Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி வாரவெளியீடு - பலமுறை கொடுக்கப்பட்ட காலக்கெடுக்களின் மத்தியில் தாக்குப் பிடித்த கிளிநொச்சியும், பரந்தனும் படையினரிடம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.

கிளிநொச்சியின் வீழ்ச்சி குறித்து தென்னிலங்கையில் பெரும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான சண்டையை "சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர்' என்று சிலரால் விமர்சிக்கப்படுகிறது.

ஆனால் இது தவறான கருதுகோளாகவே தெரிகிறது. கிளிநொச்சியின் இழப்பு புலிகளுக்கு பின்னடைவே தவிர அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று எனக் கருத முடியாது.

கிளிநொச்சியின் வீழ்ச்சியை புலிகளின் மீளமுடியாத தோல்வியாகச் சித்தரிக்க பலரும் முற்படுகின்றனர். ஆனால் அது எந்தளவுக்குச் சரியானதென்பதை இப்போது தீர்மானிக்க முடியாது.

ஏனென்றால் இப்போதுள்ள படை வளங்களைக் கொண்டு புலிகள் தொடர்ந்தும் மரபு வழிச் சண்டைகளைச் செய்யப் போகின்றனர். கிளிநொச்சி, பூநரிக்குப் பின்னரும் மரபுவழிச் சண்டைகள் நீடிக்கப் போகிறது என்றும், கிளிநொச்சியின் வீழ்ச்சி பற்றி சூசகமாகவும் , 20081109 வாரவெளியீட்டில் இதே பத்தி யில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது எதிர்பார்க்கப்படாத ஒரு நிகழ்வு அல்ல. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதொன்றுதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரவாயில்லை பிடிக்கட்டும் கடைசியாக தமிழனின் வீரம் செறிந்த மண்ணை சிங்களவன் எல்லாரும் சுத்தி பார்க்கட்டுமே.இந்த போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து ரெண்டுபேரும் மாறி மாறி இடங்களை பிடித்துக்கொண்டுதான் இருக்கிறம் ஆனால் எமக்கு ஈழமும் கிடைக்கவில்லை ஆனால் இது இறுதியானது இனிமல் நடக்கப்போகும் எல்லை விரிவாக்கம் தமிழீழத்தின் உதயத்தில் தான் முடியும் புலிகளும் சகல யுக்திகளையும் தற்போது நன்குணர்ந்துள்ளார்கள் சிங்களவன் எமது நிலங்களைத்தான் பிடிக்கிறான் ஆனால் புலி உலக மக்களின் மனதை பறித்துவிட்டது வெற்றி என்று பார்க்கும் போது புலிக்கு கிடைத்ததே அழிவில்லாத வெற்றி இதுவே ஈழத்தின் வெற்றி.. இவ்வளவுகாலமும் நாம் ராணுவ வெற்றிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துவிட்டோம் ஆனால் ராணுவ வெற்றி மட்டும் எமக்கு ஈழத்தை பெற்றுத்தராது அரசியலிலும் நாம் வெற்றிபெறவேண்டும் அரசியல் வெற்றி பெறுவதற்கு நாம் பலதை இழக்கவேண்டும் மிகவும் பொறுமை வேண்டும் எதையும் தாங்கிக்கொள்ளும் சக்தி வேண்டும் இது எல்லாம் புலிகளிடமும் வன்னி வாழ் எம் உறவுகளிடமும் மிக அதிகளவில் உள்ளது, இதுவே ஈழத்தை பெற்றுக்கொள்வதற்கு ஓர் அடித்தளமாக அமையப்போகிறது. . நித்தம் நித்தம் ரத்தம் சிந்தினாலும் குலையாத எண்ணமுள்ள மக்களும் களங்கள் வீழ்ந்தாலும் களமாடிக்கொண்டிருக்கும் புலியும் இருக்கும் வரை எதற்குமே அஞ்சத்தேவையில்லை. இதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது.எமக்கெல்லாம் மிகப்பெரும் கடமை ஓன்று உள்ளது எம்மை பெற்ற தாய்க்கு செய்யும் கடமையைப்போல நாம் கவனமெடுத்து செய்யவேண்டும்.புலம்பெயர் மக்கள் அனைவரும் இன்றைய நிலையினை புரிந்துகொண்டு புரியாதவர்களுக்கு மென்மையாக புரியவைத்துக்கொண்டு தமக்குரிய கடமையினை முன்னெடுப்பார்கள் என்று வன்னியிலுள்ள எம் உறவுகளும் புலிகளும் நம்புகிறார்கள். அதை செய்துகாட்ட உறுதிபூணுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவுக்குள் அல்ல தமிழீழம் இருக்கிறது. தமிழீழம்.. ஆனையிறவையும் கொண்டிருக்கிறது. நாம் விடுவிக்க வேண்டியது எமது தமிழீழம் முழுவதையுமே. அது பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை பரந்திருக்கிறது. அங்குள்ள ஒவ்வொரு அங்குலமும் கிளிநொச்சி..ஆனையிறவுகள் தான்.

