Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சொல்லியழுதிட்டன். (31.10.2008 ஒருபேப்பர்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லியழுதிட்டன்.

- சாந்தி ரமேஸ் வவுனியன் -

சிலநேரம் செத்துப்போக வேணுமெண்டு கூட நினைக்கிறனான்...ஆனால் பிள்ளையளையும் வீட்டுக்காறரையும் நினைச்சுப்போட்டு விட்டிடுவன்...அடிச்சாக்கூடப் பறவாயில்ல அவனென்னை அடிச்சதைவிட வாயாலை காயப்படுத்தின காயங்கள்தான் அதிகம்....சற்று மூச்சை உள்ளிழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

ஏனப்ப அவனோடை இருக்கிறியள் ? பிடிக்காட்டி விட வேண்டியதுதானே ? இது நான். அதுவும் ஏலாமலிருக்கு....என்னை வெளிநாட்டுக்கு கூப்பிட்டுவிட்டவன் என்ரை குடும்பத்துக்கு காசனுப்ப விட்டவன் இப்பிடி சிலதுகள் அவனை விட்டிட்டுப்போகவோ இல்லாட்டி போடாவெண்டு தூக்கியெறியவோ முடியேல்ல... சொல்லிக் கொண்டு அழுதாள்;.

ஊரிலை நானும் அவனும் ஓரே ஊர். பக்கத்துப் பக்கத்து வீடு. அவேடை தோட்டக்காணியும் எங்கடை வீட்டுக்காணியும் பக்கத்தில பக்கத்தில... அந்த நேரம் அப்பாவுக்கும் அவேன்ரை அம்மாவுக்கும் நெடுகலும் சண்டை வாறது. அவைக்கும் எங்களுக்கும் பொதுக்கிணறு வேறை பெரிய பிரச்சனை நெடுகலும்....அப்பாவும் கொஞ்சம் ஊருக்கை அப்ப சண்டித்தனம்....ஆரும் ஏதும் கதைச்சா உடனையும் கத்தியோடை போய் நிப்பர் ஆக்களின்ரை வாசலுக்கை....அதெல்லாம் அந்தக்காலம் போய் நாங்களும் 90ம் ஆண்டு இடம்பெயர்ந்து போனப்பிறகு அப்பாவும் அவன்ரை அம்மாவும் போட்ட வேலியளும் போச்சு எல்லையளும் போச்சு....யாழ்ப்பாணத்துக்கை அங்கினை இஞ்சினையெண்டு 95ம் ஆண்டுவரையும் 12வீடு மாறினனாங்கள்.... பிறகு சூரியக்கதிரோடை தென்மராட்சி பிறகு வன்னியெண்டு கடைசியில பூந்தோட்டம் வவுனியாவுக்கை போய் சேந்தம்.....

ஊரிலை சொல்றவை நான் நல்ல வடிவெண்டு....என அவள் முடிக்க முன்னம் சொன்னேன்...ஊரிலை சொல்றதென்ன நீங்க நல்ல வடிவுதான....அவள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இப்பத்தைய அசின் திரிசாக்கள் மாதிரி அவள் நல்ல வடிவாயிருக்கிறாள். வரிசை தப்பாத அழகான பற்கள் அரிதாரம் இல்லாத முகமும் முடியும் கட்டையுமில்ல நெட்டையுமில்லை அழவான உயரம்....அவள் பற்றி நான் கற்பனையில் மிதக்க முதல் இடையறுத்தாள்.

அவன்ரை அம்மாதான் என்னை அவனுக்கு கலியாணம் கட்ட விருப்பமெண்டு பெரியம்மா மூலம் கடிதமெழுதியிருந்தவ. அப்பாக்கும் அம்மாக்கும் வெளிநாட்டு மாப்பிளையொண்டு என்னை விரும்பி வருதெண்டவுடனும் நல்ல புழுகு. என்னிட்டை ஒண்டுமே கேக்கேல்ல. நானும் அம்மா அப்பா சகோதரங்கள் பட்ட கரைச்சலுகளைப் பாத்திட்டு ஓமெண்டு வெளிநாட்டுக்கு வர கொழும்புக்கு பெரியம்பாவோடை போனனான்.

கொழும்பு வந்து அவனோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமணத்துக்கான ஏற்பாடுகள் சகலத்துடனும் மலேசியாவுக்கு முதல் விமானம் ஏறினாள். மலேசியாவில் தொட்டது முதல் சனி அவளுக்கு. அவன் அவளோடு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது....எத்தினைபேர் நிக்கிறியள் ? எத்தின பொடியள் நிக்கினம் எனக்கேட்டான். 5பொடியளும் நாங்கள் 9பெட்டையளும் தான் ஆனால் பொடியள் நல்ல உதவியெங்களுக்கு.

அப்ப ஒருதனையும் உனக்குப் பிடிக்கேல்லயோ ? பிடிச்சிருந்தா என்ன இஞ்சையே கலியாணத்தை முடிக்கச் சொல்றியளோ ?அவன் கேட்டதை பகிடியாக நினைத்து சும்மா தானும் ஒரு வசனம் கேட்டிருந்தாள்.

பின்னர் மொஸ்கோ செக்கோசிலாவக்கியா என அலைந்து 9மாதம் போன பிறகு செக்கோவில் அவளுடன் வந்தவொருத்தி திடீரென ஒருநாள் மாடியிலிருந்து செத்துப்போனாள். நல்ல வடிவான பெட்டை. சுவிசுக்குக் கலியாணத்துக்குப் போறனெண்டு சொல்லிக் கொண்டிருந்தவள். திடீரெண்டு செத்துப்போனது மர்மமெண்டு இப்ப குலைநடுங்குது ஆனால் அப்ப வாயே திறக்காமல் அதையும் பாத்ததுதான். பிறகு அங்கையிருந்த ஒரு பொடியன் ஒருநாள் குடிச்சிட்டு வந்து உளறினான்.

