Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதற்கு நாம் தயாராக இருக்கின்றோமா?

Featured Replies

இன்றய காலகட்டத்தில் நாம் தயாராக இருக்கின்றோமா? போராட்டத்திற்கு பக்கபலமாக இருக்கின்றோமா? நாம் எந்த அளவு பக்கபலமாக இருக்கின்றோம்? முப்படையும் கொண்ட ஒரு மரபுவழி படையாக தமிழர் தரப்பு வளர்ந்து வர எத்தனை இடர்களையும் தியாகங்களையும் வேதனைகளையும் கடந்து உள்ளது என்று யோசிக்க வேண்டும். இந்த நிலையை பலப்படுத்தும் அரசியல் பலம் எம்மிடம் இன்று உள்ளதா? இன்றய தருணங்களை பயன்படுத்த முடியாதவர்கள் நாளைய போராட்ட நீட்சிக்கு எந்த விதத்தில் தயாராக முடியும்?

இவைகளளை விட முக்கயமானது நாம் தமிழர் என்று எம்மை உணர்ந்து கொண்டது. நாம் எப்படிப்பட்ட இனம்? இனத்திற்கும் தேசியவாதத்திற்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தவர்கள்? சாதி மதம் வர்க்கம் என்பனவற்றிற்கே வரலாறு தெரிந்த காலம் தொட்டு முக்கியத்துவம் கொடுத்தவர்கள். இனமும் இன உணர்வும் இனத் தேசியமும் இரண்டாம் பட்சமாகவே எமக்கு இருந்துள்ளது. போராட்டம் இதை முதல் நிலைக்கு கொண்டுவந்துள்ளது. இன்றும் எதை முதன் நிலையில் வைத்துப்பார்க்க வேண்டும் என்ற தெளிவற்ற நிலையே எம்மவர்களின் பணிகளின் பின்னடைவுக்கு முதற் காரணம்.

நாம் எல்லோரும் தாயகத்தில் உருவானவர்கள். எமது அடுத்த தலைமுறை புலம்பெயர் தேசத்தில் உருவாகிக் கொண்டிருப்பவர்கள். எமக்கும் அடுத்த தலைமுறைக்கும் உள்ள தேசத்தின் மீதான பற்றுக்கும் உறுதிக்குமான இடைவெளி எவ்வளவு என்று பார்க்க வேண்டும். பலத்துடன் இருக்கும் போது எம்மால் முடியாததை அடுத்த தலைமுறை புலம் பெயர் நாட்டில் இருந்து எவ்வளவு தூரம் சாதிக்க முடியும்? இதற்கு என்ன அடிப்படை?

தேசியவாதம் என்பது உலகமயமாதலின் பின்பு பலமற்ற ஒன்றாக வேகமாக மாறிவருகின்றது. சிறு தேசிய இனங்கள் அழிவை நோக்கி வேகமாக நகர்கின்றது. உலகின் போக்கு வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றது. சிறு தேசிய இனங்களின் தேசியக் கட்டுமானம் என்பது நாளுக்கு நாள் சிதைந்து வருகின்றது . மொழி கலச்சாரம் பண்பாடு என்பன சிதைவடைகின்றது. எமது அடுத்த தலைமுறைக்கு எமது மொழியை பயிற்றுவிக்கவே படாதபாடு படவேண்டியுள்ளது.

இன்றய காலகட்டம் மிக முக்கயமானது. இன்றய சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் நாளை பற்றிய எந்த நம்பிக்கைக்கும் உத்தரவாதம் இல்லை. உலகின் போக்கு அச்சம் தருபவையாகவே உள்ளது. போரை எதிர்கொள்ளும் மக்கள் களைப்பின் எல்லையில் நிற்கின்றனர். சுதந்திரத்தை எந்த வகையில் உணருவதென்று தெரியாத நிலை. வேறு ஒரு நாட்டுக்கு சென்று விடுவதே சுதந்திரம் என்றளவில் போர் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அதற்கு நாமும் வழிகாட்டி நிற்கின்றோம். இதற்கு எமது இனத்தின் வரலாறும் வழித்தடமும் இன உணர்வை இரண்டாம் பட்சமாக பின்தள்ளி நகர்ந்தது பிரதான காரணத்தில் ஒன்றாகும். இன்றய காலகட்டத்தில் எவ்வளவு வீச்சாக நாம் உலக முற்றத்தில் குரல் கொடுக்கின்றோமோ அதுவே எமது இனத்தின் விடிவிற்கு வழிவகுக்கும். இன்றய காலகட்டத்தின் முக்கயத்துவத்தை உணரவும் உணர்த்தவும் நாம் தயாராக இருப்போமானால் அதிலிருந்தே நாளை பற்றிய ஒரு நம்பிக்கை துளிர்விடும்.

  • Replies 63
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஆய்வு சபேசன் அவர்களே தொடருங்கள்

எதற்குமே நான் தயார்

ஒரு கதை சொல்வார்கள். நெப்போலியன் ஒரு இடத்தைப் பிடிக்க முயன்றபோது அங்கே அவனது படைகளால் வெல்லமுடியவில்லை. தொடர்ந்து அப்படி நடந்து தோற்றுக் கொண்டே இருந்தது. இறுதியாக எல்லாப் படைகளையும் சண்டையிட அனுப்பி விட்டு, திரும்பி வரக்கூடிய பாலத்தை நெப்போலியன் உடைத்தான். அதன் பின்னர், தான் அப்படைகள் வென்றார்கள்.

உண்மைதான், இது மாதிரி ஒரு உத்தியைத்தான் சரத்பொன்சேகாவும் தற்பொழுது செய்து வருகிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.

