Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி நடவடிக்கைக்காக உருவாக்கப்படும் எட்டாவது படையணி

Featured Replies

நடவடிக்கை படையணி ஐந்து (Task Force V) எனப்படும் 65 ஆவது டிவிசனை உருவாக்கும் முயற்சிகளில் சிறிலங்கா படைத்தரப்பு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி நடவடிக்கைக்காக எட்டாவது படையணி உருவாக்கம்

வீரகேசரி இணையம் 12/15/2008 10:29:44 AM - 'நடவடிக்கை படையணி ஐந்து (TASK FORCE- V)' எனப்படும் 65 ஆவது பிரிவினை உருவாக்கும் முயற்சிகளில் படைத்தரப்பு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- 'நடவடிக்கை படையணி ஐந்து (TASK FORCE- V)' எனப்படும் 65 ஆவது பிரிவினை உருவாக்கும் முயற்சியில் படைத்தரப்பு ஈடுபட்டுள்ளது.

இந்தப் படையணியானது வன்னி படை நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர் உருவாக்கப்படும் 8ஆவது பிரிவாகும். புதிய படையணியின் கட்டளை அதிகாரியாக 56 ஆவது படையணியின் பிரதி கட்டளைத் தளபதி கேணல் அத்துல கலகமே நியமிக்கப்பட்டுள்ளார்.

65-1 பிரிகேட்டின் கட்டளைத் தளபதியாக லெப். கேணல் பிரியங்க பெர்னாண்டோவும் (இவர் 11 ஆவது கெமுனுவோச் றெஜிமென்டை சேர்ந்தவர்), 65- பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக லெப். கேணல் ரஞ்சித் அபயரட்னவும் (இவர் 7ஆவது இலகு காலாட்படை றெஜிமென்டைச் சேர்ந்தவர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

58 ஆவது படையணியின் சிறப்புப் படைப் பிரிகேட்டின் கட்டளை அதிகாரியான லெப். கேணல் ஹரேந்திர ரணசிங்க 57- 1ஆவது பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

57-1 பிரிகேட்டின் கட்டளை அதிகாரி கேணல் ரவிப்பிரிய, மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதியான பிரிகேடியர் சானா குணதிலக்க 56ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

56 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்கோத்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பயிற்சி நெறிக்காக செல்லவுள்ளதனால் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன

அப்படியென்றால் இதற்கு முன் உருவாக்கப்பட்ட அணிகள் எல்லாம் என்னவாயிற்று.? வன்னி நடவடிக்கையில் முற்றுப்பெற முடியாமல் தவிக்கின்றனவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியென்றால் இதற்கு முன் உருவாக்கப்பட்ட அணிகள் எல்லாம் என்னவாயிற்று.? வன்னி நடவடிக்கையில் முற்றுப்பெற முடியாமல் தவிக்கின்றனவா?

இறைவா....!

நல்ல கேள்வி...!

சத்தியமா எனக்கு விடை தெரியாது:P

58 ஆவது படையணி விடத்தல் தீவுக்கு போக முதலே சிதைந்து பிரிகேடியர் சவிந்தர சில்வா குழுவாக ஏ32 இல கப்பம் கேட்டுக் கொண்டிருக்கு. 57 படையணி ஜெனரல் ஜகத் டயஸ் குழுவாக சிதைந்து முறுகண்டி பிள்ளையார் கோவிலடியில தேங்காய் துண்டுகள் பொறுக்கி கொண்டு நிக்குது.

மிச்ச டிவசன்களின் நிலையும் உப்பிடித்தான். அது தான் புதுசா படங்காட்டிறாங்கள்.

உண்மையிலேயே புரியவில்லை உங்கள் எழுத்து

எந்த கோணத்தில் சிந்திக்கின்றீர்கள் எழுதுகின்றீர்கள்

ஒரு கோணத்தைமட்டும் காட்டினால் புரிந்துகொள்ளமுடியும்

ஓணாணாயிருந்தால் எப்படி???????

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே புரியவில்லை உங்கள் எழுத்து

எந்த கோணத்தில் சிந்திக்கின்றீர்கள் எழுதுகின்றீர்கள்

குகதாசன் அண்ணா..