உவனை நம்பாதையுங்கோ தங்கைச்சியவை....கெதியிலை அனுப்புவனெண்டு சொல்லி அந்தப் பிள்ளையைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைச்சு அது கற்பிணியானவுடனை மாடியாலை உவன்தான் தள்ளி விழுத்திக் கொண்டவன். உங்களை எங்கையும் படமெடுக்க பாஸ்போட் எடுக்கவெண்டு தனிய வரச்சொல்லிக் கேட்டா ஆராவது ஒராளை சேத்துக் கூட்டிக் கொண்டு போங்கோ....என்னையெல்லோ அந்தப்பிள்ளை அண்ணையண்ணையெண்டு அடிக்கடி வரும் பாவம் அனியாயமா செத்துப்போச்சு.....உவனிப்ப கதைவிடுறான் அதுக்கு மூளைக்காச்சல் வந்து செத்து ஊருக்கும் அனுப்பேலாமல் உங்கையெங்கையோ புதைச்சனெண்டு பொய் சொல்றான்....

ஏஜென்சியைப்பற்றி வெளியில் வந்த அந்தக்கதை அவளையும் அதிர்வித்தது. தொலைபேசியில் அவனிடம் அக்கதையைச் சொல்லி அழுதாள். எனக்கிஞ்சையிருக்கப் பயமாக்கிடக்கு கெதியில கூப்பிடுங்கோ....இல்லாட்டி ஊருக்கனுப்புங்கோ....பாதியில் செத்து விடுவேனோ என்ற பயமும் 9மாதம் கடந்த நிலையில் இனி ஊரில் போய் அம்மா அப்பா சொந்தங்களின் முகத்தில் எப்படி முளிப்பது என்ற தவிப்பிலும் தொடர்ந்து 11மாதம் முடிந்தது. ஒரு நாள் அவள் வெளிநாடு வந்து சேர்ந்தாள்.

ஊரர் உறவினர்களென திருமணம் பெருமெடுப்பில் நிகழ்ந்தேறி அவள் முதற்குழந்தையும் பெற்றுவிட்டாள்.

நானும் வேலைக்குப்போகவெண்டு வெளிக்கிட்டு இப்ப 5வருசமாகீட்டுது. முந்தி அப்பாவுக்கும் அவேன்ரை அம்மாவுக்கும் நடந்த பிரச்சனையளைச் சொல்லிச் சொல்லி குடிச்சிட்டு நெடுகலும் அடிக்கிறார்....சீதனமில்லாமல் தான் வாழ்க்கை தந்தவராம். அவையடை தோட்டக்காணியோடை எங்களுக்கிருக்கிற வீட்டுக்காணியை எழுதித்தரட்டாம்.....அந்தத் தோட்டக்காணியில இல்லது வீட்டுக்காணியில இனி பயிர் பச்சை காணிறதெண்டா நூறுவருசம் போனாலும் சரிவருமோ தெரியாது. அங்கினை கிடக்கிற மிதிவெடியள் எடுத்து நாடு ஒரு நிலைக்கு வந்து இவையெல்லாம் ஊரிலை உந்தக்காணியளுக்கு உரிமை கொண்டாடுறதெண்டது இப்ப நடக்கிற விசயமோ ? அம்மாவுக்கு புற்றுநோயாம் இன்னும் எத்தினை நாளைக்கோ தெரியாது அம்மான்ரை வாழ்க்கை. ஒரு சதம் இப்ப நான் வீட்டுக்கெண்டு அனுப்பேலாது. அம்மா எங்களோடை எவ்வளவு கஸ்ரப்பட்டவ அவேடை அம்மா மாதிரித்தான என்ரையம்மாவும்.....விம்மி விம்மியழுதாள்.

இதுகளைத் தாங்கேலாம அழுதிருக்கிறன். ஆனா இப்ப இவர் செய்யிற வேலை எவ்வளவு அசிங்கம் பிடிச்சது. நீங்களே சொல்லுங்கோ பாப்பம் ? இப்ப நான் வேலைக்குப்போட்டு இல்லாட்டி எங்கையாவது வெளியில போட்டு வந்தா இழுத்துக்கொண்டு போய் பாத்றூமுக்கை வைச்சு உள்ளுடுப்பை உரிஞ்சு பாக்கிறார்....இதுக்கென்ன அர்த்தம் ? நானொருக்கா மலேசியாவில நிக்கேக்க அங்கையாரையேன் பிடிச்சா கலியாணத்தை முடிக்கட்டோவெண்டு கேட்டனானாம். அதையெல்லாம் இப்ப சொல்லிக் குத்திக்காட்டிறார். அவர் சொன்ன கதைக்கு நானும் அப்ப பகிடியா ஏதோ சொல்லீட்டன். அது பிழையோ ? வெளிநாடு வரேக்க தெரிஞ்ச சில படிச்ச பொடியளுக்கு இவற்றை நம்பரைக் குடுத்திருந்தனான். அவங்கள் ஆரேன் எப்பவும் இருந்திட்டு என்னோடை ரெலிபோனெடுத்துக் கதைச்சா நான் துலைஞ்சன். அதுகளுக்கு இந்த அசிங்கம் புடிச்ச கதையளைச் சொல்ல ஏலுமோ ? கலியாணங்கட்டினா தெரிஞ்ச படிச்ச ஆம்பிளையள் ஒருதரும் கதைக்கக்குடாதோ ? கேட்டாள். அவள் கேள்விகளுக்கு என்னிடம் இருந்த ஒரே பதில் அவனைவிட்டுவிடு தனியே உனது வாழ்வை அமைத்துக் கொள் என்பதாகவே இருந்தது. அவளோ அவனென்னை கூப்பிட்டு விட்ட நன்றியை மறக்கிறதோ ? என்கிறாள்.

திவ்யா மனிசனை விட்டுப்பிரிஞ்சிட்டாளாம். சபீனா தோழ்களில் தட்டிச் சொன்னாள் இவளைக் குறுக்கிட்டு. ஆரந்த திவ்யா ? கேட்டாள். திவ்யாவைப் பற்றி சொல்லத் தொடங்கினால் அது முடியாத கதையென்று கதையை நிறுத்துகிறேன். நேரம் மதியம் 12 எதிரிலிருந்த சேர்ச் மணியடிக்கிறது. அனைவரும் வீடுகளுக்குச் செல்லத் தயாராகுகிறோம். அவளிடமிருந்து விடைபெறுகிறேன். அடுத்த வாரம் விட்டு அடுத்தவாரம் மீளவும் சந்திப்போமென்ற நம்பிக்கையோடு போகிறோம்.