சபேசன்! நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால், இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் அடிப்படைப் பலத்தை எதிர்க்க, எங்கள் தரப்பில் இருக்கும் பலம் (மனவுறுதி மிக்க போராளிகளுக்கு அடுத்ததாக) கனரக ஆயுதங்களும் வான்புலிகள் மற்றும் கடற்புலிகளின் பலமும்தான். நீங்கள் கூறுவதுபோல கரந்தடிப்படையாக மீண்டும் மாறவேண்டிய நிலை வந்தால் இவற்றின் நிலை என்ன? சிலநூறு போராளிகளாக இருக்கின்றபோது சாத்தியப்பட்டது பல்லாயிரம்பேராய்ப் பெருகியபின்னர் சாத்தியப்படுமா? ஸ்ரீலங்காப் படைகளோடு இருக்கும் ஒட்டுக்குழுக்களைப்பற்றிச் சிந்தித்தீர்களா?

தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் பலத்தைத் தொடர்ந்தும் தக்கவைத்திருக்கிறார்கள். அவர்கள் பின்னால் உலகத்தமிழினத்தில் ஒருவராக நாங்களும் நிற்கிறோம். அதில் சந்தேகமில்லை.

சிலபத்துப்பேராக ஆரம்பித்த போராட்டம் மீண்டும் அதேநிலைக்குப் போனால் என்ன செய்வது என்று சிந்திக்காமல், அப்படி ஆகாமலிருக்க நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைச் சிந்திப்பதே ஆரோக்கியமானது.

  • தொடங்கியவர்

நான் சொல்ல வருவதை ஓரிருவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன்.

பூநகரி வரை படையினர் முன்னேறியதை அடுத்து தமிழ் மக்கள் மத்தியில் உருவான சோர்வும், சலிப்பும், அதன் அடிப்படையில் வருகின்ற கருத்துகளை வைத்துமே என்னுடைய கேள்விகளை வைக்கின்றேன்.

வெற்றி பெறும் குதிரையில் பணம் கட்டுபவர்கள் போன்று சிலர் எமது விடுதலைப் போராட்டத்தை அணுகுகின்றார்கள்.

விடுதலைப் போராட்டத்திற்கு சிலர் காட்டும் எதிர்ப்பை விட சிலர் காட்டும் ஆதரவு அருவருப்பாக இருக்கின்றது.

வன்னி முழுவதும் சிறிலங்காப் படைகள் ஆக்கிரமித்தால், அப்பொழுது விடுதலைப் புலிகள் தமது போராட்டத்தை கைவிட்டு சரணடையப் போவது இல்லை. தொடர்ந்தும் விடுதலைப் போராட்டத்தை நடத்துவார்கள்.

ஆனால் நீங்கள் சரணடைந்து விடுவீர்களா என்பதை அறிவதற்கே என்னுடைய கேள்விகளை வைக்கிறேன்.

சரி, என்னுடைய கேள்வி புரியவில்லை என்றால், வேறு மாதிரிக் கேட்கிறேன்.

எமது விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதற்கு நீங்கள் வைக்கின்ற நிபந்தனைகள் எவை?

  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதற்கு நீங்கள் வைக்கின்ற நிபந்தனைகள் எவை?

முப்பது வருடங்களுக்கு பின் இப்படியொரு கேள்வியா???

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் தாயகத்தில் எங்கள் மக்களின் போராட்டம் ஏற்றத்தாழ்வுகள் பலவற்றைக் கண்டுதான் வெற்றிநடைபோடுகிறது. அங்கு எத்தகைய நிலை வந்தாலும் புலம்பெயர்ந்துவாழும் எம்முறவுகள் உறுதியாக நின்று தாயகத்தின் மீட்புப்போராட்டத்தில் தம் பங்கை ஆற்றுவார்களா? என்று கேட்டிருக்கிறீர்கள். நிச்சயமாக தாயகமீட்பிற்கு தம் செயற்பாடுகளை உறுதியாக வழங்க புலம் பெயர்ந்து வாழும் தமிழினம் பின்நிற்கப் போவதில்லை. இழப்பு என்பது எல்லோருக்கும் இருக்கிறது. வாழ்ந்த வீடு, விளையாடிய தெரு, படித்த பள்ளி, அணைத்த உறவு, பிரிந்த சொந்தம் என்று ஒவ்வொரு இதயங்களுக்குள்ளும் இழப்பின் வலிகள் கனன்று கொண்டுதான் இருக்கின்றன. கண்ணால் காண்பதும்பொய், காதால் கேட்பதும் பொய,; தீர விசாரிப்பதே மெய். ஒட்டாமல் நிற்கிறவர்களிடம் பேசிப்பாருங்கள் முதலில் கடுமையாகத்தான் தங்களை வெளிக்காட்டாமல் இருப்பார்கள். தொடர்ந்து பழகிப்பாருங்கள் உணர்வில்லாதவர்கள் என்று நாங்கள் நினைத்திருக்கக் கூடியவர்கள் மிகப்பெரும் பற்றுள்ளவர்களாக இருப்பார்கள். கொஞ்சக்காலத்திற்கு முன்பு நானே பலரை தாயகப்பற்றற்றவர்கள் என்று எண்ணியிருந்தேன். இன்றைய காலத்தில் அவ்வெண்ணத்தை மாற்றியுள்ளேன்.

சபேசன் கடைசியாக நீங்கள் களத்திற்குள் உலவும் நண்பர்களிடம் கேட்டிருக்கும் கேள்வி நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சியில் பொறுமை கடந்திருக்கும் ஆத்திரமுள்ள கருத்தாளனாக உங்களை இனம் காட்டுகிறது. நல்ல ஒரு விடயத்தைக் கருத்தாட எடுத்துவிட்டு நீங்களே அதனைத் தடம் மாற்றிவிடுவதுபோல் உள்ளது.

