Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்விழா காணும் சிட்னி கோசிப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொன் விழா காணும் கோசிப்

மீண்டும் ஒரு கோசிப்பில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

என்னுடைய நண்பன் ஒருத்தரை ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று கனநாளா எதிர்பார்த்து கொண்டிந்தனான்.இன்று தான் சந்தர்ப்பம் கிடைத்தது.சின்ன வயதில் இருந்து ஒன்றாக படித்தனாங்கள் அப்பவே அவன் நல்ல கெட்டிகாரன்.யாழ்பாணத்தான் சின்ன வயசிலையே கெட்டிகாரன் என்றால் இப்ப வெளிநாட்டில அவர்கள் எப்படி பதவியில இருப்பார்கள் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

அவர் தொழில் நிமித்தம் உலகம் சுற்றுவார் வருடத்தில் பத்து தடவையாவது வெளிநாடு தொழில் நிமித்தம் சென்று வருவார் (புத்தனின் நண்பன் வெளிநாட்டு புளுகுகள் எல்லாம் எங்களுக்கு எதற்கு என்று நீங்கள் புலம்புவது விளங்கிறது).இந்த வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவரின் ஆடைகளிள் அவ்வளவு பெரிய மாற்றங்கள் இருக்காது.அதாவது சிட்னியில் தொழிற்கு எப்படி போவாரோ அப்படி தான் அமெரிக்காவோ சிங்கபூரோ அல்லது இலண்டனிற்கோ போய் வருவார்.

ஆனால் தான் பிறந்து வளர்ந்த நாட்டுக்கு போகும் போது மட்டும் "கோர்ட் சூட்" போட்டு ஸ்டைலா போவார் இதன் மர்மன் என்னவெண்டு அறிய வேண்டும் என்று அவரிடமே கேட்டேன்.என்ன மச்சான் நீ சிறிலங்கா போறதென்றால் "டிப் டொப்பா" போறாய்டப்பா என்ன விசயம் என்று கேட்டேன்.ஏதாவது சின்ன வீடு இருக்குதோப்பா. :unsure:

அண்ண அதுவொரு பெரிய கதை என்று பக்கத்தில் நின்ற மனைவி தான் விசயத்தை புட்டு வைத்தா.சிறிலங்காவில் ஆமிகாரனின்ட தொல்லைக்கு பயந்து தான்.அவரிண்ட பெயரும் எங்களிண்ட தலைவரின்ட பெயரும் ஒரே மாதிரி அதன் காரணமாக் சில நேரத்தில் விசாரணைகள் என்று ஆமிகாரன் அலுப்பு கொடுக்கிறாங்களாம் உப்படி ஸ்டைலா வெளிகிட்டா ஆமிகாரன் கண்டால் அவ்வளவாக அலுப்பு கொடுக்கமாட்டான் பெரிய உத்தியோகம் என்று நினைத்து பேசாமல் விட்டு விடுவான் அது தான் அவர் இப்படி வெளிகிட்டு போறவர்.

இப்படி தான் ஒருக்கா நானும் இவரும் கொழும்பிற்கு போகும் போது விமானதிற்குள் வைத்து சொல்லிபோட்டார் உந்த பொட்டெல்லாம் வைத்து கொண்டு நாங்கள் தமிழன் என்று அவங்களுக்கு காட்டாமல் பேசாமல் பொட்டை வைக்காமல் விடும் என்று.

விமானநிலையத்தில் இருந்து வீட்ட போகும் வரைக்கும் மனிசன் தமிழிலே கதைக்கவில்லை இங்கிலிசில தான் என்னோடும் கதைத்து கொண்டு வந்தவர் என்றா பாருங்கோவன்.சிறிலங்கா சிங்களம் என்றால் மனிசனிற்கு ஒரு பயம்.

