Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருந்தாத சமுதாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரமணன் அன்று தான் ஊருக்கு வருகிறான் வந்து தான் வைத்திருந்த பணத்தை வைப்பிலிடுவதற்க்காக வங்கிக்கு செல்கிறான் அன்று அவன் கண்டது ஒரு வேதனையான காட்சி அந்த காட்சியை பார்த்ததும் அவனது மனதுக்குள் ஆயிரம் கேள்வி அலைகள் அவனுள் எள மொனமாகி முகாமையாளரான அவனது நண்பன் ரவி சந்திரனை அணுகி அங்கே எதற்க்காக வரிசையில் நிற்கிறார்கள் என கேட்க அவனும் அடகு வைப்பதற்க்காக வரிசையில் நிற்கிறார்கள் என்று கூற அவனை அறியாமலேயே கண்ணீர் துளிகள் அவனது சட்டையை நனைக்கிறது . அங்கு பார்த்தது அவனுடன் கல்வி பயின்ற கலை பிரிவு மாணவி லோஜினியை தன்னுடன் சில வார்த்தைகள் பேசியதால் அவள் வாழ்க்கையில் இன்று இந்த நிலைமையா ? என்று அங்கிருந்து வெளியே வந்து தனது ஊர்மைதானத்தில் இருக்கும் ஆல மரத்தின் நிழலில் இருந்து பழையதை மீண்டும் நினைக்கிறான்

அன்று அதிகாலை நடராஜன்வருகிறார் வந்து என்ன இன்னும் மாப்பிள்ளை எழும்பவில்லையோ என சாந்தியிடன் வினவ சாந்தியும் இல்லையென்று சொல்ல மணி பத்தாகுது இன்னும் எழும்பல்லையா என்று சத்தம் போடுகிறார் .சாந்தியும் போய் ஏய் தம்பி அப்பா வந்திருக்கிறார் எழும்பு மணி பத்தாகுது என்று சொல்ல ரமணனும் எழும்பி சாம்பலினால் செய்த பற்பொடியை எடுத்து பல்துலக்கி முகம் கழுவி வீட்டு முற்றத்துக்கு வருகிறான் நடராஜரை கண்டதும் இன்றைக்கு பிச்சு வாங்கபோகிறார் என மனதுக்குள் நினைத்துக்கொண்டு வந்து வீட்டு வாசலில் உள்ள கதவு ஓரத்தில் ஒத்த காலில் நிற்கிறான் அவனை கண்டதும் இன்றைக்கு பரிட்சை முடிவுகள் வெளியாகி உள்ளதே நீ பார்க்கவில்லையா என்று கேட்க அது வந்து அப்பா நான் நேற்றே பார்த்தன் ஒரு பாடம் சித்தியடைவில்லை என்று சொல்ல நீ எதற்க்காக பள்ளிக்கு போனாய் எதற்க்காக விசேடவகுப்புக்கு போனாய் என்று கேட்க நான் என்னப்பா செய்வது வணிகக்கல்வி சரி .பொருளாதாரமும் சரி கடசியாக ஒரு பாடம் இருக்கு கணக்கீடு அதுதான்பா என்னால முடியல்ல ,வட்டி , பற்று ,மூலதனம் என்று என்னை குழப்பி விட்டது என்று சொல்ல எதுக்கு நீ வகுப்புக்கு போனாய் என்று கேட்க வகுப்புக்கு போனது அதுக்காகவா என்று மனதுக்குள் நினைத்து சிரிக்க அப்பாவோ உன் அக்காவை பாரு நல்லா படித்து இன்று லண்டனில இருக்கா, உன் அண்ணனை பாரு அவனும் இன்று நல்லா படித்து சுவிசில இருக்கான் என்று சொன்னதும் இவன் மனதுக்குள் சிரிப்பு அவனா நல்லா படித்தான் வெளிநாட்டு பெண்கிடைத்தவுடன் அவனை விற்று விட்டு பேசிற பேச்சை பாரு என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான் சிரித்துக்கொண்டான் என்ன சிரிப்பு என்று கேட்டதும் ஒன்றும் இல்லை அப்பா என்று கூறுகிறான் . அம்மாவோ தேநீர் கொண்டுவர பருகிவிட்டு அம்மா அப்பா இரண்டு பேரும் என்னதான் செய்ய போகிறாய் என்று கேட்க ஒன்றும் பேசாமல் தனது துவிசக்கரவண்டியை எடுத்து கொண்டு தனது நண்பர்கள் இருக்கும் முச்சந்திக்கு போகிறான் ரமணன்