கிட்டத்தட்ட 3வருடங்கள் மாதம் இருமுறை நிகழும் இந்தப்பெண்கள் சந்திப்பில் வந்து போன ஆபிரிக்க அமெரிக்க ஐரோப்பிய ஆசியப் பெண்கள் எத்தனையோ பேரின் சோகங்கள் தாங்கிய இந்த அறை என்றும் போல இன்றும் அமைதியாக இருக்கிறது. எத்தனையோ பெண்களுக்கான புது வாழ்வு கொடுத்த இடமாகவும் இந்த இடம் இருந்திருக்கிறது. இந்தச் சந்திப்பை தவறாமல் நடத்திவரும் 'பெண்களும் தொழிற்கல்வியும் நிறுவனம்" தனது தோழ்களில் எத்தனையோ பெண்களின் துயரையும் வாழ்வையும் சுமந்து மறுவாழ்வு கொடுத்தும் ஆசியப்பெண்கள் இந்த இடத்தை எட்டிப் பார்ப்பதேயில்லை. ஏனெனில் அவர்கள் கணவர்களுக்கு அச்சத்தை தரும் யேர்மனியப்பெண்களும் , ஒரு ஈழத்துப்பெண்ணும் இந்த நிறுவனத்தோடு இயங்குகிறார்கள்.

காலம் வரும் இன்று துயர் சொன்னவளின் வாழ்வு ஒளிபெறுதற்கு....நினைத்தபடி வெளியில் வருகிறேன். மழை தூறிக்கொண்டிருந்தது. நடைபாதையில் ஒரு தமிழ்க் கணவன் வந்து கொண்டிருக்கிறான்.

(நன்றி ஒருபேப்பர் 31.10.08)

Edited by shanthy

மனது கனத்துவிட்டது...

ஆண்களை சிந்திக்க வைக்கும் கதை. வாழ்த்துக்கள் சாந்தி அக்கா. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இது கதையல்ல நிஜம் ....இப்படி எத்தனயோ கதைகள் நம்ம தமிழ் பெண்கள் வாழ்வில் .குடும்ப மானம், சமுக மதிப்பு என்று எத்தனையோ ....இன்னும் மனதில் குமைந்து கொண்டு வாழ்கிறார்கள் . இதிவிட தற்கொலை செய்து கொண்டது எத்தனயோ ? நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

shanthy

பெண்களென்றால் பூப்போன்றவர்கள் அவர்களுக்கென்று ஓர் மனமுன்டு அதை காயப் படுத்துவது பூவை நெருப்பால் சுடுவதற்கு இணையானது என்றும் தன் பெண் சகோதரம் ஒன்றுக்கு இப்படி ஒன்று நடந்தால் தனக்கு எப்படி இருக்கும் என்று உணராத ஆண்களை எப்படி திருத்துவது என்று தெரியவில்லை.

கதையென்று சொல்ல வந்து இப்படி நெஞ்சை கனக்க வைத்து விட்டீர்கள். நான் நிச்சயமாக இப்படியான கணவனாய் இருக்க மாட்டேன்.

இளங்கவி

ஓ..உப்படி எல்லாம் நடக்குதோ என்ன செய்ய சாந்தி அக்கா..கா ஆண்களுக்கும் உப்படி ஒரு அறை இருந்திருந்தா உதை விட அது ரொம்ப அழுதிருக்கும் பாருங்கோ..கோ.. :lol:

ஆண்களுக்காக நான் ஒரு நிறுவனத்தை தொடங்கலாம் எண்டு உத்தேசித்துள்ளன்..ன்..இத பத்தி நீங்க என்ன நெனைக்கிறியள்

சாந்தி அக்கா..கா..??.. :)

சரி..சரி கோவிக்காதையுங்கோ..கோ ஆனா ஆண்கள் மேல ஒட்டு மொத்த பழியையும் போடாதையுங்கோ உந்த காலத்து பொண்ணுகளை நம்பவே ஏலாது..து ஒரு ஆணா இருந்து பார்த்தா தான் ஒரு ஆணிண்ட வலி தெரியும் என்ன ஆண்களே நான் சொல்லுறது சரியோ..யோ..??.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ..உப்படி எல்லாம் நடக்குதோ என்ன செய்ய சாந்தி அக்கா..கா ஆண்களுக்கும் உப்படி ஒரு அறை இருந்திருந்தா உதை விட அது ரொம்ப அழுதிருக்கும் பாருங்கோ..கோ.. :(

ஆண்களுக்காக நான் ஒரு நிறுவனத்தை தொடங்கலாம் எண்டு உத்தேசித்துள்ளன்..ன்..இத பத்தி நீங்க என்ன நெனைக்கிறியள்

சாந்தி அக்கா..கா..??.. :rolleyes:

சரி..சரி கோவிக்காதையுங்கோ..கோ ஆனா ஆண்கள் மேல ஒட்டு மொத்த பழியையும் போடாதையுங்கோ உந்த காலத்து பொண்ணுகளை நம்பவே ஏலாது..து ஒரு ஆணா இருந்து பார்த்தா தான் ஒரு ஆணிண்ட வலி தெரியும் என்ன ஆண்களே நான் சொல்லுறது சரியோ..யோ..??.. :)

அப்ப நான் வரட்டா!!