உப்படி தான் உவர் உந்த பயத்தால்,இங்க சிட்னியில இருக்கிற சிறிலங்கா தூதுரவகதிற்கு என்னோட வந்தவர் என்ற கடவுசீட்டை புதுபிக்க.அங்க நான் தமிழில் அவரோடு கதைக்க சத்தம் போட்டு தமிழில கதைக்காதே என்று அதட்டினார் எனக்கு வந்ததே கோபம் இங்க "சிறிலங்காவிற்கு போகும் பொழுது பயப்பிட்டீங்க அதில நியாயம் இருக்குது.இங்க சிட்னியில சிறிலங்கா தூதுரவகதிற்குள் தமிழ் கதைக்க வேண்டாம் என்று சொல்லுறது எனக்கு நியாயமா படவில்லை இங்கையும் தமிழில கதைக்க ஏலாட்டி எங்க தான் கதைக்க போறீங்கள் என்று கத்தி போட்டு நான் தமிழில தான் கதைச்சனான்".

இந்த மனிசனிற்கு எல்லாத்திற்கும் பயம் என்று நண்பனின் மனிசி சொல்லி முடித்தாள்

புத்தனும் அப்படி தான் கொழும்பிற்கு போறது என்றால் கொஞ்சம் அவதானமா தான் போறனான்.இந்த பொம்பிளைகள் சும்மா சொல்லுவீனம் ஆனால் எங்களுக்கு அல்லோ தெரியும் ஆமீகாரனிண்ட விசாரணைகள்.

இது ஜம்பதாவது சிட்னிகோசிப் இந்த ஜம்பது கோசிப்புகளையும் சேர்த்து ஒரு புத்தகமா வெளியிட எண்ணியுள்ளேன் அதை பற்றிய உங்கள் கருத்தென்ன.புத்தகத்தின் முகவுரை எழுத கந்தப்புவிடம் கேட்டுள்ளேன் அணிந்துரைக்கு வழங்குவதிற்கு ஜம்மு சம்பதித்துள்ளார்.

எங்க அச்சடிக்கலாம் என்று நீங்களே சொல்லுங்கோ.உங்களின் பெயர்களும் இடம்பெறவேண்டின் தொடர்பு கொள்ளுங்கோ. :lol:

இது வரை காலமும் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து என் கோசிப்பையும் வாசித்து கருத்துகள் எழுதி உற்சாபடுத்திய அனைவருக்கும் இது சமர்பணம்.நான் உந்த கோசிப் எழுதுவதிற்கு எனது திறமை எதுவுமல்ல நீங்கள் தான் காரணம்.நீங்க இல்லாவிடில் கோசிப் இல்லை.

என் இனிய கோசிப் வாசகர்களே மீண்டும் எனது 75 கோசிப்பில் சந்திக்கும் வரை விடைபெறுகிறேன். :)

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

பொன் விழா காணும் சிட்னி கொசிப் ஆசிரியர் புத்தனுக்கு நல் வாழ்த்துக்கள். :unsure:

பொன்னான கோசிப்புக்கு வாழ்த்துக்கள் புத்தன். :)

என் இனிய கோசிப் வாசகர்களே மீண்டும் எனது 75 கோசிப்பில் சந்திக்கும் வரை விடைபெறுகிறேன். :lol:

அப்ப இனி 51 - 74 கோசிப்பை எழுதமாட்டீங்களா? :unsure:

வாழ்த்துக்கள் புத்தா. மேலும் மேலும் உங்கள் கோசிப்புகள் தொடரவும் வாழ்த்துக்கள். அணிந்துரை, மற்றும் முகவுரைக்குச் சரியான ஆட்களைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நீங்கள் சொல்லுற அந்த உங்கடை நண்பன் எனக்கும் நண்பன் எண்டு நினைக்கிறன் அதாவது ஊடகத்துறையிலை உள்ளவரா??அப்பிடியெண்டால் நீங்கள் எழுதியவரும் நான் நினைப்பவரும் ஒண்டுதான் :unsure:அடுத்ததாய் பொன்விழா பித்தளை விழாவெல்லாம் கொஞ்சம் அதிகப்டியானது :lol::) அடுத்ததாய் பொன்னாடை கேப்பீங்கள் போலை :D :D

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

புத்து உங்கள் கோசிப்பில் பெரிய ஒரு உண்மை ஒழிந்துள்ளது.சிங்கள நாட்டில் வாழும் தமிழர்கள் பேச முடியாமல் கண்களால் கதைப்பதும் எமது பாரம்பரியங்களை வெளிப்படுத்த முடியாமல் அடிமைத்தனமாக இருக்கிறார்கள்.

