Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணங்களைப் புணர்ந்த சிறிலங்கா இனவெறி இராணுவத்தின் போர்க் குற்றம்

Featured Replies

போரியல் விதிமுறைகளை கடைபிடிக்கதெரியாத இந்த பாசிச சிங்கள அரசின் தலைவன் எவ்வழியோ அவ்வழியே........... படைகளும்

இதற்கு ஒரே வழி "தனி தமிழீழம்" மட்டுமே

தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனும் அதற்காக பாடுபட்டு தமிழீழத்தை மீட்டு எடுக்க எங்கள் தலைவன் பிரபாகரனின் தமிழர் படையை வலுப்படுத்துவோம்

களத்தில் வீரகாவியமான வேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்

"கொண்ட லக்ஷியம் குன்றிட எங்கள் கொள்கைவீரரின் காலடி மணிலே நின்று போர்கொடி துக்குவோம் நிச்சையம் தாயகம் காணுவோம்"

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

  • Replies 78
  • Views 14k
  • Created
  • Last Reply

இதுகளுக்கெல்லாம் இஞ்சையிருக்கிற கொஞ்ச புத்திமான்கள் ஒரு கருத்தும் சொல்லமாட்டினம்.

ஏதும் சாதிகீதி இல்லாட்டி கோவில் பிரச்சனை தேங்காய் உடைக்கிற பிரச்சனையெண்டால் தங்கடை வீரதீர சிந்தனையளையும் அனுபவங்களையும் ஆதாரங்களோடையும் படங்களோடையும் பந்திபந்தியாய் எழுதிக்கொட்டுவினம் :mellow:

பாக்கவே வயிறு பத்தி எரியுதப்பா :mellow::lol::)

குமார'சாமி'யர்,

யாழ்க் களத்தில் நீங்கள் திட்டறதை வாசிச்சுப்போட்டு மகிந்தர் தூக்குப்போட்டுச் சாகப் போறரோ இல்லை சரத் பொன்சேகா அமெரிக்காவுக்கு ஓடப் போறாரோ இல்லை சிங்கள இரானுவம் ஆயுதத்தைப் போட்டிட்டு ஓடப்போகுதோ?

யாழ்க் களத்தைப் படிக்கிறவை தங்கட புத்தியத் தீட்டட்டும் எண்டு தான் எழுத முடியுமே தவிர, யாழ்க் களத்தைப் படிக்காதவனை ஏசி ஏசி எழுதிறதால ஒரு பிரியோசனமும் இல்லை.

உங்கட வீரதீர வாசனங்களால் எதாவது பிரியோசனம் இருக்கா எண்டு சிந்தியுங்கள்.போராளிகளைப் பாதுகாகக் நீங்கள் என்ன செய்யலாம் எண்டு சிந்தியுங்கள்.அதுகளைச் செய்யாம சும்மா சிந்திக்கச் சொல்லி எழுதிறவைன்ர வாயை மூடுவதற்காக இப்படியான தலைப்புக்களைப் பயன் படுத்திறது, சிங்கள இராணுவம் செய்யிற இழிவை விடக் கேவலாமானது.

யாழ்க் களத்தில சாதி,கோவில் எண்டெல்லாம் எழுத உங்களுக்கு ஏன் வயிறு பற்றி எரியவேணும்?

மகிந்தவோ, சரத்பொன்சேகாவோ நாட்டைவிட்டு ஓடுவதல்ல இங்கு முக்கியம். போர்க்குற்றங்களாகக் கணிக்கப்படக் கூடிய விடயங்களில் இதுவொன்று. இறந்த இராணு உடல்கள் மீது காட்டப்படும் குரூரம் இத்தகையதாய் இருப்பின், உயிருடன் இருப்பவர்கள் மீது எத்தகைய குரூரங்கள் பிரயோகிக்கப்படும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இதுபோன்ற இராணுவக் கொடூரங்கள் உலகிற்கு வெளிப்படுத்தப்பட வேண்டியன. யாழ் களத்தின் நடுநிலையாளர்கள் எவரையும் இங்கு காணவில்லை என்பதுதான், இங்கு கருத்தெழுதுபவர்களின் தேடல். எங்கெல்லாமோ செய்திகளைத் தேடியிணைத்து, தமது நடுநிலையை உறுதிப்படுத்த முனைபவர்கள், இதைப்பார்த்த பின்னும் தமது நடுநிலையை இங்கு வெளிப்படுத்தாது இருப்பது அவர்களை சந்தேகத்திற்குரியவர்களாகவே ஆக்கிவிட்டது. இனிமேல் அவர்களின் நற்போதனைகளும் சந்தேகத்திற்குரியவையே.

