Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நயன்தாராவுக்கும் கோயில் ? !

Featured Replies

நூறு பேருக்கு தமிழ் பெயர் மாற்றும் திட்டம் பற்றி உங்களுக்கு எந்தக் கறுப்பாடு சொன்னது? பரவாயில்லை. நல்ல புலனாய்வுப் பிரிவைத்தான் வைத்திருக்கின்றீர்கள்.

அந்தத் திட்டம் கொஞ்சம் இழுபடுகின்றது. நாம் விரைவில் கூடிப் பேசி இதை முறைப்படி அறிவிப்போம்.

சரி! இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம்.

நான் நயனை வணங்குவது சரி என்றோ, அவருக்கு கோயில் கட்டுவது சரி என்றோ சொல்லவரவில்லை.

இரண்டு விதமான அம்மனை நம்புகின்ற சில சைவர்களும் நயனர்களும் பிரச்சனை படுவதால், எந்த ஒரு அம்மனையும் நம்பாத மூன்றாம் தரப்பாகிய நான் வந்து என்னுடைய கருத்தை சொல்கின்றேன்.

இரண்டு தரப்பிற்கு ஒரே உரிமை உள்ளது என்ற உண்மையை புரிய வைத்து நடுநிலையோடு நடந்து கொள்கிறேன்.

என்னுடைய கருத்து அம்மன் என்கின்ற ஒன்று கிடையாது என்பதுதான். அது எந்த அம்மனாக இருந்தாலும் சரி, அந்த அம்மன் கிடையாது. அவ்வளவுதான்.

ஆனால் கோரமான பற்களோடு பயங்கரமான அம்மனை நம்புவதற்கு ஒரு தரப்பிற்கு உரிமை இருந்தால், அழகான நயன்தாரா அம்மனை நம்புவதற்கும் மறு தரப்பிற்கு உரிமை உண்டு.

இதுவே என்னுடைய தீர்ப்பு

  • Replies 147
  • Views 18.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்,

ஒரு விடயத்தை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். குஸ்பு ஒரு முஸ்லீம் பெண்மணி. அவருக்கு கோயில் கட்டியவர் இந்துக்கள்.

அவருக்கு "குஸ்பாம்பிகை" என்ற பெயரில் கோயில் கட்டினார்கள்.

வழிபடுபவர்கள் தமக்குத் தெரிந்த வழியில் வழிபடுகின்றார்கள் என்பதுதான் இங்கே உள்ள விடயம்.

அத்துடன் மேரி மாதா அவதாரங்கள் எடுப்பதாக கதைகள் இல்லை. அப்படியான நம்பிக்கையும் பொதுவாக மக்களிடம் இல்லை.

ஆனால் இந்துக்களிடமோ அம்மன் பல அவதாரங்கள் எடுத்ததாக கதைகளும், அவர் தொடர்ந்தும் அவதாரங்கள் எடுப்பதாக நம்பிக்கைகளும் உண்டு.

அந்த வகையில் குஸ்பு, நமீதா, நயன்தாரா போன்றோர்கள் அம்மனின் அவதாரம் என்று அவர்கள் நம்புகின்றார்கள்.

அவர்களுடைய நம்பிக்கை சரியா என்பது வேறு விடயம்.

உங்களுடைய நம்பிக்கையை மறுப்பவர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரின் நம்பிக்கையும் யாரோ ஒருவரால் மறுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அது அல்ல இங்கு விடயம்.

அவதாரம் எடுப்பதாக நம்பப்படும் அம்மனின் வடிவத்தை நயன்தாராவிடம் சிலர் காணுவதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

இதற்கான அடிப்படைக் கூறுகள் இந்து மதத்தில்தான் இருக்கின்றன.

"நாகம்மா" என்று அம்மன் நாகபாம்பாக அவதாரம் எடுத்து வர முடியும் என்றால், நயன்தாராவாகவும் அவதாரம் எடுத்து வர முடியும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

குஸ்புக்கு கோவில் கட்டியவர்கள்.. ரசிகர்கள். இந்துக்களாக அவர்களை மாற்றியது நீங்கள்..!