தாய் தந்தையரோ இவனை வெளி நாடு அனுப்புவமா அல்லது கொழும்பில் கடைவைத்திருக்கும் மாமன் கிட்ட அனுப்புவதா என்று யோசித்துகொண்டிருந்த்தனர் பின்னர் சாந்தியோ நம்மட இரண்டு பிள்ளைகளும் வெளியில தானே இவன் நம்மளோடு இருக்கட்டும் ஆளை கொழும்புக்கு அனுப்புவோம் என்று முடிவெடுத்துகொண்டனர்

ரமணனோ தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து போற வாற எல்லாத்தையும் பகிடி பண்ணி கொண்டிருந்தனர் சந்தோசமாக .அப்போது நண்பர்கள் எல்லோரும் ரமணா நில்லு நாங்கள் கடைக்கு போட்டு வாரம் என்று சொல்ல சரி கெதியா வாங்கோ என்று சொல்லிவிட்டு ரமணன் தனியே நின்றான் அப்போது அவ்வழியாக வந்த கலைபிரிவில் அவனுடன் கல்வி பயின்ற லோஜினியை காண்கிறான் அவளுடன் பேசி சிரித்துக்கொண்டு இருக்கும் போது இவர்களை தூரத்தில் இருந்து கதிரேசன் நோட்டமிடுகிறான் ஆனால் அவர்கள் பேடி கொண்டது பரிட்சை சித்தியடையாதது பற்றி பேசி கொண்டனர் .இதை கண்ட கதிரேசர் ரமணணை கூப்பிட்டு என்ன தம்பி லவ்வா[ காதலா]என்று இளுக்க இல்லை அண்ணே சும்மா பேசிக்கொண்டோம் என்று அவ்விடத்தில் இருந்து விலகி கொண்டான் ரமணன் ஆனால் கதிரேசரோ ஊர் முழுவது இதை பரப்பி விடுகிறார் . ஊர் முழுவது இதே பேச்சு அடி பட இரு வீட்டாருக்கும் தெரியவர பெண்வீட்டில் இருந்து ஆட்கள் வந்து நடராஜரின் வீட்டை ஏச்சுமழையால் நனைத்துவிட்டு சென்று லோஜினிக்கும் பூசை கொடுக்கப்பட்டது [அடிதான்] ஆனால் எதையுமே அறியாத ரமணன் வீட்டுக்கு வந்ததும் அம்மா நடந்ததை சொல்ல ரமணனுக்கோ இடி விழுந்த்தால் போல உறைந்து போனான் நடராஜரோ எழும்பி எனது இரண்டு பிள்ளைகளும் வேண்டி தராததை நீவேண்டி தந்திருக்கிறாய் இனியும் நீ இங்கு இருக்க வேண்டாம் உடனே கொழும்புக்கு வெளிக்கிட ஆயத்தாமாயிரு என்று சொல்லி வெளியில் செல்கிறார் ரமணனோ தனது சமுதாயத்தை எண்ணி வருந்தி கொழும்புக்கு செல்ல ஆயத்தமாகிறான் அப்போது கேள்வி பட்டான் ஒரு வேற ஊர் மாப்பிள்ளை ஒன்று லோஜினிக்கு பார்த்திருப்பதாகவும் இரண்டு மாத்தத்தில் கல்யாணம் எனவும் கேள்விப்பட்டான்

ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை தனது பிரயாணத்தை தாயார் செய்து புறப்பட ஆரம்பிக்கிறான் அம்மாவும் அவனை தேற்றி நடந்ததை மறந்திடு என்று சொல்லி எல்லாம் எனக்கு தெரியும் என்பிள்ளையை பற்றி எனக்கு தெரியும் என்று சொன்னதும் சற்று ஆறுதல் அடைகிறான் பேச மறுக்கும் அப்பாவுக்கு போய் வாரன் அப்பா என்று சொல்லி புறப்படுகிறான் ரமணன் மாதங்கள் உருண்டோடின வருடத்துக்கு ஒரு முறைத்தான் வருவான் ஊருக்கு வரும் போது கூட அவளை பார்க்ககூடாது என்று தான் நினைப்பில் வைத்துக்கொள்வான் ஆனால் அந்த வருடம் அவளை வங்கியில் பார்த்துவிடுகிறான் அடகுவைப்பதற்க்காக வரிசையில் நிற்கிறாள் இதை பற்றி விசாரிப்பதற்க்காக தனது நண்பர்களை பார்ப்பதற்க்கு அந்த ஆல மரத்தடியில் இருந்து பயணிக்கிறான்

