Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூண்டோடு பதவி விலகுவர்: இந்திய அரசுக்கு தமிழக அனைத்துக் கட்சிகள் எச்சரிக்கை

Featured Replies

இரு வார கெடுவுக்குள் நடவடிக்கை- இல்லையேல் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர்: இந்திய அரசுக்கு தமிழக அனைத்து கட்சிக்கூட்டம் எச்சரிக்கை

[செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 07:48 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க இரு வார காலத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்றத்தின் 40 உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்று தமிழ்நாடு அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்த தமிழக அனைத்து கட்சிக்கூட்டம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தீர்மானங்கள் விவரம்:

தீர்மானம்: 1

இலங்கையில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிற இனப் படுகொலைக் கொடுமைக்கு உள்ளாகி ஆயிரக்கணக்கான தமிழ்க்குடும்பங்களில் பூவும் பிஞ்சும் போன்ற குழந்தைகள் கூட கொல்லப்பட்டு பூண்டற்றுப் போகிற அளவுக்கு நிலைமை நாளுக்கு நாள் பெருகி வருவதால் ஏற்கனவே கண்ணீர்க்கடலில் மிதக்கும் இலங்கைத் தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் தாக்குதலையும் கண்டு எங்களுக்கு அபயமளித்துக் காப்பாற்ற இந்த உலகில் நாதியே கிடையாதா? என்ற கவலையில், வாடி வதங்கி, இதற்கோர் விடிவு எப்போது ஏற்படும் என்று விழி கலங்கி வழி பார்த்து நிற்கின்றனர். இந்தப் போர் நிறுத்தப்பட்டு ஈழத்தில் அமைதியும் சகவாழ்வும் திரும்புவதற்கேற்ற நடவடிக்கைகளை இந்தியப் பேரரசு உடனடியாக எடுத்து அதனை நிறைவேற்றிட வேண்டும் என்று அனைத்து கட்சித் தலைவர்களின் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 2

இந்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி, வழங்கி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பக்கத்து நாடு என்ற முறையில் நல்லெண்ண அடிப்படையில் இந்திய அரசால் வழங்கப்படும் இவ்வகை உதவிகள் - இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தி தமிழர்களை அழித்திடவே - இலங்கை அரசால் பயன்படுத்தப்படுவதால் அவற்றை மத்திய அரசு உடனடியாக நிறுத்திட வேண்டுமென்று இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 3

இந்தத் தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவும் இலங்கையில் இரண்டு வாரக்காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிவிலக நேரிடும் என்பதை இந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது.

தீர்மானம்: 4

போர் நிறுத்தம் செய்யப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக இடம்பெயர்ந்து வாழ்வதற்கும், உணவு, உறையுள், மருந்து போன்றவற்றை வழங்குவதோடு, மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்வதற்கும் மத்திய அரசு முன்வரவேண்டுமென்று இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 5

மனிதாபிமான முறையில் பல்வேறு உதவிகளை வழங்க முன்வரும் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள் வேறு வழிகளில் திருப்பி விடப்படாமல், பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாகச் சென்றடைவதற்கு ஏற்ற வகையில் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளின் துணையினை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 6

வாழ்வாதாரம் தேடி கடலுக்குள் மீன் பிடித்திடச் செல்லும் தமிழக மீனவர்களை - இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குவதும், சிறைப்பிடித்து மனிதநேயமற்ற முறையில் நடத்துவதும், கருணை துளியுமின்றி சுட்டுக்கொல்வதுமான கொடுமைகள் - தொடர்ந்து நடைபெற்று வருவதை அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் மிகவும் கண்டிப்பதோடு மனித நாகரிகமற்ற, மனித உரிமைகளை முழுவதுமாக மீறுகின்ற இச்செயல்களுக்கு மத்திய அரசு உடனடியாக நீடித்த நிலையான தீர்வொன்றை எட்டி, நடைமுறைப்படுத்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தின் முடிவில் முதல்வர் கலைஞர் கருணாநிதி நன்றி தெரிவித்து பேசியதாவது:

என்னுடைய அழைப்பினையேற்று மிக முக்கியமானதும், நம்முடைய உயிரோடும் ஊனோடும் கலந்ததுமான தமிழ் இனத்தைக் காப்பாற்றுவதற்காக ஈழத் தமிழகத்தில் நடைபெறுகின்ற போர் நிறுத்தப்படுவதற்காக நீங்கள் அனைவரும் ஒன்றாக வந்திருந்து ஒருமித்த கருத்தை வழங்கி, இந்திய அரசுக்கு ஓர் உந்துதலையும், இலங்கை அரசுக்கு ஓர் எச்சரிக்கையையும் வழங்கிய இந்த நிகழ்ச்சி உள்ளபடியே நம்முடைய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு அத்தியாயம் என்பதை நான் எடுத்துக் கூறி,

இந்தத் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வேன் என்பதையும் - நம்முடைய அனைத்துக் கட்சிகளின் தலைவர்களது ஒத்துழைப்பைப் பெற்று அந்த முயற்சியிலே நாம் வெற்றி பெறுவோம் என்பதையும் இந்தக் கூட்டத்திலே எடுத்துச் சொல்லி, வருகை தந்து, வண்ண வண்ணக் கருத்துகளை வழங்கிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து இந்த அளவில் இந்தக் கூட்டத்தினை நிறைவு செய்கிறேன். வணக்கம் என்றார் கலைஞர் கருணாநிதி.

புதினம்

உலகத் தமிழினம் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த அறிவிப்பு. இதற்குக் காரணமான தமிழக உறவுகளைச் சென்றடையக்கூடிய அளவில் ஒவ்வொரு தமிழனும் தனது நன்றிகளைத் தெரிவிக்கக்கூடிய வழிகள் ஏதாவது இருந்தால் அறியத்தாருங்கள். (இந்தியப் பிரதமருக்கு தமிழகமக்கள் தந்தி அனுப்பிய முறைபோன்று, எங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா?)

  • தொடங்கியவர்

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க இரு வார காலத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்றத்தின் 40 உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்று தமிழ்நாடு அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்த தமிழக அனைத்து கட்சிக்கூட்டம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இந்து நாளிதழுக்கு கண்டனங்கள் !!! இன்றைய தி ஹிந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி எனும் ஊடக விபசாரி தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் ,அதற்கு ஆதரவான தமிழக மக்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் எழுச்சியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார்...

தலைப்பு........ தி டேஞ்சர்ஸ் ஒஃப் தமிழ் சாவினிஸம் .

ஏழ்மை காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்ணே பல மடங்கு இத்தகைய ஊடக விபசாரிகளை விட மேலானவர்...

இந்து நாளிதழுக்கு கண்டங்கள் அனுப்புவோம் சகோதரர்களே

தமிழன் ஒற்றுமை ஓங்கட்டும் ...தமிழர்கள் ஓரணியில் திரள்வது கண்டு ஓனாய்க்கூட்டம் ஓடட்டும்!!!

கண்டங்கள் அனுப்ப .... theditor@thehindu.co.in

Edited by வேலவன்

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மானம்: 3

இந்தத் தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவும் இலங்கையில் இரண்டு வாரக்காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிவிலக நேரிடும் என்பதை இந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது.

இந்த தீர்மானம் மத்திய அரசை , ஒரு நல்ல முடிவை நோக்கி நகர்த்தும் போல் ஒரு நம்பிக்கை ஏற்படுத்துகின்றது .

நன்றி கலைஞரே .

இதற்கு நன்றி தெரிவிற்கும் நடவடிக்கையை பொறுப்பானவர்கள் உடனடியாக ஏற்படுத்தவேண்டும். தலைவரின் அமைதி ஏன் என்று இன்றுதான் புரிகின்றது. அவர் மௌனித்தாலும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். எம் உறவு தேசம் என்றும் எம்மை கைவிடாது என்ற நம்பிக்கை பலிக்கும் நாள் விரைவில் . . . . .