போராளிகளை எவ்வாறு பாதுகாக்கப்போகின்றீர்கள். தமிழர் பாதுகாப்பே அந்தப் போராளிகளிடந்தான். அவர்கள் உடலங்கள் அவமானப்படுத்தப்பட்டதன் விளைவுதான் இங்கு கருத்துக்களாகின்றன. என்னைப் பொறுத்தளவில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் மட்டுமல்ல, நேரடியாக உதவுகின்றவர்களாகக் கூட இருக்கின்றார்கள்.

அதனாலேயே புத்திஜீவிகளான நடுநிலையாளர்களை இங்கு தேடுகிறார்கள். அவர்கள் வந்து இதனை எவ்வாறு உலகின் கவனத்திற்குக் கொண்டு செல்லலாம் என்ற வழியைச் சொல்லமாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பாக இருக்கக்கூடாதா?

மகிந்தவோ, சரத்பொன்சேகாவோ நாட்டைவிட்டு ஓடுவதல்ல இங்கு முக்கியம். போர்க்குற்றங்களாகக் கணிக்கப்படக் கூடிய விடயங்களில் இதுவொன்று. இறந்த இராணு உடல்கள் மீது காட்டப்படும் குரூரம் இத்தகையதாய் இருப்பின், உயிருடன் இருப்பவர்கள் மீது எத்தகைய குரூரங்கள் பிரயோகிக்கப்படும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இங்கே எழுதப்பட்ட கருதுக்கள் பெரும்பாலானவை சிறிலங்கா இராணுவத்தை ஏசியே எழுதப்படுள்ளன.சிறிலங்கா இராணுவம் எதகையகுரூரமனது என்பதை நாங்கல் எலோரும் அறிவோம்.வெருமனே யாழ்க்களத்தில் ஏசி எழுதுவதால் என்ன பயன் அடைந்து விட்டீர்கள்.

இதுபோன்ற இராணுவக் கொடூரங்கள் உலகிற்கு வெளிப்படுத்தப்பட வேண்டியன. யாழ் களத்தின் நடுநிலையாளர்கள் எவரையும் இங்கு காணவில்லை என்பதுதான், இங்கு கருத்தெழுதுபவர்களின் தேடல். எங்கெல்லாமோ செய்திகளைத் தேடியிணைத்து, தமது நடுநிலையை உறுதிப்படுத்த முனைபவர்கள், இதைப்பார்த்த பின்னும் தமது நடுநிலையை இங்கு வெளிப்படுத்தாது இருப்பது அவர்களை சந்தேகத்திற்குரியவர்களாகவே ஆக்கிவிட்டது. இனிமேல் அவர்களின் நற்போதனைகளும் சந்தேகத்திற்குரியவையே.

குமாரசாமியர் தெளிவாக கோவில்,சாதிகள் பற்றி எழுதுபவர்கள் பற்றியே குறிப்பிட்டார்.அதற்காகவே எனது பதில்.இங்கே நடு நிலமை என்றால் என்ன? யார் நடு நிலமையாளர்கள்? உண்மைக்கும்,பொய்கும்,மனிதாபி

மானத்துக்கும், அடக்குமுறைக்கும் இடையில் ஒரு நடு நிலமையும் இல்லை.ஆகவே உங்கள் நடு நிலமை என்னும் பதம் பிழையானது.உலகுக்கு இந்தக் கொடூரத்தைக் கொண்டு செல்ல யாழ்க் களத்தில் வசை பாடி எழுதி விட்டால் காணுமோ?

போராளிகளை எவ்வாறு பாதுகாக்கப்போகின்றீர்கள். தமிழர் பாதுகாப்பே அந்தப் போராளிகளிடந்தான். அவர்கள் உடலங்கள் அவமானப்படுத்தப்பட்டதன் விளைவுதான் இங்கு கருத்துக்களாகின்றன. என்னைப் பொறுத்தளவில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் மட்டுமல்ல, நேரடியாக உதவுகின்றவர்களாகக் கூட இருக்கின்றார்கள்.

