)வர்ணனையாளருடன் கதைத்திருக்கலாம்

3)கன்னத்திலே கை வைத்ததை தம்மைப் பார்த்து விரலைக் காட்டுவதாக பார்க்கப்போனவர்கள் நினைத்திருக்கலாம்

4)விரலைக் கூடக் காட்டியிருக்கலாம்

ஆனால் எதுவுமே நிரூபிக்கப்படாமல் ஒரு படத்தினை மட்டும் வைத்துக்கொண்டு எந்த முடிவுக்கும் வர முடியாது :D .

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தமிழ்த்தேசியத்தலைமை கூட முன்னர் நடந்த சமாதானப் பேச்சுக்களின் போது சமஸ்டி முறைத் தீர்விற்கு இணங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு திருத்தம்.

சமஸ்டி முறைத் தீர்வை ஆராயத்தான் இணங்கியிருந்தனர்.

Norwegian Deputy Foreign Minister Vidar Helgesen said the parties had decided to explore a political solution founded on internal self-determination based on a federal structure within a united Sri Lanka.

5) நடுவர் பார்க்காமல் இரண்டு நடுவருக்கும்.. மைதானம் முழுவமுத் சுற்றியிருக்கின்ற ஒளிப்பதிவுக்கருவிகளுக்கும் கருவிகளுக்கும் மறைத்து அவர் இனங்கண்டுகொண்ட ஆர்ப்பாட்ட நோக்கத்தோடு கட்டணம் செலுத்தி உட்புகுந்த தமிழ் இளைஞர்களை நோக்கி அவர் செய்த ஆபாச சைகையாக இருக்கலாம்..

6) தாங்கமுடியாத காதுக்குடைச்சலை நாகரீகமாக..குடைந்திருக்கலாம்

..

இப்படி ஆயிரம் ஊகங்கள் செய்வதல்ல ஊடகதர்மம் உள்ளத்தால் முழுமையான தமிழ்உணர்வாளன்தான் நானும்..

நான் இல்லை அப்படியான புகைப்படமாக இது இருக்க சாத்தியமில்லை என்று சொன்னேன்.. அதை மறுத்து சொல்ல யாராலும் எந்த சான்றையும் பெற முடியவில்லை. இல்லை நான் நேரே பார்த்தேன் என்று யாராலும் நிச்சயமாக ஊடகத்திற்கு சொல்லமுடியவில்லை. இந்த புகைப்படத்தை வைத்து குற்றசாட்டை மேற்கொள்வது எந்தவகையில் சாத்தியமென்று எனக்கு புரியவில்லை. உண்மையில் அவ்வாறு நடந்து கொண்டிருந்தால் அவர் செயல் கண்டனத்துக்கு மட்டுமல்ல விளையாட்டுத்துறைக்கு விளைவிக்ககூடிய களங்கத்துக்குரியது. ஐ.சி.சி மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கூட அவருக்கு அபதாரம் விதிதி;திருக்கும். வேறு ஒருவரும் இதைப் பார்க்க சந்தர்ப்பமில்லை நாங்கள் மட்டும்தான் பார்த்தோம் என்று யாரும் சொன்னால் நான் ஏற்றுக்கொள்கிறேன். இது வாதமல்ல கருத்து. இது கருத்துக்களம்தானே என் கருத்தை சொல்லியிருக்கிறேன்.உண்மையில

1)படம் சனத் சக வீரருக்கு களத்தடுப்பு ஆலோசனை சொல்லும் போது எடுக்கப் பட்டிருக்கலாம்.

2)வர்ணனையாளருடன் கதைத்திருக்கலாம்

3)கன்னத்திலே கை வைத்ததை தம்மைப் பார்த்து விரலைக் காட்டுவதாக பார்க்கப்போனவர்கள் நினைத்திருக்கலாம்

4)விரலைக் கூடக் காட்டியிருக்கலாம்

பேசாமல் வாக்கெடுப்பு நடத்தி முடிவுசெய்வமா?? அதுதான் சனநாயகம்

2)வர்ணனையாளருடன் கதைத்திருக்கலாம்

போட்டி நடக்கேக்கில வர்ணனையாளருடன் கதைக்கலாமோ அண்ண? நான் அறிய போட்டி நடக்கமுதலும் , முடிஞ்சாபிறகும் தானே மைக்க கோண்டே நீட்டுறவ?