பூநகரி வரை படையினர் முன்னேறியதை அடுத்து தமிழ் மக்கள் மத்தியில் உருவான சோர்வும், சலிப்பும், அதன் அடிப்படையில் வருகின்ற கருத்துகளை வைத்துமே என்னுடைய கேள்விகளை வைக்கின்றேன்.

இந்த சோர்வு விசயம் தான் என்னவென்று விளங்கவில்லை. ஒரு தரப்பு சோர்ந்து போவதாகவும் மற்றத் தரப்பு சோர வேண்டாம் என்று உற்சாகம் கொடுப்பதாகவும் மக்களை வழிநடத்த முற்படுவது உண்மையில் புரியவில்லை. இது பரவலாக வானொலிகளிலும் கேட்கக் கூடியதாக உள்ளது. இதன் எதிர்வினை என்பது தக்க சமயத்தில் மக்களை ஒன்று செய்ய முடியாத பதுமைகளாக்கி விடுகின்றது.

போராட்டம் என்பதில் இருந்து அந்நியப்பட்ட ஒரு தன்மையின் ஊடாகத்தான் இந்த சோர்வை இனம் காண முடியும். முறையே நேரடியாக களத்தை சந்திக்கும் போராளிகள் அவர்களை தாங்கும் தாயக மக்கள் மற்றும் புலம் பெயர் மக்கள். அனைவருக்கும் பணிகள் வகுக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் மக்களை பொறுத்தவரை சர்வதேச அங்கீகாரத்துக்கான பரப்புரையும் இலங்கை அரசின் போர் முயற்சிக்கு உதவும் சர்வதேச நாடுகளின் உதவிகளை தடுப்பதும் பிரதான பொறுப்பாக உள்ளது. அவரவர் பணிகள் சரிவர நடைபெறும் போது மட்டுமே எமக்கு சாதகமான ஒரு நிலையை நோக்கி நகர முடியும். இங்கு புலம் பெயர் மக்கள் முதலில் களமுனையை ஊற்று நோக்க நிற்பந்திக்கப்படுகின்றனர். வழிகாட்டும் தேசியச் சார்பு ஊடகங்கள் ஆய்வுகள் இதையே தனது பிரதான நோக்காக கொண்டுள்ளது. தனது தலையாய பணி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. களத்தில் வெற்றி தோல்விகளுக்கு ஏற்ப அசையும் தன்மைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். போராட்டத்தில் இருந்து விலகி போராட்டத்தை உற்று நோக்கும் நிலையிலேயே சோர்வும் உற்சாகமும் இங்கு ஏற்படுகின்றது. போராட்டத்தில் ஒரு அங்கமாக தனது பணிகளை செய்யும் நிலை பிரதானமாக இருக்குமாக இருந்தால் நாளை நாம் தயாராக இருக்கின்றோமா என்ற கேள்வி வராது. ஏனெனில் விடுதலையை நோக்கி நிதானமாக இயங்கிக் கொண்டிருப்போம்.

உண்மையில் நாம் முதலில் பின்னடைவது பூநகரியிலோ அல்லது முகமாலையிலோ அல்ல. இலங்கை அரசின் போருக்கான தயார்படுத்தல் என்பதும் மூல வளங்களும் வெளிநாடுகளிலேயே உள்ளது. முதலில் இலங்கை அரசு இந்த நாடுகளை தனது பிரச்சாரத்தால் வெல்கின்றது. தனக்கு சாதகமாக மாற்றுகின்றது. அப்போது இந் நாடுகளில் இருக்கும் நாம் தோற்றுப்போகின்றோம். இந்த தோல்வியின் நீட்சியே பூநகரியோ அல்லது முகமாலையோ ஆகின்றது. ஒடுக்குமுறையை செய்பவன், இன அழிப்பை செய்பவன் வெல்கின்றான். அதை தடுக்க கோரவும், நியயம் கேட்கவும் என இருக்கும் நாங்கள் தோற்கின்றோம். இவ்வாறான புலம் பெயர்ந்தவர்களின் தோல்விகள் தாயக மக்களுக்கு முதலில் சோர்வை ஏற்படுத்தும் என்று நாம் ஏன் யோசிக்க மறுக்கின்றோம்?

விடுதலைப் போராட்டத்திற்கு சிலர் காட்டும் எதிர்ப்பை விட சிலர் காட்டும் ஆதரவு அருவருப்பாக இருக்கின்றது.

இது சிலர் என்பதுக்குள் அடங்காது.

  • தொடங்கியவர்

கடைசியாக நான் கேட்ட கேள்வியில் காட்டம் இருப்பது உண்மை. தம்மை ஆதரவாக காட்டிக் கொண்ட தமிழர்கள் சிலர் பின்னடைவு ஏற்படுகின்ற பொழுது வெளியிடும் கருத்துக்கள் என்னை அப்படி காட்டமாக எழுதத் தூண்டின.

போராட்டத்தோடு ஒட்டாமல் இருப்பவர்களை விடுங்கள். போராட்டத்தோடு ஒட்டி இருப்பதாக சொல்பவர்கள் ஒரு பின்னடைவு ஏற்பட்டவுடன் ஓடுவது பற்றித்தான் என்னுடைய கோபம் இருக்கிறது.

இங்கே கருத்து சொன்னவர்களில் பலர் "வன்னி ஆக்கிரமிக்கப்பட்டால் போராட்டம் முடிந்து விடும்" என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதைத் தாண்டி அவர்கள் சிந்திப்பதற்கு தயாராக இல்லை.