போராளிகளுக்குத் தேவையான பொருளதரா உதவிகளை நாங்கள் மிகப்பெரிய அளவில் செய்வதன் மூலம் அவர்களைப் பலப்படுத்த முடியும்.அதன் மூலம் அவர்களின் உயிரிளப்புக்களைக் குறைக்க முடியும்.எமது பொருளாதார/தொழில் நுப்பப் பலத்த்திலையே அவர்கள் போராடுகிறார்கள்.இறக்கும் ஒவ்வொரு போராளியின் உயிருக்கும் நாமே பொறுப்பாக இருக்கிறோம்.எமது பலவீனமும் உதாசீனமுமே அவர்களை இறக்க வைக்கிறது.புலம் பெயர்ந்தவர்கள் செய்யு அனாவசியச் செலவுகளைக் குறைத்து மேலும் நாம் உதவிகளைச் செய்ய முடியும்.அதன் மூலம் பெருமதியான உயிர்களைக் காப்பற்ற முடியும்.

அதனாலேயே புத்திஜீவிகளான நடுநிலையாளர்களை இங்கு தேடுகிறார்கள். அவர்கள் வந்து இதனை எவ்வாறு உலகின் கவனத்திற்குக் கொண்டு செல்லலாம் என்ற வழியைச் சொல்லமாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பாக இருக்கக்கூடாதா?

புதிஜீவிகள் நடு நிலையாளர்கள் என்று யார் சொன்னது? நீலன் திருச் செல்வம் கதிர்காமர் எல்லோரும் நடுனிலையாளர்களா? எல்லோரும் பக்கச் சார்பானவர்களே.தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டதிற்க்குச் சார்பானவர்கள் எதிரானவர்கள் என இரு வகையினர் தான் இருக்கிறார்கள்.

மற்றவன் சொல்வான் செய்வான் போரடுவான் என்று எவ்வளவு காலத்துக்கு இங்க பொழுது போக்குவியள்?

நாங்கள் பலம் பெறும் போது தான் உலகம் எங்களைக் கவனிக்கும்.இல்லாட்டி இண்டைக்கு காசவில அடிக்கிற அடி தான் எங்களுக்கும்.உலகம் மவுனமாகத்தான் இருக்கும். நாங்கள் எங்கட போராளியளைப் பலமாக்காம மகிந்தவையோ சிங்கள் இராணுவதையோ யாழ்க்களத்தில் வசை பாடிக் கொண்டிருகிறதில ஒரு பிரியோசனமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
:mellow: நாரதர் அண்ணே, சிங்களவன் யாழைப் பார்த்துப் பயப்பட மாட்டான் என்பது உண்மை. ஆனால் எத்தனை "நடு நிலை" வாதிகள், மாற்றுக் கருத்தாளர்கள் என்று விதம் விதமாகப் போர்வை போர்த்திக் கொண்டு சிங்கள ரத்னா விருதுக்காக அலைகிற யாழ் கள உறுப்பினர்கள் இருக்கினம் தெரியுமா? அதுகளுக்காவது சுரணை வரப் பண்ண வேண்டியது யாழ் உறுப்பினர்களின் வேலையல்லவா?
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் பற்றி வழக்கு பதிவு செய்வதற்கு Tamils for Justice என்ற அமைப்பு முயன்று வருகின்றது. இவ் அமைப்பு அதற்கு தேவையான ஆதாரங்களை சேகரித்து வருகின்றது. இந்த வீடியோ பதிவை Tamils for Justice அமைப்பிற்கு அனுப்பி வைத்தால் இதனையும் அவர்கள் ஆதாரமாக பயன்படுத்தக்கூடும். இந்த அமைப்பின் இணைத்தள முகவரி:

http://s227001311.onlinehome.us/

http://www.tamilsforjustice.org/

நீதிமன்றத்தில் ஆதாரமாக பயன்படுத்தப்பட வேண்டிய காரணத்தால், வீடியோ பதிவில் மாற்றம் எதுவும் செய்யாத பிரதியே அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Edited by Jude

இதைப் பற்றி முன்பு வேலவன் இங்கு எழுதிய பொழுது, இந்த வீடியோவை நான் அவரிடம் இருந்து பெற்றிருந்தேன்.