இந்துக்களின் உருவ வழிபாட்டுக்குரிய தெய்வங்கள் அடிப்படையில்.. அவதாரங்கள் அல்ல. அவை.. எமது மூல சக்திக்கான வடிவங்கள். அதைப் பெண்ணாக இனங்காட்டியது.. மனிதப் பெண்கள் அவ்வாறான சக்தியுள்ளவர்களாக உலகில் இருக்க வேண்டும் என்பதற்கே ஆகும். பெண்களின் சம உரிமைக்காக குரல் கொடுத்த ஆதியான மதமே சைவம். பெண்களுக்கு கல்வி.. வீரம்.. செல்வம் அவசியம் என்ற மதமே இந்துமதம். நயனதாராவின் ஆடையுரிப்பை.. கழிவகற்றலை.. அவர்களுக்கு நிகராக்கி பழிப்பதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

மேரி சமீபத்தில் கூட புது அவதாரம் எடுத்ததாக எங்கோ செய்தி படித்தேன். ஆனால் அது அந்த மதத்தினரின் நம்பிக்கைக்குரிய ஒன்று. ***

மருதங்கேணி.. நீங்கள் ஏதோ நியாயமா எழுதியவர் போல பாசாங்கு செய்வது சரியல்ல.

நான் இங்கு எழுத வந்ததே.. நயனதாராவை "அம்மன்" என்று விளித்து எழுதப்பட்ட பின் தான்.

எனது குரல் இழித்துரைப்போரை நோக்கியதே அன்றி சர்வ உலகுக்கும் அல்ல..! அதை மக்கள் உணர்வார்கள் நன்கு..!

இங்கு பச்சைத்தூசணத்தில்.. கிருபன்.. இட்ட இந்துக்கள் தொடர்பான பதிவொன்றை அண்மையில் வாசித்தேன். அதில் தாங்களும் கருத்துப் பகர்ந்திருக்கிறீர்கள். அப்போ வராத சர்வதேச கருசணை.. இப்போ நயனா ஆடையுரி மாதா என்றதும் வருவதன் மர்மம் என்ன..!

எல்லோருக்கும் அவரவர் மதம்.. வழிபடும் முறை புனிதமானதே. அதை பிரித்துப் பழிக்கக் கூடாது. அதை செய்ய முனைந்தால் மற்றவன்.. மாங்காய் பறிச்சுக் கொண்டிருக்கமாட்டான். அவனும் திருப்பிப் பழிக்கவே செய்வான்..!

நாம் எம்மை சரியாக வைத்துக் கொண்டால்.. பிறர் ஏன் தரக்குறைவா எழுதப் போகினம். சிந்தியுங்கள்..! :lol::icon_mrgreen:

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்போதிருந்தே எனது நிலைபாடு.... ஓரே ஓரு கேள்விதான்.

உலகில் கோவிலில் வாழும் அம்மன்களிடம் இல்லாத என்ன குறையை நாயன்தாரா கோவில் காண கொண்டுள்ளார் என்பதே?

இதற்கு பதில் எழுத முயன்றுதானே.. இப்போ நாகரிமற்றவர்கள்.. என்ற பட்டத்தை சூட்டி மகிழ்ந்தீர்கள்.

அது நாகரிகமாக இல்லாது உங்களுக்கு தெரியலாம். நயனதாரா குசுவிடுவார்.. ஒண்டுகுப் போவார்.. கக்காக்குப் போவார்.. ஆனால் ஆலயத்தில் உள்ள அம்மன் போகாது. ஏனெனில் அது அருவமும் உருவமும் அல்ல கடவுளை மனிதன் உணர.. இனங்காண.. செதுக்கப்பட்டதால்.

இவ்வளவு எளிமையாகச் சொல்லியும் அதையே கேட்கிறீர்கள் என்றால்.. நீங்கள் தாம் எம்மை அவ்வாறு எழுதத் தூண்டுகிறீர்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். குற்றவாளியை விட குற்றத்தைச் செய்யத் தூண்டுபவனே அநாகரிகத்தைக் கொண்டவன்..!

எமக்கு தெரியும்.. எவரோடு எப்படி நாகரிகத்தைக் கையாள வேண்டும் என்பது. நீங்கள் மீறிய எல்லைகளை நீங்களே போய் பாருங்கள்..! புரியும்..! :D:icon_mrgreen:

இதற்கு மேல் ஒரு *** நடிகைக்காக நான் உங்களோடு கருத்து முரண்பட விரும்பவில்லை. இத்தலைப்புக்குள் என்னை மேற்கோள் காட்டி கருத்தெழுதுவதை விசமத்தனமான கேள்விகளை கேட்பதை நிறுத்துங்கள். அதுவே மீண்டும் மீண்டும் என்னை இங்கு எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளுகிறது..! :lol:

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

குஸ்புக்கு கோவில் கட்டியவர்கள்.. ரசிகர்கள். இந்துக்களாக அவர்களை மாற்றியது நீங்கள்..!