யாழ் குடாவின் வாசல் வரை வந்த விடுதலைப் புலிகள் இந்தியாவின் அழுத்தத்தினால்தான் யாழ்ப்பாணத்தை கைப்பற்றவில்லை என்று நம்புவதைத்தானே நாம் விரும்புகிறோம். அன்றைக்கு இருந்த உண்மையான நிலை பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்?

விடுதலைப் புலிகளின் பலம், பலவீனம் பற்றி எம்மில் எவருக்கும் இன்றைக்கும் சரியாகத் தெரியாது.

இந்த நிலையில் எமது விடுதலைப் போராட்டத்திற்கு போதுமான பங்களிப்பை வழங்காத நாம் விடுதலைப் புலிகள் மீது நியாயமற்ற அழுத்தங்களைப் போடுகிறோமோ என்று தோன்றுகிறது.

நாளை தொடர்கிறேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

:huh: சபேசன் அண்ணா,

உங்கள் கருத்துக்களை நானும் ஏற்றுக்கொள்கிறேன். யாழ்ப்பாணம் 2000 இல் ஏன் பிடிபடவில்லை என்பதற்கான காரணம், புலிகளின் அன்றைய ஆள் மற்றும் ஆளணிப் பற்றாக்குறையே அன்றி இந்திய அழுத்தம் அல்ல. அதேபோல் இன்று வன்னியில் நடக்கு போர் எமது போராட்டத்தின் முடிவும் அல்ல.

இவை எல்லாமே எமது ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கினால் ஏற்பட்டவை.புலிகள் பற்றிய அதீத கற்பனை கதைகளால் மக்களிடையே பலாத்காரமகாத் திணிக்கப்பட்டவை. இவ்வாறான எமது செயற்பாடுகள்தான் புலிகளின் மேல் இன்றுள்ள அழுத்தத்திற்கு காரணம் என்று நானும் நினைக்கிறேன்.

ஆனால் புலிகள் எடுக்கு எந்தத் தீர்மானத்துக்கும் நாம் எப்போதுமே எதிராகவோ அல்லது, ஆயத்தமின்றியோ இருந்ததில்லையே? அப்படியிருக்கும் போது இப்படியொரு கேள்வி ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தலைப்பை ஆரம்பித்தவர், கொரில்லாப் போராக மாறி ஏற்படும் பிரச்சனைகளை விளங்கப்படுத்தி, அப்படியொரு நிலமைக்குப் போகாமல் இருக்க நநாம் செய்ய வேண்டிய பங்களிப்பு என்னவென்று, சொல்லியிருந்தால் அதில் நசியாயம் இருக்கின்றது. மக்களின் பங்களிப்புப் பற்றிய ஆர்வத்தைப் புரிந்து கொண்டிருக்கலாம்.

வெறுமனே, வழமையான ஆய்வாளர்கள் போல, கொரிலாப் போருக்குப் போனால் எப்படி நடக்கும் என்ற ஆராய்வு எல்லாம் காலத்தின் தேவையா? நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்று, அடுத்த நாள் விடியற்காலமை எழும்பி நின்று யாரும் பார்க்கவில்லை. ஒவ்வொரு பின்னடைவான விடயங்களின்போதும் தமிழ்மக்கள் ஒன்றும் ஒதுங்கவில்லை. அது யாழ் இடப்பெயர்வு தொடக்கம் என்றைக்குமே!

சோர்வு, சோகம் என்பது ஏற்படுவது வழமையானதே. எதிரி முன்னேறுகின்றான் என்றால் அது கவலையைத் தருமே அன்றி சந்தோசத்தைத் தரப்போவதில்லை. அதனால் தான் பலர் தங்களின் கவலையை வெளிப்படுத்துகின்றனர். அதனால் சிங்கள அரசிடம் தமிழ் மக்கள் சரணடைவார்களா என்று கேட்பது அவர்களின் உணர்வினைச் சந்தேகப்படுகின்ற செயல்...

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு சில கருத்துக்களை நாம் முன்வைக்க முற்படும்போது எதிரியின் முயற்சியை நாமே இலகுவாக்குவதாக முடிந்துவிடும் ஆகவே சில விடயங்களை அடக்கி வாசிப்பது சிறந்தது என்பது எனது கருத்து.

இங்கு எங்களில் பலர் நாம் சிறந்த அரசியல் ஆய்வாளர் என்பதை நிலைநாட்டுவதிலேயே ஆர்வமாக உள்ளோம் என்பதை முன்வைக்கும் கருத்துக்களில் இருந்து அறியக்கூடியதாகவுள்ளது.

இங்கு எங்களில் பலர் நாம் சிறந்த அரசியல் ஆய்வாளர் என்பதை நிலைநாட்டுவதிலேயே ஆர்வமாக உள்ளோம் என்பதை முன்வைக்கும் கருத்துக்களில் இருந்து அறியக்கூடியதாகவுள்ளது.

:huh::rolleyes::unsure: உண்மை!!!

கீரை ஆய்வது வேண்டுமானால் பொழுதுபோக்காக சும்மா இருக்கும் போது செய்யலாம். ஆனால் அரசியல் ஆய்வு செய்வதற்கு கால நேரம் உள்ளது.

தமது ஆய்வுகள் மக்களிடம் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை பற்றிய போதிய அறிவு ஆய்வாளர்களுக்கு இல்லாதபட்சத்தில் அதை அவர்களின்

மேதாவிலாசத்தை காட்டும் ஆர்வக்கோளாறில் எழுதுகிறார்கள் என்றே கருதவேண்டும்.

