Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொட்டும் மழையில் லட்சக்கணக்கில் திரண்ட தமிழக உறவுகளின் 'மனித சங்கிலி அணிவகுப்பு"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று மாலை பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கியது. முதல்வர் கருணாநிதி மனித சங்கிலிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதைக் கண்டித்து இன்று மாலை 3 மணியளவில் சென்னையில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை நகரில் திமுகவினரும், பல்வேறு கூட்டணிக் கட்சிகள், தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குவிந்தனர்.

மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கவிருந்த நிலையில், வானம் இருண்டு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும் கன மழையைப் பொருட்படுத்தாமல் பல்லாயிரணக்கானோர் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு திரண்டு மழையையே அதிர வைத்தனர்.

இந்த நிலையில் மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ள சிங்காரவேலர் மாளிகை அருகே முதல்வர் கருணாநிதி பிரமாண்டமான மனித சங்கிலிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பல்லாயிரணக்கானோர் மனித சங்கிலிகளாக அணிவகுத்து நிற்கத் தொடங்கினர். ஒவ்வொரு பகுதியிலும் நிற்க வேண்டியவர்கள் பட்டியலை ஏற்கனவே திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதற்கேற்ப மனித சங்கிலியில் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தமிழ் உணர்வோடு, மழையின் வேகத்தை நின்று மனித சங்கிலிப் போராட்டம் சென்னையில் நடந்து வருகிறது.

கருணாநிதி - ராமதாஸ்:

கருணாநிதி திறந்த ஜீப்பில் மனித சங்கிலி நடைபெறும் இடங்களை சென்று பார்வையிடுகிறார்.

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை, வடசென்னையை சேர்ந்தவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், வக்கீல்களுடன் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்து கொள்கிறார். அண்ணா சிலை முதல் கிண்டி வரை, மாணவர்கள் மற்றும் பா.ம.க.வினர் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களுடன் அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி ஆகியோரும் பங்கேற்றனர்.

பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸும் இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றார்.

கிண்டி முதல் தாம்பரம் வரை, திரைப்பட துறையினர் மற்றும் தென் சென்னையை சேர்ந்தவர்களுடன் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மனித சங்கிலி அணிவகுப்புக்கு பல்வேறு கட்சிகளும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன் அணிவகுப்பிலும் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன.

நடிகர்கள்:

இந்த மனித சங்கிலி அணிவகுப்பில் நடிகர்கள், இயக்குநர்கள் பங்கேற்கின்றனர்.

நன்றி தற்ஸ் தமிழ்

Edited by தமிழ் சிறி

சென்னையில் கொட்டும் மழையில் மனித சங்கிலி போராட்டத்தை முதல்வர் கலைஞர் துவக்கி வைத்தார்.....

கொட்டும் மழையையும் தெருக்களில் ஓடிய வெள்ளப்பெருக்கையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கான மக்கள் மனித சங்கிலியில் பங்கேற்றனர்!!!

Edited by வேலவன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உடன்பிறப்புகளுக்கு சிரம் தாழ்த்திய நன்றி,தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்று சும்மாவா சொன்னார்கள்?

தமிழக உறவுகளுக்கு நன்றி :unsure::unsure::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தற்போது கொட்டும் மழையை துச்சமெனத் தூக்கியெறிந்துவிட்டு, மழை வெள்ளமோ, மக்கள் வெள்ளமோ என என்னும் வகையில், பெருமளவான மக்களுடன், உணர்வு பூர்வமாக மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தக் களத்திலிருந்து எமது செய்தியாளர் தரும் குரல்வழிச்செய்தி.

http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267

Edited by forlov

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கொட்டும் மழையில் மனித சங்கிலி போராட்டத்தை முதல்வர் கலைஞர் துவக்கி வைத்தார்.....

கொட்டும் மழையையும் தெருக்களில் ஓடிய வெள்ளப்பெருக்கையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கான மக்கள் மனித சங்கிலியில் பங்கேற்றனர்!!!

தமிழக உற‌வுகளுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும்..!