புலம்பெயர் தமிழருக்கு எதிராக எண்டு நினைச்சுக்கொண்டு படிச்சீங்கள் எண்டால் எல்லாம் விளங்கும்..! :D

இந்த 50 தில இருந்து 60, 62 படைகளின்ர கதையை வாசிக்கும்போது மண்டை காயுது.........

எனக்கென்னமோ எல்லா படைகளையும் சேர்த்து சரத் ஒரு கும்மாங்குத்து விளையாடுகிறார் போலதான் படுகுது.....

  • கருத்துக்கள உறவுகள்

குகதாசன் அண்ணா..

புலம்பெயர் தமிழருக்கு எதிராக எண்டு நினைச்சுக்கொண்டு படிச்சீங்கள் எண்டால் எல்லாம் விளங்கும்..! :D

அதுசரிதான்

ஆனால்வேறுமாதிரியும் எழுதுகிறாரே???

கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்

எழுத்தையும் நம்பமுடியவில்லையே

அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

இந்த 50 தில இருந்து 60, 62 படைகளின்ர கதையை வாசிக்கும்போது மண்டை காயுது.........

எனக்கென்னமோ எல்லா படைகளையும் சேர்த்து சரத் ஒரு கும்மாங்குத்து விளையாடுகிறார் போலதான் படுகுது.....

சிங்கள தேசத்தை எழுச்சி கொள்ள வைத்து தமிழருக்கு கும்மு கும்மு எண்டு கும்மி சிறீலங்காவின் வரலாற்றில முதலாவது ஜெனராலாக வரப்போறார். அதையோ கும்மாங்குத்து விளையாட்டு என்றியள் :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசத்தை எழுச்சி கொள்ள வைத்து தமிழருக்கு கும்மு கும்மு எண்டு கும்மி சிறீலங்காவின் வரலாற்றில முதலாவது ஜெனராலாக வரப்போறார். அதையோ கும்மாங்குத்து விளையாட்டு என்றியள் :D

அவர் அப்படித்தான் நினைத்து செயற்படுகிறார்

அதில தப்பில்லை

ஆனால் உங்களை மாதிரி ஆட்களும் அதையே விரும்பி இங்கு வக்காலத்து வாங்குவதுதான் .........????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் அப்படித்தான் நினைத்து செயற்படுகிறார்

அதில தப்பில்லை

ஆனால் உங்களை மாதிரி ஆட்களும் அதையே விரும்பி இங்கு வக்காலத்து வாங்குவதுதான் .........????

புலம்பெயர் தமிழர்களில் 'ஈழ உணர்வற்று தம் சுயநலம் மேலோங்கிக்கிடப்பவர்கள் உங்கள் 'பேச்சுக்களினால் திருந்தி உணர்ந்திருக்கின்றார்களா குறுக்ஸ் அண்ணை? இல்லை இப்படி வைவதனால் உங்களுக்குள் ஒரு மனத்திருப்தி ஏற்படுகின்றதா?!...தெரியவில்லை.

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி நடவடிக்கைக்காக உருவாக்கப்படும் எட்டாவது படையணி

"வாழைப்பழம் பழுதாகி வரும்போது வாய்ப்பனாக மாற்றுவது" போல் தான் புதிய படைகளை உருவாக்குவது. :D:D

Edited by nunavilan

சிங்கள தேசத்தை எழுச்சி கொள்ள வைத்து தமிழருக்கு கும்மு கும்மு எண்டு கும்மி சிறீலங்காவின் வரலாற்றில முதலாவது ஜெனராலாக வரப்போறார். அதையோ கும்மாங்குத்து விளையாட்டு என்றியள் :D

அப்ப முன்பு இருந்த அனுரத்த ரத்வத்த?? எனகென்னமோ ஜெனரல் அனுரத்த ரத்வத்த என்று படித்த ஞாபகாமா இருக்கு :D தெரிந்த யாராவது சொல்லுங்கப்பா :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வாழைப்பழம் பழுதாகி வரும்போது வாய்ப்பனாக மாற்றுவது" போல் தான் புதிய படைகளை உருவாக்குவது. :D:D

!! எப்படியண்ணை உங்களால இப்படியெல்லாம் சிந்திக்கமுடியுது?!!!!!!!!!!!!....:Dசிரிச்சுசிரிச்சு வயிறு புண்ணாய்ப்போச்சு....