தனது நண்பனின் வீட்டுக்கு சென்று அழைக்கும் போது அவன் இல்ல தம்பி வயலுக்க போயிருக்கான் என்று அவனது அம்மா சொல்ல வயலுக்கு சென்று தனது நண்பனை கண்டு கேட்கிறான் அவனும் நடந்தவற்றை சொல்கிறான் . ரமணா நீ போன இரண்டு மாததத்தில் கல்யாணம் நடந்தது லோஜி நல்லாத்தான் வாழ்தார்கள் அவள் கணவனோ குடிக்க ஆரம்பித்தான் சொத்துக்கள் முழுவதும் அழிந்தன பிள்ளைகள் இரண்டு வேற ஆகிவிட்டன .அவனோ உன்னை சாட்டி சாட்டி அவளுக்கு அடித்தான் பாவம் பெற்றோருடனும் சண்டை பிடித்து விட்டார்கள் அதனால் யாரும் அவளை பார்ப்பது கிடையாது இன்றும் முழுவதும் அழிந்து விட்டது சொந்தங்களும் பிரிந்துவிட்டன என்று சொல்லி கதையைமுடித்தான் ரமணனோ ஒரு பெண்ணுடன் பேசியதை திரிவு படுத்தி பேசும் தனது சமுதாயத்தை எண்ணி வருத்தப்பட்டான் எப்போது திருந்தும் தனது சமுதாயம் என்று தனது மனதுக்குள் கேள்வி கேட்டு கொண்டான் .தனது பெண்பிள்ளையை புரிந்து கொள்ளாத பெற்றோருக்கு என்ன சொல்வது என்று நினைத்துக்கொண்டு இருவரும் வீட்டுக்கு சென்றனர் அன்று இரவு தூங்கும் போது இதே நினைப்பாகதான் இருந்தது அதிகாலை விடிந்ததும் தான் மீண்டும் கொழுபுக்கு செல்ல ஆயத்தமானான் .அப்போது அம்மா தம்பிக்கு ஒரு பெண் பாத்திருக்கன் என்று சொல்ல கல்யாணமா?? யாருக்கு என்று கேட்டு விட்டு பெரு மூச்சு விடுகிறான் வேண்டாம் என்று சொல்லி

அப்போது அவனது நண்பன் வருகிறான் அவனை ஏற்றி செல்ல அவனோ அம்மா அப்பாவிடம் விடைபெற்று விட்டு இரு சக்கரவண்டியில் உட்கார்து செல்கிறான் அப்போது அந்த வழியால் வரும் லோஜினியை காண்கிறான் அவளை கண்டதும் ஒரு குற்ற உணர்வு தலையை கீழே தாழ்த்தி செல்ல அவளோ அவனை அழைக்கிறாள் அவனோ கேட்டும் கேட்காத மாதிரி சென்றுகொண்டிருக்கிறான் ஆனால் அவளோ திட்டுவது தெரிகிறது என்ன செய்வது தனது சமுதாயத்திற்கு பயந்தும் அவளது வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் குறுக்க போக கூடாது அது அவளது வாழ்க்கையை கேள்விகுறியாக்கிவிடும் என்பதால் பேசாமல் செல்கிறான் ரமணன்

அவனது நண்பன் கேட்கிறான் ஏன் பேசவில்லை என்று அவனோ இதையே சொல்லி அவளது கணவன் அவளை தொந்தரவு பண்ணலாம் அதனாலேயே பேசவில்லை என்று கூறி இதனால் அவளுக்கே நன்மை என்று தெரியவில்லை ஆனால் அவள் என்னை திட்டுவது விளங்குது என்று சொல்லி சென்று விடுகிறான் கொழும்புக்கு

  • கருத்துக்கள உறவுகள்

திருந்தாத எண்ணங்கள் ஊரைவிட்டு பல்லாயிரம் மயில் கடந்த பின்னும் தொடர்கிறது.

