Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியை இப்போது பிடிப்பதென்பது முடியாத காரியம் - கெஹலியவால் முடிந்தால் பிடித்துக் காட்டட்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சிக்குள் இலங்கை அரசாங்கப் படைகள் நுழைந்தால் பாரிய உயிரிழப்புகளையும் அழிவுகளையும் அவர்கள் முகங்கொடுக்க நேரிடுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எச்சரித்துள்ளார்.

ஆங்கில பத்திரிகைக்கு அவர் ஈமெயில் மூலம் வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் எந்தக் காரணம் கொண்டும் எனது பூமியை விட்டோ எனது மக்களை விட்டோ ஓடிச் செல்லப் போவதில்லை.

30 வருடங்களாக நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க தமிழ் மக்களது ஆசிகளும் சக்தியும் உதவிகளும் இருப்தால் தொடர்ந்தும் போராட முடிந்துள்ளது.

இராஜதந்திர மட்டங்களினூடாக இந்திய மத்திய அரசோடு உறவுகளை பேணுவதில் மாற்றங்களை கொண்டுவர முயன்று வருவதாகவும் அந்த மனமாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் பிரபாகரன் குறிப்பிட்டுள்ள அவர் தமிழ்நாட்டு மக்களும் அரசியல்வாதிகளும் எந்த ஒரு அரசியலும் இல்லாமல் ஈழத்தமிழர் போராட்டத்துக்கு ஆதரவளித்து வருகிறார்கள்.

தவிரவும் கிளநொச்சியில் இடம்பெறும் மோதல்களில் இராணுவ இழப்புகள் தமது வெற்றியை உறுதி செய்வதாகவும் பிரபாகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

வன்னிப் பிரதேசத்தில் இடம்பெறும் யுத்தம் காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இவர்கள் நலன் கருதியாவது ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாமே எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரபாகரன்,

நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவது எமது மக்களுக்காகவே. அவர்களுக்கு விடுதலை கிடைக்கப் பெற்ற பின்னரே ஆயுதத்தைக் கீழே வைப்போம். இது தவிர பலாத்காரத்தாலோ பயமுறுத்தலாலோ எம்மை அடிபணிய வைக்க முடியாது.

தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டால் உரிய தீர்வினைக் காணமுடியும்.

பயங்கரவாதம் சர்வதேச ரீதியாக வெறுக்கப்படும் ஒன்று இந்த நிலையில் இந்த யுத்தத்தில் உங்களால் வெற்றி பெற முடியுமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில்,

எம்மால் முன்னெடுக்கப்படுவது ஒரு போராட்டமே. தமிழ் மக்கள் வாழும் இலக்குகள் மீது விமானத் தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று அவர்களுக்குப் பாரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துவது பயங்கரவாதம் இல்லையென்றால் நாம் எமது மக்களுக்காகப் போராடுவது மட்டும் எவ்வாறு பயங்கரவாதமாக முடியும்?

மேஜர்ஜெனரல் ஜானக பெரேராவை நாம் படுகொலை செய்யவில்லை. இதற்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஜானக பெரேராவுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் முரண்பாடுகள் இருந்தன. இதனை சிங்கள மக்கள் அறிவர்.

இவ்வாறான மனிதப் படுகொலைகளைக் கண்டித்து சிங்கள மக்கள் விரைவில் வீதிக்கு இறங்குவர். அப்போது உண்மை புலனாகும. இவ்வாறு அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,தற்போதைய சூழ்நிலையில் கிளிநொச்சியை விரைவாகக் கைப்பற்றுவதென்பது முடியாத காரியமென பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இருதின என்ற சிங்களப் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சியில் சுமார் 1,50,000 மக்கள் வாழ்கின்றனர்.