அப்ப முன்பு இருந்த அனுரத்த ரத்வத்த?? எனகென்னமோ ஜெனரல் அனுரத்த ரத்வத்த என்று படித்த ஞாபகாமா இருக்கு :D தெரிந்த யாராவது சொல்லுங்கப்பா :D

அவர் இளைப்பாறிய ஜெனரலாக (retired general) பதவி உயர்வு பெற்று சேவையில் இருந்த லெப் ஜெனரல் (Lt General) இராணுவத் தளபதிக்கு பாதுகாப்பு அமைச்சராக இருந்தவரே அன்றி இராணுவத்தில சேவையில் இருக்கும் ஜெனரலாக இருக்கவில்லையுங்கோ.

அவர் அப்படித்தான் நினைத்து செயற்படுகிறார்

அதில தப்பில்லை

ஆனால் உங்களை மாதிரி ஆட்களும் அதையே விரும்பி இங்கு வக்காலத்து வாங்குவதுதான் .........????

புலம்பெயர் தமிழர்களில் 'ஈழ உணர்வற்று தம் சுயநலம் மேலோங்கிக்கிடப்பவர்கள் உங்கள் 'பேச்சுக்களினால் திருந்தி உணர்ந்திருக்கின்றார்களா குறுக்ஸ் அண்ணை? இல்லை இப்படி வைவதனால் உங்களுக்குள் ஒரு மனத்திருப்தி ஏற்படுகின்றதா?!...தெரியவில்லை.

உப்பி எழுதுறதுக்கு குவாட்டரும் காக்க புரியாணியும் தாறவங்கள்.

நீங்கள் அதை குவாட்டரும் கோழிபுரியாணியுமாக அப்கிறேட் பண்ணுவியள் எண்டா உங்கட பக்கம் நம்புங்கள் நாளை டண்ட னக்கா டன்டனக்கா... விரைவில் வெற்றிச் செய்தி டண்ட னக்கா டண்டனக்கா... எண்டு தாளம் போடலாம். 55 அடி கட்டவுட்டுக்கு தேவாரம் பாடி அபிசேகம் செய்யலாம் அடுத்தவருசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வாழைப்பழம் பழுதாகி வரும்போது வாய்ப்பனாக மாற்றுவது" போல் தான் புதிய படைகளை உருவாக்குவது. :D:D

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது....! களத்தில அவங்களுக்கு அதிக படையணிகள் தேவைப்படுகிறது என்று. இல்ல.. ஒரு உதாரணத்துக்கு சொல்லப் போனால் 58வது படையணியில் அரைவாசி களத்தில மண்டையைப் போட்டுட்டுது என்று வைத்துக்கொண்டால் அவங்கள் ஆள் சேர்க்கும் பொழுது 58வது படையணியின் வெற்றிடங்களை நிரப்ப 500 பேரோ அல்லது ஆயிரம் பேரோ தேவையென்று விளம்பரப்படுத்தி ஆள் சேர்ப்பில் ஈடுபட்டால் தங்கட குட்டு உடைஞ்சிடும் என்று அவங்களுக்கு தெரியும்...அந்தளவுக்கு அவங்கள் மடையர் இல்லை..

எனவே தான் இப்படி பல உருவாக்கங்கள் இடம்பெறுகிறது...

ஆனா ஒண்டு... போற போக்கில பார்த்தால்..படையணி உருவாக்கத்தில் செஞ்சறி அடிப்பங்கள் அல்லது இருக்கிறது எல்லாத்தையும் இழந்து படுதோல்வி அடைவங்கள்..அதற்குத்தான் சாத்தியம் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சவால் விடவோ, நக்கலடிக்கவோ இது தருணமல்ல. எதிரி பல முனைகளில் களைப்பின்றிய சமர்களைச் செய்ய முனைகின்றான் என்பதே உண்மை. அதை மறுக்கமுடியாது. மட்டறுக்கப்ப்டட படைப்பலத்தைக் கொண்ட தமிழரை பல இடங்களில் தாக்கும்போது, தமிழர் பலம் குறையும் எனக் கணக்குப் போடுகின்றான்.

நான் நினைக்கின்றேன். கேணல் தீபன் அண்ணா மடுவைக் கைவிடும்போது எதிரியின் இந்தச் சவால்கள் பற்றிச்சொல்லியிருந்தார். 6 முனைகளில் அவன் களத்தைத் திறக்க முனைகின்றான் என்பது பற்றி.