தம்பி அறுவை மன்னன் யமுனாவுக்கு,

பிரச்சனையில்லை நீங்கள் சேந்து உப்பிடியொரு அறையை ஆரம்பியுங்கோ. ஆதரவுதரலாம். நீங்கள் நிறுவனத்தையும் துவங்கலாம் இல்லாவிடில் அருகில் ஒரு பப்பும் துவங்கலாம். :wub: அது உங்கள் விருப்பமல்லவா. நெடுகலும் அறுத்தறுத்துக் கொல்லாமல் எதையாவது சுயமாக யோசிச்சு செய்யுங்கோ. :lol:

ஆண்கள் தலையில் ஒட்டுமொத்தப்பழியையும் கதையில் போடவில்லை. மனித குணங்கள் வித்தியாசமானவை. பாருங்கோ உங்களைப்போல அறுத்து எங்களின் உயிரைவாங்குவதற்கும் ஒரு குணம் இருக்கெல்லோ :lol: அப்பிடித்தான் ஒவ்வொருவரின் மனமும் மாற்றமும்.(கோவிக்கிறேல்ல அறுக்கிறீங்களெண்டு சொன்னதுக்கு. பரவலா நண்பர்கள் உப்பிடித்தான் சொல்லுகினம் :lol: )

உங்கள் நிறுவனத்துக்கு விண்ணப்பங்கள் எப்படி அனுப்புவது ? சொன்னா விருப்பமுள்ளவர்களுக்கு அறிவிக்கலாம். :(

உங்கள் நேரத்தை செலவிட்டு கதையை படித்தமைக்கு நன்றி தம்பி.

பொறுமையுடன் வாசித்தமைக்கு , தூயா மல்லிகைவாசம் நிலாமதி மற்றும் இளங்கவி அனைவருக்கும் நன்றிகள்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாசித்தனான் ஆனால் கருத்து எழுதவில்லை..எங்களுக்கு நன்றியில்லையோ?

சாந்தி அக்கோய்..ய்..!!.. :rolleyes:

ம்ம்..நான் ஆரம்பிக்கிறன்..ன் ஆனா அக்கா இதை பத்தியும் நீங்க தான் எழுதனும்..ம் எழுதுவியள் தானே..னே :lol: உங்க புகழ் கூடும் தானே..னே..(இப்படி சொல்லிட்டன் எண்டு கோவிக்கிறதில்ல என்ன) :lol: ..கூட்டணி வைத்து கொள்வோம் என்ன சாந்தி அக்கா..கா.. :(

பப்பு துவங்கலாம் தான் சாந்தி அக்கா..கா..ஆனா அதில நம்மளிற்கு செய்தி கெடைக்காது தானே கிடைத்தா தானே முன்னேறலாம்..ம்..(என்ன நான் சொல்லுறது சரியே..யே).. :wub:

ம்ம்..என்னை போல் அறுக்கிறது ஒரு குணம் உங்களை போல் மற்றவையின் வேதனையில்..ல் பேர் சம்பாதிப்பது என்னொரு குணம்..ம்..உண்மையை சொல்லிட்டன் எண்டு என்னோட கதைக்காம இருக்கிறதில்ல சொல்லிட்டன் சாந்தி அக்கா..கா.. :lol:

என் நிறுவனத்திற்கு விண்ணப்பங்கள் அனுப்புறவை..வை உள்ளுகுள்ள நடக்கிற விசயத்தை வெளியாளா சுயதம்பட்டம் அடிக்காதவையா இருக்கோனும் சாந்தி அக்கா..கா அப்படி இருக்கிறவையள சேர்கலாம் எண்டு நெனைக்கிறன் நீங்க வேண்டும் எண்டா..டா..

ஒரு நிர்வாகியா சேரலாம்..ம் பாருங்கோ..கோ.. :) (நீங்க என்ன நெனைக்கிறியள்)..மற்றது அக்கோய் உங்க நேரத்தை எல்லாம் செலவழித்து..து மற்றவன் மேல் குறியா இருக்கும் தங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்..ள்..மற்றது அக்கா நான் தொடங்கிற நிறுவனத்தை..தை..

நீங்க தான் தொடங்கி வைக்கோனும் என்ன..ன..!! :(

அப்ப நான் வரட்டா!!

நன்றாக உள்ளது. நிகழ்காலத்தில் நடக்கும் குடும்ப வன்முறை பற்றி, அதிலும் முக்கியமாக புலம் பெயர் தமிழ் சமூகத்தில் நிகழும் குடும்ப வன்முறை பற்றி கதை தொட்டு செல்வதால், காலத்திற்கேற்ற கதையாக பரிணமிக்கின்றது. இதே போன்ற வன்முறை பல சமூகங்களிலும், நாடுகளிலும் நிகழ்வதால், உங்களின் கதையின் கரு எல்லைகளை நிராகரித்து வியாபகம் கொள்கின்றது

இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இதனை விடவும் சிறப்பாக வந்து இருக்கும் என நினைக்கின்றேன். அனுபவத்தொற்றலை ஏற்படுத்துவதில் இன்னும் கொஞ்சம் மினக்கெடுத்து இருக்கலாம். அத்துடன் 'என்ரை குடும்பத்துக்கு காசனுப்ப விட்டவன்" என சுய நியாயப்படுத்தல் பெண்ணுக்கு இருக்க வேண்டிய பொருளாதார சுதந்திரத்தையும் அது பற்றிய உணர்வையும் கேள்விட்பட்டுத்துகின்றது. பொருளீட்டுபவரிற்கு அதனை செலவு செய்யும் சுதந்திரம் இருப்பதாக நான் நம்புகின்றேன். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்

-நிழலி--

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கல்ல.. உந்தளவுக்கு மோசமா ஒரு ஆண் இயல்பாகப் போயிருப்பான் என்று. உந்தப் பெண் தான் தனது செயல்களால் அவனை அப்படி ஆக்கி இருப்பாள். இப்ப எல்லாம் பெண்கள் தாங்கள் செய்யுற அல்லது செய்யப் போற தவறை மறைக்க வழமையா எமது சமூகத்தில உள்ள பெண்கள் செய்யுற ஆண்கள் மேல மேலாதிக்கப் பழி போடுதல் என்றதை செய்து போட்டு தப்பிக்கினம். இதுதான் இப்ப எங்கட சமூகத்தில அதிகம் நடக்குது.