இந்த நிலையில் படையினர் இந்தப் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீவிரமாகச் செயற்பட்டால் சில வேளைகளில் பொதுமக்களுக்குப் பாதிப்புகள் ஏற்படலாம். ஆகவே இதனைக் கருத்தில் கொண்டே மிக நிதானமாக எமது படையினர் செயற்படுகின்றனரெனத் தெரிவித்துள்ளார்.

http://www.ajeevan.ch/content/view/7987/1/

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சிக்குப் பதிலாக முல்லைத்தீவை சிங்கள இராணுவம் பிடிப்பதற்காக தற்போது முள்ளியவளை, தண்ணீரூற்று வரை வந்துள்ளனராம். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சியை இப்போது பிடிப்பதென்பது முடியாத காரியம் - கெஹலியவால் முடிந்தால் பிடித்துக் காட்டட்டும்

குட்டிப்பையன் அண்ணா உதென்ன செய்தி??????????????????????? தலைப்பில இருக்கிறத செய்திக்குளஇள காணமே=?????????????????? உந்த தலைப்பு ஏதோ சவால் விடுற மாதிரியெல்லோ கிடக்கு??????????? அதுவும் தலைவர் சவால் விடுற மாதிரியெல்லோ கட்டுரையும் இருக்கு???????????????????????? உவை உந்த பத்தோட பதிணொண்டா தொடங்கிற இணையக்காரர் தங்கட சைட்ட ஆக்கள் பாக்கோணும் எண்டு இல்லாததுகள பொல்லாததுகள கவர்ச்சியா எழுதுவினம்............... நான் மேற்கோளிட்டது யாரின்ர கருத்து????????????????????????

தலைவர் இப்பிடி சொல்லியிருக்க மாட்டார்......... தலைவர் உப்பிடி கண்டபடி வார்த்தைஜாலம் காட்டுறவரும் இல்ல............. உப்பிடியான தலைப்புகள யாழில போடுறதால புலியளுக்கும் தலைவருக்கும் தான் கெட்ட பேர்................ மட்டுறுத்தனர் ஆக்கள் ஒருக்கா கவனியுங்கோ......................... :rolleyes:

கேட்க வேண்டியவரிடம் கேட்டால் பதில் வரும்.

தலைப்பு மீண்டும் செய்திக்குள் வரவேண்டுமென்று நியதியில்லை புனையாரே? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பின்ர உள்ளடக்கம் செய்தியிலயும் இருக்கத்தானே வேணும் அண்ணோய்??????????????????????????????????? ஏனெண்டால் தலைப்பில சவால் விட்டிருக்கு.............. செய்தியில சவால் விட்டத பத்தி ஒண்டையும் காணலயே???????????? அதோட செய்திய பல இடத்தில வெட்டிக் கொதஇதின மாதிரி இருக்கே............................................

தலைப்பில இருக்கிற செய்தில வரத் தேவையில்லாட்டி................. """"வடிவேலுவுக்கு வயித்துப்போக்காம் """"""""""" எண்டும் தலைப்ப போட்டிட்டு உந்த செய்திய போட்டிருக்கலாமே=????????????????????????????????????????????? :rolleyes:^_^:(

:):):unsure::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையன் அண்ணா உதென்ன செய்தி??????????????????????? தலைப்பில இருக்கிறத செய்திக்குளஇள காணமே=?????????????????? உந்த தலைப்பு ஏதோ சவால் விடுற மாதிரியெல்லோ கிடக்கு??????????? அதுவும் தலைவர் சவால் விடுற மாதிரியெல்லோ கட்டுரையும் இருக்கு???????????????????????? உவை உந்த பத்தோட பதிணொண்டா தொடங்கிற இணையக்காரர் தங்கட சைட்ட ஆக்கள் பாக்கோணும் எண்டு இல்லாததுகள பொல்லாததுகள கவர்ச்சியா எழுதுவினம்............... நான் மேற்கோளிட்டது யாரின்ர கருத்து????????????????????????

தலைவர் இப்பிடி சொல்லியிருக்க மாட்டார்......... தலைவர் உப்பிடி கண்டபடி வார்த்தைஜாலம் காட்டுறவரும் இல்ல............. உப்பிடியான தலைப்புகள யாழில போடுறதால புலியளுக்கும் தலைவருக்கும் தான் கெட்ட பேர்................ மட்டுறுத்தனர் ஆக்கள் ஒருக்கா கவனியுங்கோ......................... :rolleyes:

ஐயோ ஆரம்பிச்சிட்டினம்.. இது ஒரு சின்ன பிரச்சனை அதை ஏன் பெருசு படுத்துறிங்கள் புனைகுட்டி.. பேசாமல் இருங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லாத விசயத்த சொன்னதெண்டு சொல்லுறது எப்பிடி சின்ன விசயம் அண்ணா=??????????????????? அப்ப நானும் சொல்லட்டோ?????? "மகிந்தவ நிர்வாணமாக்கி ஓடவிடுவன்" எண்டு தலைப்பை போட்டிட்டு பிரபாகரன் ஆங்கில ஊடகத்துக்கு மின்னஞ்சலி பேட்டி குடுத்தார் எண்டு எழுதவோ?????????????? ஏற்றுக்கொள்ளுறியளோ???????????????????????