அது சரி என்ன புத்தகமெல்லாம் வெளிவிடுற மாதிரி இருக்கு

என்ன இலவசமோ அல்லது இப்பவே ஒதுங்கவோ?

வாழ்த்துக்கள் புத்தன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது பொன் வாழ்த்துக்கள் புத்தன்.

அணிந்துரை வழங்குபவரைப்பற்றி ஒருதடவைக்கு நாலுதடவைகள் முன்பின் யோசித்து முடிவெடுக்கவும். :lol:

எனது இந்த அறிவுரை உங்களின் நன்மைக்கே :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி கொசிப் ஆசிரியர் புத்தனுக்கு வாழ்த்துக்கள் , வென்று வருக ..........

//இது ஜம்பதாவது சிட்னிகோசிப் இந்த ஜம்பது கோசிப்புகளையும் சேர்த்து ஒரு புத்தகமா வெளியிட எண்ணியுள்ளேன் அதை பற்றிய உங்கள் கருத்தென்ன.புத்தகத்தின் முகவுரை எழுத கந்தப்புவிடம் கேட்டுள்ளேன் அணிந்துரைக்கு வழங்குவதிற்கு ஜம்மு சம்பதித்துள்ளார்.//

நல்ல கூட்டணி தான் :P க்கிகிகி

வாழ்த்துகள் புத்த்ஸ் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் புத்தன் :) ,தொடர்ந்து எழுதுங்கோ

வாழ்த்துக்கள் புத்தன்

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் புத்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் புத்து சொல்லுற மாதிரி கரக்ரரோட முன்னொரு காலத்தில் இருந்த ஆள் தான். உப்படித்தான் "சி"னக்குப் பயந்து இங்கிலீசில பேசிட்டு கொழும்பில திரியுறது. அதிலும் ஆமிக்காரன் ஐடி கேட்டான் என்றால் யுனி ஐடியைக் காட்டிறது... அவனும் படிக்கிற பொடியன் ஆக்கும் என்றிட்டுவிட்டிடுவான்.

இப்படி இருக்கேக்க ஒரு நாள் ரூபவாகினியில் திடீர் என்று மான் குட்டி ஒன்று தோன்றுது நின்று நாலு பக்கமும் பார்க்குது.. அப்புறம் குண்டு இருக்கும் கவனம் என்றிட்டுப் போகுது. அதனைத் தொடந்து ஒரு பொடியன் புத்தகமும் கையுமா நடந்து போறான். அவனை இராணுவம் மறிச்சு விசாரிக்குது. புத்தகத்தை விரிச்சுப் பார்த்தா அதுக்குள்ள குண்டு. அதைப் பார்த்த எனக்கு திக் என்று போச்சுது. அடப்பாவிகளா நம்ம மடியிலும் கைவைச்சிட்டுயளா என்று. :)

இப்படி இருக்கேக்க நாலு விசயம் அறிஞ்ச ஆமிக்காரன் ஒருத்தன் ரிப் ரொப்பா போன என்னை வழியில வைச்சு மறிச்சுப் போட்டான். நானும் வழமையா யுனி ஐடியை எடுத்து விலாசமாக் காட்டினன். அவன் அதை வாங்கி வடிவாப் பார்த்திட்டு.. நசனல் ஐடி காட்டும் பொலிஸ் பதிவும் தா என்றான். திக் என்று போச்சுது. ஏன் தெரியுமோ.. நசனல் ஐடிகாட்டில வதிவிட முகவரி கொழும்பு. ஆனால் பிறந்தது யாப்பனய என்றெல்லோ கறுமம் போட்டிருக்குது. அவனும் அதைப் பார்த்திட்டு.. போய் சுவரோரமா மதிலைப் பார்த்துக் கொண்டு குந்தடா என்று விட்டிட்டான். தன்ர கப்டன் வந்து விசாரிச்சுப் போட்டுத்தான் உன்னை விடுவது பற்றி யோசிக்கலாம் என்றான். எனக்கோ.. குலப்பன் அடிக்கத் தொடங்கிட்டுது.