கொழும்பிலும் கண்டியிலும் வாழும் சிங்களவன்.. கிளிநொச்சி பிடிக்கிறதுக்கு வெடிகொழுத்திறதின்ர தார்ப்பரியம் தான் எனக்கு விளங்கேல்ல. தமிழன் தன்ர நிலத்தை மீட்கேக்க வெடி கொழுத்திறதில ஒரு நியாயம் இருக்குது. இப்ப புலிகள் கொழும்பை பிடிச்சு வைச்சிருந்து அதை சிங்களப் படை மீட்கேக்க வெடி கொழுத்தினா அதில உடன்படலாம்.

ஆனால் சிங்களவனுக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத கிளிநொச்சியைப் பிடிக்க வெடிகொழுத்திற அளவுக்கு அவைக்கு அங்கென்ன பாரம்பரியம் இருக்கோ எனக்கு விளங்கல்ல. இது உண்மையில் தமிழ் மக்கள் ஒவ்வொருவரையும் சீண்டி விட்டிருக்கும் நிகழ்வாகவே கருதுகிறேன்.

அதுமட்டுமன்றி மகிந்த சொல்லி இருக்கிறான்.. தமது பாரம்பரியத்தின் வழி கிடைத்த வெற்றி என்று. அதாவது சிங்கள மன்னர்கள் தமிழர்களை வென்றதன் தொடர்ச்சியாக தானும் தனது தம்பிகளும் தமிழர்களை தமிழர்களில் நிலத்தில் வென்றுவிட்டுள்ளதாக அவன் கொக்கரிக்கிறான்.

I am now ready to reveal to you the proud news of the most honourable victory in the annals of military heroism that runs through many centuries of our history”.

ஆனால் நாங்க.. ஆனையிறவு போறதைப் பற்றி மட்டும் கவலைப்படுறம். எங்கட பணி என்பது.. மொத்த தமிழீழத்தையும் மீட்கிறதுதான். அதற்கான ஏற்பாடுகளைத்தான் செய்யனும். அதைப் புலிகள் செய்ய முடியல்லைன்னா.. நாங்க ஒவ்வொரு தமிழரும் செய்யனும். புலிகள் தான் தமிழீழம் கேட்கினம் என்றதில்ல நிலை. புலிகளுக்குப் பதிலா நாங்கள் களமிறங்குவம் போராடுவம்.. எமக்குத் தெரிந்த உக்திகளைப் பயன்படுத்தி.. அதற்கு எல்லோரும் ஒன்றிணையுங்கோ.

அதுக்கு வரமாட்டம் என்று சொல்லக் கூடாது. எல்லாம் புலிகள் செய்து கொடுத்தா நோகாமல்.. அனுபவிக்கலாம் என்றிருக்கக் கூடாது.