இப்போது கிளிநொச்சிப் பக்கம் முடியாது போனதால், நெடுங்கேணிப்பக்கம் ஒரு அணிணை இறக்கி, கிளிநொச்சி எதிர்ப்பைக் குறைக்க முயல்கின்றான். இதை ஏற்றுத் தான் ஆகவேண்டும்.

வெறுமனே சவால்கள், சண்டைகள் செய்வதை விட்டு, மனித உரிமைகள் பற்றி இலங்கையரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யுங்கள். அது எம் மக்கள் குண்டுவீச்சில் இருந்து தப்ப, ஓரளவாவது பயன்தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எந்தவகையான தாக்குதல்கள், தந்திரங்களை கையாண்டாலும் படையினர் பின்வாங்க மாட்டாகள்: ஜனாதிபதி

[ திங்கட்கிழமை, 15 டிசெம்பர் 2008, 05:20.47 AM GMT +05:30 ]

விடுதலைப் புலிகள் எந்த விதமான போர்த் தந்திரங்களைக் கடைப்பிடித்தாலும், எந்தவகையான தாக்குதல் முறைகளைக் கையாண்டாலும், எமது படையினர் போர்க்களத்தில் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்; முன்னேறிக்கொண்டே செல்வார்கள். இவ்வாறு அறிவித்திருக்கிறார் ஜனாதி மஹிந்த ராஜபக்ஷ.

அம்பேபுசவில் சிங்க ரெஜிமென்ட் படைத்தளத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இப்படிக் கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினாலோ, விமானத் தாக்குதல்களை நடத்தினாலோ, அல்லது தற்கொலைத் தாக்குதல்தான் நடத்தினாலோ படையினர் போர்க்களத்திலிருந்து பின்வாங்க மாட்டார்கள். முன்னேறிக் கொண்டே செல்வார்கள்.

விடுதலைப் புலிகள் தமக்குத் தெரிந்த எந்தவிதமான தாக்குதல்களை நடத்தினாலும் படையினர் பின்வாங்க மாட்டார்கள். மழை, வெள்ளம், புயல் போன்றவற்றால் அவர்களது நடவடிக்கையில் தடங்கல் ஏற்பட்டாலும் அவர்கள் தமது இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் உயிர்த் தியாகம் செய்த சிங்கப் படையணியின் அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையின் இராணுவத் தளபதியாக திகழும் சரத் பொன்சேகாவும் இந்த படையணியைச் சேர்ந்தவர் எனவும், உலகின் எந்தவொரு படையணியைவிடவும் எமது படையினர் திறமை மிக்கவர்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுக்கு நவீன ஆயுத வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமா? அவர்களுக்குப் பின்னால் தெற்கு மக்கள் இருக்கிறார்கள். படையினருக்கு அவர்கள் ஊக்கம் அளித்து வருகிறார்கள்.

படையினரின் நடவடிக்கையினால், அவர்களின் வீரத்தினால் பெறப்படும் வெற்றி எந்தக் கட்டத்திலும் அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்தப்படமாட்டாது. போர் நடைபெறும் பிரதேச மக்களை விடுவிக்கும் மனிதாபிமான நோக்கம் கொண்டதாகவே போரும் அதன் வெற்றியும் இருக்கும் என்றார் ஜனாதிபதி.

http://www.tamilwin.com/view.php?22OpDcc3n...9E2e2SLB3b37Gke

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வின் இல் வந்துள்ள செய்தியில் சிறிலங்கா சனாதிபதி சொல்வதுபோல் சிங்கள இராணுவம் மாவிலாறில் இருந்து ஆரம்பித்த சண்டையின் பின்னர் இன்னமும் ஒரு இடத்தில் இருந்தும் பின்வாங்கவில்லை. இடங்களை பிடிப்பதனால் போரில் வெல்லமுடியாது என்பது உண்மைதான். எனினும் ஒரு நிரந்தரமான தளம் இன்றி வலிந்த தாக்குதலையும் மேற்கொள்ளவது சிரமமானது. எனவே புலிகளுக்கு நிரந்தர தளம் உள்ள பிரதேசங்கள் என்று ஒன்றையும் விடக்கூடாது என்றுதான் "அகலக் கால்" வைத்துள்ளார்கள்.. மாதத்திற்கு 3000 பேரை இராணுவத்தில் சேர்க்கிறார்களாம். (எத்தனை பேர் "அகற்றப்படுகிறார்கள்" மற்றும் ஓடித் தப்புகின்றார்கள் என்ற புள்ளி விபரம் கிடைக்கவில்லை!)