3)கன்னத்திலே கை வைத்ததை தம்மைப் பார்த்து விரலைக் காட்டுவதாக பார்க்கப்போனவர்கள் நினைத்திருக்கலாம்

என்ர கண்ணுக்கு கன்னத்தில விரல் பட்டதா தெரியல

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு திருத்தம்.

சமஸ்டி முறைத் தீர்வை ஆராயத்தான் இணங்கியிருந்தனர்.

ஆராய இணங்கி இருக்கினம் எண்டால், அந்தத் தீர்வில அவர்களுக்கு ஒரு விருப்பம் இருந்திருக்கத்தானே வேணும்? :( இல்லாவிட்டால் மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ரீதியில நடந்த பேச்சுவார்த்தைகளில் அப்படிக் கூறியிருக்க மாட்டினம் தானே? உங்களுக்கு ஒரு விஷயத்தில விருப்பம் இருந்தாத்தானே அதைப்பற்றி ஆராய வெளிகிடுவியல்? :)

5) நடுவர் பார்க்காமல் இரண்டு நடுவருக்கும்.. மைதானம் முழுவமுத் சுற்றியிருக்கின்ற ஒளிப்பதிவுக்கருவிகளுக்கும் கருவிகளுக்கும் மறைத்து அவர் இனங்கண்டுகொண்ட ஆர்ப்பாட்ட நோக்கத்தோடு கட்டணம் செலுத்தி உட்புகுந்த தமிழ் இளைஞர்களை நோக்கி அவர் செய்த ஆபாச சைகையாக இருக்கலாம்..

6) தாங்கமுடியாத காதுக்குடைச்சலை நாகரீகமாக..குடைந்திருக்கலாம்

..

இப்படி ஆயிரம் ஊகங்கள் செய்வதல்ல ஊடகதர்மம் உள்ளத்தால் முழுமையான தமிழ்உணர்வாளன்தான் நானும்..

நான் இல்லை அப்படியான புகைப்படமாக இது இருக்க சாத்தியமில்லை என்று சொன்னேன்.. அதை மறுத்து சொல்ல யாராலும் எந்த சான்றையும் பெற முடியவில்லை. இல்லை நான் நேரே பார்த்தேன் என்று யாராலும் நிச்சயமாக ஊடகத்திற்கு சொல்லமுடியவில்லை. இந்த புகைப்படத்தை வைத்து குற்றசாட்டை மேற்கொள்வது எந்தவகையில் சாத்தியமென்று எனக்கு புரியவில்லை. உண்மையில் அவ்வாறு நடந்து கொண்டிருந்தால் அவர் செயல் கண்டனத்துக்கு மட்டுமல்ல விளையாட்டுத்துறைக்கு விளைவிக்ககூடிய களங்கத்துக்குரியது. ஐ.சி.சி மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கூட அவருக்கு அபதாரம் விதிதி;திருக்கும். வேறு ஒருவரும் இதைப் பார்க்க சந்தர்ப்பமில்லை நாங்கள் மட்டும்தான் பார்த்தோம் என்று யாரும் சொன்னால் நான் ஏற்றுக்கொள்கிறேன். இது வாதமல்ல கருத்து. இது கருத்துக்களம்தானே என் கருத்தை சொல்லியிருக்கிறேன்.உண்மையில

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு எப்படியான தீர்வு கிடைத்தால் அமைதியாக வாழலாம் என்பதையும் கூறிவிட்டால் நல்லது.