இந்துக்களின் உருவ வழிபாட்டுக்குரிய தெய்வங்கள் அடிப்படையில்.. அவதாரங்கள் அல்ல. அவை.. எமது மூல சக்திக்கான வடிவங்கள். அதைப் பெண்ணாக இனங்காட்டியது.. மனிதப் பெண்கள் அவ்வாறான சக்தியுள்ளவர்களாக உலகில் இருக்க வேண்டும் என்பதற்கே ஆகும். பெண்களின் சம உரிமைக்காக குரல் கொடுத்த ஆதியான மதமே சைவம். பெண்களுக்கு கல்வி.. வீரம்.. செல்வம் அவசியம் என்ற மதமே இந்துமதம். நயனதாராவின் ஆடையுரிப்பை.. கழிவகற்றலை.. அவர்களுக்கு நிகராக்கி பழிப்பதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

மேரி சமீபத்தில் கூட புது அவதாரம் எடுத்ததாக எங்கோ செய்தி படித்தேன். ஆனால் அது அந்த மதத்தினரின் நம்பிக்கைக்குரிய ஒன்று. அதை நயனதாரா என்ற நடிகை விபச்சாரிக்கு இட்டுச் சொல்லும் கீழ்த்தரமான செயலை செய்யமாட்டேன்.

மருதங்கேணி.. நீங்கள் ஏதோ நியாயமா எழுதியவர் போல பாசாங்கு செய்வது சரியல்ல.

நான் இங்கு எழுத வந்ததே.. நயனதாராவை "அம்மன்" என்று விளித்து எழுதப்பட்ட பின் தான்.

எனது குரல் இழித்துரைப்போரை நோக்கியதே அன்றி சர்வ உலகுக்கும் அல்ல..! அதை மக்கள் உணர்வார்கள் நன்கு..!

இங்கு பச்சைத்தூசணத்தில்.. கிருபன்.. இட்ட இந்துக்கள் தொடர்பான பதிவொன்றை அண்மையில் வாசித்தேன். அதில் தாங்களும் கருத்துப் பகர்ந்திருக்கிறீர்கள். அப்போ வராத சர்வதேச கருசணை.. இப்போ நயனா ஆடையுரி மாதா என்றதும் வருவதன் மர்மம் என்ன..!

எல்லோருக்கும் அவரவர் மதம்.. வழிபடும் முறை புனிதமானதே. அதை பிரித்துப் பழிக்கக் கூடாது. அதை செய்ய முனைந்தால் மற்றவன்.. மாங்காய் பறிச்சுக் கொண்டிருக்கமாட்டான். அவனும் திருப்பிப் பழிக்கவே செய்வான்..!

நாம் எம்மை சரியாக வைத்துக் கொண்டால்.. பிறர் ஏன் தரக்குறைவா எழுதப் போகினம். சிந்தியுங்கள்..! :lol::icon_mrgreen:

நெடுக்கண்ணை

நீங்கள் எழுதியது உண்மைதான். சர்வதேச அளவிலான கருத்து களமொன்றில் அநாகரிகமான முறையில் கருத்தை முன்வைப்பது. என்று நானே எழுதும்போது எனது மனம் குறுகுறுத்தது. நீ ஒரு முறையாவது அப்படி எழுதவில்லையா என்று என்னை என் மனசாட்சி கேட்டது. இருந்தும் நான் அதை தொhடந்தும் எழுதினேன். எனது கருத்துக்கள் பல முறை தணிக்கை செய்யபட்டிருக்கின்றது. அதன் பொருள் என்ன? நான் களவிதிகளை கடந்து எழுதினேன் என்பதுதானே? ஆகவே நான் பாசாங்கு செய்கிறேன் என்று நீங்கள் சொன்னால் அதை முழுமையாக நான் மறுக்க முடியாது.

ஆனால் எந்த இடத்தில் அதை நான் செய்கிறேன் என்பதை நீங்கள் சுட்டிகாட்டினால்தான். நாம் பாசங்குகளை கடந்து ஒரு நாகரீகமான கருத்தாடலையோ விவாதத்தையோ தொடர முடியும். நான் எழுதுவதெல்லாம் சரியாகிவிடாது ஒருபோதும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். தவிர எனது எண்ணங்களை நான் ஒருபோதும் ஒருவரிடம் திணித்துவிட முனைவதில்லை.