நன்றி கலைஞரே. .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீர்மானம்: 3

இந்தத் தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவும் இலங்கையில் இரண்டு வாரக்காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிவிலக நேரிடும் என்பதை இந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது.

இந்த தீர்மானம் மத்திய அரசை , ஒரு நல்ல முடிவை நோக்கி நகர்த்தும் போல் ஒரு நம்பிக்கை ஏற்படுத்துகின்றது .

நன்றி கலைஞரே .

இந்த தீர்மானம் ஒரு புதிய கூட்டணியை நோக்கி தீர்வை நோக்கி செல்கின்றது.... :rolleyes:

இதற்க்காகத்தானே ஆக்கிரமிப்பாளனிடம் எம் தாய்நிலத்தை அன்பளித்தோம்,,,,,,,,,,,,,,,,,,

நன்றி எம் உறவுகளே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தமிழீழம் மலரும்

இன்று கடைத்தெருவில் ஒரு முதியோர் வாயிலிருந்து வந்ததில் .....

" ...... எங்கே தோற்றுப்போகப் போகிறோமோ? என்று இரவெல்லாம் நித்திரை கொள்ளா நாட்களாக இருந்தோம்!! தற்போது தான் தெரிகிறது .... இராணுவ வெற்றியல்ல! அரசியலில் நாம் வெண்று வருவதை ..."

விடிவு வெகு தொலைவிலில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீர்மானம் ஒரு புதிய கூட்டணியை நோக்கி தீர்வை நோக்கி செல்கின்றது.... :rolleyes:

இந்திய அரசியலுக்குள் எம்முடைய மூக்கை நீட்ட வேண்டிய தேவை இல்லை .

அல்லல் படும் ஈழத்தமிழர்களுக்கு , தமிழ் நாட்டில் இருந்து வரும் ஆதரவுகுரல்களுக்கு நாம் நன்றி தெரிவிப்பது தான் மனிதப் பண்பு .

எம் நன்றிகளை தமிழக உடன்பிறப்புகளுக்கு தெரிவிக்கும் அதேவேளையில், அன்றிலிருந்து இன்று வரை எவ்விடர் வந்த போதிலும் உரமாக நிற்கும் நெடுமாறன் ஐயா, வைகோ, திருமா, ராம்தாஸ் ஐயா போன்றவர்களுக்கு நன்றிகள் கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் மக்களே இன்னும் தொடரட்டும்

இந்து நாளிதழுக்கு கண்டனங்கள் !!! இன்றைய தி ஹிந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி எனும் ஊடக விபசாரி தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் ,அதற்கு ஆதரவான தமிழக மக்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் எழுச்சியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார்...

தலைப்பு........ தி டேஞ்சர்ஸ் ஒஃப் தமிழ் சாவினிஸம் .

ஏழ்மை காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்ணே பல மடங்கு இத்தகைய ஊடக விபசாரிகளை விட மேலானவர்...

இந்து நாளிதழுக்கு கண்டங்கள் அனுப்புவோம் சகோதரர்களே

தமிழன் ஒற்றுமை ஓங்கட்டும் ...தமிழர்கள் ஓரணியில் திரள்வது கண்டு ஓனாய்க்கூட்டம் ஓடட்டும்!!!

கண்டங்கள் அனுப்ப .... theditor@thehindu.co.in

நன்றி வேலவன்!

இந்த ஊடக விபச்சாரிகள் நடத்தும் 'இந்து' ('The Hindu') பத்திரிகையை வாங்காது தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!!!

Edited by vettri-vel

இந்த தீர்மானம் ஒரு புதிய கூட்டணியை நோக்கி தீர்வை நோக்கி செல்கின்றது.... :rolleyes:

ஏன் அவர்களின் அரசியலுக்குள் மூக்கை நுழைகின்றீர்கள் அவர்களின் அரசியல் வேறு நமக்கு தரும் ஆதரவு வேறு சற்றி புரிந்து கொன்டு பொறுப்பாக கருத்துகளை எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாயக உறவுகளே !!!!!