சிங்கள கிழவி ஒன்றுக்கு இருக்கிற மானரோசம்.. தன்ர நிலத்தைப் பறிகொடுத்த தமிழனுக்கு இல்லை. ஐயாக்களே.. அம்மாமாரோ.. இது ஒப்பாரி வைக்கும் நேரமல்ல. மகிந்த சிங்கள மன்னர் வழி தான் தமிழரை வென்றிட்டதாச் சொல்லி இருக்கான். அவனை தமிழ் மண்ணில வைச்சு தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு உலகத்தமிழனுக்கும் இருக்குது. அதற்காக நாம் பாடுபடனும். ஒப்பாரி வைச்சா அது நடக்காது.

எதிரி திட்டமிட்டே எமது நிலத்தைப் பறிக்கிறான் என்பதற்கு கிளிநொச்சி பிடிக்க எங்கையோ கண்டில வெடிகொழுத்த கிளிநொச்சியில் என்ன வேண்டி இருக்கு சிங்கள இனவெறிக் கும்பலுக்கு..??! சிந்தியுங்கோ அதைப் பற்றி.

இந்தியா சொல்லி எமக்கு சிங்களவன் போடுற அதிகாரப் பிச்சை அதுவும் அவைட ஆக்கிரமிப்புக்கீழ இருந்து கொண்டு அனுபவிக்க நாம் தயார் இல்லை. நாம் ஒன்றும் இந்திய.. சிறீலங்கா அடிமைகள் அல்ல. இராமன் என்ற இந்திய றோ முதலாளி சொல்லுறதைச் சொல்லட்டும். புலிகள் தங்களுக்கு இயன்றதைச் செய்யட்டும். நாங்கள் எங்களால இயன்றதைச் செய்து எமது மண்ணை மீட்போம். அதை ஒவ்வொரு தமிழனும் உறுதிமொழியா எடுக்க வேண்டும். செயற்படனும். அதைத்தான் கிளிநொச்சி பறிப்பு எமக்கு கற்றுத் தருகுது.

இன்று நாம் தோல்விக்காக ஒப்பாரி வைப்பின் உங்களின் எதிர்கால சந்ததிக்கு தமிழன் தன்னிலத்தில் மகிந்தவிடம் தோற்றான் என்பதைத்தான் வரலாறாக எழுதிவிட்டுச் செல்வீர்கள்..??! உலகில் நீங்கள் எங்கு வாழினும் அதுதான் வரலாறாகப் படிக்கப்படும்..! அது தேவையா எமக்கு. சிங்களவனின் மண்ணில எமக்கு ஆசையில்லை. ஆனா சிங்களவனிடம் எமது மண் அடிமைப்பட அனுமதிப்பது வரலாற்றுத் தோல்வியே ஆகும். தமிழ் இனத்துக்கே தோல்வியாகும். இது புலிகளின் தோல்வியல்ல..! எமது மண் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை இருக்கிறது. அது இப்போ சிங்களவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

எமக்கு மட்டக்களப்பும்.. ஒன்றுதான்.. ஆனையிறவும் ஒன்றுதான். எல்லாம் தமிழீழம் தான்.. தமிழரின் தாயகப் பகுதிகள் தான்...!

இதையும் ஒருக்கா வாசியுங்கோ.. http://www.tamilnet.com/art.html?catid=79&artid=27911

Edited by nedukkalapoovan

எல்லாம் புலிகள் செய்து கொடுத்தா நோகாமல்.. அனுபவிக்கலாம் என்றிருக்கக் கூடாது.

சிங்கள கிழவி ஒன்றுக்கு இருக்கிற மானரோசம்.. தன்ர நிலத்தைப் பறிகொடுத்த தமிழனுக்கு இல்லை. ஐயாக்களே.. அம்மாமாரோ.. இது ஒப்பாரி வைக்கும் நேரமல்ல. மகிந்த சிங்கள மன்னர் வழி தான் தமிழரை வென்றிட்டதாச் சொல்லி இருக்கான். அவனை தமிழ் மண்ணில வைச்சு தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு உலகத்தமிழனுக்கும் இருக்குது. அதற்காக நாம் பாடுபடனும். ஒப்பாரி வைச்சா அது நடக்காது.