அப்புறம் கப்டன் வந்தான். அவன் வந்ததும் வராததுமாய் தோளில கிடந்த பாக்கைப் பறிச்சு.. சோதனை போட்டான். அதுக்கில்ல நல்ல காலம் இரண்டு பாடப்புத்தமும்.. நாலு அசைன்மன்ரும் இருந்திட்டுது. என்ன படிக்கிறதா என்று கேட்டான். நானும் தலையாட்டினன். அப்புறம் வாங்கின எல்லாத்தையும் தந்திட்டு.. எனி எங்க கேட்டாலும் நசனல் ஐடி அல்லது பாஸ்போட்தான் காட்டனும்.. என்று வோன் பண்ணிட்டு போடா என்று கலைச்சுவிட்டான். :o

இதில என்ன கோசிப்பு இருக்கு என்டு எனக்கு விளங்கேலே பாருங்கோ. இதை பயணக் குறிப்பில போட்டு இருக்காலாம் புத்து... இலங்கைக்கு போகும் போது பில்லா அஜித் மாதிரியும், மற்ற இடங்களுக்கு போகும் போது, விரும்பினால், பருத்தி வீரன் மாதிரியும் போகாலாம் என்று.

இப்ப என்ன பிரச்சனை என்றால், துப்பாக்கி வைத்து இருக்கிறவனோட ஆமிகாரனோட, நியாம், அனியாம் பேசலாமோ? உங்கட கூட்டாளி புத்தி சாலி பிழைத்துக் கொள்ளுவார், அவரின்ட மனிசி ஒரு ஓட்டை வாய், அது மட்டும் நல்லாய் தெரியுது. அவரின்ட குடும்பத்துக்கு கிட்ட நின்றால், சிட்னி கோசிப்பு பொன் விழா என்ன 100 வது விழாவே கொண்டாடும்.

வாழ்க வளமுடன்.

Edited by பொன்னி

அணிந்துரை..!!

அன்று தொடக்கம் இன்று வரை..ரை டமிழ்சிற்கு "கோசிப்" எண்டால்..ல் அதில் தனி ஈடுபாடு..டு.. :( அதிலும் மற்றவர்களை பத்தி "கோசிப்" அடிப்பது எண்டால் அவர்களை மிஞ்ச யாரும் இல்லை,அந்த வகையில் இவ் நூலாசிரியர் திருவாளர் புத்தன் அவர்களிவ் துறையில் மிகவும் தேர்ச்சி பெற்றி ஒரு மாமேதை எண்டு சொல்வதில் எவ்வித ஜயபாடும் இல்லை என்பதே என் கருத்து.. :D

நான் இலக்கிய துறையில் உள்பிரவேசித்த காலத்தில்..(என்ன லுக்கு வேண்டி கிடக்கு) :) ..அவரும் இவ் கோசிப் துறையில் இறங்கி மகத்தான சாதனைகளை செய்துள்ளார்..அவரின் சாதனைக்கு எடுத்துகாட்டாக யாழ்களத்தில் வெட்டு வாங்கிய கோசிப்புகளை எடுத்து கொள்ளளாம். :lol: .

அத்தகைய தேர்ச்சி பெற்ற ஒருவரால் இவ் நூல் வரையபட்டு இருப்பது இலக்கிய துறைக்கு கிடைத்த ஒரு வரபிரதாசம் என்று தான் சொல்ல வேண்டும்..மேலும் அவரின் பணி தொடர வாழ்த்தி..தி விடைபெறுகிறேன்..ன்.. :wub:

இப்படிக்கு,

அவுசில ஒரு சங்கத்தில இருக்கிற..(ஏதாவது சங்கத்தை சொல்லி அடி வாங்க ஏலாது தானே)..

ஜம்மு பேபி..