புதிய படையணியிலை கெமுனுவோச்சின்(இலகுகாலாட் படை) 58வது அணியில் எஞ்சியது போக இதர பிரிவுகளும், மட்டக்களப்பில் இருந்து உருவிய வீரர்களுமாக ஒரு புதிய படையணி உதயம்....!!

பொதுப்படையான படையணி சம்பந்தமான விடையம்....

ஒரு படையணியில் மூண்று பிரிகேட்டுக்களும், ஒரு பிரிகேட்டில் மூண்று டிவிசன்களுமாக இருக்க வேண்டும்... ஒரு டிவிசனில் மூன்று கொப்பனிக்கள் ஒரு கொம்பனியில் மூண்று பிளாற்றூன்களும், ஒரு பிளாரூனில் மூண்று செக்சன்கள்... இப்படி இருக்க வேண்டும் படையணியின் ஆளணி விபரம்... ( கிட்டத்தட்ட 10 000 பேர்)

அதோடு படையணியில் ஆட்லறி பிரிகேட்டும், கவச பிரிகேட்டும் இணைந்து இருந்தால் அதைத்தான் முழுமையான படையணியாக கொள்வர்.... அந்த படையாணிக்குத்தான் மேஜர் ஜெனரல் ஒருவர் தளபதியாக இருப்பார்...!!

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர் மக்கள குறை சொல்லிற கூத்தாடிகள் இங்குள்ள புலம் பெயர் உறவுகள்

செய்யிற பல பணியை எண்ணி பார்த்த நமக்கே தலை சுத்துது அதுக்குள்ள

இவைகள் போடுற சத்தம் இருக்கே அத நெனைச்சா தான் மனசு வலிக்குது..

இங்க வந்து பொடற சத்தங்களை நிப்பாட்டி போட்டு லாட்சப்பலில புதிசா

முளைச்ச சிங்கள கடையர் ரவுடி தனத்தை அழியுங்கோ..

தமிழ் வீரமாவது சாகாமல் இருக்கும்..அவனும் பயப்பிடுவான்...

இங்க வந்து பொடற சத்தங்களை நிப்பாட்டி போட்டு லாட்சப்பலில புதிசா

முளைச்ச சிங்கள கடையர் ரவுடி தனத்தை அழியுங்கோ..

தமிழ் வீரமாவது சாகாமல் இருக்கும்..அவனும் பயப்பிடுவான்...

அண்ணோய், நீங்கள் சொல்லுறது நியாயமானதுதான்.

லாட்ச்சப்பல் என்ன எங்க இருக்கெண்டு எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை....

அதுமட்டுமில்ல, இது நாங்கள் விட்ட பிழை, இடங்குடுத்த பிழை...

அடக்குவது ஒன்றும் பெரிய விசையம் இல்லை... ஆனால் அது கடைசில விடுதலைப் போராட்டத்துக்கும் , புலிகளுக்கும்தான் கெட்ட பெயர் வாங்கித்தரும்.

இருக்கிற பிரச்சனைகளில இதுவும் தேவைதானா ?

பொல்லு கொடுத்து அடிவாங்கிறது நல்லதா ? இல்லை பொறுமையா இருக்கிறது நல்லதா ?

எல்லாத்துக்கும் காலம் வரும்... அங்க ஆட்டம் போடுறவையளும் அடங்கத்தான் போகினம்...

வெறுமனே சவால்கள், சண்டைகள் செய்வதை விட்டு, மனித உரிமைகள் பற்றி இலங்கையரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யுங்கள். அது எம் மக்கள் குண்டுவீச்சில் இருந்து தப்ப, ஓரளவாவது பயன்தரும்.

உண்மை! :D:D:D

இவை போன்றவையே புலம்பெயர்ந்தவர்கள் செய்ய வேண்டிய பணிகள்!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.