ஆனால் வீடியோவை தணிக்கை செய்வதற்கு பல வழிகளில் முயன்றும் தொழில்நுட்பம் எனக்குக் கைகொடுக்கவில்லை.

அதை விட எனக்கு இதைப் பற்றி பரப்புரை செய்வதில் இன்னும் ஒரு பிரச்சனையும் இருந்தது.

தமது போராளிகளின் உடல்கள் சிறிலங்காப் படைகளிடம் சிக்குவது பற்றி விடுதலைப் புலிகள் எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவது இல்லை.

இந்த நிலையில் பெண் போராளிகளின் உடல்கள் சம்பந்தப்பட்ட இந்த வீடியோவை வைத்து பரப்புரை செய்வதில் சில சங்கடங்கள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இந்த செய்தியை தமிழ்நாடுராக் கொம்மில் இந்திய தமிழ்மக்களும், பிராமணிய மதவாத குழுக்களின் அருவருடிகளும் பார்க்கும் படி தணிக்கை செய்யப்பட்ட வீடியோ லிங்குடன் பதித்துள்ளேன். இதனால் ஏதேனும் பிரச்சனை உண்டா சபேசன்? :mellow:

நான் இந்த செய்தியை தமிழ்நாடுராக் கொம்மில் இந்திய தமிழ்மக்களும், பிராமணிய மதவாத குழுக்களின் அருவருடிகளும் பார்க்கும் படி தணிக்கை செய்யப்பட்ட வீடியோ லிங்குடன் பதித்துள்ளேன். இதனால் ஏதேனும் பிரச்சனை உண்டா சபேசன்? :mellow:

இதிலேதும் பிரச்சினைகள் இருக்காது. சபேசன் குறிப்பிட்டது சங்கடங்களைப் பற்றியது. என்னைப் பொறுத்தளவில் இது ஏற்கனவே பலராலும் பார்க்கப்பட்ட ஒன்றாகத்தானிருக்கும். ஒரு சடலத்திற்குக் கொடுக்கக் கூடிய மரியாதை, எதையும் சிந்திக்காது தங்களது கருத்தை நியாயப்படுத்துவதற்காகக் கருத்துக்களை எழுதுவதற்கு முனைந்து நிற்பவர்கள்தான் புத்திஜீவிகளாகவுள்ளனர்.

முடிந்தளவு எம்மால் ஆகக்கூடியது பரப்புரையும் பொருளாதார உதவிகளுமே. இதனை எவ்வளவு தூரம் வெளிப்படுத்த முடியுமோ, அதைச் செய்தல் நல்லது. சங்கடங்கள் உண்டு. ஆனால் இதுவொரு ஆதாரம்.

உலகத் தமிழர்களே இனியும் பொறுப்போமா! தமிழகமே!

இரத்தமும், சதையும் சக மனிதன் போல் கொண்டாலும், தமிழால், உணர்வால் தன் உயிரை எம் விடிவிற்கு ஆகுதியாக்கிய தெய்வங்களை பிணம் தின்னும் சிங்களம் குதறுவதை பாருங்கள்.

தமிழன் ஆக நீ இருந்தால் உன் இரத்தம் சொல்லும்! நீ என்ன செய்ய வேணும் என!!

இதன் பின்னும் சிங்களத்தின் முதுகு சொறிந்தால், உன் பிறப்பே பிழை!

எம் வேறுபாடுகளை மறந்து தேசியத்தின் பலம் சேர்ப்போம், சிங்களத்தால் தெய்வங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை தேச விடுதலை மூலம் துடைப்போம்.

தங்கைளையெல்லாம் போருக்கு அனுப்பிவிட்டு புலத்தில் நாங்கள் கேவலமான வாழ்க்கை வாழ்கிறோமே. வெட்கித்தலைகுனியவேண்டியுள்

தங்கைளையெல்லாம் போருக்கு அனுப்பிவிட்டு புலத்தில் நாங்கள் கேவலமான வாழ்க்கை வாழ்கிறோமே. வெட்கித்தலைகுனியவேண்டியுள்
  • கருத்துக்கள உறவுகள்
தங்கைளையெல்லாம் போருக்கு அனுப்பிவிட்டு புலத்தில் நாங்கள் கேவலமான வாழ்க்கை வாழ்கிறோமே. வெட்கித்தலைகுனியவேண்டியுள்

நாகரிகமான உலகில் நாகரிகமில்லாத காட்டுமிராண்டி இனம் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறான் எமது எதிரி...