வரலாற்றின் முக்கியமான இந்தக் காலகட்டத்தில் புலி ஆதரவுக் குரல்கள் ஒலிக்கவேண்டுமாயின் அவை ஒருமித்து ஒலிக்க வேண்டும். இல்லையென்றால் நீக்குப்போக்கான அணுகுமுறையைக் கையாளவேண்டும். இருக்கின்ற ஒருசில ஓங்காரக் குரல்கள் சிறைக்குச் சென்று மற்றையவர்கள் முடங்கிக் கொண்டால் எல்லோரது முயற்சிகளும் தவிடுபொடி ஆகிவிடும்..! :wub:

தமிழக உடன்பிறப்புகளுக்கு சிரம் தாழ்த்திய நன்றி

உங்கள் அன்புக்கு நன்றி தமிழக உறவுகளே...

கொட்டும் மழையில் லட்சக்கணக்கில் திரண்ட தமிழக உறவுகளின் 'மனித சங்கிலி அணிவகுப்பு"

[வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 07:54 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

சிங்களப் பேரினவாதத்தால் இலங்கைத் தீவில் தமிழ் உறவுகள் இனப் படுகொலைக்குள்ளாக்கப்படுவதை

மனித சங்கிலி சுமார் 60 கி.மீ தாண்டி சென்னையை அடுத்த திண்டிவனம் வரை நீண்டிருந்தது!!!

கொட்டும் மழையில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்டிருந்தனர்!!!sangliix7.jpg

w800.png

Edited by வேலவன்

Indian Tamils in human chain protest over Sri Lanka 24 Oct 2008 11:34:30 GMT

Source: Reuters

By S. Murari

CHENNAI, India, Oct 24 (Reuters) - Hundreds of Tamils marched in the streets of a southern Indian city on Friday to protest against the ongoing conflict in Sri Lanka, as a regional political group pressured the Indian government to stop the war.

Protesters braved heavy rains and linked arms in Chennai, the capital of Tamil Nadu state. "Save the Tamils, stop the battle," they shouted.

...

http://www.alertnet.org/thenews/newsdesk/DEL58340.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

img01.jpg

img05.jpg

img16.jpg

img29.jpg

img19.jpg

img30.jpg

img35.jpg

img37.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, தமிழக உறவுகளே.

தினமலரிலிருந்து...............................

கொட்டும் மழையில் மனித சங்கிலி : முதல்வர் உட்பட எல்லாரும் பங்கேற்பு

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து, கொட்டும் மழையிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. சென்னை கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய போராட்டம், அச்சிறுபாக்கம் வரை 40 கி.மீ., தொலைவுக்கு நீண்டிருந்தது. முதல்வர் கருணாநிதி, காரில் இருந்தபடியே மனிதச் சங்கிலி போராட்டத்தைப் பார்வையிட்டார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து, நேற்று பகல் 3 மணியளவில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன் மனிதச் சங்கிலி போராட்டம் துவங்கியது. பகல் 1 மணி வரை வெயில் கொளுத்தியது. 1.30 மணியளவில் மழை பெய்யத் துவங்கியது. மனிதச் சங்கிலி போராட்டம் துவங்கும் நேரத்தில் மழை "கொட்டோ கொட்டு' என கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், குறித்த நேரத்தில் போராட்டம் துவங்கியது.

நிதியமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இந்த போராட்டத்தை துவக்கிவைத்து, மாலை 5 மணி வரை போராட்டத்தில் கலந்துகொண்டனர். பார்வையாளர்கள் குடையை எடுத்துச் சென்ற போது, இரு அமைச்சர்களும் வேண்டாம் எனக் கூறி, நனைந்தபடியே நின்று கொண்டிருந்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு, தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் ரங்கராஜன், நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் அமைச்சர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர் சங்கத்தினர் என பல்வேறு அமைப்புகள், மனிதச் சங்கிலியில் பங்கேற்று, கொட்டும் மழையில் நனைந்தபடி நின்றிருந்தனர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேனர்களை பிடித்தவண்ணம் கோஷங்கள் எழுப்பினர். தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ச.ம.க., மற்றும் பல்வேறு கட்சித் தொண்டர்கள் கோஷமிட்டபடி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கம் வரை மனிதச் சங்கிலி நீண்டிருந்தது. மக்கள் நடமாட்டமில்லாத, குடியிருப்புகள் இல்லாத, புறநகர்ப் பகுதிகளில் மனிதச் சங்கிலி இல்லை. மேலும், காங்கிரஸ் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இது, 20 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட மனிதச் சங்கிலியாகும். செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல்: சென்னை நகரின் பிரதான சாலையாக இருந்துவரும் அண்ணா சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகம் இருக்கும். மழை பெய்தால் கடும் நெரிசல் ஏற்படும். மழை, மனிதச் சங்கிலி இரண்டும் நேற்று சேர்ந்து கொண்டதால், பாரிமுனை முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ், கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மனிதச் சங்கிலியில் ஈடுபட்டவர்கள் சாலை ஓரமாக நிற்காமல் நடுரோட்டில் நின்றுகொண்டதால், அவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

கிண்டி முதல் தாம்பரம் வரை: சென்னை கிண்டியில் இருந்து தாம்பரம் வரை பெரும்பாலான இடங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சியினர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுநல சங்கத்தினர், ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவியரும் மழையில் நனைந்தபடி பங்கேற்றனர். மனிதச் சங்கிலியை முதல்வர் கருணாநிதி பல்லாவரம் வரையிலும், அமைச்சர் ஸ்டாலின் செங்கல்பட்டு வரையிலும் பார்வையிட்டு உற்சாகப்படுத்தினர். மாலை 5 மணிக்குமேலும் மனிதச் சங்கிலி போராட்டம் நீடித்தது. மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் ஆகிய பகுதிகளில் அரசியல் கட்சியினர் பெரும்திரளாக கலந்து கொண்டனர். பரனூரிலிருந்து செங்கல்பட்டு வரை சாலையின் இருபுறமும் மக்கள் கைகோர்த்து நின்றனர். கடலூர், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க.,வினர் வாகனங்களில் வந்து கலந்துகொண்டனர். மனிதச் சங்கிலி போராட்டத்தை, திறந்த ஜீப்பில் சென்றபடி உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

திரைத்துறையினர் பங்கேற்பு: தேனாம்பேட்டையில் திரைத்துறையினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சிக்னலில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடிகர்கள் சத்யராஜ், அவரது மகன் சிபிராஜ், புலிகளுக்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் சீமான், அமீர் உட்பட பலர் நின்றிருந்தனர். திரைத்துறையினர் பலர் அங்கு மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.

தினமலரிலிருந்து...............................

கொட்டும் மழையில் மனித சங்கிலி துவங்கியது

சென்னை : இலங்கையில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து சென்னையில் இன்று மனித சங்கிலி நடந்தது. மாலை 3 மணிக்கு மனித சங்கிலி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கன மழை பெய்தாலும் திட்டமிட்டபடி மனித சங்கிலி நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் தற்போது கன மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் முதல்வர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு மனித சங்கிலி துவங்கும் இடமான சிங்கார வேலர் மாளிகை முன்பு மாலை 4 மணிக்கு வந்தார். அதன் பின்னர் மனித சங்கிலியை அவர் தொடங்கி வைத்தார். இந்த மனித சங்கிலியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

டமிழோசையிலிருந்து.................... தமிழோசை உறவோசையா அல்லது ”றோ” ஓசையா?

சென்னையில் மனிதச் சங்கிலிப் போராட்டம்

இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாகவும், அங்கே தலையிட்டு போர் நிறுத்தத்தினைக் கொண்டுவரவேண்டும் என மத்திய அரசை வற்புறுத்தியும் சென்னையில் இன்று கனத்த மழைக்கிடையே மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மாவட்டத் தலைவர் அலுவலகம் தொடங்கி தாம்பரம் வரை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே பல இடங்கள் மக்கள் யாரும் இன்றி வெறிச்சோடிக்கிடந்தது.

முதல்வர் கருணாநிதியே ஆர்ப்பாட்டத்தை பார்வையிட்டதோடு நிறுத்திக்கொண்டார்.