முனிவருக்கு கதையும் எழுத வருமா ? :unsure: கோவிக்கிறேல்ல.

தொடருங்கள்.

காலங்கள் மாறினாலும் சில விட்டுத்தொலையாப்பிணியாய் எல்லாச் சமூகங்களிடமும் நீங்கள் எழுதிய போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள். அது வெளித்தெரியாமல் இருக்கிறது.

உங்கள் கதையின் நாயகி லோஜினியில் பிழையிருந்தபடியால் தான் அவளது கணவன் குடிக்க ஆரம்பித்தான் குடும்பம் அழிந்தது எனக் கதை சொல்லவும் வருவார்கள் சிலர்.

முனிவரே கவனம். கொள்ளிவால் பிசாசுகள் தீயோடு வரப்போகின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா சாந்தி நம்மட கதையையும் வாசித்ததற்க்கு நன்றிங்கோ :)

கதையில் தனது நாயகி ஒரு ஆணுடன் பேசியிருக்கிறாள் அவ்வளவுதான் அதையே புரிந்து கொள்ளாத சமுதாயம் அந்த ஆணையும் பெண்ணையும் குற்றம் சாட்டுகிறது எதப்பற்றி பேசினார்கள் பரீட்சை முடிவுகள் பற்றிதானே ஆனால் குற்றம் கண்டு பிடிக்கும் ஆக்கள் இருக்கும் வரைக்கும் வாழ்கை என்பது கேள்விக்குறியே அதையே புரிந்து கொள்ளாத கணவனும் அமையும் போது அவளுக்கு தலைவிதியும் மாறுகிறது

நிடசயமாக அந்த பெண்ணிடம் எந்தபிழையும் இல்லை இருக்கும் மிகப்பெரிய பிழை அந்த சமுதாயத்தில்

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் என்று சொல்வதற்க்கு இணங்க தாங்கள் பெற்ற பிள்ளைகளை புரிந்து கொள்ளாத பெற்றோர்களை என்னவென்று சொல்வது [பெண் பிள்ளைகளை பெற்றோர்] :):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை பாரதிதாசன் வந்தாலும் இந்த சமுதாயம் திருந்தாது.....!

  • கருத்துக்கள உறவுகள்

சமுதாயம் என்று மற்றவனை எப்ப சுட்டிக்காட்டிறதை செய்யத் தொடங்கினமோ அப்பவே எங்களை திருத்த மறந்திட்டம். அது பாரதிதாசனுக்கும் பொருந்தும்.

சமுதாயம் என்பது ஒவ்வொரு தனிமனிதனாலும் உருவாக்கப்படுவது. அவனவன் தானே தன்னைத் திருத்திக் கொண்டால்.. ஏன் அடுத்தவனில குறைகாண வேண்டி வருகுது..??!

எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் அவன் அல்லது அவள் தனக்குரியவளாக இருப்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். ஒரு விளையாட்டுப் பொருளையே நாம் விட்டுக்கொடுக்க முன்வராது வளர்க்கப்படும் போது.. தனக்கென்றான உறவொன்றை எவன் அல்லது எவள் இன்னொருவன்/ள் கொண்டாட இடமளிப்பான்/ள்.

நாம தான் அதை உணர்ந்து எமது சொந்தச் செயற்பாடுகளை அவதானமா எம்மைச் சார்ந்தோரைப் பாதிக்காத வகையில அவர்களுக்கு சொல்லி இயன்றவரை அவர்களின் சம்மதத்தோட புரிந்துணர வைச்சு செய்யனும்.

உங்களிடம் இதய சுத்தி இருந்தால்.. அடுத்தவனுக்கு அஞ்சத் தேவையில்லை. அதேபோல்.. உங்களைச் சார்ந்தவர்களுக்கு உங்களின் இதய சுத்தியை கண்டறிய பலம் போதாது இருப்பின்.. அதனை அவர்களுக்கு தெளிவுறுத்துவது ஒவ்வொருவரின் கடமை. அதைவிடுத்து.. நான் நெருப்பு.. தீ என்று சொல்லிக் கொண்டிப்பதால் ஒருவர் இதய சுத்தியுடன் நடக்கிறார் என்று பொருள்படாது. என்ன நீ புரிஞ்சு கொண்டது இவ்வளவுதானா என்று.. கேட்டுக் கொண்டே ஏமாற்றுகிறார்கள்.. வெளிப்படைக்கு நல்லவனா/ளா நடிச்சுக் கொண்டே ஏமாற்றுகிறார்கள் அப்படி இருக்கும் போது வெறும் பேச்சில்.. மொத்தச் செயல்களில் இதய சுத்தி இருப்பதாக எளிதில் எண்ணிட முடியாது. அது எல்லா மனிதராலும் சாத்தியமில்லை.