செய்தியில இருக்கிற குளறுபடிய முதலில பாருங்கோவன்................

இதேவேளை,தற்போதைய சூழ்நிலையில் கிளிநொச்சியை விரைவாகக் கைப்பற்றுவதென்பது முடியாத காரியமென பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அதாவது கிளிநொச்சி விரைவில கைப்பற்றுறது முடியாதெண்டு சொன்னது கெகலிய ரம்புக்வல எண்டு கிடக்கு....

கெகலியவால் முடிந்தால் பிடித்துக்காட்டட்டும்

எண்டு தலைப்பில கிடக்கு..... அத அப்ப யார் சொன்னது???? கெகலிய சொன்னாரா????? தலைவர் சொன்னாரா????? அல்லாட்டி உந்த செய்திய எழுதினவர் சொன்னாரா??????

பயங்கரவாதம் சர்வதேச ரீதியாக வெறுக்கப்படும் ஒன்று இந்த நிலையில் இந்த யுத்தத்தில் உங்களால் வெற்றி பெற முடியுமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில்,

எம்மால் முன்னெடுக்கப்படுவது ஒரு போராட்டமே. தமிழ் மக்கள் வாழும் இலக்குகள் மீது விமானத் தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று அவர்களுக்குப் பாரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துவது பயங்கரவாதம் இல்லையென்றால் நாம் எமது மக்களுக்காகப் போராடுவது மட்டும் எவ்வாறு பயங்கரவாதமாக முடியும்?

மேஜர்ஜெனரல் ஜானக பெரேராவை நாம் படுகொலை செய்யவில்லை. இதற்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஜானக பெரேராவுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் முரண்பாடுகள் இருந்தன. இதனை சிங்கள மக்கள் அறிவர்.

இவ்வாறான மனிதப் படுகொலைகளைக் கண்டித்து சிங்கள மக்கள் விரைவில் வீதிக்கு இறங்குவர். அப்போது உண்மை புலனாகும. இவ்வாறு அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் பற்றி கேட்டிருக்கிற கெள்வியில ஜானக பெரேரா பற்றி எங்க கேட்டிருக்கு??????????????ßß ஆனா பதிலில தலைவர் ஜானக பெரேரா பற்றி சொன்னதெண்டு ஏதொ எழுதிக்கிடக்கு.........

அதோட ஆங்கில பத்திரிகையெண்டு கிடக்கு................. எந்த ஆங்கிலப் பத்திரிகையெண்டு சொன்னா நாங்களும் போய் வாசிச்சு விளங்குவமு் தானே?????? எங்கயன் இரந்து செய்தியள வெட்டிக் கொத்தி ஒண்டாக்கிட்டு தங்கட செய்தியெண்டு போடுறது....................... சொந்தமா செய்திய மொழிபெயர்க்கிறதும் இல்ல................ சொந்தமா செய்தியள சேகரிக்கிறதுமு் இல்ல............ ஆளாளுக்கு ஒரு வெப்சைட்:.................... அதுக்குள்ள வேற தளங்களில் வெட்டிக்கொத்தி செய்தியளையும் சினிமாவையும் போட்டு கலந்தடிச்சு ஊடகம் எண்டு காட்டுறது........................ என்ன கொடுமையளோ தெரியல............................. :rolleyes:^_^

ஈ-மயிலும் மட்டையும்........

உது.. எங்கட அஜீவனுன்ட புஸ்வெடி.....

எதையோ அடகுவச்சு கலியாணம் கட்டினமாரிதான்!

அஜீவன்... ஏன் உந்த திருகுதாளம்?

  • கருத்துக்கள உறவுகள்

கெஹலியவால் முடிந்தால் பிடித்துக் காட்டட்டும் . அட பாவிகளா இப்படி ஒரு தமிழாக்கமா?

