Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களத்தில் ஓர் காதல்.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் ஓர் காதல்.....

கவிதை....

என் அன்புக் கண்ணனுக்கு

உன் ஆசை மலர்

எழுதும் மடலிது....

எனக்கான உந்தன்

காதல் பரிசும் கிடைத்தது

கார்த்திகை பூவும்

கிடைத்தது.....

கார்த்திகைப் பூவின்

நிறங்களிலே எங்கள்

ஈழத்தின் புலிக்கொடி

பறக்கக் கண்டேன்.....

எக்கணமும் அந்தப் பூ

என் சொந்தம் ஆகலாமென்ற

உன் உள்மனது சொல்லும்

சேதியும் அறிந்தேன்....

நீ கொடுத்த; வெற்றுத்

தோட்டா எண்ணிக்கையில்

நீ வீழ்த்திய எதிரியின்

என்ணிக்கையும் கண்டேன்...

இதுதான்..! இந்த வீரத்தின்

பாய்ச்சல்தானே எனை உன்பால்

ஈர்ப்படைய வைத்தது

காதலின் மரபு நீங்கி

கார்திகைப் பூவில்

காதலைச் சொன்னாய்....

எங்கள் காதல் மலர்ந்து

சில நாளில் கதைத்திருந்த

சமயமதில்; எங்கள்

துப்பாக்கி முனை இரண்டும்

ஒன்றையொன்று முத்தமிட

நம் உடல்ரெண்டும் முத்தமிட்டு

உரசுவதாய் உணர்ந்தேன்

இதுதானே இன்றுவரை

எங்களின் உச்சக்கட்ட இன்பம்....

நீ என்னைச் சுற்றும்

வண்டாக இருந்திருந்தால்

உனை வேண்டாமென்று சொல்லி

வெகுதூரம் சென்றிருப்பேன்...

நீயோ இன்றுவரை

எதிரியைச் சுற்றும்

புலியாக நிற்கிறாய்

அதனாலே நீ என்மனதில்

எங்கோ நிற்கிறாய்....

நான் எப்படியோ உன்மனதில்

ஆனால்...! நீ...; என்மனதில்

நிறைந்து இருக்கிறாய்

காரணம் சொன்னால்

உன் மனதில் எங்களின்

விடுதலை ஏக்கம்

நிறைந்து இருப்பதனால்.....

என் களமும் இங்கே

சூடாகி மலைகூடப் பிளக்கிறது

சரி.. சரி.. நானும் வருகிறேன்

கள முடிவில்; உன்

தொகையிலும் அதிகம்

வெற்றுத் தோட்டாக்கள்

அனுப்பி வைப்பேன்...

இல்லாவிடில்...

என் சார்பில்

கார்த்திகைப் பூவொன்று

பறித்து வைத்துக் கொள்

என் கல்லறைக்கு உதவலாம்..

இறுதியாய் உன்

மலரின் அறிவுரை..

உன் துப்பாக்கி

உன் கையில் எந்தன்

உடல் போன்றது....

நீ இறக்க நேரிட்டாலும்

எதிரியிடம் கொடுத்து

என் கற்பைக் கெடுக்காதே...

உன்னுடன் சேர்த்து

என்னையும் அழித்துவிடு...

இந்தத்தடவை பூ வேண்டாம்

ஒன்று பத்திரமாக வைத்துள்ளேன்

வெற்றுத் தோட்டாவை

எதிர்பார்த்து கார்த்திருக்கும்

உன் மலர்..உன் அன்பு மலர்.....

இளங்கவி

வீரம் உள்ளோடும் காதலிக் கவிதையில்

சோகம் இழையோடச் சொன்ன இளங்கவியே..

மனபாரம் நிறைக்குதென்னை.. எல்லா உறவுகளும்

இன்பம் காணும் ஒரு நன்நாள் பிறக்காதோ என

நானும் காத்துக் கிடக்கிறேன் காண்.

  • கருத்துக்கள உறவுகள்

நீ என்னைச் சுற்றும்

வண்டாக இருந்திருந்தால்

உனை வேண்டாமென்று சொல்லி

வெகுதூரம் சென்றிருப்பேன்...

நீயோ இன்றுவரை

எதிரியைச் சுற்றும்

புலியாக நிற்கிறாய்

அதனாலே நீ என்மனதில்

எங்கோ நிற்கிறாய்

அருமையான வரிகள்.எங்களை நினைக்க வெட்க்கமாகஇருக்குது.வாழ்த்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீ கொடுத்த; வெற்றுத்

தோட்டா எண்ணிக்கையில்

நீ வீழ்த்திய எதிரியின்

என்ணிக்கையும் கண்டேன்...

நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகைப் பூவின்

நிறங்களிலே எங்கள்

ஈழத்தின் புலிக்கொடி

பறக்கக் கண்டேன்.....

அழகான கவிவரிகள்

  • கருத்துக்கள உறவுகள்

"""இறுதியாய் உன்

மலரின் அறிவுரை..

உன் துப்பாக்கி

உன் கையில் எந்தன்

உடல் போன்றது....

நீ இறக்க நேரிட்டாலும்

எதிரியிடம் கொடுத்து

என் கற்பைக் கெடுக்காதே...

உன்னுடன் சேர்த்து

என்னையும் அழித்துவிடு...........

...சபாஷ் ,,,,,,,,,இளங்கவி , க்விவரிகள் வீரம் கொட்டுது,,,,,,,காதலின் சுவையுடன்

,அருமையான கவி மேலும்தொடர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை வித்தியாசமான சிந்தனையின் வரிகள் பாராட்டுக்கள். :lol:

போர்க்களத்து வீரத்தையும், காதலையும் அழகாக கலந்து கவிவரிகளாக்கினீர்கள். வாழ்த்துக்கள். :lol:

இந்த நேரத்தில் எனக்கு "தென்னங்கீற்று தென்றல் வந்து மோதும்... " என்ற இனிய தாயகப்பாடல் நினைவுக்கு வருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவிக்கு

நீங்களெல்லாம் வாழ்த்தும் போது என் தமிழுக்கும் உயிர் கிடைத்ததாகவே உணருகிறேன். கருத்துக்கு மிக்க நன்றி....

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sagevan

உங்கள் கருத்துக்கு நன்றி

எத்தனையோ தியாகங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் சமர்க்களங்களில் வீரத்தில் காதலையும் கலந்து சொன்னேன், எவர் மனதையும் காயப்படுத்துவதற்காக அல்ல....

அப்படிப் பார்க்கப் போனால் நானும் தானே வெட்கப் படவேண்டும்....

பல வேறு காரணங்களுக்காக நாங்கள் விட்டுவிட்டு வந்த கடமைகளை இங்கே இந்த நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு அமையச் செய்வதே தற்போது எங்கள் கடமையாகும்....

லண்டனில் வைகோ தனது உரையில் குறிப்பிட்டது போல ஒவ்வொரு காலையிலும் எழுந்தவுடன் இன்று நான் எனது தமிழீழத்துக்கு என்ன செய்யப் போகிறேன்..? எந்தவித உதவியாக இருந்தாலும்...உதாரணம்.. எமது எழுத்துவடிவமாக, பணவடிவமாக, எங்கள் மக்களின் கஸ்ரங்களை இருக்கலாம் எதோ ஒருவடிவத்தில் மற்றய நாட்டு மக்களுக்கு அறியத்தருபவனாக என்று பல வடிவங்களில் எங்களால் முடிந்த ஏதோ ஓர் கடமையை செய்வோமாக...

இளங்கவி

puspaviji

எங்களின் வீரத்தை தெரிவிக்க என்னால் முடிந்த வரிகள். கருத்துக்கு மிக்க நன்றி

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பிக்கு

ஒவ்வொரு கார்த்திகைப் பூவும் ஒவ்வொரு புலிக்கொடியல்லவா....

மண்ணுக்காக உயிர் நீத்த மாவீரர்களின் நினைப்பை ஒவ்வொரு தமிழனினும் மனதில் நிலை நிறுத்தவும், எங்கள் புலிக்கொடியை நாங்கள் கையிலே பிடிப்பது போன்ற உணர்வையும் தரும் ஓர் அற்புதமான பூவை நான் எப்படி மறக்க முடியும்....

அதுதான் அந்த வரிகள் தோன்றின....

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

முடிந்தவரை எந்தச் சந்தர்ப்பத்திலும் எங்கள் ஆயுதங்கள் எதிரியிடம் சேர்ந்துவிடக்கூடாது என்ற புலிகளின் கொள்கையை காதலில் சேர்க்க முயன்றதன் விழைவே இந்த வரிகள்.....

கருத்துக்கு மிக்க நன்றி

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sathiri

மிக்க நன்றி என் கவிதையை ரசித்ததற்கு....