அதுமட்டுமில்லாம.. சுதந்திரமா.. சோசலா பழகிறம் என்ற போர்வையில.. கள்ளத்தொடர்புகள் வைப்பதும்.. ஒருவர் அறியாமல் மற்றவர் பலருடன் உறவாடுவதும்.. தவறான பார்வைகளை உருவாக்கும். அதை உருவாக்க இடமளிச்சுப் போட்டு.. அதை சந்தேகப்படினம் என்று குறை பிடிச்சிட்டு அடுத்தவனை உதாசீனம் செய்வதிலும்.. நாம் எம் பக்கத்தில் என்ன தவறு செய்தோம்.. என்பதை இனங்காண முற்பட்டால்..

பாரதிதாசனும் தேவையில்ல பாரதியும் தேவையில்ல. ஆனால் உலகில் நடப்பது என்ன. அவனவன் தான் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தி மற்றவனை குற்றவாளி ஆக்க முனைகிறானே தவிர... தமது தவறுகளை செயல்களில் உள்ள அசிங்கங்களை திருத்த முனைவதில்லை.

நாமே நமக்கு நல்ல வழிகாட்டிகளா கண்காணிப்பாளர்களா இருந்திட்டால்.. அடுத்தவன் குறை சொல்ல முடியாதபடிக்கு அல்லது குறை சொன்னாலும் அதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லாத படிக்கு இதய சுத்தியோடு வாழ்ந்திட்டம் என்றால் அதனை ஒவ்வொரு மனிதனும் செய்வான் என்றால் வளமான சமுதாயம் ஒன்று தானே உருவாகும். ஒவ்வொருவரும் அப்படி நடந்து கொண்டிட்டால்... சமுதாயத்தில் ஒவ்வொரு வீடுமே பாரதிதாசனை.. பாரதியை கொண்டதாகவே இருக்கும். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் கதை தூள்.....இந்த சமுதாயத்திலதான் என்னைப்போல உங்களைப்போல நல்ல ஆட்களும் இருக்கினம் ........

நெடுக்ஸ் சொன்னமாதிரி சூழ்நிலை ஒழுக்கத்திலும் பார்க்க சுயஒழுக்கம் திறம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமுதாயம் என்பது ஒவ்வொரு தனிமனிதனாலும் உருவாக்கப்படுவது. அவனவன் தானே தன்னைத் திருத்திக் கொண்டால்.. ஏன் அடுத்தவனில குறைகாண வேண்டி வருகுது..??!

நன்றிங்கோ நெடுக்ஸ் என்னடா நம்மாள காணவில்லை என்று பார்த்தேன் வந்திட்டயல் போல

putthan Posted இன்று, 01:37 PM

முனிவர் கதை தூள்.....இந்த சமுதாயத்திலதான் என்னைப்போல உங்களைப்போல நல்ல ஆட்களும் இருக்கினம் ..

......

நன்றி புத்தன்

ஆனால் ஒரு சந்தேகம் நான் ,நீங்கள் நல்ல ஆட்களா?? :):):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவர்

சிறு வதந்தியால் சில பேரின் வாழ்க்கையே மாறிவிடும் பல சந்தர்ப்பங்களை நிகழ்ந்துள்ளன, சமூகத்தை குறைகூறுவதா இல்லை தனிமனிதனைக் குறைகூறுவதா என்று பார்த்தால் '' நெடுக்ஸ்'' உடைய கருத்துடனே நானும் ஒத்துப் போகிறேன். விளையாட்டாக செய்யப் போய் விபரீதமாக போய்விட்ட சம்பவங்கள் என் வாழ்விலும் நடந்துள்ளது.

எப்படியோ.! கதை சொன்ன விதம் சூப்ப...ர்.. கலக்கீட்டீங்க...முனிவா..!