We have not been weakened. Our strength is our people. Recent battles in Kilinochchi have demonstrated the answer to this question. Future battles will further demonstrate that we have not lost our strength.

எமது படையின் வீரியம் குறையவில்லை. அதற்கு கிளிநொச்சியின் தாக்குதல் சான்று பகரும். எமது மக்களே எமது பலம். மேலும் எமது எதிர்கால தாக்குதல்கள் எமது பலத்தை நிரூபிக்கும் என்கிறது.

ஆனாலும் தலைவர் இச்செவ்வியை கொடுத்தாரா என்பதில் பலத்த சந்தேகம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவர்இ "ஹேகலிய முடிந்தாற் பிடித்துப் பார்க்கட்டும்". என்றெல்லாம் சவால்க் கதைகள் கதைக்கக் கூடியவரல்ல. காலமறிந்துஇ இடமறிந்து சொல்லும் பொருளுணர்ந்து பேசுபவர். கேட்க வேண்டியவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்று அவiரச் சில்லறைத்தனமாக நினைப்பதும் தவறு. அவரைச் சந்திக்கு இழுப்பது தவிர்க்கப்படவேண்டும். செய்தி வேண்டுமென்றால் எத்தனையோ வினோதச் செய்திகள் உள்ளன. அவற்றைப் போடலாம்.

Edited by karu

கிளிநொச்சிக்குள் இலங்கை அரசாங்கப் படைகள் நுழைந்தால் பாரிய உயிரிழப்புகளையும் அழிவுகளையும் அவர்கள் முகங்கொடுக்க நேரிடுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எச்சரித்துள்ளார்.

ஆங்கில பத்திரிகைக்கு அவர் ஈமெயில் மூலம் வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

உங்கற்ரா... தலைவர் வேலை வெட்டி இல்லாமல் பேப்பர்காரங்களுக்கு ஈ மெயிலடிக்கிறாராம்.. :lol:

கேக்கிறவன் கேணையனா இருந்தா...........................................................

........................................ :D

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக ஒரு கொசு மெயிலாக தான் இருக்கும். :D ஒரு சிலர் தங்களை விளம்பரப்படுத்த என்னவும் செய்வார்கள் போலுள்ளது. :lol:

"லக்பிம" வார ஏட்டுக்கு தலைவர் பிரபாகரன் பிரத்தியேக பேட்டி எதுவும் வழங்கவில்லை: பா.நடேசன் மறுப்பு

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு நேற்று வெளியிட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது பேட்டி, உண்மையில் தன்னாலேயே வழங்கப்பட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் “புதினம்” செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஞாயிறு ஏடான "லக்பிம" தனது நேற்றைய (28.12.2008) வெளியீட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் தமக்கு வழங்கப்பட்ட பிரத்தியேக பேட்டி என ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக, விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனை "புதினம்" தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் அதனை மறுத்தார்.

"லக்பிம" வார ஏட்டுக்கான இந்தப் பேட்டி தன்னால் வழங்கப்பட்ட ஒன்று என்றும், அதனை அவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களின் பேட்டியாக வெளியிட்டு விட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று, சில மாதங்களுக்கு முன்னர் கூட தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "நக்கீரன்" இதழும், நடேசனால் வழங்கப்பட்ட பேட்டியை, தலைவர் பிரபாகரன் அவர்களின் பேட்டி என வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

Edited by Kuddi thampi

  • கருத்துக்கள உறவுகள்

கெஹலியவால் முடிந்தால் பிடித்துக் காட்டட்டும் . அட பாவிகளா இப்படி ஒரு தமிழாக்கமா?

We have not been weakened. Our strength is our people. Recent battles in Kilinochchi have demonstrated the answer to this question. Future battles will further demonstrate that we have not lost our strength.

எமது படையின் வீரியம் குறையவில்லை. அதற்கு கிளிநொச்சியின் தாக்குதல் சான்று பகரும். எமது மக்களே எமது பலம். மேலும் எமது எதிர்கால தாக்குதல்கள் எமது பலத்தை நிரூபிக்கும் என்கிறது.

ஆனாலும் தலைவர் இச்செவ்வியை கொடுத்தாரா என்பதில் பலத்த சந்தேகம் உள்ளது.