வெளியில் தெரிந்தது இதனை மாதிரி சில... தெரியாதவை எவ்வளவோ...

இறந்த சிங்களப்படைக்குரிய மரியாதையை இவ்வளவு சிரமங்களிற்கு மத்தியிலும் போராளிகள் உரிய மரியாதை செலுத்தி நாகரிமாக போர்விதிகளை பேணுகிறார்கள்..

இனவெறியில் அலையும் 1956ஆம் ஆண்டிலிருந்து தமிழினத்தை குதறி வரும் மிருகங்களை கேட்பார் யாரும் இல்லை என்பதில்லை என்ற் நிலையிருந்தது.. தந்தை செல்வா ஒரு முறை கூறினார் இனி தமிழரை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று...

அகிம்சை வழியில் முடியது என்பதை ஆயுதப்போரட்டம் என்ற ஒரு மொழியே சிங்களத்திற்கு

புரியும் மொழி என்பதை தலைவர் நிருபித்து வருகிறார்.. இதுவொன்றெ தமிழரை எம்மினத்தை நிரந்தரமாக காப்பாற்றும்.. இதுவரை நிருபித்துள்ளார்... எனவே இந்தப்போராட்டம் இனியும் நீடிக்காமல், எம்மக்களையும் காப்பாற்றி எமது போரட்டத்தை வெற்றியடைய வைப்பது புலம் பெயர்ந்த தமிழ்மக்களின் ஒற்றுமையான எல்லத்தேவைகளையும் நிறைவேற்றுவதன் மூலம் வெற்றி ஈட்டி எமது மண்ணை முழுதாக மீட்டு எதிறியின் இப்படியான குதறல்களில் இருந்து, தமிழ்மக்களின் அவலசத்தங்களுக்கு நிரந்தர தீர்வு எடுப்போம் என சபதம் செய்து செயல்படுவோம். இதுவே படிப்பினை...

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த பெண் போராளிகளை இழிவு படுத்தியுள்ள இலங்கை இராணுவம் - மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த பெண் உறுப்பினர் போல தோன்றும் ஒரு பெண், போர் முனையில் கொல்லப்பட்டபின், அவரது உடலை பாதுகாப்பு படையினர் அவமானப்படுத்துவது போன்ற ஒரு வீடியோ இணைய தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அந்த அதிர்ச்சி தரும் ஒளிப்படமானது கடந்த 4 நாட்களாக இணையத்தில் உலாவருகின்ற போதும் அதனை பிரசுரிக்க முடியாத அளவு கேவலமாக இருப்பதால் அதனை பிரசுரிக்கமுடியவில்லை.

இந்த ஈனச்செயலில் ஈடுபட்ட இராணுவத்தினர் தங்கள் முகத்தை ஒளிப்படங்களில் எவ்வித அச்சமும் இன்றி காட்டுவதன் மூலம் இவர்கள் பின்னனியில் யார் இருக்கின்றார்கள் என்பது நிரூபனமாகிறது.

பெண்களைத் தாயாக,,தங்கையாக,தெய்வமாக கருதும் தமிழ் பண்பாட்டில் வளர்ந்த எவரும் இத்தகைய ஈனச்செயலை மன்னிக்கமாட்டார்கள்.

புலம் பெயர் வாழ்மக்களே ????...

மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

இலங்கையில் நடந்த சில மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா.மன்றம் விசாரணைகளை நடத்தவேண்டும் என ஹாங்காங்கிலிருந்து இயங்கும் ஒரு மனித உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கபடுபவர்களுக்காக வழக்குகளில் வாதாட முன்வந்துள்ள வழக்குரைஞர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்சொன்ன புகார்கள் குறித்து ஐ.நா மன்றம் விசாரிக்கவேண்டும் என்று ஹாங்காங்கிலிருந்து இயங்கும் ஆசிய மனித உரிமை இயக்கம் ஐ.நா மன்ற தலைமைச்செயலரிடம் கோரியுள்ளன.

http://www.tamilwin.com/

இலங்கை மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து சிறிலங்கா இராணுவத்தின் பயங்காவாதம் பற்றிய அந்த வீடியோ கிளிப்பை எனக்கு தனிமடலில் இணைக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து சிறிலங்கா இராணுவத்தின் பயங்காவாதம் பற்றிய அந்த வீடியோ கிளிப்பை எனக்கு தனிமடலில் இணைக்க முடியுமா?