எதிரியின் பிரச்சாரத்திற்கு துணைபோகக் கூடிய ஆய்வுகள் சிலவேளைகளில் எதிரியை விட ஆபத்தானது!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாம் இதற்கு தயாராக இருக்கின்றோமா?

இப்படி ஒரு கேள்வி எழும் நிலையில் நாம் வாழ்வதற்கு வெட்கப்படவேண்டும்.

ஏனெனில் போராட்டத்தின் பின்னடைவுகளால் மோசமான விளைவுகளை சந்திக்கபோவது போராளிகளும் அப்போரைத் தாங்கும் தாயக மக்களும்.

உணர்வுரீதியான பாதிப்பு மாத்திரம் தான் எமக்கு.

இல்லை. கொடுத்த காசுக்கு வேலை நடக்கவில்லை என்று கொதித்தால் அது கேவலம்.

ஒரு பேச்சுக்கு, உயிர் குடிக்கும் முகமாலை முன்னரணில் நிற்கும் போராளி இந்தத் திரியை பார்க்கிறான் என வைத்துக்கொள்வோம். நான் உயிரை துச்சமென மதித்து போராடுகின்றேன். இந்தப் போரை சாக்காக வைத்து வெளிநாடு சென்ற கூட்டம், புலி தோக்குதெண்டால் களன்று செல்லப்பார்க்குதென்றால்.... அவன் மனது எத்தகைய வேதனைப்படும்?

  • தொடங்கியவர்

வன்னியில் இப்பொழுது இவற்றில் ஏதாவது ஒன்று நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

1. சிறிலங்காப் படைகளால் தொடர்ந்து முன்னேற முடியாது போய், தற்பொழுது கைப்பற்றிய இடங்களோடு திருப்திப்பட்டுக் கொண்டு நடவடிக்கையை நிறுத்தி விடலாம். இப்படி நடந்தால் சில மாதங்கள் ஒரு பெரும் அமைதியோடு கழியும்.

2. விடுதலைப் புலிகள் திடீரென்று பெரும் வலிந்த தாக்குதலை நடத்தி இழந்த பிரதேசங்களை மீட்டெடுக்கலாம்.

3. பரந்தன் வீழ்ச்சியுற்று, கிளிநொச்சி, ஆனையிறவு போன்றவையும் ஆக்கிரமிப்பில் அகப்பட்டு, அப்படியே முல்லைத்தீவில் இருந்து பத்து கிலோமீற்றர்கள் தொலைவில் நிற்கும் படைகளும் முன்னேறி முல்லைத்தீவையும் ஆக்கிரமிக்க, வன்னி முழுவதும் படைகளின் கட்டுப்பாட்டில் வரலாம்.

இதில் இரண்டாவது நடக்கும் என்ற நம்பிக்கையில் மட்டும்தான் நாம் இருக்கின்றோம். இந்த நம்பிக்கையில்தான் எமது போராட்டத்தின் எதிர்காலத்தையும் குவியச் செய்திருக்கின்றோம்.

இரண்டாவது நடக்கும் என்று சொல்வதற்கு போதுமான காரணங்கள் இருப்பதை நான் மறுக்கவில்லை. விடுதலைப் புலிகள் தமது ஆட்பலத்தை தக்க வைத்திருக்கிறார்கள். தற்போது விடுதலைப் புலிகள் சந்தித்த இழப்பை விட ஜெயசிக்குறுவில் அதிக இழப்பை சந்தித்திருந்தார்கள். ஆயினும் விடுதலைப் புலிகள் ஓயாத அலைகளாக வீறுகொண்டு எழுந்தார்கள்.

ஆகவே இது பற்றிய நம்பிக்கை எமக்கு எல்லோருக்கும் இருக்கிறது. இது நல்லது.

ஆனால் இது நடக்காவிட்டால் எமது போராட்டமே முடிந்து விடும் என்பது போன்ற சிந்தனைகள் எமக்குள் இருப்பது நல்லது அல்ல. மிகவும் ஆபத்தானது.

இங்கே பிரச்சனை என்னவென்றால், வன்னி ஆக்கிரமிக்கப்படப் போகிறது என்ற அச்சத்தில் சில குறிப்பிட்டளவு புலம்பெயர்ந்த தமிழர்கள் போராட்டத்தின் மீதான பற்றுறிதியில் இருந்து பின்வாங்க எத்தனிப்பதுதான்.

வன்னி ஆக்கிரமிக்கப்பட்டால் எவ்வகையான பின்னடைவுகள் ஏற்படும் என்பதை யாரும் சொல்லி விளங்கப்படுத்தத் தேவையில்லை. அந்தப் பின்னடைவுகள் பற்றித் தெரிந்ததால்தான் பலர் அச்சப்படுகிறார்கள். சலிப்பான கருத்துகளை வைக்கிறார்கள். பின்வாங்க முனைகிறார்கள்.

வன்னி ஆக்கிரமிக்கப்படாமல் தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று முப்பது ஆண்டுகளுக்குப் பின்பு சொல்லித் தெரிய வேண்டுமா?

என்ன செய்ய வேண்டும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாம் சிறிலங்காவிற்கு எதிராக மட்டும் போராடவில்லை. பெரும் வல்லரசுகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் எமது போராட்டத்தை முன்னகர்த்துவதற்கு நாம் ஒரு தேர்வை மட்டும் வைத்திருக்க முடியாது.

"வன்னியை பிடித்தால் தமிழர்களின் போராட்டத்தை முடித்து விடலாம்" என்று சிறிலங்கா அரசு சொல்கிறது. சிறிலங்காவிற்கு பக்க பலமாக நிற்கும் உலக வல்லரசுகள் சொல்கின்றன.