கூடிபொழுதுகளில் நான் கேள்விகளையே முன்வைக்கிறேன். அதன் அர்த்தம் பதில்களுக்காக காத்திருக்கிறேன் என்பதே. இந்த தலைப்பில் நான் தொடரும் காரணமும். உலகில் பல அம்மன்கள் கோவில் கண்டுள்ளார். நாயன்தாரா கோவில் காண என்ன குறை கொண்டுள்ளார் என்ற கேள்விக்கான பதிலை எதிர்பார்த்தே.

நீங்கள் உங்கள் அம்மனை பழிக்கக் கூடாது என்று சொல்கிறீhகள்.

சிலர் நயன்தாராவை கடவுள் என்று நம்பி கோயில் கட்டுகிறார்கள். ஆனால் அவர்களின் கடவுளை *** என்று நீங்கள் பழிக்கின்றீர்கள்.

இது எந்த வகையில் நியாயம்?

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த சகோதரியோடும், அசிங்கமாக நடக்கின்ற வக்கிரம் பிடித்த, மிருக்கத்தனமான வசனங்களை உடைய பைபிளைத் தூக்கிக் குப்பையில் போட்டு விட்டு நியாயம் கதையுங்கள் மருதங்கேணி.. அதை விட இது எவ்வளவோ தேவையில்லை...

சட்டி முட்டியைப் பார்த்து இளித்ததாம்" என்று சொல்வார்கள். அப்படித்தான் நீங்கள் நயன்தாராவிற்கு கோயில் கட்டுவதை எதிர்ப்பது இருக்கின்றது என்பதே என்னுடைய கருத்து.

நயன்தாரா ஒரு நடிகை. அவர் அம்மனும் அல்ல, பாலியல் தொழிலாளியும் அல்ல.

ஈழத் தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரதத்தில் எந்த ஒரு தூண்டுதலும் இன்றி ஐந்த இலட்சம் ருபாயை அளித்தவர். பெரிய நடிகர்கள் ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் என்று கிள்ளிக் கொடுக்கு, அவர்களை விட பல மடங்கு குறைவான ஊதியம் பெறும் நயன்தாரா தானாக வந்து அதுவும் நடிகைகளில் முதலாவதாக வந்து ஐந்து இலட்சத்தை கொடுத்தார்.

அப்படியான மனிதநேயம் உள்ள ஒரு நடிகையை சிலர் அம்மனின் அவதாரமாக நோக்குகிறார்கள். ஆனால் நெடுக்காலபோவான் அவரை கழுதை என்றும் விபச்சாரி என்றும் சொல்கிறார்.

இந்த இரண்டு பார்வையும் தவறாக இருந்தாலும், இதில் நெடுக்காலபோவானின் பார்வையே அருவருப்பானதும் கண்டிக்கப்பட வேண்டியதும் ஆகும்.

இந்து மதத்தை சேர்ந்த அவருடைய ரசிகர்கள் நயன்தாராவை அம்மனின் அவதாரமாக பார்ப்பது முட்டாள்தனம். ஆனால் இந்து மதத்தில் இப்படி நம்புவதற்கான அனுமதி உண்டு என்பது இங்கு முக்கியமான ஒரு விடயம். இந்த அனுமதியை பலர் பலவாறு பயன்படுத்தியே அம்மனை பாம்பு, பல்லி என்றெல்லாம் ஆக்கி விட்டார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டு

இந்த நிலையில் அம்மனை நயன்தாரா அளவிற்கு ரசிக பக்தர்கள் உயர்த்தியுள்ளது பற்றி மற்றைய இந்துக்கள் பெருமைப்படலாம் என்றே நான் கருதுகின்றேன்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த சகோதரியோடும், அசிங்கமாக நடக்கின்ற வக்கிரம் பிடித்த, மிருக்கத்தனமான வசனங்களை உடைய பைபிளைத் தூக்கிக் குப்பையில் போட்டு விட்டு நியாயம் கதையுங்கள் மருதங்கேணி.. அதை விட இது எவ்வளவோ தேவையில்லை...

அதை தூக்கி எறிந்தால்? அதில் இருக்க கூடிய நிறைகளை குறைகளை தெரிந்து கொள்வது எப்படி தூயவன். மேரியையும் கோவிலில் இருந்து தூக்கி எறிய நான் தயாரக இருக்கிறேன் காமாட்சிஅம்னை தூக்கி வீச நீங்கள் தயார உள்ளீhகளா தூயவன்?