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா 5 நிமிடம் கதைத்தற்கு வாழ்கையே கோவிந்தாவா :unsure: முனி வாழ்த்துக்கள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ilankavi Posted நேற்று, 07:05 PM

முனிவர்

எப்படியோ.! கதை சொன்ன விதம் சூப்ப...ர்.. கலக்கீட்டீங்க...முனிவா..!

நன்றி இளங்கவி :):o

நன்றி சகிவன் :unsure: ............

உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியுமா? :blink:

வாழ்த்துக்கள் முனிவர். தொடருங்கள் உங்கள் எழுத்தாக்கத்தை. :(

சமுதாயம் என்று மற்றவனை எப்ப சுட்டிக்காட்டிறதை செய்யத் தொடங்கினமோ அப்பவே எங்களை திருத்த மறந்திட்டம். அது பாரதிதாசனுக்கும் பொருந்தும்.

நாமே நமக்கு நல்ல வழிகாட்டிகளா கண்காணிப்பாளர்களா இருந்திட்டால்.. அடுத்தவன் குறை சொல்ல முடியாதபடிக்கு அல்லது குறை சொன்னாலும் அதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லாத படிக்கு இதய சுத்தியோடு வாழ்ந்திட்டம் என்றால் அதனை ஒவ்வொரு மனிதனும் செய்வான் என்றால் வளமான சமுதாயம் ஒன்று தானே உருவாகும். ஒவ்வொருவரும் அப்படி நடந்து கொண்டிட்டால்... சமுதாயத்தில் ஒவ்வொரு வீடுமே பாரதிதாசனை.. பாரதியை கொண்டதாகவே இருக்கும். :(

ஒவ்வொருவரும் மனதில் பதிக்க வேண்டிய தத்துவம். இதை பலர் அடிக்கடி மறந்து போகின்றார்கள். (சமுதாயத்தை மட்டும் குற்றம் சொல்லவில்லை. என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.) :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மல்லிகை வாசம்

  • 2 weeks later...

முனி மாமு..மு..!!

அப்படியே எங்கண்ட சமுதாயத்தை படம் போட்டு காட்டிட்டீங்கள் வாழ்த்துகள்..ள்.. :lol: திருந்தாத சமுதாயம் தங்கள் கதை மூலம் திருத்தத்தை நோக்கினால் சந்தோஷம்..ம்..ஆனா மாமு உது ஒண்டும் உங்களுக்கு நடந்த கதை இல்லை தானே சும்மா ஒரு சந்தேகம் தான்..ன் :lol:

இந்த சமுதாயத்தை திருத்த..த நானும் நீங்களும் பேசாம அந்நியனா மாறுவோமே..??.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனி மாமு..மு..!!

அப்படியே எங்கண்ட சமுதாயத்தை படம் போட்டு காட்டிட்டீங்கள் வாழ்த்துகள்..ள்.. :lol: திருந்தாத சமுதாயம் தங்கள் கதை மூலம் திருத்தத்தை நோக்கினால் சந்தோஷம்..ம்..ஆனா மாமு உது ஒண்டும் உங்களுக்கு நடந்த கதை இல்லை தானே சும்மா ஒரு சந்தேகம் தான்..ன் :lol:

இந்த சமுதாயத்தை திருத்த..த நானும் நீங்களும் பேசாம அந்நியனா மாறுவோமே..??.. :lol:

அப்ப நான் வரட்டா!!

நன்றி ஜம்மு

இந்த கதை வந்து கற்பனை கலந்த உன்மை ஆனால் இது நம்மடகதையில்லை :lol:

என்னது அந்நியனா?? அதுக்கு ஆதிவாசியை எடுத்துக்கொள்ளுங்கோ அவர்தான் அடிக்கடி படத்தை மாற்றி அந்நியன் மாதிரி இருக்கார்...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முனிவர். கதை அழகு. சமுதாயத்தை நன்றாக தான் சாடியுள்ளீர்கள். பலருக்கு மற்றவரின் துன்பத்தில் இன்பம் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறார்கள்.இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முனிவர். கதை அழகு. சமுதாயத்தை நன்றாக தான் சாடியுள்ளீர்கள். பலருக்கு மற்றவரின் துன்பத்தில் இன்பம் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறார்கள்.இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.

நன்றி நூணாவிலன் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.