1. அதிக அதிகாரங்கள் கூடிய வட-கிழக்கு இணைந்த மாகாண சபை

2. உள்ளக சுயநிர்ணய உடைய (விரும்பினால் பிரியக்கூடிய உ+ம்: கியூபெக்) அதிகாரங்கள் நிறைந்த மாநில சுயாட்சி

3. ஒரு நாடு, இரு தேசங்கள் என்ற அமைப்பு முறை (இராணுவ, பொருளாதார, வெளியுறவு தவிர்ந்த அனைத்தும் தனித்தனியான தேசங்களில்)

தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்கக்கூடிய எந்தவோர் தீர்வையும், சர்வதேச நாடுகள் வற்புறுத்தினால் கூட, சிங்கள அரசு தரப்போவதில்லை. எனவே ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் கண்ணியமான முறையில், அமைதியாக சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை. சிலவேளை மலையகத் தமிழர்கள் போல் உரிமைகள் அற்று சாதாரண மக்கள் வாழும்போது, அரசியல் தலைவர்கள் பணம் பெருக்கி வாழக்கூடிய நிலை வரலாம். அப்படியான நிலையில் இலங்கைத் தீவு சொர்க்கமாகத் தோன்றலாம்.

பி.கு. சனத் ஜெயசூரியா நடு விரலைக் காட்டினாரா, இல்லையா என்பது கிறிக்கெற் பார்க்கப் போனவர்களுக்குத்தான் தெரியும். சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைக் காட்ட, காசு கொடுத்துக் கிறிக்கெற் பார்க்கப் போவதும் ஒரு வழிதான் போலுள்ளது.

ஒன்றுபட்ட இலங்கையினுள் தான் தீர்வு என்ற நிலை வருமாயின் குறைந்த பட்சம் மாநிலங்களுக்கான அதிக அதிகாரங்கள் கொண்டதும் அனைத்து மக்களிற்கும் சமமான உரிமைகளுடனான தீர்வை ஏற்றுக் கொள்ளலாம். அது போல் தற்போதய நிலையில் வெளிநாடுகளின் பரிந்துரைகளை இலங்கை அரசு தொடர்ந்து நிராகரித்துக் கொண்டேயிருப்பதும் முடியாத விடயம். அதனால் ஒரு கட்டத்தில் இலங்கை அரசு தமிழருக்கு உரிய உரிமைகளை வழங்கியே தீர வேண்டிய கட்டாயத்தினுள் வந்தே ஆக வேண்டும். இல்லையேல் நாடு சில வெளிநாடுகளின் உதவியோடு துண்டாடப்படுவதற்கு அரசே வழி சமைத்தது போல் ஆகிவிடும். இதைப் பல சிங்கள புத்திஜீவிகள் புரிந்தே வைத்திருக்கின்றார்கள்.

போட்டி நடக்கேக்கில வர்ணனையாளருடன் கதைக்கலாமோ அண்ண? நான் அறிய போட்டி நடக்கமுதலும் , முடிஞ்சாபிறகும் தானே மைக்க கோண்டே நீட்டுறவ?

போட்டி நடக்கும் போது குறிப்பிட்ட சில வீரர்களுடன் வர்ணனையாளர் கருத்துப் பரிமாறுவது வழமையான ஒன்று. இதை நீங்கள் அறியாமல் இருந்திருக்கலாம். அதுபோல் போட்டிகள் முடிந்த பின் மைக்கை நீட்டிப் பிடித்தபடி வீரர்களை அணுகுபவர்கள் ஊடகவியலாளர்கள் அவர்கள் வர்ணனையாளர்களல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணியில் பலரிருக்க ஏன் ஜெயசூர்யாவில் மட்டும் இந்த குற்றச்சாட்டு? அதுவும் இவ்வளவு காலமும் இல்லாமல் இப்போது ஏன்?

இதைத்தான் நெருப்பு இல்லாமல் புகையாது என்பார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

:( தும்பளையான்,

அருமையான கருத்து. நாங்கள் புலிகளை சிறிதுகாலத்துக்கு பேசாமல் இருக்கச் சொல்லுவோம். நீங்கள் உங்களின் நல்ல நண்பர்கள் மூலமும், இன்னமும் நீங்கள் அவர்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் சிங்களவர்களையும் முயற்சித்து ஈழத்தை வென்றெடுக்கப் பாருங்கள்.