(காணுமே அணிந்துரை வேற ஏதாவது இடைகிடை சேர்கணும் எண்டாலும் சேர்த்து கொள்ளுங்கோ என்ன).. :lol:

*பி.கு - வேற யாருக்கும் நான் அணிந்துரை வழங்க வேண்டும் எண்டாலும் கேளுங்கோ என்ன..ன கூச்சபடாம..ம் என்ன..!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

அணிந்துரை வழங்குபவரைப்பற்றி ஒருதடவைக்கு நாலுதடவைகள் முன்பின் யோசித்து முடிவெடுக்கவும்.

எனது இந்த அறிவுரை உங்களின் நன்மைக்கே

கு.சா தாத்தா..தா..!!.. :(

என்ன உப்படி சொல்லிட்டியள் இப்படி ஏதாவது எழுதி நானும் உந்த டமிழ் சமூகத்தில பெரிய ஆள் ஆகிறது உங்களுக்கு விருப்பமில்லையே..யே..நான் ஒராளாகிட்டன் எண்டா பின்னால உங்களையும் உயர்திடமாட்டனே..னே இது எல்லாம் ஒரு வகையில பிசினஸ் தான்..ன்.. :D

புரிந்து கொண்டு ஒத்துழைக்கணும் என்ன..ன..!!

அது சரி நீங்க என்னவோ கள்ளுகொட்டிலும்..ம் என் அனுபவங்களும் எண்டு புத்தகம் எழுதுறதா கேள்வி வேண்டும் எண்டா அதுக்கும் நான் அணிந்துரை எழுதட்டோ..டோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

நான் இலக்கிய துறையில் உள்பிரவேசித்த காலத்தில்..(என்ன லுக்கு வேண்டி கிடக்கு) ..அவரும் இவ் கோசிப் துறையில் இறங்கி மகத்தான சாதனைகளை செய்துள்ளார்..

கிடைக்கிற கப்பில எல்லாம் தற்பெருமை பேசிறதே இந்த பெடின்ர வேலையாய் போச்சு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன் விழா காணும் சிட்னி கொசிப் ஆசிரியர் புத்தனுக்கு நல் வாழ்த்துக்கள். :)

வாழ்த்திற்கு நன்றி

பொன்னான கோசிப்புக்கு வாழ்த்துக்கள் புத்தன். :)

அப்ப இனி 51 - 74 கோசிப்பை எழுதமாட்டீங்களா? :lol:

வாழ்த்திற்கு நன்றி 51யில இருது 74 வரை வருவேன்.என் ரசிகர்களை நான் ஏமாத்தமாட்டேன் :)

வாழ்த்துக்கள் புத்தா. மேலும் மேலும் உங்கள் கோசிப்புகள் தொடரவும் வாழ்த்துக்கள். அணிந்துரை, மற்றும் முகவுரைக்குச் சரியான ஆட்களைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்து உங்கள் கோசிப்பில் பெரிய ஒரு உண்மை ஒழிந்துள்ளது.சிங்கள நாட்டில் வாழும் தமிழர்கள் பேச முடியாமல் கண்களால் கதைப்பதும் எமது பாரம்பரியங்களை வெளிப்படுத்த முடியாமல் அடிமைத்தனமாக இருக்கிறார்கள்.

அது சரி என்ன புத்தகமெல்லாம் வெளிவிடுற மாதிரி இருக்கு

என்ன இலவசமோ அல்லது இப்பவே ஒதுங்கவோ?

இலவசமா தான் கொடுக்க வேண்டும் இல்லாட்டி யார் காசு கொடுத்து வாசிக்க போகீனம்.

வாழ்த்துக்கள் புத்தன்.

நன்றி வாசகன்.

எனது பொன் வாழ்த்துக்கள் புத்தன்.

அணிந்துரை வழங்குபவரைப்பற்றி ஒருதடவைக்கு நாலுதடவைகள் முன்பின் யோசித்து முடிவெடுக்கவும். :lol:

எனது இந்த அறிவுரை உங்களின் நன்மைக்கே :)

என்ன பொன் வாழ்த்துகளோட விட்டிட்டியள் வைர வாழ்த்துகள் என்று அல்லோ சொல்ல வேண்டும். :)

சிட்னி கொசிப் ஆசிரியர் புத்தனுக்கு வாழ்த்துக்கள் , வென்று வருக ..........