இதையே வெள்ளைக்காரன் என்றால்.. இப்படியான பெண்களிடம் தேவைக்கு மட்டும் போயிட்டு.. மிச்ச நேரமெல்லாம் ஊர் மேஞ்சிட்டுப் போவான். ஏன் உவை அப்படியான ஆண்களைக் கட்டி.. கூடிய சுதந்திரத்தையும் அனுபவிச்சுக் கொண்டு வீட்டுக்கும் அவங்களைக் கேட்டு காசு அனுப்பினம் இல்ல. வரட்டாம்.. வெள்ளைக்காரன்.. கேணயன் மாதிரி இவை கூட இழுபட்டுத் திரிய. :wub:

தமிழ் பொடியங்கள்.. கேணயங்கள் என்று தான் பல தமிழ் பெட்டையள் நினைச்சுக் கொண்டு உங்க வாழ வருகினம். உவை செய்யுற கூத்துகள.. உங்க யுனி வழிய வந்து பாருங்கோ. நான் அறியவே எத்தனையோ தமிழ் பெட்டையள்.. ஆண்டுக்கு ஒருத்தனோட கூடி இருந்து திண்டு களிச்சு ஊர் சுற்றிக் கூத்தடிச்சிட்டு.. பிறகு இன்னொருத்தனை வளைச்சுக் கொண்டு திரியுறதை கண்டிருக்கிறன். பொடியளை விட பெட்டைய மிக மோசமா இதை செய்யினம். அதிலும் ஊரில இருந்து வந்தவை பாருங்கோ.. ஒரு வித சுதந்திர மோகமோ என்னவோ.. இதைக் கூசாமல் செய்யினம். ஒரு குறுகிய வட்டத்துக்க நின்று கொண்டு... எங்கட பொண்டுகள் இன்னும் கட்டுப்பெட்டியாகவே ஆண்களால் அடக்கி ஆளப்படும் நிலையில இருக்கினம் என்று கற்பனை செய்து பக்கம் பக்கமா எழுதிக் கொண்டிருக்கிறதில பிரயோசனமில்லை. பிரச்சனைகளுக்குரிய மூல காரணத்தை ஆராய வேணும். பல பிரச்சனைகளுக்கு பெண்களின் தாந்தோன்றித்தனமான செயற்பாடுகளே காரணம். கணவனை மதிக்கிறதில்ல.. அவன் கூட கலந்தாலோசிச்சு முடிவெடுக்கிறதில்ல.. தாங்களே எல்லாவற்றையும் சரி என்று நினைச்சுக் கொண்டு செய்து போட்டு.. அதை நியாயப்படுத்த.. கேட்கிறவன் என்ன கேணயனா...???! இதாலதான் பிரச்சனைகளே..!

எங்கட பெண்கள்.. தனது கணவன் இன்னொரு பெண்ணோட கூடித் திரியுறதை விரும்புவினமோ..??! படித்த தோழிகள் என்று அவையின்ர போன் நம்பரை வாங்கி.. கணவன் இவையோட நேரம் செலவழிக்காமல்.. அந்தத் தோழிகளோட கடலை போடுறதை விரும்புவினமோ..??! எங்கட பெண்கள்.. அவையின்ர கணவன்மார்.. ஈமெயிலில அவையின்ர பள்ளித் தோழிகளின் படங்களை வைச்சிருந்து தினமும்.. ரசிச்சுக் கொண்டிருப்பதை அனுமதிப்பினமாமோ..??! இல்ல பள்ளித் தோழி ஊரில இருந்து வந்திட்டாள்.. ஒரு நாலு நாளைக்கு அவள் கூட ஊர் சுத்திட்டு வரப்போறன் என்றால் அனுமதிப்பினமோ..??! இல்லைக் கேட்கிறன். பெரிய நியாயம் புறிக்க வெளிக்கிட்டினம்.. உவை.. ஆண்கள் வெளில போயிட்டு வந்தா.. என்னத்தை உரிஞ்சு பாக்கினம் என்றதையும் சொல்லுங்கோ உலகுக்கு..! பொண்டுகள் மட்டும் ஏதோ திறமான ஆட்கள் மாதிரி எல்லோ.. ஆண்கள் மேல பழி சொல்லுறீங்க.

ஒருத்தன் சந்தேகிக்கிறான் என்றால் அவனுக்குப் பிடிக்காத நடத்தை அங்க இருக்குது என்பதுதான் அர்த்தம். அதை அவனோட கலந்து பேசி.. புரிய வைச்சு தீர்த்துக்க வேண்டுமே தவிர.. மேடை போட்டு.. கண்ணீர் சிந்திவிட்டால்.. அது தீர்ந்திடாது. பெண்களின் கண்ணீருக்கு இரங்கி இரங்கியே ஆண்கள் சீரழிந்து போய்விட்டார்கள். போதும்.. போதும்.. கண்ணீரால் பேச முதல்.. உங்களை அவனின் நம்பிக்கைக்குரிய வகையில் வைத்திருக்க முயலுங்கள். அவனும் உங்களுக்கு உண்மையானவனாக இருக்கவே முயல்வான். எந்த ஆணும் தனது நம்பிக்கைக்குரிய வகையில் நடக்கும் பெண்ணுக்கு கேடு செய்ய நினைக்கான். அது ஆண்களின் மனிதனின் சுபாபம். ஆனால் நம்பிக்கை எந்த தளத்தில் தகர்ந்தாலும்... அதை அவன் இலகுவில் மீளப் பெறுவது என்பது கடினம். இதை பெண்கள் ரெம்ப உணர்ந்துக்க வேண்டும்.. அதன் படி வாழ தம்மை திருத்திக்க வேண்டும். ஒருவனை ஏமாற்றிறவள்.. நிச்சயமா இன்னொருத்தனை ஏமாற்ற அதிக நேரம் எடுக்காள்.. இப்ப எல்லாம் ஏமாற்றின பெண்கள் தான் உலகில அதிகம். எனவே ஆண்கள் பெண்களின் கண்ணீருக்கு முக்கியத்துவம் அளிக்காமல்.. அவர்களின் செயற்பாடு நம்பிக்கைக்குரியதாக இருந்தால் மட்டும் அவர்களை நம்புங்கள். மற்றும்படி.. பெண்களை முழுமையாக நம்பி உங்களைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். :D