இளங்கவி

Edited by ilankavi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mallikai vaasam

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

போர்க்களத்தில் வீரத்துடன் கூடிய ஓர் கண்ணியமான காதலை சொல்ல முயன்றேன் அதில் ஓரளவு வெற்றியும் அடைந்ததாகவே நினைக்கிறேன்...

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரத்தமிழர் பண்பாடு நிறைந்த அருங்கவிதை....!

வித்தியாசமான கவிதை நன்றாக இருக்கின்றது.

தலைப்பை பார்த்ததும் முன்பு போல இப்போது யாழ் களத்தில் காதலா என்று நினைத்து தான் படித்து பார்த்தேன், அப்படி பார்த்திருக்காவிட்டால் ஒரு வித்தியாசமான சிந்தனையை கொண்ட காதலை படிக்க தவறியிருப்பேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிருஜாவுக்கு

மிக்க நன்றி கவிதையை ரசித்ததற்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் ஓர் காதல்.....

கவிதை....

என் அன்புக் கண்ணனுக்கு

உன் ஆசை மலர்

எழுதும் மடலிது....

எனக்கான உந்தன்

காதல் பரிசும் கிடைத்தது

கார்த்திகை பூவும்

கிடைத்தது.....

நீ என்னைச் சுற்றும்

வண்டாக இருந்திருந்தால்

உனை வேண்டாமென்று சொல்லி

வெகுதூரம் சென்றிருப்பேன்...

நீயோ இன்றுவரை

எதிரியைச் சுற்றும்

புலியாக நிற்கிறாய்

அதனாலே நீ என்மனதில்

எங்கோ நிற்கிறாய்....

நான் எப்படியோ உன்மனதில்

ஆனால்...! நீ...; என்மனதில்

நிறைந்து இருக்கிறாய்

காரணம் சொன்னால்

உன் மனதில் எங்களின்

விடுதலை ஏக்கம்

நிறைந்து இருப்பதனால்.....

என் களமும் இங்கே

சூடாகி மலைகூடப் பிளக்கிறது

சரி.. சரி.. நானும் வருகிறேன்

கள முடிவில்; உன்

தொகையிலும் அதிகம்

வெற்றுத் தோட்டாக்கள்

அனுப்பி வைப்பேன்...

இல்லாவிடில்...

என் சார்பில்

கார்த்திகைப் பூவொன்று

பறித்து வைத்துக் கொள்

என் கல்லறைக்கு உதவலாம்..

இறுதியாய் உன்

மலரின் அறிவுரை..

உன் துப்பாக்கி

உன் கையில் எந்தன்

உடல் போன்றது....

நீ இறக்க நேரிட்டாலும்

எதிரியிடம் கொடுத்து

என் கற்பைக் கெடுக்காதே...

உன்னுடன் சேர்த்து

என்னையும் அழித்துவிடு...

இந்தத்தடவை பூ வேண்டாம்

ஒன்று பத்திரமாக வைத்துள்ளேன்

வெற்றுத் தோட்டாவை

எதிர்பார்த்து கார்த்திருக்கும்

உன் மலர்..உன் அன்பு மலர்.....

இளங்கவி

வீரத்தின் குறியீடு என்று இக்கவிதையைச் சொல்லவேண்டும். எவ்வளவு மனத்திடம் இந்தப் போர்க்களப்பூவிற்கு...

தாயக மீட்பில் ஒன்றித்த இரு போராளிகளுக்குள் தோற்றியிருக்கும் வீரம் நெய்த அற்புதக் காதல். பாராட்டுக்கள் இளங்கவி.

இதைப் போன்றதொரு தாயக மீட்போடு ஒன்றித்த காதல் இன்னொரு கோணத்தில் இந்த இணைப்பில் இருக்கிறது வாசித்துப் பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=14357

இளங்கவி,

நன்றாக உள்ளது உங்கள் கவிதை. உங்களின் கவிதைகளை நான் வழக்கமாக வாசிப்பதுண்டு. இந்த கவிதையில் நீங்கள் பயன்படுத்தும் மொழியில், சொற்களில் முன்னேற்றம் தெரிகின்றது. மேலும் மேலும் நிறைய புத்தகங்கள் வாசியுங்கள், மேலுல் மேலும் கவிதைகள் எழுதுங்கள்

உன் துப்பாக்கி

உன் கையில் எந்தன்

உடல் போன்றது....