எதிரி திட்டமிட்டே எமது நிலத்தைப் பறிக்கிறான் என்பதற்கு கிளிநொச்சி பிடிக்க எங்கையோ கண்டில வெடிகொழுத்த கிளிநொச்சியில் என்ன வேண்டி இருக்கு சிங்கள இனவெறிக் கும்பலுக்கு..??! சிந்தியுங்கோ அதைப் பற்றி.

எமக்கு மட்டக்களப்பும்.. ஒன்றுதான்.. ஆனையிறவும் ஒன்றுதான். எல்லாம் தமிழீழம் தான்.. தமிழரின் தாயகப் பகுதிகள் தான்...!

இதுதான் நாம் இன்று செய்ய வேண்டியது...

நெடுக்ஸ்... பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை என்று வரவேண்டும் என்று நினைக்கிறன். இலங்கைத் தீவின் தெற்கு எல்லையில் இருப்பது தெய்வேந்திரமுனை!

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் நாம் இன்று செய்ய வேண்டியது...

நெடுக்ஸ்... பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை என்று வரவேண்டும் என்று நினைக்கிறன். இலங்கைத் தீவின் தெற்கு எல்லையில் இருப்பது தெய்வேந்திரமுனை!

எழுதும் போதே ஒரு சந்தேகம் இருந்தது. தவறைத் திருத்தியதற்கு நன்றிகள்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் நாம் இன்று செய்ய வேண்டியது...

நெடுக்ஸ்... பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை என்று வரவேண்டும் என்று நினைக்கிறன். இலங்கைத் தீவின் தெற்கு எல்லையில் இருப்பது தெய்வேந்திரமுனை!

பொலிகண்டி இல்லை,பொலிகண்டி வல்வெட்டித்துறைக்கும் கொம்மந்தறைக்கும் இடையில இருக்கு என்று நினைக்கிறேன் :lol:

எழுதும் போதே ஒரு சந்தேகம் இருந்தது. தவறைத் திருத்தியதற்கு நன்றிகள்..! :unsure:

நெடுக்ஸ் நீங்கள் பருத்தித்துறை முனையை தானே சொல்லவாறிங்கள்.அதை பருத்தித்துறை முனை என்ற்றுதல் சொல்லுவார்கள் என்று நினைக்கிறன்

நெடுக்ஸ் நீங்கள் பருத்தித்துறை முனையை தானே சொல்லவாறிங்கள்.அதை பருத்தித்துறை முனை என்ற்றுதல் சொல்லுவார்கள் என்று நினைக்கிறன்

பொலிகண்டிதான் சின்னப்பு... அந்த இடம்தான் பருத்துறை( கற்கோவளம்) முனையை காட்டிலும் அதிகம் மேல் நோக்கி இருக்கிறது...!

பொலிகண்டிக்கு இன்னும் பல புகழ் உண்டு.. இந்திய இராணுவ படு கொலைகள், பொலிகண்டி கசநோயாளர் வைத்திய சாலைக்குள் நடத்தப்பட்ட இந்திய கொடூர தாக்குதல் எண்று எல்லாம்( வல்வெட்டி படு கொலைகள்) பொலிகண்டியில்தான்...

நெடுக்ஸ் நீங்கள் பருத்தித்துறை முனையை தானே சொல்லவாறிங்கள்.அதை பருத்தித்துறை முனை என்ற்றுதல் சொல்லுவார்கள் என்று நினைக்கிறன்

ஒரு பாடலில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி என்று வரும். அதன் பின்னர் பொதுவாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்று கூறுவது வழக்கில் உள்ளது..

Edited by அருவி

கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றா ?

பதில் ஆம்!!!

jaffnaKili_02.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொலிகண்டிதான் சின்னப்பு...