Edited by nedukkalapoovan

இவ்வாறான அவலங்களை தொடர்ந்து பதிவு செய்யுங்கள். சந்தேகம் குளியல் அறையுடன் நிற்கின்றது, அதையும் தாண்டி மாடியில் இருந்து மனைவியையும் குழந்தையையும் தள்ளி கொன்ற நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றது. பாதிக்கப்படும் பெண்கள் தமக்குரிய பாதுகாப்பை பற்றி யோசிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான அவலங்களை தொடர்ந்து பதிவு செய்யுங்கள். சந்தேகம் குளியல் அறையுடன் நிற்கின்றது, அதையும் தாண்டி மாடியில் இருந்து மனைவியையும் குழந்தையையும் தள்ளி கொன்ற நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றது. பாதிக்கப்படும் பெண்கள் தமக்குரிய பாதுகாப்பை பற்றி யோசிக்க வேண்டும்.

அதேபோல.. கெதியா கூட்டிக் கொண்டு போவான் என்று ஏஜென்சிக்காரனுக்கு உடலைக் காட்டும் பெண்களும் இருந்திருக்கினம்.. கலியாணம் கட்டின பக்கத்து வீட்டுக்காரனோட ஓடின தமிழ் பெண்களும் இருக்கினம்.. ஆள் கொஞ்சம் குட்டை என்றிட்டு.. கட்டினவனையே விட்டிட்டு நெட்டையன் கூட ஓடின பெண்களும் இருக்கினம். 48 வயது ஆன்ரி கணவனை குழந்தைகளை விட்டிட்டு 24 வயது பையனோட ஓடினதும் இருக்குங்கோ. அந்த அசிங்கங்களையும் பதிவு செய்து ஒப்பாரி வைத்தால் நன்றாக இருக்கும்.

எப்பவும் பிரச்சனைகளை அவற்றுடன் சம்பந்தப்பட்ட இரு பக்கமும் நின்று ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். அதை எமது சமூகம் செய்யத் தவறியதால் தான்.. பெண் என்ற அனுதாபம் எங்கும் முன்னிற்பதால் தான்.. பிரச்சனைகளின் மூல காரணங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு.. பிரச்சனைகள் தீர்வின்றி தொடர்கின்றன. பெண்களும் கூசாமல் தவறுகளைச் செய்து போட்டு கண்ணீரால் தீர்த்திடலாம் அல்லது சமாளிச்சிடலாம் என்று நினைக்கிறார்கள்.

எத்தனையோ ஆண்கள் சரியான கவனிப்பு.. அன்பு.. பாரமரிப்பு இன்றி புலம்பெயர்ந்த நாடுகளில்.. ஏன் தான் கலியாணம் செய்தோம் என்று வாழ்கின்றனர். உண்மையாக இங்குள்ள ஆண்களில் 90% பேரின் உணர்வுகள் மனைவி மாரால் உணரப்பட்டதாகத் தெரியவில்லை. அதன்... பின்னணியில்.. எழும் பிரச்சனைகளுக்கு.. ஆண்கள் மட்டும் பொறுப்பாகிட முடியாது. இதை சமூகவியலாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் எமது வரட்டுப் புத்தி கொண்ட சமூகம்.. ஆண் ஆதிக்கம் என்ற வட்டத்துக்குள் பெண்களை சிந்திக்கச் செய்வதால் மட்டும் பெண் விடுதலை பெற்று.. சுதந்திரமாக வாழ்ந்திவிடுவாள் என்று கற்பனை செய்து கொண்டிருக்கிறது. எமது சமூகம்... குடும்ப உறவுகளை பலப்படுத்த கருத்தைச் சொல்கிறதா.. பலவீனப்படுத்த கருத்தைச் சொல்கிறதா என்பதுதான் பிரச்சனையே.

சும்மா இருக்கிற பெண்ணிடம் நீ அவனுக்கு என்ன வகையில குறைச்சல்.. 50% கேளன்.. என்று உசுப்பிவிட்டு.. அன்பும் புரிந்துணர்வும் நம்பிக்கையும் மேலோங்க வேண்டிய இடத்தில்.. போட்டி மனப்பான்மையை.. பொறாமையை.. ஊட்டி.. கணவனையும் மனைவியையும் இரு துருவங்களுக்கு கொண்டு போகும்.. அசுரத்தனமான சிந்தனை எமது சமூகத்திடம் தான் அதிகம் இருக்கிறது. அதற்கு முற்போக்கு என்று பெயர் வேறு. பிரச்சனைகளுக்கு பால் ரீதியான ஆதிக்கம் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருப்பதற்கு அப்பால்.. அவற்றுக்குரிய சமூக அல்லது தனிநபர் காரணிகளை ஆராய்வதோ அல்லது இனங்காண்பதோ.. அதன்படி தீர்வெழுதுவதோ கிடையாது. இதுதான்.. மேற்குலக சமூகப் பணியாளர்களுக்கும் எம்மவர்களின் சமூகப்படைப்புக்கும் இடையிலான வேறுபாடு. எம்மவர்களின் படைப்புக்கள் சமுகத்தை வழிகாட்டத்தவறுவதற்குக் காரணமும் இவையே..! இவை வெறும் கதைகளாக இருப்பதும் அதனாலேயே. :wub::D

Edited by nedukkalapoovan

சரி தான். ஆண்களுக்கு நடக்கின்ற கொடுமைகள், பாதிப்புகள் பற்றிய பதிவுகளும் வரவேண்டும். ஆண்களுக்கு நடந்த பாதிப்புகளை அடிப்படையாக வைத்து கதைகளைத் தாருங்கள். நாங்கள் வாசித்து கருத்தெழுத ஆவலாயுள்ளோம். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சரி தான். ஆண்களுக்கு நடக்கின்ற கொடுமைகள், பாதிப்புகள் பற்றிய பதிவுகளும் வரவேண்டும். ஆண்களுக்கு நடந்த பாதிப்புகளை அடிப்படையாக வைத்து கதைகளைத் தாருங்கள். நாங்கள் வாசித்து கருத்தெழுத ஆவலாயுள்ளோம். :wub:

வெளிவரும் சில பேப்பர்கள் கூட அவை தங்களுக்கு என்று ஒரு குறுகிய குழுமத்தை தெரிவு செய்து வைச்சுக் கொண்டு அவைக்குள்ள உள்ள சிந்தனைகளை மட்டும் தானே மீள மீள பிரசுரிக்கினம். பரந்த சமூகத்தில இருந்து கருத்துக்கள் பல வடிவங்களில வாறதை உற்சாகப்படுத்திறதோ அவற்றைப் பிரசுரிக்க கோருவதோ.. அதற்கு முன்னிலை அளிப்பதோ இல்லையே.