ஆனால் பங்கேற்றவர்கள், கடும் மழையினையும் பொருட்படுத்தாது ஏறத்தாழ இரண்டு மணி நேரம் கைகோர்த்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தின் முன் திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் தா.பாண்டியன் உட்பட பலர் சங்கிலியில் கைகோர்த்தனர்.

மற்ற இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுகவில் சற்று தனிமைப்படுத்தப்பட்டிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உற‌வுகளுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும்..!

மனித சங்கிலி சுமார் 60 கி.மீ தாண்டி சென்னையை அடுத்த திண்டிவனம் வரை நீண்டிருந்தது!!!

வேலவன்,

BBC செய்தியில் , எதோ செங்கபட்டு வரை திட்டமிட்டதாகவும் , இடையே பல இடங்கள் வெறிச்சோடிகிடந்ததாகவும் சொன்னார்கள் , உண்னையா?????

கலந்துகொண்ட அனைத்து தொப்புள்கொடி உறவுகளிற்கும் கோடானு கோடி நன்றிகள்.

உங்கள் செயல்களை பார்க்கும்போது எம்மையறியாமலேயே விழி கசிகிறது. நாம் வென்றுவிட்டோம் என்ற புத்துணர்ச்சி பிறக்கின்றது. என்றும் என்றென்றும் உங்கள் கரங்கள் இணைந்தே இருக்கட்டும்.. . . நாமும் இறுகவே பற்றிக்கொள்வோம் . .

நன்றி நன்றி நன்றி

தமிழகத் தமிழருக்கு நன்றி. ஆனாலும் ஒரு புறம் கைதுகள் மறுபுறம் ஆர்ப்பாட்டங்கள் என்பனவெல்லாம் நடக்கின்றன. தமிழுணவாளர்கள் இவ்வாறு ஜெயலலிதாவிற்காகக் கைதாவது வருத்தத்தினை உண்டுபண்ணுகின்ற விடயம். ஈழத் தமிழனின் இன்னலில் தமது அரசியல் குளிரையும் காயவைக்கின்றார்கள்.

இந்த மனிதச்சங்கிலி போராட்டம் போன்றவற்றின் தாக்கத்தை தமிழுணர்வாளர்களின் கைதுகள் குறிப்பிடத்தக்க அளவு குறைத்து விட்டன.

நான் ஆரம்பத்தில் அஞ்சியது போலவே சீமான் போன்றவர்களின் ஆர்வக்கோளாறும் அரசியல் அனுபவக்குறைவும்,

சோ.ராமசாமி, இந்து ராம் போன்ற தமிழர் விரோத சக்திகள், தமிழக மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள ஈழ ஆதரவு எழுச்சியையையும் விழிப்புணர்வையும் சிதைத்து தமிழர்கள் ஒன்று படாமல் தடுக்கும் தமது ஏமாற்று வேலைகளை பரப்புரை செய்ய களம் அமைத்து கொடுத்து விட்டது.

தமிழின உணர்வாளர்கள் தமது நடவடிக்கைகளை மிக நிதானமாகவும், அரசியல் அனுபவம் பெற்ற நெடுமாறன் ஐயா போன்றவர்களின்

ஆலோசனை பெற்றும் ஒருமுகப்படுத்தி முன்னெடுக்க வேண்டிய தருணம் இது.

கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு!!!

ஏனென்றால் இந்தியா ஒரு ஜனநாயக நாடு! சிங்கள சிறீலங்கா போல ஒரு பயங்கரவாத அரசு அல்ல!!

Edited by vettri-vel

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனுக்கு , குரல் கொடுக்க நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதனை கொட்டும் மழையிலும் வந்து நிரூபித்து விட்டீர்கள் , நன்றி தமிழக உறவுகளே .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"மனித சங்கிலி அணிவகுப்பு" Video

http://www.tubetamil.com/view_video.php?vi...bbe8a5d979d2920

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன் , நீங்கள் இணைத்த படத்தை பார்த்து அழுதேன் .

கலைஞரின் காலத்தில் தான் எங்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன் உங்கள் இனைப்புக்கும் தமிழக உறவுகளின் பாசத்துக்கும் பலகோடி நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.