பொலிகண்டிக்கு இன்னும் பல புகழ் உண்டு.. இந்திய இராணுவ படு கொலைகள், பொலிகண்டி கசநோயாளர் வைத்திய சாலைக்குள் நடத்தப்பட்ட இந்திய கொடூர தாக்குதல் எண்று எல்லாம்( வல்வெட்டி படு கொலைகள்) பொலிகண்டியில்தான்...

நான் அவன்(ர்) இல்லை :lol: .

பொலிகண்டிக்கு இன்னும் கொஞ்ச புகழ் சேர்க்கலாம் போல இருக்கு. சீனித்தொழிற்சாலை, திக்கம் வடிசாலை,புலிகளின் பெரிய பேஸ் ஓன்று பொலிகண்டியில் இருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

பதில் ஆம்!!!

மடுவை விட்டு வெளியேறும் போதும் நடேசன் அண்ணா பேட்டி ஒன்றில் அதற்கு முன்னர் கூறியிருந்தார்.

கிளிநொச்சியை விட்டு வெளியேறப் போவதையும் நடேசன் அண்ணா பிபிசி சர்வதேச ஊடகத்தில் கூறியிருந்தார்.

ஒரு சிறு நிலப்பரப்பதை தவிர மற்ற எல்லாம் பறிபோகக் கூடும் என்பதை பாலகுமாரன் அண்ணா எப்பவோ சொல்லிட்டார்..!

நான் ஏலவே இதை இங்கு சுட்டிக்காட்டி இருந்தன். ஆனால் அப்ப என்னைத் திட்டினாங்க.

குறுக்காலபோவன்.. இதை சில வருடங்களுக்கு முன்னரே சொல்லிட்டார். எனக்கு அவர் சொன்ன கருத்தில உடன்பட முடியாத விடயமாக சிங்களவன் ஓர்மத்தோட வாறான் என்றது இருந்திச்சு. இப்ப தமிழற்ற ஓர்மத்தோட (புலிகளை அல்ல.. புலம்பெயர் தமிழ் மக்கள் என்பவர்களது ஓர்மத்தோட) ஒப்பிடேக்க சிங்களவனின் ஓர்மம் அதிகமென்றுதான் கொள்ள வேண்டியுள்ளது..! :lol:

உதாரணத்துக்குச் சொல்லுறன்.. இன்று திண்ணையில் ஒரு கருத்து இப்படி இருந்திச்சு.. 200 கொடுக்கேக்க ஆனையிறவு வந்திச்சு 2000 கொடுக்கேக்க ஆனையிறவு போட்டுது. அப்ப புலிகள் என்ன நீங்க கொடுக்கிற கூலிக்கு வேலை செய்யும் வேலையாட்களா..??! இதுதானா புலம்பெயர் தமிழர்களின் விடுதலை வேட்கை.. ஓர்மம்..??! உங்களின் வரலாற்றுக் கடமையைக் கூட பயனை எதிர்பார்க்காது செய்ய முடியல்ல எனும் போது ஒரு சிங்களத் தாய்.. தமிழனின் கிளிநொச்சியை தன்ர சிங்கள சிங்க மகன் வெற்றி கொண்டதற்காக வெடிகொழுத்தி மகிழ்வதை.. அதிக பற்றுதலாகத்தானே பார்க்க வேண்டி இருக்கிறது..!

Edited by nedukkalapoovan

இந்திய அமைதிப்பச்டை காலத்தில் .......இலட்சக்கணக்கான இந்தியப் படைகள்..... அலம்பில், குமுழமுனை பகுதியில் ஒரு சிறிய முக்கோன பகுதிக்குள் சுற்றி வளைத்து விட்டோம்............ என இந்திய ஊடகங்கள் முழங்கியது மட்டுமல்ல ........... உண்மையும் கூட!! அதிலிருந்து மீண்டவர்களுக்கா.......... கிளிநொச்சி ஒரு பாடு???????

ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்!

இத்தோடு ஈழத்தமிழர்களின் விடுதலை வேள்வி அணைந்துவிடும் என்று எவராவது நினைத்தால், அதை பொய் என்று காலம் நிச்சயம் நிரூபிக்கும்!

எனக்கென்னவோ முன்பு எப்போதையும் விட ஈழ விடுதலை போராட்டம் வெற்றியின் வாசலை அண்மித்திருப்பது போலவே உள்ளிருந்து ஒரு குரல் சொல்கிறது!

நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம்!!!

Edited by vettri-vel

விடுதலை முரசம் ஓங்கி ஒலிப்பதாகவே பலரும் உணருகிறார்கள், காரணம் விடுதலைச் சக்தி இன்னும் பலத்துடன் இருக்கிறது.

நான் அவன்(ர்) இல்லை :D .

பொலிகண்டிக்கு இன்னும் கொஞ்ச புகழ் சேர்க்கலாம் போல இருக்கு. சீனித்தொழிற்சாலை, திக்கம் வடிசாலை,புலிகளின் பெரிய பேஸ் ஓன்று பொலிகண்டியில் இருந்தது

பொலிகண்டியில் தான் விடுதலைப் புலிகளின் பாரிய கடற்புலிகளின் போட்டுகள் மற்றும் கரும்புலி தாக்குதலுக்கான போட்டுக்கள் ஆகியவை தயார் படுத்துவது( விடிவெள்ளி)

அது கடல்புறா என்ற பெயரில் புலிகள் இயங்கிய காலத்தில் சிறிதாக இருந்து பின் பெரிய முகாமாக விஸ்தரிக்கப்படது

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் தன் வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறது. இருட்டைக்கண்டதும் சிலருக்குப் பயம் உண்டாவது இயற்கைதானே. இடங்களை இழப்பதை விட உலக அரசியல் ஓட்டங்களின் விளைவாக நாம் அடந்த பின்னடைவுகளே அதிகம்.

ஈழத்தமிழர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை அரசியல் ரீதியில் தீர்க்க முனைந்து கொண்டிருந்த வேளையில் எமது இளைஞர்களின் சுதந்திர வேட்கைக்குத் தூபம் போட்டு இலங்கையில் ஆயுதப் போரை ஊக்குவித்தது இந்திய அரசு. வல்லரசுகளின் பனிப்போர் உத்திகளில் சோவியத் யூனியன் பக்கம் நின்ற அப்போதைய இந்தியாவின் தெரிவு இது. எண்பதுகளின் நடுப்பகுதியிலேயே தொடங்கி விட்ட சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி 1991 ஆம் ஆண்டில் முற்றுப்பெற்றது. சோவியத் யூனியன் ஆட்டம் காணத்தொடங்கியதும் இந்திய வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் அமைதியின்மை நிலவவேண்டிய தேவை இந்தியாவுக்குத் இல்லாமல் போனது. இலங்கை இந்திய அமைதி ஒப்பந்தமும் உருவானது.

ஒப்பந்தத்தின் மூலம் ஆயுத ரீதியில் புலிகளை ஒழிக்க இந்தியா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. புலிகள் தந்திரோபாயத்துடன் இலங்கை அரசுடன் கைகோர்த்து இந்தியாவை வெளியேற்றினர். இச்சூழலில் சோவியத் யூனியன் 1991 ஆம் ஆண்டின் நடுப்பகுதியின் பின் முற்றாக வீழ்ச்சி கண்டது. அதே காலப்பகுதியில் இன்று வரை மர்மமாக இருக்கும் ராஜீவ் காந்தியின் மரணமும் நடந்தேறியது. இலங்கையின் உள்விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. அதன்பின்னர் புலிகள் இழப்புகளைச் சந்தித்த போதும் ஓயாத அலைகள் மூன்றின் பின்னர் தமிழரின் ராணுவ மேலாதிக்கத்தினை நிலை நாட்டினர்.