தங்கட குழுமத்துக்கையே... கதாசிரியர்கள்.. செய்தியாளர்கள்.. ஊடகவியலாளர்கள்.. புனைகதை எழுத்தாளர்கள்.. கவிஞர்கள்.. அரசியல் ஆய்வாளர்கள்.. பகுத்தறிவுவாதிகள்.. என்று சிந்தனைகள் ஒரு சிறு குழுமத்துக்க ஒரு சிலருக்குள்ள வட்டமடிக்கிறது.. அதுவே சலிப்பை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. இங்கும் அதையே செய்வது சரியல்ல. இங்கு பலரும் பலவிதமான கோணங்களில் எழும் சிந்தனைகளில்.. அவர்களின் பார்வைகளில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்த அனுமதி இருக்கிறது. எனவே நீங்களும் உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள். எழுதுங்கள். நாங்களும் எழுதுகின்றோம். :D

உண்மையில் நான் ஆண்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி அறிந்தது மிக மிகக் குறைவு. (அதற்காக அப்படி நடப்பதில்லை என்று சொல்லவரவில்லை). அப்படி அறிந்தால் பகிருகிறேன்.

எனவே நீங்களும் உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள். எழுதுங்கள். நாங்களும் எழுதுகின்றோம். :wub:

உண்மையில் நான் ஆண்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி அறிந்தது மிக மிகக் குறைவு. (அதற்காக அப்படி நடப்பதில்லை என்று சொல்லவரவில்லை). அப்படி அறிந்தால் பகிருகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இதனை விடவும் சிறப்பாக வந்து இருக்கும் என நினைக்கின்றேன். அனுபவத்தொற்றலை ஏற்படுத்துவதில் இன்னும் கொஞ்சம் மினக்கெடுத்து இருக்கலாம். அத்துடன் 'என்ரை குடும்பத்துக்கு காசனுப்ப விட்டவன்" என சுய நியாயப்படுத்தல் பெண்ணுக்கு இருக்க வேண்டிய பொருளாதார சுதந்திரத்தையும் அது பற்றிய உணர்வையும் கேள்விட்பட்டுத்துகின்றது. பொருளீட்டுபவரிற்கு அதனை செலவு செய்யும் சுதந்திரம் இருப்பதாக நான் நம்புகின்றேன். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்

-நிழலி--

இத்தகைய சம்பவங்கள் போல நிறையவே சொல்லப்படமுடியாத் துயராக புலத்தில் பலரது வாழ்வு முற்றாத் துயராக இருக்கிறது. அடுத்தடுத்த கதைகளில் அனுபவத்தொற்றல் தொடர்பில் சிரத்தையெடுக்கிறேன் நிழலி.

மேற்படி கதையில் பல வெட்டுக்கொத்துகள் செய்தே பிரசுரிக்க வேண்டி வந்தது. இந்தக்கதையின் நாயகி அண்மையில் தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்டுள்ளாள். என்னதான் எங்கள் பெண்கள் உழைத்தாலும் தனது சொந்தத்துக்கோ அல்லது உறவினருக்கோ பணம் அனுப்புவதாயின் சற்று பின்னேதான் நிற்கிறார்கள். துணிச்சலோடு தனது உழைப்பிலிருந்து உதவுவதை இவர்களால் முடியாது தான் இருக்கிறது. இல்லது கணவனுக்குத் தெரியாமல் உதவுவதும் கண்கூடு.

பொருளீட்டுபவருக்கு அதைச் செலவளிக்கும் சுதந்திரம் இருப்பதை நானும் நம்புகிறேன். இந்தத் துணிச்சல் எத்தனை பேருக்கு வரும் என்பது தான் கேள்வி.

தங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி.

இவ்வாறான அவலங்களை தொடர்ந்து பதிவு செய்யுங்கள். சந்தேகம் குளியல் அறையுடன் நிற்கின்றது, அதையும் தாண்டி மாடியில் இருந்து மனைவியையும் குழந்தையையும் தள்ளி கொன்ற நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றது. பாதிக்கப்படும் பெண்கள் தமக்குரிய பாதுகாப்பை பற்றி யோசிக்க வேண்டும்.

இந்தக் கதையின் நாயகியும் மாடியிலிருந்துதான் சுகன் குதித்துள்ளாள்.இரண்டாவது மாடியென்றதால் என்னவோ சாகாமல் தப்பித்தது அதிசயம்தான். இத்தகைய பெண்களுக்கான சமூக உதவிகள் இந்தநாட்டு பெண்களுக்கான நிறுவனங்கள் மற்றும் பல வகைகளில் இருக்கிறது. ஆயினும் இங்கெல்லாம் சென்று தங்களைப்பாதுகாத்துக்கொள்ள முன்வருவோர் குறைவு.

முதலில் பெரிய பிரச்சனை மொழி. மொழியறிவுக்கான கற்கைக்கான வசதிகள் பலருக்கு இருந்தும் அதை பயன்படுத்தாமல் தங்களுக்கு இக்கட்டான சூழல் வருகின்ற போது துயருறும் நிலமைகள் தான் கண்கூடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி தான். ஆண்களுக்கு நடக்கின்ற கொடுமைகள், பாதிப்புகள் பற்றிய பதிவுகளும் வரவேண்டும். ஆண்களுக்கு நடந்த பாதிப்புகளை அடிப்படையாக வைத்து கதைகளைத் தாருங்கள். நாங்கள் வாசித்து கருத்தெழுத ஆவலாயுள்ளோம். :wub:

மல்லிகைவாசம் ! இங்கு தனித்து ஆண்களில் தவறென்று ஆண்களை குற்றம் சுமத்திக் கதையில் எந்த ஆரூடமும் இல்லை. மருண்ட கண்ணுக்கு இருண்டதெல்லாம் கணக்கில் சிலர் தங்கள் அரியண்டம் மிக்க எண்ணங்களை இங்கு கொட்டி திருப்திப்படுகிறார்கள்.

