Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜன் கேள்வி - புலம்பெயர்ந்த தமிழ் இரசிகர்கள் கொதிப்பு

Featured Replies

இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது.

இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். உண்ணாவிரதத்தையொட்டி முதலாம் திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாம் திகதி திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, இவர்கள் இருவரினது கருத்தால் இவர்களை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இப்படியானவர்களின் படங்களை எடுத்து வெளியிடுபவர்கள் இனிமேல் சிந்திக்கவேண்டும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

sankathi.com

இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.

ம்... நல்ல வேளை... சென்ற கிழமை ஏகன் படத்துக்கு நண்பர்கள் முன்பதிவு செய்யவா என்று கேட்க, நான் மறுத்து விட்டேன்... :unsure:

Edited by Mallikai Vaasam

அசித்தின்ர ஏதாவது புதுப் படம் வருதா? போய் பாக்கணும் போல கிடக்குது

யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கோ???

ஈழத்து நிறுவனம் அய்ங்கரன் ஏகன் படத்தை ஈழத்து உறவுகளை நம்பி வாங்கி அனைத்து நாடுகளுக்கு வித்து விட்டார்கள் அவர்களை ஏமாற்றி விடாதிர்கள்..................

அசித்தின்ர ஏதாவது புதுப் படம் வருதா? போய் பாக்கணும் போல கிடக்குது

யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கோ???

அது தான் சொன்னேனே 'ஏகன்'. :unsure:

அது தான் சொன்னேனே 'ஏகன்'. :unsure:

என்ர பதிவ இட்ட பிறகுதான் உங்கட பதிவை பாத்தன் ,

நன்றி.

பார்போம் இளைய தளபதியாவது வாராரா எண்டு?

யார்ப்பா புலம் பெயர் ரசிகர்கள்?

இதுகளை நம்பி படப் புறக்கனிப்பு எண்டு தொடங்கி நங்களே முகத்தில மாறி மாறி காறி துப்பனும்..........

வெற்றி அளிக்காத புறக்கனிப்பு எல்லாம் தற்போது தேவையா?

அவன் வரல்லை எண்டா அவனை விட்டு விட்டு வந்த நடிகர்களை வைத்து இன்னும் போராட்டத்துக்கு ஆதரவாக ஏதும் செய்யலாமா என்ற்ய் யோசிக்கிறதை விட்டு விட்டு அஜித் அர்ஜீன் எண்டு நாளைக்கு 1ம் நாளைக்கு பட்டியல் நீலபோகிறது அப்புறம் என்ன செய்வது?????????????

ஏகன் படப்பாட்டு சுப்பர்...!

அதிலும் கிச்சுக் கிச்சு யா... யா... சுப்பரோ சுப்பர்!

இதுகளை நம்பி படப் புறக்கனிப்பு எண்டு தொடங்கி நங்களே முகத்தில மாறி மாறி காறி துப்பனும்..........

:unsure: :unsure:

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

acid.jpg

ஏன் தம்பி உனக்கு தேவையில்லாத வேலை?????

இந்தப் புறக்கணிப்பு முயற்சி நிறைவேற்றப்பட்டால் புலம்பெயர்ந்தவர்களை மனிதர்கள் தமிழர்கள் என்று வைகைப்படுத்துவதற்குரிய அடிப்படை சூடு சுறணை உள்ளவர்கள் என்று காட்டுவதற்கு நல்ல ஆரம்பம்.

ஆனாலும் இப்படி முற்கூட்டியே புறக்கணிப்பு பயத்தை உருவாக்கி தயாரிப்பாளர்களின் முதலீட்டாளர்களின் அழுத்தத்திற்காக விருப்பமற்றவர்களையும் கலந்து கொள்ள வைப்பது நீண்ட கால நோக்கில் பயனற்றது.

இனி எமது எழுச்சியும் சிந்தனைத் தெளிவும் அடுத்த நிலைக்கு சென்று உண்மையான உணர்வோடு யார் பங்கெடுக்கிறார்கள் முன்வருகிறார்கள் குரல்கொடுக்கிறார்கள் என்பவற்றை அவதானிக்க வேண்டும்.

இந்த 2 தரப்புக்கும் இடையில் கலைஞர்களாக துறைசார் ரீதியில் அவர்களது படைப்புகள் சொன்ன செய்திகள் எப்படி இருந்தன இருக்கின்றன என்பதையும் சிந்தியுங்கள்.

எந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட சினிமாவை எடுத்தாலும் பொதுவாக அவதானிக்கக் கூடியது அந்த படைப்பு சொல்லவரும் செய்தி அதன் மூலம் மக்கள் மனதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ விதைக்க முனையும் செய்தியில் உடன்பாடு உள்ள கலைஞர்கள் தான் அதில் பங்கெடுக்கிறார்கள்.