புலவர் நீங்கள் தனி மடல் ஒன்டு பரணி அண்ணாக்கு அனுப்புங்கள் அவர் அந்த விடியோ கிளிப்பை உங்களுக்கு அனுப்புவார் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு அனுப்ப முயற்சித்தேன்.mdhy; Kbatpy;iy.,d;W vy;yhk; Fog;gkhf .Uf;fpwJ.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

பரணி முடிந்தால் என்னுடன் தனிமடலில் தொடர்பு கொள்ள முடியுமா? என்னால் தொடர்பு கொள்ள முடியாதிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி! களஉறவு ஒருவர் அனுப்பியிருந்தார். நெஞ்சம் பதறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி! களஉறவு ஒருவர் அனுப்பியிருந்தார். நெஞ்சம் பதறுகிறது.

அதுக்கு தான் சொனாங்கள் அந்த கொடுமைய ஏன் பாப்பான் என்று <_<:(

http://nettamil.tv/play/News/sri_lanka_army_terrorism

படத்தில் எல்லாம் கறுப்பு வெள்ளையாக இருக்கின்றது. எதை வைத்து இது புலிவீராங்கனை என்று சொல்கின்றீர்கள்? இதனை நாம் எப்படி புலம் பெயர் பத்திரிகைகளுக்கு அனுப்ப முடியும்? தெளிவான தகவலோ அல்லது ஆதாரமோ நீங்கள் இணைத்துள்ள இணைப்பில் இல்லையே. இதனை நான் ஜேர்மனில் இருந்து வெளிவரும் Bild எனும் பத்திரிகைக்கு அனுப்பி இருந்தேன். அவர்கள் இதனை ஏற்க மறுக்கின்றனர். காரணம் செய்தி வீடியோ தெளிவின்மையாக இருக்கின்றதாம். இதன் மூல வீடியோ யாரிடமாவது இருப்பின் எனக்கு தனிமடலில் அனுப்ப முடியுமா?

Edited by vidivelli

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் எல்லாம் கறுப்பு வெள்ளையாக இருக்கின்றது. எதை வைத்து இது புலிவீராங்கனை என்று சொல்கின்றீர்கள்? இதனை நாம் எப்படி புலம் பெயர் பத்திரிகைகளுக்கு அனுப்ப முடியும்? தெளிவான தகவலோ அல்லது ஆதாரமோ நீங்கள் இணைத்துள்ள இணைப்பில் இல்லையே. இதனை நான் ஜேர்மனில் இருந்து வெளிவரும் Bild எனும் பத்திரிகைக்கு அனுப்பி இருந்தேன். அவர்கள் இதனை ஏற்க மறுக்கின்றனர். காரணம் செய்தி வீடியோ தெளிவின்மையாக இருக்கின்றதாம். இதன் மூல வீடியோ யாரிடமாவது இருப்பின் எனக்கு தனிமடலில் அனுப்ப முடியுமா?

குவேனிக்கும் சிங்கத்துக்கும் பிறந்தவர்கள் தாம் என்பதை நிரூபிக்கச் சிங்களம் தொடர்ந்து முயல்கிறது. 58 இல் தொடங்கி தொடர்கதையாக சிருசாந்தி , கோணேஸ்வரி.......என்று இன்று களத்திலே வித்தான வீர வித்துக்கள் மீதும்.... இதை அம்பலப்படுததுவதூடாக முற்றுப் புள்ளி வைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது எமது கடமையாகும்.

புலம்பெயர் பெண்கள் அமைப்புக்கள் காத்திரமான முறையில் தாம் இவாழும் நாடுகளில் தமது பெண்கள் விவகார அமைச்சு போன்றனவுக்கும் இத் தகவலை கிடைக்க வழி செயஇய வேண்டும்.

இவ்வண்ணம்

நொச்சியான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.