இந்த யோசனையை நாங்கள் முன்னமே விளங்கியிருந்தால் 56, 77, 83 கலவரங்களையோ, அல்லது அதுக்குப் பின் விடாது நடந்துவரும் இனப்படுகொலையையோ தடுத்திருக்கலாம் !!!

எனக்குக் கிடைத்த நண்பர்கள் ?! நீங்கள் சொல்லுவதுபோல நான் துரதிஷ்ட்டக்காரந்தான்.நீங்க

  • கருத்துக்கள உறவுகள்

ஆராய இணங்கி இருக்கினம் எண்டால், அந்தத் தீர்வில அவர்களுக்கு ஒரு விருப்பம் இருந்திருக்கத்தானே வேணும்? :( இல்லாவிட்டால் மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ரீதியில நடந்த பேச்சுவார்த்தைகளில் அப்படிக் கூறியிருக்க மாட்டினம் தானே? உங்களுக்கு ஒரு விஷயத்தில விருப்பம் இருந்தாத்தானே அதைப்பற்றி ஆராய வெளிகிடுவியல்? :icon_mrgreen:

இராஜதந்திரிகளின் பாஷையை விளங்கினால் உண்மை எதுவென்று விளங்கும். அன்ரன் பாலசிங்கம் இராஜதந்திர ரீதியில் கூறியதின் தார்ப்பரியத்தை விளங்காமல் தேசியத் தலைமை சமஸ்டிக்கு இணங்கிவிட்டதாக அர்த்தம் கொடுக்கக் கூடாது. அப்படியே இணங்கி இருந்தால் அதற்குப் பிந்தைய பேச்சுவார்த்தைகளில் சமஸ்டித் தீர்வை ஆராய்ந்து தற்போது சமஸ்டி ஆட்சியும் வந்திருக்கும். கருணா கூட புலிகளுடன் இருந்திருக்கலாம். ஏன் இப்படியெல்லாம் நடக்கவில்லை?

சிங்களவர்கள் சமஸ்டியைக் கூட தரமாட்டார்கள் என்பது அவர்கள் இணைந்த வடகிழக்கைப் பிரித்தபோது விளங்கியிருக்க வேண்டும். இப்போதும் ஒரு சில நல்ல சிங்கள நண்பர்கள் நமக்கு இருப்பதால் (உ+ம்: பிரையன் செனவிரத்தினா) சிங்களவர்கள் எமது பிரச்சினையினை உளப்பூர்வமாகத் தீர்க்க முயல்வார்கள் என்று நம்புவதும், அவர்களுடன் ஒரே நாட்டில் அன்னியோன்யமாக வாழலாம் என்று நம்புவதும் மடைமைத்தனம்............

நீங்க கிரிக்கெட் பார்த்து கனகாலமோ பல்லவன் அண்ணை? :( இந்தியாவில நடந்த IPL 20/20 போட்டி பார்த்திருகிரிங்கலோ? முக்கியமான வீரர்களின் உடலில் தொலைத்தொடர்பு சாதனம் பொருத்தப்பட்டு அவரோட கள நிலைமைகளை நேரடியா ஆராய்வினம். பந்து வீசுவதற்க்கிடயிலும் ஓவர்களின் இறுதியில் கள இடங்களை வீரர்கள் மாற்றும்போதும் கதைப்பினம். கதைக்கும் போது பந்து போட வெளிக்கிட்டால் கதைப்பதை நிறுத்திவிட்டு பந்து போட்ட பின்னர் தொடர்வீனம். வேணும் எண்டால் கிரிக்கெட் விளையாடுற, பாக்கிற ஆராயும் கேட்டுப்பாருங்கோ...

ஓமண்ணை , நான் கிரிக்கட் பார்க்கிறல , ஆர்வமும் இல்ல. எங்கட போராளிகள் களத்தில தொலைத்தொடர்பு சாதனத்தோட நிக்கிறத பாத்திருக்கிறன் ? ஆனா கிரிக்கட் களத்தில வீரர்கள் தொலைத்தொடர்பு சாதனத்தோட நிக்கிறத இப்ப தான் கேள்விப்படுகிறன் ?