அந்தக்காலகட்டத்தில் போராட்டத்தின் அடுத்த பின்னடைவுக்கு தமிழர் முகம் கொடுக்கத் தொடங்கினர். அமெரிக்கா மீதான செப்டெம்பர் 2001தாக்குதலின் பின் ஏற்பட்ட உலக ஒழுங்கு மாற்றத்தினாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிற உலக அரசியலாலும் ஈழத்தமிழர் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கினர். எல்லாவிதமான கவன ஈர்ப்பு, மனித உரிமை, இராணுவ மேலாதிக்கம் போன்ற அஸ்திரங்களைப் பயன்படுத்திப் பார்த்தபின்பும் உலகின் பார்வையில் எமது போராட்டத்தின் மீதான பார்வையில் ஒரு மாற்றமும் ஏற்படாத காரணத்தால் உருவானதே புலிகளின் இந்தப் பின்வாங்கல் நடவடிக்கை. இங்கிருந்து இதை எப்படி அவர்கள் கொண்டு செல்வார்கள் என்பதற்கான பதில் அவர்களிடமே உள்ளது. உலக அரங்கில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் எமது போர் உள்ளடங்காமல் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் திண்ணம்.

இச்சமயத்தில் எமது தலைமையை வலுப்படுத்திக்கோண்டு அரசியல்முன்னெடுப்புகளிலும் கலந்து எமது தரப்பு நியாயங்களை ஆவணப்படுத்துவதே ஈழத்தமிழராகிய எம்முன் உள்ள வரலாற்றுக் கடமையாகும்.

உதாரணத்துக்குச் சொல்லுறன்.. இன்று திண்ணையில் ஒரு கருத்து இப்படி இருந்திச்சு.. 200 கொடுக்கேக்க ஆனையிறவு வந்திச்சு 2000 கொடுக்கேக்க ஆனையிறவு போட்டுது. அப்ப புலிகள் என்ன நீங்க கொடுக்கிற கூலிக்கு வேலை செய்யும் வேலையாட்களா..??! இதுதானா புலம்பெயர் தமிழர்களின் விடுதலை வேட்கை.. ஓர்மம்..??! உங்களின் வரலாற்றுக் கடமையைக் கூட பயனை எதிர்பார்க்காது செய்ய முடியல்ல எனும் போது ஒரு சிங்களத் தாய்.. தமிழனின் கிளிநொச்சியை தன்ர சிங்கள சிங்க மகன் வெற்றி கொண்டதற்காக வெடிகொழுத்தி மகிழ்வதை.. அதிக பற்றுதலாகத்தானே பார்க்க வேண்டி இருக்கிறது..!

இதாவது பரவாயில்லை. 200 வாங்கிறத்திற்கே சிலபேருக்கு 1948 இல் தொடங்கி தமிழர் சரித்திரத்தை சொல்லவேண்டியிருக்கு,

இதாவது பரவாயில்லை. 200 வாங்கிறத்திற்கே சிலபேருக்கு 1948 இல் தொடங்கி தமிழர் சரித்திரத்தை சொல்லவேண்டியிருக்கு,

தமிழன் தனக்குரிய தார்மீகக் கடமையை நன்குணராதவரை இது நடைபெறும். அதுவும் சிலர் மறுப்புத் தெரிவிக்கவே இப்படிச் சுற்றி வளைப்பார்கள். இப்படி எத்தனைபேரைக் கண்டுவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!!!

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்!!!!!

அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!!!

இச்செகத்தில் உள்ளோரெல்லாம் எதிர்த்து

நின்ற போதிலும்!!!!

அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!!!

துச்சமாகப் பிறர் நினைத்தது

தூற்றுகின்ற போதிலும்

அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!!!

இச்சை கொண்ட நேரமே!

நிச்சயம் சுதந்திரம்

பிச்சை கேட்க வேண்டுமோ?

இது பிறர் கொடுக்க வல்லதோ?

-பாரதியார்

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.