நீ இறக்க நேரிட்டாலும்

எதிரியிடம் கொடுத்து

என் கற்பைக் கெடுக்காதே...

உன்னுடன் சேர்த்து

என்னையும் அழித்துவிடு

நான் கற்பு எனும் விடயத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை. (தமிழ்) பெண்களை தம் திறமைகளை அடக்கி என்றுமே ஆணின் கீழ் வைத்திருப்பதற்காக கையாளப்படும் தூய்மைவாத உத்தியாகவே அதனை பார்கின்றேன். எதிரியிடம் அகப்பட்டு சின்னாபின்னப்படுத்தப் பட்ட ஒரு பெண்ணை 'கற்பிழந்தவள்' என்று குறிப்பிடுவது, அவள் சின்னாபின்னப் படுத்தப்படும் போது அடையும் வேதனையிலும். அவமானத்திலும் பார்க்க 100 மடங்கு அதிகமானது. கவிதைகளில் பயன்படுத்தப் படும் மொழி எவ்வளவு முக்கியமோ அதே போல அது தொட்டுச் செல்லும் கருத்துகளும் முக்கியமானவை, பல வாசிப்புகளை கொண்டவை. கவிதை எழுதும் போது அதனையும் கருத்தில் கொண்டால், உங்களின் கவிதை மேலும் மேலும் சிறக்கும், எல்லைகளற்ற சர்வதேசியத் தன்மையை பெறும் என நம்புகின்றேன்

அன்புடன்

-நிழலி-

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி,

நன்றாக உள்ளது உங்கள் கவிதை. உங்களின் கவிதைகளை நான் வழக்கமாக வாசிப்பதுண்டு. இந்த கவிதையில் நீங்கள் பயன்படுத்தும் மொழியில், சொற்களில் முன்னேற்றம் தெரிகின்றது. மேலும் மேலும் நிறைய புத்தகங்கள் வாசியுங்கள், மேலுல் மேலும் கவிதைகள் எழுதுங்கள்

நான் கற்பு எனும் விடயத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை. (தமிழ்) பெண்களை தம் திறமைகளை அடக்கி என்றுமே ஆணின் கீழ் வைத்திருப்பதற்காக கையாளப்படும் தூய்மைவாத உத்தியாகவே அதனை பார்கின்றேன். எதிரியிடம் அகப்பட்டு சின்னாபின்னப்படுத்தப் பட்ட ஒரு பெண்ணை 'கற்பிழந்தவள்' என்று குறிப்பிடுவது, அவள் சின்னாபின்னப் படுத்தப்படும் போது அடையும் வேதனையிலும். அவமானத்திலும் பார்க்க 100 மடங்கு அதிகமானது. கவிதைகளில் பயன்படுத்தப் படும் மொழி எவ்வளவு முக்கியமோ அதே போல அது தொட்டுச் செல்லும் கருத்துகளும் முக்கியமானவை, பல வாசிப்புகளை கொண்டவை. கவிதை எழுதும் போது அதனையும் கருத்தில் கொண்டால், உங்களின் கவிதை மேலும் மேலும் சிறக்கும், எல்லைகளற்ற சர்வதேசியத் தன்மையை பெறும் என நம்புகின்றேன்

அன்புடன்

-நிழலி-

நிழலி,

இங்கு இளங்கவி கொடுத்திருக்கும் கவிதையின் பொருளை நீங்கள் எந்த நோக்கில் எடுத்திருக்கிறீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன். நிழலி என்ற பெயருக்குப் பின்னால் ஒரு பெருங் கவிஞர் ஒளிந்திருக்கிறார் என்பதனை அறிவேன். ஆதலால்த்தான் உங்களிடம் இக்கவிதையில் நீங்கள் உணர்ந்த பொருளை அறிய ஆசைப்படுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mathan

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிகள். நீங்கள் சொன்ன பின்னர்தான் யோசித்தேன் தலைப்பை ''போர்க்களத்தில் ஓர் காதல் '' என்று வைத்திருக்கலாமா என்று. ஆனால் இப்பொழுது காலம் தாமதித்து விட்டது.

மீண்டும் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

valvaizagara

ஒரே லட்சியத்தைக் கொண்ட இரு போராளிக்காதலர்களின் காதலின் கண்ணியத்தையும் அவர்களின் காதலிலே வீரமே மேலோங்கி நிற்கும் என்பதைச் சொல்ல விளைந்தேன்.