நாமும் அதையே சொன்னால் என்ன அர்த்தம்?

"வன்னி கைப்பற்றப்பட்டால் தமிழீழப் போராட்டம் தோற்று விடும்" என்று சிறிலங்காவும் உலக வல்லரசுகளும் நம்புவதற்கு என்ன காரணம் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் போராட்டத்தைக் கைவிடப் போவது இல்லை என்பது சிறிலங்காவிற்கும் உலக நாடுகளுக்கும் தெரியும். ஆனால் தமிழ் மக்கள் போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் என்று இந்த நாடுகள் நம்புகின்றன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவார்கள் என்று இந்த நாடுகள் கணிப்பிடுகின்றன.

இப்படியான மனநிலையில் தமிழர்கள் இருப்பதாக நம்புவதால்தான் என்ன விலை கொடுத்தாவது வன்னியைக் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா அரசு நிற்கிறது. உலகமும் பக்கபலமாக செயற்படுகிறது. (வர்த்தக வரிச் சலுகைளை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தாது என்பதையும் இந்த வேளையில் சொல்லி விடுகிறேன்)

"எந்த நிலத்தை நீ ஆக்கிரமித்தாலும் எமது போராட்டத்தை தோற்கடிக்க முடியாது" என்று நாம் சிறிலங்காவிற்கு விடுக்கும் செய்திதான் இன்று நடக்கும் போரில் சிறிலங்கா சந்திக்கும் முதற் தோல்வியாக இருக்கும்.

சிறிலங்காப் படைகளை வன்னியை ஆக்கரமிக்க முடியாது விட்டாலும் சிறிலங்கா தோற்கும். ஆக்கிரமித்தாலும் சிறிலங்கா தோற்கும். இதுதான் நான் சொல்ல வருவது.

இப்பொழுது நடக்கும் போரில் நிலங்களை சிறிலங்கா அரசு ஆக்கிரமித்தாலும், நாம் போராட்டத்தின் பக்கம் உறுதியாக நின்றால் இறுதியில் சிறிலங்காவை தோற்கடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை புலிகளிடமிருந்து அந்நியப்படுத்தும் முயற்சிகளில்தான் சர்வதேச நாடுகள் ஈடுபடுகின்றன என்பது புதிதானதல்ல. இதற்காகத்தான் புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளைத் தடை செய்ததும், தேசியம் சார்பான நடவடிக்கைகளை முடக்க முனைவதும் நடைபெறுகின்றது. தாயகத்தில் உள்ள தமிழர்களை அந்நியப்படுத்த அவர்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேற்றும் முயற்சிகளில்தான் சிங்கள அரசு இராணுவத்தை ஏவிவிட்டுள்ளது. இவ்வாறு புலம்பெயர் நாடுகளிலும், தாயகத்திலும் சிங்கள அரசும், அதற்கு முண்டு கொடுக்கும் சர்வதேச நாடுகளும் தமது நோக்கங்களை அடைந்தால், தமிழீழக் கோரிக்கை பலமிழந்து போகும். சர்வதேச நாடுகள் தமது அழுத்தத்தைப் பிரயோகித்து சிங்கள அரசை ஒரு அரைகுறைத் தீர்வை முன்வைக்கச் செய்யும். அண்மையில் கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் அதிக தலையீடுகள் செய்கின்றார், அதிகாரம் போதாது என்று கிழக்கு மாகாண சபையினர் (அவர்கள் சிங்கள அரசின் அங்கமாக இருந்தபோதும்) கூச்சலிடுகின்றனர்.

இப்படியான அரைகுறைத் தீர்வுகள் தமிழர்களின் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்காது என்பதை தமிழர்கள் உணர்ந்து தேசியத்தை வலுப்படுத்தி தனிநாடுதான் ஒரே தீர்வு என்பதில் பற்றுறுதியுடன் செயற்படவேண்டும்.

இக் கருத்துக்குச் சொல்லுக்குச் சொல், மறுப்பு விளக்கங்கள் தேவையற்றது. இன்றைய நிலைவரை தமிழர்கள் களத்திலும் புலத்திலும் தம்மாலான உதவிகளைச் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.

முன்னேற்றங்களால் மகிழ்வும் பின்னடைவுகளால் சோர்வும் அடைவது இயற்கை. அதைக் கேள்வியாக்கும்போது இரண்டு நிலைகளிலும் இரண்டு விதமான முடிவுகளையே எதிர்பார்க்கலாம். இது தனிமனித நிலை சார்ந்தது.

இது விவாதத்திற்குரிய தலைப்பாக இருந்தாலும் ஒவ்வொர்வரும் தத்தமது நிலைசார்ந்த புரிந்துணர்வின் அடிப்படையில் முடிவெடுத்து இது தமிழீழப் போராட்டம் இதற்கான பங்களிப்பு தமிழர்களால் செலுத்தப்பட்டேயாக வேண்டும், என்றே செயற்பட வேண்டும் என்பதை என் கருத்தாகக் கூறுகின்றேன்.

தமிழ்த் தேசிய எழுச்சி என்பது வன்னியோடு நிக்கவில்லை அது இன்று தமிழ் மொழி அறியாத மொரிஸியஸில் இருந்து தமிழ் நாடு மலேசியா என உலகம் எங்கும் வியாபித்திருக்கிறது.தமிழ்த் தேசியத்தின் எழுச்சியை வன்னியில் புலிகளை அழிப்பதன் மூலம் அழிக்கலாம் என்பது வெறும் கனவு.