தகவலுக்கு நன்றி அண்ணை

கள நிலைமைகளை நேரடியா ஆராய்வினம் :icon_mrgreen: கள நிலைமைகளை நேரடியா ஆராய்வினம் :)

ரகுனாதன்,

உங்களின் சிங்களவர்களுடனான அனுபவங்களில் 90% என்னுடன் ஒத்து போவன. சரியாக சொன்னீர்கள் நான் 25 வருடம் அவர்களுடனேயே இருந்து, கல்வி கற்று, ஒன்றாக வேலை பார்த்தவன்.

சிங்களவர்களின் கலை: தமிழ் இன எதிர்பின் வடிவம்

அவர்களின் கல்வி: எம் இன அழிப்பின் கருத்தியல்

அவர்களின் வரலாறு: எம்மை அழிக்க துணை போகும் ஆவணங்கள்

அவர்களின் விளையாட்டு: எம்மை அழிக்கும் அரசின் முக மூடி நாடகம்

அவர்களின் இருப்பை: எம் உயிர் வாழ்தலை கேள்விக்குட்படுத்தும் தர்க்கம்

பிரசன்ன விதானகே, சுனந்த தேச பிரிய, பிறையன் செனிவிரட்ன. விக்கிரமபாகு கருணாரட்ன போன்ற விரல் விட்டு எண்ண கூடியவர்களை தவிர்தால், அனைவரும் இனவாத அரசுக்கு துணையாகவும் அதாகவும் போகின்றவர்களே

ஓமண்ணை , நான் கிரிக்கட் பார்க்கிறல , ஆர்வமும் இல்ல. எங்கட போராளிகள் களத்தில தொலைத்தொடர்பு சாதனத்தோட நிக்கிறத பாத்திருக்கிறன் ?

போட்டி நடக்கேக்கில வர்ணனையாளருடன் கதைக்கலாமோ அண்ண? நான் அறிய போட்டி நடக்கமுதலும் , முடிஞ்சாபிறகும் தானே மைக்க கோண்டே நீட்டுறவ?

:(:):icon_mrgreen::(

தற்போது கொழும்பிலும், பிற பகுதிகளிலும் தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே பலர் சிறைபிடிக்கப்படுகின்றார்கள???. அவமானத்திற்கு உள்ளாகின்றார்கள். நல்ல இதயம் கொண்ட சிங்களவர்கள் ஏன் கட்சி பேதமின்றி இவற்றை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராட்டம் நடாத்தாமல் இருக்கின்றார்கள்? ஏன் நண்பர்களையே சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றார்கள்?

தமிழர்களை சமனாக நடாத்த பெரும்பான்மையான சிங்களைவர்களுக்கு சம்மதமில்லை.. பல நூற்றாண்டுகளாக விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட "இலங்கைத் தீவு சிங்கள பெளத்த மக்களுக்கே உரியது" என்ற கோட்பாட்டை புலிகள் மாத்திரமே கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்கள். அதனால்தான் புலிகளை அழிப்பதன் மூலம் தமிழர்களை உரிமையற்ற பிரஜைகளாக தமது காலடியில் போட்டு நசுக்கலாம் என்று படித்த/படிக்காத சிங்களவர்கள் நம்புகின்றார்கள்.

எனினும் நம்மில் சிலர் இன்னமும் சிங்களவர்களோடு சேர்ந்து இலங்கைத் தீவை மீண்டும் சொர்க்க புரியாக மாற்றலாம் என்று கனவு காண்கின்றார்கள்.

சிங்களவர்கள் சமஸ்டியைக் கூட தரமாட்டார்கள் என்பது அவர்கள் இணைந்த வடகிழக்கைப் பிரித்தபோது விளங்கியிருக்க வேண்டும். இப்போதும் ஒரு சில நல்ல சிங்கள நண்பர்கள் நமக்கு இருப்பதால் (உ+ம்: பிரையன் செனவிரத்தினா) சிங்களவர்கள் எமது பிரச்சினையினை உளப்பூர்வமாகத் தீர்க்க முயல்வார்கள் என்று நம்புவதும், அவர்களுடன் ஒரே நாட்டில் அன்னியோன்யமாக வாழலாம் என்று நம்புவதும் மடைமைத்தனம்............