உறுதி செய்த பின் செய்தியை போடுவது எவ்வளவு நல்லது.

இலங்கையரசு முடிந்தவரை கிளிநொச்சி ஆக்கிரமிப்பை ஒரு மானப் பிரச்சனை ஆக்கி புலிகளை அவ்வலையில் வீழ்த்தி அவர்களின் வளங்களை முடிந்த வரை தனக்கு சாதகமான இடத்தில் வைத்து அழித்து விடவே முயற்சி செய்கிறது. இந்த நேரத்தில் இது போன்ற வாய் சவடால் ரக செய்திகள் அரசின் திட்டத்திற்கு துணை போவனவாகவே அமையும்.

தமக்கு சாதகமில்லா சமயத்தில் புலிகள் கிளிநொச்சியை விட்டு கொடுக்கவும் நேரலாம். ஆகவே ஊடகங்கள் பொறுப்புடன் செய்தி வெளியிடுவதே நல்லது.

Edited by Alternative

அதுதான் அவர் சொல்லிட்டாரே!

தலைப்பில போட்டது செய்தில வரவேண்டுமெறில்லையாம்..... பிறகேன் சண்டை

உண்மையா சொல்லப்போனா தலைப்பு வேறதாகவும் செய்தி வேறதாகவும் இருக்கலாம் (இதை மாற்ருக்கருத்தென்றும் சொல்லலாமாம்)

சில சமயங்களில தலைப்பே இல்லாமலும் செய்தி போடலாம் (புலனாய்வுச்செய்திகள் அப்படித்தானாம்)

தலைப்பை மாத்திரம் போட்டு செய்தியை வெட்டியும் விடலாம் (ஏனண்டா வாசிக்கிறவன் கேனையனாம்)

புதினம்

லக்பிமவுக்கும் நக்கீரனுக்கும் கொடுத்த செய்தியை

விடுதலைப்புலிகளின் தலைவர் கொடுக்கவில்லை.

பா.நடேசன் அவர்களே கொடுத்ததாக எழுதியுள்ளது.

அப்படியானால் இந்த கேள்வியும் பதிலும் எதைச் சொல்கிறது?

கேள்வி: உங்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் யார்? உங்கள் அடுத்த திட்டங்கள் என்ன?

பதில்: என்னைத் தங்களின் தேசியத் தலைவராகவும் எமது படையின் தலைவராகவும் எமது மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்போதைக்கு இதைமட்டும்தான் சொல்ல முடியும்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=9788

மேலே உள்ளது பா.நடேசன் அவர்களது கருத்தா?

"லக்பிம" வார ஏட்டுக்குத் தலைவர் பிரபாகரன் பிரத்தியேக பேட்டி எதுவும் வழங்கவில்லை: பா.நடேசன் மறுப்பு

கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது பேட்டி, உண்மையில் தன்னாலேயே வழங்கப்பட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் “புதினம்" செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=9825

நக்கிரனது பேட்டி வந்து பல காலமாகிறது.

இதுவரை அதை யாரும் கண்டு கொள்ளவில்லையா?

இது குறித்து புதினத்துக்கு மட்டுமல்ல

முக்கியமாக லக்பிமவுக்கும்

அவற்றை பிரசுரித்த அனைத்து ஊடகங்களுக்கும்

நடேசன் அவர்கள் மறுப்பு அறிக்கை ஒன்றை அனுப்பவேண்டும்.

புதினம் தமிழர் மட்டுமே பார்க்கும் இணையதளம்.

ஆகக் குறைந்தது

தமிழ்நெட்டிலாவது (ஆங்கிலத்தில்)

அவரது மறுப்பறிக்கையை தெரிவிக்கவேண்டும்.

லக்பிமவும்

நக்கீரனும்

ஏனைய ஊடகங்களும்

தனது செய்தி தவறென பகிரங்கப்படுத்த வேணும்.

எதிர்காலத்தில்

யாரும் பேட்டி கொடுக்காமலே

பேட்டி கொடுத்ததாக வரலாமல்லவா?

நன்றி.