புலிகள் வன்னியில் நிலப்பரப்பை இழக்கலாம் ஏன் புலிகளே வன்னியில் அழிந்தாலும் தமிழ்த் தேசியம் என்பது தமிழ்த் தேசம் அரசியல் விடுதலை அடையும் வரை தொடர்ந்து முளை விட்டுக் கொண்டே இருக்கும்.இன்னும் எத்தினை ஆயிரம் ஆண்டகள் ஆனாலும் இது தான் இலங்கையின் தலை எழுத்து.

சிங்களப் பேரினவாதம் இருக்கும் வரை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் நடக்கும்.சிங்களப் பேரினவாத்தின் முடிவிலையே தமிழ்த் தேசிய எழுச்சியும் முடிவுக்கு வரும்.தமிழ்த் தேசியம் விடுதலை பெறாமால் சிங்களப் பேரினவதாம் முற்றுப் பெறாது.

மூட்டிய தீ என்றும் அணையாது.முரண்பாடு தீர்க்கப்படாமால் போராட்டாம் ஓயாது என்பதே வரலாற்று இயங்கியல்.உலக வரலாறு என்பது முரண்பாடுகளால் எழுதப்படுவது.உலக வரலாற்றில் எழுச்சி பெற்ற எந்த தேசிய விடுதலைப் போராட்டாமும் ஆயுத ஒடுக்கு முறையால் அணைக்கப்பட்டது கிடையாது.

தமிழ்த் தேசிய எழுச்சி என்பது வன்னியோடு நிக்கவில்லை அது இன்று தமிழ் மொழி அறியாத மொரிஸியஸில் இருந்து தமிழ் நாடு மலேசியா என உலகம் எங்கும் வியாபித்திருக்கிறது.தமிழ்த் தேசியத்தின் எழுச்சியை வன்னியில் புலிகளை அழிப்பதன் மூலம் அழிக்கலாம் என்பது வெறும் கனவு.

புலிகள் வன்னியில் நிலப்பரப்பை இழக்கலாம் ஏன் புலிகளே வன்னியில் அழிந்தாலும் தமிழ்த் தேசியம் என்பது தமிழ்த் தேசம் அரசியல் விடுதலை அடையும் வரை தொடர்ந்து முளை விட்டுக் கொண்டே இருக்கும்.இன்னும் எத்தினை ஆயிரம் ஆண்டகள் ஆனாலும் இது தான் இலங்கையின் தலை எழுத்து.

சிங்களப் பேரினவாதம் இருக்கும் வரை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் நடக்கும்.சிங்களப் பேரினவாத்தின் முடிவிலையே தமிழ்த் தேசிய எழுச்சியும் முடிவுக்கு வரும்.தமிழ்த் தேசியம் விடுதலை பெறாமால் சிங்களப் பேரினவதாம் முற்றுப் பெறாது.

மூட்டிய தீ என்றும் அணையாது.முரண்பாடு தீர்க்கப்படாமால் போராட்டாம் ஓயாது என்பதே வரலாற்று இயங்கியல்.உலக வரலாறு என்பது முரண்பாடுகளால் எழுதப்படுவது.உலக வரலாற்றில் எழுச்சி பெற்ற எந்த தேசிய விடுதலைப் போராட்டாமும் ஆயுத ஒடுக்கு முறையால் அணைக்கப்பட்டது கிடையாது.

பிறகு தமிழ்த் தேசியம் ஏதும் வயிற்றுப் பிழைப்புக்கு தான் பயன் படும் புலிகள் இல்லாத தமிழ்த் தேசியம் ஒரு போத்ம் சரியான பாதையில் போகாது..

பிறகு தமிழ்த் தேசியம் ஏதும் வயிற்றுப் பிழைப்புக்கு தான் பயன் படும் புலிகள் இல்லாத தமிழ்த் தேசியம் ஒரு போத்ம் சரியான பாதையில் போகாது..

பண்டாரா வன்னியன் காலத்திலும் தமிழ்த் தேசிய எழுச்சி இருந்தது, அப்போதும் வயிற்றுப் பாட்டைப் பார்த்தவர்கள் இருந்தார்கள்.அப்போது அன்னியருக்கு எதிரனதாக தேசிய எழுச்சி இருந்தது.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் தமிழ்த் தேசியத்தை முன் நிறுத்துபவர்களைத் தான் தமிழரின் வரலாறு நினைவிற் கொள்ளும்.

சிங்களப் பேரின்வாதம் தான் புலிகளை உருவாக்கியது.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சிங்களப் பேரினவாதம் இருக்கும் வரை தமிழ்த் தேசிய விடுதலைப் போரும் எழுச்சியும் தொடரும்.

பண்டாரா வன்னியன் காலத்திலும் தமிழ்த் தேசிய எழுச்சி இருந்தது, அப்போதும் வயிற்றுப் பாட்டைப் பார்த்தவர்கள் இருந்தார்கள்.அப்போது அன்னியருக்கு எதிரனதாக தேசிய எழுச்சி இருந்தது.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் தமிழ்த் தேசியத்தை முன் நிறுத்துபவர்களைத் தான் தமிழரின் வரலாறு நினைவிற் கொள்ளும்.

சிங்களப் பேரின்வாதம் தான் புலிகளை உருவாக்கியது.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சிங்களப் பேரினவாதம் இருக்கும் வரை தமிழ்த் தேசிய விடுதலைப் போரும் எழுச்சியும் தொடரும்.

உங்கள் கருத்தை என்னால் புரிந்து கொள்ளவில்லை ,

மீண்டும் புலிகள் எழுச்சி கொள்வார்கள் என்பதுக்கும் மீண்டும் தமிழ்த்தேசியம் எழுச்சி கொள்ளும் என்பதுக்கும் வேறுபாடு இருக்கு...