மிகச்சரியான கருத்துக்கள்! பாராட்டுக்கள்!!!

ஒரு சிறு திருத்தம்!

சிங்களவர்கள் சமஷ்டியைக் கூட தரமாட்டார்கள் என்று சொல்வதை விட சமஷ்டியை தர தாமாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லலாம்.

விடுதலைபுலிகளின் கை இராணுவரீதியாக ஓங்கும் போது சில நாடுகளின் தலையீட்டாலும் நிர்ப்பந்தத்தாலும் சிங்களம் சமஷ்டி முறையை அளிக்க முன்வரும்.

ஆனால் அப்போது அது மிகவும் காலம் கடந்த முடிவாக இருக்கக்கூடும்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் கலை: தமிழ் இன எதிர்பின் வடிவம்

அவர்களின் கல்வி: எம் இன அழிப்பின் கருத்தியல்

அவர்களின் வரலாறு: எம்மை அழிக்க துணை போகும் ஆவணங்கள்

அவர்களின் விளையாட்டு: எம்மை அழிக்கும் அரசின் முக மூடி நாடகம்

அவர்களின் இருப்பை: எம் உயிர் வாழ்தலை கேள்விக்குட்படுத்தும் தர்க்கம்

பிரசன்ன விதானகே, சுனந்த தேச பிரிய, பிறையன் செனிவிரட்ன. விக்கிரமபாகு கருணாரட்ன போன்ற விரல் விட்டு எண்ண கூடியவர்களை தவிர்தால், அனைவரும் இனவாத அரசுக்கு துணையாகவும் அதாகவும் போகின்றவர்களே

:( மிக்க நன்றி நிழல்,

நீங்கள் சொல்லிய அந்த விரல் விட்டு எண்ணக்கூடிய சிங்களவர்களை விட வேறு எவருமே எமது போராட்ட நியாயத்தை ஏற்றுக்கொள்ளவோ அல்லது தாம் செய்வது ஒரு இன அழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை. அண்மைக்கால தேர்தல்களில் சிங்களவர்கள் வக்களித்த விதத்தைப் பார்க்கும் போது இது தெட்டத் தெளிவாகப் புரியும்.

எனது 25 வருடகால சிங்களவருடனான அனுபவத்தில் எவருமே எமது போராட்ட நியாயத்தை ஏற்றுக்கொண்டதாக என்னிடம் சொல்லவில்லை. ஆனால் தேவையில்லாமல் நீங்கள் சண்டை பிடிக்கிறீர்கள். உங்களால் தனிநாடு பெறமுடியாது. இது எமது நாடு என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனையிறவுத் தாக்குதல் நடந்த நாட்களிலும், முல்லைச்சமர் நடந்த நாட்களிலும், சீ.வீ.குணரத்திண கொல்லப்பட்ட நாட்களிலும் ஒற்றுமொத்த மொரட்டுவைப் பல்கலைக்கழகமே தமிழ் மாணவர்களைப் புலிகளாகப் பார்த்து நடந்து கொண்ட விதத்தை "எனக்குக் கிடைத்த துரதிஷ்ட்டவசமான சில நண்பர்கள்" என்று சொல்லிவிட்டு என்னல் இருக்க முடியாது.

சிங்கள இனவாதம் என்பது இன்று நன்கு பராமரிக்கப்பட்ட, அரச மயப்படுத்தப்பட்ட, செவ்வணே எண்ணெய் ஊற்றி வளர்க்கப்பட்ட ஒரு விருட்சம் என்பதை எம்மில் சிலர் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

வரலாற்றுத் திரிபு படுத்தல் என்பது பாலர் பாடசாலைப் புத்தகங்களினூடே ஆரம்பிக்கப்பட்டு எல்லாள துட்ட கைமுனு போரை சிங்கள இனத்தின் தமிழர் மீதான வெற்றியக நிறுவ முயலும் ஒரு சமூகம் தமிழர் சிலரின் "விளக்கப்படுத்தல்களால்" திருந்துமா என்று என்னால் சொல்லத் தெரியவில்லை.