அந்தவகையில் கலைஞர்கள் திரைக்கு வெளியில் யதார்த்த வாழ்வில் என்னென்ன விடையங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் ஆதரிக்கிறார்கள் எதிர்க்கிறார்கள் எதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அதையே தமது படைப்புகள் மூலமும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பரப்புகிறார்கள். இந்த ஒற்றுமையை அமெரிக்க கொலிவூட கலைஞர்களிலும் காணலாம் தமிழ்நாட்டு கோடம்பாக்க கலைஞர்களிலும் காணலாம்.

போலியாக கூலிக்கு மாரடிப்பது போன்று புலம்பெயர்ந்தவர்களின் பொருளாதார பலத்திற்கு பணிந்து இப்படி நிகழ்வுகளில் தமது முகத்தை காட்டிவிட்டு தொடர்ந்து எமது பொருளாதாரத்தில் எமது தேசியத்திற்கும் அதன் மனிதவளத்திற்கு ஆரோக்கியமற்ற படைப்புகளை தந்து எமது விரலால் எமது கண்ணை குத்து நிகழ்ச்சி நிரல் பற்றியும் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

தமிழர்கள் தன்மானம் தேசிய உணர்வு கொண்டவர்களாக ஆழமாக சிந்திப்பவர்களாக மாறும் காலம் இது!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகச்சொன்னீர்கள் குமாரசாமி,தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து, ஒருக்கா சூடுபட்ட ரஜனியை பார்த்த பிறகாவது திருந்துவார்களா? அல்லது ஒரு வேளை சோத்தை விட முடியாமை ஆயுள் முளுக்க சோத்துக்கு சிங்கியடிச்சு கடைசியா இந்த படத்தில இருக்கிற மாதிரி வரப்போறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணியுங்கள் இந்த சில்லறை களின் படங்களை

இவங்களின் படங்களை உலக நாடுகளில் ஓடும் போது யாருடா இந்தப் படத்தை பார்க்கிறான் ஒரு வெளி நாட்டுக்காரன் பார்க்கமாட்டான் ஒரு தமிழன் தானே பார்க்கிறான் அது யாராக இருக்குமென்று பார்க்தால் அது நம்மட நாட்டுக்காரனாகதான் இருக்கும் நம்மட நாட்டுக்காரன்ட பணம் தேவை ஆனால் நமக்காக குரல் கொடுக்க மாட்டானுகள் பாவிகள் நீங்கள் தின்னுற சோறு யாருட காசிறா??

இவனுகளை சொல்லி குற்றமல்ல நம்மட நாதாரிகளை சொல்லவேண்டும் ஜங்கரன் வெளியீட்டால் என்ன ஆறுமுகன் வெளியீட்டால் என்ன புறக்கணியுங்கள் படங்களை :unsure::unsure::lol:

இந்தப் புறக்கணிப்பு முயற்சி நிறைவேற்றப்பட்டால் புலம்பெயர்ந்தவர்களை மனிதர்கள் தமிழர்கள் என்று வைகைப்படுத்துவதற்குரிய அடிப்படை சூடு சுறணை உள்ளவர்கள் என்று காட்டுவதற்கு நல்ல ஆரம்பம்

முதலில் இரசிகர்கள் புறக்கணிப்பு செய்ய முன் அய்ங்கரன், G ரிவி, தீபம்,ஈரோ தொலைகாட்சி, முக்கியமாக வளரி(?)

சிகரம் தகரம் எல்லாம் புறக்கணித்தாலே ரசிகர்கள் புறக்கணிப்பு வெற்றி பெற்றது போல் தான்,,,,,,,,,,,,,,

ஏற்கனவே சிவாஜீ புறக்கணித்து கரி பூசிக் கொண்டது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்...............

முடியாதது என்று இல்லை ஆனால் அதை சரியாக செயற்படுத்த வேண்டும் லச்சபல் இரசிகர்களையும் சுவிஸ் பாம்பு கூட்டங்களையும் லண்டன்( பெயர்கள் சொல்ல விருப்பவில்லை) இரசிகர்களையும் நம்பி புறக்கணிப்பு என்றால் புலம் பெயர் நாட்டிஅல் மீச்சி இருக்கிற எமது கோவணத்தையும் நாமே கழட்டி எதிரியிடம் கொடுப்பது போல் இருக்கும்,,,,,,,

உண்மையை சொன்னால் இன்று தமிழ்நாட்டிலும் அங்கு முக்கியான நிறுவனங்களின் ஓற்றுமை புலம் பெயர் நாட்டில் குறைவு அல்லது நடைமுறற படுத்த சரியான வழிகாட்டி இல்லை..........