நன்றி நிலாமதி

//இது ஜம்பதாவது சிட்னிகோசிப் இந்த ஜம்பது கோசிப்புகளையும் சேர்த்து ஒரு புத்தகமா வெளியிட எண்ணியுள்ளேன் அதை பற்றிய உங்கள் கருத்தென்ன.புத்தகத்தின் முகவுரை எழுத கந்தப்புவிடம் கேட்டுள்ளேன் அணிந்துரைக்கு வழங்குவதிற்கு ஜம்மு சம்பதித்துள்ளார்.//

நல்ல கூட்டணி தான் :P க்கிகிகி

வாழ்த்துகள் புத்த்ஸ் :)

நன்றி தூயா

வாழ்த்துக்கள் புத்தன் :) ,தொடர்ந்து எழுதுங்கோ

நன்றி சுப்பண்ணா

வாழ்த்துக்கள் புத்தன்

நன்றி யாழ்கவி.உந்த அவதாரில நிற்கிற பெடியனை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு. :lol:

தொடரட்டும் புத்தன்.

நன்றி முனிவர்.

நானும் புத்து சொல்லுற மாதிரி கரக்ரரோட முன்னொரு காலத்தில் இருந்த ஆள் தான். உப்படித்தான் "சி"னக்குப் பயந்து இங்கிலீசில பேசிட்டு கொழும்பில திரியுறது. அதிலும் ஆமிக்காரன் ஐடி கேட்டான் என்றால் யுனி ஐடியைக் காட்டிறது... அவனும் படிக்கிற பொடியன் ஆக்கும் என்றிட்டுவிட்டிடுவான்.

இப்படி இருக்கேக்க ஒரு நாள் ரூபவாகினியில் திடீர் என்று மான் குட்டி ஒன்று தோன்றுது நின்று நாலு பக்கமும் பார்க்குது.. அப்புறம் குண்டு இருக்கும் கவனம் என்றிட்டுப் போகுது. அதனைத் தொடந்து ஒரு பொடியன் புத்தகமும் கையுமா நடந்து போறான். அவனை இராணுவம் மறிச்சு விசாரிக்குது. புத்தகத்தை விரிச்சுப் பார்த்தா அதுக்குள்ள குண்டு. அதைப் பார்த்த எனக்கு திக் என்று போச்சுது. அடப்பாவிகளா நம்ம மடியிலும் கைவைச்சிட்டுயளா என்று. :)

இப்படி இருக்கேக்க நாலு விசயம் அறிஞ்ச ஆமிக்காரன் ஒருத்தன் ரிப் ரொப்பா போன என்னை வழியில வைச்சு மறிச்சுப் போட்டான். நானும் வழமையா யுனி ஐடியை எடுத்து விலாசமாக் காட்டினன். அவன் அதை வாங்கி வடிவாப் பார்த்திட்டு.. நசனல் ஐடி காட்டும் பொலிஸ் பதிவும் தா என்றான். திக் என்று போச்சுது. ஏன் தெரியுமோ.. நசனல் ஐடிகாட்டில வதிவிட முகவரி கொழும்பு. ஆனால் பிறந்தது யாப்பனய என்றெல்லோ கறுமம் போட்டிருக்குது. அவனும் அதைப் பார்த்திட்டு.. போய் சுவரோரமா மதிலைப் பார்த்துக் கொண்டு குந்தடா என்று விட்டிட்டான். தன்ர கப்டன் வந்து விசாரிச்சுப் போட்டுத்தான் உன்னை விடுவது பற்றி யோசிக்கலாம் என்றான். எனக்கோ.. குலப்பன் அடிக்கத் தொடங்கிட்டுது.