நானும் வாசித்தனான் ஆனால் கருத்து எழுதவில்லை..எங்களுக்கு நன்றியில்லையோ?

:rolleyes: புத்தனுக்கும் நன்றிகள். :unsure: புத்தர் ஞானியெல்லோ அதாலை சொல்லமறந்திட்டேன். கோவிக்காதையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நான் வேலைக்குப்போட்டு இல்லாட்டி எங்கையாவது வெளியில போட்டு வந்தா இழுத்துக்கொண்டு போய் பாத்றூமுக்கை வைச்சு உள்ளுடுப்பை உரிஞ்சு பாக்கிறார்

மருண்ட கண்ணுக்கு இருண்டதெல்லாம் கணக்கில் சிலர் தங்கள் அரியண்டம் மிக்க எண்ணங்களை இங்கு கொட்டி திருப்திப்படுகிறார்கள்.

அடிப்படையில் இந்தக் கதைக் கூட அதே மருண்டவள் கண்ணும்.. அரியண்டமும் தானே கொண்டு வந்திருக்குது.

ஆரோ ஒருத்தனாம்.. மனிசி வெளில போயிட்டு வந்திட்டுது என்று பாத்ரூமுக்க கொண்டு போய் உரிஞ்சு பார்த்தானாம். உது அரிகண்டமா தெரியல்ல எழுதினவைக்கு.. அதையே ஒரு பொம்பிள தன்ர கணவன் மீது நம்பிக்கையில்லாம செய்தா அதைச் சொன்னா அரியண்டமாம். உலகத்தை எத்தனை காலந்தான் இப்படி.. பொம்பிளையள அப்பாவிகளாக் காட்டி அவை ஒன்றும் அறியாத பாப்பாக்களா சித்தரிச்சு.. அவையை ஆண்கள்.. உரிஞ்சு பாக்கினம் என்று கதையளக்கப் போறியளோ.

தாங்கள் எழுதிறது அரியண்டம்.. அதை இன்னொருத்தர் கண்டு சொன்னா.. சா... சா.. அதுதான் அசிங்கமாம். இவர்கள் எல்லாம்.. கதை ஆசிரியர்கள் தான்..! :lol::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குரைப்பதற்கெல்லாம் இங்க பதில் இல்லை. மனிதர்களுடன் தான் எனக்கு கருத்தாட விருப்பம். ஆக குரைத்தலுக்கு பதில் குரைத்து எனது சக்தியையும் நேரத்தையும் வீணாக்கமாட்டேன்.

நன்றி.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

தாலி அறுப்பு என்று ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளின் மானத்தையே பத்திரிகைகளில் ஏற்றி தம்மை விளம்பரப்படுத்த.. அவளை கூறுகூறாக அறுத்தவர்களுக்கு.. தாங்கள் ஆண்கள் சமூகத்தை குறைக்கண்ணுடன்.. அசிங்கமாகப் பார்த்துக் கதையளப்பதில்.. உள்ள குரைத்தல் தெரியாது. ஆனால் சமூகத்தில் உள்ள பெண்களின் தவறான பக்கங்களை.. ஆண்கள் விரோத.. ஆண்கள் மீதான சந்தேகத்துடன் கூடிய செயற்பாடுகளை இனங்காட்டுவது என்பது.. குரைத்தலாகத்தான் தெரிகிறது.

உண்மையில்.. இவர்கள் சமூகக் கதாசிரியர்களா... தனிநபர் புகழுக்காக தம்மை பெண்ணிலைவாதிகள் என்று இனங்காட்ட பத்திரிகைகளுக்கு கதை எழுதுபவர்களா என்ற கேள்வியே இங்கு மிகுந்து நிற்கிறது. இவர்களின் கீழ்த்தரமான சொல்லாடல்களுடன் அமையும் கதைகளும்.. பதில்களும்..! :lol::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குரைப்பதற்கெல்லாம் இங்க பதில் இல்லை. மனிதர்களுடன் தான் எனக்கு கருத்தாட விருப்பம். ஆக குரைத்தலுக்கு பதில் குரைத்து எனது சக்தியையும் நேரத்தையும் வீணாக்கமாட்டேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் சிலர் தங்களின் விளம்பரம் தேடும் உளவியல் பிரச்சனை காரணமாக ஆண்கள் சமூகத்தின் மீது மட்டும் குற்றம் சுமத்தி.. அருவருக்கத்தக்க வகையில் எழுதி வரும் கதைகளின் தன்மைகளை இனங்காட்டுகிறோமே தவிர.. இவ்வாறான கீழ்த்தரமான மூன்றாம் தர எழுத்துக்களுக்கு பதில் அளிப்பதில் எமக்கும் ஆர்வமில்லை. :lol::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குரைப்பதற்கெல்லாம் இங்க பதில் இல்லை. மனிதர்களுடன் தான் எனக்கு கருத்தாட விருப்பம். ஆக குரைத்தலுக்கு பதில் குரைத்து எனது சக்தியையும் நேரத்தையும் வீணாக்கமாட்டேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குரைப்பதற்கெல்லாம் இங்க பதில் இல்லை. மனிதர்களுடன் தான் எனக்கு கருத்தாட விருப்பம். ஆக குரைத்தலுக்கு பதில் குரைத்து எனது சக்தியையும் நேரத்தையும் வீணாக்கமாட்டேன்.

நன்றி.

அக்கோய் குரைக்கமாட்டன் என்று சொல்லி சொல்லியே பல தரம் குரைக்கிறீங்கள். :)

Edited by Elli^kuddi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.