உங்கள் கருத்தை என்னால் புரிந்து கொள்ளவில்லை ,

மீண்டும் புலிகள் எழுச்சி கொள்வார்கள் என்பதுக்கும் மீண்டும் தமிழ்த்தேசியம் எழுச்சி கொள்ளும் என்பதுக்கும் வேறுபாடு இருக்கு...

இன்றைய தமிழ்த் தேசிய எழுச்சியின் குறியீடு புலிகள் இயக்கம்.ஆயிரம் ஆண்டுகளின் பின் தமிழ்த் தேசிய எழுச்சி இருக்குமானால் அன்று புலிகள் இருப்பார்களா இல்லையா என்பதைக் கூறி விட முடியாது.ஆனால் சிங்களப் பேரினவாதம் இருக்கும் வரை ஆயிரம் ஆண்டுகளின் பின்னும் தமிழத் தேசிய எழுச்சி இருக்கும்.அதனை யார் செய்வார்கள் என்று இன்று தெரியாது.

ஆகவே புலிகளை அழிப்பதால் சிங்களப் பேரினவாதம் வென்று விடும் என்பது பகற் கனவு.

ஆனால் பிரபாகரன் காலத்தில் தமிழ்த் தேசிய விடுதலை புலிகளால் வென்றெடுக்கப்படக் கூடிய சாத்தியக் கூறுகளே என்னைப் பொறுத்தவரை அதிகமாக உள்ளன.

இன்றைய தமிழ்த் தேசிய எழுச்சியின் குறியீடு புலிகள் இயக்கம்.ஆயிரம் ஆண்டுகளின் பின் தமிழ்த் தேசிய எழுச்சி இருக்குமானால் அன்று புலிகள் இருப்பார்களா இல்லையா என்பதைக் கூறி விட முடியாது.ஆனால் சிங்களப் பேரினவாதம் இருக்கும் வரை ஆயிரம் ஆண்டுகளின் பின்னும் தமிழத் தேசிய எழுச்சி இருக்கும்.அதனை யார் செய்வார்கள் என்று இன்று தெரியாது.

ஆகவே புலிகளை அழிப்பதால் சிங்களப் பேரினவாதம் வென்று விடும் என்பது பகற் கனவு.

ஆனால் பிரபாகரன் காலத்தில் தமிழ்த் தேசிய விடுதலை புலிகளால் வென்றெடுக்கப்படக் கூடிய சாத்தியக் கூறுகளே என்னைப் பொறுத்தவரை அதிகமாக உள்ளன.

ஆம் அதே தான் நான் சொல்கிறேன் .

இன்று நீங்கள் சொன்ன கருத்தை பண்டாரவண்னியனும் கூறிவிட்டு சென்று இருகலாம் வெள்ளைக்காரனுக்கு எதிராக ஆனால் அதே கருத்தை இன்று நாம் கூறிவிட்டு போக முடியாது.

பிரபாகரனின் விழ்ச்சி என்பது தமிழீழம் என்றதுக்க்கு அப்பால் உலக தமிழ்த்தேசியத்தின் விழ்ச்சியாக தான் இருக்கும் ஏன் எனில் சிங்களவனை பொறுத்த மட்டில் வெல்லும் வரை தான் புலிகளுக்கு எதிராக ஆனால் வென்ற பின் தமிழர்களின் வீழ்ச்சியாகவே கொண்டடப்படும் அதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை......

நாளைக்கு ஆனந்த சங்கரியும் டக்கிளஸும் கூறுவார்கள் இது எங்களுக்கு கிடைத்த தோல்வியில்லை என்று ஏன் கருணாநிதியும் சரி சில உலகத்தமிழர்களும் சரி சொல்லாம் எங்களுக்கும் ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கும் எத்ந தொடர்பும் இல்லை என்று தமிழ்த்தேசியம் ஆயுத போராட்டத்துக்கு அப்பார்ட் பட்டது என்று ஆனால் இன்று தமிழ்த்தேசியமே ஆயுத போராட்டத்தின் மேல் தான் தலைநிமிர்த்து நிக்கிறது.......

புலிகள் என்ற கர்ப்பனித்தாய் பிரசவ வேதனையில் இருக்க்கிறாள் காலத்தை கடத்தி அவளை கொன்று விடாதீர்கள்............

Edited by வினித்

புலிகள் தமிழ்த் தேசியத்தின் குறியீடு, தமிழ்த் தேசிய விடுதலைப் போர் தமிழ் மக்களின் போர்.இங்கே காலத்தைக் கடத்துபவர்கள் யார்? நீங்களும், நாங்களும் தான்.புலிகளைப் பலப்படுத்த வேண்டியவர்கள் பலப்படுதினால் காலம் கனியும்.பலப்படுதாதால் காலம் நீழ்கிறது, ஒருவரும் காலத்தைக் கடத்தவில்லை.

புலிகள் தமிழ்த் தேசியத்தின் குறியீடு, தமிழ்த் தேசிய விடுதலைப் போர் தமிழ் மக்களின் போர்.இங்கே காலத்தைக் கடத்துபவர்கள் யார்? நீங்களும், நாங்களும் தான்.புலிகளைப் பலப்படுத்த வேண்டியவர்கள் பலப்படுதினால் காலம் கனியும்.பலப்படுதாதால் காலம் நீழ்கிறது, ஒருவரும் காலத்தைக் கடத்தவில்லை.

மேல நான் சொன்ன கருத்து உங்களை மனதில் வைத்து கூறவில்லை திடீர் திடீர் என்று முளைத்த நடுநிலையாளர்களையே கூறினேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.