படத்தைப் பாக்கிற ஆக்களை ஒருபக்கம் வைச்சுவிடுவம். தலை தலை எண்டு வால் பிடிக்குற ஆக்கள் நிறையப்பேர் இருக்கினமெல்லோ.. அவைய என்ன செய்யிறது?

  • தொடங்கியவர்

முதலில் இரசிகர்கள் புறக்கணிப்பு செய்ய முன் அய்ங்கரன், G ரிவி, தீபம்,ஈரோ தொலைகாட்சி, முக்கியமாக வளரி(?)

சிகரம் தகரம் எல்லாம் புறக்கணித்தாலே ரசிகர்கள் புறக்கணிப்பு வெற்றி பெற்றது போல் தான்,,,,,,,,,,,,,,

ஏற்கனவே சிவாஜீ புறக்கணித்து கரி பூசிக் கொண்டது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்...............

முடியாதது என்று இல்லை ஆனால் அதை சரியாக செயற்படுத்த வேண்டும் லச்சபல் இரசிகர்களையும் சுவிஸ் பாம்பு கூட்டங்களையும் லண்டன்( பெயர்கள் சொல்ல விருப்பவில்லை) இரசிகர்களையும் நம்பி புறக்கணிப்பு என்றால் புலம் பெயர் நாட்டிஅல் மீச்சி இருக்கிற எமது கோவணத்தையும் நாமே கழட்டி எதிரியிடம் கொடுப்பது போல் இருக்கும்,,,,,,,

உண்மையை சொன்னால் இன்று தமிழ்நாட்டிலும் அங்கு முக்கியான நிறுவனங்களின் ஓற்றுமை புலம் பெயர் நாட்டில் குறைவு அல்லது நடைமுறற படுத்த சரியான வழிகாட்டி இல்லை..........

acid.jpg

ஏன் தம்பி உனக்கு தேவையில்லாத வேலை?????

அருமையான படம், இவர்களின் உண்மையான தோற்றம் இதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மையா என்று உறுதிபடத் தெரியவில்லை. எது எப்படியாயினும், உண்ணாவிரத மேடையில் ஓரளவுக்குத் தெரிய வரும். :wub:

எதுக்கும் நம்ம தல (தயா) இங்க வந்து தன்னிலை விளக்கம் குடுத்தா நல்லா இருக்கும்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சொல்லி வராமல் விடும் நடிகர்கள். இன்னும் சொல்லாமல் வராமல் விடும் கொஞ்சப்பேரும் இருக்கினம்.அவையையும் ஒருக்கால் யார் என்று அறிய வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது.

இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள்.

உண்ணாவிரதத்தையொட்டி முதலாம் திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாம் திகதி திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜுனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, இவர்கள் இருவரினது கருத்தால் இவர்களை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இப்படியானவர்களின் படங்களை எடுத்து வெளியிடுபவர்கள் இனிமேல் சிந்திக்கவேண்டும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

www.tamilwin.com

எல்லா வியாபார வணிக முயற்சிகளுமே இலாப நோக்கோடு அது முடியாவிட்டால் குறைந்தபட்சம் நட்டம் இல்லாது தான் இயங்க முடியும். நட்டத்தோடு தேசியத்திற்காக உழைக்க ரூபவாகினி பிபிசி வொயிஸ்ஒப்அமெரிக்கா மாதிரி அரச நிதியுதவிகளில் எமது ஊடகங்கள் இயங்கவில்லை.

அவர்கள் இயங்குவதற்கான செலவுகளிற்கு வருமானம் விளம்பரங்களில் இருந்து வருகிறது. விளம்பரதாரர்கள் வாடிக்கையாளர்களை (ரசிகர்களை நோக்கி) எதிர்பார்த்து தமது விளம்பரத்திற்கு பணம் கொடுக்கிறார்கள்.

எனவே இறுதியில் சாதாரண மக்கள் தெளிவு பெற்றால் அதன் தாக்கம் அடுத்த நிலையில் உள்ள வியாபார வணிகங்களை செய்பவர்களிற்கு எப்படிப்பட்ட நிகழ்ச்சிகளிற்கு எப்படிப்பட்ட தொலைக்காட்சி சேவைகளிற்கு விளம்பரம் கொடுப்பது என்று சிந்திக்க தூண்டும். அந்த மாற்றம் இறுதியில் தொலைக்காட்சிகளையும் மாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கும்.