எதுவுமே தெரியாத இந்தத் தலைமுறை என்று ஒன்றில்லை. அவர்களும் மிக தெளிவாகவே இனவாத சிந்தனையூட்டப்பட்டிருக்கிற

எனது 25 வருடகால சிங்களவருடனான அனுபவத்தில் எவருமே எமது போராட்ட நியாயத்தை ஏற்றுக்கொண்டதாக என்னிடம் சொல்லவில்லை. ஆனால் தேவையில்லாமல் நீங்கள் சண்டை பிடிக்கிறீர்கள். உங்களால் தனிநாடு பெறமுடியாது. இது எமது நாடு என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனையிறவுத் தாக்குதல் நடந்த நாட்களிலும், முல்லைச்சமர் நடந்த நாட்களிலும், சீ.வீ.குணரத்திண கொல்லப்பட்ட நாட்களிலும் ஒற்றுமொத்த மொரட்டுவைப் பல்கலைக்கழகமே தமிழ் மாணவர்களைப் புலிகளாகப் பார்த்து நடந்து கொண்ட விதத்தை "எனக்குக் கிடைத்த துரதிஷ்ட்டவசமான சில நண்பர்கள்" என்று சொல்லிவிட்டு என்னல் இருக்க முடியாது.

சிங்கள இனவாதம் என்பது இன்று நன்கு பராமரிக்கப்பட்ட, அரச மயப்படுத்தப்பட்ட, செவ்வணே எண்ணெய் ஊற்றி வளர்க்கப்பட்ட ஒரு விருட்சம் என்பதை எம்மில் சிலர் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

வரலாற்றுத் திரிபு படுத்தல் என்பது பாலர் பாடசாலைப் புத்தகங்களினூடே ஆரம்பிக்கப்பட்டு எல்லாள துட்ட கைமுனு போரை சிங்கள இனத்தின் தமிழர் மீதான வெற்றியக நிறுவ முயலும் ஒரு சமூகம் தமிழர் சிலரின் "விளக்கப்படுத்தல்களால்" திருந்துமா என்று என்னால் சொல்லத் தெரியவில்லை.

சிங்களவர்களின் இனவாதம் என்பது அவர்களின் குழந்தைப்பருவத்தில் இருந்தே தஹம் பாசல்கள் ஊடாகவும் (விகாரைகளில் நடத்தப்படும் பௌத்தமதக் கல்வி) பிரிவேனாக்கள் ஊடாகவும் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. அவர்களின் பிஞ்சு வயதில் விதைக்கப்படும் அந்த நஞ்சு வளர்ந்து விருட்சமாகி அவர்களை மிக மோசமான இனவாதிகளாக ஆக்கி விடுகிறது.

எனக்கு மிக நெருங்கிய சிங்கள நண்பர்கள் உண்டு, பல்கலைக்கழகங்கள் வரை கல்விகற்ற அவர்கள் தனிப்பட்ட ரீதியாக மிக அந்நியோன்யமாக பழக கூடியவர்கள் தான். ஆனால் தமிழரின் உரிமைகள் என்று வரும் போது அவர்கள் அனைவரும் அரசியல் குருடர்கள் போல் கருத்து வைப்பதையே பார்த்திருக்கிறேன். எனது கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பலர் பல வேளைகளில் மழுப்புவதுண்டு. ஆனால் இத்தனை வருடங்களாக அவர்களில் எவரும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் இனவாதத்தை மாற்றிக்கொண்டதையோ, மனமாற்றம் அடைந்தததையோ நான் பார்க்கவில்லை

எனது தமிழ் நண்பர் ஒருவர் கொழும்பில் சிங்கள் மொழி மூலமாகவே உயர்தரம் வரை கல்வி கற்றவர். அவரின் பாடசாலையில் சிங்கள இனவவாதத்தால் அவருக்கு ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களை என்னிடம் சொன்னதுண்டு.