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன், நீங்கள் தேவையில்லாமல் இந்தத் தலைப்பைத் திசை திருப்பியிருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஏனென்றால், தமிழ்நாட்டிலுள்ள சினிமா ரசிகர்கள் தமது பிரியமான நடிகர்களைக் கடவுள்களாக நினைப்பதும், அவர்களுடன் ரெண்டு அல்லது மூன்று படங்களில் வலம் வரும் கதாநாயகிகளை கடவுள்களின் மனைவிகளாக நினைத்து வழிபடுவதும் இயல்பு. ரஜனி - குஷ்பூ, ரஜனி - நக்மா....என்ற வரிசையில் இப்போது நயந்தாராவிற்கும் கோயில் கட்ட நினைத்திருக்கிறார்கள். இது அவர்கள் சினிமாவில் கொண்டுள்ள மோகத்தையும், அறியாமையையும் மட்டுமே காட்டுகிறது. இதற்குள் எங்கிருந்து இந்துமதம் தெரிகிறது ?

ஆக நீங்கள் திட்டமிட்டே இந்த திசை திருப்பலைச் செய்திருப்பதாகவே எனக்குப் படுகிறது. அல்லது சிலரை வம்புக்கிழுத்து விடுவது உங்கள் நோக்கமாக இருந்திருக்கலாம். நீங்கள் நினைத்தவாறே, நாய்க்கு எங்கு கல்லெறி பட்டாலும் ஒரே காலைத் தூக்குவதைப்போல, நீங்கள் கரணமின்றியே முன்வைத்த இந்துமதம் மேலான குற்றச்சாடைப் பயன்படுத்திக்கொண்டு தனது வழமையான திராவிடர் கழகம் மீதான வக்கிரத்தையும், மேலதிகமாக கிறீஸ்த்தவர்களின் புனித நூலான பைபிளின் மீதும் தனது காழ்ப்புணர்ச்சியைக் கொட்டித் தீர்த்திருக்கிறார். "சொந்தச் சகோகதரியுடன் படுப்பது" - இதை இவருக்கு யார் சொன்னார்களோ தெரியவில்லை, அந்தளவிற்கு கிறீஸ்த்தவ மதம் மீதான தனது வெறுப்புணர்ச்சியைக் காட்டி தனது இழி நிலையை விரிவாக விளக்கியிருக்கிறார்.

விமர்சனங்கள் முகம் கொடுக்கத் திராணியற்ற மனிதர்களுக்கு நீங்கள் விடும் சவால்கள் எல்லாம் எவ்வளவுக்கு அவர்களை கீழிறக்கித் தமது உண்மை முகத்தைக் காட்ட வைத்துவிடுகிறது என்பதற்கு இது நல்ல உதாரணம்.

எடுத்ததற்கெல்லாம் "கன்னடக் கிழவன்" பற்றி கொக்கரிக்கும் இவர்கள் அந்தக் கன்னடக் கிழவன் தமிழனாக இருதிருந்தால் என்ன சொல்லியிருப்பார்களோ தெரியவில்லை?! அல்லது அந்தக் கன்னடக் கிழவன் செய்ததை இவர்கள் தமது கருத்தாடலுக்காக அவ்வப்போது சேர்த்துக்கொள்ளும்(இது உண்மையாகவே அவர்களுக்கு விருப்பமில்லாதபோதும் கூட) "தமிழ்த் தேசியவாதிகள்" செய்யவில்லையென்பதை இவர்கள் தெரிந்தும் தெரியாமல் இருப்பதுதான் வேடிக்கை.

இன்று தமிழ்நாட்டில் பற்றியெரியும் தமிழ் உணர்வு இவர்களே சொல்லும்"கன்னடக் கிழவனின்" வழிவந்தர்களாலேயே தோற்றுவிக்கப்பட்டதென்பதையு

  • கருத்துக்கள உறவுகள்

***

பைபிளில் உள்ள அவ்வதிகாரத்தை முன்பு யாழில் இணைத்துமிருந்தேன். எனவே எனக்கு நீங்கள் சொல்லித்தரத் தேவையில்லை.