குறித்த விடையங்கள் பற்றி புலம்பெயர்ந்த மக்களின் ஏகோபித்த கருத்தினை அறிய கருத்துக்கணிப்பினை நடத்த வேண்டும். இதை இணையம் வானொலி தொலைக்காட்சி என்று ஒரு ஊடக கட்டமைப்பு மூலம் செய்து மக்களின் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். இந்தத் தரவுகள் விளம்பரதாரர்களை சிந்திக்க தூண்டும் காத்திரமான முடிவுகளை எட்ட உதவும். அது புறக்கணிப்பிற்கு நல்ல ஆரம்பமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் விவகாரம் பற்றி நடந்த கருத்துக்கணிப்புகள் கொடுத்த தரவுகள் எப்படியான தெளிவை எழுச்சியை மெது மெதுவாக உருவாக்கியது என்பதை அவதானிக்கவும்.

ஆர்ப்பாட்டம் சுவரொட்டி என்று இந்த புறக்கணிப்பை உருவாக்க முடியாது.

தனியே அவர்கள் உண்ணாவிரதம் இருக்கமாட்டார்கள் என்பதற்காக புறக்கணிப்பதாக கோசம் போடாதீர்கள். அவர்களது இதுவரை கால படைப்புகள் உங்களிற்குள் எப்படிப்பட்ட சிந்தனைகளை தூண்டியது கருத்தியலை விதைத்தது என்றும் சிந்தியுங்கள் கருத்துக்களை பகிருங்கள். அவை உணர்ச்சிப் பெருக்கால் போடப்படும் இந்த எதிர்வினையான புறக்கணிப்பு கோசத்தைவிட முக்கியமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்து நிறுவனம் அய்ங்கரன் ஏகன் படத்தை ஈழத்து உறவுகளை நம்பி வாங்கி அனைத்து நாடுகளுக்கு வித்து விட்டார்கள் அவர்களை ஏமாற்றி விடாதிர்கள்..................

அய்யா!

ஐங்கரன் நிறுவனத்தை EROS என்ற நிறுவனம் விலைக்கு வாங்கி ஒருவருடத்து மேல் ஆகிவிட்டது..... இனிமேல் அது ஈழத்து நிறுவனம் எண்டு சொல்லாதீங்கோ.....

அத்தோடு ஈழத்தவனின் துயரங்களில் பங்கெடுக்காமல் இருப்பவன் ஈழத்தமிழன் என்று சொல்லாதீங்க...

அவன் எந்த பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி... எந்த பெரிய ”தல”யாக இருந்தாலும் சரி.... அவன் தமிழனாக இருக்க தகுதியற்றவன்.

Edited by piththan

இந்தப் புறக்கணிப்பு முயற்சி நிறைவேற்றப்பட்டால் புலம்பெயர்ந்தவர்களை மனிதர்கள் தமிழர்கள் என்று வைகைப்படுத்துவதற்குரிய அடிப்படை சூடு சுறணை உள்ளவர்கள் என்று காட்டுவதற்கு நல்ல ஆரம்பம்.

ஆனாலும் இப்படி முற்கூட்டியே புறக்கணிப்பு பயத்தை உருவாக்கி தயாரிப்பாளர்களின் முதலீட்டாளர்களின் அழுத்தத்திற்காக விருப்பமற்றவர்களையும் கலந்து கொள்ள வைப்பது நீண்ட கால நோக்கில் பயனற்றது.

நீங்கள் சொல்வது சரியே..

அந்த திரைப்படத்தை புலம்பெயர் நாடுகளில் திரையிடுபவர்களை புறக்கணித்தால் தானாகவே எல்லாம் மாறும். இப்படியானவர்களின் படங்களை திரையிடுபவதிலும் பார்க்க மனைவி தாயை கூட்டிக்கொடுத்து பிழைக்கலாம். . .

என்ன ஏகன் திருட்டு விசிடி வந்துவிட்டதோ? அய்யா கொண்டாட்டம்தான். இந்த தீபாவளி, ஏகன் தீபாவளி.

:D:lol::(:(:)

இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

sankathi.com

இந்த செய்தியின் மூலம் தமிழக ஊடகங்களில்தான் முதலில் வெளியாகி இருக்க வேண்டும். அதனைத்தான் எமது புலம்பெயர் ஊடகங்களும் பிரதி பண்ணி செய்தியாக போட்டிருப்பார்கள்.யாராவது அந்த மூல ஊடகங்களின் நேரடி பதிவுகளை அல்லது அவைகளின் இணைய இணைப்புகளை இங்கு தர முடியுமா?

பி.கு நக்கீரன் தவிர்ந்த வேறு ஊடகங்களை கேட்கிறேன்.ஏனெனில் இதுவும் அண்மையில் நக்கீரனில் வந்த தலைப்புத்தான்.

நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.