உங்கள் முயற்சி வெற்றிபெற வேண்டும் !!!!!

tamilnadu_20081014004.jpg

நன்றி உறவுகளே.... தானாடாவிட்டாலும் தன் தசையாடும்...

நன்றிகள் பல :rolleyes:

நன்றி தமிழக உறவுகளே!

தமிழக அரசியல் கட்சிகளின் முடிவு மகிழ்ச்சி தருகிறது.

ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகுவதை விட சிங்கள அரசிற்கு ஆதரவு தரும் இந்திரா காங்கிரஸின் ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தால் அதிக பயன் கிடைக்கும். காரணம் தற்போது திமுக கூட்டணியின் ஆதரவிலேயே காங்கிரஸ் அரசாங்கம் தொங்கக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக 'என்னவெல்லாமோ' செய்த மன்மோனின் அரசு கட்டாயம் தமிழக கட்சிகளின் கோரிக்கைகளையெல்லாம் ஏற்றே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

வெறும் கண்டன கூட்டங்கள் அல்லது வெறும் பத்திரிகை அறிக்கை அரசியலுக்கு என்று எம்மில் நினைத்த சில பேருக்கு !

இல்லை இல்லை எம்மமின உணர்வுகளை மீண்டும் ஓன்று திரட்டி எம்மாலும் முடியும் அதற்கான காள்ளோள் விழா தான் இது என்று உலகறிச் செய்து தாயகத்தில் வாடுகின்ற உறுவகளிற்கு புலம்பெயாந்த தேசங்களில் இருந்தும் கலைஞரும் தமிழகம் எமக்கு என்ன செய்ய போகின்றன என்று ஏங்கிய நிலையில் உங்களிற்காக நாம் இருக்கின்றோம் என்று இணைந்து தமது வேலை பளுவிற்கும் மேலாக எமக்கா துடிக்கின்ற இதயங்கிற்கு வாழத்துக்கள் நன்னிறகள் கோடி !

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பலகோடி தமிழக உறவுகளுக்கு

வணக்கம்

தமிழக உறவுகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

தொடரட்டும் உங்கள் பணி மலரட்டும் தமிழீழம்.

இரு வார கெடுவுக்குள் நடவடிக்கை- இல்லையேல் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர்: இந்திய அரசுக்கு தமிழக அனைத்து கட்சிக்கூட்டம் எச்சரிக்கை

[செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 07:48 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க இரு வார காலத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்றத்தின் 40 உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்று தமிழ்நாடு அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்த தமிழக அனைத்து கட்சிக்கூட்டம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நன்றி உறவுகளே :rolleyes::unsure::lol:

மிக்க நன்றி எமது தமிழக உறவுகளே..

எங்கே சிங்களத்தின் பொய்யான மாயையில் எமது தொப்பில்கொடியுறவுகளை நிரந்தரமாக பிரித்துவிடுமோ என மிக கவலையாக ஒரு புறம் மறு புறம் எமது மக்கள் ஈவு இரக்கமின்றி கொடிய எதிரியால் அழிப்பு என இருந்த எமக்கு தமிழகத்தின் ஆதரவு,அன்பு கரங்கள் மிகப்பெரிய நம்பிக்கையைத்தருகிறது... எம்முன் இருள் அகன்று ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது...

தொடர்ந்து, நிலையான நிரந்தரமான ஆதரவை ஈழத்தமிழினம் எதிர்பார்கிறது...

எதிர்காலத்தில் சிங்களத்தின் எந்தவிதமான ஊடுருவி பிரிக்கும் தந்திரங்களை இந்தியாவில் அனுமதிக்காமல் எடுபடாமல் இருக்க தமிழ்னாடு பாதுகாவல் அரணாக இருக்க வேண்டும் என்பது எமது அவா.. ஈழத்தில் நடக்கும் யுத்த செய்திகள் ,இன அழிப்பு நடவடிக்கைகள் உடனுக்குடன்

சென்றடைய வேண்டும் ....மீண்டும் நன்றியை தெரிவிக்குறோம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.