நிற்க, கன்னடக்கிழவன் சாதித்தது என்ன? தமிழனுக்குச் சொந்தமானது கோவணம் என்று கூட உங்களால் உறுதி கூற முடியாத அளவுக்குத் தமிழனை அசிங்கப்படுத்திய மனிதன். தமிழனின் வரலாற்றில் எதை அந்த மனிதன் நல்லது என்று சொல்லியிருக்கின்றான் என்று சொல்லுங்கள். நான் விவாதத்தை விடுகின்றேன்.

உங்களுடைய எதையுமே உங்களுக்கு உரித்துள்ளதாக, உரிமை கொண்டாட அவன் அனுமதிக்கவில்லை. ***

அது மற்றவர்களுக்குச் சொந்தம், நூல்கள் எல்லாம் ஆரிய மாயை என்று எதையுமே தமிழன் அசிங்கமாகப் பார்த்துப் போகின்ற நிலலை உருவாக்கி வைத்துள்ளான்.

விட்டால் உடனே தமிழனுக்காக ஏதோ புடுங்கினவன், கிழித்தவன் என்பீர்கள்.... என்ன புடுங்கிக் கிழித்தது என்று பட்டியல் போடுங்களேன்.... எத்தனை காலம் மக்களை ஏமாற்றப் போகின்றீர்கள்.

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

***

கன்னடக் கிழவன் எதுவுமே செய்யவில்லை என்றிருக்கட்டும், பரவாயில்லை. நீங்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும் பார்ப்பணம் தமிழனுக்கு என்னத்தை புடுங்கி விட்டுப் போயிருக்கிறது என்று பட்டியலிடுங்கள், நானும் விவாதத்திலிருந்து விலகிக் கொள்கிறேன்.

சோ, சுப்ரமணிய சாமி, ஜெயா, ராம் மாணிக்கலிங்கம், விசு, ராமன், மாலினி பார்த்தசாரதி....இவைகள் தானே பார்ப்பணம் தமிழனுக்காக செய்த் செய்துவருகிற நல்ல செயல்கள். அல்லது வேறும் ஏதாவது வைத்திருக்கிறீர்களா? சாதியமும், வர்க்கச் சண்டையும், அடிமைத்தனமும் தான் உங்களின் மூதாதையர்கள் இங்கு விட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் பிடிக்குள்ளிருந்து வெளியே வர சனங்களுக்கு உதவியவர்தான் தந்தை பெரியார். திராவிடப் பாரம்பரியத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு எமது கண்முன்னே தமிழ்நாட்டில் நடக்கும் ஈழத் தமிழர்க்கெதிரான, எமது போராட்டத்துக்கெதிரான பார்ப்பணிய விசமப் பிரச்சாரத்தை இங்கே சரியென்று வாதாட வருகிறீர்கள். உங்கள் போன்ற ஆட்களோடு பேசிப் பிரயோசனமில்லை என்றபடியால்த்தான் நான் சபேசனுக்கு எழுதினேன்.

நீங்கள் கேட்டுக்கொண்டதற்காக, திராவிடர் பாரம்பரியத்தில் வந்தவர்களான திராவிடர் கழகம், தி.மு.க, ம.தி.மு.க போன்ற கட்சிகளும், சீமான் போன்ற தனி நபர்களும் செய்துவரும் போராட்டங்கள் எங்கே நீங்கள் பாதுகாக்கத் துடிக்கும் ஜெயா, சுவாமி, சோ, ராம் போன்ற ஈழ எதிர்ப்பாளர்கள் எமக்கெதிராகக் கக்கிவரும் விஷம் எங்கே !? புரிந்துகொள்ளுங்கள். முடியாவிட்டால் இனி உங்களுடன் பேசிப் பிரியோசனமில்லை.

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பச்சைத்தூசணத்தில்.. கிருபன்.. இட்ட இந்துக்கள் தொடர்பான பதிவொன்றை அண்மையில் வாசித்தேன். அதில் தாங்களும் கருத்துப் பகர்ந்திருக்கிறீர்கள். அப்போ வராத சர்வதேச கருசணை.. இப்போ நயனா ஆடையுரி மாதா என்றதும் வருவதன் மர்மம் என்ன..!

நீங்கள் அப்போதே சுடச்சுட வாசித்திருப்பீர்கள்.. பதிலும் தந்திருப்பீர்கள். :wub:

அந்த நேரத்தில் "மல்லாக்கப் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்து எச்சில் துப்புகிறாயே" என்றவர்களும், வசிக்கும் விலாசத்தைத் தந்தால் வீட்டிலேயே வந்து பதில் சொல்லுகிறோம் என்று தனிமடலில் மிரட்டியவர்களும் உண்டு.. அது ஒரு காலம்..ம்ம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறித்தம்பி!!!!!!!!