மேலும் உங்கள் இணைப்பையும் பார்த்து அந்தக் கவிதையையும் ரசித்தேன். நான் சில மாதங்களுக்கு முன்னரே யாழில் இணைந்த படியால் உங்களின் அந்தக் கவிதையை படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, தற்பொழுது பார்த்ததும் அசந்து போனேன்... ஒரு சிலைபோல அந்தக் கவிதையை செதுக்கிய விதம் மிக மிக அருமை.... என் மனமார்ந்த பாராட்டுக்கள்....

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

ஒரு விடயத்தில் பழகப் பழகத்தானே தேர்ச்சி வரும்..அதுபோல நானும் எழுத எழுதத்தான் எனது எழுத்துக்களும் அழகாகின்றன போலும்....

ஒருவனை மனதளவில் ஏற்றுக்கொண்ட ஒருத்தி தான் தன்னைக் காதலித்தவனிடம் தூய்மையாகப் போய் சேரவேன்டும் என்று நினைப்பது அந்தப் பெண்ணின் மனதளவில் அது கற்பு சம்மந்தப் பட்டவிடயமாக இருக்கிறது. ஆனால் சந்தர்ப்ப வசத்தால் அவள் சின்னாபின்னமாக்கப்படால் அதையே காரணம் காட்டி அவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அது அவனின் ஆணாதிக்கப் போக்கைக் காட்டுகிறது. அப்படியான ஆண்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை....

நான் கவிதையில் சொன்ன விடயம்.. உன் துப்பாக்கி உன்னிடம் நான் இருக்க விரும்புவது போல தூய்மையாகவே இருக்கட்டும். அந்தத் தூய்மைக்கு பங்கம் ஏற்படும் போது நான் எப்படி உயிர் வாழ விரும்ப மாட்டேனோ...அதைப் போல் அதையும் அழித்துவிடு.....!

இது அவளாகவே ஏற்றுக்கொண்ட விடயமே தவிர ஆணாதிக்கத் தன்மையால் அவளிடம் திணிக்கப் பட்ட விடயமல்ல....

இளங்கவி

நிழலி,

இங்கு இளங்கவி கொடுத்திருக்கும் கவிதையின் பொருளை நீங்கள் எந்த நோக்கில் எடுத்திருக்கிறீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன். நிழலி என்ற பெயருக்குப் பின்னால் ஒரு பெருங் கவிஞர் ஒளிந்திருக்கிறார் என்பதனை அறிவேன். ஆதலால்த்தான் உங்களிடம் இக்கவிதையில் நீங்கள் உணர்ந்த பொருளை அறிய ஆசைப்படுகிறேன்.

நான் சரியாகத்தான் புரிந்து கொண்டுள்ளேன் என நம்புகின்றேன். களத்தில் நின்று போராடும் போராளிக் காதலர்கள் தமக்கிடையேயுள்ள காதலையும் அன்பையும் போரின் மொழியில் பகிர்வதாக இந்த கவிதை உள்ளது. இளங்கவி இனிமையாக அதை சொல்லியுள்ளார். கற்பினை உவமானமாக பயன்படுத்தி இருந்ததையிட்டு நான் எழுதிய பதில்தானா உங்களை இந்த கேள்வி கேட்க வைத்தது? :o

:):lol: நான் ஒன்றும் பெரிய கவிஞர் இல்லை வல்வைசாகரா. வேறு சில பெயர்களில் முன்பு என் கவிதைகள் சரிநிகரிலும், மூன்றாவது மனிதனிலும் வந்திருந்தாலும் எவருக்கும் என் பெயர் நினைவில் இருக்கும் அளவிற்கு எழுதியதில்லை. நான் முன்பு எழிய கவிதைகள் புலியை பார்த்து பூனை சூடு போட்டதனை போல, ஜெயபாலன் அண்ணா, சேரன், அஸ்வகோஸ், சோலைக்கிளி, சிவசேகரம் போன்றவர்களின் கவிதைகளை பார்த்து எழுதிய கவிதைகள் அவை. கவிதைகளை விட அரசியல் கட்டுரைகளும், பத்திகளும் பல பெயர்களில் எழுதியிருந்தேன். இடையில் 8 வருடங்கள் எதுவும் எழுதாமல் இருந்து விட்டு போன மாதம் தான் மீண்டும் எழுதவே ஆரம்பித்தேன். ஆனால் இடையில் ஆகக் குறைந்தது 100 நல்ல புத்தகங்கள், நாவல்கள் வாசித்து முடித்தேன்

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.