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டி கொடுத்தவரின் பெயரையே மாற்றும் போது கேள்விகளையும் பதில்களையும் இடைச்செருகல் செய்வது பெரிய வேலையா? எல்லாப் பத்திரிகைகளையும் வாசித்து அவற்றுக்கு மறுப்பறுக்கை விட்டுக்கொண்டிருப்பது தான் புலிகளின் வேலையா?பிழையான தலைப்பில் பிழையான செய்தியை பிழையான விதத்தில் போட்டதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பது தான் ஊடக தர்மம் அதை விடுத்து விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்ற விதத்தில் எழுதுவது நாகரிகமானது அல்ல.

மேலே உள்ளது பா.நடேசன் அவர்களது கருத்தா?

லக்பீம நிருபரின் கருத்து. அது சரி யார் உந்த நிருபர்? எங்கட அஜீவனின்ட பிறண்டோ... :lol:

லக்பீம நிருபரின் கருத்து. அது சரி யார் உந்த நிருபர்? எங்கட அஜீவனின்ட பிறண்டோ... :lol:

:D:huh::D

பேட்டி கொடுத்தவரின் பெயரையே மாற்றும் போது கேள்விகளையும் பதில்களையும் இடைச்செருகல் செய்வது பெரிய வேலையா? எல்லாப் பத்திரிகைகளையும் வாசித்து அவற்றுக்கு மறுப்பறுக்கை விட்டுக்கொண்டிருப்பது தான் புலிகளின் வேலையா?பிழையான தலைப்பில் பிழையான செய்தியை பிழையான விதத்தில் போட்டதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பது தான் ஊடக தர்மம் அதை விடுத்து விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்ற விதத்தில் எழுதுவது நாகரிகமானது அல்ல.

நீங்கள் எதைச் செய்கிறீர்கள்?

தயவு செய்து உணர்ச்சி வசப்பட வேண்டாம்.....

தவறுகளை சுட்டிக் காட்டும் முறை ஒன்று இருக்கிறது.

அதற்காக தான் மட்டுமே தமிழீழ ஆதரவாளர் என்றும்

அடுத்தவர்கள் ஏதோ எதிரிகள் என்றும்

காட்டிக் கொள்வது

தமிழர்களை இணைப்பதை விட பிரிப்பதற்கே வழி வகுக்கும்.

எமது தளத்தில் வந்த செய்தி தவறேன்றால்

அதை சுட்டிக் காட்டுவதற்கு நன்றி.

செய்திகளை ஒருவர் தனியாக இணைப்பதில்லை.

பலர் இணைக்கிறார்கள்.

பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள்.

அவற்றை பேச இங்கு தயாரில்லை.

ஒரு சிலர்

தம்மைத் தவிர வேறு எவருமேயில்லை என்று நினைப்பதால்

பல இழப்புகளை சந்தித்துள்ளோம்.

என்னைப் பொறுத்தவரை பல ஊடககங்கள் இன்னும் வர வேண்டும்.

ஒரு ஊடகம் தடைப்பட நேர்ந்தால்

ஏனைய ஊடகங்கள் அவற்றை தொடர வழியமையும்.

இதில் விளம்பரம் செய்துகொள்ள எதுவுமில்லை.

அதைச் செய்துகொள்ள எத்தனையோ வழிகள் உண்டு.

அவை தேவையென்றால் வந்த வாய்ப்புகள் அனைத்தையும் பெறலாம்.

அது தொடராது.

ஒருநாள் குட்டு வெளிப்படும்.

அது நானாக இருந்தாலும்.

அதில் மாற்றமில்லை.

யாழ் களத்தில்

நான் செய்திகளை எப்போதோ

இணைப்பதை நிறுத்திக் கொண்டேன்.

ஒரு நண்பர் இணைத்திருந்தார்.

நான் மட்டும் வாழ வேணும் எனும் நிலை மாறி

நாங்கள் வாழ வேணும் எனும் நிலை

என்று உருவாகுமோ

அன்றுதான் எமக்கு விடிவு.

எனவே உங்கள் எண்ணங்கள் தொடரட்டும். நன்றி

காலம் பதில் சொல்லும்

Edited by AJeevan

அதென்ன நீங்கள் மட்டும் அடிகடி தவறு விட்டுக்கொண்டிருக்கிறீங்கள

அதென்ன நீங்கள் மட்டும் அடிகடி தவறு விட்டுக்கொண்டிருக்கிறீங்கள

Edited by AJeevan

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.