இப்ப என்னெண்டு தெரியுதோ???? :wub:

தூண்டில் ஊசியிலை எந்த புளுவை கொழுவி எறிஞ்சால் என்னென்ன மீன்னெல்லாம் வந்து அம்புடுமெண்டு :wub:

இஞ்சை பாத்தியளே பெரியபெரிய வில்லங்களெல்லாம் ஒண்டு கூடீட்டினம் ஓ வட்டமேசை மாநாடு நடக்குதோ????? :wub:

பொழுது போறதுக்கு ரண்டு கருத்தெழுத வேணுமெண்டால்.. சுலபமாக இந்து சமயமும் சாதியளும்தான் இருக்குது.. எழுதுவம்!! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

***

பெரியார், ஈழம் தொடர்பாக எதையுமே சொல்லவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் இன்று ஈழத்தையும் ஆதரிக்கிறார்கள். உதாரணத்துக்கு திராவிடர் கழகம், சீமானின் அண்மைய உரைகளைக் கேட்டுப் பாருங்கள்.

இந்துக்களை நான் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழும் சைவ சமயமும் ஒட்டிப்பிறந்தவை என்றுதான் நினைக்கிறேன். நான் எதிர்ப்பது ஈழப் போராட்டத்துக்கு எதிரான சிலரைத்தான். துரதிஷ்ட்ட வசமாக அப்படி எதிர்ப்பவர்களில்( காங்கிரஸ்காரர் போன்ற சிலரைத் தவிர)பெரும்பாலானோர் பிராமணிய சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் (இதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்)அவர்களை விமர்சிக்க வேண்டியதாயிற்று. மற்றும்படி முழு பிராமனியச் சமூகமுமே எமக்கு எதிரானதுதானா என்றால் என்னிடம் விடைகள் இல்லை. ஒருவேளை அப்படியில்லாமல்க் கூட இருக்கலாம்.

பெரியார் செய்த நன்மைகள் பற்றிய பட்டியலை நான் கைவசம் வைத்திருக்கவில்லை. உண்மையாகவே உங்களுக்குத் தேவைப்பட்டால் அதை தேடி எடுத்துவரத் தயார்.

தனிப்பட்ட தாக்குதல்களாக மாறிவரும் இந்தத் தலைப்பிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.

நன்றி.

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

ரகு,

நான் விவாதத்தை திசை திருப்பவில்லை. இங்கே நயன்தாராவாற்கு கோயில் கட்டுவது சரியா தவறா என்பதுதான் விவாதம்.

கோயில் கட்டுவது முட்டாள்தனம், ஆனால் பாம்புக்கும், குரங்குக்கும் கோயில் கட்டலாம் என்றால், புதிய புதிய அவதாரங்களை உருவாக்கி கோயில் கட்டலாம் என்றால், நயன்தாராவிற்கும் கோயில் கட்டலாம் என்பது என்னுடைய வாதம்.

இந்து மதத்தில் எத்தனையோ சிறுதெய்வங்கள் இருக்கின்றன. இதில் பல உயிரோடு இருந்த மனிதர்கள்தான்.

நல்லதங்காளிற்கும் கோயில் இருக்கின்றது. தீப்பாய்ந்த மங்கம்மாளிற்கும் கோயில் இருக்கின்றது. இன்றைக்கு அம்மன் என்று கருதி பல இடங்களில் வணங்கப்படுபவர்கள், எம்மோடு வாழ்ந்த சாதரண மனிதர்களாக இருக்கின்றார்கள்.

அதுவும் சமூகத்திற்கு எதுவும் செய்யாது, தற்கொலை செய்து கொண்ட பெண்கள், கொலை செய்யப்பட்ட பெண்கள், நோய் வந்து இறந்த பெண்கள் என்று பலர் அம்மனாக நம்பப்பட்டு கோயில் கட்டி வணங்கப்படுகின்றார்கள்.

இந்த அம்மன்களுக்கும், இவைகiளுக்கு கோயில் கட்டியவர்களுக்கும் உள்ள உரிமை, நயன்தாராவிற்கும், அவருடைய பக்தர்களுக்கு உண்டு என்பதுதான் என்னுடைய வாதம்.

இறந்த பின்பு கோயில் கட்டுவதை விட உயிரோடு இருக்கும் பொழுது கோயில் கட்டவது ஒரு நல்ல விடயம்.