அந்த நண்பர் சொன்ன ஒரு மகாவம்சக்கதை.

ஒரு நாள் துட்டகைமுனு (The one who established a Sinhala kingdom in Anuradhapura later on) முழங்கால்களையும் தலையும் மடக்கிக்கொண்டு சுருண்டு படுத்திருந்தானாம் அப்போது போதிய அளவு இடம் இருக்கிறதே ஏன் இப்படி சுருண்டு படுக்கிறாய் என்று கேட்டதற்கு துட்டகைமுனு சொன்னானாம், ஒரு பக்கம் தமிழர்களும் இன்னொரு பக்கம் கடலும் இருக்கிறது, நான் எப்படி கால்களை நீட்டி படுப்பது என்று

சிங்களவர்கள் கால்களை நீட்டி படுப்பதற்கு கூட தமிழர்கள் இடையூறாக இருக்கிறார்கள் என்னும் மகாவம்ச நஞ்சை ஐந்து வயதில் இருந்தே சிங்கள குழந்தைகளுக்கு பௌத்த மதக்கல்வி என்னும் பெயரால் விதைக்கும் ஒரு நாடு (Sri Lanka) எப்படி உருப்படும் என்று கதையை சொல்லி முடித்துவிட்டு எனது நண்பர் கேட்டார்.

மேலும் இதே மகாவம்சத்தில், துட்டகைமுனுவின் தாயார் விகாரமாதேவி துட்டகைமுனுவை வயிற்றில் சுமந்து கர்ப்பிணியாக இருந்த வேளையிலே, வழமையாக கர்ப்பிணிகளிடம் கேட்பது போல் உண்பதற்கு விருப்பமாக ஏதேனும் பொருள் வேண்டுமா என்று கேட்ட பொழுது, தமிழர்களின் இரத்தம் வேண்டும் என்று சொன்னதாக ஒரு கதை உள்ளது.

இப்படி பௌத்த மதக்கல்வி என்னும் பெயரால் மகாவம்சத்தின் இனவாத நஞ்சை பல நூறு வருடங்களாக குடித்துக் கொண்டிருக்கும் சிங்கள இனம் சீக்கிரமே திருந்திவிடும் என்று எதிர்பார்த்தால் தமிழர்களை விட முட்டாள்கள் உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே சனத் ஜெயசூரிய நடு விரலை காட்டியது எவ்வளவுக்கு உண்மையோ அவ்வளவுக்கு எமது பெடியள் களத்துக்கு உள் போய் மிகப்பெரிய அட்டகாசம் புரிந்து விளையாட்டை குழப்பியுள்ளார்கள். எமது சகோதரர்களின் அட்டகாசத்தால் தான் சனத் நடுவிரலை மீடியாவுக்கு தெரியாமலும் நாசுக்காக கையை காட்டினார் என்பது பல நண்பர்கள் ,உள்ளே சென்றவர்களின் நம்ப தகுந்த கருத்து. உள்ளே எம்மை விட பல சிங்களவர்கள் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் உட்பட பேசாமடந்தைகளாக இருந்தார்கள் என்பது தான் நிதர்சனம்.ஜெய சூரியா இனவாதியா இல்லையா என யாழ் கள உறுப்பினர்கள் நிர்ணயிக்கட்டும்..

அருமையான கருத்துக்களை வழங்கிய கிருபன், வசம்பு ,நிழலி, பல்லவன், ரகுநாதன், வெற்றிவேல் , மற்றும் பல நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

ஒரே ஒரு ஆதங்கம்: ஒரு சில பிறயன்களோ, அல்லது ஒரு சில விக்கிரமாகு கருணா ரட்ணாவால் எதையும் சாதிக்க முடியாது. அவ்வளவுக்கு சிங்கள மக்களின் நிலை. உ+ம்: தமிழ் செல்வன் அண்ணா இறந்த போது வெடி கொழுத்திய மக்களை உதாரணம் காட்ட முடியும் இவர்கள் எவ்வளவுக்கு இனவாதம் ஊட்டப்பட்டுள்ளார்கள் என.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.