அப்புறம் கப்டன் வந்தான். அவன் வந்ததும் வராததுமாய் தோளில கிடந்த பாக்கைப் பறிச்சு.. சோதனை போட்டான். அதுக்கில்ல நல்ல காலம் இரண்டு பாடப்புத்தமும்.. நாலு அசைன்மன்ரும் இருந்திட்டுது. என்ன படிக்கிறதா என்று கேட்டான். நானும் தலையாட்டினன். அப்புறம் வாங்கின எல்லாத்தையும் தந்திட்டு.. எனி எங்க கேட்டாலும் நசனல் ஐடி அல்லது பாஸ்போட்தான் காட்டனும்.. என்று வோன் பண்ணிட்டு போடா என்று கலைச்சுவிட்டான். :)

உந்த இராணுவ கெடுபிடியை எழுத போனா ஒரு மகாபாரதம்(மகாஈழமே) எழுதலாம். :D

இதில என்ன கோசிப்பு இருக்கு என்டு எனக்கு விளங்கேலே பாருங்கோ. இதை பயணக் குறிப்பில போட்டு இருக்காலாம் புத்து... இலங்கைக்கு போகும் போது பில்லா அஜித் மாதிரியும், மற்ற இடங்களுக்கு போகும் போது, விரும்பினால், பருத்தி வீரன் மாதிரியும் போகாலாம் என்று.

இப்ப என்ன பிரச்சனை என்றால், துப்பாக்கி வைத்து இருக்கிறவனோட ஆமிகாரனோட, நியாம், அனியாம் பேசலாமோ? உங்கட கூட்டாளி புத்தி சாலி பிழைத்துக் கொள்ளுவார், அவரின்ட மனிசி ஒரு ஓட்டை வாய், அது மட்டும் நல்லாய் தெரியுது. அவரின்ட குடும்பத்துக்கு கிட்ட நின்றால், சிட்னி கோசிப்பு பொன் விழா என்ன 100 வது விழாவே கொண்டாடும்.

வாழ்க வளமுடன்.

உப்படியான மக்கள் இருந்தா தான் நாங்கள் என்னை மாதிரி படைப்பாளிகள் பெயரும் புகழும் அடையலாம். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அணிந்துரை..!!

அன்று தொடக்கம் இன்று வரை..ரை டமிழ்சிற்கு "கோசிப்" எண்டால்..ல் அதில் தனி ஈடுபாடு..டு.. :lol: அதிலும் மற்றவர்களை பத்தி "கோசிப்" அடிப்பது எண்டால் அவர்களை மிஞ்ச யாரும் இல்லை,அந்த வகையில் இவ் நூலாசிரியர் திருவாளர் புத்தன் அவர்களிவ் துறையில் மிகவும் தேர்ச்சி பெற்றி ஒரு மாமேதை எண்டு சொல்வதில் எவ்வித ஜயபாடும் இல்லை என்பதே என் கருத்து.. :)

நான் இலக்கிய துறையில் உள்பிரவேசித்த காலத்தில்..(என்ன லுக்கு வேண்டி கிடக்கு) :lol: ..அவரும் இவ் கோசிப் துறையில் இறங்கி மகத்தான சாதனைகளை செய்துள்ளார்..அவரின் சாதனைக்கு எடுத்துகாட்டாக யாழ்களத்தில் வெட்டு வாங்கிய கோசிப்புகளை எடுத்து கொள்ளளாம். :) .

அத்தகைய தேர்ச்சி பெற்ற ஒருவரால் இவ் நூல் வரையபட்டு இருப்பது இலக்கிய துறைக்கு கிடைத்த ஒரு வரபிரதாசம் என்று தான் சொல்ல வேண்டும்..மேலும் அவரின் பணி தொடர வாழ்த்தி..தி விடைபெறுகிறேன்..ன்.. :)

இப்படிக்கு,

அவுசில ஒரு சங்கத்தில இருக்கிற..(ஏதாவது சங்கத்தை சொல்லி அடி வாங்க ஏலாது தானே)..

ஜம்மு பேபி..

(காணுமே அணிந்துரை வேற ஏதாவது இடைகிடை சேர்கணும் எண்டாலும் சேர்த்து கொள்ளுங்கோ என்ன).. :)

*பி.கு - வேற யாருக்கும் நான் அணிந்துரை வழங்க வேண்டும் எண்டாலும் கேளுங்கோ என்ன..ன கூச்சபடாம..ம் என்ன..!! :)

அப்ப நான் வரட்டா!!

அணிந்துரையை வழங்கியமைக்கு நன்றி எங்க கந்தப்புண்ட சத்தத்தை காணல்ல. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.