இவைகளை நான் விவாதத் தலைப்பிற்குள் நின்றுதான் சொல்கின்றேன்.

*** அவர் அம்மன் அல்ல என்றும் சிலர் எழுதினார்கள். இதற்கு பதிலாக இந்து மதத்தின் மற்றைய அம்மன்கள் பற்றி இந்து மதம் என்ன சொல்கின்றது என்பதை விளக்கி பதில் தந்திருக்க முடியும். ஆனால் நான் செய்யவில்லை.

அப்படிச் செய்திருந்தால், விவாதம் திசை மாறிப் போயிருக்கும்.

மற்றவர்கள் திசை திருப்ப முயல நான் மீண்டும் மீண்டும் விவாதத்திற்குள்ளேயே நிற்பதை என்னுடைய கருத்துக்களில் இருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இந்தபக்கத்தை இப்ப பாக்கேக்கை ஏதோ ஒப்பிரேசன் தியேட்டருக்கு போய் கத்தி வைச்ச வருத்தக்காரன் மாதிரி கிடக்கு :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தபக்கத்தை இப்ப பாக்கேக்கை ஏதோ ஒப்பிரேசன் தியேட்டருக்கு போய் கத்தி வைச்ச வருத்தக்காரன் மாதிரி கிடக்கு :rolleyes:

குமாரசாமியண்ணை , நீங்கள் கொஞ்ச குளுக்கோஸ் ஏத்திவிடுங்கோவன் . :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தபக்கத்தை இப்ப பாக்கேக்கை ஏதோ ஒப்பிரேசன் தியேட்டருக்கு போய் கத்தி வைச்ச வருத்தக்காரன் மாதிரி கிடக்கு :rolleyes:

ஏன் தாத்தா என்ன ஆச்சு...

ஏன் தாத்தா என்ன ஆச்சு...

:):D:D:D:lol::) .... அடடா... வேற ஸ்மைலிஸ் இல்லையே... :D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த நன்பர் ஒருவர் இப்படித்தான் நயன்ந்தாராக்கும் குஷ்புக்கும் கோயில் கட்டியே தமிழன் அழிஞ்சான் என்று திட்டிக்கொண்டே இருந்தார்......சில தினங்களின் பின்பு அவர், அவுஸ்திரேலியாவின் பிரபல துடுப்பாட்ட வீரருடன் நின்று படம் எடுக்கப்போறன் நீரும் வாரிரோ என்று கேட்டார்............

அதிகமானவர்களுக்கு வாழ்க்கையில் காதநாயகனோ,கதாநாயகியோ தேவைப்படுகிறது.சிலர் ஆத்மீகத்தில்(இந்துக்கள்.கிறி

ஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள்),சிலர

் விளையாட்டில்,சிலர் அரசியலில்,சிலர் சினிமாவில்......போன்றவற்றில் இருந்து தங்களது கதாநாயகனையோ,நாயகியை தெறிவு செய்கிறார்கள் போல......

எனக்கு தெரிந்த நன்பர் ஒருவர் இப்படித்தான் நயன்ந்தாராக்கும் குஷ்புக்கும் கோயில் கட்டியே தமிழன் அழிஞ்சான் என்று திட்டிக்கொண்டே இருந்தார்......

என்ன புத்தரெ, உங்களுக்கு மட்டும் இப்படி நண்பர்கள் வாய்க்கிறார்கள். ஒருவர் இலங்கைக்கு போகும் போது பில்லா அஜித் மாதிரி போகிறார். மற்றவர் குஸ்புக்கு கோயில் வேண்டாம், தன்டுல் கார் க்கு கோயில் வேண்டும் என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன புத்தரெ, உங்களுக்கு மட்டும் இப்படி நண்பர்கள் வாய்க்கிறார்கள். ஒருவர் இலங்கைக்கு போகும் போது பில்லா அஜித் மாதிரி போகிறார். மற்றவர் குஸ்புக்கு கோயில் வேண்டாம், தன்டுல் கார் க்கு கோயில் வேண்டும் என்கிறார்.

:lol: என்னுடைய முகராசி அப்படி.....கமல்.ரஜனி,நயந்தாரா எல்லொரும் என்னுடன் நற்பை வளர்க்க ஆசைப்படுகினம் நான் தான் இன்னும் அவர்களுக்கு "கொல்சிட்"கொடுக்கவில்லை... :rolleyes:

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.